ஆப்பில் இன்று மற்றுமொரு புதிய ஐபேட் ரிலீஸ் செய்திருக்கிறது. போனவாரத்திலிருந்தே கிசுகிசுக்கள் வர ஆரம்பித்துவிட்டன. ஆப்பில் அமெரிக்க மாணவர்களை டார்கெட் செய்து ஐபேடின் விலையை குறைக்கப்போகிறது என்ற செய்தி பல வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வந்தது.
விலை குறைந்ததா? பார்ப்போம்.
- ஐபேடின் சைஸ் 9.7 இன்ச்
- மாணவர்களையும் ஆசிரியர்களையும் டார்கெட் செய்வதால் ஆப்பில் பென்சில் இதில் பயன்படுத்தலாம்.
- இதன் விலை தோராயமாக பள்ளிகளுக்கு 19400₹ க்கும் பொதுமக்களுக்கு 21300₹ க்கும் கிடைக்கும்.
வேறு என்னென்ன இருக்கிறது:
- 10 மணி நேரம் பேட்டரி சார்ஜ்
- 8 mp கேமரா
- LTE ஆப்ஷன்
- A10 சிப்
- ஜி பி எஸ்
- காம்பஸ்
- HD ஃபேஸ் டைம் கேமரா
- ரேகை ஐடி
ஆப்பில் அதன் இலவச ஐக்லௌட் சேமிப்பை 5 ஜிபிலிருந்து 200 ஜிபியாக கூட்டியிருக்கிறது, ஆனால் இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டும் தான்.
ஆப்பிள் பென்சில் ஐபேடுடன் இலவசமாக வராது, தனியாகத் தான் வாங்கவேண்டும்.மேலும் எந்த தட்டச்சுப்பலகையையும் ப்ளூடூத்தின் வழியே இணைத்து பயன்படுத்தலாம்.
கவனம்: ஆப்பிள் இன்னொரு 9.7 இன்ச் ஐபேடும் விற்கிறது ஆனால் இதில் ஆப்பிள் பென்சில் உபயோகிக்க முடியாது.
இந்த புதிய ஐபேடை செவ்வாய்க்கிழமையிலிருந்து (நேற்று) ஆர்டர் செய்யலாம்.
Enjoy Apple Fans.