இனி சென்னை சூப்பர் கிங்ஸின் போட்டிகளூக்கு முன் “பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள், இதய நோயாளிகள், கர்பிணி பெண்கள் பார்க்க வேண்டாம்” என்ற எச்சரிக்கை அறிக்கை வெளியிட வெண்டும். கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் கடைசி பந்து வரை போட்டியை இழுத்து ரசிகர்களை நுனி நாற்காலியில் உட்கார வைத்து, தங்கள் நகங்களை கடிக்க வைத்து, Masters of the heartbeat என்று அவர்களை முகநூலில் வழக்கம் போல கதற வைத்தார்கள்.
In the battle of Southern spices, it is always the Andhra flavor that adds more taste.
ஆந்திராவுக்கே ஊருகாயா என்று ராயுடு விளாச, சென்னை அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசஸ் அணியை வென்றது.
உடல் நிலை காரணமாக இம்ரான் தாஹிர் வெளியேற டூப்ளெசிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹைதராபாத் அணியில் ஷிகார் தவான் வெளியேற மற்றொறு ஆந்திரா வீரர் ரிக்கி புய்க்கு வாய்ப்பு கிடைத்தது. டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். முன்பு நடந்த போட்டி போல் அல்லாமல் மிக மெதுவாக கணக்கை துவக்கியது சென்னை. இந்த வருடம் நடந்த IPL போட்டிகளில் பவர்ப்ளே ஓவர்களில் ஆக குறைவான் ரன்களை, அதாவது 27 ரன்களை மட்டுமே எடுத்தது. பத்தாவது ஓவரின் முடிவில் வெறும் 50 ரன்களே எடுத்திருந்தது. அந்த நிலையில் 20வது ஓவரின் முடிவில் 120 ரன்களாவது எடுக்குமா என்றே தோன்றியது.
Hats off to the Sunrisers bowlers, முதல் 10 ஓவர்களில் மிக துல்லியமாக பவுலிங் செய்தனர். துவக்க ஆட்டக்காரராக வந்த டூப்ளெசியாலும் வாட்சனாலும் நிறைய பந்துகளை connect செய்ய முடியவில்லை. சன்ரைசர்ஸ் அணியை பொருத்த வரை, பவர்ப்ளே ஓவர்களில் இரண்டாவது ஆக குறைவான economy rate உடையவர்கள். புவவேஷ்வர், ரஷீத் கான், பில்லி ஸ்டான்லேக், கிரிஸ் ஜோர்டான் போன்ற சிறந்த சர்வதேச பவுலர்களையும், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, பசீல் தம்பி போன்ற உள்ளூர் பவுலர்களும் அந்த அணியில் உள்ளது மிக சிறப்பான ஒன்றாகும்.
குறிப்பாக ரஷீத் கான் – comes with a very high expectation. ஆப்கானிஸ்தானுக்கும் சுழற்பந்து பவுலிங்கிற்கும் என்ன connection என்று நீங்கள் கேட்டால் டி20 போட்டிகளில் அவர்களின் கடந்த ஆண்டு சாதனைகளை பார்க்க வேண்டும். இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி ரஷீத் கான் (9 கோடி), மொஹமத் நபி (1 கோடி), பஞ்சாப் அணி முஜீப் உர் ரெஹ்மான் (4 கோடி), ராஜஸ்தான் அணி ஜகீர் கான் (60 லட்சம்) ஆகிய சுழர் பந்து வீரர்களை வாங்கியது. That’s a nice way to recognize an associate nation!
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு – ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீரர்களுக்கு சென்ற இடமெல்லாம் வாய்ப்பு.
ஆஸ்திரேலிய வீரர்களூம், தென் ஆப்ரிக்க வீரர்களூம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த IPL போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்களூம் ஆதிக்கம் செலுத்துவது ஒரு மிகப் பெரிய மாற்றம்!
Returning back to today’s wonderful contest, ராயுடு 37 பந்துகளில் 79 ரன்களை விளாசித் தள்ளினார். அவர் அடித்த ஒனபது பவுண்ரிகளும் நான்கு சிக்ஸர்களும் – treat to the eyes. தன் பங்கிற்க்கு Mr. IPL ரெய்னாவும் 54 ரன்களை குவிக்க விறுவிறுப்பு கூடியது. 3வது விக்கட்டுக்கு இருவரும் 112 ரன்கள் சேர்த்தனர். அதன் பின் வந்த தோனியும் தன் பங்கிற்க்கு ஒரு சிக்ஸரும் மூன்று பவுண்ரிகளூம் அடிக்க 182 ரன்களை சென்னை அணி குவித்தது. கடைசி 11 ஓவர்களில் மட்டும் சென்னை அணி 141 ரன்கள் குவித்தது.
அடுத்து வந்த சன்ரைசர்ஸ் அணி தீபக் சகாரின் பந்தில் சிக்கித் திணறியது. வீசிய ஒவ்வொரு ஓவரிலும் ஒவ்வொரு விக்கட்டுகளை வீழ்த்தினார் சகார். There is always a connection between CSK and uncapped seamers! மன்ப்ரீத் கோனி, மோஹித் சர்மா வரிசையில் தீபக் சகார் மற்றும் ஷர்துல் தாகூரையும் சேர்க்கலாம். It’s not about spending big money, but about finding talents என்பதே சென்னையின் யுக்தியாக இருந்து வருகிறது!
பின்னால் வந்த சன்ரைசர்ஸ் அணியின் கேன் வில்லியம்சன் தான் டேவிட் வார்னருக்கு சற்றும் சளைத்தவரல்ல என்பதை நிருபித்தார். 51 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பிற்க்கு தன் அணியை அழைத்துச் சென்றார். 18 மற்றும் 19 ஓவர்களில் கேன் வில்லியம்சனும் யூசப் பதானும் வெளியேர, 19 ரன்கள் தேவை என்ற நிலையில் அடுத்து வந்த ரஷீத் கான் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரும் பவுன்ரிகளூம் விளாச, சென்னை ரசிகர்கள் முகத்தில் டென்ஷன் டென்ஷன் டென்ஷன் ! கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ப்ராவொவின் துல்லியமான யார்கரில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்க, சென்னை ரசிகர்கள் மூச்சு விட ஆரம்பித்தனர்!
Yet another match, yet another hero – இந்த வழியில் ராயுடுவிம் சகாரும் திருப்புமுனை தந்தனர்! Loss against a quality team is a pride – பாராட்டுக்கள் சன்ரைசர்ஸ் அணி. 2013ஆம் வருடத்திற்க்குப் பிறகு வார்னரும் தாவனும் ஒன்றாக களமிறங்காத முதல் போட்டி என்ற நிலையில் தங்கள் திறனில் பெருமை கொள்ளலாம்!
For another nail biting finish and for bringing back the excitement, ஒரு பெரிய விசிலுடன்
ஹரிஹரன்
முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.