மகனின் காதுகுத்தை நடத்தலாமா என்று கணவன் மனைவியிடமோ அல்லது மனைவி கணவனிடமோ கேட்பது வழக்கம், ஆனால் எலெக்ஷன் கமிஷன் ஆபீசரிடம் கேட்பது?
கர்நாடகாவில் இந்த தேர்தல் நேரத்தில், என்ன்வெல்லாம் செய்யலாம் என்ன செய்யக்கூடாது, என்கிற தெளிவில்லாததால், பொதுமக்கள் எலெக்ஷன் கமிஷனரை சாதாரண விசயத்துக்குக் கூட அனுகுகின்றனர். கல்யாண ஏற்பாடு செய்யலாமா, காது குத்தலாமா, தங்கம் வாங்கலாமா, பேர்வைப்பு வைபவம் செய்யலாமா, பிறந்தநாள் கொண்டாடலாமா என்பன போன்ற கேள்விகள் எலெக்ஷன் கமிஷனுக்கு வருகிறதாம்.
இவ்வாறான விழாக்களுக்காக வாங்கப்படும் பரிசுகள், நகைகள், பொருட்கள் பொதுவாக கட்சிகள் மக்களுக்கு ஓட்டுப்போடக் கொடுப்பதால், இவ்வாறான குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.
சீஃப் எலெக்ஷன் ஆபிசர் சஞ்சீவ் குமார் குடும்ப விழாக்களை நடத்த அனுமதி வாங்கத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.