வின்னி மண்டேலா காலமானார்

mandela-wife

வின்னி மண்டேலா, நெலசன் மண்டேலா தென் ஆப்பிரிக்க சிறையிலிருந்து 1990இல் வெளிவந்த பொழுது எடுக்கப்பட்ட படம். 1996இல் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

நிறவெறியை எதிர்த்துப் போராடிய வின்னி மண்டேலா தனது 81ஆவது வயதில் காலமானார். இவர் நெல்சன் மண்டேலாவின் இரண்டாவது மனைவி.

புத்திசாலியான, அக்ரோஷமான, சொல்திறமிக்கவரான, அழகான மடிகிஜேலா மண்டேலா, மண்டேலாவைக் கரம் பிடித்த பொழுது உலகுக்கு அறிமுகமானார்.

வின்னி மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் அடித்தட்டு மக்களிடம் தனக்கான இடத்தை அவராகவே தனது போராட்டத்தினால் பெற்றிருந்தார். ஏப்ரல் 2016இல் ஜனாதிபதி ஜாகோப் ஜி ஜுமா, மடிகிஜேலா மண்டேலாவுக்கு, நாட்டின் உயரிய விருதான the Order Of Luthuliஐ அவருடைய ஜனநாயகப் போராட்டத்துக்காக அளித்தார்.

வின்னி மண்டேலா அவருடைய நிறவெறிப் போராட்டம் அவரது கணவரின் உலகலாவிய புகழினால் மறைக்கப்பட்டுவிட்டது என்று கவலை கொண்டார். கடைசிக் காலத்தில் மீண்டும் தனது இழந்த புகழை, தேசத்தின் தாயாக மீண்டும் மாற எடுத்த முயற்சிகள் பெரிய வெற்றி அடையவில்லை. “நான் மண்டேலாவால் உருவாக்கப்படவில்லை.நான் எனது பல்லாயிரக்கணக்கான மக்களின் கனவுகளால் உருவாக்கப்பட்டவள். எனது எதிரிகளின் கொடுரத்தால் உருவாக்கப்பட்டவள்” என்று ஒரு முறை கூறினார். அவர் எதிரிகள் என்று சொன்னது தென் அப்பிரிக்காவை ஆண்டு கொண்டிருந்த மேற்கத்திய வெள்ளைக்காரர்களின் அரசு. அவர் வெள்ளைக்காரர்களால் கொடுமைகளுக்கு உள்ளானவர் – வெள்ளைக்காரர்கள் இவரை மொத்தமாக ஒழித்துவிடவும் முயற்சித்தனர்.

03mandela

வின்னி மண்டேலா 1986இல் தென் ஆப்பிரிகாவின் க்ரூகெர்ஸ் ட்ராப் நீதிமன்றத்திற்கு வந்தபொழுது அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தனர். நெலசன் மண்டேலாவைத் தாண்டி அவரை பின்பற்றுபவர்கள் நிறைய இருந்தனர்.

மண்டேலா கேப் டவுனிலிருந்து சிறிது தூரத்திலிருக்கும் ராபன் தீவில் 27 வருடங்கள் சிறை வைக்கப்பட்ட பொழுது, இவர் தான் மண்டேலாவுக்கும் அவரை பின்பற்றுபவர்களுக்குமான பாலமாக இருந்தார். ஆனால் வந்த செய்திகள் மிகவும் குறைவு – ஏனென்றால் மிக சொற்பமான முறையே அவர் சிறைக்குள் அனுமதிக்கபட்டார். அந்த சந்திப்பில் இவர் மண்டேலாவை தொடக்கூட அனுமதி மறுக்கப்பட்டது.

1996இல் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதற்கப்புறம் மண்டேலா, முன்னால் மொசாம்பிக் ஜனாதிபதியான சமோரா மசெல்லின் மனைவியான க்ராசா மசேலை (சமோரா மசேல் இறந்துவிட்ட பிறகு) தனது 80ஆவது வயதில் 1998இல் திருமணம் செய்துகொண்டார். இது மண்டேலாவின் மூன்றாவது திருமணம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s