ஒரு கூண்டில் ஐந்து குரங்குகள் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கூண்டிற்குள் ஒரு வாழைப்பழம் தொங்கவிடப்பட்டிருக்கிறது. அந்த வாழைப்பழத்தை எடுப்பதற்கு ஏதுவாக சில படிக்கட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
குண்டில் அடைக்கப்பட்ட கொஞ்ச நேரத்துக்குள் ஏதாவது ஒரு குரங்கு அந்த வாழைப்பழத்தை எடுப்பதற்காக படிகளை நோக்கிப் போகும். அது முதல் படியைத் தொட்டது தான் தாமதம்; நீங்கள் எல்லாக் குரங்குகளின் மீதும் குளிர்ந்த ஐஸ் போல இருக்கும் நீரை பீய்ச்சி அடியுங்கள்.
கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் வேறு ஏதாவது ஒரு குரங்கு வாழைப்பழத்தை எடுப்பதற்கு படிகளை நோக்கிப் போகும். அது படியைத் தொட்டது தான் தாமதம் உடனே ஏற்கனவே செய்தது போல எல்லாக் குரங்குளின் மீதும் ஐஸ் போல குளிரான தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கவேண்டும்.
இப்படி செய்யச் செய்ய கொஞ்ச நேரம் கழித்து வாழைப்பழத்தை எடுக்க ஏதாவது ஒரு குரங்கு படியைத் தொடப்போனால் மற்ற குரங்குகள் அதைத் தடுக்கும்.
இப்பொழுது குளிர்ந்த நீரை நிறுத்திவிடுங்கள். ஒரு குரங்கை வெளியே எடுத்துவிட்டு ஒரு புதுக்குரங்கை உள்ளே விடுங்கள். புது குரங்கு கூண்டிற்குள் சென்ற உடனேயே வாழைப்பழத்தைப் பார்க்கும்; பார்த்த உடன் அதை எடுக்க படிகளை நோக்கி ஓடும். ஆனால் மற்ற பழைய குரங்குகள் எல்லாம் சேர்ந்து இந்தப் புதுக்குரங்கை எடுக்கவிடாமல் தடுத்து அடிக்கும். ஏன் அடிக்கிறார்கள் என்று புரியாத புதுக் குரங்கு; கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் அந்தப் பழத்தை எடுக்கப் போகும். மீண்டும் அடி விழும். இப்பொழுது அந்தக் குரங்குக்கு ஒன்று மட்டும் புரிந்து விடும்; பழத்தை எடுக்கப் போனால் அடி விழுவது நிச்சயம். எனவே எடுக்கப் போகாது.
இப்பொழுது மீண்டும் ஒரு பழைய குரங்கை கூண்டிலிருந்து அகற்றி விட்டு மேலும் ஒரு புதிய குரங்கை உள்ளே விடுங்கள். இந்தப் புதிய குரங்கு பழத்தைப் பார்த்ததும் எடுக்க படிகளை நோக்கி ஓடும்; அப்பொழுது மற்ற குரங்குகள் எல்லாம் சேர்ந்து புதுக்குரங்கை அடித்து உதைக்கும். ஆச்சரியம் என்னவென்றால் போன தடவை உள்ள வந்த புதுக்குரங்கும் சேர்ந்து கொண்டும் இந்தமுறை உள்ள வந்த குரங்கை அடிக்கும்; ஏன் அடிக்கிறோம் என்று தெரியாமலே!
மூன்றாவது புதுக் குரங்கை மாற்றிய உடன்; வழக்கம் போல அது பழத்தை எடுக்கப் போகும் பொழுது மற்ற எல்லா குரங்குகளும் அதை அடிக்கும். அடிக்கிற நான்கு குரங்குகளில் இரண்டு குரங்குகளுக்கு நாம் ஏன் படிகளில் ஏறக்கூடாது என்றோ; நாம் ஏன் அப்படி ஏறுகிற குரங்கை அடிக்கிறோம் என்றோ தெரியாது!
இப்படியாக நான்காவது ஐந்தாவது குரங்குகளை புதுக்குரங்குகளால் மாற்றியபின் முதலில் ஐஸ் தண்ணீர் தெளிக்கப்பட்ட எந்தக் குரங்குகளும் இப்பொழுது இல்லை; ஆனால் புதிதாக வந்த எந்தக் குரங்கும் படிகளுக்குப் பக்கத்தில் கூடப் போகாது. ஏன்? அவைகளைப் பொறுத்தவரை அது அப்படித்தான் ரொம்ப நாளாகவே இருக்கிறது!
*
இன்று மதிய சாப்பாட்டின் போது என் சக அலுவலர் ஒருவர் “இன்று சூரிய கிரகணம் எனவே மூன்று மணிக்குள் சாப்பிட்டு விடுங்கள். அதற்குப் பிறகு ஐந்தரை மணி வரையில் சாப்பிடக்கூடாது” என்று சொன்னார். ஏன் என்று கேட்டால், பதிலில்லை! ஆனால் சாப்பிடக்கூடாது என்று மட்டும் தெரியும்!! காரணம் தெரியாவிட்டாலும் சாப்பிடக்கூடாது என்பதில் மட்டும் அவர் தெளிவாக இருந்தார்.
*
இது நம்பிக்கை சார்ந்த விசயம் அல்ல; அறிவியல் பூர்வமான விசயம். நீங்கள் கெடுவது மட்டுமில்லாமல் அடுத்தவரையும் கெடுக்காதீர்கள்.
*
இந்தக் கொழுவியில் இதைப் படிக்க நேர்ந்தது:
Science Popularisation Association of Communicators and Educators (SPACE), a Delhi-based organisation working to make science and astronomy popular among youngsters, is taking people to Varkala in Kerala to watch the eclipse.
“We have a team of 70 people both from scientific and non-scientific community including some children. We will be doing several experiments like recording temperature, humidity, wind speed and ambient light during the eclipse. We are carrying several telescopes, solar filters and high resolution camera to catch the eclipse,” said Sachin Bhamba, astronomer with SPACE.
SPACE has also initiated a study about impact of solar eclipse on people.
“There are all kind of superstitions around a solar eclipse — like you should not eat or drink during an eclipse. We are taking 35 people to Varkala and will make them do every routine thing during the eclipse. They will be later asked to share the changes they felt during the celestial activity. We will publish a study based on the data so that people cast away all false beliefs related to eclipse,” said Bhamba.
சூரிய கிரகணத்தைப் பற்றித்தெரிந்து கொள்ள இந்த கொழுவியைப் பாருங்கள்.
*
சூரியகிரகணாநந்தா யார் என்று இன்னமும் நீங்கள் என்னிடம் கேட்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
*