மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு (ஐ லவ் இளையராஜா)

இந்தப்பாடல் எப்பொழுது கேட்டாலும் அதே நறுமணத்துடன் புத்தம் புதியதாக இருப்பது எனக்கு ஆச்சரியம். எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத பாடல். இது போல ஒரு சிச்சுவேஷன் சாங் எனக்குத் தெரிந்து இல்லை. இது இளையராஜா பாடலா இல்லை ஜானகி பாடலா என்பதில் எனக்கு சிறு குழப்பம் எப்பொழுதுமே இருக்கும். ஆனால் உன்னிப்பாகக் கேட்டால் இது இருவரது பாடல் என்பது விளங்கும். Fantastic team work.

முதலில் முழுப்பாடலையும் கேளுங்கள் அப்புறம் எனக்கு பிடித்தமான இடங்களைக் கேட்கலாம்.

ஆரம்பமே அமர்களம்; முதலில் இளையராஜா தனது வேலையை முடித்துவிட்டு ஜானகியிடம் கொடுத்துவிடுகிறார்; ஜானகியின் ஹம்மிங்கும் பிறகு தூக்கலாக பொன்வானம் பன்னீர் தூவுது என்று சட்டென்று அவர் ஆரம்பிப்பதும் அருமை.

மறுபடி இளையராஜா;பிறகு மறுபடியும் ஜானகி. fantastic humming அப்புறம் லல்லலலா; பிறகு மறுபடியும் இளையராஜா; உன்னிப்பாகக் கவனித்தீர்கள் என்றால் இளையராஜா இரண்டு விதமான தாளம் பயன்படுத்தியிருப்பார்; மழைப்பூக்களே (பின்னால் ஒரு தாளம்) ஒதுங்க இடம் பார்க்குதே (வேறொரு தாளம்); மலர் அம்புகள் (முதல் தாளம்) உயிர் வரைக்கும் தாக்குதே (அதே இரண்டாம் தாளம்) அது தான் கடைசி வரையிலும் வரும்!

Best Part! ஜானகியின் லல்லல்லலாவும் இளையராஜாவின் பின்னனியும்; வெள்ளை மல்லிகை தேவ கண்ணிகை என்னும் இடத்தில் முற்றிலும் வேறு விதமான இசையைப் பயன்படுத்தியிருப்பார்.

My most favourite song!

2 thoughts on “மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு (ஐ லவ் இளையராஜா)

  1. அருமை நண்பரே வணக்கம்உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்துள்ளேன்.இளையராஜா என்று கூகிளிள் அடித்து இங்கு வந்தேன்.எல்லாம் நன்றாக இருக்கிறது. நேரம் இருந்தால் என் வலைக்கு வரவும். போபால் விஷவாயு பதிவுத்தொடர் மனதை ரணமாக்கியது.அருமையான உழைப்பு.

    Like

  2. அருமை நண்பரே வணக்கம்உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பித்துள்ளேன்.இளையராஜா என்று கூகிளிள் அடித்து இங்கு வந்தேன்.எல்லாம் நன்றாக இருக்கிறது. நேரம் இருந்தால் என் வலைக்கு வரவும். போபால் விஷவாயு பதிவுத்தொடர் மனதை ரணமாக்கியது.அருமையான உழைப்பு.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s