நீயா நானா பார்த்த பாதிப்பு.
நீயாநானா ஒரு மொக்கங்கறது என் தாழ்மையான கருத்து. அதுல எடுத்துவைக்கப்படும் தலைப்புகளும் பொதுமக்களின் கருத்துக்களும் மிகவும் மொன்னை. மிடில் க்ளாஸுக்கு பொதுவா ஷார்ப்பா பேசத்தெரியாது. பேச வராது. பேசவும் பிடிக்காது. அரே யார்.. தேட் ஆல்சா குட் திஸ் ஆல்சோ குட் என்கிற யதார்த்தம் தான் இருக்கும். தப்பித்தவறி ஒன்னுரெண்டு தத்துபித்துன்னு ஏதாச்சும் சொல்லுச்சுன்னாலும், அத உடச்சு யாராச்சும் சொன்னா, அதுக்கு பிறகு என்ன பேசறதுன்னே அதுங்களுக்கு தெரியாது. அப்படியே அதுங்க பேசுச்சுன்னாலும், நீயாநானால, “கனம்கோட்டார்” மடக்கி நிமித்திவிட்டுடுவார். அடடே வட போச்சேன்னு, பிடுங்கப்பட்ட மைக்கப் பாத்துக்கிட்டு உக்காந்திருக்கும்கள். நானூறு வருஷம் ஒலியும் ஒளியும் பாத்துவளர்ந்த குமரிக்கண்ட மூத்தகுடிகளுக்கு, நீயா நானா ஏன் பிடித்தது என்று பல்லுவெளக்கி துப்பத் தேவயில்லை.
நான் பாக்கறதில்லை – ஆனா அவார்டு எல்லாம் கொடுத்தப்பிறகு, என்னதான்யா செய்றாய்ங்கன்னு பாக்க ரெக்கார்ட் பண்ணிவெச்சேன். ஊத்தாப்பம் வர லேட்டான கேப்பில ரீப்ளே பண்ணதால வந்த வெண.
இந்த நீயா நானாவிலே ஏதோ ஒரு ராசிக்கு சொத்து தகராறு தீரும் என்று ஒரு விஞ்ஞானி சொன்னவுடன், நின்றுகொண்டிருந்த அந்த அப்பாவி குறுஞ்சிரிப்பு சிரித்தார். உடனே மற்ற விஞ்ஞானிகளும் அதே பாடலை ராகம் மாற்றாமல் பாடினர். கனம்கோட்டாரும் நெறைய விஞ்ஞானிகள் இதயே சொல்றாங்கன்னு, ஏத்திவிட, வழிந்த அந்த அப்பாவி, தனக்கு சொத்துப்பிரச்சனை இருக்கிறது, அதுவும் முடிஞ்சிரும்னு, அசட்டு சிரிப்புடன் சொன்னார்.
சிம்பிள். நீங்கள் இப்படி முகப்புத்தகத்தில் தவம் கிடப்பது போல, அவர்கள் உங்கள் முகப்புத்தகத்தின் ஒவ்வொரு தசையின் அசைவையும் படிக்கிறார்கள். கதை ரெடி செய்கிறார்கள். சமீபத்திய ஆன் டிமாண்ட் பிரிண்டிங் மாதிரி. அப்பப்ப சுடச்சுட வடை சுடுகிறார்கள். மாவு? ஆல்டைம் ரெடி. சேம் ப்ளட்.
பி கேர்ஃபுள். நான் என்ன சொன்னேன்.
தெரியாமத்தான் கேக்கறேன் – தமிழ்நாட்ல சொத்துப்பிரச்சனை இல்லாமல் யாராவது இருக்கிறார்களா என்ன?
சீரியசா கேக்கறேன் – இன்னுமா இந்த உலகம் இவிங்கள நம்பிக்கிருக்கு?
ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய பொய். பொய்யைத் தவிர வேறில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன் நான் எழுதிய பதிவு.