ஆறு வருடங்களுக்கு (ஃபெப்ரவரி 1 2004 அன்று) முன் ஜானட் ஜாக்சனும் ஜஸ்டின் டிம்பர்லேக்கும் சூப்பர் பவுல் ஃபுட்பால் போட்டியில் நடனமாடிக்கொண்டிருந்த பொழுது ஜானட்டின் ஒரு பக்க மார்பு துணியை உணர்ச்சி வேகத்தில் தெரியாமல் கிழித்து விட்டார் டிம்பர்லேக். (தெரிந்தே செய்தார்; அவருடைய பாடலில் இது போன்றதொரு வரி வருகிறது “Hurry up ’cause you’re taking too long… better have you naked by the end of this song” என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள் )
இந்த வரலாற்று அம்சம் பொருந்திய சம்பவம் நடந்தது வெறும் அரை செகன்ட் மட்டுமே. இந்த super bowl நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்த சிபிஎஸ் தொலைக்காட்சி சேனல் இந்த சம்பவத்தையும் ஒளிபரப்பிவிட்டது.
மீடியாக்களை கண்காணிக்கும் பிடிசி இந்த சம்பவம் ஒளிபரப்பானதைக் கண்டித்து இன்டீசன்சி கம்ப்ளெயன்ட் (idenceny complaint) வழக்கை பெடரல் கோர்ட்டில் (FCC) தாக்கல் செய்தது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து 540,000 புகார்கள் அமெரிக்க மக்களால் தாக்கல் செய்யப்பட்டது. கனடாவில் மக்கள் புகார் செய்தனர்.
வழக்கை விசாரித்த ஃபெடரல் கோர்ட் இதை ஒளிபரப்பிய சிபிஎஸ் க்கு 550000 டாலர் அபராதம் விதித்தது. இந்த வழக்கு இன்றும் நிலுலையில் இருக்கிறது என்பது வேறு விசயம்.
நேரடி ஒளிபரப்பில் (திட்டமிடாமல்) நடந்த தற்செயல் நிகழ்ச்சிக்கே அமெரிக்க மக்கள் 540,000 புகார்களை பதிவு செய்தனர். 550,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் சன் டீவி ஒளிபரப்பிய நித்தியானந்தர் ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்பட்டமான அத்துமீறல். திட்டமிட்ட செயல். Explicit sexual content. ப்ரைம் டைம் செய்தி நேரத்தில் ஒரு வீட்டில் எல்லோரும் அமர்ந்து செய்தி பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது எப்படி இவ்வாறான செக்ஸ் படத்தை ஒளிபரப்பினார்கள்? ஒளி ஒலி பரப்பியது குற்றமில்லையா?
முதலில் சன்டீவியின் மேல் தானே வழக்கு பதிவு செய்யவேண்டும்? குஷ்புவின் மீதும் ஜெயராமின் மீதும் நித்தியானந்தர் மீதும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் மக்கள் முதலில் தங்களது வரவெற்பறையில் என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும்.
நித்தியானந்தர் செய்தது குற்றமா இல்லையா என்பது அவரை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை சார்ந்தது;அது அவர்களை மட்டுமே பாதிக்கும்; ஆனால் சன்டீவி செய்தது எல்லோரையும் பாதிக்கும் ஒரு அப்பட்டமான அத்துமீறல்.
Do we have parental television council or media watch dog group here? மீடியாக்களை கண்காணிக்கும் குழு இந்தியாவில் இருக்கிறதா இல்லையா? ஏனென்றால் நமது குழந்தைகளும் டீவி பார்க்கிறார்கள்.
//நித்தியானந்தர் செய்தது குற்றமா இல்லையா என்பது அவரை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை சார்ந்தது;அது அவர்களை மட்டுமே பாதிக்கும்; ஆனால் சன்டீவி செய்தது எல்லோரையும் பாதிக்கும் ஒரு அப்பட்டமான அத்துமீறல்.//உண்மை தான். சன் டிவி செய்தது மீடியா விபச்சாரம்
LikeLike
This can be classified as idiotic act by Sun TV (intention behind must have been to gain commercial benefit & media popularity) definitely has to be condemned by all of us as.
LikeLike
yes you are right
LikeLike
நான் கடந்த ஐந்தாண்டுகளாக சன் டிவியை பார்ப்பதே இல்லை. சன் டிவி மீது வழக்கு தொடுக்க அதன் பார்வையாளர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. தாங்களும் முயற்சிக்கலாம்.நித்தியானந்தாவும், ரஞ்சீதாவும் சன் டிவி மீது மானநட்ட வழக்கு தொடுக்க அனைத்து முகாந்திரமும் உண்டு. அவர்களும் இதை செய்ய வேண்டும்.தமிழினம் உருப்பட வேண்டுமென்றால் சன் டிவி தடை செய்யப்படவேண்டும்.
LikeLike
ஆமாம் என் எரிச்சல் எல்லாம் இந்த சேனல் மீது தான்..சாமியார் மேல் கோபம் கொள்ள வேண்டியது அவரின் தொண்டர்களே.. திரும்ப திரும்ப கலைஞர் கைது செய்த காட்சியை காண்பித்த மாதிரி இதனையும் காண்பித்தது குற்றமே. மூளை சலவை செய்வதை போல நடந்துக் கொண்டது..`
LikeLike
முதலில் கீழே உள்ளவற்றைப் படிக்கவும்:சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் மனோகரன் தபால் மூலம் சென்னை மாநகர போலீசாருக்கு அனுப்பிய புகார் மனுவில்…”தனியார் தொலைக்காட்சி ஊடகத்தில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சியில் சாமியார் நிதியானந்தாருக்கு நடிகை ரஞ்சிதா சேவை செய்வது போலவும், கால் அமுக்கி விடுவது போலவும், படுக்கையில அமர்ந்து அவர் மீது விழுந்தும் நித்தியானந்தருக்கு பாலியல் உணர்வை தூண்டுகிறார். நித்தியானந்தருக்கு பாலியல் உணர்வை ரஞ்சிதா தூண்டுவது வெளிப்படையாக தெரிகிறது. எனவே நடிகை ரஞ்சிதா மீது பாலியல் உணர்வை தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அதற்கான தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியதால், சிறுவர்கள் பெண்கள் அக்காட்சிகளை பார்க்கிறார்கள் எனவே பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது, இதற்கும் நடிகை ரஞ்சிதா தான் காரணம். எனவே அவர் மீது உடனடியாக வழக்கு புதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் மனுவில் மனோகரன் தெரிவித்திருக்கிறார்.ஆக குற்றங்கள் அதிகரிக்க காரணம் ரஞ்சிதா தான் என்று சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் மனோகரன் கூறியுள்ளார்.இது காமடியா அல்லது.. சட்டமா?
LikeLike
மன்னிக்கவும். இதை ஏன் அத்துமீரல் என நினைக்க வேண்டும். மதம் என்ற போர்வைக்குள் உலாவி திறியும் நரியை தானே வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது!! மேலும் தப்பு செய்யும் பலருக்கும் இது ஒரு பாடமாக அமையுமே ..மேலும் ஆபாசம் என்றாலும் தற்போது சினிமாவில் தோன்றும் காட்சிகள், ஆபாச இரண்டு அர்த்தங்களுக்கு இது ஒரு மிகை அல்லவே. மேலும் நமக்கென்று கலாசாரம் என்று கருதினால் கள்ளதொடர்பை மையமாக கொண்ட சிரியல், மானாட மயிலாட(பெரிய திரையை விட ஆபாசம்), ராணி 6 ராஜா யாரு (கவர்ச்சி நடிகைகளின் வெறியாட்டம்) இதையும் தவிர்க்க வேண்டியவையே !! விழிப்புணர்வாக கருதிகொள்ளுங்கள்
LikeLike