செவ்வாய் கிரகத்தை அருகில் காண்பதற்கு இன்று நல்ல சந்தர்ப்பம். உபயோகித்துக்கொள்ளுங்கள். செவ்வாய் மட்டுமல்ல; நிலவு கூட அருகில் தெரியும். இந்த வருடத்தின் மிகப்பெரிய நிலா இன்று தான் தெரியும்.
இதற்கு முன் 2003 இல் செவ்வாய் கிரகம் நமக்கு இன்னும் மிக அருகில் இருந்திருக்கிறது. 2003 இல் நமக்கும் செவ்வாய்க்கும் இடையே இருந்த தூரம் வெரும் 56 மில்லியன் கிலோமீட்டர் தான். இது கடந்த 60,000 வருடங்களில் இதுவே நமக்கும் செவ்வாய்க்குமான மிக குறைந்த தூரம்.
இப்பொழுது ஜனவரி 2010 இல் செவ்வாய் பூமியிலிருந்து 99 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்.
பூமி சூரியனைச் சுற்றி வர ஒரு ஆண்டு ஆகிறது; ஆனால் செவ்வாய் சூரியனைச் சுற்றி வர இரண்டு ஆண்டுகள் ஆகிறது. எனவே ஒவ்வொரு இரண்டு வருடங்களில் பூமி செவ்வாயைக் கடந்து செல்லும். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூமி செவ்வாயைக் கடந்து செல்லும்.
இது தொடர்பான கேள்விகள் உங்களுக்கு இருந்தால் நாசாவின் இந்த இணைய பக்கத்துக்கு வாருங்கள். அவர்கள் ஒரு சாட் ரூம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் சயின்ஸ் சென்டர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 7:50 இல் இருந்து இரவு பத்து மணி வரை இலவசமாக டெலஸ்கோப் மூலம் அன்று தெரியும் நட்சத்திரக் கூட்டங்களையும் கிரகங்களையும் பார்க்கலாம். நான் சாட்டர்ன் (Saturn) பார்த்திருக்கிறேன். இன்று சயின்ஸ் சென்டர் போவதாக ப்ளான் இருக்கிறது.
நல்ல தகவல், நானும் அறிவியல் பூங்க செல்ல முயற்சிக்கிறேன்
LikeLike
தகவலுக்கு மிக்க நன்றி! நல்ல பதிவுகள் அனைத்துமே ..! நிறைய எழுதவும்! 😉
LikeLike