http://www.maattru.com/2011/06/blog-post_25.html
http://kazhuhu.blogspot.com/2011/06/blog-post_06.html
ஆனால் ஒரு நாட்டின் குடிகளுக்கு சிறந்த தரமான கல்வியை இலவசமாக அளித்தால் தானே ஒரு நல்ல தலைமுறை உருவாகும். இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் இதற்கும் தடையாக நம் நாட்டின் மக்கள் தொகை இருக்கிறது என்கிறார்கள். இருக்கட்டுமே…. எத்தனை கோடிகள் அநாவசியமான வழிகளில் எம் மக்களின் பணம் சூறையாடப்படுகிறது. எங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல் பிரதிநிதிகளே… அப்பொழுதெல்லாம் இந்த தரமான கல்வி வழங்குவது பற்றியும், அதற்குத் தேவைப்படும் பணம் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்.
முதலில் நம் நாட்டில் ஒரு முரண் கண்ணுக்குப் புலப்படாமல் காலங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பக் கல்வியை நல்ல தரத்துடன் கொடுக்கப்படல் வேண்டும். அதிக நிதி உதவியும் ஆரம்பக் கல்விக்கும் செலவழிக்கப் பட வேண்டும். அதாவது, ஐஐடி, ஐஐம் போன்ற அரசின் உதவியுன் நல்ல தரத்தில் இயங்கும் உயர்கல்வி பல்கலைக்கழகங்களுக்கு செல்ல ஏதுவான வகையில் உள்ள பாடத்திட்டத்துடன் கூடிய சிறந்த பள்ளிகளை ஒவ்வொரு மாநிலத்திலும் அரசின் மூலமாக உருவாக்கப்பட்டால் ஏற்றத்தாழ்வுகள் குறையும். மாநில அரசு வைத்துள்ள பாடத்திட்டத்தின் மூலமாக படித்து வெளிவரும் எம் கிராமத்துப் பிள்ளைகளுக்கு இது ஏன் இவ்வாறு எட்டாக்கனியாக இருக்க வேண்டும்.
அது எப்படி ஆரம்பக்கல்விக்கு குறைந்த அளவில் உதவித் தொகையும் உயர்கல்விக்கு மட்டும் ஒவ்வொரு ஐஐடிக்கும் ஆண்டுக்கு 100 கோடிகள் உதவித் தொகை. அதுவும் நன்றாகப் படித்து வெளிவரும் பிள்ளைகளுக்கு, இந்த மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத நிலை. இங்கு ஒரு ஏற்றத்தாழ்வு நிலையே உள்ளது. இல்லையெனில் சமச்சீர் கல்வி முறை வேண்டாம், என் பிள்ளையும் கார்ப்பரேசன் பிள்ளையும் ஒரே பாடத்திட்டத்தில் படிப்பதா என்று பொங்கும் பணக்காரர்களுக்கே இந்த மாதிரியான உயர்கல்வி நிறுவனங்கள் அளிக்கும் கல்வி கிடைக்கும்.