இன்று இந்த அருமையான வீடியோ காணக்கிடைத்தது..
மேகங்கள் கொந்தளிக்கும் கடல் போல இருக்கிறது..
Danial Lopez என்பவர் Canary Island இல் எடுத்த வீடியோ..
நம் கிரகம் எவ்வளவு அழகானது பார்த்தீர்களா?
**
ராக் மியுசிக்கும் வானவியல் ஆராய்ச்சியும் இணைந்தால் என்ன கிடைக்கும்?
இது போன்றதொரு (மற்றொரு) அருமையான வீடியோ கிடைக்கும்..
Cassini அனுப்பிய புகைப்படங்களுக்கு Nine Inch Nails இன் ராக் மியூசிக்..
Enjoy ராஜாக்களா 😉
(via Discovery News)
**
தெய்வத் திருமகன் படம் பற்றிய விமர்சனம் படித்து விட்டேன் (படம் பார்த்துவிட்டேன் என்று சொல்ல ஆசை தான்!). விமர்சனம் படித்த வரைக்கும் இது I AM SAM இன் காப்பி போலத் தெரியுது.. கிரெடிட் ஏதும் போட்டார்களா? இல்ல கமல் பண்ற மாதிரி வெறும் காப்பி மட்டும் தானா? (முன்னாடி கமல் மட்டும் தான் செய்வாரு!)
**
இரண்டு முக்கியமான (அட்லீஸ்ட் என்னக்கு அப்படி தோணிச்சு!) புத்தகங்கள் படித்து முடித்தேன்:
1. Pour Your Heart Into It: How Starbucks Built a Company One Cup at a Time
2. The Facebook Effect
பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்கள். புத்தகங்களைப் பற்றி இன்னொரு முறை விரிவாக எழுத வேண்டும். இப்பொழுது ஒரு சில விஷயங்கள்.
Howard Schultz தான் Starbucks பற்றிய புத்தகத்தை எழுதியவர். அவர் தான் Starbucks இன் CEO கூட! ஆச்சரியமான விசயம் என்னவென்றால் Howard Schultz Starbucksஐ ஆரம்பிக்கவில்லை. Starbucks முன்னமே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்படி காஃபி விற்கும் கம்பெனியாக அல்ல – காஃபி கொட்டை விற்கும் கம்பெனியாக! Starbucks ஐ ஆரம்பித்தவர்கள் மூவர்! ஒருவர் ஆங்கியல் ஆசிரியர் (Jerry Baldwin). ஒருவர் வரலாற்று ஆசிரியர் (Zev Seigl). ஒருவர் எழுத்தாளர் (Gordon Bowker). ஆனால் மூவருமே காஃபியின் மேல் தீராத ஆசை கொண்டவர்கள்!
இவர்களோடு 1982ஆம் வருடம் ரீடைலைக் கவனித்துக்கொள்ள வந்தவர் தான் Schultz. மிலனுக்கு ஒரு பிஸினஸ் ட்ரிப் அடித்தவுடன் அவரது மனம் துள்ளிக்குதிக்கிறது! மிலனில் மக்கள் ஆசை ஆசையாக தெருமுனைகளில் இருக்கும் காஃபி பார்களில் காஃபியை சுவைத்துக்கொண்டிருப்பதைக் காண்கிறார். இதையே நாம் அமெரிக்காவில் செய்தால் என்ன என்கிற எண்ணம் அவருக்கு உதித்தது. ஆனால் Jerry இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. Jerry ஐ ஒத்துக்கொள்ள வைக்க படாத பாடு பட்டும் பிரயோசனம் இல்லாதாதல் தானே தனியாக கடை போடுவது என்று முடிவெடுத்தார் Schultz. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் Il Giornale. பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா?! அப்புறம் Schultz Starbucksஐயே வாங்கியது வேறு கதை!
*
zuckerbergஐப் பற்றி நான் ஒன்றும் பெரியதாகச் சொல்லத் தேவையில்லை. இந்தப் புத்தகம் பற்றியும் நான் சொல்லத் தேவையில்லை. இது படமாக வந்து விட்டது. Social Network.
அதாவது உலகம் முழுதும் மொத்தம் 400 பில்லியன் டாலர் வருமானம் ஆண்டொன்றுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கின்றன. இவை டீவி, பேப்பர், இன்டர்னெட் போன்ற எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் கிடைக்கிறது. இதில் ஒரு சொற்பப் பகுதியே இன்டெர்னெட்டிலிருந்து கிடைக்கிறது. அதன் பெரும்பகுதி கூகிள் இன்று வரை எடுத்துக்கொண்டிருந்தது. AdSense மூலமாக. கூகிளின் மிகப்பெரிய பலவீனம்: செர்ச்.
விளம்பரத்துறையில் இது பலவீனம் தான். ஏனென்றால் விளம்பரம் மக்களுக்கு எப்படிக்கொடுக்கமுடியும்? அவர்கள் செர்ச்சில் ஏதாவது ஒரு வார்த்தை அடித்தப்பிறகு தானே? ஆனால் நீங்கள் செர்ச் செய்ய வரும் முன்னரே 80 சதவிகிதம் உங்களுக்கு என்ன தேடுகிறோம் என்பது தெரிந்து விடும். எடுத்துக்காட்டுக்கு: SAMSUNG LED TV. அதை வைத்துக்கொண்டு தான் அவர்களால் விளம்பரம் கொடுக்கமுடியும்.
ஆனால் 750 மில்லியன் நபர்களை உறுப்பினராகக் கொண்டிருக்கும் facebookக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியும். உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். உங்கள் பெயர் என்ன, பிறந்த ஊர் என்ன, நீங்கள் படித்த கல்லூரியின் பெயர் என்ன, உங்கள் அப்பா யார், அம்மா யார், உங்கள் பிறந்த தேதி என்ன, உங்கள் நண்பர்கள் யார், அவர்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, என்ன புத்தகங்கள் படிப்பார்கள் போன்ற எல்லா விசயங்களும் தெரியும்!
இப்பொழுது சொல்லுங்கள் யார் அதிக வருவாய் ஈட்ட முடியும்?
இப்பொழுது தெரிகிறதா கூகிள் ஏன் தலைகீழாய் நின்று தண்ணி குடிக்கப் பாக்குதுன்னு?
ஆனா எனக்கென்னவோ டூ லேட்டுங்கிற மாதிரி படுது! Circleஐயும் Hangoutஐயும் கொண்டுவருவதற்கு facebook க்கு எவ்வளவ நேரம் ஆகப்போகுது?
*