Master of heart beat has done it again. பூனாவில் நடைபெற்ற டில்லிக்கெதிரான போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
முன்பு 28ஆம் தேதியில் மும்பைக்கெதிறான போட்டியில் 8 விக்கட் வித்தியாசத்தில் மும்பை அணி இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. பங்குபெற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வி என்ற நிலையில் கிட்டத்தட்ட இனி வரும் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களத்தில் இறங்கியது மும்பை. கறை நல்லது என்று தோனி முடிவெடுத்தாரோ என்னவோ! ஆட்டம் ஆரம்பம்ந்தொட்டு ஒரு தோய்வு இருந்தது உண்மை. The contest clearly lacked a punch. தோற்றாலும் பரவாயில்லை, lets give a chance to young talents என்று தோனி நினைத்திருக்கலாம். கடைசி 2 ஒவர்களில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில், சென்னை அணியின் கர்ண பிரபு சர்துல் தாக்கூர் 19ஆம் ஓவரில் தன் தயாள குணத்துடன் 17 ரன்களை வாரி வழங்கினார். கதம் கதம் முடிந்தது முடிந்தது என்று பாபா ரஜினியின் வசனத்துடன ரசிகர்கள் வெளியேற, மும்பை 2 பந்துகள் மீதமிருக்க வெற்றி கண்டது.
நேற்றைய போட்டியில் எதிர்பார்ப்புகள் கொஞ்சம் அதிகம். தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கம்பீர் அணித் தலைவர் பதவியிலிருந்து வெளியேர டில்லி அணிக்கு ஸ்ரெயஸ் ஐயர் புது காப்டனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டித்தொடரின் இடையே அணித்தலைவர் பொறுப்பு மாற்றப்படுவது இது முதல் தடவையல்ல. இருந்தாலும் கம்பீர் விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசம். களத்தில் இறங்கும் 11பேர் கொண்ட அணியிலிருந்தும் விலகி தன் வருட ஊதியம் (கிட்டத்தட்ட 2.8 கோடி) முழுவதும் அணிக்கு திருப்பி அளிக்க முடிவுசெய்துள்ளார். Take a bow Gambhir!
புது தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் பதவியேற்றதும் அதிரடி காட்டி கோல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் தனியொருவராக 93 ரன்கள் குவித்தார்.
சில நேரங்களில் சிலருக்கு பொறுப்புகள் அளிக்கப்படும் போது, அவர்கள் தங்களின் அணியை இன்னும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வார்கள்.
விராட் கோலி விஷயத்திலும் அவ்வாறே நடந்தது.
As the young guns lock horns with the old boys, போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்ற எண்ணம் பொய்யாகவில்லை. டில்லி அணி அதே 11பேருடன் விளையாட, சென்னை அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள். தாகூர், பில்லிங்ஸ், தீபக் சகார் மற்றும் இம்ரான் தாஹீர் வெளியேற, லுங்கி, கே எம் ஆசிப், கரன் சர்மா, டூப்ளெசி உள்நுழைந்தனர். டாஸ் வென்ற ஸ்ரேயஸ் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
ஆரம்பமே அமர்களம் என்பது போல முதல் பந்திலேயே வாட்சனுக்கு life! அதன் பின் டூப்ளெசியும் சேர்ந்து கலக்க, பவர் ப்ளேயின் முடிவில் 56 ரன்கள் குவித்திருந்தது. டூப்ளெசியும் ரெய்னாவும் வெளியேற, அம்பத்தி “பாகுபலி” ராயுடு தன் பங்கிற்க்கு டில்லி பவுலர்களை பதம் பார்த்தார். Yet another master class from Dhoni – கடைசி 5 ஓவர்களில் மட்டும் 74 ரன்களை தோனியும் ராயுடுவும் குவித்தனர். Turning the clock என்பார்கள். தொனியின் விஷயத்தில் இந்த வாசகம் 100% பொருந்ததும். அடித்த 5 சிக்ஸர்களூம் simply brutal! ஏழு எட்டு வருடங்களூக்கு முந்திய தோனியை கண் முன் கொண்டுவந்தது. சில நேரங்களில் பேட்டின் நுனியில் பட்டு சிக்ஸர்கள் கிடைப்பதுண்டு. இவைகளை top edge என்பார்கள். அவ்வாறாக இல்லாமல் அத்தனையும் சரியான தீபாவளி சரவெடி.
ராயுடு IPL போட்டிகளுக்கு முன் தன் விக்கெட் யாருக்கும் கிடையாது, ரன் அவுட் தான் என்று வேண்டுதல்களோடு வந்தாரோ என்னவோ. கடந்த 4 போட்டிகளில் 3 முறை ரன் அவுட். அவ்வாறு அவுட் ஆகும் போதும் “பரவாயில்ல விடு தல, நீ நின்னு கலக்கு” என்று சொல்லாமல் சொல்லிச் செல்கிறார். இந்த ராயுடு புதுசு.
பார்ப்பவர்களுக்கு இது கிரிக்கெட் டீமா, அல்லது விக்ரமன் படமா என்ற சந்தேகம்.
அடுத்து பேட் செய்ய வந்த டில்லி போட்டியை தாரை வார்க்க தயாராக இல்லை. இரண்டு விக்கெட்டுகள் எடுத்தாலும், தாகூர் இல்லாவிட்டால் என்ன நானிருகிறேன் என்று தன் 3 ஓவர்களில் 43 ரன்களை கே.எம்.ஆசிப் தாராளமாக அள்ளி வழங்கினார். கேரளாவிலிருந்து புது வரவு. நம்மட போலர் வல்லிய போலர் என்ற நினைப்பிலிருந்த சேட்டன்களின் நினைப்பில் டில்லி வீரர்கள் கதக்களி ஆடியதை பார்க்க கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது.
ஐந்தாவது விக்கடுக்கு ரிஷப் பந்தும் விஜய் சங்கரும் சேர்ந்து 88 ரன்கள் குவிக்க, சிக்ஸர்களூக்கும் பவுண்ரிகளூக்கும் பஞ்சமில்லை. Specialist death bowler ப்ராவொவையும் விட்டு வைக்கவில்லை. ஒரு பக்கம் ரிஷம் பந்த் 45 பந்துகளில் 79 ரன்கள் குவிக்க, 19வது ஓவரில் ப்ராவோவின் பந்துகளை சிக்ஸர்களாக விஜய் சங்கர் தெரிக்க விட, நிடஹாஸ் கோப்பையின் கெட்ட நிகழ்வுகள் ரசிகர்கள் மனதிலிருந்து அகலும் என்று நம்புவோமாக. கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை என்ற நிலையிலும் விடாது முயர்ச்சித்த விஜய் சங்கர் கிட்டத்தட்ட வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையளித்தார். Well done young man! இந்தியாவின் அடுத்த தலைமுறை வீரர்கள் பளிச்சென்று தெரிகிறார்கள்.
சென்னையை பொருத்தவரை லுங்கி நம்பிக்கையளிக்கிறார். ஹர்பஜன் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்களை அதிகம் கொடுக்கவில்லை – economy rate is not bad. மற்ற போலர்கள் அதிகம் சோபிக்க வில்லை. கரன் சர்மாவுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை. இந்த கேள்வியை கிரிக்கெட் வர்ணணையாளர்களூம் மறந்தது ஏனோ தெரியவில்லை! பவுலிங் மற்றும் பீள்டிங்கில் சென்னை அதிக கவனமாக இருக்க வேண்டும் – loopholes are getting bigger and bigger. ஒரு வேளை அடுத்த போட்டியில் டூப்ளெசிக்கு பதிலாக டேவிட் வில்லி களமிறங்கினால் நல்லதென தோன்றுகிறது.
வாட்சன் மற்றும் தல தோனியின் மற்றொறு கலக்கலான ஆட்டதிற்க்கும், table toppers சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கும் சேர்த்து,
ஒரு பெரிய விசிலுடன்,
ஹரிஹரன்