டைனோசர்கள் ஏன் திடீரென்று அழிந்து போயின என்பதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், இப்பொழுது ஆதாரப்பூர்வமாக ஒரு காரணம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 15 கிமீ நீளமுள்ள ஒரு விண் கல் கல்ஃப் ஆப் மெக்சிகோவில் (Chicxulub on Mexico’s Yucatan Peninsula) வினாடிக்கு இருபது கிமீ வேகத்தில் வந்து மோதியது. இந்த மோதல் எப்படி இருந்தது தெரியுமா? 100 ட்ரில்லியன் டன்கள் எடைகொண்ட டிஎன்டியின் எரி சக்தியைப் போல; அதாவது ஹிரோஷிமா நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டுகளைப் போல பில்லியன் மடங்கு அதிக சக்தி இந்த மோதலில் இருந்து வெளிப்பட்டதாம்.
இந்த மோதலால் ஏற்பட்ட 180 கிமீ விட்டம் கொண்ட குழி இன்றும் மெக்சிகோவில் இருக்கிறது. இந்த சம்பவம் கடும் எரி சக்தியை ஏற்படுத்தி அருகாமையில் இருந்த உயிரினங்களைக் கொன்றதோடு நில்லாமல் வேறொரு பக்கவிளைவையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட புகை பூமியை ஒரு போர்வை போல மூடிக்கொண்டது. சூரியவெளிச்சம் உள்ளே வராமல் பூமி இருட்டில் மூழ்கிப்போனது. பூமியின் வெப்பம் அதிவேகமாகக் குறைந்து கடும் பனி பரவியது. இந்த திடீர் வெப்ப மாற்றத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் பல உயிரினங்கள் அத்திப்பட்டி போல மறைந்து போயின. டைனோசர்கள், பறக்கும் டெரோசெரஸ்கள், மிகப்பெரிதான இன்ன பிற கடல் வாழ் உயிரினங்கள் எல்லாம் அழிந்து போயின. ஆனால் இவைதான் மனிதன் உருவாவதற்கு வழிசெய்து கொடுத்தன என்பதை மறுக்க முடியாது. டைனோசர்கள் உயிரோடு இருந்திருந்தால் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பானா என்பது கேள்விக்குறி தான்.
இந்த 20 வருட ஆராய்ச்சியை 41 நபர்கள் கொண்ட குழு ஒன்று மீண்டும் ஆராய்ந்து தீர்ப்பு சொல்லியிருக்கிறது.
>>
The review confirms that a unique layer of debris ejected from a crater is compositionally linked to the Mexican crater and is also coincident with rocks associated at the Cretaceous-Tertiary (K-T) boundary.
The team also says that an abundance of shocked quartz in rock layers across the world at the K-T boundary lends further weight to conclusions that a massive meteorite impact happened at the time of the mass extinction. This form of the mineral occurs when rocks have been hit very quickly by a massive force. It is only found at nuclear explosion sites and at asteroid impact sites
>>
Source
இப்படிகூட நடந்திருக்குமோ? நம்ப முடியலே. ஒருவேள அப்படி நடக்காம இருந்துருந்தா இப்போ எப்படி இருந்திருக்கும்?Sara.
LikeLike