ஐஸ்லாந்தின் எரிமலையிலிருந்து வரும் புகை(ப்படங்கள்) பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம் ஆனால் அதனுடைய விளைவுகள் கடுமையானதாக இருக்கும். ஏற்கனவே பல விமானங்கள் கான்சல் செய்யப்பட்டுவிட்டன. மீண்டும் விமான நிலையங்கள் எப்பொழுது திறக்கும் என்று தெரியவில்லை. திறந்தாலும் பயணம் செய்ய இயலாமல் போன பயணிகளுக்கு மீண்டும் எப்பொழுது பயணம் செய்ய சீட் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. இது மெதுவாக அரசியலாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.
பிரிட்டனுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் தங்கள் மக்களை அழைத்து வர ராயல் நேவியைப் பயன்படுத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறது.(மிக விரைவில் தேர்தல் வருவதால்!) தற்காலிகமாக சில பணி நீக்கங்கள் செய்ய நேரும் என்று ப்ரிட்டிஷ் ஏர்வே பயமுறுத்தியிருக்கிறது. ஐஸ்லாந்திலும் புகை சூழ்ந்துள்ள மற்ற பகுதிகளிலும் ஆசிட் மழையும் குடி தண்ணீர் பாதிக்கும் அபாயமும் இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் உலகில் இதுவரை நடந்த எரிமலை வெடிப்புகளைப் பார்க்கும் பொழுது இது ஒன்றும் அவ்வளவு பெரிதாகத் தெரியவில்லை. இதுகாரும் உலகில் வெடித்த நமக்கு தெரிந்த வரலாறில் எரிமலைகளைப் பற்றிப் பார்ப்போம்.
La Garita Caldera, Colorado
Colorado எரிமலை மொத்தம் 1200 க்யூபிக் மைல் லாவாவைக் கக்கியிருக்கிறது. அந்த வெடிப்பிலிருந்து வந்த சாம்பல் இன்னும் படிந்திருப்பதை படத்தில் காணலாம். இது நடந்தது 28 மில்லியன் வருடங்களுக்கு முன்னால். உடைந்து போன எரிமலை அடிப்பகுதி 21 பை 45 மைல்களாம்.
Tambora, Indonesia
நெருப்பு வளையம் என்று இந்தோநேசியாவைச் சொல்லுவார்கள். அந்த அளவுக்கு எரிமலைகளும் பூகம்பங்களும் நிறைந்த பூமி இது. தம்போரா என்கிற சும்பாவா என்னும் தீவிலிருக்கிற எரிமலை 1815இல் வெடித்தபோது அது தான் அதிகபட்ச மரணங்களையும் இழப்புகளையும் கொடுத்த எரிமலைச் சீற்றமாக இருந்தது. காற்றில் கலந்த எரிமலைச் சாம்பல் அமெரிககாவையும் ஐரோப்பாவையும் கடுமையாகப் பாதித்தது. அவர்களுக்கு சம்மரே வரவில்லை. வெப்பநிலை மிகவும் குறைந்து போய் கடும் வரட்சி பரவியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடுமையான வரட்சி இது தான். எரிமலைச் சீற்றத்தால் பலியானோர் எண்ணிக்கை 70,000. இது பக்கவிளைவுகளில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கையைச் சேர்க்காதது.
Krakatau, Indonesia
1883இல் ஜாவா மற்றும் சுமாத்ராவுக்கு இடையே இருக்கும் Krakatoa வில் எரிமலை வெடித்தது. எரிமலையின் சீற்றம் மூவாயிரம் மயில்களுக்கு அப்பால் இருக்கும் மொரீசியஸில் வசிக்கும் மக்களுக்குக் கேட்கும் அளவுக்கும் படு பயங்கரமாக இருந்ததாம்.200 மெகாடன் டிஎன்டி சக்தி கொண்டது இந்த வெடிப்பு.ஓகே எல்லாரும் செய்யும் ஒப்பிடலையே நானும் செய்கிறேன்.ஹீரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டு போல 13,000 மடங்கு சக்திவாய்ந்தது.ஐரோப்பா முழுவதும் சிவப்பு நிற சாம்பலை இது அள்ளித்தெளித்தது. இதுவே எட்வார்ட் மன்ச் வரைந்த The Scream என்னும் ஓவியத்துக்கு காரணமாக இருந்தது.
Katmai, Alaska
1912இல் Katmaiஇல் இருக்கும் Novarupta என்கிற எரிமலை அறுபதி மணிநேரத்துக்கும் மேலாக புகை கக்கியது. 40 சதுர மைல்கள் சாம்பலை இது கக்கித்தீர்த்தது.இது தான் நமக்கு தெரிந்த வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த எரிமலையாகும். செயின் ஹெலனின் சீற்றத்தை விட நாற்பது மடங்கு சக்திவாய்ந்தது. ஆனால் யாரும் வாழாத பகுதியில் இந்த எரிமலை இருப்பதால் உயிரிழப்பு ஏதுமில்லை. எரிமலை வெடிப்புக்குப் பின் எரிமலையைச் சூழ்ந்த பகுதியை பூங்காவாக மாற்றினர். 1915இல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எஞ்சியிருக்கும் பாதிப்பைக் காட்டுகிறது.
Pinatubo, Philippines
இருபதாம் நூற்றாண்டில் காட்மாய்க்கு அப்புறம் இரண்டாம் இடத்திலிருக்கும் மிகுந்த சக்திவாய்ந்த எரிமலை சீற்றம் இதுதான்.ஆனால் உயிரிழப்பு மிக அதிகம். 1991இல் ·பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கரையோரம் இருக்கிற Luzon என்கிற தீவின் Mount Pinatubo என்கிற எரிமலை வெடித்தபொழுது ஏற்பட்ட உயிரிழப்பு மொத்தம் 800. எரிமலை வெடித்த பொழுது மிகச்சரியாக அதே நேரத்தில் புயல் ஒன்று தாக்கியது. விளைவு: சாம்பல் மற்றும் லாவா தீவு முழுவதும் மழையெனப் பொழிந்து நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றது. இயற்கையின் சக்தி வினோதமானது.
Kilauea, Hawaii
ஹவாய் தீவு ஒன்றோடு ஒன்று தொடர்புடைய எரிமலைகளால் ஆனது. ஆனால் அவையெல்லாம் தூங்கியபடிதான் இருந்தன. ஆனால் 1983இல் Kilauea குமுற ஆரம்பித்தது. இன்று வரை நிறுத்தவில்லை. இதனால் பூமியின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலை என்று பெயரெடுத்திருக்கிறது இந்த எரிமலை. Kilauea என்றாலே துப்புவது அல்லது பரப்புவது என்று அர்த்தமாம். எரிமலையிலிருந்து புறப்படும் குழம்பு பசிபிக் பெருங்கடலில் சென்று இணைகிறது. இது மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக மாறிவிட்டதாம். சூரிய அஸ்தமனத்தின் பொழுது எரிமலைக் குமுறலைப்பார்க்க மக்கள் கூடிவிடுவார்களாம்.
Mount St. Helens, Washington
அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான இந்த எரிமலைச்சீற்றம் அதன் மூதாதயர்களை விட சிறியதாக இருந்தாலும் இது மூன்று பில்லியன் இழப்பை ஏற்படுத்தி 57 பேரைக்கொல்லவும் செய்தது. நூறு வருடங்களாகத் தூங்கிக்கொண்டிருந்த இந்த எரிமலை 1980இல் சீற்றம் கொண்டது. இதன் புகை 80,000 அடிக்கு உயர்ந்தது.
Eyjafjallajokull, Iceland
Eyjafjallajokull எரிமலையிலிருந்து வெளியேறிய புகையும் சாம்பலும் மிக உயரத்தில் எழும்பி தெற்கு பக்கமாகத் திரும்பி இங்கிலாந்தின் பகுதிகளிலும் ஐரோப்பாவின் பகுதிகளிலும் சென்று தேங்கியது. இதனால் கண்டம் முழுவதும் விமானப்போக்குவரத்து பாதித்தது.
மேலும் சில எரிமலைச் சீற்றங்கள்:
Mt. Pelee Martinique 1902,
Ruiz Columbia 1985,
Unzen Japan 1792,
Laki Iceland 1783,
Kelut Indonesia 1919,
Galunggung Indonesia 1882,
Vesuvias Italy in 1631 & 79 CE.
Yellow stone
Thanks: Newsweek.