ரஜினிக்கு நடிக்கத்தெரியாதுன்னு சொல்றவங்க இந்த படத்தைப் பாருங்க. ஹாலிவுட் தரத்துக்கு படம் நம்மால எடுக்க முடியாதுய்யான்னு சொல்றவங்களும் கண்டிப்பா இந்த படத்தப் பாருங்க.
ஹாலிவுட் தரமென்ன அதுக்கு மேலயே எடுத்திருக்காங்க. தமிழ் சினிவாவின் ஏன் இந்திய சினிமாவின் மைல் கல் இந்தப் படம்.
ரஜினிக்கு ஃபுல் மீல்ஸ். ரஜினி ரசிகர்களுக்கு கல்யாண சாப்பாடு (!). ஹூ இஸ் செல்லாத்தா என்பதாகட்டும் செல்லாத்தா போல பத்து கைகள் போல விரித்துக் காட்டுவது ஆகட்டும் ஹூ இஸ் த ப்ளாக் ஷீப் என்பதாகட்டும் ப்ரேக் ஆடுவதாகட்டும் பரதநாட்டியம் ஆடுவதாகட்டும், நான் சிட்டி வெர்ஷன் 2.0 என்று சொல்வதாகட்டும்; ஐஸ்வர்யாவிடம் “இது என்ன கவுக்கறதுக்கான ப்ளானா இருக்குமோன்னு சந்தேகமா வேற இருக்கு”னு சொல்றதாகட்டும் ரஜினி சும்மா பிச்சு உதறியிருக்கிறார்.
வசனங்கள் ஷார்ப். லீவுக்கு வந்த ரிஷி. ஆக்ஸிடென்ட் ஆகப்போகுது ஐன்ஸ்டின் ஒரு குட்டி பாப்பா யார காப்பாத்துவீங்க? தாட்ஸ் எ ஹிப்போதட்டிகல் கொஸ்டீன். நிறைய. ரங்குஸ்கி கொசு நல்ல திங்கிங். ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் புத்தகம் படத்தில வருது. கார்ல் சாகன் வருவாரான்னு பார்த்தேன், வரல.நிறைய பேருக்கு புரியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஸ்டீஃபன் ஹாக்கிங் தமிழ் படத்தில வர்றாருன்னா என்னமோ நடக்குதுன்னு தான் அர்த்தம்.
மனிதன் உருவானது ஒரு விபத்து (பரிணாம வளர்ச்சி) என்றொரு வசனம் வருகிறது. கடவுள் இருக்கிறாரா இல்லியா என்கிற கேள்விக்கு “கடவுள்ன்னா யார்?” என்று சிட்டி கேட்கிறார். ரஜினி கேட்கிறார்.
அப்புறம் நிறைய ஹெ டெக் சமாச்சாரம் இருக்கிறது. க்ளைமாக்ஸ் அட்டகாசம். தமிழ் படம் தானான்னு நிறைய வாட்டி என்னையே கேட்டுக்கிட்டேன்.
இன்னிக்கு ஆஃபீஸ்ல சாப்பிட உட்காரப்போ ஒரு சோனகிரி வந்து உக்காந்துச்சு. உக்காந்த உடனே விக்ரம் சூர்யா இதவிட பெட்டரா பண்ணிருப்பாங்கன்னு சொல்லுச்சு. படம் பாத்துருச்சான்னா பாக்கல. அப்புறம் எப்படிய்யா இப்படி சொல்ல்முடியுது?ஐஸ்வர்யாவுக்கு ரஜினியை விட ரெண்டு கோடி ரூபா சம்பளம் ஜாஸ்தியாமே? அப்படீன்னு அடுத்த கேள்வி.ரஜினி மேல அப்படி என்னதான்யா காண்டு?
அப்புறம் இன்னொரு சோனகிரி: நியு படம் மாதிரில்ல இருக்கு. அவன் அப்பவே எடுத்துட்டானே! அட கருமமே. அப்புறம் இங்கிலீஷ் படம் பாக்கிற கோஷ்டி தொல்ல தாங்கமுடியலப்பா. படம் வர்றதுக்கு முன்னயே இது பைசென்ன்டினல் மேன் படத்தோட காப்பின்னு சொல்றதுகள். அட பதருகளா, பை சென்டினல் மேன் வேற இது வேற. அந்த ரோபோ தானா எவால்வ் ஆகும்; இந்த ரோபோ அப்படியில்ல. எல்லா படத்துக்கு ட்ரெயிலர் பாத்துட்டு கதை சொல்றது போல இதுக்கும் சொல்லப்படாது. படம் பார்த்து கதை சொல்லவும். விமர்சனம் பண்ணவும். என்ன சோனகிரிகளா?
அப்புறம் மேலும் சிலர் படத்தை புறக்கணிக்கப் போவதாகவும் அகக்கழிக்கப் போவதாகவும் கோஷ்டிகள் பிரித்திருக்கின்றனர். என்னவேனா பண்ணுங்கப்பா. ஹூ கேர்ஸ்? ஆனா இந்த கோஷ்டிகளை யாராவது தியேட்டரில் பாத்தீங்கன்னா டக்குன்னு வீடியோ எடுத்திருங்க.
வேற ஒன்னும் சொல்றதுக்கில்ல. நேத்து நைட் பர்ஸ்ட் ஷோ ரெக்ஸ்ல பார்த்தேன். வீட்டுல போய் உடனே எழுத முடியல. காலைல மீட்டிங் இருந்தது. கெடச்ச கேப்ல எழுதறேன்.
ரஜினி சொன்ன மாதிரி படம் ஒரு அனுபவம். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கவும்.
PS:
எம்ஜிஎம் ஜேம்ஸ்பாண்ட் ஃப்ராண்சைஸ ரிலையன்ஸ்க்கு விக்க போறதாகவும், அவர்கள் தயாரிக்கப்போகும் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு ரஜினியும் லிஸ்டில் இருப்பதாக ஒரு செய்தி அடிபடுகிறதே உண்மையா?!
இந்த மாதிரி ‘நொன நாட்டியம்’ ஆடுற கோஷ்டிங்க இல்லைன்னா சுவாரசியம் இருக்காது நண்பா. அவனுங்க பாட்டுக்கு புறக்கணிச்சிகினு இருக்கட்டும்.மத்தபடி ‘மூன்று முகம்’ அலெக்ஸ் பாண்டியன், ‘நெற்றிக்கண்’ தந்தை ரஜினி, ‘மூன்று முடிச்சு’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ’16 வயதினிலே’ – இந்த படத்தில் இருந்த ரஜினியோட நடிப்பையெல்லாம் கலந்து கட்டுனா ஒரு பெர்ஃபார்மென்ஸ் வருமே, அப்படி ஒரு அட்டகாசமான பெர்ஃபார்மென்ஸ்…
LikeLike
எத்தனை எஸ்.எம்.எஸ் அனுப்பினாலும் வரமாட்டீங்க.. நம்ம சிவாஜின்ன உடனே வந்துடுவீங்களேன்னு விவேக் சொல்ற மாதிரி… இன்னிக்கு நீங்க கண்டிப்பா பதிவு போடுவீங்கன்னு எதிர்பார்த்தேன் தல… தலைவர் சுமமா பின்னுராரில்ல….. உங்க பகிர்வு அருமை…
LikeLike