Hindi Movie – Karthik calling Karthik

தமிழ்ல வேட்டைக்காரன் சுறா புறான்னு எதுனாச்சும் எடுத்துட்டுப்போறாங்க விடுங்க, ஹிந்தில கார்த்திக் காலிங் கார்த்திக் அப்படீன்னு ஒரு படம் வந்திருக்கு பாருங்க. கண்டிப்பா பாருங்க.

பாடம் பாத்த கையோட இந்த பதிவு போடறேன். கார்த்திக் காலிங் கார்த்திக் அப்படீங்கற டைட்டில் பார்த்த உடனே என்னைய மாதிரி கொஞ்சம் அறிவாளியா இருந்தீங்கன்னா சட்டுன்னு கண்டுபிடிச்சிருவீங்க என்ன கதைன்னு. அதேதான் கதை. ஆனால் படத்தில இன்னும் நிறைய இருக்கு. காமெடி காதல் சஸ்பென்ஸ் த்ரில் எல்லாம்.

படத்தை பாக்கணுங்கறவங்க இதுக்கு மேலே தயவுசெய்து படிக்காதீங்க.

கார்த்திக் ஒரு கன்ஷ்ட்ரக்ஷன் கம்பெனியில வேலை செய்யறவர். சின்ன வயசில தன்னோட அண்ணன் இறந்ததுக்கு காரணம் தான் தான்னு நினைச்சுக்கறார். அதுக்கப்புறம் மனசுக்குள்ளேயே சுயவெறுப்பு வளர்கிறது. யாரோடும் சரிவர பேசுவதில்லை. சைக்கியாட்ரிஸ்ட் இடம் செல்கிறார். சைக்கியாட்ரிஸ்ட் இது உனது தவறு இல்லை என்று எடுத்துச்சொல்லியும் மீண்டும் அதே போல சுயவெறுப்பில் ஆழ்கிறார். சுயவெறுப்பு அவறுக்கு தன்னம்பிக்கையை மழுங்கச்செய்கிறது. ஐஐஎம்மில் படித்திருந்தாலும் வேலையில் அவரை எல்லோரும் மிகவும் கீழ்த்தரமாக நடத்துகின்றனர். எம்டி இவரை தூசு போல நடத்துகிறார்.

நீண்ட நாட்களாக நான்கு வருடங்களாக உடன் வேலைசெய்யும் சொனாலியை ஒரு தலையாகக் காதலிக்கிறார். நிதமும் ஈமெயில் எழுதி சேமித்து வைத்துக்கொள்கிறார். சொனாலிக்கு அனுப்பவதில்லை. நீண்ட நாட்களாக உடன் வேலை செய்தும் சொனாலிக்கு கார்த்திக் யார் என்றே தெரியாது.

ஒரு நாள் எம்டி போனில் கார்த்திக்கைப் பிடி பிடி என்று பிடிக்க போனை தூக்கிப்போட்டு உடைத்து  விடுகிறார்.பிறகு மறுநாளே வேறு ஒரு புதிய போன் வாங்கிக்கொள்கிறார். அப்படியே கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு எம்டியிடம் கார்த்திக் பேசப்போக அது பெரிய பிரச்சனையாக முடிகிறது. வேலையை இழக்கிறார். ஆழ்ந்த சோகத்தில் மூழ்குகிறார். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து தூக்கமாத்திரையை விழுங்கப்போகும் போது டெலிபோன் அழைப்பு வருகிறது.

பேசுவது கார்த்திக்கேதான்.முதலில் கார்த்திக் பயந்துபோகிறார். டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் விசாரிக்கிறார். கார்த்திக்குக்கு ஏதும் கால்கள் வரவில்லையென்று அவர்கள் சொல்கிறார்கள். ஒருவழியாக போன் கார்த்திக் கார்த்திக்கின் வாழ்வை மாற்றிவிடுவதாக உறுதியளித்தப்பின் கார்த்திக் அவரிடம் பேசுகிறார்.

போன் கார்த்திக்கின் அறிவுரையின் பேரில் கார்த்திக் இழந்த தன் வேலையை மீட்கிறார். அதே அலுவலகத்தில் பெரிய பதவியில் அமர்கிறார். சொனாலியிடம் காதலை தைரியமாக சொல்கிறார். அவரும் ஒப்புக்கொள்கிறார். பெரிய புது வீட்டுக்குக் குடிபோகிறார். எல்லாம் நல்லபடியாக நடக்கிறது.

போனில் பேசும் கார்த்திக் கார்த்திக்கிடம் தான் தினமும் காலை ஐந்து மணிக்கு கால் செய்வதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரிக்கிறார். ஆனால் கார்த்திக் மற்றொரு கார்த்திக்கைப் பற்றி சொனாலியிடம் சொல்லிவிடுகிறார். சொனாலி சைக்கியாட்ரிஸ்டைப் பார்க்கச்சொல்கிறார்.

சைக்கியாட்ரிஸ்ட் கார்த்திக் சொல்வதை பொறுமையாகக் கேட்டு அப்படி நடக்க சாத்தியமில்லை உங்களுக்காக அதிகாலை ஐந்து மணிக்கு நான் வருகிறேன் கார்த்திக் கால் செய்கிறாரா பார்ப்போன் என்று நக்கலாகச் சொல்கிறார். மறுநாள் காலை ஐந்து மணிக்கு மிகச்சரியாக போன் அடிக்கிறது. முதலில் கார்த்திக்கின் நண்பர்களுல் யாரோ ஒருவர் தான் விளையாடுகிறார் என்று நினைக்கும் சைக்கியாட்ரிஸ்ட் பிறகு தான் உணர்ந்துகொள்கிறார் அது கார்த்திக் தான் என்று. சைக்கியாட்ரிஸ்ட் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

இதையெல்லாம் நம்ப மறுக்கும் சொனாலியும் மறுநாள் காலை ஐந்து மணிக்கு காத்திருக்கிறார். சரியாக ஐந்து மணிக்கு போன் வருகிறது. பயந்து போன சொனாலி போனை எடுக்கவே கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறார்.

போன் கார்த்திக்குக்கு கோபம் வந்துவிடுகிறது. அதெப்படி என் போனை நீ எடுக்காமல் போகலாம் என்று சொல்லி எப்படி உன்னை மேலே ஏற்றினேனோ அப்படி உன்னை கீழே இறக்குகிறேன் பார் என்று சொல்கிறார். அதே போல வேலையும் போகிறது. சொனாலியும் பிரிந்து போகிறார்.

கார்த்திக் பேங்கில்ப் சேமித்து வைத்திருந்த பதினைந்து லட்ச ரூபாயும் ஏதோ அனாதை இல்லத்துக்கு போன் கார்த்தி டெலிபேங்கிங்கில் மாற்றிவிடுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப்போகிறார் கார்த்திக்.

பிறகு அவருக்கே தெரியாமல் இன்னொருவரை விட்டு டிக்கெட் எடுக்க சொல்லி கண்ணைக் கட்டிக்கொண்டு எங்கோ தூரதேசத்துக்கு சென்று விடுகிறார்.

சில மாதங்கள் கழித்து கார்த்திக் அந்த தூரதேசத்தில் ஒரு சின்ன கம்பெனியில் வேலையில் சேர்ந்து அமைதியாக வாழ்ந்து வருகிறார். போனே வைத்துக்கொள்வதில்லை. மானேஜரின் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் போன் வாங்குகிறார்.ஐந்து மணிவரையிலும் முழித்திருக்கிறார். கால் வரவில்லை. கார்த்திக் கால் செய்யவில்லை.

சொனாலிக்கு எல்லாம் சரியாகிவிட்டதாக மெயில் அனுப்பி நாளைக்கு மும்பய் வருகிறேன் என்கிறார். பே செய்துவிட்டுத் தூங்கிவிடுகிறார். சரியாக காலை ஐந்து மணிக்கு மீண்டும் கார்த்திக் கால் செய்கிறார்.

என்னையா ஏமாத்தப்பாக்குற..எப்படி பிடிச்சேன் பார்..நீ சாகத்தான் போகிறாய்..செத்துவிட்டதாக நினைத்துகொள் என்று கொக்கறிக்கிறார்.

மீதியை வெள்ளித்திரையில் காண்க. அல்லது டிவிடி வாங்கி சின்னத்திரையில் காண்க. அல்லது விக்கிப்பீடியாவில் சென்று என்னதாண்டா நடக்குதுங்கறத தெரிஞ்சுக்கோங்க.

ஆனா நான் சொல்லமாட்டேன்.

This songs rocks.

*

ஏம்ப்பா கோடம்பாக்கத்து குசேலங்களா, நீங்க இங்கிலீசுப் படத்தயெல்லாம் பாத்து கிழிச்சு படமெடுத்து ஆஸ்கார் நாயகனா ஆனதெல்லாம் போதும் மொத ஹிந்திப்படத்தப் பாருங்க.

*
Karthik calling Karthik, hindi cinema,Deepika,Movies

4 thoughts on “Hindi Movie – Karthik calling Karthik

  1. என்னங்க நீங்க… இந்த படம் பாத்துட்டு வந்து என்னோட நண்பன் ஒருத்தன் கதறுனான். இத்தனைக்கும் அவன் நல்ல திரைப்பட ரசனை உள்ளவன். நீங்க என்னடான்னா ஒலகப்பட ரேஞ்சுக்கு விமர்சனம் பண்ணி இருக்கீங்க. மேலும் இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸ்ல செமையா புட்டுகிச்சு…

    Like

  2. இந்த உலகப்படம்ங்கற வார்த்தைய யார் தான் கண்டுபிடிச்சாங்களோ தெரியல. இந்த உலகப்படம்ன்னா என்னா? ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்களேன்.என்னைப்பொருத்தவரை Films are there to entertain. ஆனா அந்த பொழுதுபோக்கும் கொஞ்சம் புதுமையா இருக்கனும். படத்தில வர்ற லாஜிக்க வெச்சு ராக்கெட்டா விடப்போறோம்? அதுக்காக அம்பது வருஷத்துக்கு முன்ன எம்ஜிஆர் பண்ண ஏழைப்பங்காளன் கதைய இன்னும் தேச்சுட்டு நானும் பொழுதுபோக்கு படம் எடுக்கறேன்னு சொல்லப்படாது.ப்ரசன்னா உங்க நண்பனைப்பத்தி எனக்குத் தெரியாது. ஆனா இந்தப்படம் நல்லாருந்துச்சு. பாக்ஸ் ஆபீஸ்ல புட்டுக்கிட்டா என்ன? படம் நல்லாயிருக்காதா என்ன? பாக்ஸ் ஆபீஸ்ல ஓடின படமெல்லாம் கண்டிப்பா நல்லாருக்குமா என்ன?

    Like

  3. ரசனைகள் மாறுபடலாம்ங்க. அதுல எந்த தப்பும் இல்லை. நானும் இந்த படத்தை பார்க்கலை. இந்த படத்தை பத்தி பொதுவான விமர்சனம் என்ன வந்ததோ அதைத் தான் நான் சொன்னேன். மேலும் என் நண்பனுக்கும் எனக்கும் ஒத்த ரசனை, அதனால் தான் சொன்னேன்…

    Like

  4. padam pakka arambicha pathavathu nimisathulaye kathai theriya aarambichuthu.. kuruvi, villu, kuselen’nu neraya adi vaangunathunathunala.. intha iluppai poo sakkarai yaa irukkuthu pola umakkku.. eki :(TAMIL font illa 😦

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s