IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

-ஹரிஹரன்

2

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

CSK is back with a bang! 2018 IPL முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்க்கடித்து தனது வருகையை பதிவு செய்தது.

அதென்ன சார் சொந்த மண்? தோனியும் ரெய்னாவும் பாக்கிஸ்தான் வீரர்களா என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு IPL பற்றி இன்னும் புரிதல் வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் ஊரில் உங்களுக்கு எதிராக ஒரு வெளிநாட்டவர் விளையாடினால் கூட உங்கள் கண் முன்னே ஐம்பதாயிரம் பேர் அந்த வெளினாட்டவருக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள். அப்போது உங்களுக்கு அது தன்னுடைய சொந்த மண் என்ற உணர்வு எப்படி வரும்?

damyvovwkaab32m3939227663761785487.jpg

காலன், கரிகாலன் ப்ராவோ தன் விஸ்வரூபத்தைக்காட்ட, ஜாதவ் நீ கேலி செய்த ஆள் நானில்லை என்று சொல்லாமல் சொல்ல, தன் அபாரமான ஆற்றலை CSK   வெளிக்கொணர்ந்தது. ஏழு சிக்ஸர்கள் எடுத்த எரிமலை என நீ அன்போடு அழைக்கப்படுவாய் ப்ராவோ என்று நெட்டிஸன்கள் கொண்டாட , மங்களகரமாக சென்னை தன் அக்கௌண்டை துவக்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தவரையில் நாம் அந்த அணியை உலகின் பிரசிதிப்பெற்ற Manchester United அணியுடன் ஒப்பீடு செய்யலாம்.

Value for money, huge fan base என அனைத்தும் சூப்பர் கிங்ஸுக்குப் பொருந்தும். ஏலத்தின் போது யார் யாரை கேலி செய்தார்களோ அவர்கள் தான் நேற்றய போட்டியில் பிளந்து கட்டினார்கள்.

டாசில் வெற்றி பெற்ற தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். Playing XI எனப்படும் களமிறங்கும் வீரர்கள் பெயர்களை பார்த்த போது அனைவரும் கொஞ்சம் அதிர்ச்சியானது உண்மைதான். மூன்று நான்கு வீரர்களை தவிர்த்து impact players யாரும் இல்லை. கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி பார்த்தால் கூட ஆக்ரோஷமாக ஆடும் வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. Is this a winning team என்ற கேள்வி வராமல் இல்லை. ஒட்டுமொத்தமாக தோனியை நம்பியே அணியை அமைத்திருக்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்தது.

 2015 ஆண்டு வரை தோனி தன் அணியில் ஆக்ரோஷமாக ஆடும் தொடக்க ஆட்டக்காரர்களை களமிரக்குவார். ஒரு solid lower down இருக்கும். சுழர் பந்தில் அஷ்வின் கலக்குவார். அத்தனையும் மிஸ்ஸிங்.

குறிப்பாக அஷ்வின், கிளிக்கு இறக்கை முளைச்சுடுத்து ஆத்த விட்டு பறந்துபோயிடுத்து என்று ரசிகர்கள் முகநூலிலும் டுவிட்டரிலும் புலம்பியது நியாயமானதே.

ஏழு பவுலர்கள் தேவையா தல என்ற கேள்வி தோனிக்கு மட்டுமில்லை சென்னை அணியின் மங்களம் சார் ஸ்டீபன் பிளமிங்கையும் யோசிக்கவைத்திருக்கும். Anyways, இது நமது முதல் போட்டி. வீரர்களை சோதனை அடிப்படையிலேயே தேந்தெடுத்திருப்பார்கள் என நம்புவோமாக.


ஸ்கோர்கார்ட்

Batting

bowling


எது எப்படியோ இந்த வெற்றி இரண்டு வருடங்களாக ஏங்கித்தவித்த ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. மும்பை இந்தியனஸ் அணி எப்போதுமே ஆரம்பத்தில் வாமன அவதாரம் எடுத்து பின் ஒரே அடியில் இறுதியில் எதிரணியை வெல்லும். அதனால் இந்த தோல்வி அவர்களுக்கு துளியும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது. காண்டாகி அம்பானி ஜியோவில் கைவைப்பாரோவென்ற கலவரம் கிரிக்கெட் பார்க்காதவர்கள் கண்களில் தெரிந்தது. 

போட்டிகள் செல்லச்செல்ல போட்டித்தன்மை மாறமாற அணிகளும் தங்களின் யுக்த்திகளை மாற்றும். ஓரிரு வாரங்களில் அணிகளின் உண்மையான பலமும் பலவீனங்களும் தெரியவரும். சென்னை சூப்பர் கிங்ஸும் தன் பங்கிர்க்கு எவ்வாறு தன் யுக்திகளை கையாளும் என்பதை பொருத்துத்தான் பார்க்க வேண்டும். அதுவரை,

இன்னும் பலமான விசிலுடன்.

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்: IPL விசில் போடு -1


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s