-ஹரிஹரன்
1
IPL a.k.a The Great Indian Circus has finally begun. ஒன்றரை மாத திருவிழா நாளை முதல் ஆரம்பம்! பதினோரு மாதமும் ஒரே அணியாக, இந்திய அணியாக, விளையாடிய வீரர்கள் வெவ்வேறு அணியாக, மற்ற நாட்டவருடன்வி ளையாடும் வித்தியாசமான போட்டி. குரங்கு என “அன்பாக வர்ணித்த” ஹர்பஜனும் சைமசும் கட்டித்தழுவி வெற்றியை கொண்டாட, அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைய வைத்த போட்டி. இந்தியனாக இருந்து சென்னை சூப்பர் கிங்சாக உருமாரி பின் இந்தியனாக மறுபடியும் பரிணாம வளர்ச்சி தரும் போட்டி.
என்ன சார், அப்படி என்னதான் இருக்கு இந்த போட்டியில்? After all, it’s another T20 game என்று நீங்கள் நினைத்தால், sorry sir, you may be wrong என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த பத்து வருடத்தில் எவ்வளவோ சர்ச்சைகள். இருந்தாலும் பார்போரின் எண்ணிக்கைக்கு என்னவோ குறைவில்லை. அரங்கம் முழுவதும் பார்வையாளர்கள், வண்ண விளக்குகள், those beautiful cheerleaders, ஒவ்வொரு விக்கட்டுக்கும் பவுண்டரிக்கும் ஆர்பரிக்கும் ரசிகர்கள், கடைசி ஓவரில் தன் அணி வெற்றி பெருமா என்ற ஏக்கத்துடன் நகத்தை கடிக்கும் அணியினர், என சுவாரசத்தியர்க்கு பஞ்சமில்லை.
ஒரு வேளை திருவள்ளுவர் இருந்திருந்தால் சிக்சர் அடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் சிங்கள் அடித்து சாவார் என்று ஒரு குறள் IPL பற்றி ஸ்பெஷலாக பாடியிருக்கலாம்.
அதெல்லாம் ஒகே, என்ன ஸ்பெஷல் இந்த வருடம்?
சூதாட்ட சர்ச்சையால் இரண்டு வருட வனவாசத்திற்க்கு பிறகு சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் களமிளங்குகிறது. வருட தொடக்கத்தில் நடைபெற்ற ஏலத்தித்திற்கு முன்பே ஓவ்வொரு அணிக்கும் மூன்று வீரர்களை தக்க வைக்க சந்தர்ப்பம் கொடுக்கபட்டது. No prizes for guessing – சென்னை அணி “தல” தோனியையும், “சின்ன தல” ரெய்னாவையும், “சர்” ஜடேஜாவையும் தக்க வைத்தது.
ஏலத்தின் முதல் நாளில் இது சென்னை சூப்பர் கிங்சா? இல்லை சென்னை சீனியர் கிங்சா?
என்ற கேள்வி வராமல் இல்லை. ஏலத்தில் எடுத்த அத்தனை வீரர்களுக்கும் 32 வயதுக்கு மேல். மற்ற அணியினர் வளர்ந்து வரும் வீரர்களை வாங்க, சென்னை சீனியர்களின் மீது முதலீடு செய்தது. இரண்டாவது நாளில் தலை கீழ். இருந்த பணத்தில் நிறைய uncapped வீரர்களை வாங்கியது. இவர்கள் மாவட்ட அளவிலோ மாநில அளவிலோ விளையாடும் வீரர்கள்.
இதனூடே காவிரி பிரச்சனையினால் கொந்தளித்து கொண்டிருக்கும் தமிழகத்தில் போட்டியை நடத்தவிட மாட்டோம் என்று சில அமைப்புகள் வேறு.
கண்ணாடிய திருப்பி வச்சா எப்படி ஜீவா வண்டி ஓடும் என்று கேட்கத்தான் தோன்றுகிறது.
எது எப்படியோ ரசிகர்களுக்கு இன்னும் ஒன்னறை மாததிற்க்கு பொழுது போக்க பஞ்சமில்லை. இது விளையாட்டே அல்ல ஒரு entertainment package என்று நீங்கள் நினைத்தாலும் சரி, என் அணி என் உரிமை என்று நீங்கள் நினைத்தாலும் சரி, IPL is here to stay.
சர்வதேச அளவில் இந்த போட்டிக்கென ஒவ்வொறுவருடமும் ஒரு கால அட்டவனையை உருவாக்க ஐசிசி திட்டமிட்டளுள்ளது. வர்த்தகரீதியில் ஒரு வருடத்தில் ஐந்தாயிரம் கோடி வருமானம் என இதன் வளர்ச்சியோ வாயை பிளக்க வைக்கிறது.
நாளை முதல் போட்டியில் சென்னை அணி தன் பரமவைரியான மும்பை அணியுடன் மோதுகிறது. தல பழைய கெத்துடன் திரும்புவார் என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் ரசிகர்களோடு
– விசில் போடுவோம்
ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.
One thought on “IPL – விசில் போடு – 1”