ஒரு செயலிக்கு (ஆப்) நீங்கள் உங்கள் கேமராவை உபயோகப்படுத்த அதிகாரம் கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த செயலியால் என்னென்ன செய்ய முடியும்?
அந்த செயலியால்,
- முன் பக்க, பின் பக்க காமராவை உபயோகப்படுத்த முடியும்
- அந்த செயலி திரையில் இருக்கும் பொழுது, எந்த நேரமும் உங்களை ரெக்க்கார்ட் செய்ய முடியும்
- உங்களிடம் கேட்காமல் உங்களை படம் பிடிக்கவோ, வீடியோ எடுக்கவோ முடியும்
- எடுத்த படங்களை/வீடியோவை உடனுக்குடன் பதிவேற்ற முடியும்
- முகத்தை அடையாளம் காணும் மென்பொருளை உடனுக்குடன் லைவ்வாக பயன்படுத்தி, உங்களது முக அம்சங்களையும் முக பாவனைகளையும் கண்டுபிடிக்க முடியும்.
- பதியப்பட்ட முக பாவனைகளையும் முக அம்சங்களையும் ஒரு நல்ல முக அடையாள மென்பொருளைப் பயன்படுத்தி இணையத்தில் உங்கள் முகத்தைத் தேட முடியும். கிடைக்கும் ஃபோட்டோக்களை வைத்து உங்களை முகத்தை 3டி மாடலாக உருவாக்கமுடியும்
- காமராவை லைவ்வாக ஸ்ட்ரீம் பண்ண முடியும்.
- ஃபோன் பயன் படுத்துபவர் தனியாக இருக்கிறாரா அல்லது இரண்டு நபர்களுடன் இருக்கிறா என்று கண்டுபிடிக்க முடியும்
- நீங்கள் நீயூஸ் ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கும் பொழுதி, முன் பக்க பின் பக்க காமராவைப் பயன் படுத்தி அழகான ! போட்டோக்கள் எடுக்க முடியும்.
அடங்கப்பா.
சரி, என் பாத் ரூம் அவ்வளவு அழகாக இருக்காதே, எப்படி என்னைப் பாதுகாத்துக் கொள்வது?
- முற்றிலும் பாதுகாப்பான வழி காமரா கவர்களை வைத்து காமராவை மறைப்பது. அல்லது சிம்பிளாக டேப் வைத்து மறைப்பது. நான் என் மேக் புக் காமராவை அப்படித்தான் மறைத்து வைத்திருந்தேன்.
- காமராக்கான அக்ஸஸ் ரைட்சை எல்லா செயலிகளிலிருந்தும் தூக்குவது. ஃபோனில் இருக்கும் காமரா செயலியை பயன்படுத்தி ஃபோட்டோக்கள் எடுத்து பிறகு அந்த அந்த ஆப்களின் ஃபோட்டோ தேர்ந்தெடுக்கும் அப்ஷனை வைத்து எடுத்த போட்டோவை செலக்ட் செய்யுங்கள்.
- இதையும் செய்யக்கூடாது என்றால் உங்கள் ஃபோட்டோவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அந்த ஸ்க்ரீன் ஷாட்டை காப்பி பேஸ்ட் செய்யவும்
நம்மை மற்றும் ஊர் உலகத்தையே ஃபோட்டோ எடுத்து போஸ்ட் செய்ய வைக்கும் மார்க் தம்பியே காமராவை மறைத்துத் தான் வைத்திருக்கிறார்.
தம்ப்ரி, நீ சொன்னா நம்ப முடியாது, வெள்ளக்காரன் சொன்னாத்தான் நம்புவோம்னா, இங்கே ஆதாரமும், சாம்பிள் ப்ராஜெக்டுமே இருக்கிறது. நீங்கள் சோர்ஸ் கோடை எடுத்து ஆப்பை ஓட்டியே பார்க்க முடியும்.
பீ கேர்புல். நான் என்னச் சொன்னேன்.