ஆபீஸ்:
இந்த வருஷம் சைனீஸ் நியூ இயர் குடீஸ் என்ன தெரியுமா?
என்னது?
2.2 மில்லியன் டாலர் லாட்டரி சீட்டு?
வாவ்..வாங்கிட்டியா?
ம்ம்..தோ..
பொறு நான் போய் வாங்கிட்டு வந்திடறேன்..
***
2.2 மில்லியன் டாலர்ன்னா எவ்ளோ தெரியுமா?
2.2 மில்லியன் டாலர்.
ம்ம்ச்சு..இந்திய ரூபாய் எவ்ளோ?
கருமம்..இந்த என் ஆர் ஐ பசங்களுக்கு ரத்தத்திலே ஊறுனதுப்பா..ஊறுகாய் வாங்கப்போனாக்கூட இந்திய ரூபாய்ல எவ்வளவுன்னு கணக்குப் பாக்காம வாங்கவே மாட்டனுங்க..
நீ மட்டும் என்னவாம்?
ம்ம்..கிட்டத்தட்ட ஏழரைக்கோடி ரூபாய்..
வாவ்..ஏழரைக்கோடி ரூபாய்ன்னா?
டேய் டுபாக்கூர் மண்டையா..இனி என்ன இந்தோனேசியா ரூபாய்ல கணக்குப் போடனுமா? கால்குலேட்டர் க்ராஷ் ஆயிடும்..
ஆமா ஏழரைக்கோடி ரூபாய வெச்சு நீ என்ன பண்ணப்போற?
இப்ப இருக்கிற வெலவாசீல சென்னையில ஒரு க்ரவுண்ட் நெலம் கூட வாங்கமுடியாது..
என்னடா மாப்ள ஏழரைக்கோடி ரூபாய் கூட பத்தலைன்னா என்னதாண்டா பண்றது?
சரி நீ என்ன பண்ணுவ?
ஒரு காண்டோ வாங்குவேன்..
சிங்கப்பூர்லையா?
பின்ன..தாய்லந்துலையா?
ஏன்டா இவ்ளோ ரூபாய் கொடுத்தும் இந்தியா போக மாட்டியா?
இல்லடா மாப்ள அங்க எல்லாம் நம்மளை மதிக்கமாட்டானுவடா.. ஒரு லட்சம் கோடி அடிச்சிட்டிருக்கானுவ பிச்சாத்து ஏழரைக்கோடியவா மதிக்கப்போறனுங்க?
வாஸ்தவம் தான்..
அப்புறம்?
***
அபீஸ்ல ப்ரசாத் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்..சாம்பார் முடித்துவிட்டார்..அடுத்தது ரசம்..
அஜய் சாப்பாட்டுக்கூடையை தூக்கிக்கொண்டு உள்ளே வருகிறார்.
வாங்க அஜய்..தயிர் வேணுமா..
உங்களுக்கு வேணான்னா கொடுங்க..
(அட்டக்கத்தி..தெளிவாவே கேக்கமாட்டான்..)
இருக்கு அஜய் எடுத்துக்கோங்க.. சரி..லாட்டரி வாங்கிட்டீங்களா?
வாங்கிட்டேன்..அதுல பாத்தீங்களா ஆபீஸ்ல எல்லோரோட லாட்டரி சீட்டு நம்பரும் ஒன்னுல ஆரம்பிக்குது..
ஓகோ..
ஆமா..நீங்க பாக்கலையா? ஆனா முடியறது வேற நம்பர்ல முடிஞ்சாலும் மொத மூணு நம்பர் கிட்டத்தட்ட ஒன்னு தான்..
ஓகோ..
ஆனா ஜாவா டீம் பசங்களுக்கு சிலருக்கு கடைசி நம்பர் மட்டும் ஒன்னா இருக்கு..
ஓ..
நான் கூகிள் பண்ணிப்பார்த்தேன்..எந்த சைட்டுன்னு தெரிஞ்சிடுச்சு..
என்ன சைட்? எதுக்கு?
ஹலோ..லாட்டரி ரிசல்ட் எங்க பாப்பீங்க??
ஓ..ஓகே ஓகே..
இப்போ போன வருசம் கூட ஒருத்தனுக்கு 3.3 மில்லியன் டாலர் விழுந்துச்சாம்..
ஓ..
கவர்மெண்ட என்ன பண்ணாங்க தெரியுமா?
ம்ம்ஹ¥ம்.. (கையில் எடுத்துவிட்ட ரசம் சாதத்தை விழுங்குவதா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்)
அவனுக்கு 33.33 % வட்டி போட்டாங்க..அப்புறம் 7.54%
குட்டி போட்டாங்களா? (பக்கத்தில் அதுவரை பொறுமையாக சாப்பிட்டுக்கொண்டிருந்த திணேஷ் கேட்டான்)
(விண்ணைக்காப்பான் ஒருவன் மண்ணைக்காப்பான் ஒருவன்..உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்..என்கிற பாடல் ரிங் டோனாய் ஒலிக்கிறது)
அ..ஆஹா..இவன் இங்க உக்காந்திருக்கறத பாக்கலையே..(மனதுக்குள் அஜய்)
ப்ரசாத் நமட்டு சிரிப்பு சிரித்து ரசம் சோற்றை அவசர அவசரமாக விழுங்குகிறார்..
அஜய்: இல்ல..7.54%
யோவ்..லாட்டரி சீட்டு விழுந்தா எதுக்குய்யா வட்டி போடறாங்க? அவன் என்ன கடனா வாங்கினான்? கேக்கறவன் ப்ரசாத்தா இருந்தா அஜய் எக்ஸ்டரா உப்பு போடாம சாப்பிட்டாருன்னு சொல்வீங்க போல இருக்கே..
அஜய் தனது டிபன் பாக்ஸ¤க்கு அருகில் வைத்திருந்த உப்பு டப்பாவையே பார்க்கிறார்..
ஆனா மதிய லஞ்சுக்கு கூட உப்பு டப்பாவும் ஊறுகா டப்பாவும் கொண்டு வர்ற ஆள் நீதான்யா..
ஏன் சாப்பிடறதில என்ன தப்பு..உப்புல என்னன்ன இருக்கு தெரியுமா? இந்த உப்பில ஐயோடின் 3.4% கம்மி..
(ஐயையோ..ப்ரசாத் சாப்பிட்டும் சாப்பிடாம எழுந்து ஓடுகிறார்)
அடுத்து பக்கத்தில் உர்கார்ந்து ஆந்த்ரா மீல்ஸ கட்டிட்டிருந்த முஸ்தபா கிட்ட அஜய் பேச ஆரம்பித்தார்..முஸ்தபாவுக்கு தமிழ் தெல்லேது..
திஸ் இஸ் வாழக்காய் ரைட்?
யெஸ்..யு வாண்ட்?
யூ டோண்ட் வாண்ட் ரைட்?
இட்ஸ் ஓகே..
யூ பீபிள் குக் வாழக்காய் ஆல்சோ?
முஸ்தபா முழிக்கிறார்..
நோ..ஐ மீன்..யூ தெலுங்கு பீபிள் ஆல்சோ குக் வாழக்காவா?
யெஸ் யெஸ்..கேன் பை ஒன்லி ·ப்ரம் முஸ்தபா..
ஓ யூ பை ·ப்ரம் முஸ்தபா ரைட்?
யெஸ் யெஸ்..
முஸ்தபா காஸ்ட்லி ரைட்?
நோ..நோ..ஒகே ஓகே ப்ரைஸ்..
தே கீப் ஓல்ட் வாழக்காய் ரைட்?
முஸ்தபா பேசவில்லை..
யு காட் லாட்டரி டிக்கெட் ரைட்?
முஸ்தபா ரெண்டு மூணு வாழக்காயை ஒன்றாக சேர்த்து அமுக்கிக்கொண்டார்..
அஜய் கண்டக்டரா இருந்திருந்தார்ன்னா அவர் ரைட் சொல்ற அழகுக்கே இந்நேரம் ரஜினிகாந்தா ஆகிருப்பார்..
***
(விண்ணைக்காப்பான் ஒருவன்..மண்ணைக்காப்பான் ஒருவன்..)
திணேஷ் வருகிறார்..
ப்ரசாத் ஆபீஸல உட்கார்ந்து ஹாயாக ·போன் பேசிக்கொண்டு இருக்கிறார்..
என்னய்யா..லாட்டரி சீட்டு தான் வாங்கிருக்க..என்னமோ மில்லியன் டாலர் விழுந்துட்டா மாதிரி வேலைசெய்யாம ஹாயா ·போன் பேசிட்டு இருக்க..
நாராயணன் எங்க?
அவருதான் லீவுல இருக்கார்ல..
எப்ப வருவார்?
ஒரு வாரம் ஆகும்..
அப்ப அவருக்கு லாட்டரி?
நான் வாங்கிட்டேன்..
அது சரி..எந்த லாட்டரி உங்களோடது..எது அவரோடது?
அது ரிசல்ட் பாத்ததுக்கு அப்புறம் தான் சொல்லமுடியும்..
***
(ரஞ்சிதாவின் கண்ணா என் சேலைக்குள்ள கட்டெரும்பு புகுந்திருச்சு..டியூன் செல்·போன் ரிங் டோனாய் எங்கோ ஒலிக்கிறது..)
விஜே வருகிறார்..
விஜே யாருன்னு யோசிக்கிறவங்களுக்கு..
விஜே ஒரு ஜெண்டில்மேன்..குஞ்சுமோன்..தியானச்செம்மல்..கம்ப்யூட்டர் துறையில் பணிபுரியும் ஒரு சாமியார்..கார்ப்பரேட் சாமியார்..மேலுலகம் கீழுலகம் என்று அனைத்தையும் கரைத்து குடித்துவைத்திருப்பவர்..ஆபீஸ்ல வேலை செஞ்சிட்டிருக்கப்போ கூடு விட்டு கூடு பாஞ்சு மக்கள் ஒழுங்கா வேலை செய்றாங்களான்னு செக் பண்ணுவார்..
ஒரு முறை அவர் நம்ம திணேஷிடம்..
(ப்ளாஷ்பேக்)
திணேஷ் வேலை செய்துகொண்டிருக்கிறார்..அல்லது கம்ப்யூட்டர் திரையை வெறித்துப்பார்த்துகொண்டிருக்கிறார்..
கார்பரேட் சாமியார் என்ட்ரி (கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருச்சு.. டியூன்)
இந்த ஞாயித்துகிழமை நீங்க ·ப்ரியா?
ஏன் எதுக்கு?
தியானம் செஞ்சிருக்கீங்களா?
எதுக்கு?
என்ன இப்படி கேக்கறீங்க?
ஆமா எதுக்கு தியானம் செய்யனும்?
மனம் நிம்மதியா இருக்கத்தான்..
நீங்க செய்றீங்களா?
ஆமா..வாரா வாராம்…எங்களுக்கு ஒரு மாஸ்டர் இருக்கார்..
புரோட்டா மாஸ்டரா?
இல்ல..தியானம் சொல்லிக்கொடுக்கிற மாஸ்டர்..
ம்ம்..நான் தியானம் பண்ணிருக்கேன்..
எப்போ?
எங்க ஊர்ல அன்னை அரவிந்த்சுவாமி ஆஸ்ரம் ஒன்னு இருக்கு..
என்ன அரவிந்த்சுவாமி ஆஸ்ரமா? புதுசா இருக்கே..அதென்ன அன்னை அரவிந்த்சுவாமி?
அர்விந்த்சுவாமியோட அன்னை…அங்க தியானம் பண்ணிருக்கேன்..
சரி..அப்புறம் ஏன் விட்டுட்டீங்க?
நான் விட்டுட்டேன்னு சொல்லவேயில்லையே..
இப்பவும் பண்ணறீங்களா..
நேத்து நைட்லருந்து காலைல வரைக்கும் பண்ணிட்டுதான் இருந்தேன்..
ஜோக்கா..எங்க மாஸ்டர்கிட்ட வாங்க..நல்லா சொல்லிக்கொடுபபார்..
எது?
தியானம் தான்..
யாரு உங்க மாஸ்டர்?
ராவணசந்த்ரா..எங்க க்ரூப் பேரு சகாய மார்க்..
என்னது சகாய மார்க்கா? என்னய்யா பேரே ஒரு மார்க்கமா இருக்கு..
ஆமா..வாரா வாரம் எங்க மாஸ்டர் கிட்டருந்து மெயில் வரும்..
என்ன மெயில்?
இனி என்ன நடக்கப்போகுதுன்னு?
எங்க என்ன நடக்கப்போகுது?
இந்த உலகத்தில..இனி என்னவெல்லாம் நடக்கும்னு..மாஸ்டர் கிட்டருந்து..மெயில் வரும்..
ஏன் மாஸ்டர் உங்களப்பாக்கிறப்போ நேர்லையே சொல்லமாட்டாரா..மெயில் தான் அனுப்புவாரா?
அவர் செத்து நிறைய வருஷம் ஆச்சு..
என்னது.. (திணேஷ¤க்கு தூக்கம் கலைந்துவிட்டது..உங்களுக்கும் கலைஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. சாமியார்கிட்ட கொஞ்ச நேரம் பேசினீங்கன்ன மூளையே கலங்கிரும்..டெரர் சாமியார்..)
ஆமா..
யோவ் உனக்கு மரகிர கழண்டிடுச்சா..செத்தவன் எப்படிய்யா மெயில் அனுப்பமுடியும்?
அனுப்பராரே..நானே பாத்திருக்கனே..
என்ன பாத்திருக்கீங்க..
அவர் அனுப்பிச்ச மெயில..
லூசாயா நீ?
என்ன திணேஷ் நீங்களே இப்படி பேசறீங்க? நீங்க ரொம்ப நல்லவருன்னு நெனச்சேன்..
நீ சொல்ற உட்டாலக்கடியெல்லாம் மூடிட்டு கேட்டிட்டிருந்தா நல்லவனா?
திணேஷ்..என் நம்பிக்கை இது..ஏன் என்ன ஹர்ட் பண்றீங்க?
யோவ் என்னய்யா வம்பா போச்சு..சும்மா உக்காந்திருக்கிறவன் கிட்ட வந்து மாஸ்டர் மெயில்ல தோச சுடறாரு ஆ ·ப்பாயில் சுடறாருன்னு உதார் விட்டுட்டு இப்ப என்ன ஹர்ட் அது இதுன்னு பீலா விடற..மொதல்ல இடத்த காலி பண்ணு..
ஆமா..உங்க மாஸ்டர் எங்கிருந்து மெயில் அனுப்பறார்? ஐபி அட்ரச ட்ரேஸ் பண்ணவேண்டியதுதான?
அவர் வேற காலக்ஸில இருக்கார்..
ஆஹா உக்காந்து யோசிப்பாய்ங்களோ?!
***
என்ன வீஜே (கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருச்சு)
சொல்லுங்க திணேஷ்
உங்களுக்கு லாட்டரி விழுமா விழாதான்னு உங்க மாஸ்டர் கிட்டருந்து மெயில் வரலையா?
இதெல்லாம் இந்த உலகத்தில கண நேரம் நமக்கு கிடைக்கப்போகிற சந்தோஷம்..அத நினைச்சிட்டு இருக்கக்கூடாது..
என்னாது? அப்படீன்னா உனக்கு லாட்டரி வேணாம்..சரி என்கிட்ட கொடுத்திடு..
ஹா..ஹா..ஹா..ஹா…
யோவ் எதுக்குய்யா சிரிக்கிற..
நாம எல்லாம் ஒரு இடத்துக்குத் தான போறோம்?
என்ன ஒரு இடத்துக்கு போறோமா? எங்க போறோம்..
ஒருத்தன் கிட்டருந்து வந்தோம்..
என்னய்யா சொல்ற? யாருய்யா அந்த ஒருத்தன்?
நம்மலையெல்லாம் படச்ச கடவுள்..
என்னது உன்னைய கடவுள் படைச்சாரா? அப்புறம் பரிணாம வளர்ச்சின்னு சொல்றாங்களே அது என்ன?
அது மூள வளர்ச்சி இல்லாதவங்க கட்டிவிடற கதை..
·பாசில்ஸ் எடுக்கறாங்களே?
·பாசில யார் எடுக்கிறா? ·பாசில் தான சினிமா எடுக்கிறார்?
அது சரி..
அதனால தான் எங்க க்ரூபில இருக்கிற எல்லோரும் இரவு ஒன்பது மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை செய்வோம்..
எனனது கூட்டுப்பொறியல் சாப்பிடுவீங்களா?
கூட்டுப்பிரார்த்தனை..
டெய்லி ஒன்னா உங்க வீட்ல கூடுவீங்களா?
இல்ல..அவங்க அவங்க வீட்ல இருந்துட்டே..
வீடியோ காண்·பரண்ஸ்லையா
இல்ல. அவங்க அவங்க வீட்ல இருந்துட்டே..மனசாற..ஒரே நேரத்துல எல்லோரும் ப்ரார்த்தனை செஞ்சா..
செஞ்சா?
ஒரு வேவ்லென்த் கிடைக்கும்?
வேவ்லென்த்தா?
ஒரு ·ப்ரிக்வென்ஸி..
என்னய்யா உளர்ற..வேவ்லெந்த்துங்கற..·ப்ரீக்வென்ஸிங்கற..என்னய்யா சொல்ற?
உங்களுக்கு புரியாது..அத உணர்ந்து பாத்தாத்தான் தெரியும்..
பரவாயில்ல..அது ஏதோ வேவ்லெந்துன்னு சொன்னியே..அது என்ன வேவ்லெந்த்..லாம்டா அளவு என்ன?
இதெல்லாம் சொல்லிப்புரியவெக்கமுடியாது..
பரவாயில்ல சொல்லுங்க பார்ப்போம்..
திணேஷ்..மாம்பழம் இனிக்கும்னு நான் உங்ககிட்ட சொல்றேன்..இனிப்பா..அப்படீன்னா என்னன்னு கேட்டா நான் எப்படி.. விளக்கவா முடியும்..சாப்டாத்தான தெரியும்..
ம்ம்..1945ல தியாகராசபாகவதர் சொல்லிட்டிருந்த டயலாக்க இன்னும் அதே எபக்ட்டோட சொல்லிட்டு டெரர்ரா பாத்தா என்ன அர்த்தம்..எப்படி புடிச்சேன் பாத்தியான்னா?
ம்ம்..
யோவ் லூசு..சுவையெல்லாம் எப்பவோ டாக்குமெண்ட் பண்ணியாச்சு..உங்களுக்கு இனிப்பு சுவைய ஸ்டிமுலேட்டே பண்ணமுடியும்..சுவைங்கறது மூளைக்குப் போற எலக்ட்ரிக்கல் சிக்னல்..வேலைய போய் பாருய்யா.
***
நாளைக்கு லாட்டரி ரிசல்ட் வந்திடுமா?
ஆமா..யாராவது மில்லியனர் ஆனா..என்கிட்ட சொல்லாதீங்கய்யா..என் வயித்தெரிச்சல கொட்டிக்காதீங்க..
***
திணேஷ்..என்னைக்குமே காலைல வேகமா எழுந்திருக்காதவன்..அன்னைக்கு ஆறு மணிக்கு எழுந்திருக்கிறான்..ஆபீஸ¤க்கு லீவு வேற..இந்நேரத்தில் எதுக்கு எந்திர்க்கான்னு அவன் மனைவி கூட அதிசியமா பாத்தா..
லேப்டாப்ப தொறந்து..சிங்கப்பூர் பூல்ஸ் வெப் சைட் போய் தேடினான்..
ctrl+f சர்ச் விண்டோ வந்தது..1237.. நம்பர் டைப் செய்தான்..பாதி டைப் செய்துகொண்டிருக்கும்பொழுதே செர்ச் விண்டோ சிவப்பு காட்டியது..
பிம்பிலிக்கா பிலிப்பா..மாமா பிஸ்கோத்து..
கம்ப்யூட்டர் வந்ததுக்கப்புறம் லாட்டரி டிக்கெட் ரிசலட் ஒவ்வொரு நம்பரா தெடுற த்ரில் கூட இல்ல..
***
ஐயையோ வேற யாருக்காவது விழுந்திருக்கப்போவுதுன்னு அவனுக்கு வயித்த கலக்க ஆரம்பிச்சிருச்சு..ப்ரசாத்துக்கு கால் பண்ணான்..
இல்ல திணேஷ் நான் இன்னும் காங்கல..கீழ இருக்கேன்..அப்புறம் பாத்திட்டு சொல்றேன்..
***
அன்றைக்கு மதியம் வெளியே போய் சாப்பிட்டுவிட்டு..இரவு வீட்டிற்கு வந்து..தூங்கப்போகும் பொழுது.. ·போன் மணி அடித்தது..
ஹலோ..
நான் தான் முருகன் பேசறேன்..
என்ன முருகன்..
ப்ரசாத்துக்கு லாட்டரி விழுந்துட்டு தெரியுமா?
என்னாது?
ஆமா..
எனக்கு பக்கத்தில தான் விஜே இருக்கார்..அவரு வெலவெலத்துப் போயிட்டார்..
எவ்ளோ?
250,000 டாலர்..
3.3 மில்லியன் இல்லையா?
இல்ல ராஜ்..250,000 கிடைக்கிறதெ பெரிசு இல்லையா?
ஆமா ஆமா..எங்க அவரு..
தெரியல..நாங்க மலேசியா வந்தோம்..ப்ரேசர் ஹில்ஸ்ல இருக்கோம்..
ஒகே ஓகே..என்ஜாய்..
அன்றைக்கு இரவு திணேஷ¤க்கு தூக்கம் பிடிக்கவில்லை.
***
பிறகு மூன்று நாட்கள் ப்ரசாத்தை பிடிக்கவே முடியவில்லை..
***
மூன்று நாட்கள் கழித்து. திணேஷ் ஆபீஸ¤க்கு வந்தான். பக்கத்து சீட் முருகன் சொன்னார்: திணேஷ் உனக்கு சேதி தெரியுமா? என்ன செய்தி? ப்ரசாத்துக்கு லாட்டரி விழுந்திருக்கு. உண்மையாவா? திணேஷ் திக்குமுக்காடிப்போயிட்டான். தான் நல்லாயில்லாட்டியும் மத்தவங்க நல்லாஆஆஆஆஅ இருக்கனும்னு நினைக்கிற சமூகம் இல்லையா இது? உண்மையாவா முருகன்? அட நீ வேற திணேஷ்.. சும்மா கெளப்பிவிட்டிட்டிருக்கோம்..உக்காரு.. பக்கத்து சீட் தருண் முருகனிடம், என்ன திணேஷ் நம்பிட்டார் போல? என்று சிரித்தார்..
முருகனின் செல்போன் மெதுவாகச் சிணுங்கியது..
ஹலோ
ஆமா
அட சதீஷா?
(சதீஷ் ப்ரசாத்தின் நண்பர். இப்பொழுது தனியாக கண்ஸல்டண்ட் கம்பெனி வச்சிருக்கார்.)
உங்களுக்கு எப்படித் தெரியும்?
விஜே சொன்னாரா?
(விஜேவும் ப்ரசாத்தும் சதீஷ¤ம் சிங்கப்பூருக்கு வடை சுட வரும் முன் பெங்களூரில் மாவாட்டிக்கொண்டிருந்தனர்)
அதுக்குள்ள சொல்லிட்டாரா?
இன்னும் ப்ரசாத் கைல வாங்கலியே..
நம்பர் பாத்தாச்சு.. ஆமா விழுந்திருக்கு..
நம்பரா? என்கிட்ட இல்லியே..
பொய்யா? அவனுக்கே கால் பண்ணிக்கேட்டுக்கிடுங்க..
ஆமா சதீஷ்.. லாட்டரிக்காகத்தான் போயிருக்கான்..
சிக்னல் வீக்கா இருக்கும்..பொறுத்துப்பண்ணுங்க..கிடைக்கும்..
250,000 டாலர்..
தெரியலையே.. அவன் வந்தாத்தான் தெரியும்..
சரி..
பை..
·போனை வைத்துவிட்டு..சிரித்தார் முருகன். இங்கவாங்க. நியூஸ் எப்படி தீயாப்பரவுது பாத்தீங்களா? விஜே உண்மைன்னு நம்பிட்டாரு..அதனால தான் சதீஷ்கிட்ட கால் பண்ணி சொல்லிருக்காரு.. சரி இது தான் மேட்டர்: ப்ரசாத்துக்கு 250,000 டாலர் லாட்டரி விழுந்திருக்கு..சரியா..அப்படியே மெயின்டையின் பண்ணிக்கிடுங்க..
தருண் உற்சாகமாய் சிரிக்கிறார்..
என்னா ஒரு வில்லத்தனம்?
***
கொஞ்ச நேரம் கழித்து..அஜய் வந்தார்..
திணேஷைக் கடந்து தான் முருகனிடம் போகவேண்டும்..அஜய் நேராக முருகனிடம் போனார்..
திணெஷ் தருணைப் பார்த்துக் கண்ணடித்தார்..
முருகன்..
…
முருகன்..
..
முருகன்..
ஒரு நிமிஷம் அஜய்…முக்கியமான வேலை..
..
அஜய் நிலை கொள்ளாமல் தவிக்கிறார்..
தருண்..
….
தருண்..
…
தருண்..
(தருண் போனை எடுத்துக்காதில் வைத்துக்கொள்கிறார்..)
இப்பொழுது வேறு வழியில்லை..திணேஷிடம் தான் பேசியாக வேண்டும்..
ஏன்னா அங்க உக்காத்திருந்த இன்னொரு நபர் ஜ·ப்ரூலுக்கு தமிழ் தெரியாது..
நம்ம அஜய்யோ சுத்தத் தமிழர்..ரத்தத்தின் ரத்தம்.. (கேட்டீங்கன்னா ஹிந்தியில ப்ராஷ்த்தியமா பரிட்சை எழுதி ப்ளாக் பெல்ட் வாங்கிருக்கேன்னு சொல்லுவார்)
வேறு வழியின்றி சற்று தூரம் நடந்து அங்கிருந்த பாராவிடம் பேச்சுக்கொடுத்தார்..
பாரா..
ம்ம்.. சொல்லுங்க அஜய்..
ப்ரசாத்துக்கு லாட்டரி விழுந்திருக்காமே…?
ஆமா அஜய்.. உங்களுக்கு விழலியா?
நமக்கெல்லாம் எங்க பாரா விழும்? ஆமா எவ்வளவு?
500,000 டாலர்..
என்னது 500,000 டாலரா? (அஜய் அப்படியே ஷாக் ஆகிட்டாரு) 250,000 டால்ர்ன்ல்ல சொன்னாங்க?
ஓ அப்படியா? எனக்கு 500,000 டாலர்ன்லையா சொன்னாய்ங்க?
(அடச்சே மனதுக்குள் அஜய்)
உங்களையும் குழப்பிட்டாங்களா?
(முருகன் இன்னும் பிஸிய இருக்கிறார்)
அஜய் கிளம்புகிறார்..
அஜய் வாங்க இங்க..
(அஜய் ஓட்டமும் நடையுமா வருகிறார்..)
என்ன அஜய்..இந்தப்பக்கம்?
தருண் ·பொனை வைத்துவிடுகிறார்..திணேஷ் திரும்பி உட்காருகிறார்..
(அஜய் முருகனிடம் வந்து நின்று..திணேஷைக் கூர்ந்து கவனிக்கிறார்..பிறகு)
என்ன முருகன்..ப்ரசாத்துக்கு லாட்டரி விழுந்திருக்காமே?
ஆமா..
எவ்வளவு?
250,000 டாலர்..
அடேங்கப்பா.. உண்மையாவா?
திணேஷ்: இல்ல உல்லுலாய்க்கு..
(அஹ்ஹ்ஹ்..ஆஹா..கெளம்பிட்டாய்ங்கடா..)
திணேஷக் கூர்ந்து பார்த்தபடி: ப்ராசாத் இப்போ எங்கே?
திணேஷ்: கூகிள் பண்ணுங்க..