வடமிழந்த தேர்

(சிறுகதை)

வெயில் நடுமண்டையில் சுள்ளென்று இறங்கியது. என் சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். பொங்கல் அன்றைக்கு காப்பு கட்ட வேண்டுமாம். எதற்கு? அது ஏதோ வழக்கம்ப்பா – கட்டிட்டு வான்னா போய் கட்டிட்டு வரவேண்டியது தான? கட்டியாச்சு. வீட்டுக்கு சரி – காட்டுக்குமா கட்டணும்? வீட்டுக்கு நிலைப்படியில கட்டணுமாம். காட்டுக்கு ஏது நிலப்படி? பம்புசெட்டிலா கட்டுவது? எங்க காடு வானம் பாத்த காடு. பம்புசெட்டு ஏது? அந்த ஒத்த மரத்தில கட்டிட்டு வாடா. நல்லவேளை அந்த ஒத்த மரம் இருந்தது – இல்லீன்னா வரப்பு ஓரமா இருக்கிற மொத பருத்திச்செடில கட்டிட்டுவாடான்னு சொல்லிருப்பாங்க. மரம் கேட்டுச்சு – டேய் எனக்கெதுக்குடா கட்ற? எனக்குத் தெரியாதுப்பா. கட்டச்சொன்னாங்க கட்டினேன். அடுத்த பஸ்ஸு ரெண்டு மணிக்குத்தானாம். அதுவரைக்கும் இங்க நான் என்ன செய்யறது? இல்ல தெரியாமத்தேன் கேக்கறேன் – பொங்கல்ன்னா கிராமத்தில தான விஷேசமா இருக்கணும்? உழவர் திருநாள் தான? பொண்ணுங்க மஞ்சத்தண்ணி கிஞ்சத்தண்ணி ஊத்துவாங்கல்ல? அதெல்லாம் பாரதிராஜா படத்தில தான் போலிருக்கு. இப்படியா கப்சிப்புன்னு இருக்கும்? மந்தையில மட்டும் ரெண்டு பெருசுங்க உக்காந்து பேசிட்டிருந்துச்சுங்க.  அதத்தவிர வேறு சம்பவம் ஏதும் என் கண்ணுக்கு சிக்கி நடக்கல. நகரத்தில இருக்கிற நாம தான் வழக்கத்தையும் சம்பிரதாயத்தையும் தவறாம கடைப்பிடிக்கிறோம்னு நினைக்கிறேன். நமக்கு கொண்டாட பண்டிகை வேணும். அவ்வளவுதான். கொஞ்ச நேரம் யாராவது டவுனுக்கு போறாங்களான்னு நின்னு பாத்தேன் – ஒரு ஈ காக்கா கூட இன்னிக்கு டவுனு பக்கம் போற மாதிரி தெரியல. சரி வுட்றா வண்டியன்னு நடயக் கட்டிட்டேன். வெயில் இப்படி மண்டையப்பிக்கும்னு நெனச்சுப் பாக்கல. இன்னும் ஒன்றரைக் கிலோமீட்டர் நடக்கனும். படத்தில தான் கிராமம் பசுமையா இருக்கு – நேர்ல? ஒரு மரத்தோட நிழல விட்டா அடுத்த மர நிழல் வர்றதுக்கு 10 நிமிஷமாகுது. வழியில – தனியா – ஒரு வீடு இருந்துச்சு. வீட்டுக்கு வெளியில ஒரு ஆள் குச்சிய வெச்சு பல்ல வெளக்கிட்டு இருந்தாரு. என்னையவே பாத்திட்டிருந்தாரு. கிட்டத்தட்ட ஒரு நூறு மீட்டருக்கு முன்னருந்து பாக்கறாரு. அவர க்ராஸ் பண்ணிட்டுப்போறப்பா – வாயில இருக்கிற குச்சிய வெளில எடுக்காம – என்னையவே ஃபாலோ பண்ணி அவரோட ஃபேஸ் திரும்பிச்சு. கொஞ்சம் டெரர்ராத்தான் இருந்துச்சு. அப்பாடா அந்தாளக் கடந்தாச்சு. ஏய். தம்பி. என்னயவா கூப்பிடறார்? இந்தாப்பா. எச்சிலை முழுங்கினேன். தம்பி. இந்தாப்பா. திரும்பிப்பார்த்தேன். கையகாமிச்சு வான்னுசொன்னார். மெதுவா நடந்தேன். நீ முருகனோட தம்பியா? ஆமா. அட. வா. வா. டீ சாப்பிட்டுப் போ. இல்ல பரவாயில்ல. நீங்க. உங்க அண்ணனுக்கு ஃப்ரண்டு தான். பேரு? பூபதி.  உள்ள வா. டீ சாப்பிட்டுப் போகலாம். நானே உன்ன வண்டில வெளக்கில இறக்கிவிட்டிர்றேன்.  ஹீரோ ஹோண்டா. சிடி 100. வெளக்குதான? இல்ல கள்ளுப்பட்டிக்கா? இல்லண்ணே வெளக்குல விட்டாப்போதும். ஜெயவிலாஸ் பிடிச்சுப் போயிடுவேன். ஜெயவிலாஸா? இப்பெல்லாம் கவர்மெண்ட்டு பஸ்ஸுகூட வெளக்குல நிக்குது. கவலப்படாத. உள்ள வா.
*
உட்கார இடம் கிடைக்கவில்லை. ஒரு கம்பியில் சாய்ந்து கொண்டு கண்டக்டர் ஸ்டேஜ் க்ளோஸ் செய்யும் அழகை ரசித்துக்கொண்டே வந்தேன். தினமும் பஸ்ஸில் கல்லூரிக்கோ ஸ்கூலுக்கோ சென்றிருந்தீர்கள் என்றால் கண்டக்டர்கள் மீது உங்களுக்குத் தனி மரியாதை வந்திருக்கும். நேர்மாறாக நடப்பதற்கும் சாத்தியமிருக்கிறது. பெரும்பாலும் கண்டக்டர்களை பிடிக்காமல் போவதற்கு காரணம் – சில்லரை. ஆலங்குடி திருப்பத்தில் கூட கண்டக்டர் கருஞ்சிறுத்தை மாதிரி அசையாமல் நின்றுகொண்டு கடமையே கண்ணாக எழுதிக்கொண்டிருந்தார். இவ்வளவு ஆட்டத்திலும் எப்படி கிறுக்காமல் எழுதமுடிகிறது.  பேப்பரையும், பேப்பர் வைத்து எழுத உதவிய அந்த பேப்பர் சைஸ் சின்ன அட்டையையும், பேனாவையும், கொத்து கொத்தாக கலர் கலராக இருக்கும் டிக்கெட்டுகளையும் ஒரு சேர தன் தோள் பையில் தூக்கிப்போட்டார். சுண்டு விரலில் விசில் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. வேகமாக நடந்து படிக்குச் சென்றவர். மதுரை மதுரை மதுரை என்று கத்த ஆரம்பித்தார். கள்ளுப்பட்டி வந்துவிட்டிருந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்த சீட்டில் ஒரு இடம் காலியானது. பின் படிக்குப் பக்கத்தில் ஒரு சீட் மொத்தமாக காலியானது. அங்கே போகலாம் என்று மனம் சொல்லியது. இங்கிருந்து அங்க போறதுக்குள்ள யாராவது பின் சீட் வழியா ஏறி அங்க உக்காந்துட்டாங்கன்னா? எதுக்கு வம்பு இந்த சீட்டும் போயிடப்போகுதுன்னு – சட்டென்று உட்கார்ந்து கொண்டேன்.  உட்கார்ந்தப்பின் அந்த சீட்டைத் திரும்பிப்பார்த்தேன். இன்னும் காலியாகத்தான் இருந்தது. ம்ச்சு..அங்கேயே போயிருக்கலாமோ? ஜன்னலோர சீட். தனியாக உட்காரலாம். பஸ்ஸில் எல்லோரும் தனியாகவே உட்கார விரும்புகிறார்கள் என்று யாரோ சொன்னதாக நினைவு. கி.ரா? ஜெமோ? சுந்தரராமசாமி? கி.ரா. தான்னு நினைக்கிறேன். என் பக்கத்தில் ஒருவர் முன் சீட்டின் கம்பியில் கையை வைத்து தலையை கைமேல் வைத்து சொர்க்கலோகத்தில் இருந்தார். குடுத்துவைத்தவர்கள். பஸ்ஸில ஏறினவுடன் எப்படித்தான் தூக்கம் வருதோ? அதெல்லாம் வாங்கிவந்த வரம்டா என்று அண்ணன் சொல்லுவார். அது வரம் இல்லை. சாபம். பஸ்ஸில் நடக்கும் பல சுவராஸ்யங்களை நீங்கள் கண்டுகளிக்க முடியாது. எனக்கு பஸ் பிரயாணம் சுவாரஸ்யம். நீண்டதூர பிரயாணத்தைவிட டவுன் பஸ் பிரயாணம் இன்னும் சுவாரஸ்யம். ஸ்டாப்புக்கு ஸ்டாப் மக்கள் ஏறுவார்கள் இறங்குவார்கள். அவர்கள் யார்? உருவத்தை வைத்து என்ன செய்கிறார்கள் என்று கணிக்க முயலுவேன். கூட்டம் குறைந்த பஸ்களில் அவர்கள் இடம் தேடி உட்காருவதைப் பார்ப்பதே வேடிக்கையாக இருக்கும்.  காலியான இருக்கைகளில் எப்படி இருக்கையைத் தேர்வு செய்கிறார்கள். நிறைய காலி இருக்கைகள் இருக்கும் பொழுது வெகு சிலரே சட்டென்று முடிவெடுக்கின்றனர். பலர் படியில் ஏறியவுடனே எங்கு உட்காருவது என்று யோசிக்கத்தொடங்கி விடுவார்கள். அவர்களது கண்களில் அதைப் பார்க்கமுடியும். யார் பக்கத்தில் உட்காரப்போகிறோம் என்பதே முக்கியமான ஒன்று. நான் என் பக்கத்தில் உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருந்தவரைப் பார்த்தேன். முகத்தைப் பார்க்க முடியவில்லை. பஸ்ஸின் ஆட்டத்துக்கு ஏற்ப அவர் உடலும் ஆடிக்கொண்டிருந்தது. இந்தப்பக்க சீட்டில் ஒரு வயதான அம்மா உட்கார்ந்திருந்தார். கையில் ஏதோ புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தார். என்ன புத்தகம் என்று பார்க்க முயற்சித்தேன். ரமணிச்சந்திரனாக இருக்குமோ? பாலகுமாரன்? அவர் பக்கத்தில் ஒரு வயதானவர். ஜன்னலோரமாக தலைவைத்து வெளியே பார்த்துக்கொண்டுவந்தார். ஹஸ்பெண்டாக இருக்குமோ? நம்மூரில் தான புருஷன் பொண்ட்டாடியா இருந்தாலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில பக்கத்து பக்கத்து சீட்ல பஸ்ல உக்காந்து வருவோம். ஒரு மணி நேரமானாலும் பக்கத்தில உக்கார்ந்திருப்பவர் ஹஸ்பெண்டான்னு சமயத்தில உங்களால கண்டுபிடிக்கமுடியாது. அவருக்கு இறுமல் வந்து, இந்தம்மா சடசடன்னும் நாவல கீழவிட்டு பையில அவசர அவசரமா தேடி தண்ணிப்பாட்டில எடுக்கும் போதுதான் உங்களால கண்டுபிடிக்கமுடியும். இந்தாளுக்கு இறுமல் வர்றமாதிரியும் தெரியல. அதுக்கு முன்சீட்டில ஒரு பெண். தூங்கிக்கொண்டு வந்தது. எப்படி இவர்களால் தூங்கமுடியுது? 
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் 
அந்திப்பொழுதில் வந்துவிடு
இளையராஜா காரணமாக இருப்பாரோ? இனி திருமங்கலம் வரைக்கும் வேறு நிறுத்தம் இல்லை. நாமும் தூங்கினால் என்ன? முன்சீட் கம்பியில் கையை வைத்து கையில் நெற்றியை வைத்து படுத்தேன். சும்மா உட்கார்ந்திருந்தப்பக்கூட பஸ் இவ்வளவு குலுங்கினதாகத் தெரியவில்லை. 
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் 
உயிரைத் திருப்பித் தந்துவிடு
*
எவ்வளவு முயன்றும் தூங்கமுடியவில்லை. ஏதோ நாற்றம் வேறு. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருப்பவரை நினைத்து பொறாமையாக இருக்கிறது. கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகின்றேன். எண்ணத்தில் போதைவர எங்கெங்கோ நீந்துகின்றேன். என்ன நாற்றம் இது? சாராயநெடியா? பக்கத்திலிருப்பவர் குடித்திருப்பாரோ? நிமிர்ந்து அவரைத் திரும்பிப்பார்த்தேன். ஷிட். படக்கென்று தூக்கிப்போட்டது. பயம் என் உடலெங்கும் பரவியது. பக்கத்திலிருப்பவரின் தலை என்னைப்பார்த்துத் திரும்பியிருந்தது. கண்கள் நிலைகுத்தியிருந்தன. வாட் த ****. சடாரென்று எழுந்து நின்றேன். என் கைகள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. கால்கள் பலவீனமானது போல் இருந்தன. அடுத்த சீட் அம்மாவும் தடாரென்று எழுந்துவிட்டார். அடுத்த அடுத்த சீட்களில் முழித்திருந்த ஆட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்து நின்றனர். கண்டக்டர் எல்லோரையும் விலக்கிக்கொண்டு வந்தார். வந்தவர் அப்படியே நின்றுவிட்டார். என்னைப் பார்த்தார். அவர் முகம் முழுவதும் பயம் அப்பியிருந்தது. எனக்கு இன்னும் உதறல் நின்றபாடில்லை. வேகமாக பஸ்ஸின் முற்பகுதிக்குச் சென்றார். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாரு நின்றிருந்தனர். அந்த அம்மாவிற்கு பக்கத்திலிருந்தவரும் இப்பொழுது எழுந்து நின்று விட்டார். பஸ் சடாரென்று வேகம் குறைந்தது. பின் ரோட்டின் ஓரத்தில் ஒதுங்கியது. பின் நின்றது . ஆங்காங்கே பேச்சு சத்தம் கேட்டது. ஒரு குழந்தை மிகுந்த சத்தமெடுத்து அழ ஆரம்பித்தது.  எல்லோரும் என்னைப் பார்ப்பது போன்றிருந்தது. ஆனால் யாரும் என்னைப் பார்க்கவில்லை. டிரைவர் வந்தார். பின்னாலேயே கண்டக்டரும் வந்தார். எங்க ஏறினாப்ல? ஶ்ரீவில்லிபுத்தூர் பஸ்டாண்டில ஏறி உக்காந்திருந்தாப்ல. கம்பில தல வெச்சு தூங்கிட்டிருந்தாரு. எழுப்பி டிக்கெட் குடுத்தேன். எங்க போறாப்ல? மதுரை. டிரைவர் ஏதும் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார். மூச்சிருக்கான்னு பாருங்கப்பான்னு ஒருவர் சொன்னார். கூட்டம் மொத்தமும் அவரைப் பார்த்தது. இல்ல ஒருவேளை மூச்சு இருந்துச்சுன்னா? எல்லோரும் என்னைப் பார்த்தனர். எனக்கு இன்னும் உதறல் நின்றபாடில்லை. மேலும் உதறல் அதிகரித்தது. நான் ஒரு மிமீ கூட அசையவில்லை. டிரைவர் முன் நகர்ந்து மூக்கினருகில் கை வைத்துப் பார்த்தார். பிறகு ஒன்றும் சொல்லாமல் அந்த நபரின் முகத்தினருகே தன் முகத்தைக் கொண்டுபோய் ஏதோ முகர்ந்து பார்த்தார். ஏதோ மருந்து குடிச்சிருக்கார். டிக்கெட் கொடுக்கும்போதே ஒருமாதிரி கண்ணெல்லாம் சிவந்திருந்தது. குடிச்சிருக்காருன்னு நினைச்சுட்டேன். டிரைவர் ஒன்றும் பேசவில்லை. கழுத்தில் கிடந்த கர்சீப்பை எடுத்து முகத்தை நன்றாகத் துடைத்துக்கொண்டார். பிறகு மணி பார்த்தார். திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் போகனும். கண்டக்டர் சரிதான் என்பது போல தலையாட்டினார். அப்புறம் டிரைவர் உரத்த குரலில் எல்லோரும் கேட்கும்படி சொன்னார்: திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிட்டு அப்புறம் தான் யாரும் எங்கயும் போகமுடியும். அங்காங்கே பேச்சுசத்தம் கேட்டது. பள்ளிக்கூடம் போற பிள்ளைக இருக்கு.  அங்கு ஒரு பெண் பச்சைகலர் ஸ்கூள் யூனிபார்ம் அணிந்து நின்றுகொண்டிருந்தது. பொங்கல் அன்னைக்கு என்னய்யா ஸ்கூளு? அதான? யாரும் ஏதும் பேசவில்லை. கண்டக்டரும் டிரைவரும் பஸ்ஸின் முற்பகுதிக்கு சென்றனர். கண்டக்டர் அந்தப் பெண்ணிடம் சென்று ஏதோ சொன்னார். 
கொஞ்ச நேரத்தில் பஸ் புறப்பட்டது. பேச்சுசத்தம் அதிகரித்தது. எல்லோரும் அவரவர் இருக்கையில் உட்கார்ந்து விட்டனர். சிலர் இன்னும் எட்டிப்பார்த்தபடி இருந்தனர். தம்பி பின்னாடி இடமிருக்கு போய் உக்காருப்பா என்று ஒருவர் சொன்னார். அந்த அம்மாவையும் அந்த அய்யாவையும் காணவில்லை. தேடுவது சிரமமாக இருந்தது. பஸ்ஸின் பின் சீட்டுக்கு மெதுவாகப் போனேன். பின் சீட்டுக்கு முன் இருக்கையில் அந்த அம்மாவும் அய்யாவும் உட்கார்ந்திருந்தனர். அந்த அம்மா தண்ணிப்பாட்டிலை மூடிக்கொண்டிருந்தார். தண்ணி வேணுமாப்பான்னு என்னைப் பார்த்துக்கேட்டார். வேண்டாம் என்று தலையாட்டினேன். நான் உட்கார்ந்தவுடன் அந்த ஐயா என்னைத்திரும்பிப்பார்த்தார்.
*
போலீஸ் ஸ்டேஷனில் அதிகமாக யாரையும் விசாரிக்கவில்லை. பாடியை மட்டும் இறக்கிவைத்துக்கொண்டனர். ஒரு மூலையில் கரும்பிளாஷ்டிக் பேப்பரால் மூடப்பட்டிருந்தது. அனாதையாய். பஸ் புறப்பட்டது. யாரிவர் என்று இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவராக இருப்பாரோ? இல்ல மதுரக்காரரா? புஸ் புறப்பட்டது. ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். அதிசயமாக ஜன்னல் சீட்டும் அதற்கு அடுத்த இடமும் காலியாக இருந்தது. வேகமாக ஓடிச்சென்று அமர்ந்து கொண்டேன். எல்லோரும் என்னையே பார்த்துகொண்டிருந்தது போல இருந்தது. இது அவர் உட்கார்ந்த இடம். எனக்குத் தெரியும். பரவாயில்லை. எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. எப்பொழுதுமா இந்த இடம் காலியாக இருக்கப்போகிறது. நாளைக்கு யாராவது உட்காருவார்கள் தானே? 
*

படக்கென்று முழித்தேன். தூங்கிவிட்டேனா? இன்னும் மதுரை வரவில்லை. சட்டென்று யோசனை தோன்றியது. சீட்டின் இடுக்கில் ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று பார்த்தேன். ம்ஹூம். ஏதேனும் துப்பு வைத்திருப்பாரா? ஒருவேளை..  மெதுவாக கீழே உட்கார்ந்து சீட்டின் அடியில் பார்த்தேன். இருட்டாக இருந்தது. எழுந்து ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து லைட்டரை எடுத்து ஆன் செய்தேன். மீண்டும் கீழே சென்றேன். கொஞ்சம் வெளிச்சம் தெரிந்தது. தெளிவாக ஏதும் தெரியவில்லை. கையை வைத்து தடவிப்பார்த்தேன். ஏதும் தட்டுப்படவில்லை. அடுத்த சீட்டின் அடியிலும் பார்த்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். ஏனோ டிரைவர் பாடல் ஏதும் போடவில்லை. பஸ்ஸே கப்சிப்பென்றிருந்தது. வெளியே வேடிக்கைப் பார்க்கத் துவங்கினேன். என்ன இருக்கிறது பார்க்க? ஒருவேளை விவசாயியாக இருப்பாரோ? கடன் தொல்லை? லவ் பெயிலியர்? ஆளப்பாத்தா லவ் பண்ற ஆள் மாதிரி தெரியலையே.  சட்டென்று திரும்பி சீட்டின் மேற்பகுதியும் உட்காரும் பகுதியும் இணையும் இடத்தில்  விரல்களை நுழைத்துப் பார்த்தேன். ம்ஹூம். அடுத்த சீட்டிலும் அப்படியே செய்தேன். ம்ஹு.. ஷிட்..எதோ பேப்பர் போல் இருக்கிறதுமிகச்சிறியதாக மடிக்கப்பட்ட காகிதம்பிரித்தேன் தன்ராஜ் கெமிக்கல்ஸ்.. தேனி…பாரிரத்னா.. கர்டாப் ஹைட்ரோ க்ளோரைட் 4G.. விலை:  எழுபத்தி ஏழு ரூபாய். 
***
டேய்  மாமு.. இங்க என்னடா பண்ற? எறங்கல? ஷிட்.. முத்து. என் நண்பன். என் வீட்டிற்குப் பக்கத்தில் தான் இருக்கிறான். டபுள் விசில். பஸ் புறப்பட்டது. திருப்பறங்குன்றம். நான் இறங்கியிருந்திருக்க வேண்டும். இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்ததில் இறங்காமல் விட்டுவிட்டேன். மதுரைக்குப் போறேன்டா. எதுக்கு? டீசன்ஸிங்கறது கொஞ்சம் கூட கெடயாத பசங்க. எதுக்குவேணா போவேன்.. உங்கிட்ட சொல்லனுமா – மனசில நெனச்சுக்கிட்டேன். நீ எங்க போற? பொங்கல் நல்வாழ்த்துக்கள்டா. ம்ம். பொங்கல் சாப்டியா? இன்னும் இல்லடா. ஆமா எங்கிருந்து வர்ற? ஊருக்குப் போயிருந்தேன். எதுக்கு? ம்ம்ச்சு காப்பு கட்றதுக்குடா.. என்ன கட்றதுக்கு? காப்பு. ம்ம்.. மதுரைக்கு எதுக்குடா போற? தேவர் மகனுக்கா? முறைத்துப்பார்த்தேன். பாண்டியனுக்கா? ஏண்டா முறைக்கிற? இல்லன்னா இல்லன்னு சொல்லு. நீ எங்கடா போற? நானா? போடிக்குப் போறேன். போடியா? எதுக்கு? பத்திரிக்கை வெக்கிறதுக்குடா.. நேத்துத்தாணடா உங்கிட்ட சொன்னேன்.. அண்ணன் கல்யாணத்துக்கு.. நீதான் வரமாட்டேன்னுட்ட.. வர்றியா? ஆமா நீ எதுக்குடா மதுரைக்குப் போற? ஷீபாவப் பாக்கறதுக்கா? எஸ் எஸ் ஐயும் இன்னிக்கு இருக்காதே.. மறுபடியும் முறைத்தேன்.. கோமதியப் பாக்கப்போறேண்டா.. சும்மா அடித்துவிட்டேன்.. அவன என்னத்துக்கு இந்நேரத்தில பாக்கப்போற? எல் ஐ சி லேப்  ரெக்கார்ட் வாங்கணும்.. லீவுல எழுதி முடிச்சிடலாம்னு நினைக்கிறேன்..  (முத்து முகத்தில் அதிர்ச்சி) டேய் எப்பலேர்ந்துடா இவ்ளோ நல்லவனா ஆன? ரெக்கார்ட் நோட்டெல்லாம் லீவுல எழுதனும்னு சொல்ற? ஆமா நீ எங்க போற? டேய் எத்தினி வாட்டிடா கேப்ப? போடி. என்னாச்சு உனக்கு? ரெக்கார்ட் நோட் வாங்கப்போறாப்பல தெரியலையே.. சரி ரெக்கார்ட் நோட் அப்புறம் வாங்கிக்கிலாம்.. போடி எங்கூட வர்றியா?  தேனிலருந்து போடிக்கு எவ்வளவு தூரம்? ம்ம்.. 200 கிமீ.. பக்கத்திலதாண்டா.. எதுக்கு கேக்கற? .. தேனிக்குப் போகணுமா? .. நானும் தேனிக்குப் போகணும்.. அங்கொரு ரெண்டு மூணு வீடு இருக்கு.. என்னது தேனில ரெண்டு மூணு வீடுதான் இருக்கா? ஹ்ம்.. மெதுவாக திரும்பிப்பார்த்தான்.. இந்த மொக்க காமெடில்லாம் ஷீபாகிட்ட சொல்லு.. மொக்க பீஸு.. விழுந்து விழுந்து சிரிக்கும்.. ஆமா நீ எதுக்கு தேனிய நோண்டற?
***
இது ஆகராப்ல தெரியல. இவரு பெரிய துப்பறியும் சாம்பு. இதவெச்சுக்கிட்டு தேனில எங்க போய்டா தேடுவ?… டீ கிளாஸ மொத ஆட்றத நிறுத்து. நீ ஆட்ற ஆட்டுல உங்கிளாஸ்லருந்து  டீ எங்கிளாஸுக்கு வந்திரும்போல
இல்ல அந்தக்கடையில் போயி விசாரிச்சா.. என்ன டக்குன்னு கடைக்காரர்: தம்பி அவரா..நேர போயி லெப்ட்ல கட் பண்ணுங்க.. செகப்பா இருக்கும் ஒரு வீடு.. அதுதான் அவரு வீடு.. தம்பி கொஞ்சம் நில்லுங்க..அவரு பேரு கூட ஏதோ பழனிச்சாமின்னு நினைக்கிறேன்.. அப்படீன்னு சொல்லுவாருன்னு நெனச்சியா..லூசாடா நீ..  ஒரு நாளைக்கு எத்தனை பேர் அவர் கடைக்கு வர்றாங்களோடேய்.. இப்போ ஆட்றத நிறுத்தப்போறியா இல்லியா.. நாவேற வெள்ளச்சட்ட போட்றுக்கேன்..  டேய் நிறுத்துடா.. ஒரு வேளை நீ சொல்ற மாதிரி அவர் சொன்னார்னா.. என்ன மணிரத்னம் படத்தில வர்ற மாதிரி சுருக்கமா டயலாக் பேசிட்டு நிமிராம குணிஞ்சே நின்னேன்னா.. பேக்ரௌண்ட்ல இளையராஜா மியூசிக் போடுவார்ன்னு பாத்தியா.. நெஜ உலகத்துக்கு வாடா.. பஸ் கெளம்பப்போகுது வா..
***
தன்ராஜ் கெமிகல்ஸ்
தம்பி ஓனர் இல்லியா..
என்னப்பாத்தா ஓனர் மாதிரி தெரியலையா..
தமாஷ் பண்ணாதீங்க தம்பி.. ஓனர கூப்பிடுங்க..
யோவ்.. நாந்தான்யா ஓனர்.. என்ன வேணும் சொல்லுய்யா..
கொஞ்சம் தயங்கி.. நான் அந்த பில்லை எடுத்து நீட்டினேன்..
ஆமா.. இங்க தான் வாங்கினது.. என்னப்போ..
ம்ம்..அதுஇத யாரு வாங்கினாங்கன்னு..தெரியுமா?
ஏன் கேக்கறீங்க?
சும்மா தான்..
டேய் போய் சுசீந்திரன் கடையில் இத குடுத்துட்டு வா..ஓடு..ஓடு..
பையன் இறங்கிப்போனான்..
சொல்லுங்க என்ன வேணும்..
நான் அவரிடம் பில்லைக் காட்டினேன்..
என்ன வேணும்..
இத யார் வாங்கினான்னு தெரியுமா?
..
ஏன் என்னாச்சு?
அது..
சொல்லுங்க தம்பி.. என்னாச்சு?
அது வந்து.. அவரு இறந்துட்டாரு..
[நடை மறந்த கால்கள் தன்னின் 
தடயத்தைப் பார்க்கிறேன் 
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்]
முத்து தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல பக்கத்தில் ஒட்டப்பட்டிருந்த குஷ்புவின்  போஸ்டரை வெச்சகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.. ஆனால் அவன் காதுகள் இங்கு தான் இருக்கின்றன என எனக்குத் தெரியும்..
[விடிந்துவிட்ட பொழுதில் கூட
வின்மீனைப் பார்க்கிறேன்]
ஒரு லாரி மிகுந்த சத்தத்துடன் கடந்து சென்றது.. கடுமையான வெயில்.. 
பில் புக் ரெஜிஸ்டரை எடுத்து வந்தார்.. எதேதோ தேடினார்.. புரட்டிப் புரட்டிப் பார்த்தார்..
வாங்கின ஆள் எனக்கு ஞாபகம் இருக்கு.. ஆனா அவர் யாருன்னு எனக்குத் தெரியாது.. விவசாயம் பத்தி நல்லா தெரிஞ்சுவெச்சிருந்தார்.. ஊர் எங்கன்னு கேட்டப்போ போடின்னு சொன்னார்.. ஆனா நீங்க சொல்றதக்கேக்கறப்போ அது உண்மையான்னு தெரியல..
[இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்]
ஆமா..உங்களுக்கு எப்படி இது கெடச்சது?
பஸ்ல எனக்குப் பக்கத்து சீட்ல.. உக்காந்தபடியே இறந்து கிடந்தார்.. திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சிருக்காங்க.. இந்த பில் சீட்டு இடுக்கில் கிடைத்தது..
கஷ்டமா இருக்கு தம்பி.. ஆனா இதுக்கு மேல உங்களுக்கு நான் உதவி பண்ண முடியாது..
பில்..
நானே வெச்சுக்கிறேன் தம்பி.. போலீஸ் கேஸுன்னு பின்னாடி..
தலையாட்டிவிட்டு கீழிறங்கினேன்..
***
ஒரு வேளை அவரு போடியாத்தான் இருப்பாரோ?
எனக்கென்னமோ பொய்யாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்..
ஏன்..
கண்டிப்பா உண்மை சொல்லிருக்க மாட்டார்..
அதத்தாண்டா முன்னாடியும் சொன்ன.. ஏன்னு கேட்டேன்..
சரி..அப்படியே போடின்னாலும்.. போடில எங்க போய் தேடுவ..
அது இல்ல பிர்ச்சனை.. ப்ரச்சனை அவரு போடியா இல்லியாங்கறதுதான்..
சரி வா முதல்ல வந்த வேலையை முடிச்சிடலாம்.. ரெண்டே வீடு தான்.. டக்குன்னு வெச்சிட்டு வந்திடுவோம்..
***
நாலு புரோட்டா..ரெண்டு ப்லேட் பிரியாணி..
எண்பத்திரெண்டு ரூபாய்..
நூறு ரூபாய் கொடுத்தேன்..
[பத்து ரூபாயை மடிக்கும் போது.. ஓரத்தில் பச்சை இங்கில் ஏதோ கிறுக்கப்பட்டிருந்தது..]
டேய்.. ஒரு வேளை அவரு கொடுத்த ரூபா நோட்ல ஏதும் க்ளு வெச்சிருப்பாரோ..
என்னது.. [திடுக்கிட்டு முழித்தான் முத்து]
ரூபா நோட்ல க்ளூவா?
நான் வேகமாக இறங்கி நடக்க ஆரம்பித்தேன்..
பின்னாடியே ஒடி வந்தான் முத்து..
தன்ராஜ் கெமிகல்ஸ்
சார்..
என்ன தம்பி என்ன வேணும்..
அவரு ஒரு வேளை உங்களுக்கு கொடுத்த ரூபா நோட்டில எதுனாச்சும் எழுதியிருந்தா?
எவரு? நீங்க யாரு?
சார்..என்ன சார்.. இப்போ தான வந்தோம்.. அந்த பில்..
எந்த பில்? நீங்க யாரு? என்ன வேணும் உங்களுக்கு?
முத்து என் கையைப் பிடித்தான்..
அண்னே..எங்ககிட்டவா.. அந்த பில்லோட ஜெராக்ஸ் காப்பி வெச்சிருக்கோம்.. காட்டணுமா?
எங்க காட்டுங்க..
எதுக்கு காட்டணும்.. ஒன்னு நாங்க சொல்றத கேளுங்க.. இல்ல.. நேர திருமங்கலம்.. போலீஸ் ஸ்டேஷன் தான்..
தம்பி.. நானே கடன உடன வாங்கி இப்போத்தான் இந்த கடய ஆரம்பிச்சிருக்கேன்.. போலீஸ் அது இதுன்னு இழுத்துவிட்டிராதீங்க தம்பி.. வியாபாரம் நடக்குற நேரம்..
ஒரு ஆளையும் காணோம்.. என்ன வியாபாரம் நடக்குது? சரி விசயத்துக்கு வருவோம்.. நீ சொல்றா மாப்ள..
நேத்து தான வாங்கினதா சொன்னீங்க?
ஆமா..எவ்ளோ கொடுத்தார்?
நூறூ ரூபாய்..
எப்படிக்கொடுத்தார்? அம்பது ரூபாவா? பத்துரூபாவா?
ஒரே நோட்டு..
எப்படித்தெரியும்? எதுனாச்சும் சொல்லி எங்கள கழட்டிவிடப் பாக்கறீங்களா?
தம்பி..ஞாபகம் இருக்கு தம்பி 35 வருஷமா வியாபாரத்தில இருக்கேன்.. கல்லால உக்காத்தீங்கன்னா கொஞ்ச நாள்லயே பழகிரும்..முகமும் அவங்க கொடுத்த நோட்டும்..செருப்புத்தைக்கிறங்க செருப்பையும் காலையும் ஞாபகம் வெச்சிருக்கிற மாதிரி..
நல்லாத்தான் பேசறீங்க.. உங்க கல்லாவ திறந்து உள்ள இருக்கிற எல்லா நூறு ரூபா நோட்டையும் எடுங்க..
ஏதோ புலம்பிக்கொண்டே சென்றார்..
கையில் கொத்தாக நோட்டுகளுடன் வந்தார்..
ஒத்துக்கறேன்.. உங்க கடையில் வியாபாரம் நடக்குதுன்னு.. 
நான் நோட்டுகள் ஒன்றாக பார்த்தேன்..ஏதேதோ கிறுக்கப்பட்டிருந்தன.. ஐந்து நோட்டுகள் தேறின.. முத்து ஐந்நூறு ரூபாயை நீட்டினான்..
எடுத்திட்டு வரும் போது ஏதும் கீழ விழுந்திருக்கானு பாத்திட்டு வந்திடுங்க..
அவர் முறைத்தவாரு சென்றார்..
பின் சிரித்தபடியே ஒரு நோட்டுடன் வந்தார்..
சொன்னேன்ல..
ஆனா சார் எங்ககிட்ட வேற காசில்லையே..
அவர் டக்கென்று நோட்டை மடித்தார்.. எவ்ளோ ஃபாஸ்டா புரிஞ்சுக்கிறாங்கப்பா..
டேய் மாப்ள போய் ஒரு நூறு ரூபா நோட்ட மட்டும் ஜெராக்ஸ் எடுத்திட்டு ஓடியா.. நான் இங்க இருக்கேன்..
தம்பி.. ஜெராக்ஸ் எடுக்கறதுலையே குறியா இருக்கீங்களே.. கடை ஏதும் வெச்சிருக்கீங்களா?
***
ஜெராக்ஸ் எடுக்கப்போகும் போது, இந்தாளோட கடப்பையன பாத்தேன்..
ஓ டுபாகூர் ஓனரா?
அவன் ஒரு விசயம் சொன்னான். இறந்து போன ஆள் ஒரு மஞ்சப்பையை விட்டிட்டுப் போயிருக்கார்..
ஷிட்.. கடக்காரர் நம்ம கிட்ட மறச்சிட்டாரு பாரு.. ஆமா அந்தப் பையனுக்கு எப்படி அவரு தான்னு தெரியும்..
அந்த ஆள் பின்னாடியே அத கொடுக்க ஓடிருக்கான்.. ஒரு தெரு தள்ளி.. அந்த ஆளக் காணோமாம்..
என்ன மாயமாயிட்டாரா?
கொஞ்சநேரம் தேடிட்டு.. கண்டுபிடிக்க முடியாம கடைக்கு வந்திட்டானாம்..
என்ன இருந்துச்சாம் பையில?
ஒரு அன்-ரூல்ட் ஏ4 ஷீட்.. ஒரு பேனா.. அவ்வளவு தான்..
பத்தி எழுத்தாளரா இருந்திருப்பாரோ?
இன்னொரு விஷயமும் சொன்னான்.. அந்த மஞ்சப்பையில மல்லிகை ஜுவல்லர்ஸ் திருப்பரங்குன்றம்னு போட்டிருந்துச்சாம்.. அதனால அவரு திருப்பரங்குன்றத்து ஆள் தான்னு நெனச்சிட்டிருந்திருக்காங்க..
பாரேன் இத்தனைய மறச்சிருக்காரு அந்தாளு.. வா போய் அந்த பைய வாங்கிக் பாத்திட்டுவோம்..
அந்தப்பையன் தயவு செஞ்சு கேக்காதீங்கன்னு கெஞ்சிக்கேட்டுக்கிட்டான்.. ஏன் சொன்னன்னு அந்த ஆள் அடிப்பாராம்..
பின்ன கொஞ்சுவாரா.. சரி விடு.. ஆனா செத்துப்போன ஆள் ரொம்பவும் கொழப்புறாரே.. ஶ்ரீவில்லிபுத்தூர்ல ஏறிருக்கார்.. மதுரைக்குப் போற பஸ்ஸில ஏறிருக்கார்.. தேனில வந்து மருந்து வாங்கிருக்கார்..போடின்னு சொல்லிருக்கார்..
எந்த ஊரு தான் அந்தாளு?
***
இல்ல சித்தி இருக்கட்டும்.. கெளம்புறோம்..இன்னொரு நாள் வர்றேன்..
போடிக்கு எத்தன வருஷம் கழிச்சு வந்திருக்க.. சாப்பிடாம அனுப்பிச்சேன்னு தெரிஞ்சது.. அக்கா கொன்றும்.. உக்காரு தோச ஊத்தித் தாரேன்.. தம்பி யாரு?
ஃப்ரண்டு சித்தி.. பேரு சுதாகர்..
உன் காலேஜ் தானா?
இல்ல.. அது ஒரு அல்லக்கை காலேஜ்..
ம்ம் என்ன?
இல்ல அப்படி ஒன்னும் பெரிய காலேஜ் இல்ல..
(டேய்.. நான் தியாகராஜா காலேஜ்.. நீ மெப்கோ.. எதுடா அல்லக்கை காலேஜ்?)
(மூடிட்டு உக்காருடா.. இது உன் சித்தி வீடா.. இல்ல என் சித்தி வீடா..)
அடடே.. முத்து.. வாப்பா.. இப்பத்தான் வழி தெரிஞ்சுதா? பத்திரிக்கை வெக்கவா? அப்பா அம்மா எல்லாம் நல்லாருக்காங்களல்ல?
நல்லாருக்காங்க சித்தப்பா..
உக்காருங்க உக்காருங்க..
ஏம்மா.. சுடுதண்ணி வெச்சாச்சா.. வெளில நின்றவாரே கேட்டார்..
ஒரு கேதம்.. பத்து நிமிஷத்தில் குளிச்சிட்டு வந்திடுறேன்.. நீங்க உக்காருங்க..
(மிக்ஸி அரைக்கும் சத்தம்)
***
என்னடா.. படிப்பெல்லாம் எப்படிப் போகுது? பாஸ் பண்ணிருவியா?
நான் தான் காலேஜ் ப்ர்ஸ்ட் சித்தி.. 
(நான் இறுமினேன்..)
(டேய்..ஓவர் ஆக்ட் உடம்புக்கு ஆகாது.. தண்ணியக்குடி தண்ணியக்குடி)
(தோசை சுடும் சத்தம்.. )
மணி இன்னும் ஸ்கூள் விட்டு வரல?
அவனுக்கு காய்ச்சள்.. ரெண்டு நாளா.. மேலே தூங்கிட்டிருக்கான்.. இப்போதான் தூங்கினான்..
சரி சித்தி.. கெளம்புறதுக்குள்ள முழிச்சா பாத்துட்டுப்போறேன்.. அவனுக்கு கொஞ்சம் காமிக்ஸ் எடுத்திட்டு வந்தேன்.. டீவி மேல வெக்கறேன்.. ஒரு சின்ன வீடியோ கேமும் வெச்சிருக்கேன்..
ம்ம்.. சரிப்பா.. 
தட தடவென யாரொ மாடியிலிருந்து இறங்கிவரும் சத்தம்..
மணி.. உடம்பு முழுக்கவும் வேர்த்திருந்தது.. அம்மா..அம்மா என்று கத்தியவாரே எங்களைக் கடந்து கிச்சனுக்குள் சென்றான்.. எங்களைப் பார்த்த மாதிரியே தெரியவில்லை..
சித்தி ஓடி வந்து அவனைப் பிடித்துக்கொண்டார்.. ஆறாவது படிக்கிற பையன்.. காய்ச்சல் தான? ஏன் இப்படி பயப்படுறான்..
சோபாவில் அவனைப் படுக்கவைத்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.. தலையை தடவிவிட்டுக்கொண்டேயிருந்தார்..
என்ன சித்தி ரொம்ப காய்ச்சலா? 
ஷ்ஷ் என்பது போல சைகை காட்டினார்..
முத்து தலையாட்டினான்.
என்னைப்பார்த்து ஃபேனைக் குறைத்துவைக்குமாரு சொன்னார்..
நான் எழுந்து குறைத்துவைத்துவிட்டு வந்தேன்..
வீடு அமைதியாக இருந்தது.. மின் விசிறியின் சத்தம் மட்டும்..
கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டான்..
மெதுவாக எழுந்து.. கிச்சனுக்கு வா என்றார்..
***
நானும் முத்துவும் டைனிங் டேபிளில் உட்கார்ந்தோம்..
மேலே மணி பெரிதாக சிரித்துக்கொண்டிருந்தான்..
நாங்களே இன்னிக்கு திருப்பரங்குன்றம் வரலாம்னு நெனச்சிருந்தோம்..
ஏன்? என்னாச்சு சித்தி? 
மணிக்காகத்தான்.. மணியும் நானும் கொஞ்சநாள் உங்க வீட்ல இருக்கலாம்னு ப்ளான்..
தாராளமா சித்தி..ஏதும் பிரச்சனையா?
பிரச்சனை ஒன்னும் இல்ல.. அவனோட டீச்சர் ஒன்னு.. இவன் கிட்ட ரொம்ப பாசமா இருக்கும்.. நமக்கும் தெரிஞ்ச பொண்ணுதான்.. மண்ணெண்ணய குடிச்சு செத்துபோச்சு..நேத்துதான்.. காலைல..
அதுலருந்து இவனுக்கு காய்ச்சல்.. ஒழுங்கா தூங்கமாட்டேங்கிறான்.. தூக்கத்தில பயந்து பயந்து கத்தறான்..
சரி சித்தி.. எங்ககூடவே வந்திடுங்க.. 
சித்தப்பா கார்ல விடுறேன்னு சொல்லிருக்கார்.. சேர்ந்தே போயிடலாம்..
***
வாஷ்பேசினில்..
என்னடா எங்க பாத்தாலும் சூசைடா இருக்கு..
ஸ்டூடண்ட்ஸ் தானடா மார்க் பத்தலைன்னு ஸூசைட் பண்ணிக்குவாங்க.. இங்க டீச்சர் எதுக்குடா சூசைட் பண்ணிக்குச்சு?
இதுக்கும் அந்தாளுக்கும் சம்பந்தம் இருக்குமோ?
லவ் பெயிலியரா இருக்குமோ?
கேளேண்டா உன் சித்தப்பாட்ட..
கேக்கறேன்.. பொறு..
என்னடா அவங்களோடவா போற..
ஆமா.. நீ வரலயா?
நாம போடில கொஞ்சம் தேடலாம்னு பாத்தேன்..
இவனொருத்தன்.. காலைலருந்தே ஒன்னும் சரியில்ல.. அவன் மருந்த குடிச்சிட்டான்.. இவ மண்ணென்ணய குடிச்சிட்டான்னு.. போகணும் நெனக்கறவங்க போயிட்டுப்போறாங்க.. இதுல நீ என்ன துப்பு துலக்கற?
அப்ப அவர் யாருன்னு?
ம்ம்..போலீஸ் பாத்துக்கும் எப்படியும் ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சிடும்..  இவருக்குத் தெரிஞ்சவங்க யாராவது ஆளக்காணோம்னு தகவல் கொடுத்திருப்பாங்க..
ம்ம்..
ரெண்டு நாள் கழிச்சு திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் போய் விசாரிச்சேன்னா உண்மையென்னன்னு தெரிஞ்சுக்கலாம்..
எதுக்கு என்னய டவுசர கழட்டி ஒக்கார வெக்கறதுக்கா?
பயமிருக்குல்ல.. அப்புறம் என்ன பெரிய ஜேம்ஸ்பாண்ட் மாதிரி ஆக்ட் கொடுக்கற?
இல்ல.. அவருக்கும் டீச்சருக்கும் சம்பந்தம் இருந்தா.. அவரோட பாடி திருமங்கலத்தில இருக்கிறது..
சம்பந்தம் இருந்தாத்தான?
இருந்துச்சுன்னா?
இவனொருத்தன்..
***
மாருதி 800. எல்லோருக்கும் இடம் தாராளமாய் இல்லை. சித்தப்பா ட்ரைவ் செய்து கொண்டிருந்தார். எல்லா ஜன்னல்களும் திறந்திருந்தன. என் ஜன்னலின் வழியே காற்று மிக வேகமாக வீசிக்கொண்டிருந்தது. ஜன்னலை மூடி விடலாமா என்று யோசித்தேன்.
உலகம் எனக்கென்றும் விளங்காதது..
உறவே எனக்கின்று விளங்கானது..
அடடா முந்தானை சிறையானது..
இதுவே என் வாழ்வில் முறையானது..
பாறை ஒன்றின் மேலே
ஒரு பூவாய் முளைத்தாயே..
சித்தப்பா டேப்பை ஆஃப் செய்தார். சட்டென்று அமைதி.  தூங்கிட்டானா? ம்ம் வண்டியை டீக்கடையோரம் நிறுத்தினார். முத்து உங்களுக்கு என்ன வேணா வாங்கிக்கங்க, எனக்கு ஒரு டீ, சித்திக்கு ஒரு பால். அந்தக் குளிரில் டீ தேவாமிர்தமாக இருந்தது. அவ்வப்போது கடந்து செல்லும் சில வண்டிகளைத்தவிர வேறு சத்தம் இல்லை. அமைதி. டீச்சருக்கு என்னாச்சு சித்தப்பா? ம்ம்ம் இல்ல ஏன் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்கன்னு கேட்டேன்.. டேய் சின்னப்பையன் மாதிரி சும்மாருக்கமாட்ட? யாரு இவிங்களா சின்னப்பசங்க? சித்தப்பா ஒன்றும் பேசாமல் இரண்டு முறை டீயை உறிஞ்சினார். முத்து ஒரு கோல்ட் ப்ளேக்ஸ் வாங்கிட்டுவா. சித்தியைப் பார்த்து இன்னைக்கு ஒருநாள் மட்டும் என்று கெஞ்சினார். 
இழுத்து ரசித்து முதல் புகையை வெளியேவிட்டார். காருக்குள் இருந்த புகையை தட்டி வெளியே அனுப்பிட முயற்சிசெய்தார். வாழ்க்கை எப்படி ஒரு செகண்ட்ல தடம் மாறுதுங்கறதுக்கு டீச்சர் தான் உதாரணம். நமக்கு கெடச்சிருக்கிற வாழ்க்கை இப்படியே எப்பவுமே இருக்கும்னு நாம நினைக்கிறோம். அதனால தான் அத முழுசா அனுபவிக்கிறதில்ல. பிள்ளைங்களோட விளையாடறதில்ல. அப்பா அம்மா கூட உக்காந்து சிரிச்சு பேசறதில்ல. பொண்டாட்டி புருஷன்கிட்டயோ புருஷன்  பொண்டாட்டி கிட்டயோ அன்பை காட்டிக்கிறதில்ல. ஒரு குழம்பு நல்லாருந்துச்சுன்னாக்கூட நல்லாருக்குமான்னு ஒரு வார்த்த சொல்லிக்கிறதில்ல. டீச்சர் எனக்குத் தெரிஞ்ச பொண்ணுதான். எனக்கு ஒருவகையில முறை கூட. ஆன வயசில ரொம்ப சின்னப்பொண்ணு. டீச்சர் ட்ரெயினிங் இப்போத்தான் முடிச்சது. கோல்ட் மெடலிஸ்ட். கெட்டினா மாமனத்தான் கட்டுவேன்னு ஒத்தக்கால்ல நின்னு கட்டுச்சு. மாமன்ங்கறது டீச்சரோட அம்மாவோட தம்பி. அவன் ரொம்ப படிக்காதவன். ஏதோ வேலைக்குப் போயிட்டிருந்தான். டீச்சரோட அம்மாவுக்கு இந்தக்கல்யாணத்துல இஷ்டம் இல்ல. ஆனா மகளோட ஆசைக்கு குறுக்க நிக்க முடியல. வாழ்க்கை கொஞ்சகாலத்துக்கு சந்தோஷமா போயிட்டிருந்தது. அவங்க ரெண்டு பேருக்கும் இடையே சண்டை ஆரம்பிச்சுது. இவன் ஒழுங்கான வேலைக்கும் போறதில்ல. தினமும் சண்டை. அப்போ அவன் எங்கிட்டத்தான் கணக்கெழுதிட்டிருந்தான். சரி சண்டையில்லாம புருஷன் பொண்டாட்டி இருக்க முடியுமா என்ன? ஆனா அவங்க சண்டைக்கு காரணம் அவனுக்கு வேலை இல்லாதது மட்டும் இல்ல. 
***
போடி. 
ரெண்டு நாளைக்கு முன்.
மணி 8:10 காலை. டீச்சர் வீடு.
அம்மா டிஃபன் பாக்ஸ் வெச்சியா இல்லியா?
வெச்சிட்டேண்டி. 
என்ன வெச்சிருக்க?
பொங்கல்..
மாமா எங்க?
எனக்கென்ன தெரியும்? எங்க போனானோ வெட்டிப்பய..
கொஞ்சம் வாய மூடறியா?
என்னாச்சுடி நேத்து? என்ன சொன்னா டாக்டரம்மா?
ஒன்னுமில்ல..
ஒன்னுமில்லன்னா? என்னடி சொன்னா?
ஒன்னுமில்லன்னு சொல்றேன்ல.. விடேன்..
உம்பேச்சத்தானடி கேக்கேறேன் ஒரு வருஷமா..
..
ஏண்டி அழற?
..
நீ வேற கம்முன்னு இரும்மா தூண்டிவிடாத..
(டைனிங் டேபிளில் கைவைத்து முகம் புதைத்துக்கொள்கிறாள். தோள்கள் குலுங்குகின்றன)
அம்மா தலையைத் தடவிவிட்டுக்கொண்டே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்..
சட்டென்று எழுந்து.. விசுக்கென்று வெளியேறினாள்.. கைப்பையை தூக்கிக்கொண்டி..
வசந்தி…என்னடி சொல்லாமக்கொல்லாம போறவ.. போயிட்டுவாறேன்னு சொல்லிட்டுப்போடி..
வசந்தி ஏதும் சொல்லவில்லை. அவள் நடந்து தெருமுனையைக் கடக்கும் வரையிலும் பார்த்துக்கொண்டேயிருந்தார்.
***
மணி 11 காலை. ஹச்.கே.எம் ஹைஸ்கூள். போடி.
8 ஆம் வகுப்பு ஆ பிரிவு.
ம்ம்.. போதும் உக்கார். அடுத்து வாசி.
பாக்டீரியா ஒரு செல்லால் ஆன ஒரு நுண்ணுயிர் ஆகும். அவை நுண்ணுயிர் தொகுதியைச் சார்ந்தது.
வசந்தி எழுந்து வேகமாக பின் பெஞ்சுக்குச் செல்கிறார்..
கணேஷ் எந்திரி..
(கணேஷ் மெதுவாக எழுந்திருக்கிறான்)
என்ன எழுதற?
அது வந்து டீச்சர்.. டீச்சர்..
எத்தனவாட்டி சொல்றது.. என் க்ளாஸ்ல மத்த க்ளாஸ் வீட்டுப்பாடம் எழுதாத எழுதாதன்னு..
.
அறிவில்ல.. மண்டையில என்ன களிமண்ணா இருக்கு?
டீச்சர்..
என்னடா முறைக்கிற?
உக்காரு.. இன்னொருதடவ எழுதின.. நடக்கறதே வேற..
நீ எதுக்குடா நிப்பாட்டின.. வாசி..
பாக்ட்டீரியாவைக் குறித்த அறிவியல் பாக்டீரியாலஜி என்றழைக்கப்படுகிறது..
எதுக்குடா சிரிச்ச?
அவன் கணேஷைப் பார்க்கிறான்..
என்னடா பண்ணான்?
சொல்லுடா..
என்ன வக்கன காமிச்சானா?
..
திமிர் பிடிச்சது.. 
அடுத்தவன் வாசி
பாக்டீரியாவை 1675ஆம் ஆண்டு டச்சு அறிவியல் அறிஞரான ஆண்டன் வான் லூவன்ஹூக் என்பவர் கூட்டு நுண்ணோக்கியின் மூலமாகக் கண்டறிந்தார்..
டேய் கணேஷ் நீ இன்னும் எழுதிட்டா இருக்க..
(டேபிளில் இருந்த ஸ்கேலை எடுக்கிறார்)
(ஓட்டமும் நடையுமாக கணேஷின் டெஸ்குக்குப் போகிறார்)
எழுந்திருடா.. (முகம் சிவக்கிறது)
என்னப்பாத்தா என்ன கேணடீச்சர் மாதிரி தெரியுதா..
(காலில் அடிக்கிறார்)
பாவம் பாவம்னு விட்டுக்கிட்டே போனா..
(சரமாரியாக காலில் அடி விழுகிறது)
ஐயோ டீச்சர்.. வேணாம் டீச்சர்..
(அடி நின்ற பாடில்லை..)
டீச்சர்.. டீச்சர்..
(முதுகில் விழுகிறது)
வக்கன காட்டுவியா?
(மேலும் முதுகில் விழுகிறது..)
(மேலும் முதுகில் விழுகிறது..)
நோட்ட எடுத்திட்டு வெளில போ..முட்டி போடு..இந்த பீரியட் முடியறவரைக்கும்..
(வேகமாக நடந்து சென்று.. ஸ்கேலை டேபிளில் தூக்கிப்போடுகிறார்..)
(டெஸ்கில் சாய்ந்து நின்று கொள்கிறார்..)
அடுத்து வாசி..
அதன் பிறகு லூயி பாஸ்டியர், ராபர்த் கோச்..
(கணேஷ் முதுகைத் தடவிக்கொண்டே அழுதுகொண்டே மெதுவாக வெளியே போகிறான்)
***
மதியம் 1:30 ஹச்.கே.எம் ஹைஸ்கூள்.
ஹெட்மாஸ்டர் ரூம்.
ஐயா..
எட்டாவது படிக்கிற கணேஷோட அப்பா வந்திருக்கிறார். உங்கள பாக்கணுமாம்..
எதுக்காம்..
தெரியல.. ஆனா கோபமா இருக்கிற மாதிரி இருக்கார்..
எனக்கு க்ளாஸ் இருக்கே.. கொஞ்ச நேரம் வெயிட் பண்னச்சொல்லு.. க்ளாஸ் முடிச்சிட்டு வந்திடறேன்.. நேத்தும் க்ளாஸுக்குப் போகல.. இல்லீன்னா நாளைக்கு வரச்சொல்லு..
சரிங்கையா..
***
மதியம் 4:30 ஹெச்.கே.எம் ஹைஸ்கூள்.
எட்டாம் வகுப்பு அ பிரிவு.
வசந்தி டீச்சர்.
ம்ம் அடுத்து வாசி.
புறச்சவ்வுடைய செல்லின் பகுதிப் பொருள்களான கோல்கை உறுப்புகள்..
ப்யூன் வேகமாக் உள்ளே வருகிறார்.
டீச்சர். உங்கள ஹெட்மாஸ்டர் கூப்பிடறார்.
க்ளாஸ்ல இருக்கேன் தெரியல? முடிச்சிட்டு வர்றேன்னு சொல்லு..
இல்ல டீச்சர். கையோட கூட்டிட்டுவரச்சொன்னார்.
எழுந்து தடாரெனு புத்தகத்தை டேபிள் மீது போடுகிறார்..
சடசடவென்று வெளியேறுகிறார்.
***
மதியம் 4:33 ஹெச்.கே.எம் ஹைஸ்கூள்.
ஹெட்மாஸ்டர் ரூம்.
கதவைத்திறந்த வசந்தி அதிர்ச்சி அடைந்தார். அங்கே ஹெட்மாஸ்டருடன் ஒரு லேடி காண்ஸ்டபிள் உட்கார்ந்திருந்தார்.
மேடம் கொஞ்சம் கனிவு காட்டலாமே..
என்ன சார் நீங்களே இப்படி சொல்லிக்கிட்டு.. இந்தம்மாதானா? போட்டு அந்த அடி அடிச்சிருக்கு.. முதுகெல்லாம் வாரு வாரா இருக்கு சார்.. பையனப்பெத்தவ அழுகிறா..
வசந்திக்கு கை நடுங்குகிறது. முகம் வெளுக்கிறது.
இருந்தாலும்.. பசங்கள அடிக்கிறது சகஜம்.. அதுக்காகவா போலீஸ் கம்ப்ளெய்ண்ட்.. பாவம் டீச்சர்..
என்ன சார் பாவம் கீவம்னு? யாரோ பெத்து வளத்து ஸ்கூளுக்கு படிக்க அனுப்பிச்சா.. இப்படி மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கச்சொல்லுச்சா?
வசந்திக்கு வேர்த்து ஊத்துகிறது..
காண்ஸ்டபிள் வசந்தியை மேலும் கீழுமாக பாத்துவிட்டு.. நட போகலாம்..
வசந்தி அழுகிறார். சார்.. சார்.. தெரியாமப் பண்ணிட்டேன் சார்.. மன்னிச்சு விட்றசொல்லுங்க சார்.. ப்ளீஸ் ஸார்..
உஷ் வாயமூடு.. கம்முன்னு வந்தீன்னா.. யாருக்கும் ஒன்னும் தெரியாது.. வெளங்கெல்லாம் மாட்ட வெச்சிடாத..
ஐயோ.. வேணாம் மேடம்.. வேணுமின்னே செய்யல மேடம்.. விட்ருங்க மேடம்..
இண்ஸ்பெக்டர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. கூட்டிட்டு வரச்சொல்லிட்டார்.. வந்துரு.. ஒன்னும் ஆகாது.. சும்மாதான்.. இனிமே இப்படி செய்யமாட்டேன் சார்னு சொல்லிட்டேன்னா ஒன்னும் ஆகாது.. அழுது கத்தி நீயே எல்லோருக்கும் காட்டிக்கொடுத்திடாத..
(வசந்தியின் கையப் பிடித்தார் காண்ஸ்டபிள்)
சார். சார்
மேடம் நானும் வரலாமில்ல..
ஓ எஸ்.. வாங்க..
(வசந்தியின் கண்களில் நீர் வழிந்தோடுகிறது)
***
போடி. காவல் நிலையம்.
மணி  4:47 மாலை.
இண்ஸ்பெக்டர் ஆறுமுகம் உள்ளே நுழைகிறார்.
எல்லோரும் எழுந்து நிற்கின்றனர்.
வசந்தியின் அம்மா அழுதுகொண்டேயிருக்கிறார். வசந்தியின் கண்கள் அழுதழுது வீங்கியிருக்கின்றன.
ரூமுக்குள் செல்கிறார் இன்ஸ்பெக்டர்.
வசந்தி. ராஜா. கணேஷ். மட்டும் உள்ள போங்க. ஐயா கூப்பிடுறார்.
நானும் வர்றேன்..
உங்கள கூப்பிடல..
ஹலோ.. நான் தான் ஸ்கூளுக்கு ஹெட்மாஸ்டர்..
அது ஸ்கூள்ல.. இங்கில்ல.. கம்முன்னு உக்காருங்க..
வசந்தியின் அம்மா: ஐயா நான் போகலாங்களா? (அழுகிறார்..)
காது செவிடா கெழவி? என்ன சொன்னேன்? ம்ம்?
சின்னப்பொண்ணுய்யா.. தெரியாம செஞ்சிருச்சு..
வாயமூடிட்டு உக்காரு கெழவி…
*
உம்பேரென்ன?
வ்வ்
என்ன வ்வ்வுன்னுட்டு நாய் மாதிரி? பேரென்னடி?
ஸ்..ஸ்..ஸ்ஸார்..வ்வ்..வ்வ்..
என்னடி முனங்குற?
வ்..வ..ஸ்..ந்தி (தலையை கீழே போட்டு அழுகிறாள்)
அவன் எதுக்கு இப்படி போட்டு அடிச்சிருக்க?
.
நீயா பெத்த? 
(டக்குன்னு எழுந்திருக்கிறார்)
(பக்கத்தில் வருகிறார்)
டீச்சர்ன்னா? என்ன வேணா செய்யலாமா?
(லேடி காண்ஸ்டபிளை கண் காட்டுகிறார்)
லேடி காண்ஸ்டபிள் வந்து.. வசந்தியின் முதுகில் ஓங்கி ஒரு அறை வைக்கிறார்..
(வசந்தி இதை எதிர்பார்க்கவில்லை.. அதிர்ச்சி தாளாமல்.. சட்டென்று கீழே முட்டி போட்டு உட்கார்ந்துவிடுகிறார்.. கேவி கேவி அழுகிறார்)
(பயத்தில் கால்கள் நடுங்கினநிற்க முடியவில்ல)..
(லேடி காண்ஸ்டபிள் தூக்கி விடுகிறார்)
யோவ்.. நீ ஒரு ஆளுய்யா.. ஸ்கூள்ல ஏதோ டீச்சர் அடிச்சதுன்னா.. அதுக்கு கம்ப்ளைண்ட் கொடுக்க வந்திட்ட..
உன் மவன் என்ன பொறுக்கித்தனம் பண்ணினானோ..
(கணேஷ் விக்கித்து நின்று கொண்டிருந்தான்.. அவனுடைய கால்களும் நடுங்கின)
ஐயோ இல்ல சார்..
சரி போ.. இத்தோட விட்று.. 
சார்..
போன்னு சொல்றேனில்ல..
காண்ஸ்டபிள் டீச்சர கூட்டிட்டுப் போங்க..
வசந்தி நடக்க முடியாமல் நடந்து செல்கிறார்..
***
மணி அதிகாலை மூன்று.
வசந்தி மெதுவாக சமையலறையில் நுழைகிறாள்.
மண்ணெண்ணெய் கேனை எடுக்கிறாள். 
மூடியைத் திறந்து. மடக். மடக். மடக்கென்று குடிக்கிறாள்.
அப்படியே கீழே சரிகிறாள்.
அழுகை காட்டாறாக ஓடுகிறது.
அவள் கடைசியாகச் சொன்ன வார்த்தை. மாமா.
***
கார் அமைதியாக பயனிக்கிறது. காற்று இன்னும் அசுரத்தனமாக காருக்குள் வந்துகொண்டிருந்தது.
சித்தப்பா. கேசட் மாற்றினார்.
பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னொரமே
வென்னிலா வானில் அதில் என்னென்ன மேகம்
ஊர்கோளம் போகும் அதில் உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே…..
சித்தப்பா?
ம்ம்..
வசந்தி டீச்சரோட வீட்டுக்காரர் இப்போ எங்கே?
காணோம். ரெண்டு நாளாச்சு.. இந்நேரம் எங்க செத்துக்கெடக்கானோ..
***

டிங்கிரித்தலையன் (எ) செந்தில் (எ) பிரபு

(சிறுகதை)

பாலாஜி நகர். திபகு. மதுரை.

ட்ரிங்…ட்ரிங்..ட்ரிங்..
“ஹலோ”
“யாருங்க?”
“நான் ப்ப்ரபு பேசறேன்ம்மா..சுபத்ரா இருக்காங்களா?”
“நீங்க?”
“நான் கூடப்படிக்கிற க்ளாஸ்மேட்..’
“கொஞ்சம் பொறுப்பா..”

..
“ஹலோ”
“ஹலோ சுபி”
“யெஸ்…”
“நான் தான் பிரபு பேசறேன்”
“பிரபு? எந்த பிரபு?”
“என்ன சுபி என்னத்தெரியலையா?”
“ம்ம்ம்…”
“டென்த் டிவிஎஸ்ல உன்னோட க்ளாஸ்மேட்..”
“ஓ…அந்தப் பிரபுவா..எ..எப்படி இருக்கீங்க”
“நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்க?”
“ஓ நல்லயிருக்கேன்..இப்ப எந்த காலேஜ்..”
“அய்யனார் இன்ஜினியரிங் காலேஜ்..”

..
“இன்னும் அந்த ஸ்கூட்டி தான் வெச்சிருக்கியா?”
“ஸ்கூட்டியா?”
“ம்ம் அந்த பிங்க் கலர்”
“பிங்க் கலர் ஸ்கூட்டியா?”
“இப்ப இல்லியா?”
“இப்பவா? எப்பவுமே என்கிட்ட ஸ்கூட்டி கெடையாதே..”
டங் என்று தலையில் கொட்டு விழுகிறது. ஓவர் ஆக்ட் ஒடம்புக்காகாது..
“ஓகே ஓகே ஒருநாள் நீ ஓட்டிட்டு வந்த..அதான்..”
“ஓ ஓட்டிட்டுவந்தனா? என்னம்மா..இதோ வரேன்ம்மா..சரி பிரபு அப்புறம் பேசலாம்..”
“நான் உங்க வீட்டுக்குப் பக்கதில தான் இருக்கேன்.. எஸ் எஸ் ஐல தான் நானும் படிக்கிறேன்..உன் சிப்ட் தான்..மீட் பண்ணா பேசலாம்..ஓகே”
“ஓகே ஓகே..பை”

எனக்கு அப்பாடா என்றிருந்தது. இன்னோரு போன் லைன்னை காதில் வைத்துக்கொண்டிருந்த பிரபு (த ரியல் பிரபு) எழுந்து சிரிச்சுக்கிட்டே வந்தான். “இதெல்லாம் தேவையாடா..ஒழுங்கா பில்டப் கொடுக்காம… இப்படி எக்கச்செக்கமா மாட்டிக்கிட்டியே..” “சோ வாட்..தப்பிச்சிட்டோம்ல..அதுசரி..உனக்காத்தானடா பேசினேன்..” “ஆமா தேங்ஸ்டா..இனி நான் மேனேஜ் பண்ணிக்குவேன்..நமக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் அவ்வளவுதான்..” “தாங்க்ஸ் எல்லாம் எதுக்குடா..எனக்கு பொழுதுபோகலைன்னா இருக்கவே இருக்கா என்னோட புது ·போன் பிரண்ட்” “அடப்பாவி..அப்படியெல்லாம் செஞ்சிடாதடா..அவ உனக்கு தங்கச்சிடா”..

***

ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்
“ஹலோ”
“மோகன் இருக்கானா”
“டேய் டப்பாத்தலையா..சொல்லுடா மோகன் தான் பேசறேன்”
“டேய் நாளைக்கு காலைல எஸ் எஸ் ஐ பில்டிங் வரையாடா?”
“ஒய்?”
“அவளுக்கு க்ரீட்டிங்ஸ் கொடுக்கனும்டா”
“டேய் க்ரீட்டிங்ஸ் தானடா கொடுக்கப்போற? அதுக்கு நான் எதுக்குடா?”
“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் மாமா.. வாடா”
“சரி வந்து தொலையறேன். ஆனா காலைல எட்டு மணிக்கு ஒரு கால் பண்ணி ஞாபகப்படுத்திடு”
“சரிடா”

ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்
“ஹலோ..மோகன்”
“ஆமாடா டிங்கிரித்தலையா..கெளம்பிட்டேன்..”
“வரதுன்னா வாடா…இல்லீன்னா வேணாம்..நம்ம டாக்டரு வந்திருக்கான்..என்கூடதான் இருக்கான்..அவனக்கூட்டிட்டுப்போறேன்”
“என்னது மாத்ருபூதமா..அவன் எங்கடா வந்தான்..ஹாஸ்டல்ல அவுத்துவிட்டுட்டாங்களா?”
“டேய் இன்னிக்கு செகன்ட் சாட்டர்டே..”
“ஓ ஆமால்ல..கொடு அவன்கிட்ட..”
“டேய் மாமா”
“டேய் டாக்டர்மாமா..இங்க என்னடா பண்ற?”
“சும்மா மதுரைக்கு வந்தேன்..அப்படியே நம்ம டிங்கிரித்தலையனையும் பாத்துட்டுப்போகலாம்னு வந்தேன்..எங்கேயோ கூப்பிடறான்..”
“போயிட்டுவா..ஆனா உன் கக்கூஸ் வாய கப்புசிப்புன்னு மூடிட்டுவரனும் புரியுதா..”
“டேய் டுபுக்குமாமா..எல்லாம் எங்களுக்குத் தெரியும்..உன் வேலையப்பாரு..”
“சரிடா கோச்சுக்காத..சாயங்கலாமா வீட்டுக்கு வாடா..”
….
“டேய்”
“பிரபுவா?”
“ம்ம்..சரிடா..அப்படீன்னா நீ வரவேணாம்..நாளைக்கு நாங்க உங்க வீட்டுக்கு வாரோம்..”
“மாத்ருபூதத்தையும் கூட்டிட்டு வாடா”

***
அய்யனார் இன்ஜினியரிங் காலெஜ். இன்ஜினியரிங் மாத்தமாட்டிக்ஸ்.

கரடி தாடியைத் தடவிக்கொண்டே போர்ட்ல ஏதோ எழுதிப்போட்டுக்கொண்டிருந்தது. ஐ லவ் இன்ஜினியரிங் மேத்தமேட்டிக்ஸ். ஆனா இந்த ஆள் நடத்துறத கவனிச்சா சின்னப்பிள்ளைல படிச்ச வாய்ப்பாடு கூட மறந்துபோயிடும். பெட்டர் கவனிக்காம இருக்கிறதுதான்.

“டேய் டாக்டர்”
“என்னடா..”
“சனிக்கிழமை டிங்கிரித்தலையன் கூட்டிட்டுப்போனானா?”
“ம்ம்..காமிச்சான்..”
“காமிச்சானா? கார்ட் கொடுக்கலையா?”
“கொடுத்தான்..”
“ஆள் எப்படி..”
“சும்மா அம்சமா இருக்காடா..”
“ம்ம்..”
“வாயத்தொடடா..”
“பேசினாளா?”
“ம்ம்..அப்புறம்? பேசாமலா”
“உங்கூட?”
“ச்சீ ச்சீ இல்லடா..நான் ஜென்டில்மேன்..”
“அதான்..நல்லவேல நீ பேசல..இல்லன்னா உன் சங்காத்தமே வேணான்னு பிரபுகிட்ட சொல்லிருப்பா”

ய்யேய்..அஸ்வின்..அங்க என்ன பேச்சு..கெட் அப்..(அஸ்வின் மிக மிக மிக மிக மெதுவாக எழுந்திருக்கிறான்..)
வெளில போய்டு..கெட் அவுட் ஆ·ப் மை க்ளாஸ் (கரடி சொல்லிவிட்டு மீண்டும் போர்டுக்குத் திரும்பியது..)
அஸ்வின் ஏதும் நடக்காதது போல உட்கார்ந்து கொண்டான்..

***

அதே இடம். மற்றொரு நாள். வேறொரு க்ளாஸ்.

எனக்கு ஓஆர் புரிவதேயில்லை. பட் ராகவன் சார் எப்படியும் புரியவைத்துவிடுவார். நானும் நல்லாத்தான் கவனிக்கறேன்..ஒன்னுமே புரியவில்லை..”அன்பு..டேய் அன்பு..” “ம்ம்ம்ச்ச்சு..பேசாம இருடா..இப்போத்தான் ஆபீஸ்ல இருந்து வாரேன்..பிள்ளைய கூப்பிடப்போனும்” “வாட்..த..” “அவளும் ஆபீஸ்லருந்து வந்திடுவா..” “டேய்..அன்பு என்னடா ஆச்சு..பிள்ளைய கூப்பிடப்போறையா? உனக்கெப்படா கல்யாணம் ஆச்சு..” “அது ஆச்சு..இப்போ ஒரு பையன்..ஒரு பொண்ணு..பையன் பேரு ஆனந்த்..பொண்ணு பேரு..” “பொண்ணு பேரு?” “அது அவளோட ச்சாய்ஸ்..அவக்கிட்டயே கேட்டுக்கோ..” “என்னது? யாருடா அவ?” “இதே ரோவில் கடைசில ஜன்னலுக்குப் பக்கத்தில உட்கார்ந்திட்டு ஜன்னலுக்கு வெளியே இருக்கிற அந்த மரத்தில எத்தன இலை இருக்குன்னு என்னிட்டிருக்கா பாரு அவளே தான்..” “யாரு? வனிதாவா?” “ம்ம்ம்” எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்புவா?

நான் மெதுவாக கீழே குணிந்து என் தலையை மட்டும் மிக மெதுவாக அந்தப்பக்கம் திருப்பினேன்..ஷிட்..சுபா என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள்..ஷிட்..ஷிட்..ஷீ க்காட் மீ..

சுபா வனிதாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவள்.

***

பாலாஜிநகர். திபகு.

“என்னடா சொல்ற டப்பாத்தலையா?”
“ஆமாடா. சொல்லிட்டேன்”
“என்ன சொன்னா?”
“ஒன்னும் சொல்லல”
“ஒன்னும் சொல்லலைன்னா?”
“ஒன்னும் சொல்லலடா”
“டென்ஷன் ஏத்தாதடா”
“டைம் கேட்டிருக்கா”
“எதுக்கு? பரிட்சைக்கா படிக்கப்போறா?”
“தெரியல..”
“நீ ஏண்டா டெஷனா இருக்க..கூல்”
பிரபு அமைதியாக உட்கார்ந்திருந்தான். அம்மா டீ கொடுத்தார்கள். ஐந்து நிமிடம் மிக மிக அமைதியாகக் கழிந்தது.
“சரிடா மோகன் நான் கிளம்பறேன்”
“ஏன்டா சோகமா இருக்க? லூஸ்ல விடு”
“எப்படிடா லூஸ்ல விடுறது..மூணு வருஷம் டா..”
“சரிடா விடு..நல்ல பதில் தான் சொல்லுவா”

“சரி உனக்கு யாரு இவ்ளோ தைரியம் கொடுத்தது? நீயே உன்ன ஏத்திவிட்டுக்கிட்டியா?”
“இல்ல..இது தான் சரின்னு பட்டது செஞ்சிட்டேன்”
“அப்பா அம்மா?”
“டேய்..நீ வேற..அவ என்னமோ ஓகே சொன்னமாதிரி..”
“ஓக்கே சொல்லிட்டான்னா…”
“பயமுறுத்தாதடா.”
“செறுப்பால அடிப்பேன்..பயமா இருக்கா?”
“சரி டா நான் கெளம்புறேன்..”

***

மறுநாள் ஒரு தகவலும் இல்லை. மறுநாளும் ஒரு தகவலும் இல்லை. அடுத்த நாள் காலேஜ்.

என்ன ஆச்சுன்னு சும்மா சைகல கேட்டேன். உதட்டைப்பிதுக்கினான்.
அப்படீன்னா நோவா?
அடேய்..வாயக்கழுவுடா..ஒன்னும் சொல்லல..
நீ கால் பண்ணியா?
பிட்ஸ் போயிட்டா?
ராஜஸ்தானுக்கா?
அப்புறம் பிட்ஸ் என்ன உங்க ஊரு புரோட்டா கடைக்குப்பக்கத்திலையா இருக்கு?
சோ?
என்ன சோ..தெரியல..பாப்போம்..

இதற்கிடையில்..அன்புவின் ஒரு தலைக்காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது. அதிகாலை ஏழு மணிக்கு கம்ப்யூட்டர் லேபுவுக்கு வந்துவிடுகிறானாம். படிப்பையும் விட்டுக்கொடுக்காம இருக்கான் பாருன்னு சொன்னேன். அப்புறம் கெழவி சொல்லித்தான் தெரிஞ்சது.. லேபுக்காக வரலையாம் அவன்..காலைல ஏழு மணிக்கு காலேஜுக்குள்ள இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு அவ சாமி கும்பிட வருவாளாம்..அந்த சில நிமிட தரிசனத்துக்காக இவர் சிவகாசிலருந்து காலங்காத்தால எழுந்து குளிச்சு அவங்க அம்மாவையும் எழுப்பி..அவங்க ஏதோ பையன் லேபுக்கு போறான்னு சமைச்சுக்கொடுத்து..பஸ் பிடிச்சு..அப்புறம் ஒரு 15 நிமிடம் நடந்து…

ஒழுங்கா லேபுக்கு வந்து படிச்சிருந்தான்னா இந்நேரம் பில்கேட்சா ஆகிருப்பான்..

***

பாலாஜி நகர். திபகு.

ட்ரிங்..ட்ரிங்..ட்ரிங்..
மோகன்?
யெஸ்..
பிரபு..
என்னடா சொல்லுடா..நாளைக்கு கிரிக்கெட் மாட்சுக்கு வர்றையா?
யு நோ வாட்?
என்னடா?
ஓக்கே சொல்லிட்டா..
வாட்..
ஆமாடா..
பிட்ஸ் போயிருந்தா?
ஆமா..இப்போதான் கால் பண்ணா..
ஐ கெஸ் ஷீ மிஸ்ட் மீ..ஹெல் எ லாட்..
வாவ்..ட்ரீட் எப்போ? உன் கஞ்சப்பிசினாரித்தனத்த எல்லாம் விட்டுட்டு இதுக்காவது ட்ரீட் கொடுடா..அப்பா டாக்டருன்னு தான் பேரு..பையன் மகா கஞ்சன்..
அப்பா மாட்டு டாக்டர் தானடா..
சோ வாட்..உனக்கான மெடிக்கல் பில்லாவது கொறையுதுல?
சரிடா..நான் அப்புறம் பேசறேன்..

எனக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. போர்வைக்குள் புகுந்துகொண்டேன்..மீண்டும் தூக்கம் என்னைத் தழுவிக்கொண்டது..

***

அன்று என் சித்தப்பா வீட்டிற்குப்போனேன். அவரிடம் அப்பா கொடுத்த புத்தகத்தைக்கொடுத்துவிட்டு அப்படியே பிரபுவின் வீட்டுக்கும் போகலாம் என்று நினைத்திருந்தேன். அப்பா நீண்ட நாட்களாக ஏதோ புத்தகம் கேட்டுக்கொண்டிருந்தாராம். அந்தப் புத்தகம் வந்துவிட்டது என்று சொல்லி உள்ளே வந்து எடுத்துக்கொள்ளுமாறு சொன்னார் சித்தப்பா. தன்னால் அதைத் தூக்கமுடியாது என்றும் சொன்னார். உள்ளே போய் பார்த்தபொழுதுதான் தெரிந்தது அது அந்த அறையில் பாதி அளவுக்கு தடிமனாக இருந்தது. இது என்ன புத்தகம் சித்தப்பா என்றேன் நான். இதுவா..இது தான் டெயில்மீகி எழுதிய காட்டெருமையானம். ஓ..எப்படித் தூக்கிப்படிப்பது? இவ்ளோ பெரிசா இருக்கு..ஆமா…அப்படியே கீழ வெச்சுதான் படிக்கனும்..மேலே ஏறிடக்கூடாது..சுத்தி சுத்தி வந்துதான் படிக்கனும்னு சொல்லிட்டு பலமாகச் சிரித்தார்..அப்புறம் என் நண்பர்களைக் கூட்டி வந்து எடுத்துச்செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த விசித்திரமான புத்தகத்தைப் பற்றி நினைத்தவாரே வெளியே வந்தேன்.

பிரபுவின் வீட்டினருகே வண்டியை நிறுத்தி..கதவைத் லேசாகத் தட்டினேன். கதவு தானாகத் திறந்து கொண்டது. உள்ளே…

பிரபுவைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அவனுடைய அம்மா தலைவிரி கோலமாய் அழுதுகொண்டிருக்கிறார். “என்னங்க வேண்டாங்கா..என்னங்க..வேண்டாங்க..” என்று கத்திக்கொண்டேயிருக்கிறார்..

அவனது அப்பா ஒரு மீட்டர் நீளத்துக்கு ஒரு ஊசி வைத்திருக்கிறார்..அண்டா போன்ற ஏதோ ஒரு பானையில் விட்டு அந்த பெரிய ஊசியில் மருந்தை ஏற்றிக்கொள்கிறார்..தூக்கமுடியாமல் தூக்கி கையில் செங்குத்தாகப் பிடித்து லேசாக அமுக்கிப்பார்க்கிறார்..எப்படியும் ஒரு லிட்டர் மருந்தாவது வெளியே வந்திருக்கும்..அதில் சில துளிகள் அழுதுகொண்டிருந்த பிரபுவின் அம்மாமேல் தெரித்தன…அவ்வளவு தான் அவர் மயங்கிச் சரிந்தார்..

பிரபுவின் அப்பா ஊசியைப் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு மெதுவாக நடந்து பிரபுவை நோக்கி வந்தார்..பிரபுவின் முகத்தில் சலனமில்லை..அவள மறந்திடுவேன்னு சொல்லுடா..நெவர்..டாடி..அப்படீன்னா உனக்கு இந்த ஊசிதான்..என்று சொல்லி ஹா ஹா ஹா என்று சிரிக்கிறார்..

அங்கிள் நிறுத்துங்க உங்க அராஜகத்த..நான் உள்ளே பாய்கிறேன்..அவன் என்ன தப்பு செஞ்சான்..காதலிக்கிறது குத்தமா..மோகன்..இது எல்லாத்துக்கும் நீதான்..காரணமா..வா இங்க..உனக்குத்தான் முதல்ல ஊசி போடணும்..பரவாயில்ல போடுங்க என்கிறேன் நான். சட்டைய கொஞ்சம் எறக்கிவிடுப்பா..லெ·ப்ட் ஆர்மில ஏதும் சமீபத்தில ஊசி போட்டியா?இல்ல அங்கிள்..ஏன்னா இது டைனோசர்களுக்குப்போடற இன்ஜக்சன்..கொஞ்சம் வீக்கம் இருக்கும்..அறுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி தீடீர்னு அவை அழிய ஆரம்பிச்சப்போ நாங்க அவைகள பாதுகாத்து வெக்க இந்த இன்ஜக்சன் தான் போட்டோம்..அப்படியா..என்னது டைனோசருக்குப் போடற இன்ஜக்சனா…

மணி ஏழாச்சுடா….எழுந்திருடா..இந்தா டீ..

***

ஆறு மாதங்கள் கழித்து.

பாலாஜிநகர். திபகு.

She’s a good hearted woman in love with a good timing man
She loves him in spite of his ways she don’t understand

கடுமையான வெயில் வெளியே. ·பேனிலிருந்து வரும் காத்து மேலும் வெப்பத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது. என் சிடிமேனில் ஜென்னிங்கஸ். இது மட்டுமே ஒரே ஆறுதல். ஜெ·ப்ரி ஆர்ச்சர் இருந்தால் கிரிக்கெட் இல்லாத கடுமையான மதியப்பொழுதையும் எளிதாகக் கடந்து விடலாம். ·பர்ஸ்ட் அமங் ஈக்குவள்ஸ்.எனக்கு மதியவேளைகளில் தூங்கப்பிடிக்காது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை மதியம். சாப்பிட்டப்பிறகு எல்லோரும்-டீவி முதற்கொண்டு- தூங்கிக்கொண்டிருக்கையில் ப்ளூஸ¤ம் அழகான ஒரு நாவலும் இனிமைதரக்கூடியது. தூங்கினால் மதியப்பொழுது சட்டென ஓடிவிடும். சாயங்காலம் வெறுமையே மிஞ்சும்.

With teardrops & laughter they pass through this world hand in hand
A good hearted woman, lovin’ a good timin’ man

நிழல் தென்படவே திரும்பிப்பார்த்தேன்..பிரபு. இயர்·போனை கழட்டி “வாடா..” என்றேன்.
பயல் நிறைய மாறியிருக்கிறான். முன்பெல்லாம் எப்பொழுதும் ஒரு கட்டம் போட்ட சட்டை போட்டுக்கொண்டிருப்பான்..இப்ப என்னடான்னா ஜீன்ஸ் சர்ட்..ஜீன்ஸ் பேண்ட்..ம்ம்ம்ம்..கலக்குற பிரபு..

என்னடா புதுசா ஜீன்ச் சர்ட்?
ம்ம்ம்..அவ ப்ரசண்ட்..
ஒ..ஒ..ஓஓஓஓஓஓஓஓ…
கோயிலுக்குப் போயிருந்தோம்..
அடப்பாவி..நல்லாத்தானடா இருந்த?
பர்த்டே டா..
ஓ..வாவ்..ஏதும் கி·ப்ட் வாங்கிக்கொடுத்தியா?
டேய் நீயெல்லாம் ·ரண்டாடா? எனக்கு பர்த்டே டா..
அடப்பாவி..சரி…ஈவினிங் எங்க போகலாம்?
ம்ம்ம்..
மொறைக்காதடா..சரி போனாப்போவுது..ஹேப்பிபர்த்டே..
ம்ம்..
சட்டையெல்லாம் வாங்கிக்கொடுத்திருக்கா..ம்ம்ம்ம்..நடக்கட்டும் நடக்கட்டும்..

நீ என்னடா வாங்கிக்கொடுத்த..
ம்ம்..ஒன்னும் வாங்கிக்கொடுக்கல..
கஞ்சப்பிசினாரி..ஏதாவது வாங்கிக்கொடுக்கறது தான?
..
சீடிமேனை எடுத்து காதில் வைத்துக்கொண்டான்.

என்னடா..ஜெ·ப்ரி ஆர்ச்சர விட்டா உனக்கு பொழப்பே கெடையாதா?
அயன் ரான்ட் படிக்கிறயா?
ஐயோ ஆளவிடு சாமி..

ஒரே நிமிடத்தில் சீடிமேனைத் திறந்து ஜென்னிங்ஸை தூக்கி எறிந்து விட்டு..என் சீடி ரேக்கில் தேடி..ஷெரில் க்ரோவை எடுத்துப் போட்டான்..கண்களை மூடிப் படுத்தான்.. நான் ஜெ·ப்ரி ஆர்ச்சருக்குத் திரும்பினேன்..

***

அய்யனார் இன்ஜினியரிங் காலேஜ்.

டேய் பாப்பையா..
பாப்பையாவா? யாருடா அது? முன் பெஞ்சிலிருந்து மின்னல் கேட்டான்.
கெழவி மூடிட்டு வேலையப்பாருன்னு சைகை காமிச்சான்..மின்னல் பின்னால் திரும்பிய வேகத்தில் மீண்டும் முன்னால் திரும்பிக்கொண்டான்..
டேய் பாப்பையா..எத்தன் நாளைக்குத் தான்டா வனிதாவ இப்படியே பாத்திட்டிருப்ப..அவ கிட்ட போய் சொல்றதுதான?
ஒன்றும் பேசாமல் அன்பு உட்கார்ந்திருந்தான்.
கெழவி என்னைப்பார்த்தான்..டேய் மாமா நம்ம ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..
ஆமாடா..ஒருத்தன நிம்மதியா இருக்கவிடாதீங்க..
டேய் உனக்கு என்னடா ஆச்சு..நீ எவளுக்காவது நூல் விட்டிட்டிருக்கியா..
உனக்குத்தெரியாதா..ட்ரான்ஸ்மீட்டர் மண்டையன் இங்கிருந்து சிக்னல் விடறத பாத்ததில்லையா?
ப்ரதீப் கொஞ்சம் வாய மூடறையா?
ஆமாடா சிக்னல் விடறாய்ங்களாம்..நூல் விடறாய்ங்களாம்..மூஞ்சிகளப் பாரு..நம்ம டிங்கிரித்தலையன் மாதிரி இருக்கனும்டா..பாரு திருவிழால காணமப்போன செந்தில் மாதிரி இருந்திட்டு பிட்ஸ் பொண்ண பிடிச்சிருக்கான் பாத்தியா..ஒரே லெட்டர்ஸ்தான் போ..இங்கிருந்து அங்க..அங்கிருந்து இங்க..ம்ம்ம்..
டேய் டிங்கிரித்தலையனுக்கு செந்தில்ங்கற பேருகூட நல்லாருக்குடா..அவனும் செந்தில் மாதிரித்தான அண்ணே அண்ணேன்னு சொல்றான்..
டேய் மாண்டி (சைகை செய்கிறான்) (எழுதமுடியாது)..

(இப்பொழுதிலிருந்து டிங்கிரித்தலையனனான நம்ம பிரபு, செந்தில் ஆகிறார்)

***

அண்ணா பூங்கா. திருநகர். தீபாவளி.
க்ரிக்கெட் ஆட்டம்.

நான் கோட்டைச்சுவற்றின் மேல் உட்கார்ந்திருந்தேன். மணி பின் மதியம் 4 இருக்கும். பைப்பில் தண்ணி பிடிக்கச்சென்ற ப்ரசாத் வந்துவிட்டான்.

என்னடா மோகன்? அவுட்டா?
ம்ம்..
ஓ..ஹரிஷ் பவுலிங்கா?

(மேட்ச் பத்தி எழுதி இன்னும் மொக்க போட விரும்பல)

மேட்ச் முடிந்தது. கோட்டைச்சுவற்றின் மேல் உட்கார்ந்து டாப் ஆரம்பமாகியது. மணி ஆறு. கோயிலில் கூட்டம் வரத்தொடங்கியது.

அப்புறம் ஹரிஷ் மாப்ள..பிட்ஸ்ல பொண்ணுங்கல்லாம் எப்படி?
ம்ம்.. ***!@#@#$#$
ஓ அப்படியா..
அப்படியே!@#$#@%$%^5
ம்ம்ம்ம்…அப்படியா?
சாரதி வாய மூடுடா..கொசு உள்ள போய்டப்போவுது..
டேய் மாம்ஸ் உன் ஆளுடா..
ப்ரசாத் எழுந்து ஜீன்ஸ் பேண்ட்டைத் தட்டிவிட்டுக்கொண்டு மெதுவாக கோயிலை நோக்கி நடக்கிறான்..
டேய் ப்ரசாத் பாத்துடா..எம் எல் ஏவுக்கு தெரிஞ்சது கண்டம் தான்டி..
இவளுக எல்லாம் என்னடா..பிட்ஸ் வந்து பாக்கனுமே..
என்ன ஓட்டகம் மாதிரி இருக்குங்களா?
டேய் அய்யனார் காலெஜில படிக்கிற ஆயனார்..உனக்கு என்னடா தெரியும் பிட்ஸப்பத்தி?
பெரிய அமெரிக்காவுல படிக்கிற மாதிரி பிலிம் காட்டுற..ராஜஸ்தான்லதான படிக்கிற..
அது ராஜஸ்தான் இல்லடா..பாலைவனத்தில இருக்கிற நியுயார்க்..
அள்ளிவிடறான்..உங்க பிட்ஸ் பொண்ணு ஒன்னு அய்யனார் காலேஜ் ஆயனார் கைல தெரியுமா?
என்னது பிட்ஸ் பொண்ணா? யாருடா அது?
உங்க ஸ்கூல் தான் மச்சி..டீவிஎஸ்..
டிவிஎஸ்ஸா?
பேரு..
பேரு? பொறு..சுபத்ரா..
சுபத்ராவா? டீவிஎஸ்? எந்த வருஷம் முடிச்சா?
நம்ம செட் தான்டா..
நம்ம செட்டா? சான்ஸே இல்ல..எனக்குத் தெரியாம எப்படி?
ஆமா இவருதான் ராஜஸ்தான் காஸ்நோவா..எல்லா பொண்ணுங்களும் இவரு மடில வந்து விழுதுங்க..நிறுத்துடா..
டேய் டுபுக்கு..மதுரைலருந்து ராஜஸ்தான் போறோம்..மொத்தம் எத்தனை பேரு இருப்போம்…ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம எப்படி இருக்கும்?
ம்ம்ம்..
சரி என்ன மேஜர்..?
தெரியலையே..கேட்டுச்சொல்றேன்..
சரி..நானும் விசாரிக்கிறேன்..

கொசுத்தொல்ல ஜாஸ்தி ஆயிடுச்சு..கிளம்பலாமா? சூப்பு கடைக்குப்போலாம்..

***

பாலஜி நகர்.

When you’re down and troubled
and you need a helping hand..

கரோல் கிங்.நாளைக்கு எல் ஐ சி ப்ராக்ட்டிக்கல்ஸ். எனக்கு பிடிக்காத ஒரே லேப். எல் ஐ சி. ஐ ஹேட் ப்ரட் போர்ட்ஸ். தே ஆர் ஸ்டுபிட்.அரைமணிநேரம் கனெக்ஷன் கொடுத்துவிட்டு..கடைசில செக் பண்ணினா..ஒன்னும் நடக்காது..நோ பவர் அவுட்..ஏன்னா ப்ரட்போர்ட் வேலைசெய்யாததா இருக்கும்..

close your eyes and think of me
and soon I will be there
to brighten up even your darkest night.

டேய் எழுந்திருடா..தூங்கவா வந்த? பிரபுவுக்கு ஒரு உதை விட்டேன்..

Winter, spring, summer or fall,
all you got to do is call
and I’ll be there yeah yeah yeah
you’ve got a friend.

என்னடா ஆச்சு? ஏதும் பிரச்சனையா? நானும் வந்ததிலருந்து பார்த்திட்டிருக்கேன்..மூஞ்சியத்தொங்கப்போட்டிட்டு இருக்க?

you’ve got a friend, you’ve got a friend yeah,
ain’t it good to know you’ve got a friend
ain’t it good to know you’ve got a friend
Oh yeah yeah, you’ve got a friend.

அம்மா நேத்திக்கு அவ லெட்டரப்பாத்திட்டாங்க.
வாட்? அவங்ககிட்ட ஏன் காட்டின?
டேய்..பேண்ட் பாக்கெட்டில இருந்து எடுத்திட்டாங்க..
எனிவே என்னைக்கினாலும் பாக்கத்தான வேணும்..
..
..
என்ன சொன்னாங்க?
ஜஸ்ட் ப்ரண்டுன்னு சொல்லிருக்கேன்..
நம்பிட்டாங்களா?
ஆமா..இப்போதைக்கு..ஆனா அப்பாகிட்ட சொல்லிடுவாங்களோன்னு பயமாருக்கு..
என்னது நீ பயப்படறியா? திருட்டுமுழி முழிச்சுக்கிட்டு எல்லா திருட்டுத்தனமும் தெளிவா பண்ணுவியே..சும்மாவா உனக்கு செந்தில்னு பேரு வெச்சாய்ங்க..
டேய் நீயுமா..நானே சோகத்தில இருக்கேன்..
..

சரி வா கீழ போய் பசங்க இருந்தா ஒரு கேமப்போட்டுட்டு வரலாம்..ச்சியர் அப் மேன்..

You can’t talk to a man
When he don’t want to understand
No, no, no, no, no, no

***

அய்யனார் காலேஜ்.

டேய் மாமா..
என்னடா?
உன் கிட்ட வெர்ச்சுவல் ரியாலிடி பத்தின பேப்பர் இருக்குல?
ஆமா..
அத எந்த காலேஜ்ஜுக்கு போட்டாலும் செலக்ட் ஆகுதா?
100%..
சரி அப்படீன்னா கொடு..நான் பிட்ஸ¤க்குப் போடப்போறேன்..
வாட்? ரியலி?
யெஸ்..
நீயும் யாரும்?
ஆனந்த்..
ஓக்கே..வித் ப்ளஷர்..நாளைக்கு ப்ரிண்ட் அவுட் கொடுக்கறேன்..
சா·ப்ட் காப்பி கொடு..அப்படியே பிபிடியும் கொடு..
சரி..
செலெக்ட் ஆயிடும்லடா?
ஸ்யூர்..உன் ஆள நீ பாக்கலாம்..டோன்ட் ஒரி..

***

பாலாஜி நகர். திபகு.

ட்ரிங்..ட்ரிங்..
ஹலோ..யாரு?
டேய் அன்பு பேசறேன்டா
என்னடா பண்ற?
சுபா உன் ·போன் நம்பர் என்கிட்ட கேட்டுவாங்கினா..
வாட்?
யெஸ்..கால் பண்ணாளா?
ஸ்டுபிட் ·போனவைடா..
(அவன் வைப்பதற்குள் நான் வைத்துவிட்டேன்)

I feel the earth move under my feet
I feel the sky tumbling down
I feel my heart start to trembling

(போனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன்)
(மணி ஒன்பது)
(எதுக்கு நமக்கு கால் பண்றா?)
..
ஒன்பதரை.
பக்கத்தில் கிடந்த ஹோம் ஜோர்னலை எடுத்துப்புரட்டினேன். வீடே அமைதியாக இருந்தது. ம்யூசிக் சிஸ்டம் தவிர. எல்லோரும் தூங்குவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தனர்.

பத்து.
(கையிலே கார்ட்லெஸ்ஸை எடுத்துக்கொண்டு பாத்ரூம் போனேன்)

Doesn’t anybody stay in one place anymore?
It would be so fine to see your face at my door..

பத்தரை. நார்வேஜியன் வுட் படித்துக்கொண்டே..தூங்கியிருக்கிறேன்..

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
அடித்துப்பிடித்து எழுந்தேன்..
ஹலோ..
டேய்..
பாப்பையா?
ஆமாடா டுபுக்கு..கால் பண்ணாளா?
உன் மூஞ்சி..கிழிச்சா..
அப்படீன்னா கால் பண்ணலையா?
என்ன தெலுங்கிலையா சொன்னேன்?
பெறகு எதுக்கு நம்பர் வாங்கினா?
ம்ம்..வெலை ஏறும் போது விக்கிறதுக்கா இருக்கும்..
ஹாஹாஹா..
?!

***

அய்யனார் இன்ஜினியரிங் காலேஜ்.
காண்டீன்.
மிளகாய் பஜ்ஜி. முட்டை போண்டா. சூடான டீ சகிதம் டாப் ஆரம்பமாகியது.

ஆனந்த்..அவளப்பாத்தியா இல்லியா?
யாரடா?
டேய் நீங்க பிட்ஸ் பிலானிக்கு போனீங்களா இல்லியா?
ஓ…நம்ப டிங்கிரித்தலையனோட ஆள கேக்கறீங்களா?
ம்ம்..அதேதான்…
டேய் அவன் பேர காந்தி செத்தப்பவே செந்தில்னு மாத்தி கெஜட்ல கூட ரெஜிஸ்டர் பண்ணியாச்சு..
ஓகே…நம்ம செந்திலோட ஆள பாத்தியா பாக்கலையா?
பாத்தேன்..
பாத்தியா?
பேசுனியா?
இல்ல முகத்த திருப்பிக்கிட்டு வந்திட்டேன்..
க்ர்ர்..
பேசுனேன்டா..அவங்க ரெண்டு பேரும் சுத்திட்டிருந்ததால நான் பெருசா எதுவும் பேசிக்கல..என்ஜாய் பண்ணட்டும்னு விட்டுட்டேன்..
என்னது நம்ம ஜாயும் வந்திருந்தாளா?
இவெனொருத்தன் ஜாய் ஜாய்ன்னுட்டு..

***

ஏன்டா டுபுக்கு..
(என்னயத்தான் கூப்பிடறான் கெழவி)
என்னடா *!$#%
கோச்சுக்காதடா செல்லம்..
ம்ம்.அது..
சரி நம்ம செந்தில் ஏதேதோ சொல்றான்..
என்ன சொல்றான்..
இவிங்க பிட்ஸ் போயிருந்தப்போ..அமெரிக்கன் பை படம் போட்டாய்ங்களாம்..
இவிங்க சினிமா தியேட்டருக்குப் போனாய்ங்களா இல்ல பிட்ஸ் போனாய்ங்களா?
டேய் அது என்ன அய்யனார் காலேஜ்னு நெனச்சியா? அங்க வாரா வாரம் படம் போடுவாய்ங்களாம்..எல்லோரும் ஒன்னா உக்காந்து பாப்பாங்களாம்..
ம்ம் அதுக்கு?
அமெரிக்கன் பை பாத்திருக்கியாடா?
ஓ எஸ்..
அதுல சீன் வருமாமே?
ஓ..ஆமா…
படம் பாக்கும் போது..அந்தப் பொண்ணும் கூட உட்கார்ந்திருச்சாம்….

***

அய்யனார் காலேஜ். அஜைல் கைஸ் ஹாஸ்டல். லெ·ப்ட் விங். 14வது மாடி.
கொஞ்ச நாளைக்கு முன்ன..

செந்தில்: நான் தான் ஏற்கனவே அந்தப்படம் பாத்திருக்கேனே..
கெழவி: அமெரிக்கன் பை? எத்தனாவது பார்ட் மேன்?
அல்லக்கை கும்பல்: டேய் கெழவி..அதுவா முக்கியம்..மூடிட்டு கதயக் கேளுடா..
செந்தில்:எங்க உட்டேன்..ம்ம்ம்..அதனால அந்த சீன் வர்றதுக்கு முன்னாலயே எனக்கு என்னவோ மாதிரி ஆகிடுச்சு..பக்கத்தில இவ வேற உட்காந்திருக்காளா?
அ.கு: ஓ..ஓ..ஓ..ஓஓ
செந்தில்: எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல..
அ.கு: என்னது தெரியலையா? டேய்..எத்தன படம் பாத்திருக்க?
செந்தில்: டேய்..நானும் அவளும் லவ்வர்ஸ் டா..ச்சீ…ச்சீ..எனக்கு அப்படியெல்லாம் தோணவேயில்ல..
அ.கு: நம்பிட்டோம் நம்பிட்டோம்..

***

பிட்ஸ் பிலானி. ராஜஸ்தான்.
ஓபன் ஹவுஸ் தியேட்டர்.
இன்னும் கொஞ்ச நாளைக்கு முன்ன..
ஒரு மயக்கும் மாலைப்பொழுது..

அமெரிக்கன் பை திரையில் ஓடிக்கொண்டிருந்தது. சுபாவும் (ஷிட் மேன்..நாட் சுபா..)ஓகே..·ப்ரம் ·பர்ஸ்ட்..சுபத்ராவும் நம்ம செந்திலும் பக்கத்துப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தனர்.தமிழ் படம் பார்த்தே வளர்ந்திருந்த நம்ம செந்தில் ஒரு டிஸ்டண்ட் கீப்பப் பண்ணினான். ஆனாலும் அவளுடைய Cologneயின் மனமும் கேஷத்தின் மனமும் அவனை மொத்தமாகத் தாக்கின.

சுபத்ரா..
ம்ம்..
சுபத்ரா..
ம்ம்..
நான் நாளைக்கு கிளம்பிடுவேன்..
ம்ம்..ஆமா..
..
..
அப்பா அம்மா கிட்ட பேசிட்டியா..
இன்னும் இல்ல..
எப்போ பேசப்போற?

(ஒரு மின்னல் அவனது தலையை மட்டும் தாக்குகிறது..அவனுக்கு சட்டென்று ஞாபகம் வருகிறது..படத்தில் இன்னும் சிறிது நேரத்தில்..ஐயகோ ஒரு தமிழ் பெண் அதுவும் கல்யாணம் ஆகாத தமிழ்ப்பெண் இதப்பாக்கலாமா..ஐயோ..அவன் மனம் பதறுகிறது..துடிக்கிறது..)

சுபத்ரா..ம்ம்..அசைன்மெண்ட் முடிக்கனும்னு சொன்னேல..
பரவாயில்ல..அப்புறம் பாத்துக்கலாம்..
கெளம்பு..கெளம்பு…கெளம்புப்பா..
(நேரம் ஓடுகிறது)
பரவாயில்ல..
கெளம்புன்னு சொல்றேன்ல..
பரவாயில்..
இப்போ கெளம்புறியா இல்லியா?
(மயான அமைதி..தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்)
செந்திலின் திருட்டு முழி ரத்தச் சிவப்பாக மாறுகிறது..
பாட்ஷாவப்பாத்த பாட்ஷாவின் ஸ்டெப் தம்பி போல சுபத்ரா மிரண்டு போகிறாள்..

***

பேக் டு அய்யனார்..லெ·ப்ட் விங்..

அ.கு: அப்புறம் என்னடா ஆச்சு..?
செந்தில்: என்ன பண்ணுவா..பயந்து போயிட்டா..பேசாம எழுந்து போயிட்டா..
அ.கு: ச்சு..ச்சு..
செந்தில்: அப்புறம் சமாதானப்படுத்த வேண்டியதாப்போச்சு..

***

பேக் டு..

சோ?
என்னடா சோ? அவன் சொன்னது நம்புறமாதிரியா இருக்கு?
நம்பாத கெழவி. உன்ன யாரு நம்பச்சொன்னா?
அவன் ஏதோ பொய் சொல்றமாதிரி இருக்குடா..
மாஸ்டர் ஆம்லேட்..
டேய் அதில்லடா..படம் பாத்தாங்களாம்..சீன் வந்துச்சாம்..எழுந்து போகச்சொன்னாராம்..
ம்ம்..
இவனும் தானடா எழுந்து போயிருக்கனும்? அப்புறம் என்ன சொல்லி சமாதானப்படுத்துவான்..அசிங்கமான சீன் வந்துச்சு..நீ பாக்கக்கூடாது..ஆனா நான் பாக்கலாம்னா?
யு ஹேவ் எ பாயிண்ட்..

***

டிசம்பர் குளிர். திருநகர். ரெண்டாம் ஷோ படம் பாத்திட்டு பைக்ல வரும்போது திபகு பைபாஸ்ல வண்டிய நிறுத்திட்டு சுக்கு டீ சொன்னோம்.

ஹரிஷ்..நான் சொன்னத விசாரிச்சியா?
எதுடா மாப்ள?
சுபத்ரான்னு ஒரு பொண்ணு..பிட்ஸ்ல படிக்குதுன்னு..
ஓ..அதுவா..அப்படியெல்லாம் யாரும் கெடையாதுடா..
விசாரிச்சியா? இல்லியா?
விசாரிச்சேன் மாப்ள..ஆனா காலேஜ்ல வேற பேரு கொடுத்திருக்கலாம்..தெரியல..
ம்ம்..
ஆனா எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் மதுரையில இருந்து போகல..

சுக்கு காப்பியின் மணம் நாசியைத் துளைத்தது.

***

நான் காலேஜுக்கு லேட்.

டேய்..மண்டையா..
என்னடா?
மேட்டர் தெரியுமா?
என்ன?
டிங்கிரித்தலையன் GMATல எவ்வளவு மார்க்குன்னு?
எவ்வளவுடா செந்தில்?
790..
வாவ்..வொண்டர்·புல்..எப்படிடா?
கங்கிராஜுலேசன்ஸ்டா மாப்ள..
ட்ரீட் எப்போ?
சிரிக்காதடா..இதுக்காவது ட்ரீட் வைடா..

***

பாலாஜிநகர். இரவு மணி பத்து. பால் ஆறிக்கொண்டிருந்தது.
எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய காஸநோவா 99 படித்துக்கொண்டிருந்தேன். சீடிமேனில் மைல்ஸ் டேவிஸ்.

டிரிங்..டிரிங்..
ஹலோ..
ஹலோ..அன்பா?
ம்ம்..
என்னடா பண்ற?
சும்மா உட்கார்ந்திருந்தேன்..செமஸ்டர் லீவு முடிஞ்சிருச்சு..திங்கட்கிழமை மறுபடியும் காலேஜ்..கடைசி செமஸ்டர்..
ம்ம்..ஆமா..என்ன நியூஸா வாசிக்கிற? எனக்குத் தெரியாதா?
ம்ம்ம்..(பெருமூச்சு)
என்னடா?
ஒன்னுமில்லடா..
ம்ம்..சரி.
காலேஜ் வரவே விருப்பமில்லடா..
ஏண்டா? இப்போ என்ன ஆச்சுன்னு சொல்லப்போறியா இல்லயா?
கடைசியா..அவளுக்கு கால் பண்ணிட்டேன்..
வாட்? என்னடா சொல்ற? எப்போ?
நேத்து..நியூ இயர்க்கு விஷ் பண்றமாதிரி கால் பண்ணலாம்னு ரொம்ப நாளா ப்ளான் பண்ணியிருந்தேன்..
சொல்லவேயில்ல..
பிறகு எதுக்கு உன் கிட்ட ·போன் நம்பர் வாங்கித்தரச்சொன்னேன்..
ஐ டின்ட் டேக் யூ சீரியஸ்..
ம்ம்..அதான் பிரச்சனை..
என்ன சொன்னா?

என்னடா சொன்னா?

***

சிவகாசி. நேத்து..

அன்புவின் கைகள் நடுங்குகின்றன. கஷ்டப்பட்டு நம்பர்களை டயல் செய்கிறான்.இதயம் அதிவேகமாகத் துடித்தது. மன்னித்துவிடுங்கள்..நிலைமையின் தீவிரத்தை பிறகு எப்படித்தான் சொல்லுவது..மூளை மிக வேகமாகத் துடித்தது என்றால் யூ வில் நெவர் கெட் இட்..மூனரை வருஷம்..அவளையே பாத்திட்டு இருந்திட்டு..பசங்க ஓட்றதயெல்லாம் தாங்கிட்டு..கொஞ்சம் கொஞ்சமா தைரியம் வரவழைத்து அவளுடைய நம்பரைத் தேடிக்கண்டுபிடித்து..மீண்டும் தைரியத்தை திரட்டி..அவளுடைய வீட்டுக்கு போன் செய்வது என்றால் சும்மாவா? வீட்டில் வேறு யாரவது எடுத்தால் சிக்கல்..மீண்டும் கால் செய்ய வேண்டும்..சந்தேகம் வரும்..

உள்ளங்கை வேர்வையில் நனைந்தது. அவன் கையில் பிடித்திருந்த ரிசீவர் வழுக்கிக் கீழே விழுந்துவிடக்கூடும் என அவன் பயந்தான். ஒரு ரிங் அடிப்பது ஒரு யுகம் போல இருந்தது.

ரிங்..ரிங்..ரிங்..
க்ளிக்..
(இதயம் வெளியே வந்துவிடும் போல இருக்கிறது)
ஹலோ..
(இவன் மௌனமாக இருக்கிறான்)
ஹலோ..யாரு..
(மூச்சுகூட விடவில்லை)
அன்புவா?
(விக்கித்துப்போகிறான்)
ப்ளீஸ் ·போன வெச்சுடுங்க..dont call me ever again. ever.
க்ளிக்.
பீப்..பீப்..பீப்..பீப்…பீப்.

ரிசீவர் நழுவி கீழே விழுந்தது. பீப்..பீப்…பீப்..

***

இன்னைக்கு.

அவளுக்கு எப்படித் தெரிஞ்சது நீதான் கால் பண்ணேன்னு?
அமாடா..காலேஜ் பூராம் என்னையும் அவளையும் சேத்து வெச்சு ஓட்டுங்க..அப்புறம் அவளுக்குத் தெரியாதா?
ம்ம்..இருந்தாலும் எப்படிக்கண்டுபிடிச்சா?
ம்ம்ச்சு..
சரி சரி..வருத்தப்படாதடா..
(பதிலில்லை)
டேய் அன்பு..
(மௌனம்)
டேய்..
இருந்தா டிங்கிரித்தலையன் மாதிரி இருக்கனும்டா..(மூக்கு உறிஞ்சும் சத்தம்)
டேய்..அழறியா?
நோ.நெவர்.
டேய்..
க்ளிக்…

பீப்…பீப்…பீப்

என்னுடைய சீடிமேனில் மைல்ஸ் டேவிஸின் சோ வாட் ஓடிக்கொண்டிருந்தது..காஸ்நோவாவை மூடிவைத்தேன்.

***

காலேஜுக்கு லேட்.

கெழவி: மாமா நியூஸ் தெரியுமா?
என்னடா?
டிங்கிரித்தலையன் மாட்டிக்கிட்டாண்டா..
என்ன?
அவன் இல்லாத நேரத்தில பொட்டியத் தொறந்திட்டாய்ங்க..
தொறந்து?
எல்லா லெட்டர்ஸையும் எடுத்திட்டாய்ங்க..
வாட்?
ம்ம்..அவ எழுதினதாச் சொல்ற லெட்டர்ஸ் எல்லாத்தையும்..
வாட்? அவ எழுதினதாச் சொல்றதா? புரியல..
ஆமாடா..எல்லா லெட்டர்ஸ¤ம் மதுரைல தான் போஸ்ட் செஞ்சிருக்காங்க..பிட்ஸ்லருந்து ஒரு லெட்டர் கூட இல்ல..
வாட்?
ஆமா..கேட்டா அவ மதுரைக்கு வந்த போது போட்ட லெட்டர்ஸ்னு சொல்றான்..தேதி பாத்தா எல்லாமே செமஸ்டர் டைம்ல இருக்கு..பிட்ஸ்லருந்து வாரா வாரமா வருவாங்க?
சோ?
என்ன சோ? வர்றான்.. வர்றான்..அந்துட்டாருப்பா…

அ.கு1: கண்ணிப்பெண்கள் நெஞ்சுக்குள்
அ.கு2: பீதியக்கெளப்பிப் போனவன்
அ.கு1: பத்துப்பேர்கள் மத்தியில்
அ.கு2: படுகேவலமா உள்ளவன்
அ.கு1:அழுகுச்சட்டை போட்டாலும்
அ.கு2:அழுக்காய்த் தெரியும் ஆணழகன்
அ.கு1: பெண்ணின் பின்னால் சுற்றிசுற்றி
அ.கு2: பெண்ணைத் தலைதெரிக்க ஓடவைக்கும் பேரழகன் எவனோ
அ.கு1 & அ.கு2: அவனே டிங்கிரித்தலையன்..டிங்கிரித்தலையன்..

காதல் மன்னன் ஒன்றுமே பேசவில்லை. இடத்தில் சென்று அமர்ந்துகொண்டான்.

***

என்னடா சொல்ற?
ம்ம்..சத்தியமா மாப்ள.
நீ செண்டருக்குப் போனியா?
ஆமா சத்தியமா நான் செண்டருக்குப்போனேன்..சென்னையில எங்க வீட்டுக்குப்பக்கத்தில தான் இருக்கு..
நான் GMAT எழுதினவங்க லிஸ்ட் பாத்தேன் மாப்ள..இவன் பேரு இல்ல..
வை ஸ¤ட் ஹீ லை?
ஐ டோன்ட் நோ..ஆஸ்க் யுவர் ·ப்ரண்ட்..

***

பாலாஜிநகர். என் வீடு.

என்னடா வேணும் இவிங்களுக்கு?
..
நான் லவ் பண்ணா என்ன? லவ் பண்ணாட்டி போனா இவிங்களுக்கு என்ன?

GMAT எழுதினா என்ன? எழுதாட்டி என்ன?

இவங்க அப்பா எனக்கு ·பீஸ்கட்டப்போறாரா?

சொல்லுடா? நான் லவ் பண்ணா பண்ணலைன்றாய்ங்க..GMAT எழுதினா எழுதலைன்றாய்ங்க..
..
(சட்டைப் பையிலிருந்து ஒரு கம்ப்யூட்டரைஸ்ட் ஸ்லிப் ஒன்றை எடுத்து தூக்கிப்போட்டான்)
பாரு..GMAT மார்க்ஷீட்..மார்க் போட்டிருக்கா..செண்டர் பேரு போட்டிருக்கா..
ம்ம்..
சொல்லு உன் ·ப்ரண்ட்ஸ் கிட்டப்போய் சொல்லு..டூர் போறீங்கல்ல..அங்க சொல்லு..
உக்காருடா மாப்ள..
வேண்டாம்..நான் போறேன்..
உக்காருடா..அம்மா..டீ..
..
சோ நீ டூருக்கு வரலை?
எப்படிடா வரச்சொல்ற? நான் செய்றதெல்லாம் பொய்..நான் ஒரு சைக்கோன்னு சொல்ற இவிங்ககூடயா? நெவர்..நான் போறேன்…

***

ஸ்ரீகாந்த் உனக்கென்னடா கோபம் பிரபு மேல?
எனக்கென்ன கோபம்?
ஏன் அவன் GMAT எழுதலன்னு சொல்ற?
நான் சொல்லலடா..ரெக்கார்ட் சொல்லுது..ஐ சா த ரெக்கார்ட் மைசெல்·ப்..
அவன் அவனோட மார்க்ஷீட் காமிச்சான்..நீ சொல்ற செண்டர் தான் அது..எதையும் ஒழுங்காப் பாக்காம செய்யாம..சொல்லாதடா..
வெயிட்..
(உள்ளே சென்று எதோ ஒரு ·பைலைத் தூக்கிக்கொண்டு வருகிறான்.)
இதோ இது என்னோட மார்க்ஷீட்..நானும் அதே செண்டரில அவன் எழுதின அதே நாள் தான் எழுதினேன்..இது என்னோட மார்க் ஷீட்..இப்படியா இருந்தது..அவன் காமிச்சது..
நோ..டெ·பனிட்லி நாட்..
பின்ன?

***

டேய் மாத்ருபூதம்..உண்மையச்சொல்லு..
என்னடா?
அன்னிக்கு டிங்கிரித்தலையன் கூட மதுரைல எஸ் எஸ் ஐக்கு போனியா?
என்னைக்கு?
டேய்..
ஆமாட போனேன்..
அவன் கிரிட்டிங்ஸ் கார்ட் கொடுத்தானா?
சொல்லுடா..கொடுத்தானா?
இல்ல..கொடுக்கல..
வாட்? அன்னைக்கு கொடுத்தான்னு சொன்ன?
அப்படியா சொன்னேன்?
அவன் அன்னைக்குப் பேசினானா அவளோட?
இல்ல..
வாட்?
இல்லடா..தூரத்தில நின்னு அவதான்னு காமிச்சான் அவ்ளோதான்..
அவ்ளோதானா?
அவ்ளோதான்..
பின்ன எதுக்கு என்கிட்ட அப்படி சொன்ன?
அவன் தான் மோகன் கேட்டா க்ரீட்டிங்கஸ் கார்டு கொடுத்திட்டேன்னு சொல்லுன்னான்..
வாட்?
ஆனா அப்புறம் உங்கிட்ட உண்மையச் சொல்லனும்னு நினைச்சேன்.. அதுக்கப்புறம் மறந்தே போச்சுடா..

***

ஹலோ..
அன்பு?
மோகனா?
ம்ம்..ஆனந்த் நம்பருக்கு கான்·பரன்ஸ் போடுடா..
ரிங்..ரிங்..ரிங்..
ஹலோ..யாரு..
அன்பு டா..மோகனும் லைன்ல இருக்கான்..
வாட்? மோகனா? மோகன் எப்படிடா இருக்க?
ராஸ்கல்..வந்தேன் அடிச்சு பல்லகில்லஎல்லாம் உடைச்சுப்போடுவேன்..
என்னடா மாப்ள?
மோகன் என்னடா ஆச்சு?
யூ சட் த **** அப் அன்பு..
ஆனந்த்..கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு..
என்னடா.. கேளு..
பிட்ஸ் பிலானில டிங்கிரித்தலையனோட ஆள பாத்தியா பாக்கலையா?
பாத்தேன்னு சொன்னேனேடா..
எனக்கு எல்லாம் தெரியும்..மவனே பொய் சொன்ன கொன்னேபோட்டுடுவேன்..காலேஜுக்கு வரனுமில்ல?
இல்ல..
சொல்லுடா..
என்னைய என்னடா பண்ணச்சொல்ற? அவன் அப்படித்தான் சொல்லச்சொன்னான்..
வாட்?
ம்ம்..ரெண்டு நாள் தான் இருந்தோம்..அவள இவன் பாக்கவே போகல..
..
இன் ·பேக்ட்… பேப்பர் ப்ரசண்டேஷனுக்குக் கூட இவன் ரூமவிட்டு வெளில வரல..
ஷிட்..
நான் மட்டும்தான் ப்ரசண்ட் பண்ணினேன்..

அப்போதான்..அவளப்பாக்கப்போனதா என்கிட்ட சொன்னான்..
..
என்னையும் இன்ட்ரொடியூஸ் பண்ணிவைடான்னு சொன்னேன்..
..
பிஸியா இருக்கா அப்படி இப்படின்னு கடத்திட்டான்..
ஆனா திரும்பி வரும்போது நான் அவளப் பாத்ததா உங்ககிட்டச் சொல்லச்சொன்னான்..
பசங்க ஓட்டுவாங்கடான்னு கெஞ்சினான்..எனக்குப் பாவமாப்போச்சு..

***

ரெண்டு வருஷம் கழிச்சு.
சென்னை. கிண்டி. வண்டிக்காரன் தெரு.

ஹாஹாஹாஹாஹாஹா..
கடைசி வரைக்கும் அது புதிராவே போச்சுடா..இல்ல..
அவனும் அமெரிக்காவில எம்பிஏ படிக்கப்போயிட்டான்..
ஜிமேட் எழுதாம போகமுடியுமா?
முடியாது..வீணா இந்த ஜூகாந்த்தான் சந்தேகப்பட்டுட்டான்..
டேய்..அவன் காலேஜ் படிக்கும்போது எழுதி ·பெயில் டா..அப்புறம் காலேஜ் முடிச்சதுக்கப்புறம் திரும்பவும் எழுதினான்..
ஆமா..790 மார்க் எடுத்தவன் எதுக்கு ஒரு வருஷம் வெயிட் பண்ணனும்?
அதானே..
வரவர..காஸிப்ல கேர்ள்ஸ மிஞ்சிடுவிங்க போல..
இல்ல மச்சி..உண்மையத் தோண்ட வேண்டாமா?
காலேஜ் படிக்கும்போதே தோண்டறதுக்கு என்ன?
நம்ம டுபுக்கு மாமாதான தடை உத்தரவு போட்டான்..இதப்பத்தி பேச்சே எடுக்கக்கூடாதுன்னு..
ஆமாடா டிங்கிரித்தலையனும் சைக்கோ மாதிரி ஆகிட்டான்..
இந்தப்பேச்ச எடுத்தாலே கத்த ஆரம்பிச்சிட்டான்..செத்துப்போகப்போறதாக்கூட சொன்னான்..தெரியும்ல?
ம்ம்ம்..நெனச்சா காமெடியாத்தான் இருக்கு..
ஆனா எதுக்கு இந்த வீண் பந்தா? கேர்ள் ப்ரண்ட் இருக்கு மயிரு இருக்குன்னு..
டேய் கெழவி..உன் வேதாந்தத்த ஆரம்பிச்சிடாத..
பாப்பையா..உன் ஆளுக்கு கல்யாணம்..
டேய் மாண்டி..மூடிட்டு படுடா..

***

ஏழு வருடங்கள் கழித்து.
லாடிபன்ஸ். பாரீஸ்.

குளிர். கடுமையான குளிர். டவுன் ஜாக்கெட்டையும் மீறிக் குளிர் உடலில் பரவியது. நடையைத் துரிதப்படுத்தி நான் தங்கியிருந்த சிட்டாடைன்ஸ் ஓட்டலுக்குள் நுழைந்தேன். கதவை இழுக்க முயன்ற போது, ஒரு இந்திய ஜோடி கதவை உள்ளேயிருந்து திறக்க முயன்று கொண்டிருந்தது..நான் திறந்து வழிவிட்டேன்..அந்தப்பெண் என்னைப் பார்த்து தாங்க்ஸ் என்றது..நான் சிரித்துவைத்தேன்..உள்ளே நுழையப்போகும் போது..பின்னாலிருந்து ஒரு கை என் தோளில் விழுந்தது..

நீ..நீங்க..மோகன்…
ஆம்..ஆமா..அட..நீ டிங்கிரித்..
(ஷிட்..பக்கத்தில் அவன் மனைவி…யாகத்தான் இருக்க வேண்டும்..நிஜப் பேரு என்ன..செந்தில்..?இல்ல..ஷிட்மேன்..)
நான் பிரபு டா..
பிரபு..என்னடா..இங்க..
ஒரு பிஸினெஸ் விசயமா வந்தேன்…இன்னிக்கு நைட் நியுயார்க்கு ·ப்ளைட் எனக்கு..
ஓ..இன்னிக்கு நைட் கிளம்பறையா?
யெஸ்..தி இஸ் மை வை·ப்..சுபத்ரா..
சுபத்ரா..இது மோகன்..
ஓ இவர் தான் மோகனா? உங்களப்பத்தி நிறைய சொல்லிருக்காரு..
க்ளாட் டு மீட் யூ..சுபத்ரா..
(சிரிப்பு பரிமாறிக்கொண்டோம்)
(அவனும் சிரிக்கிறான்)
ஓ..க்ரேட்..நைஸ் டு மீட் யூ கைஸ்..என் கூட லஞ்ச் வாங்களேன்..
இல்லடா..இன்னிக்கு லாஸ்ட் நாள்ங்கறதனால க்ளையண்ட் எங்கள லஞ்சுக்கு கூப்பிட்டிருக்காங்க..நைட் ஏழுமணிக்கு ப்ளைட்ங்கறதனால..அப்படியே கெளம்பிடுவோம்..
ஓ..ஓ..
இன்னொரு டைம் மீட் பண்ணலாம்..
ஓ யெஸ்..ஸ¤யர்…
ஓகே டா..கேப் வெயிட் பண்ணுது..நாங்க கெளம்பறோம்..
பைடா..
பை..
வாரோம்ங்க..
ஓகேங்க..

இருவரும் டாக்ஸியை நோக்கி நடக்கிறார்கள்.

பைடா பிரபு.
பை சுபத்ரா..

பிரபு திரும்பிப் பார்த்துச் சிரித்தான். சுபத்ரா திரும்பிப்பார்க்கவேயில்லை. காதில் விழவில்லை போல.

***

லாரி விபத்து (சர்வேசன்500 – நச்னு ஒரு கதை போட்டி 2009)

(சற்றே பெரிய கதை)

முதல் நாள் என்பதால் அதிக வேலை இல்லை என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் நான் வேலை பார்க்கும் கம்பெனி ஒரு ட்ரெயினிங்குக்காக என்னை சென்னை அனுப்பியிருக்கிறது. நான்கு வாரங்கள் வரை நான் இங்கு தங்கியிருந்து எனது கம்பெனியின் ஹெச் ஆர் மென்பொருளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதிக வேலை இருக்காது என்று தான் சொல்லி அனுப்பினர்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்ற நான் இன்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அதே வேலை விசயமாக வந்திருப்பதை நினைக்கும் பொழுது கொஞ்சம் வியர்டாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் தான் முதலில் வேலை பார்த்தேன் என்றாலும் நான் அமெரிக்கா சென்று கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஓடோடி விட்டது; இப்பொழுது இங்கே எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. சூழல் மாறிப்போய் இருக்கிறது. அலுவலகத்துக்குள் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் அதிக வித்தியாசமில்லை. சொல்லப்போனால் சென்னை அலுவலகம் கலர்புல்லாக இருக்கிறது; இ·ப் யூ நோ வாட் ஐ மீன் ;).

என் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் தான். அங்கு தான் அம்மா அப்பா எல்லோரும் இருக்கிறார்கள். முதலில் வந்து சென்னயில் ஒரு வாரம் இருந்துவிட்டு பிறகு வார இறுதியில் தஞ்சாவூர் செல்லலாம் என்று திட்டம். யாரிடமும் சொல்லவில்லை. சர்ப்ரைஸ் விசிட்டாக இருக்கட்டும் என்று நினைத்துவைத்திருக்கிறேன். திடீரென்று அம்மாவின் முன்னால் சென்று நின்றாள் அவர்களுக்கு தலைகால் புரியாது.

***

அலுவலகம் எனக்கு நான்கு மணிக்கே முடிந்துவிடும். என் நண்பர்கள் வெகு சிலரே இன்னமும் சென்னையில் இருக்கிறார்கள். மதன் அதிலொருத்தன். படிக்கிற காலத்திலே இந்தியப் பொருட்கள் தான் உபயோகிப்பேன் என்று அடம்பிடிப்பான். ஆனால் வேளை மட்டும் அமெரிக்க மல்டி நேஷனல் கம்பெனியில் பார்க்கிறான். இப்பொழுதும் அதே கம்பெனியில் தான் இருக்கிறான். ப்ளாக் கூட வெச்சிருக்கிறான். அந்தக்காலத்திலே ஜிஆர்ஈக்குப் படித்ததால் அங்கிலம் நன்றாக வரும் அவனுக்கு. இன்று அவன் வீட்டுக்குப் போகிறேன். அவன் வீட்டில் தான் சாப்பாடு. உறக்கம் எல்லாம். வேறு இடத்தில் தங்குவதா மூச் என்று சொல்லிவிட்டான். பாசக்காரப்பயபுள்ளைக.

***

சப்பாத்தியும் கோழிக்குருமாவும் நன்றாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு மொட்டைமாடியில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். குளிர்ந்த காற்று. அழகான கொசுக்கடி. ரம்மியமாக இருந்தது. கொசுக்கடி எப்படிய்யா ரம்மியமாக இருக்கமுடியும்? இருக்கிறதே. மதனின் மனைவி மற்றும் குழந்தை கீழிறங்கி சென்று விட்டவுடன் நானும் அவனும் காலேஜ் கதைகளை கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே தூங்கிவிட்டேன் என்று மறுநாள் காலை சொன்னான் மதன்.

***

மறுநாள் காலை வேறொன்றும் சொன்னான் மதன். நான் தூக்கத்தில் படு பயங்கரமாக அலறினேனாம். ஏன் கத்தினேன் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. முயன்று பார்த்தேன். முடியவில்லை.

***

எனது ஹெச் ஆர் மிஸ்.ரம்பா அலுவலகத்தின் மொத்த விதிகளையும் ஒரு மணி நேரத்தில் அடக்கிவிட முயன்று கொண்டிருந்தார். நான் இந்தியாவில் இருக்கும் வரையிலும் அவர் தான் ச்சீப். மேற்பார்வையாளர். ஷீ லுக்ஸ் குட்.

மதிய உணவு நேரத்தில் கேன்டீனில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது தஞ்சாவூருக்கு சும்மா ரிங் செய்தேன். லைன் டெட்டாக இருந்தது. யாரும் போன் எடுத்தாலும் பேசாமல் வைத்துவிட வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்பொழுது பேசவேண்டும் போல இருந்தது. யாராவது எடுத்தால் தேவலாம் போல இருந்தது. என் அப்பாவின் செல்போனுக்கு அடித்தேன். ரிங்.ரிங்.ரிங். கட் செய்து விட்டேன்.

***

அன்றைய இரவு பூரிக்கிழங்கை ஒரு கை பார்த்துவிட்டு மீண்டும் மொட்டைமாடியில் தூங்கப்போகும் பொழுது பேசிக்கொண்டிருக்கும் பொழுதே தூங்கிவிடுவேனோ என்னவோ என்று மதன் தூங்குவதற்கு முன்னரே, டேய் கிருஷ்ணா, உன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு தூங்குடா, இன்னைக்கும் கத்தித்தொலைக்காதே என்றான். நான் என்ன வேணுமின்னா கத்தறேன்.

***

ஹீரோ ஹோண்டா புதிதாக வாங்கியிருக்கிறேன். பிள்ளையார் கோவிலுக்கு எடுத்து சென்று வழிபாடு முடித்துவிட்டு என் பையனை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரவேண்டும். காற்றில் எனது முடி அழகாக அசைந்தது. என்னை ரியர் வியூ மிரரில் பார்த்துக்கொண்டேன். அப்பா புது பைக் எப்பப்பா வரும் என்று பையன் நச்சரித்துக்கொண்டேயிருந்தான். பார்த்தால் சந்தோஷப்படுவான். பள்ளிக்கூடத்தை நெருங்கிவிட்டேன். லாரி ஒன்று அதிவேகமாக வருகிறது. நல்லவேளை முன்னாலேயே பார்த்துவிட்டேன். கீழிறங்குவதற்கு இடமிருக்கிறது. ரோட்டைவிட்டுக்கீழிறக்கினேன். அடப்பாவிகளா இப்படி மணலா இருக்கு. வண்டி தடுமாறுகிறது. என்னால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. அப்பா என்றொரு சத்தம். வண்டி கீழே விழுகிறது. சரியாக என் தலைக்கு கொஞ்சமுன்னால் லாரியின் கருப்பான பெரிய டயர்.

சட்டென்று முழித்துக்கொண்டேன். வாட் த ஹெல். அமெரிக்காவில் இருக்கும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கால் செய்தேன். எனக்கு ஒரு மகள் ஒரு மகன். எவ்ரி ஒன் வாஸ் ஓக்கே. மனைவி முதலில் பயந்து விட்டாள். என்ன இந்த நேரத்தில கால் பண்றீங்கன்னு கேட்டுக்கொண்டேயிருந்தாள். நான் சொல்லவில்லை.

***
சும்மா ஏதாவது கனவாக இருக்கும்டா என்றான் மதன். ஆனால் நிஜம் போல அல்லவா இருந்தது. ஐ பெ·ல்ட் இட் வாஸ் ரியல். எனக்கு அந்த இடம் எல்லாம் நன்றாகத் தெரியும். என்ன இடம் என்றான் மதன். எனக்குத் தெரியவில்லை. அந்த அழகான ஆலமரம். பிள்ளையார் கோவில். போலீஸ் ஸ்டேஷன். குறுகலான ரோடு. பேக்கரிக் கடை. தேவர் சிலை. ஐ நோ தட் ப்ளேஸ் வெரி வெல்.உன்னோட ஊரா இருக்கும் டா. நோ. என்னொட ஊரில் இது போல ஏதும் கிடையாது. பிள்ளையார் கோவிலும் ஆலமரமும் இல்லாத ஊராடா, நல்லா யோசிச்சுப் பாரு. பத்து வருடத்தில மறந்திருப்ப. நோ நெவர். பிள்ளையார் கோவில் போலீஸ் ஸ்டேஷன் தேவர் சிலை பேக்கரிக் கடை ஒரே ரோட்டில் எங்கள் ஊரில் இல்லை. சொல்லப்போனால் தேவர் சிலையே எங்கள் ஊரில் இல்லை. டேய் என்ன மறுஜென்மக்கதை விடறியா? என்றான் மதன். ஐ டோன்ட் நோ. மைட் பி?

***

எவ்வளவு முயற்சி செய்தும் எனக்கு வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. கொஞ்சம் த்ரில்லாகவும் இருந்தது. MAN DIED IN LORRY CRASH HERO HONDA SCHOOL என்று ஹ¥கிள் செய்தேன். எதுவும் தேரவில்லை. மிஸ் ரம்பா இன்றும் செமினார் எடுத்தார். இட் வாஸ் இன்ட்ரஸ்டிங்.

இன்றும் அந்தக் கனவு வரும் என்று காத்திருந்தேன். மதனும் கூட எதிர்பார்த்திருக்க வேண்டும். ஏன் நீங்களும் எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் கனவே வரவில்லை. தூங்கினால் தானே கனவு வரும்? கெட்ட கெட்ட கனவா வருதுன்னு மதன் மொட்டைமாடிக்கு போகவேண்டாம் என்று சொல்லிவிட்டான். பத்து வருடங்களாக மொட்டைமாடியில் படுத்துப் பழக்கமில்லாமல் மொட்டை மாடியில் படுத்து ஆனந்தமாகத் தூங்கும் பழக்கத்தை உன் ஜீன் இழந்துவிட்டது என்றான். அமேசிங் தாட்.

தூக்கம் பிடிக்காமல் காலை ஐந்து மூன்றுக்கு எழுந்தேன். ஐ கேனாட் ஹெல்ப் பட் தாட்ஸ் வாட் மை டிஜிட்டல் வாட்ச் சொன்னது. இந்த முறை தமிழில் டைப் செய்தேன். “மணலில் சருக்கி லாரியில் அடிபட்டு பள்ளிக்கூட வாசலில்” என்று டைப் செய்தேன். ஹோலி ஷிட்!

***
அனுபவம் என்கிற கட்டுரையில் குரல்வலை என்கிற ப்ளாக்கில் MSV Muthu என்கிற ப்ளாக்கர் இவ்வாறு எழுதியிருக்கிறார்:

அனுபவம் -10
ஒரு சோக நிகழ்ச்சி.

அன்று நான் என் நண்பன் சூர்யாவும் அந்தச் சிறுவனுடன் பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தோம்.அவனுடைய அப்பா வரும் நேரம் வந்துவிட்டது. எங்களுக்கு ஸ்டடி பெல் இன்னும் கொஞ்ச நேரத்தில் அடித்துவிடும். அந்தச் சிறுவனுக்கு சாக்லேட் வாங்குவதற்கு நான் திரும்புகையில் அந்தச் சிறுவன் அப்பா என்று கத்தினான். ஒரு லாரி தூரத்தில் கிரீச்சிட்டு நின்றது. என் பார்வைக்கு ஏதும் தெரியவில்லை. சூர்யா ஐயோ ஐயோ என்று கத்திக்கொண்டே லாரியை நோக்கி ஓடினான்.

அந்த சிறுவனின் கதறல் எனக்கு இன்று வரையில் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

***

உடனே முத்துவுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டேன். என் ஹாட்மெயில் பாக்ஸை ரெ·ப்ரெஷ் செய்து கொண்டேயிருந்தேன். ஏதோ முத்து இப்பொழுதே ரிப்ளை செய்துவிடுவதைப்போல. நோ மெயில்ஸ்.

வீடே நிசப்தமாக இருந்தது. சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த கடிகாரத்தின் டிக் டிக் டிக் சத்தத்தைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. எழுந்து சென்று ப்ரிட்ஜில் தண்ணீர் எடுத்துக் குடித்தேன். என் செல் போன் ரிங் செய்தது. இந்த நேரத்தில் யார் என்று பார்த்தேன். முத்து.

***

முத்துவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம் உங்களுக்கு எப்படி இந்தக்கனவு வந்தது என்று கேட்டுக்கொண்டேயிருந்தார். என்னவெச்சு காமெடி கீமடி பண்ணலியே என்றார் சிரித்துக்கொண்டே. நல்லா காமெடியா பேசுவார் போல. சட்டென்று ரைமிங்காக எப்படி பேசமுடிகிறது? என்னவெச்சு காமெடி கீமடி பண்ணலையே! நல்லாயிருக்குல்ல? இல்ல. உண்மையிலேதான் சொல்றேன் என்று சத்தியம் வைத்தேன்.

அவர் சிங்கப்பூரில் இருக்கிறாராம். அவர் அவருடைய ப்ளாகில் எழுதிய சம்பவம் அவர் பத்தாவது படிக்கும் பொழுது நடந்ததாம். திருமங்கலத்தில் நடந்திருக்கிறதாம். நான் எந்த ரோடு என்று கேட்டபொழுது உசிலம்பட்டி ரோடு என்றார். அங்கே தேவர் சிலை இருக்கிறதா என்று கேட்டேன். ஓ இருக்கிறதே. பிள்ளையார் கோவில். ஆமாம் இருக்கிறது. ஒரு பேக்கரிக்கடை? ஆமாம் வீ பி மதுரா பேக்கரி இருந்தது. இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை என்றார். ஆமாம நீங்கள் எந்த வருடத்தில் பத்தாவது படித்தீர்கள் என்று கேட்டபொழுது நிறைய யோசித்துப் பிறகு 1995 என்றார்.

***

1995. திருமங்கலம்.
·ப்யூச்சர் சாப்ட்.

போனவருடம் நீங்க நல்லா பெர்பார்ம் பண்ணினதுக்காக உங்களுக்கு சீனியர் அனலிஸ்ட் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது சிவா. ஆர் யூ ஹேப்பி வித் திஸ்? யெஸ் மிஸ்டர் கௌதம். அதுமட்டுமில்ல உங்களுக்கான போனஸ் இந்தக் கவரில இருக்கு. தாங்க்யூ கௌதம். ஒன் மோர் க்வஸ்டீன் சிவா. யெஸ் சொல்லுங்க கௌதம். உங்களுக்கே தெரியும் நாம சின்ன கம்பெனியா இருந்தாலும் நம்முடைய ப்ராடக்ட் ரொம்ப நல்லாயிருக்கிறதால இப்போ கொஞ்ச நாளா வெளிநாடுகளில் பிரபலம் ஆகிட்டு வருது. இப்போ அமெரிக்காவில இத இன்ஸ்டால் செய்யனும் கூட இருந்து ஆறு மாதம் கவனிக்கனும்னு இது வரை ரெண்டு கம்பெனிகள் கேட்டிருக்கு. சட்டுன்னு எனக்கு உங்க ஞாபகம் தான் வந்தது. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சுல்ல? ஒரு பையன் கூட இருக்கான்ல? யெஸ் கௌதம். இட்ஸ் ஓகே. ஐ வில் மானேஜ்.சோ நீங்க அமெரிக்க போறதுக்கு ரெடியாயிட்டீங்கன்னு சொல்லுங்க! ஆமா கௌதம். இது நல்ல ஆப்பர்சூனிட்டி இல்லியா? பிஎஸ்ஸி பிஸிக்ஸ் மட்டும் படிச்ச எனக்கு இது மாதிரியெல்லாம் சந்தர்ப்பம் நிறைய கிடைக்காது கௌதம்.

ஓக்கே சிவா. குட். இந்த விசயத்தை கன்பார்ம் ஆகிற வரைக்கும் யாரிடமும் சொல்லாதீங்க. ஓக்கே கௌதம். உங்க மனைவி கிட்ட கூட. ஓக்கே கௌதம்.

***

எந்த வருஷம் சார்?1995ப்பா. எனன சார் பதினாலு வருஷத்துக்கு முந்தி ஆக்ஸிடென்ட்ல போயிட்ட ஒருத்தன இப்ப வந்து தேடுற. எனக்கு ரொம்ப வேண்டியவர்ப்பா. கொஞ்சம் பாத்துச்சொல்லு. ரொம்ப வேண்டியவருன்னு சொல்ற பேரு என்னன்னு தெரியலன்ற?என்னமோ போ..உள்ள நிறைய பேரு இருக்காங்க..எல்லோருக்கும்..மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுகளை அவன் கைகளில் வைத்தேன்.சரி சார். நீ போய் டீ குடிச்சிட்டு அங்க நில்லு நான் விசயத்தோட வர்றேன்.

***

பேரு சிவா. அவன் அப்பா பெயர் தங்கவேலு. மனைவியின் பெயர் இந்திரா. மகனின் பெயர் இல்லை. இறந்த பொழுது அவனுடைய முகவரி: 78 பெரிய கடை வீதி என்று இருந்தது. எங்கே வேலை பார்த்தான் என்கிற விசயம் இல்லை. வேறு எந்தத் தகவலும் இல்லை.

ஆபீஸில் சொல்லாமல் லீவு போட்டுவிட்டேன். மிஸ் ரம்பா என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார். நான் ஆன்ஸர் பண்ணவில்லை.

***

கிருஷ்ணன்?
மதனா..ஆமாடா..நான் தான் பேசறேன்..
யாரோ முத்துங்கறவரு வீட்டு நம்பருக்கு கால் பண்ணியிருந்தார்..உன்னத்தான் கேட்டார்..
அப்படியா? எதும் தகவல் சொன்னாரா?
இல்ல என்ன நிலைமைன்னு கேட்டார்..
ஓ..ஒன்னும் தேரலைன்னு சொல்லு..
ஏன்டா உனக்கு இந்த வீண் வம்பு? பேசாம வந்த வேலையப் பாக்க வேண்டியதுதான?
அதத்தான்டா பாத்திட்டிருக்கேன்..

***

78 பெரிய கடை வீதியைத் தேடிப்பிடிப்பது அவ்வளவு கஷ்டமாக இல்லை. எனக்கு அந்த இடம் ஏதும் நினைவில் இல்லை. இந்த இடத்துக்கு வந்தால் எல்லாமே ஞாபகத்துக்கு வந்துவிடும் என்று நினைத்தேன். சுத்தம்.

அது இரு இரண்டு மாடிக்கட்டிடம். வெளியே கம்பிகேட் போட்டிருந்தது. ஒரு நாய் வெளியே படுத்திருந்தது. தெரு நாய். என்னைப் பார்த்தும் எழுந்துகொள்ளாமல் அப்படியே இருந்தது. நான் வந்ததும் அங்கே இருக்கிற யாராவது என்னை அடையாளம் கண்டுகொண்டுவிடுவார்கள் என்று நினைத்தேன். நோப்.

காலிங் பெல் இருந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு அழுத்திக் காத்திருந்தேன். இதயம் அதி வேகமாகத் துடித்தது. என் இதயத்துடிப்பின் ஓசை படுத்திருந்த அந்த நாய்க்குக் கேட்டிருக்க வேண்டும். எழுந்து நின்று கவனமாக என்னைப் பார்த்தது. கொஞ்சம் நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர் வந்தார். யார் வேணும் என்றார்? எனக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. உங்க பெயர் இந்திராவா?

***

ஏன் கேக்கறீங்க? இல்லை. உங்க பெயர் என்ன? மேனகா. உங்களுக்கு என்ன வேணும் சார்? நீங்க யார்? நான்.. நான்… சிவான்னு யாராவது உங்களுக்குத் தெரியுமா? சிவா? அப்படி யாரையும் தெரியாதே. உங்க கணவர்? வேலைக்குப் போயிருக்கார். உங்களுக்கு என்ன சார் வேணும்? உங்களுக்கு இந்திரான்னு வேற பெயர் ஏதும் இருக்கா? இல்ல சார். நீங்க தவரான இடத்துக்கு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்ன அட்ரஸ் வேணும். நம்பர் 78 பெரிய கடை வீதி. இதுதான். ஆனா நீங்க கேக்குற மாதிரி யாரும் இங்க இல்ல சார். பக்கத்தில விசாரிச்சுப் பாருங்க.

மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. பத்து வருடங்கள் ஆச்சு. எது வேணும்னாலும் மாறி இருக்கலாம். அவங்க இப்ப எங்க இருக்காங்களோ? எனக்கும் அவங்களுக்கும் முதலில் ஏதும் சம்பந்தம் இருக்குமா? அந்தப் பையன் என்ன செய்துகொண்டிருப்பான்? இனி நான் என்ன செய்யப்போகிறேன்?

***
உசிலம்பட்டி ரோடு தூசியாக இருந்தது. தேவர் கூண்டுக்குள் அடைந்துகொண்டிருந்தார். போலீஸ் ஸ்டேஷன் இருந்தது. பள்ளிக்கூடம் தொலைவில் தெரிந்தது. பள்ளிக்கூடத்தில் போய் கேட்டுப்பார்த்தேன். முத்து என்பவரையே தெரியாது என்று சொல்லிவிட்டனர். 1995இல் மூன்றாம் வகுப்பு படித்த அந்தப் பையனைப் பற்றி என்ன கேட்பது? பெயர் தெரியவில்லையே. சின்னாவோ என்னவோ. முழுப்பெயரும் தெரியவில்லை. அவர்களிடம் என்னவென்று கேட்ப்பது? பிரின்ஸிப்பால் முதற்கொண்டு பலரும் மாறியிருந்தனர்.

1995இல் இங்கு பிரின்ஸிப்பாலாக வேலைப்பார்த்தவர் இப்பொழுது கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் பிடி மாஸ்டராக வேலை செய்கிறார். பக்கத்தில் தான் குடியிருக்கிறார். வேண்டுமென்றால் அவரைக் கேட்டுப்பாருங்கள் என்றார் ஆயா. நீங்கள் சொல்லுவது போன்ற சம்பவம் நடந்திருந்தால் அவர் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார். முத்துவை எனக்குத் தெரியும் என்றார் அந்த ஆயா.

பழைய பிரின்ஸிப்பாலின் முகவரி வாங்கிக்கொண்டேன்.

***
உசிலம்பட்டி ரோட்டில் மீண்டும் நடந்து கொண்டிருந்தேன். பேக்கரி பற்றிய ஞாபகம் அப்பொழுது தான் வந்தது. அதே வீ பி மதுரா பேக்கரி அங்கிருந்தது. ஒரு காப்பியும் ஹனி கேக்கும் ஆர்டர் செய்துவிட்டு அங்கு உட்கார்ந்தேன். பல கோணத்தில் யோசிக்க முயன்றேன். இந்தியா வந்து இரண்டு வாரங்கள் ஆச்சு.
கிட்டத்தட்ட ஒரு வாரமாக தேடியும் ஏதும் சிக்கவில்லை. வீட்டிலிருந்து ஒரு காலும் இல்லை. மனைவிக்கும் நான் கால் செய்யவில்லை. அவளும் என்னை அழைக்கவில்லை. அப்பொழுதுதான் எனக்குத் தோன்றியது. என் செல்போனை மிஸ் ரம்பாவுக்குப் பயந்து சுவிட்ச் ஆ·ப் செய்திருக்கிறேன். இருக்கட்டும். இன்று இரவு மனைவிக்கு கால் செய்யலாம். இன்றுடன் தேடுதல் வேட்டையை முடித்துக்கொள்ளலாம்.

இன்று இரவு தஞ்சாவூர் போய்விட்டு அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சென்னை போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

***

நீங்க இங்க ரொம்ப நாளா கடை வெச்சிருக்கீங்களா? ஆமா. எங்கப்பா ஆரம்பிச்ச கடை. அவர் தவறிட்டார். இப்போ நான் பாத்துக்கிட்டு இருக்கேன். நீங்க எவ்ளோ நாளா கடையப் பாத்துக்கறீங்க? பதினைந்து வருஷமா நான் தான் பாத்துக்கறேன். என்னை வித்தியாசமாக அவர் பார்க்க ஆரம்பிப்பதற்குள் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டேன்: 1995ல உங்க கடைக்கு முன்னால ஒரு விபத்து நடந்து பைக்ல வந்த ஒருத்தர் அந்த இடத்திலேயே பலி ஆயிட்டாரு. அதப்பத்தி உங்களுக்குத் தெரியுமா? தெரியலையே சார். இந்த ரோட்ல ஆக்ஸிடென்ட்டுக்கா பஞ்சம். பிள்ளையார் கோயில் இருக்கு பாரு, நேத்து கூட அந்தத் திருப்பத்தில ஒரு ஆக்ஸிடென்ட் நடந்துச்சு.இறந்தவன் என் நண்பர் ஒருவருக்கு சொந்தம். 26 வயசுப் பையன். புதுசா கல்யாணம் பண்ணவன். புது பைக். பாவம். இன்னும் கொஞ்ச ஒரு மாசத்திலேயோ என்னவோ அவன் அமெரிக்க போகப்போறதா சொல்லிட்டிருந்தானாம். அமெரிக்காவுக்கா எதுக்கு? படிக்கவா? ஏதோ வேலை விசயமாவாம்? வேலை விசயமா? அவ்வளவு தான் எனக்குத் தெரியும்..

***

மீண்டும் கார்பரேஷனுக்கு விரைந்தேன். இந்த முறை ப்யூனுக்கு மூவாயிரம் கொடுக்க வேண்டியிருந்தது.

இறந்தவரின் பெயர்: மணிகண்டன். அப்பா பெயர்: மணிமாறன். வயது: 27 ·ப்யூச்சர் சா·ப்ட் என்கிற கம்பெனியில் வேலை பார்த்தவராம்.
இந்த சின்ன ஊரில் சாப்ட்வேர் கம்பெனி இருக்கிறதா?

***

எம்டியப் பாக்கணும். நீங்க யாரு? என்ன விசயமா வந்திருக்கீங்க? உங்க எம்டி கிட்ட பேசிட்டேன். இன்னைக்கு காலையில பத்து மணிக்கு வரச்சொன்னார். ஓ அப்படியா உக்காருங்க. வந்திடுவார்.

*

ஸோ.. மிஸ்டர்..கண்ணன்..யெஸ் யெஸ் மிஸ்டர் கண்ணன்..நீங்க திருமங்கலத்திலேயே தங்குறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? ஆமா மிஸ்டர் கௌதம். என்னுடைய பேரன்ட்ஸ் எல்லாம் இங்கதான் இருக்காங்க. கடைசிக்காலத்தில அவங்களக் கூட இருந்து பாத்துக்கனும்னு தோணுச்சு அதான் இங்கயே கொஞ்ச நாளைக்கு இருக்கலாம்னு நினைக்கிறேன். வெல்…எங்க டெக்னிக்கல் மானேஜர் லீவுல இருக்கார்..உங்க மாதிரியான டாலன்ட்ஸை விடவும் மனசில்ல..ஐ வில் கால் யூ பேக் இன் டூ டேஸ்..

*

கௌதம் தனது பர்ஸனல் லேப்டாப்பை திறந்து HR என்கிற அந்த மென்பொருளை திறந்தார். மிக நீளமான ஒரு பாஸ்வேர்டை அடித்தார். நீண்ட நேரம் காத்திருந்தார்.
BODY SHOP மெனுவை க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருந்தார். இரண்டு இரண்டு புகைப்படங்கள் வரிசையாகத் தோன்றின. ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கீழே படத்தில் தோன்றியவரின் பெயர் மற்றும் வருடம், பக்கத்திலே வேறு ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ; பெயர் இல்லை வருடமும் இல்லை. நிறைய போட்டோக்களைப் பார்த்துக்கொண்டு வந்தவர் ஒரு போட்டோவில் அப்படியே எழுந்து நின்று விட்டார். அந்த போட்டோவில் இருந்த நபருக்குக் கீழே சிவா என்று இருந்தது; வருடம் 1995; பக்கத்தில் தற்பொழுது கண்ணன் என்று தன்னைப் பார்க்க வந்த நபரின் போட்டோ.

Authenticating the caller..
2134A897Z0000011100000N….I9988653.
டயல் டோன்…
Authenticating the receiver..
6734561238965367429076452Y35…TY..
பீப் பீப் பீப் பீப் பீப் பீப் பீப்..
RAT ESCAPED. POSSIBLE BREACH.
பீப்..பீப்..பீப்..பீப்..பீப்..
COPIED. CONTROL INIT.

கௌதமின் முகம் கலவரத்தில் வெளுத்திருந்தது. இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார்.

***

அறையில் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் கனவில் தோன்றியவரின் மகனும் மனைவியும் எங்கே போயிருப்பார்கள்? எந்த லிங்க்கும் எனக்குப் புலப்படவில்லையே. நாளைக்கு ஊருக்குக் கிளம்பவேண்டும். இதுவரை வீட்டுக்கும் கால் செய்யவில்லை. என் மனம் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் வெறும் கனவாக இருக்குமோ? ஜஸ்ட் கோயின்ஸிடன்ஸ்? நான் தான் எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொண்டேனோ? பேசாம வேலையப் பாத்துக்கிட்டு ஊருக்கு கிளம்பிடலாமா?மீண்டும் சிவாவை பற்றிய குறிப்புகளை எடுத்துப் பார்த்தேன். சிவா. இந்திரா. 78 பெரிய கடை வீதி. இதில் இருக்கும் முகவரியில் அவர்கள் இல்லை. எங்காவது காலி செய்து சென்றிருக்கக்கூடும். பக்கத்தில் சிலரிடம் விசாரித்தாயிற்று. பெட்டிக்கடை வைத்திருப்பவர். துணி அயர்ன் செய்பவர். யாருக்கும் சிவாவையும் இந்திராவையும் தெரிந்திருக்கவில்லை. அந்தச் சின்னப்பையன்? பழைய ப்ரின்ஸிப்பாலிடமும் விசாரித்துவிட்டேன். நோ க்ளூஸ். 1995இல் மூன்றாவது படித்துக்கொண்டிருந்தான் என்றால் இப்பொழுது பணிரெண்டாவது படித்துக்கொண்டிருக்கவேண்டும். ஹவ் டிட் ஐ மிஸ் திஸ்?

எழுந்து ஓடினேன். கதவைக் கூடப் பூட்டவில்லை. ஹோட்டலைவிட்டு வெளியேறியதும் கண்ணில் தென்பட்ட ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன்.

***

நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களை நான் ஐந்து நிமிடங்கள் மட்டும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே பையன் இன்று வரை அதே பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பானா என்பது சந்தேகம் தான் என்றாலும், ஜஸ்ட் கிவ் இட் எ ட்ரை.

கதையை முழுசாகச் சொல்லாமல் விபத்தையும் அந்தப் பையனைப்பற்றி மட்டும் சொன்னேன். மாணவர்கள் எப்பொழுதும் போல தங்களுக்குள் பேசிக்கொண்டனர். பேசிக்கொண்டேயிருந்தனர். பாய்ஸ் எனி க்ளூ? என்று கேட்டுப்பார்த்தேன்.

நான் கூட்டத்தை முடிக்கும் வரையிலும் எல்லோரும் தங்களுக்குள் பேசிக்கொண்டேதான் இருந்தனர். நோ க்ளூஸ்.

***

என்னா சார்? ஏதாவது க்ளூ கெடச்சதா? பள்ளியின் கேம்பஸில் இருக்கும் ஸ்டேஸனரி ஸ்டோர்ஸ் கடைக்காரர். இவரிடமும் முன்னாலே விசாரித்துப் பார்த்துவிட்டேன். பயனில்லை. என்னா மணி சார் என்ன தேடறார்? அங்கே உட்கார்ந்திருந்த ஒரு வயதானவர் கேட்டார். பதினாலு வருடத்துக்கு முன்னர் இங்க நடந்த ஒரு பைக் ஆக்ஸிடென்ட் பத்தி என்கிட்ட அன்னைக்குக் கேட்டுட்டிருந்தார். பதினாலு வருஷத்துக்கு முன்னாடியா? கொஞ்சம் விவரமா சொல்லுங்க. நான் சொல்லிமுடித்ததும் எழுந்து என் பக்கத்தில் வந்தார் அந்தப் பெரியவர்.

***

நீங்க சொல்ற அந்தப் பையன எனக்கு நல்லாத் தெரியும். அப்ப இதோ இங்க தான் கயித்துக்கடை வெச்சிருந்தேன். அவங்க அப்பா இதே ஊர்ல தான் ஏதோ கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை செஞ்சிட்டிருந்தார். கம்ப்யூட்டர் கம்பெனியா? ஆமா. சைக்கிள்லதான் வந்து பையனக் கூப்பிட்டுட்டு போவார். அவர் வருவதற்கு கொஞ்ச நேரம் ஆச்சுன்னா பையன் என் கடையில தான் இருப்பான். என்கிட்ட நல்லா பேசுவான் அந்தப் பையன். பள்ளிக்கூடத்தில எல்லோருக்கும் அவனப்பிடிக்கும். ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு அவங்க தாத்தா வீட்டுக்குப் போகப்போறேன்னு சொல்லிட்டிருந்தான். ஆக்ஸிடென்ட் நடந்த அன்னிக்கு முதல் நாள் அவங்க அப்பா அவனக் கூப்பிட வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு. அவர் வந்தப்ப சைக்கிள்ல நிப்பாட்டிட்டு டீ சொல்லிட்டு என் கூட பேசிட்டிருந்தார். பேச்சுவாக்கில, என்ன சார், ஸ்கூலுக்கு லீவு போடப்போறேன்னு சொல்றான்னு கேட்டேன். சொல்லிட்டானா? ஒன்னுமில்ல சும்மாதான்னு சொன்னார். ஆனா அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது; அவர் வெளிநாடு போவதா அவர் மனைவி கிட்ட மட்டும் சொல்லிட்டிருந்திருக்கார். வெளிநாடா? அப்படித்தான் அவருடைய மனைவி சொன்னதா சொன்னாங்க.

இப்ப அவங்க மனைவி அந்தப்பையன் எல்லோரும் எங்கிருக்காங்கன்னு தெரியுமா?

***

யார் நீங்க? உங்களுக்கு யார் வேணும்?
நீங்க இந்திரா..
ஆமா…நான் தான்…நீங்க?
நான்..நான்..நான்..உங்க..உங்க..
அந்தப் பையன் வந்து நின்றான்..கையில் கெமிஸ்ட்ரிப் புத்தகம்..
உங்களுக்கு யார் வேணும் என்றான்..
அப்பு..அப்புக்குட்டி எப்படிடா இருக்கே?
ர்..ர்..ர்..ராணி நீ எப்படிம்மா இருக்கே?
நீ..நீ..நீ..நீ..நீங்க…கண்களிலிருந்து நீர் வழிகிறது…என்னங்க..என்னங்க..என்னங்க..ஐயோ..ஐயோ..என்னங்க..
என் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது..ராணிம்மா..நான்..நான் தான்..நான் தான்..
எனக்கு கரண்ட் ஷாக் அடிக்கிறார் போல இருக்கிறது..
பக்கத்தில் இரண்டு பேர்..இடப்பக்கமும் வலப்பக்கமும்..
ஐயோ..என்ன இது..என்ன இது…நான் எங்கு போகிறேன்..
ராணி ராணி என்னப்பிடி..என்னப்பிடி..பிடி..அப்பு..அப்புக்குட்டி..
ராணி கதவைப் பிடித்துக்கொண்டு சரிகிறாள்..
வெறுமை.வெறுமை.வெறுமை.மூச்சு விட முடியவில்லை. உடலே பாரமாக இருக்கிறது…நீண்ட பயணம்..

***

அம்மா..அம்மா..
என்னம்மா ஆச்சு? ஏன் கொய்யாப்பழம் விக்க வந்தவனப்பாத்து ஐயோ ஐயோன்னு சொல்லிட்டிருந்தீங்க..
இந்திரா அழுது கொண்டேயிருக்கிறாள்..ஏதும் பேசவில்லை..

சுவற்றில் சிவா சிரித்துக்கொண்டிருக்கிறான்.

***

ஹலோ மிஸ்டர் மதன்?
யெஸ்..
நான் முத்து பேசறேன்..
முத்து? எந்த முத்து?
குரல்வலை ப்ளாக்கர்..
குரல்வலை? யாரு சார் நீங்க?
நான் நான்..உங்கவீட்ல கிருஷ்ணன் அப்படீன்னு ஒருத்தர் தங்கியிருந்தார் இல்லியா?
கிருஷ்ணன்? யார் அது?
உங்க ப்ரண்ட்..
என் ப்ரண்டா? ராங் நம்பர்..
இல்ல..அவர் இந்த நம்பர் தான் கொடுத்தார்..
இல்லங்க..எனக்கு கிருஷ்ணன்னு யாரும் ப்ரண்ட் இல்ல..தவிரவும் யாரும் என் வீட்ல வந்து தங்கவேயில்ல..இப்ப போன வெக்கறீங்களா?

முத்து மதனின் வீட்டு நம்பருக்கு அடிக்கிறார்.
ஹலோ..
ஹலோ..
மிஸ்..மிஸ்டர்..மதன் இருக்காரா?
யெஸ் மதன் ஸ்பீக்கிங்..
நான் முத்து பேசறேன்..
ஏன் சார் சொன்னாக் கேக்கமாட்டீங்களா? என் வீட்டு நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?
சார்..நான் இந்த நம்பருக்கு ஏற்கனவே ஒரு தடவ கால் பண்ணிருக்கனே..நாம் ரெண்டு பேரும் பேசிருக்கோம்..
என்ன சார் விளையாடறீங்களா?
உங்க ப்ரண்ட் கிருஷ்ணன்..
கிருஷ்ணனையும் தெரியாது ராதாவும் தெரியாது..குழப்பாம உங்களுக்கு எந்த நம்பர் வேணுங்கிறதப்பாத்து கரெக்டா அந்த நம்பருக்கு அடிங்க..

யாருடி அது கிருஷ்ணன்? என் ப்ரண்டாம்? உனக்கு யாரையும் அப்படித் தெரியுமா? ம்ம்..இல்லியே? இது என்ன புதுக்குழப்பம்?

***

·ப்யூச்சர் சாப்ட்.

கௌதம் தன் கம்ப்யூட்டரை ஆன் செய்து மெயில் செக் செய்தார்.

HRஇடமிருந்து மெயில் வந்திருந்தது. மெயிலை டீக்ரிப்ட் செய்து படிக்க ஆரம்பித்தார்.

நடந்ததுக்கு மன்னிக்கவும். எப்பொழுதும் போலத்தான் ட்ரெயினிங்குக்கு பூலோகத்திற்கு ஒருவரை அனுப்பிவைத்தோம். நினைவுகள் எல்லாவற்றையும் சுத்தமாக அழித்தப்பிறகு தான் அனுப்பினோம். ஆனால் எப்படியோ அவருக்கு நினைவு வந்துவிட்டது. இன்னும் அதற்க்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவில்லை. அவரை மீட்டுக்கொண்டாயிற்று. பூலோகத்தில் அவர் விட்டுச்சென்ற எல்லா நினைவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு யாரையும் இங்கே அனுப்பவேண்டாம். பிறகு சந்திப்போம்.

– Heaven (and Hell) Resource Management,

***

hr>connect to earth.global.network
connected..
hr>connect to blogger.com /use adminforall
connected..
hr>login msvmuthu@gmail.com ******
authentication success..logging in..
hr>delete post https://kuralvalai.com/2008/09/blog-post11.html
deleting..successfull..
hr>connect to cache.earth.golobal.network /use adminforall
connected..
hr>clear cache ref::https://kuralvalai.com/2008/09/blog-post11.html /all
clearing cache…..

***

Update:க‌தையை எழுதின‌ப்பிற‌கு தான் ச‌ர்வேச‌ன் ந‌ட‌த்தும் ந‌ச்சுன்னு ஒரு க‌தைப் போட்டி தெரிய‌வ‌ந்த‌து. போட்டிக்கும் க‌தையை அனுப்பிவிட்டேன்!

மீள் பதிவு – புல் தரையில் ரத்தம்

(சிறுகதை)

ராஜூ அப்பொழுதுதான் பார்த்தான் அந்தக்காட்சியை. அந்த கிழவர் அந்த குழியை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தார். மரத்தினடியில் ஏகாந்தமாய் காற்று வாங்கிக் கொண்டிருந்தவன் இந்த செயலைக்கண்டதும் துணுக்குற்றான். அந்த குழி பெரிய குழியாயிற்றே. விழுந்தவர்கள் எழ முடியாதே. இந்த கிழம் எதற்கு அங்கே செல்கிறது. அட என்ன இது புல் தரையில் இரத்தம். இரத்தத்தைப் பார்த்த ராமன் ஐயோ இங்கே எப்படி ரத்தம் வந்தது என்று யோசித்தான். ஐயோ.. அப்பா அல்லவா இங்கே எப்பொழுதும் படுத்துக்கொண்டிருப்பார். இங்கு பெரிய குழியில் என்ன சிவப்பாய்? ராஜூ எழுந்து உட்கார்ந்தான். ஏன் இப்படி அந்தி சாயும் ஏகாந்தத்தை குலைப்பது போல இந்த கிழவர் நடந்து கொள்கிறார்? ராஜூ எழுந்து அந்த கிழவரை நோக்கி கத்தினான். ராமன் ஐயோ ரத்தம் ரத்தம் என்று உரக்க கத்தினான். யார் காதிலும் விழுந்திருக்குமா என்று யோசிக்க நேரமில்லை. அப்பாவுக்கு ஏதும் ஆபத்து வந்திருக்குமா? அப்பாவை யாரது கொலை செய்திருப்பார்களா? ராமனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனது மூக்கிலிருந்து ரத்தம் கசியத்தொடங்கியது.

ஓட முயன்ற ராஜூவின் காலில் பெரிய கல் ஒன்று இடித்தது. நகம் பெயர்ந்து கொண்டு வந்தது. ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் கசிந்து வெளியேறியது. யோவ் கிழவா ராஜூவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. உன் தலையில் கல்லை போட்டு உடைக்க. ராஜூ மிக வேகமாக ஓடினான். நகம் பிய்த்துக்கொண்டு வந்த இடத்தில் மண் படர்ந்தது. வலி கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்தது. ராமன் ஓடினான். அப்பா. அப்பா. ரத்தம் மட்டுமே இருக்கிறது ஆனால் உடல் எங்கே? யாரும் ஏன் இதை பார்க்கவில்லை? ஓடினான். ஓடினான். ஓடினான். டேய் ராமா எதுக்கு தலைதெறிக்க ஓடியாற? டேய் ராமா நில்லுடா. யாரையும் ராமன் கண்டுகொள்ளவில்லை. கிழவர் ராஜுவின் கத்தல்களை கண்டுகொள்ளவில்லை. ஏதோ குழிக்குள் தான் இது வரை சேர்த்து வைத்த தங்க கட்டிகள் எல்லாம் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு அவர் நடந்துகொண்டிருந்தார். ராஜூ மிக வேகமாக அந்த கிழவரை நோக்கி ஓடுவதை அந்த ஜெயிலின் வார்டன் பார்த்துக்கொண்டேயிருந்தார். வார்டனும் ஓடி வரத்தொடங்கினார். யோவ் யோவ். டேய். டேய். ராமா. நில்லுடா. ம்ம்ஹ¥ம். ஓடினான் ராமன். அதோ அங்கே காவல் நிலையம். ஐயா ஐயா. ஐயா. என் அப்பாவை யாரோ கொன்று விட்டார்கள். நான் பார்த்தேன். ரத்தத்தை பார்த்தேன். சிவப்பாய். உறைந்திருந்தது. குழிக்குள். புல் தரையில். எல்லா இடத்திலும். அவரை யாரோ கத்தியால் குத்தியிருக்கிறார்கள். என்னது இங்கே கொலையா? என்னடா சொல்கிறாய்?

ஹாங்? யாருப்பா? ஏன் கத்தற? யோவ் கிழவா குழியிருக்கு. விழுந்த அப்படியே போய்கினுருப்ப. ஓ. என்ன ஓ? ஓங்கி ஒன்னு விட்டன்னா ஓன்னு வாயப்பொளப்ப. எனக்கு கண்ணு சரியா தெரியமாட்டேங்குதுப்பா. மன்னிச்சுக்க. சரி சரி வா இந்தப்பக்கம். வா இந்தப்பக்கம். அது என்ன உன் கையில் ரத்தம்? உறைந்து இருக்கிறது? யார் நீ? உன் பெயர் என்ன? ராமன் பதில் சொல்லவில்லை. உன் வீடு எங்கிருக்கிறது. ஏன் உன் மூக்கில் ரத்தம் வருகிறது? டேய் ராமா போ. போ இளநி காய்களை பெறக்கிட்டு வா. உங்கய்யன் வந்துடபோறான். அப்புறம் உனக்கு அடிதான். அப்பத்தா. அம்மா எங்க? எவடா உனக்கு அம்மா? அந்த ஓடுகாளிசிறுக்கியா? —முண்டையா? என் குடும்ப கவுரவத்தையே சிதச்சுட்டு போயிட்டா. அம்மாவாம் அம்மா. போடா வெளங்காதவனே. போ. பொறக்கிட்டுவா. உங்கப்பன் கிட்ட அவளப்பத்தி கேட்டு அடிவாங்கி சாகாத. ராமன் ஓடுகிறான். அப்பத்தா ஏன் இப்படி திட்டுகிறது என்று தெரியாமல் ஓடுகிறான். அதோ அங்கே இருக்கிறது இளநி ஒன்று. எடுத்துக்கொள்கிறான். மேலும் மேலும் மேலும். ஒரு மரத்தினடியில் வந்து குவித்துவைக்கிறான்.

ஒரு மரத்தினடியில் வந்து ராஜூ அந்த கிழவரை உட்கார வைக்கிறான். டேய். என்னாச்சு? வார்டன் சார்.ஒன்னுமில்ல சார். இந்த கிழம் குழிக்குள்ள விழப்பாத்துச்சு சார். நான் தான் காப்பாத்தினேன். ஆமா பெரிய ரசினிகாந்து. இவருக்கு என்னாச்சு? கண்ணு தெரியலையாம். யோவ். ஹாங். யோவ். யாரு. பெரிய இந்தியன் தாத்தா. யாருன்னு கேக்கறாரு. உம் பேரு என்னய்யா? ராமன் எல்லா இளநி காய்களையும் பெறக்கிக்கொண்டுவிட்டான். தென்னைமரத்தின் நிழல் குளுகுளுவென்றிருந்தது. குளிர்ந்த காற்று ஓடியாடி காய் பெறக்கியதற்கு இதமாக இருந்தது. ஓடையில் தண்ணீர் குடிக்கலாம் என்று கீழே குனிந்தான். தண்ணீரில் தன் முகம் கலங்கலாய் தெரிந்தது. கிழத்துக்கு வார்டனின் முகம் அவ்வளவாக தெரியவில்லை. கலங்கலாக மங்கலாக இருந்தது. தலை சுற்றுவது போல இருந்தது. யோவ் உன் பேரு என்னன்னு கேக்கறின்னுல்ல? ஏன் உன் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது? டேய் ஓடி போய் தண்ணி கொண்டுவா. ராஜூ ஓடுகிறான். வார்டன் கிழத்தின் முகத்தினருகே குணிந்து பார்க்கிறார்.

கீழே குணிந்து ராமன் தண்ணீரில் தெரியும் தன் முகத்தை கொஞ்சம் அள்ளி பருகிக்கொள்கிறான். எப்படியோ மீண்டும் அங்கே முகம் வந்துவிடுகிறது. ராமன் எவ்வளவு எடுத்து குடித்தும் அவன் முகம் தீரவேயில்லை. நச் என்று தலையில் ஏதோ விழுந்ததை போல இருந்தது. தண்ணீரில் தொப்பென்று ஒரு இளநி காய் விழுந்து தண்ணீர் இவன் முகத்தில் அடிக்கிறது. ராமன் நிமிர்ந்து மேலே பார்க்கிறான். தலை வலிப்பது போல இருக்கிறது. தலை சுற்றுகிறது. கிழத்துக்கு தலை சுற்றுகிறது. டப்பென்று அப்படியே கீழே சாய்கிறது. வார்டன் தாங்கி பிடிக்கிறார். தலையை பின்னால் பிடித்தவாறு தான் பெறக்கி சேமித்து வைத்த இளநி காய் குவியலுக்கு அருகே ராமன் உட்காருகிறான். தூரத்தில் ஒரு மரம் குட்டையாகவும். பின் நெளிந்துகொண்டும். வளைந்துகொண்டும். பின் ஏன் திடீரென்று வளர்ந்து பெரிதாகிறது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறான் ராமன். கால்களுக்கு இடையிலே பெரிய பெரிய பாம்புகள் ஊறுகின்றன. தண்ணீரில் தவளைகள் பெரிது பெரிதாக இருக்கின்றன. அந்த தவளைகள் இவனது முகத்தை அள்ளி அள்ளி குடிக்கின்றன. இவனுடைய அம்மா வருகிறாள். உடன் யாரோ வருகிறான். அவன் இவனிடம் வந்து வாடா ராமா. ஹா ஹா ஹா ஹா என்று சிரிக்கிறான். வாடா ராமா. ஹா ஹா ஹா. வாடா ராமா. ஹா ஹா ஹா. அம்மா அப்படியே அவனை விழுங்குகிறாள். அப்பத்தா ஓடி வருகிறாள். கையில் துடைப்பம் இருக்கிறது. அப்பத்தா பாம்பாய் மாறிவிடுகிறாள். ராமா என்னடா ஆச்சு? என்ன ஆச்சு?

என்ன ஆச்சு வார்டன்? தெரியலை. இவர் யார் என்று பாருங்கள். சுத்தமாக கண் தெரியவில்லை. எப்படி இந்த ஜெயிலில் காலம் தள்ளுகிறார். நான் பார்த்ததில்லையே இவரை. இவரை யாருக்காவது தெரியுமா? ராமா என்னடா ஆச்சு? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? அப்பத்தா தலையில் கொம்பொன்று முளைக்கிறது. ராமன் சிரிக்கிறான். அப்பத்தாவின் நாக்கு பாம்பு போல நெளிகிறது. ராமன் பயப்படுகிறான். பக்கத்தில் வராதே. பக்கத்தில் வராதே. ராமன் மூக்கை தொட்டுப்பார்க்கிறான். மூக்கில் ரத்தம். செக்கச்செவப்பாய் ரத்தம். ரத்தம் வழிந்துகொண்டேயிருக்கிறது. ராசா. ராமா. என்னடா ஆச்சு? ஏன்டா இப்படி இருக்க? தலையை ஏன் பிடிச்சிட்டு இருக்க? ஏன்டா உனக்கு மூக்கில் ரத்தம் வருகிறது?

ஏன் உன் கையில் ரத்தம் இருக்கிறது? உன் அப்பாவை யார் கொன்றார்கள்? சார். இன்ஸ்பெக்டர் சார். என்னய்யா ஏட்டையா? எனக்கு இவனைத் தெரியும் சார். இவன் எனக்கு பக்கத்து வீட்டு பையன் தான். கொஞ்சம் ஒரு மாதிரி. இல்ல. நான் அப்படி இல்ல. ராமன் கத்தினான். இல்ல வார்டன் சார். யாருக்குமே தெரியல. இவர் யாருன்னு. எல்லோரும் எப்பவோ ஒரு வாட்டி பாத்திருக்காங்க ஆனா யாரு? பேரென்னன்னு தெரியல. எங்களுக்கும் தெரியல. அவரோட நம்பர் வெச்சு தான் பாக்கனும். வெக்கமாயில்லையாயா உங்களுக்கு. என்ன தான் கிழிக்கிறீங்க? போங்க போய் இவரு யாரு என்னன்னு பாருங்க. ஏட்டைய்யா பையனை கூப்பிட்டுட்டு போய் என்னன்னு பாருங்க. கொலை அது இதுன்னு உளறுறான். கையில வேற ரத்தமா இருக்கு. வேணும்னா கூட 206ஐயும் கூப்பிட்டுக்கோங்க. ராமசாமி ஐயாவோட ஆதரவாளர்கள் தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் பண்றாங்களாம். நான் அங்க போகணும். நீங்க கிளம்புங்க. டேய் பையா உம் பேரென்ன சொன்ன? ராமன் ஆங்.. போ ஏட்டைய்யா கூட போய் எங்க ரத்தம் பாத்தன்னு சொல்லு.

என்னய்யா ரெக்கார்ட்ஸ்ல பாத்தீங்க சொல்லுங்க. கிழம் எங்க வார்டன் சார்? அவரை இப்பத்தான் டாக்டர்ஸ் செக்கப்புக்கு கொண்டுபோய் இருக்காங்க. சார் ரெக்கார்ட்ஸ் பார்த்ததுல இவரு இங்க இருபது வருஷத்துக்கும் மேலா இருக்கார் போல தெரியுது சார். என்னது இருபது வருஷத்துக்கும் மேலையா? என்னய்யா சொல்றீங்க? ஏன் இவரை விடுதலை செய்யல? என்ன தப்பு செஞ்சிருக்கார்? கொலை சார். கொலையா? இவரா? அப்படீன்னு தான் சார் போட்டிருக்கு. ஆறடி இரண்டு அங்குலம் உயரம் இருக்கும் ராமச்சந்திரன்…ம்ம்ம்…1957இல்..என்னது? 1957லா? டேய் எங்கடா ரத்தம்? இதோ இங்கதான் சார். இங்கயா? எங்கடா இருக்கு? இதோ இங்க சார். யோவ் 206 இங்கவாய்யா. எங்க இருக்கு ரத்தம்? இல்ல ஏட்டைய்யா. இவன் ஏதோ உளறுறான். குழிக்குள்ள இருக்கு சார். குழிக்குள்ளயா? பாருங்க சார்..ரத்தம் இருக்கு. 206 இவனுக்கு பைத்தியம் முத்திப்போச்சு. எங்கையுமே ரத்தம் இல்லையே, டேய் போ போய் ஒழுங்கா வேலைய பாரு. பக்கத்து வீட்டுக்காரன்ங்கிறதால விடறேன். போ. இல்ல ரத்தம் பாத்தேன். நான் பாத்தேன். ஏட்டைய்யா இவன் சொல்றமாதிரி புல் தரையில ரத்தம் இல்ல. ஆனா இவன் கையில ரத்தம் இருக்கே கவனிச்சீங்களா? ஹா..ஆமா 206..டேய் உங்கப்பா எங்க? அதான் சொல்றேனில்ல. யாரோ கொன்னிருக்காங்க. டேய் லூசு.. வாடா உங்க வீட்டுக்கு போகலாம். 206 இவன் வீடு வரைக்கும் போயிட்டு வரலாமா?

ஆமா சார். 1957ல்ல தான்..ம்ம்ம்ம்…ரங்கசாமி என்பவரை கத்தியால் குத்தி…இவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர்…தில்லையிலிருக்கும் மனநலகாப்பகத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டார்…அங்கு சிகிச்சை முடிந்து குணமானதும்…1957ல்ல கொலை செஞ்சிருக்காரா? என்னய்யா இது? இன்னி வரைக்கும் ஜெயில்ல என்ன செய்யறார்? கிட்டத்தட்ட 50 வருஷம் ஆச்சே? எனக்கு ·புல் ஹிஸ்டரி கிடைக்குமா? எடுத்திட்டு வர முயற்சி பண்ணுங்க. யார் இவர்? எதற்காக இவ்வளவு வருஷம் சிறையில் இருக்கிறார். ஏன் இவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. உறவினர்கள்? அப்பா? அம்மா? அவ்வளவு வேண்டாதவர்களாக போய்விட்டாரா? ஹலோ வார்டன். டாக்டர் என்னாச்சு டாக்டர்? வழக்கமா வயசானா வருகிற வியாதிதான். கண்ணுக்கு ஆபரேஷன் தான் செய்யனும். ஆபரேஷன் செஞ்சாலும் அத தாங்குவாரான்னு தெரியல. இங்க விட்டுட்டு போறீங்களா இல்ல.. தெரியல டாக்டர்..இவருடைய கேஸ் புதிராக இருக்கிறது..இன்னும் நிறைய விசாரிக்கனும்..நாங்க வர்றோம்….யோவ்..கிழத்த பிடிச்சுக்கோங்க..

206 இவன பிடிச்சுக்கோ..ஓடிட போறான்..என்னது யாருமே இல்லயா வீட்ல..ரங்கசாமி..ரங்கசாமி..டேய் உங்க அப்பா எங்கடா போயிட்டார்..கொன்னுட்டாங்க சார்..போட்டன்னா..ரங்கசாமி..என்னது பிசுபிசுப்பா இருக்கு..206 தீப்பெட்டி வெச்சிருக்கீங்களா? 206 தீப்பெட்டி இல்ல ஏட்டைய்யா..ஒன்னு தான் இருக்கு..யோவ்?! இருங்க ஏட்டைய்யா கொளுத்தறேன்..ரங்கசாமி..ரங்கசாமி..ஏட்டையா..இங்க பாருங்க..அடப்பாவி..கத்தியால குத்தப்பட்டிருக்கிறார்..யாரோ நிறைய தடவை குத்திருக்காங்க..ஐயோ..ரங்கசாமி..மூச்சு இல்லய்யா..அடப்பாவி அப்பாவையே கொன்னுட்டியே..பிடிங்க அவனை..என்னடா ஆச்சு? ஏன் இப்படி பண்ணின? ஏன் உங்கப்பாவை குத்தின? ஏட்டையா இங்க இருக்கு கத்தி..

எத்தன வாட்டி கத்தி கத்தி கேக்குறது, கிழத்துக்கு காதுலையே விழல..அடச்சே..தாத்தா..உங்க பேர் என்ன? ஹாங்..ராமன்..ராமன் என்கிற இந்த சிறுவன் தன் தந்தையை நான்குமுறை நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த காரணத்துக்காக, சிறுவன் என்பதை மனதில் கொண்டு இந்த நீதிமன்றம் அவனை மனநலக்காப்பகத்தில் சேர்க்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது. மேலும் தண்டனை காலத்துக்கு முன் மனநலம் தேறிவிட்டால்ராமனுக்கு மூக்கில் ரத்தம் வழிய ஆரம்பித்தது..ஜட்ஜின் வெள்ளை முடியில் புழுக்கள் நெளிய ஆரம்பித்தன..மூக்கிலிருந்து ஒரு வண்டு வெளியேறி வாயினுள் நுழைந்தது..அவனை பாம்புகள் கொத்த ஆரம்பித்தன..ராமன் ஐயோ ஐயோ என்று கத்த ஆரம்பித்தான் ராமன்.. இந்த சிறுவனை யாரேனும் பார்க்க வருவதென்றால்…ஏன் தாத்தா உன்ன யாருமே பாக்கவரலை? 50 வருஷமாச்சு…உனக்கு தண்டனை கொடுத்து..ஏன் நீ வெளியிலே வருவதற்கு முயற்சி செய்யல? இப்படி ஒன்னுமே பேசாம இருந்தா எப்படி? நீங்களும் நானும் ஒரே ஊர் தான் தெரியுமா? வார்டன் சார். என்னய்யா..அந்த மனநலகாப்பக ரெஜிஸ்டர் பாத்தோம்..யாரோ காசின்னு ஒருத்தர்..இவருக்கு மாமா முறை வேணுமாம்..அவருதான் ரெகுலரா கொஞ்ச நாளைக்கு வந்து பாத்திருக்கிறார்..யாரு காசியா?

என் பெயர் காசி..இங்க காப்பகத்துல இருக்கிற ராமனுக்கு நான் மாமா…என்ன கொண்டுவந்திருக்க அந்த லூசு பையலுக்கு..போ..அந்த கடைசில இருப்பான்..என்ன தான் பெறக்குவானோ..கீழ இருந்து கல்லு கல்லா பெறக்குதான்..திடீர்ன்னு மேலே நிமிந்து பாக்கான்..பின் ஐயோ ஐயோன்னு கத்..டேய் ராமா.. நான் காசி வந்திருக்கன்..டேய் ராமா..கல்லு பெறக்குனது போதும் இப்படி வந்து உக்கார்..கல்லா? நான் இளநி பெறக்குறேன்..அங்க உக்காராத மாமா..பாம்பு நெறைய இருக்கு..ம்ம்ம்..இந்தா தயிர்சாதம்….உனக்கு பிடிக்குமே..உனக்கு ஒன்னு தெரியுமா? சொன்னா உனக்கு புரியுமா? தடாலென்று அன்னாந்து வானத்தை பார்க்கிறான் ராமன்..உங்கப்பா ரங்கசாமி சாகலை தெரியுமா? ஹா ஹா ஹா ஹா..காசியா? அவரோட ஊரு பேரு? எதுனாலும் கெடச்சதா? இல்ல சார்.. தேடிட்டிருக்கோம்..நான் சொல்றேன்..அப்பாடா கிழம் பேசிருச்சு…காசி எனக்கு மாமா முறை வேணும்…என் மேல ரொம்ப பாசமா இருப்பார்..அவர் மட்டும் தான்..அவர் மட்டும் தான்..என்னை எப்படியும் வெளில கூட்டிட்டு போயிருவேன்னு சொல்லிட்டேயிருப்பார்.

தாத்தா…தாத்தா..காசி.. காசி இப்ப இருக்காரா? கிழம் சிரித்தது…காசியும் நடயனேரியில தான் இருந்தாரா? ஆமா எங்க வீட்டுக்கு பக்கம் தான்…அடுத்த தெரு.. அவர் தெக்குவீட்டுக்கு பக்கத்தில இருந்தார்..தெக்குவீடா? வார்டன் அவசர அவசரமாக தன் பர்ஸைத் திறந்து அதிலிருக்கும் போட்டோ ஒன்றை எடுத்து காட்டுகிறார்..இவரா..இ..இவரா..காசி.. ஆ..ஆமா..நான் தான் நீங்க சொல்ற காசி வடிவேல் முருகனுடைய பேரன்..காசி வடிவேல் முருகன் இந்த ஜெயிலுக்கு வார்டனா ரெண்டு மாசத்துக்கு முந்திதான் வந்தேன்… ராமன் சிரிக்கிறார். தாத்தா..எனக்கு உங்களை பாத்ததுமே ஏதோ ஒன்னு பிடிபட ஆரம்பிச்சது..ஏதோ ஒன்னு..ஏதோ ஒன்னு..

ஆ..ஆமா நானும் அப்பலேருந்து கேட்டுட்டே இருக்கேன்ல.. ஏன் நீங்க 50 வருஷமா இப்படியே இங்கேயே இருந்திட்டீங்க? வெளில வர முயற்சி செய்யலையா? சிரிக்கிறார் ராமன். சிரிக்கிறார். நான் லூசுப்பா..லூசு….இந்த லூச யாருமே கவனிக்கல..யாருமே..நான் இன்னும் அதிகமா முயற்சி செஞ்சிருக்கனும்னு இப்போ தோணுது..இப்போ தோணுது..

உறங்கும் பெண்

(சிறுகதை)

சுவாத் தலை குணிந்தாள், “என்னை கூறுபோட்டு என் மீது படிந்த கறையை வேகமாகத் துடையுங்கள்” என்று தன் தாயிடமும் தந்தையிடமும் தன் மூன்று சகோதரர்களிடமும் அவள் விழுந்து மன்றாடினாள். அவளுடைய தந்தை அமைதியாகவும் அழுத்தமாகவும் கேட்டார்” அப்படி என்னதான் நடந்தது. விளக்கமாகச் சொல்”. சுவாத்தினுடைய குரல் தளுதளுத்தது. “எனக்கு நடந்ததை நீங்கள் யாரும் நம்பப்போவதில்லை. நீங்கள் நம்பாமலிருந்தாலும் எனக்கு நடந்தது நடந்ததுதான்”

தந்தை மிகவும் கடினமான குரலில் “என்ன நடந்தது என்பதை எங்களுக்கு தெளிவாக எதையும் மறைக்காமல் சொல்” என்றார். சுவாத் தனக்கு நடந்த அனைத்தையும் விளக்கமாக சொல்லத்தொடங்கினாள்.

சென்ற இரவில் எப்பொழுதும்போல அவள் தன் அறையை பூட்டிவிட்டு தூங்கப்போனாள். அவள் தூங்கிக்கொண்டிருந்தபொழுது, வேறு உயிரனங்கள் ஏதும் இல்லாத ஏதோ ஒரு பூங்காவில் தான் நடந்துகொண்டிருப்பதைக் கண்டாள். திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு இளைஞன் அவளை தாக்கினான். அவளுக்கு அவன் யாரென தெரியவில்லை. அவன் இதுவரையில் எங்கே பதுங்கியிருந்தான் என்பதையும் அவள் அறிந்திருக்கவில்லை. அவன் அவளை கீழே விழ்த்தினான். அவள் மீது படர்ந்து அவளது ஆடைகளை கிழித்தெரிந்தான். அவளுடைய இறைஞ்சல்களையும்; அபய குரல்களையும்; அவர்கள் இருவரின் முகங்களையும் நனைத்துவிட்ட அவளுடைய கண்ணீரையும் அவன் கண்டுகொள்ளவும் இல்லை செவிமெடுக்கவும் இல்லை. அவனுக்கு தேவையானவற்றை அவளிடமிருந்து அவன் எடுத்துக்கொண்டான்.

அப்புறம் அவளுக்கு இரண்டாவது கனவு வந்தது. ஜனசந்தடி நிறைந்த தெரு ஒன்றில் அவள் நடந்துகொண்டிருந்தாள். அப்பொழுது முன்பு கனவில் வந்த அதே இளைஞன் அவள் முன் திடீரென குதித்து அங்கிருந்த எல்லோர் முன்னிலையிலும் அவளை பலாத்காரம் செய்தான். அரங்கேறிய பலாத்காரத்தை பார்ப்பதை அங்கிருந்த ஒருவரும் நிறுத்தவில்லை. அப்புறம் அவளுக்கு மூன்றாவது கனவு வந்தது. அவள் அவளுடைய தாத்தாவின் கல்லறைக்கு அன்று சென்றிருந்தாள். சூரத்-அல்-·பாத்திகாவை வாசித்து தாத்தாவின் ஆன்மாவை நினைத்து பிரார்த்தித்துக்கொண்டிருக்கும் பொழுது, அதே வாலிபன் அவள் முன் மீண்டும் தோன்றி அவளை மூன்று முறை பலாத்காரம் செய்ததைக் கண்டு அவள் அதிர்ச்சியுற்றாள். அவன் சிரித்துக்கொண்டே சொன்னான், சுற்றுப்புறச்சூழலின் அழகியல் தான் எனக்கு இவ்வாறான சக்தி தருகிறது.

அவளுடைய தந்தை அவளிடம் “அவன் யார் என்று உனக்கு தெரியுமா?” என்று கேட்டார். “அவன் யார் என்று எனக்கு தெரியாது. இதற்கு முன் என் வாழ்க்கையில் அவனை நான் பார்த்ததேயில்லை. அவனை கனவில் மட்டுமே பார்த்திருக்கும் பொழுது எப்படி நான் அவனை அறிந்திருக்கமுடியும்? ஆனால் இன்னொருமுறை அவனை நான் நேரில் பார்த்தால் கண்டிப்பாக அடையாளம் கண்டுகொள்வேன். ஏனென்றால் அவனுடைய முகத்தை என்னால் மறக்கமுடியாது” என்றாள் அவள்.

“சரி. நீ கனவு முடிந்து எழுந்திருக்கும் பொழுது என்ன நடந்தது?” என்றார் அவளுடைய தந்தை.
அவள் சொன்னாள் : “நான் என்னுடைய படுக்கையில் படுத்திருந்தேன். நான் அணிந்திருந்த உடை கிழிந்திருந்தது. என்னுடைய உடல் முழுவது ரத்தம் படர்ந்திருந்தது. ஆங்காங்கே நகக்கீறல்களும் பற்களை உபயோகித்து கடித்த தடங்களும் இருந்தன.”

அவளுடைய அன்னை சொன்னாள் “இவள் என்னுடைய மகள். இவளை நான் நன்றாக அறிவேன். இவள் ஆழமாக தூங்குகிறவள். பீரங்கி குண்டுகளின் சத்தங்கள் கூட இவளை எழுப்பிவிட முடியாது. நடந்து முடிந்த அனைத்திற்கும் தூக்கத்துக்கும் கனவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவள் தூங்கிவிட்ட பிறகு யாரோ ஒரு வாலிபன் அறைக்குள் ரகசியமாக நுழைந்து இவளை நாசம் பண்ணியிருக்கவேண்டும். ஆம் அதுதான் நடந்திருக்கும்”.

“நான்கு ஆண்கள் இருக்கும் இந்த வீட்டினுள் அப்படி நுழைய இந்த பகுதியில் இருக்கும் எந்த ஆணுக்கு துணிச்சல் இருக்கிறது?” என்று சுவாத்தின் தந்தை கர்ஜித்தார்.

சுவாத்தின் மூன்று சகோதரர்கள் கடும் கோபம் அடைந்து கத்தத்தொடங்கினார்கள். “அந்த இளைஞன் மட்டும் எங்கள் கையில் கிடைத்தால் அவனை துண்டுதுண்டாக வெட்டுவோம். வெட்டப்பட்ட ஒவ்வொரு துண்டும் உலர்ந்த திராட்சை பழங்களை விட மிகச்சிறியதாக இருக்கும்” என்று சூளுரைத்தனர்.

சுவாத் தன் அன்னையை பார்த்து “நீங்கள் சொல்லுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த ளிளைஞனை எனக்கு தெரிந்திருக்கும். ஏனென்றால் இந்த பகுதியிலிருக்கும் அனைத்து இளைஞர்களையும் நான் அறிவேன்” என்றாள் சந்தேகமாக.

சுவாத்தினுடைய தந்தை கேட்டார் “அது இருக்கட்டும். அவன் உன்னை பலாத்காரம் செய்யும் பொழுது ஒரு மானமுள்ள பெண் செய்வது போல நீ அவனை தடுத்து நிறுத்தினாயா? கத்தி கூப்பாடு போட்டாயா?”

“நான் தடுத்தேன். என்னால் முடிந்தமட்டும் சத்தமாக கத்தினேன். கதறினேன். கெஞ்சினேன். ஆனால் அவன் சிரித்தான். சிரித்துக்கொண்டே அவன் என்னிடம் நாம் கனவுலகில் இருக்கிறோம். உறக்கத்திலிருப்பவர்களின் உலகத்தை விழித்திருப்பவர்கள் அறியமாட்டார்கள் என்றானப்பா” என்றாள்.

நீண்ட யோசனைக்குப்பிறகு சுவாத்தின் தந்தை உடைந்த குரலில் நடந்ததை பற்றி அவள் யாரிடமும் மூச்சுவிடக்கூடாது என்று சுவாத்தை எச்சரித்தார்.

ஆனால் சுவாத்துக்கு நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியிலிருக்கும் வேறு பெண்களுக்கும் நடக்கும்; ஆண்கள் சிறுமைப்படுத்தப்படுவர்; அவர்களை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க இயலாத ஒரு கையறுநிலைக்கு அந்த ஆண்கள் தள்ளப்படுவார்கள்; எனவே இதற்கு தீர்வாக அவர்கள் தங்களது பெண்டு பிள்ளைகளை தூங்கவிடாமல் தடுப்பார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் தோற்றுத்தான் போகும். ஏனென்றால் பெண்கள் தூங்குவதற்கு கடமைப்பட்டவர்கள். தூக்கத்தில் அவர்கள் பலாத்காரம் செய்யப்படுவார்கள். கிழிந்த உடையுடன் தூக்கத்திலிருந்து அவர்கள் விழித்தெழுவார்கள்.

*

-எஸ்.ராமகிருஷ்ணன் தனது வலைபக்கத்தில் இந்த Zakaria Tamer எழுதிய The Sleeping Woman என்கிற இந்த கதயை குறிப்பிடிருந்தார். அதை யாரெனும் பொழுபெயர்த்துத் தருமாறும் கேட்டிருந்தார். என்னால் முடிந்தவரையில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

முடியாமல் நீளும் நாட்கள்

(சிறுகதை)

திடுக்கிட்டு விழித்தேன் நான். கழுத்தில் வியர்வை. முகத்தை துடைத்துக்கொண்டேன். திரும்பி படுத்தேன். கைவிரல்கள் நடுங்குவதைப் போல இருந்தது. அந்த நிசப்த இரவில் மின்விசிறியின் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. அந்த மின்விசிறி சுழலும் போது ஏற்படும் டக் என்ற ஓசை கேட்கும் ஒவ்வொரு முறையும் எனக்குள் ஒரு அதிர்வு ஏற்பட்டது. கதவு எனக்கு பின்னால் இருக்கிறது. நான் ஜன்னலைப் பார்த்து படுத்திருக்கிறேன். ஜன்னலின் திரைச்சீலை மின்விசிறியின் காற்றுக்கு அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் பயமாக இருந்தது. டேபிள் லேம்ப்பை போட்டேன். அருகிலிருந்த கடிகாரம் மணி மூன்று என்று காட்டியது. மூன்று தானா? இன்னும் எத்தனை மணி நேரம் இருக்கிறது? திரும்பிப் படுத்தேன். போர்வையை முழுவதுமாக போர்த்திக்கொண்டேன். போர்வைக்குள் இருந்து கொண்டு அது என்ன நிறம் என்பதை கண்டுபிடிக்க முயன்றேன். இருட்டு என்பதால் போர்வையின் நிறம் என் கண்களுக்கு சரியாக தெரியவில்லை. என் போர்வையின் நிறம் எனக்கு தெரியாதா என்ன? பச்சை. பச்சை எனக்கு மிகவும் பிடித்த நிறம் கூட.

போர்வையை முகத்திலிருந்து விலக்கினேன். இனி தூக்கம் வராதோ? கதவு சாத்தியிருந்தது. அதோ அந்த கதவுகளுக்கு அருகில் யாராவது நிற்கிறார்களா என்ன? எனக்கு திக் என்றது. இல்லை. யாரும் இல்லை. யாரோ அருகில் உட்கார்ந்திருப்பதை போல தோன்றவே டக் என்று திரும்பிப் பார்த்தேன். யாரும் இல்லை. மீண்டும் வியர்வைத் துளிகள். எழுந்தேன்.

சன் டீவியில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. “எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே”. அப்படியே உட்கார்ந்திருந்தேன். பரவாயில்லை நல்ல பாடல்களாத்தான் போடுகிறார்கள். வேறு வேறு பாடல்கள். வேறு வேறு முகங்கள். வேறு வேறு குரல்கள். வேறு வேறு சானல்கள். டீவிக்கு அருகிலிருந்த அந்த சின்ன கடிகாரத்தில் மணி காலை 6 ஆகிக்கொண்டிருந்தது.

***

என்னடா சரியா தூங்கலையா? இல்ல. கண்ணெல்லாம் சிவந்திருக்கு. ம்ம்..இஸ் இட்? நேத்து உனக்கு கல்யாணமா இல்ல சங்கீதாக்கு கல்யாணமா? அவளுக்கில்ல கண் சிவந்திருக்கணும். உனக்கு ஏன் சிவந்திருக்கு? இருவர் சிரித்தனர். நாட் சோ ·பன்னி. அவன் தோள்களை குலுக்கிக்கொண்டான். ரிலீஸ் டேட் எப்பன்னு சொன்னாரா சரா? நோப். ஐ டோன்ட் நோ. ம்ம்..ஓகே தென். லெட்ஸ் கோ ·பார் கா·பி. ஸ்ஸ¤யர்.

சங்கீதா என்னைக்கு ஆபீஸ¤க்கு வர்றா? நான் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். டேய் உன்னத்தான்டா. எனக்கு சுரீர் என்றது. ஹவ் ஆம் ஐ சப்போஸ்ட் டு நோ? ஏன்டா இவ்வளவு கோபப்படுற? ஏய் கீதா..சங்கி எப்படி வர்றா? ஐ கெஸ் நெக்ஸ்ட் மன்டே. நாட் ஸ¤யர். ஓவ் ஓக்கே. காப்பி சூடாக இருந்தது. காப்பியின் வாசனை மூக்கை வந்தடைந்தது. நான் ஒரு சிப் குடித்தேன். டேய். சுகர் போடல. இட்ஸ் ஓக்கே. ஐ வில் டேக் இட் ப்ளாக். அவன் என்னை விசித்திரமாக பார்த்ததை கீதா கவனித்தாள். நான் எழுந்தேன். ஓக்கே நான் என் சீட்டுக்கு போறேன். சீ யூ ஆல் அட் லஞ்ச். சீயூ. என் காலடி சத்தம் எனக்கு தெளிவாக கேட்டது. பின்னால் கீதாவின் குரல் ஒலித்தது. நானும் போறேன். டேய் கண்ணா. நில்லு நானும் வர்றேன்.

கீதா என் கைகளை பிடித்தாள். ஆர் யூ ஒக்கே கண்ணா? ய்யா..ஐயாம் ஆல்ரைட்.

***

தூங்கினேனா? இல்லையா? எழுந்து உட்கார்ந்தேன். டேபிள் லேம்ப்பை போட்டேன். மணி என்ன? ஒன்று. ஷிட். அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து சுத்தமாக குடித்து முடித்தேன். பாத்ரூம் வருவதைப் போன்று இருந்தது. போகணுமா? படுத்துக்கொண்டேன். பாத்ரூம் போகணுமா?

வெளியில் வந்து ·ப்ரிட்ஜை திறந்து தண்ணீர் எடுக்கும் பொழுது டாய்லட்டின் ·ப்ளஷ் நிரம்பியிருந்திருக்க வேண்டும். ப்ரிட்ஜ் கொஞ்சம் ஜில்லென்று இருந்தது. டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டேன். ப்ரிட்ஜை மீண்டும் திறந்து ஒரு ஆப்பில் எடுத்தேன்.

“தாமரைக் கண்ணங்கள்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. சானலை மாற்றினேன். குங்·பூ பற்றிய டாக்குமென்டரி ஓடிக்கொண்டிருந்தது. அடுத்த சானல். மெகா ஸ்ட்ரக்சர்ஸ். எழுந்து போய் காப்பி போட்டுக்கொண்டு வந்தேன். மணி காலை ஐந்து. சோப்பாவிலே உட்கார்ந்து கொண்டேன்.

டொக் டொக் டொக். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங். ஷிட். திடுக்கிட்டு எழுந்தேன். நல்ல வெளிச்சமாக இருந்தது. கண்களை திறக்க முடியவில்லை. மணி எத்தனை? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்.காலிங் பெல்லா? லாக்கை திறந்து, கதவைத் திறந்தேன். சார். ஆப் ஹிந்தி மாலும் ஹை? தோடா தோடா..ஏ சாப்..குட் குவாலிட்டி பேண்ட் பிட்ஸ் சார்..இல்லப்பா வேண்டாம்..சார் ஒரிஜினல் சார்..வேண்டாம்ப்பா…கதவைச் சாத்தினேன்…சாப்…சாப்..ஏதோ புரியாத படிக்கு முனகினான்..

மணி 11. குட். வெரி குட். என் செல் போனைத் தேடினேன். தலையணைக்கு கீழே இருந்தது. டூ மிஸ்ட் கால்ஸ். முதல் கால் யாரிடமிருந்து என்று தெரியவில்லை. இரண்டாவது கீதாவிடமிருந்து. பிறகு ஒரு மெஸேஜ்: இடியட் கால் மீ.

நான் கால் பண்னவில்லை. சராவுக்கு மட்டும் நாட் ·பீலிங் வெல் என்று மெஸேஜ் அனுப்பினேன். அருகிலிருந்த ஆந்த்ரா மெஸ்ஸில் நல்ல சாப்பாடு. பிறகு மதியம் நல்ல தூக்கம்.

***

கண்களை மெதுவாக திறந்து பார்த்தேன். எனக்கு எரிச்சலாக இருந்தது. அகெய்ன். ****. வாட்ஸ் த டைம் நௌ? மணி ஒன்று. ****. வாட் த ஹெல்! திரும்பிப் படுத்தேன். முருகா முருகா முருகா முருகா…ஒன் டூ த்ரீ ·போர்..ஒன் ஹன்ட்ரட் செவண்ட்டி ஒன்..ஓ மை காட்..

ஹால். டீவி. இடைவிடாது ஒளிபரப்பப்படும் கலர்·புல் சாங்க்ஸ். த ஸ்டுபிட் லவ் சாங்க்ஸ். ப்ளடி ஸ்டுபிட் அண்ட் இடியாடிக்..

என் ·போனை எடுத்தேன்..வாய்ஸ் மெயிலுக்கு மெசேஜ் செட் பண்ணவேண்டும்.. எனிவே இன்னைக்கு தூக்கம் வரப்போறது இல்ல..ஐ வில் டூ திஸ்..
ஹாய் திஸ் இஸ் கண்ணன் சுப்ரமணியன்.ஐ யாம் பிஸி.. நல்லாயில்ல..
ஹலோ திஸ் இஸ் கண்ணன் ஹியர்..ஐ யாம் பிஸி அட் திஸ் மொமன்ட் கேன் யூ கால் மி பேக்..சோ ஸ்டுபிட்.. ஹா ஹா ஹா..ப்ரட்டி வியர்ட் டு ஹியர் மை ஓன் வாய்ஸ்..நாட் ஸோ பேட்..பட் டெரிபிள்..
யூ ஹேவ் ரீச்ட் கண்ணன் சுப்ரமணியன்..ஐ யாம் நாட்..

இன·ப்.

வைகாசி நிலவே..வைகாசி நிலவே..ஐ லைக் திஸ் ஸாங்.என்னோட ·போனின் ரிங் டோனும் இந்த பாடல் தான்.. இன்·பாக்ட் ஐ லைக் திஸ் கேர்ள்….வாட்ஸ் ஹெர் நேம்..சாந்தி..நோ..ஜெயம் படத்தில நடிச்சாளே..ஜெயம் ரவி ஓகே..ஹீரோயின்..ஜெயம்..ஜெயம்..ஜெயம்…இங்க நிக்குது ஆனா வரமாட்டேங்குது..அந்நியன்ல கூட நடிச்சாளே..விக்ரம் அன்ட்..வாட் த ****…ஜெயா? நோ..ஐ ஆம் ஹேவிங்..ஷார்ட் டேம் மெமரி லாஸ்..மை செர்ச் இஸ் நாட் ·பங்க்சனிங் ப்ராப்பர்லி..

ஹ¥ எவர் ஷீ இஸ்..லீவ் ஹெர் அலோன்..

என்னுடைய புக் ஷெல்·பில் தேடி Norwegian Wood எடுத்தேன். பெட்டுக்கு வந்து டேபில் லாம்ப் வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தேன்.

அலாரம் அடித்தது. மணி காலை ஏழு. புத்தகத்தை மூடி வைத்தேன்.

காலை வரைக்கும் வைகாசி நிலவே பாடலுக்கு நடித்த அந்த நடிகையின் பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை. வரவேயில்லை.

***

மேன் யூ லுக் டெரிபில். கெட் சம் ஸ்லீப். நான் ஒன்றும் சொல்லவில்லை. என் இடத்தில் போய் உட்கார்ந்தேன். டெஸ்க் ·போன் அடித்தது. யெஸ். ஹாய் கண்ணா என்னடா ஆச்சு? ஒன்னும் ஆகல. ஆர் யூ ஸ¤யர்? அ·ப் கோர்ஸ். என்னாச்சு நேத்து? உடம்புக்கு முடியல. அதான் என்னாச்சுன்னு கேக்கறேன். ஜஸ்ட் நாட் இன் எ மூட். உடம்புக்கு சரியில்லன்னு சொன்ன? நான் ஒன்றும் சொல்லவில்லை. நேத்து சங்கீதா எனக்கு கால் பண்..டொக்.

என் விரல்கள் கொஞ்சம் நடுங்கின. திரை கொஞ்சம் மங்கலாக தெரிந்தது. கண்ணாடியை துடைத்துக்கொண்டேன். மீண்டும் டெலிபோன் மணி அடித்தது. நான் எழுந்து சென்று விட்டேன்.

ஆ·பீஸ் கா·பி மெசினில் டபுள் ஷாட் கப்புசினோ போட்டுக்கொண்டு வந்தேன். என்னுடைய டெஸ்க்டாப்பில் மணி பார்த்தேன்..4:40…தூக்கம் தூக்கமா வருது..இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கிறது..இந்த நாள் முடிவதற்கு..பிறகு இரவு…எனக்கு இரவு என்பது மற்றும் ஒரு பகல் தான்..மீண்டும் பகல்..அதை தொடர்ந்து மீண்டும் பகல்..நாட்கள் முடிவதே இல்லை…

***

என் மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்து, யேசுதாஸின் இனிய குரலில் ஓம் ஒலிக்கவிட்டேன். ஓம் ஓம் ஓம் ஓம்..சோ..கம்·பர்டிங்..ஐ ·பீல் லைக் ·ப்ளையிங்..ஐ லாஸ்ட் மை கான்ஸியஸ்னஸ்..

வைகாசி நிலவே வைகாசி நிலவே..என்னோட ·பேவரிட் சாங்..மை பூசி வைத்திருக்கும் கண்ணில்..வைகாசி நிலவே வைகாசி நிலவே..ம்ம்..வைகாசி நிலவே வைகாசி நிலவே…ஹாங்.. என் குல்ட்க்குள்ளிருந்து கையை மட்டும் நீட்டி டேபிள் லேம்ப்பை ஆன் செய்தேன்..தடவி என் செல்போனை எடுத்தேன்.என் கண்ணாடி கீழே விழுந்தது..உடைந்ததா இல்லையா தெரியவில்லை…வைகாசி நிலவு நின்றது..ஹலோ..யெஸ்..ஷிட்..**** யூ..ப்ளடி **..ராங் நம்பர்..எனக்கு போனை தூக்கி போட்டு உடைக்கவேண்டும் போல இருந்தது..காஸ்ட்லியான ·போன்..மணி பார்த்தேன்..பதினொன்றே கால்..இன்னைக்குதான் தூங்கினேன்..

மறுபடியும் ஓம். ஓம். ஓம்..
ஓம் முடிந்தது. ரீஸ்டார்ட். ஓம் ஓம் ஓம்.
ரீஸ்டார்ட்.ரீஸ்டார்ட்..

டிட் ஐ ஸ்லீப் பிகாஸ் ஆ·ப் ஓம்? ஐ கெஸ் நாட். யெப்.

***

டேய் மணி என்னடா ஆச்சு உனக்கு? இந்நேரம் கால் பண்ற? டேய் தம்பி நல்லாயிருக்கியாடா? நாங்க நல்லாயிருக்கோம்பா..ம்ம்..அப்பா நல்லாயிருக்குறார்டா..கூப்பிடட்டா..ம்ம்..சொல்லுடா..சாப்டோம்டா..நீ இன்னும் ஏன் தூங்காம இருக்க..வேலை அதிகமா? தூங்குடா தம்பி..ம்ம்..சரி..வெச்சுடவா?

***

ஓகே..ஐ வில் கிவ் மெடிசின்ஸ் ·பார் யுவர் ஸ்லீப்லெஸ்னெஸ்..யூ கேன் வெயிட் அவுட்சைட்….டாக்டர் ஐ நீட் எம்சி….வாட்? ஐ கேன்ட் கிவ் யூ எம்சி ·பார் இன்சோம்னியா..த கம்பெனி வில் க்வஸ்டீன் மீ..எனிதிங் எல்ஸ் இஸ் ஓகே..டயரியா..டிசன்ட்ரி..பட் நாட் இன்சோம்னியா..ப்ளீஸ் வெயிட் அவுட்சைட் டு கெட் த மெடிசின்ஸ்..கெட் சம் ஸ்லீப் டியர்..
டேக் கேர்..

யூ **** ரியலி கேர்..

***

முழித்துப்பார்த்தேன். எங்கும் இருட்டு. என் அறைக்குள் கதவிடுக்கின் வழியாக மஞ்சள் ஒளிக்கீற்று. மஞ்சள் என் ஹால் பல்பிலிருந்து வெளிவரும் அபூர்வ வெளிச்சம். ஏன் லைட் எரிகிறது? நான் ஆ·ப் செய்யவில்லையா? கதவின் கீழ் நிழல். நிழல் இங்கும் அங்கும் நடக்கிறது. என்னை அழைக்கிறது. என் கதவை தட்டுகிறதா? யார் இந்நேரத்தில் நடக்கிறார்கள்? யாரும் இந்த வீட்டில் இல்லையே? மிக மெதுவாக எழுந்தேன். தலை சுற்றுவது போல இருந்தது. பூமி நிலையாக இல்லை. தரை சில்லிட்டிருந்தது. என் பாதங்கள் சூடாக இருக்கின்றனவா? நான் எழுந்து நிற்கவும் கதவு தாழ் விடுவிக்கப்படும் கிளிக் ஓசையும் ஒன்றாக நடந்தது என்று நினைக்கிறேன். படுக்கை அறை முழுவதும் மஞ்சள் ஒளி வெள்ளம். யாரோ நிற்கிறார்கள். வாசலில் நிழல் தெரிகிறது. ஒல்லியான தேகம். தலை பரட்டையாக இருக்கிறதோ? யாரிவர்? யார் நீங்க? ராஜா நான் தான்டா.. இங்க வா..அவர் வேகமாக வெளியேறினார். நான் பின் தொடர்ந்தேன்..என் மாமா..ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன என்னுடைய மாமா..கோல்ட் மெடலிஸ்ட்..பிஎஸ்ஸி மேத்ஸ்..பெரிய ப்ளாஸ்டிக் கம்பெனியில் வேலை..கை நிறைய சம்பளம்..காதல் திருமணம்..ஆசையாய் காதலித்த மனைவி சரியில்லை..குடி..மேலும் குடி..மேலும் குடி..நிராகரிப்பு..குடி..மேலும் குடி..டேய் ராஜா..குரல் ஒலித்தது..இங்கவா..நான் என் அறையிலிருந்து வெளியேறவும் அவர் பக்கதிலிருந்த அறைக்கு சென்றுவிட்டார்..மஞ்சள் ஒளி வெள்ளம் மறைந்தது..இருள்..கடும் இருள்..பிட்ச் டார்க்..எனக்கு விக்கியது..இப்பொழுது என் மாமா நுழைந்த அறைக்குள்ளிருந்து மஞ்சள் ஒளி வெள்ளம்..காட் டாமிட்..

டீவியை ஆன் செய்தேன்..பிரவுதேவா ஆடிக்கொண்டிருந்தார்..இவருக்கெல்லாம் தூக்கம் நன்றாக வருமோ என்கிற எண்ணம் என்னுள் எழுந்தது..இந்நேரம் மணி தூங்கிருப்பானோ? மெக்கெயின் ஏன் தோற்றார்? ரஜினி எந்திரனா தந்திரனா? பார்….க்க்க்க்..ல்ல்ல்ல்லேஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…பாங்க்ரப்ட்ஸி…மெரில்லிஞ்ச்..த பபிள் மஸ்ட் பர்ஸ்ட்..ஹக்…எம்பிஏ..புல் ஷிட்..எம்பிஏ தூங்கிருப்பானா? எனக்கு மெடிக்கல் சர்டிபிக்கேட் கொடுத்தானே..ச்சீ..கொடுக்க மாட்டேன்னு சொன்னானே அந்த சொட்டத்தலை டாக்டர் அவன் தூங்கிருப்பானோ..ஹவ் நைஸ்..அவனுக்கு எம்சி யார் கொடுப்பா? எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..நதி போல தூங்கிக்கொண்டிரு..விச் ஒன் இஸ் பெட்டர்.. டைப்ட் டேட்டா செட் ஆர்..யூ ஹேவ் டு கோ டு ஹெல்..கெட் சம் ஸ்லீப்..கெட் சம் பிரிட்டானியா மில்க் பிக்கீஸ்..ஓ மை காட்..ஓ மை காட்

***

ஐயோ என் கால்கள்..ஐ கேன்னாட் **** மூவ் மை லெக்ஸ்..மை லெக்ஸ் ஹேவ் கான் நம்ப்..ஐ காட் பாராலிஸிஸ்..ஒ மை காட்..என்னால் கைகளை அசைக்க முடிகிறது..மிகுந்த சிரமப்பட்டு..எழுந்து நின்றேன்..தலை தெறிக்க ஓடினேன்..கதவை திறக்க முடியவில்லை..ஓ **** ஸம் ஒன் ஹேஸ் லாக்ட் மை டோர்..**** ஸ்டுபிட்..தட தட தடவென்று தட்டினேன்..ஸம் ஒன் ப்ளீஸ் லெட் மீ அவுட்..கதவு திறந்துகொண்டது…ஸம் ஒன் ஹேஸ் அன்லாக்ட் த டோர்…ஹ¥ த ஹெல்..ஐயோ..சட்டென்று நின்றேன்..மை லெக்ஸ் ஆர் ஓகே..தேர் இஸ் நோ ஒன் எல்ஸ் இன் திஸ் ஹவுஸ்..எனக்கு வியர்த்து வழிந்தது..யாருடனாவது பேசவேண்டும் போல இருந்தது..வீட்டுக்கு கால் செய்தால்..எல்லோரும் ஏன் இன்னும் தூங்கலன்னு கேள்வி மேல கேள்வி கேட்ப்பாங்க..தண்ணீர் குடித்தேன்..நிறைய..என் உடம்பு முழுவதும் நனைந்துவிட்டது..தண்ணீராலா? வியர்வையாலா? வாட் டு டு நௌ?

யூ நோ? மை பெஸ்ட் ·ப்ரண்ட் இஸ் மை இடியட் பாக்ஸ்..!

“உனக்காத்தானே இந்த உயிர் உள்ளது..உன் துயரம் சாய என் தோள் உள்ளது..” சேனல் ச்சேஞ்..

***

கயிறு நீண்டு கொண்டே போகிறது..சில இடங்களில் வழுக்குகிறது..ஐ ஆம் நாட் ஏபில் டு ஹோல்ட் த ரோப்..பட் ஐ ஹேவ் டு..மேலே நிமிர்ந்து பார்த்தேன்..வட்டமாக வெளிச்சம்..கீழே வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டு வருகிறது..காற்றில் ஈரப்பசை அதிகரித்துக்கொண்டே வருகிறது..ஸ்டில் ஐ ஹாவின்ட் ரீச்ட் த க்ரவுண்ட்..எனக்கு வியர்க்கிறது..தட் என்று திடமான மணல் மீது என் கால்கள் மோதுகின்றன..குட்..அட் லாஸ்ட் சம் ஸ்டேபிள் க்ரவுண்ட்..கயிற்றை விட்டுவிடலாமா? யாராவது மேலேயிருந்து உருவிக்கொண்டால்? அப்படி யாராவது செய்வார்களா என்ன? மேலே பார்த்தேன்..வட்டமான வெளிச்சம்..வட்டம் சுற்றளவில் குறைந்திருந்தது..நிறைய..

உடார்ந்து கொண்டேன்..அமைதி..பேரமைதி.. ஐயோ யாரோ கிணற்றை மூடுகிறார்கள்..ஹலோ நான் உள்ளே இருக்கிறேன்..டோன்ட் க்ளோஸ் த ஸ்டுபிட் வெல்..ஹலோ..கிணறு மூடப்பட்டது..டப் என்று என் மீது ஏதோ விழுந்தது..பாம்பு போல இருந்தது..ஐயோ..நோ திஸ் இஸ் நாட் ஸ்னேக்.. இது கயிறு..கயிறு அறுபட்டுவிட்டது..சுத்தமாக..மேலே போவது மிகவும் கடினம்..கடினமா? டோட்டலி இம்பாஸிபிள்..நான் தவறு செய்துவிட்டேன்..ஐ வில் வெயிட்..யாராவது கிணறை திறக்கும் வரையில் நான் காத்திருப்பேன்..ஸம் ஒன் ப்ளீஸ் ஓப்பன் த டோர்..நோ..ஓப்பன் த வெல்..போர்ன்விட்டாவா? கிணறில் தண்ணீருக்கு பதில் போர்ன்விட்டா இருக்கிறதா..ஐ லவ் போர்ன்விட்டா..அம்மா கொடுப்பார்கள்..எனக்கு ரொம்பவும் பிடிக்கும்…இன்னொரு மாத்திரை ப்ளீஸ்..பென்ஜோடயாஜிப்பைன்..ஒன் மோர் ப்ளீஸ்.. உனக்காகக்தானே இந்த உயிர் உள்ளது..உன் துயரம் சாய என் தோள் உள்ளது..முடியாமல் நீளும் நாட்கள்… என்றும் இல்லை..

***

வைகாசி நிலவே..வைகசி நிலவே..மை பூசி வைத்திருக்கும் கன்ணில் பொய் பூசி வைத்திருப்பதென்ன..வெட்கத்தை உடைத்தாய் கைக்..
வைகாசி நிலவே..வைகசி நிலவே..மை பூசி வைத்திருக்கும் கன்ணில் பொய் பூசி வைத்திருப்பதென்ன..வெட்கத்தை உடைத்தாய் கைக்..
வைகாசி நிலவே..வைகசி நிலவே..மை பூசி வைத்திருக்கும் கன்ணில் பொய் பூசி வைத்திருப்பதென்ன..வெட்கத்தை உடைத்தாய் கைக்..

யூ ஹேவ் ரீச்ட் கண்ணன் சுபரமணியன்..ஐ யாம் நாட் அவைலபிள் அட் திஸ் மொமன்ட்..ப்ளீஸ் லீவ் யுவர் நேம் அன்ட் நம்பர்..ஐ வில் கால் யூ பேக் அஸ் ஸ¥ன் அஸ் பாசிபிள்..தேங்க்யூ..

***

அடைத்தோசையும் அண்டங்காக்காயும்

(சிறுகதை)

ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்துச்சாம். அந்த காக்காவுக்கு காலையில் இருந்து சாப்பிடறதுக்கு ஒன்னுமே கிடைக்கலையாம். சரி பக்கத்து ஊர்லயாச்சும் போய் ஏதாவது கிடைக்குதான்னு பாக்கலாம்னு கெளம்புச்சாம். கெளம்புன காக்கா கொஞ்ச நேரத்துல டேக் டைவர்சன் போர்ட்களை பார்த்து பார்த்து வேற ஒரு ஊருக்கு வந்துருச்சாம். வீட்லயே தண்ணி குடிக்காம வந்த காக்காவுக்கு தண்ணி ரொம்ப தவிச்சதாம். எங்கனாச்சும் தண்ணி கிடைக்குமான்னு பாத்த காக்காவுக்கு ரொம்ப ஏமாத்தமா போச்சாம். எங்கயுமே தண்ணி இல்ல. அலைஞ்சு திரிஞ்சு ஜகந்நாதன் நகர் ·ப்ர்ஸ்ட் ஸ்டீரீட்ல இருக்கிற ஒரு மொட்டை மாடியில வந்து உக்காந்துச்சாம் அந்த காக்கா. அந்த மொட்டை மாடியில ஒரு பையன் சிகப்பு கலர் சேர்ல உக்காந்து ஏதோ புத்தகத்த வெச்சு படிச்சுட்டிருந்தானாம். அந்த காக்கா அவன் வெச்சிருக்கிறது என்ன புத்தகம்ன்னு பாக்கறதுக்கு முயற்சி பண்ணுச்சு. ஆனா முடியல. அப்பத்தான் ஒரு பொண்ணு படி ஏறி அந்த மொட்டை மாடிக்கு வந்துச்சு. அந்த பொண்ணு கையில ஏதோ வெச்சிருந்துச்சு. வேகவேகமா வந்த அந்த பொண்ணு அந்த பையன் கிட்ட ஏதோ பேசுச்சு. பசியினால காக்காவுக்கு காதடச்சுக்கிச்சு. அவங்க பேசினது எதுவுமே கேக்கல. ஆனா அந்த பையனோட முகத்தில தெரிஞ்ச திகில வெச்சு கண்டிப்பா அவன் அந்த பொண்ணோட ஹஸ்பெண்டாத்தான் டூட்டி பாத்திட்டிருப்பான்னு தெரிஞ்சிகிடுச்சு அந்த காக்கா.

பேசி முடிச்சிட்டு அந்த பொண்ணு மொட்டை மாடியோட ஒரு மூலையில செவத்துமேல கையில வெச்சிட்டிருந்த அந்த அடைத்தோசையை வெச்சது. வெச்சிட்டு அந்த பொண்ணு பாட்டுக்கு நடக்க ஆரம்பிச்சுடுச்சு. மொட்டை மாடியில வாக்கிங் போக வந்திருக்கு போல. ஆமா நாம வானத்தில பறக்கறப்பவே இந்த ஆட்டோக்காரர்கள் “தள்ளி நடம்மே பேமாணி”ன்னு சொல்றப்ப, பாவம் இந்த பொண்ணுக்கு ரோட்ல நடக்க எங்க இடம் கிடைக்கும்? மொட்டைமாடியில தான் நடக்கனும். சாப்பாடு வெச்சா மட்டும் போதுமா? கூப்புட வேணாமான்னு ரொம்ப கோபபட்டுச்சு காக்கா. ஆனாலும் பசி வயித்த கிள்ளுனுதால பரவாயில்ல சின்ன பொண்ணுதானன்னு மன்னிச்சு விட்டுட்டு அந்த அடைத்தோசைய சாப்புட ஆரம்பிச்சது காக்கா. மொதல்ல கொஞ்சம் புளிக்கிற மாதிரி இருந்தாலும் பசின்னால அதுக்கு ஒன்னும் புரியல மாங்கு மாங்குன்னு திண்ணுச்சு. ஆனா தன்னை பாவமா பாத்திட்டிருக்கிற அந்த பையனை அந்த காக்கா கவனிக்கவேயில்ல. அதுக்குள்ள இன்னும் சில காக்காய்கள் அங்க சுத்த ஆரம்பிச்சிருச்சுக. ஆனா இந்த மொட்டை மாடிக்கு பக்கம் வரவேயில்ல ஒன்னு கூட. எல்லாம் பக்கத்தில இருக்குற BSNL டவர் மேல உக்காந்துகிடுச்சுக.

இந்த காக்கா தான் பசியோட இருந்தாலும் மத்த காக்காய்கள சாப்பிட கூப்பிட்டுச்சு. காக்கா மனுசன் கிடையாது பாருங்க, யாரு சாப்பிட்டா என்ன சாப்பிட்டா என்னன்னு இருக்க. ஆனா இந்த காக்கா இவ்வளவு கூப்பிட்டும் மத்த காக்காக ஒன்னு கூட கண்டுக்கிடல. இது கத்தின கத்தல்னால பக்கத்துல சிகப்பு சேர்ல உக்காந்து படிச்சிட்டிருந்த பையன் கடுப்பாகி புத்தகத்தை சட்டுன்னு கீழ வெச்சான். ச்சூ ச்சூ ன்னு அந்த காக்காய விரட்டினான். பிறகு எழுந்து கீழே போனான். சாப்பிட்டது போதும்னு நினைச்ச காக்கா பறக்க தயாராச்சு. அப்பத்தான் அவன் வெச்சிருந்த புத்தகத்த பாத்துச்சு அது ஏதோ கவிதைகள்ன்னு மட்டும் தான் பாத்துச்சு. யார் எழுதினதுன்னு தெரியல. அடைத்தோசைய தின்னாலாவது செமிச்சிடும் இந்தக்காலத்து கவிதைகள்? நமக்கெதுக்கு வம்புன்னு நினைச்ச காக்கா பறக்க முயற்சி பண்ணுச்சு. அதால முடியல. கொஞ்ச தூரம் பறந்துட்டு முடியாம அந்த பையன் வெச்சிருக்கிற புத்தகத்துக்கு பக்கத்துல வந்து உக்காந்துச்சு. காத்துல புத்தக்கத்தோட பக்கங்கள் பறந்துச்சு. ஆர்வக்கோளருல அந்த கேப்ல காக்கா ஒரு கவிதை படிச்சது. கவிதைய படிச்சதுதான் தாமதம், காக்காவுக்கு தலை சுத்த ஆரம்பிச்சிருச்சு. வயிறு குமட்டிட்டு வந்துச்சு. காக்கா அடைத்தோசையை திரும்பி பாத்துச்சு. தான் சாப்பிட்டது போக மீதம் அப்படியே இருந்துச்சு. திரும்பி கவிதை புத்தகத்த பாத்துச்சு. காக்காவுக்கு வாமிட் வர்ற மாதிரி இருந்துச்சு. ஆனா வாமிட் அடைத்தோசைனாலயா இல்ல இப்ப படிச்ச கவிதைன்னாலையான்னு காக்காவுக்கு தெரியல. அப்பத்தான் ஒரு விசயத்தை கவனிச்சது அந்த காக்கா: ஏன் அடைத்தோசைய பாத்தும் நாம கூப்பிட்டும் எந்த காக்காவும் இந்த வீட்டு மொட்டைமாடிக்கு சாப்பிட வரல? நம்மாளுக சாப்பாட்ட பாத்தவுடனே எங்கிருந்தாலும் கும்பலா பறந்து வந்திடுவாங்களே?!

***

பயங்கர அத்துவான காடு. எங்கும் கும்மிருட்டாத்தான் இருக்கனுங்கற அவசியம் இல்லாததால கொஞ்ச வெளிச்சமா இருந்துச்சு. அங்க பாமரும், பட்சனரும் தங்கள் கையில் இருக்கிற வில்லை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டிருந்தனர். பட்சனர் கேட்டான்: அண்ணா? என்னா? எனக்கு ஒரு சந்தேகம்? சொல்! பாமானந்த் பாகரின் நாடகத்தில் பாமராக நடிக்கும் அந்த கோமாணந்தபாண்டி எப்படி இவ்வளவு கனமான வில்லையும் தூக்கிக்கொண்டு எப்பொழுதும் சிரித்துக்கொண்டேயிருக்கிறான், நீங்கள் இப்படி திணருகிறீர்களே? கோபமான பாமர், பட்சனரை நோக்கி “நீ அடுத்த பிறவியில் அந்த பாமானந்த் பாகராக பிறக்க கடவது” என்கிற சாபத்தை தூக்கிப்போட்டார். அதிபுத்திசாலியான பட்சனர் டக்குன்னு விலகினதால, பக்கத்துல இருந்த புல் மீது அந்த சாபம் விழுந்தது. (பாமரிடம் சாபம் வாங்கியதால் தான் பாமானந்த் பாகரின் குடும்பம் விடாமல் பாமரைப் பற்றிய நாடகங்கள் எடுத்து அதில் கொஞ்சமும் விளங்காத கோமணந்த பாண்டி போன்றோரை பாமராக நடிக்க வைத்து தங்களது பழியை தீர்த்துக்கொள்கின்றனர் என்பது வேறு ஒரு கிளைக்கதை)

பாமரும் பட்சனரும் வில் வித்தை மற்றும் பல் வித்தையில் (சிரித்துக்கொண்டேயிருப்பது) கைத் தேர்ந்தவர்கள் என்பதால் தைரியமாக அந்த காட்டில் நடந்து திரிந்தனர். அப்பொழுது அந்த பக்கம் தோன்றிய பருடன் பட்சனரை தனியே அழைத்து, ஏன் இப்படி இந்த காட்டில் சுற்றித்திரிகிறீர்கள்? யாரையவது தொலைத்து தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அதற்கு பட்சனர் சிரித்துக்கொண்டே நீங்கள் குரல்வலை என்கிற பதிவை படிப்பதில்லையா? நாங்கள் இயற்கைக்கு திரும்புகிறோம். எங்களுக்கு நகர வாழ்க்கை மந்தமாக போய்க்கொண்டிருப்பதால் இங்கே வங்தோம் என்றான். பருடன் குரல்வலையின் முகவரியை வாங்கி தனது இறக்கையில் குறித்துக்கொண்டது.

பருடன் கிளம்ப ஆயத்தமானபோது பட்சனர் தனக்கு தாகம் எடுக்கிறது என்றும் குடிக்க ஏதாவது கிடைக்குமா என்றும் கேட்டார். பருடன் ஒரு நாள் வாழ்க்கை வெறுத்து உயரே உயரே உச்சியிலே படு வேகமாக பறந்து கொண்டிருந்த பொழுது, தான் ஒரு விசித்திரமான ஊரைக் கண்டதாகவும் அங்கே மக்கள் குடிக்கும் ஒரு வகையான கருப்பு நிற பாணத்தை குடித்ததாகவும் கூறியது. வெள்ளை நிறத்தில் இருப்பவர்களும் இந்த கருப்பு நிற பானத்தையே குடிக்கும் விசித்திரத்தை அங்கு தான் தான் கண்டதாகவும், அன்று முதல் தானும் அந்த பாணத்தை குடித்து வருவதாகவும் கூறியது. மேலும் அந்த பாணத்தில் சுகர் அதிகமாக இருப்பதால், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் பறக்கவேண்டும் என்பதை தனது மருத்துவர் கூறியதாகவும் சொல்லியது.

பட்சனர் மிகவும் சோர்வடைந்திருப்பதால் இந்த பாணத்தை குடித்துக்கொள்ளலாம் என்று ஒரு குடுவையை கொடுத்தது. பட்சனர் தான் அதை குடிப்பதற்கு முன், பாமரிடம் அதை குடுத்தான். எதற்கு வம்பு, முதலில் பட்சனரே குடிக்கட்டும் என்று பாமர் “நீயே முதலில் குடி பட்சனா” என்று தனது தெய்வீக குரலில் கூறி விட்டு சிரித்தார். பாமர் எதற்கு சிரிக்கிறார் என்று புரியாமல் பருடன் முழித்தபோதும், அது தனது சந்தேகத்தை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.

பட்சனரைத் தொடர்ந்து பாமரும் குடிக்க ஆயத்தமாகும் பொழுது: “Eating or drinking is not allowed in this train” என்கிற சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு முழித்தார் பாமர். என்ன சொல்கிறார்கள் என்று புரியாமல் என்னை நோக்கினார் பாமர். எனக்கோ ஹிந்தி சரியாக தெரியாது. எனவே “பானி பீத்தே அவுர் கானா காத்தே நகீ அலவுட்” என்றேன். புரிந்துகொண்ட பாமர், குடிக்கலாமா வேண்டாமா என்ற மனக்குழப்பத்தில் என்னைப் பார்த்தார். அலவுட் என்கிற ஆங்கில வார்த்தையை அவர் புரிந்துகொண்டது விந்தையிலும் விந்தையே. ட்ரைனில் பயனிப்பவர்களுக்குத் தான் இந்த விதிகள். நீங்களோ என் லேப் டாப்பிற்குள் இருக்கிறீர்கள், எனவே நீங்கள் குடிப்பதில் தவறில்லை. குடியுங்கள் என்றேன். என் தீர்ப்பை கேட்ட பாமர் ஆனந்தமாக குடிக்க தொடங்கும் முன், பருடன் பறந்துவிட்டிருந்தது.
***

பகழிகை என்கிற மிக அழகான பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதால் கொஞ்சம் சுமாரான ஒரு பெண் அந்த அத்துவான காட்டில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தாள். அவள் தனது ரத்தத்தை இளமையாக்கி என்றும் தன்னை அழகாக வைத்திருக்கும் ப்ளட் ஆர்கிட் என்கிற மூலிகையை தேடிக்கொண்டு வந்தாள். மூலிகையை தேடி அழைந்த பொழுது, அப்பக்கமாக சென்ற பூர்ப்பபகை என்கிற அழகிய வஞ்சியை கண்டாள். அவளது அழகைப் பார்த்து அவளுக்கு ப்ளட் ஆர்கிட்டின் இருப்பிடம் கண்டிப்பாக தெரிந்திருக்கும் என்று எண்ணி; ப்ளட் ஆர்கிட் இருக்கும் இடம் உனக்கு தெரியுமா என்று கேட்டாள் பகழிகை. கல் இருக்கும் இடத்தில் சாணி இருக்கும். சாணியும் கல்லும் ஒன்னு. இதை அறியாதவருக்கு ஆர்கிட் மண்ணு என்று சொல்லிவிட்டு எப்பொழுதும் போல ஹா ஹா ஹா ஹா என்று எக்கோ அடித்து சிரித்து டஸ் என்று மறையாமல், தேமே என்று மெதுவாகவே நடந்து சென்று மறைந்தாள் பூர்ப்பபகை.

***

நாள் முழுதும் சுற்றித் திரிந்த பகழிகைக்கு தாகம் எடுத்தது. அப்பொழுது புரியாத மொழியில் யாரோ பேசுவது கேட்கவே திரும்பிப்பார்த்தாள். அங்கே பாமரும் பட்சனரும் கையில் ஏதோ குடுவையுடன் நடந்துவந்துகொண்டிருக்க கண்டாள். குடுவையை கண்டதும் பகழிகைக்கு நாவில் நீர் சுரந்தது.

பகழிகையைக் கண்ட பாமரும் பட்சனரும் பேசுவதற்கு வெட்கப்பட்டனர். பகழிகையே வந்து முதலில் பேசட்டும் என்று காத்திருந்தனர். பொறுமை இழந்த பகழிகை, பாமரிடம் சென்று எனக்கு தாகமாக இருக்கிறது குடிக்க ஏதாவது இருந்தால் குடுங்கள் என்று குடுவையைப் பார்த்து கேட்டாள். அவர்கள் புரியாமல் முழிக்கவே, சைகை மூலம் செய்து காட்டினாள். பாமர் அப்பொழுதும் ஏதும் பேசாமல் இருக்க, பட்சனர் அவர் பாகசத்னி விரதர் என்று சொன்னார்; மேலும் தன்னிடம் புரியாத மொழி பேசும் வெள்ளையான மனிதர்களும் கருப்பு பாணத்தை பருகும் அந்த விசித்திர தேசத்தின் பாணமே இருக்கிறது என்று சொன்னார். அவர் கொடுப்பதற்குள் பகழிகையே முந்திக்கொண்டு பிடுங்கியே குடித்துவிட்டாள்.

தாகம் அடங்கிய பகழிகை ஆர்கிட் செடியை மீண்டும் தேடத்தொடங்கினாள். பட்சனர் இது யாருடைய காடு என்று கேட்கவே, பகழிகை பாவணர் என்கின்ற மன்னனுக்கு சொந்தமான காடு என்று சொல்லிவிட்டு தன் வழியில் நடக்க தொடங்கிய பொழுது, திடிரென்று எக்கோ அடிக்கும் குரலில், பாமர் யானை ஒன்று இங்கிருந்து ஒரு கல் தொலைவில் மாடுகள் ஏப்பம் விடும் இடத்திற்கு பக்கத்தில் சானம் இட்டுள்ளது என்று கூறிவிட்டு தனது தெய்வீக சிரிப்பை உதிர்த்தார். சாபம் வாங்கிய புல்லாகிய பாமனந்த் சாகர் பாமரின் இந்த சிரிப்பு கொஞ்ச ஓவர் ஆக்ட் என்று நினைத்துக்கொண்டார்.

***

பாமரின் சொற்களை மனதில் வைத்து வழியை கண்டுபிடித்து சரியாக யானை சானம் இருக்கிற இடத்திற்கு வந்தாள் பகழிகை. இங்கே எங்கே ஆர்கிட் இருக்கிறது என்று தேட ஆரம்பித்தாள். எங்கு தேடியும் ஆர்கிட் கிடைக்கவில்லை. சோர்வான பகழிகை தெரியாமல் யானை சானத்தை மிதித்து விட்டாள்.

சானத்தை எங்கே தொடைப்பது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அருகில் ஒரு பெரிய கல் தென்பட்டது. அப்பொழுதுதான் பூர்ப்பபகையின் அந்த வார்த்தைகள் மீண்டும் எக்கோ அடித்தது: சாணியும் கல்லும் ஒன்னு. இதை அறியாதவருக்கு ஆர்கிட் மண்ணு. மண்ணு. மண்ணு. மண்…ஆகா பாமரே என்னே உந்தன் கருணை என்று நினைத்துக்கொண்டாள். உடனே தனது காலை அந்த கல்லில் வைத்து தேய்த்தாள் பகழிகை.

இடி இடித்தது. மின்னல் வெட்டியது. காற்று பலமாக அடிக்கத் தொடங்கியது. கல் சட்டென்று மறைந்து அங்கே கசுவாகத்திரர் தோன்றினார். கசுகாகத்திரர் கடும் கோபத்தில் இருந்தார். மனிதனாக உட்கார்ந்தால் தான் ஐட்டம் பாடல்களை போட்டு நமது தவத்தை கெடுக்கிறார்கள் என்று கல்லாக மாறி தவம் செய்தால் பேதை பெண் இப்படியா செய்வாய் என்று கடும் சினம் கொண்டும் கத்தத் தொடங்கினார். அவர் அவ்வாறு கத்துவதால் தான் அவருக்கு கசுவாகத்திரர் என்ற பெயர் வந்தது. கடும் சினத்தில் கசுவாகத்திரர் கீழ்வருமாறு கூறினார்: என்னுடைய தவத்தை கெடுத்த பகழிகையே; இந்தா பிடி சாபம். இந்த நொடிமுதல் நான் அண்டங்காக்க்காயாக மாறி இந்த உலகத்தை சுற்றித்திரிவேனாக. ஜென்மங்கள் பல தாண்டி பாமரின் மனைவி கீத்தா கொடுக்கும் அடைத்தோசையை சாப்பிட்ட பிறகே நான் ஜென்ம சாபல்யம் பெறுவேன் என்றார்.

பகழிகை வாயடைத்துவிட்டாள். தான் தவறாக தனக்கே சாபம் கொடுத்துவிட்டதை அறியாமல் தனது நீண்ட தாடியை நீவிவிட்டபடியே இருந்தார் கசுவாகத்திரர். சுவாமி என்ன சொல்லிவிட்டீர்கள் உங்களுக்கு நீங்களே சாபம் கொடுத்துக்கொண்டீர்களே என்பதை அவள் எடுத்துச்சொன்ன பிறகு தான் கசுவாகத்திரருக்கு உறைத்தது. அதற்குள் அவர் அண்டங்காக்காயாக மாறத்தொடங்கியிருந்தார்.

எழுதியதை மாற்ற முடியுமா என்று என்னிடம் கேட்டார் கசுவாகத்திரர். நான் என்ன செய்வேன். நான் வெறும் பதிவர். வரலாற்று பதிவர். அதுவும் பின் தொடரும் நிழலின் குரலை படித்த பதிவர். வரலாற்றின் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை அறியாதவனா நான். மேலும் வரலாற்றை நான் மாற்றத்தேவையில்லை. காலமும் காற்றும் கோட்டையையும் கரைக்கும். எனக்கு பின்னால் வரும் பம்ப்பர் என்னும் புனைக்கவிதை நிபுணர் அவ்வாறு செய்வார். ஆம் அப்படியே ஆகுக. ஓம் சத் சத்.

பதிவரே வரலாறு மாற்றப்பட்டால் என் சாபம் மாறுமா என்று கேட்டது காக்காய். வரலாறு மாறலாம். ஆனால் அது கொடுக்கும் தகராறு என்றைக்கும் மாறாது என்றேன் சூசகமாய். இதைக்கேட்ட காக்காவாக இருக்கும் கசுவாகத்திரருக்கு நாக்கு வெளியே தள்ளியது. இதைப் பார்த்த பகழிகை “ஓ நாக்கு முக்க நாக்கு முக்க நாக்கு முக்க” என்று ஆடிப்பாடத் தொடங்கினாள். பின்னர் என்னைப் பார்த்து: வரலாற்று பதிவரே. ப்ளட் ஆர்க்கிட் எங்கே இருக்கிறது என்று உங்களுக்காவது தெரியுமா என்று கேட்டாள்.

***

அடைத்தோசையை சாப்பிட்ட அண்டக்காக்காய் சட்டென்று கசுவாகத்திரராய் மாறியது. அந்த பையன் உட்கார்ந்திருந்த சிகப்பு சேரில் சென்று உட்கார்ந்து கொண்டது. பிறகு அவன் வைத்திருந்த கவிதை புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தது. நான் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காத கசுவாகத்திரர் அந்த கவிதையை படித்துவிட்டு நான்கு கோழிகளை ஒரே முழுங்கில் முழுங்கிய பாம்பு போல படுத்துக்கிடந்தார்.

பின்னர் எழுந்து படிகளின் வழியே இறங்கினார். யாருடா இது தாடியும் கீடியுமா என்று பயந்து போன அந்த பெண் வீல் என்று கத்தாமல் யோவ் யாருய்யா நீ என்று கேட்டாள். செம கடுப்பான கசுவாமித்திரர் ஏ கீத்தா உன் வீட்டுக்காரன் பாமர் எங்கே என்றார். யாருடா கீத்தா பாமர்ன்னு உளறுராருன்னு யோசிச்சுது அந்த பொண்ணு. யோவ் தாடி ஒழுங்கா சொல்லு யாரு நீ? என்று கேட்டாள். கோபம் அடைந்த அந்த கசுவாகத்திரர் இந்தா பிடி சாபம் என்று சொல்லும் போது” ஏ நாக்கு முக்க நாக்கு முக்க” என்ற பாடல் ஒலிக்கும் நான் கூட எதிர்பார்க்கவில்லை. ஒன்றும் பேசாமல் கசுவாகத்திரர் படியிறங்கி சென்றார்.

***

மறு நாள் தினத்தந்தியில் நீண்ட தாடியுடன் விசித்திர மனிதர் சென்னையில் நடமாட்டம். கடும் வெயிலையும் பொறுட்படுத்தாமல் பஸ்ஸில் புட்போர்ட் அடித்தார் என்கிற செய்தியை அனைவரும் படித்து வியந்தனர்.

அந்த மாதத்தின் தீராநதியில் பின்நவீனத்துவமும் முன்தாடியும்: ஒரு விவாதம் என்கிற நகைச்சுவை கட்டுரையில் ஜெயமோகன் அந்த தாடி வைத்த கேடி பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்த எக்கச்சக்க சாமியார்களுள் ஒருவராக இருக்கக்கூடும் என்ற தகவலை சொன்னதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

மேலும்..

போதும் போதும் பாப்பா தூங்கிருச்சு..நிறுத்துங்க விட்டா அளந்துட்டே போவீங்க!

***

புல் தரையில் ரத்தம்

(சிறுகதை)

ராஜூ அப்பொழுதுதான் பார்த்தான் அந்தக்காட்சியை. அந்த கிழவர் அந்த குழியை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருந்தார். மரத்தினடியில் ஏகாந்தமாய் காற்று வாங்கிக் கொண்டிருந்தவன் இந்த செயலைக்கண்டதும் துணுக்குற்றான். அந்த குழி பெரிய குழியாயிற்றே. விழுந்தவர்கள் எழ முடியாதே. இந்த கிழம் எதற்கு அங்கே செல்கிறது. அட என்ன இது புல் தரையில் இரத்தம். இரத்தத்தைப் பார்த்த ராமன் ஐயோ இங்கே எப்படி ரத்தம் வந்தது என்று யோசித்தான். ஐயோ.. அப்பா அல்லவா இங்கே எப்பொழுதும் படுத்துக்கொண்டிருப்பார். இங்கு பெரிய குழியில் என்ன சிவப்பாய்? ராஜூ எழுந்து உட்கார்ந்தான். ஏன் இப்படி அந்தி சாயும் ஏகாந்தத்தை குலைப்பது போல இந்த கிழவர் நடந்து கொள்கிறார்? ராஜூ எழுந்து அந்த கிழவரை நோக்கி கத்தினான். ராமன் ஐயோ ரத்தம் ரத்தம் என்று உரக்க கத்தினான். யார் காதிலும் விழுந்திருக்குமா என்று யோசிக்க நேரமில்லை. அப்பாவுக்கு ஏதும் ஆபத்து வந்திருக்குமா? அப்பாவை யாரது கொலை செய்திருப்பார்களா? ராமனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனது மூக்கிலிருந்து ரத்தம் கசியத்தொடங்கியது.

ஓட முயன்ற ராஜூவின் காலில் பெரிய கல் ஒன்று இடித்தது. நகம் பெயர்ந்து கொண்டு வந்தது. ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் கசிந்து வெளியேறியது. யோவ் கிழவா ராஜூவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. உன் தலையில் கல்லை போட்டு உடைக்க. ராஜூ மிக வேகமாக ஓடினான். நகம் பிய்த்துக்கொண்டு வந்த இடத்தில் மண் படர்ந்தது. வலி கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்தது. ராமன் ஓடினான். அப்பா. அப்பா. ரத்தம் மட்டுமே இருக்கிறது ஆனால் உடல் எங்கே? யாரும் ஏன் இதை பார்க்கவில்லை? ஓடினான். ஓடினான். ஓடினான். டேய் ராமா எதுக்கு தலைதெறிக்க ஓடியாற? டேய் ராமா நில்லுடா. யாரையும் ராமன் கண்டுகொள்ளவில்லை. கிழவர் ராஜுவின் கத்தல்களை கண்டுகொள்ளவில்லை. ஏதோ குழிக்குள் தான் இது வரை சேர்த்து வைத்த தங்க கட்டிகள் எல்லாம் இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு அவர் நடந்துகொண்டிருந்தார். ராஜூ மிக வேகமாக அந்த கிழவரை நோக்கி ஓடுவதை அந்த ஜெயிலின் வார்டன் பார்த்துக்கொண்டேயிருந்தார். வார்டனும் ஓடி வரத்தொடங்கினார். யோவ் யோவ். டேய். டேய். ராமா. நில்லுடா. ம்ம்ஹ¥ம். ஓடினான் ராமன். அதோ அங்கே காவல் நிலையம். ஐயா ஐயா. ஐயா. என் அப்பாவை யாரோ கொன்று விட்டார்கள். நான் பார்த்தேன். ரத்தத்தை பார்த்தேன். சிவப்பாய். உறைந்திருந்தது. குழிக்குள். புல் தரையில். எல்லா இடத்திலும். அவரை யாரோ கத்தியால் குத்தியிருக்கிறார்கள். என்னது இங்கே கொலையா? என்னடா சொல்கிறாய்?

ஹாங்? யாருப்பா? ஏன் கத்தற? யோவ் கிழவா குழியிருக்கு. விழுந்த அப்படியே போய்கினுருப்ப. ஓ. என்ன ஓ? ஓங்கி ஒன்னு விட்டன்னா ஓன்னு வாயப்பொளப்ப. எனக்கு கண்ணு சரியா தெரியமாட்டேங்குதுப்பா. மன்னிச்சுக்க. சரி சரி வா இந்தப்பக்கம். வா இந்தப்பக்கம். அது என்ன உன் கையில் ரத்தம்? உறைந்து இருக்கிறது? யார் நீ? உன் பெயர் என்ன? ராமன் பதில் சொல்லவில்லை. உன் வீடு எங்கிருக்கிறது. ஏன் உன் மூக்கில் ரத்தம் வருகிறது? டேய் ராமா போ. போ இளநி காய்களை பெறக்கிட்டு வா. உங்கய்யன் வந்துடபோறான். அப்புறம் உனக்கு அடிதான். அப்பத்தா. அம்மா எங்க? எவடா உனக்கு அம்மா? அந்த ஓடுகாளிசிறுக்கியா? —முண்டையா? என் குடும்ப கவுரவத்தையே சிதச்சுட்டு போயிட்டா. அம்மாவாம் அம்மா. போடா வெளங்காதவனே. போ. பொறக்கிட்டுவா. உங்கப்பன் கிட்ட அவளப்பத்தி கேட்டு அடிவாங்கி சாகாத. ராமன் ஓடுகிறான். அப்பத்தா ஏன் இப்படி திட்டுகிறது என்று தெரியாமல் ஓடுகிறான். அதோ அங்கே இருக்கிறது இளநி ஒன்று. எடுத்துக்கொள்கிறான். மேலும் மேலும் மேலும். ஒரு மரத்தினடியில் வந்து குவித்துவைக்கிறான்.

ஒரு மரத்தினடியில் வந்து ராஜூ அந்த கிழவரை உட்கார வைக்கிறான். டேய். என்னாச்சு? வார்டன் சார்.ஒன்னுமில்ல சார். இந்த கிழம் குழிக்குள்ள விழப்பாத்துச்சு சார். நான் தான் காப்பாத்தினேன். ஆமா பெரிய ரசினிகாந்து. இவருக்கு என்னாச்சு? கண்ணு தெரியலையாம். யோவ். ஹாங். யோவ். யாரு. பெரிய இந்தியன் தாத்தா. யாருன்னு கேக்கறாரு. உம் பேரு என்னய்யா? ராமன் எல்லா இளநி காய்களையும் பெறக்கிக்கொண்டுவிட்டான். தென்னைமரத்தின் நிழல் குளுகுளுவென்றிருந்தது. குளிர்ந்த காற்று ஓடியாடி காய் பெறக்கியதற்கு இதமாக இருந்தது. ஓடையில் தண்ணீர் குடிக்கலாம் என்று கீழே குனிந்தான். தண்ணீரில் தன் முகம் கலங்கலாய் தெரிந்தது. கிழத்துக்கு வார்டனின் முகம் அவ்வளவாக தெரியவில்லை. கலங்கலாக மங்கலாக இருந்தது. தலை சுற்றுவது போல இருந்தது. யோவ் உன் பேரு என்னன்னு கேக்கறின்னுல்ல? ஏன் உன் மூக்கிலிருந்து ரத்தம் வருகிறது? டேய் ஓடி போய் தண்ணி கொண்டுவா. ராஜூ ஓடுகிறான். வார்டன் கிழத்தின் முகத்தினருகே குணிந்து பார்க்கிறார்.

கீழே குணிந்து ராமன் தண்ணீரில் தெரியும் தன் முகத்தை கொஞ்சம் அள்ளி பருகிக்கொள்கிறான். எப்படியோ மீண்டும் அங்கே முகம் வந்துவிடுகிறது. ராமன் எவ்வளவு எடுத்து குடித்தும் அவன் முகம் தீரவேயில்லை. நச் என்று தலையில் ஏதோ விழுந்ததை போல இருந்தது. தண்ணீரில் தொப்பென்று ஒரு இளநி காய் விழுந்து தண்ணீர் இவன் முகத்தில் அடிக்கிறது. ராமன் நிமிர்ந்து மேலே பார்க்கிறான். தலை வலிப்பது போல இருக்கிறது. தலை சுற்றுகிறது. கிழத்துக்கு தலை சுற்றுகிறது. டப்பென்று அப்படியே கீழே சாய்கிறது. வார்டன் தாங்கி பிடிக்கிறார். தலையை பின்னால் பிடித்தவாறு தான் பெறக்கி சேமித்து வைத்த இளநி காய் குவியலுக்கு அருகே ராமன் உட்காருகிறான். தூரத்தில் ஒரு மரம் குட்டையாகவும். பின் நெளிந்துகொண்டும். வளைந்துகொண்டும். பின் ஏன் திடீரென்று வளர்ந்து பெரிதாகிறது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறான் ராமன். கால்களுக்கு இடையிலே பெரிய பெரிய பாம்புகள் ஊறுகின்றன. தண்ணீரில் தவளைகள் பெரிது பெரிதாக இருக்கின்றன. அந்த தவளைகள் இவனது முகத்தை அள்ளி அள்ளி குடிக்கின்றன. இவனுடைய அம்மா வருகிறாள். உடன் யாரோ வருகிறான். அவன் இவனிடம் வந்து வாடா ராமா. ஹா ஹா ஹா ஹா என்று சிரிக்கிறான். வாடா ராமா. ஹா ஹா ஹா. வாடா ராமா. ஹா ஹா ஹா. அம்மா அப்படியே அவனை விழுங்குகிறாள். அப்பத்தா ஓடி வருகிறாள். கையில் துடைப்பம் இருக்கிறது. அப்பத்தா பாம்பாய் மாறிவிடுகிறாள். ராமா என்னடா ஆச்சு? என்ன ஆச்சு?

என்ன ஆச்சு வார்டன்? தெரியலை. இவர் யார் என்று பாருங்கள். சுத்தமாக கண் தெரியவில்லை. எப்படி இந்த ஜெயிலில் காலம் தள்ளுகிறார். நான் பார்த்ததில்லையே இவரை. இவரை யாருக்காவது தெரியுமா? ராமா என்னடா ஆச்சு? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? அப்பத்தா தலையில் கொம்பொன்று முளைக்கிறது. ராமன் சிரிக்கிறான். அப்பத்தாவின் நாக்கு பாம்பு போல நெளிகிறது. ராமன் பயப்படுகிறான். பக்கத்தில் வராதே. பக்கத்தில் வராதே. ராமன் மூக்கை தொட்டுப்பார்க்கிறான். மூக்கில் ரத்தம். செக்கச்செவப்பாய் ரத்தம். ரத்தம் வழிந்துகொண்டேயிருக்கிறது. ராசா. ராமா. என்னடா ஆச்சு? ஏன்டா இப்படி இருக்க? தலையை ஏன் பிடிச்சிட்டு இருக்க? ஏன்டா உனக்கு மூக்கில் ரத்தம் வருகிறது?

ஏன் உன் கையில் ரத்தம் இருக்கிறது? உன் அப்பாவை யார் கொன்றார்கள்? சார். இன்ஸ்பெக்டர் சார். என்னய்யா ஏட்டையா? எனக்கு இவனைத் தெரியும் சார். இவன் எனக்கு பக்கத்து வீட்டு பையன் தான். கொஞ்சம் ஒரு மாதிரி. இல்ல. நான் அப்படி இல்ல. ராமன் கத்தினான். இல்ல வார்டன் சார். யாருக்குமே தெரியல. இவர் யாருன்னு. எல்லோரும் எப்பவோ ஒரு வாட்டி பாத்திருக்காங்க ஆனா யாரு? பேரென்னன்னு தெரியல. எங்களுக்கும் தெரியல. அவரோட நம்பர் வெச்சு தான் பாக்கனும். வெக்கமாயில்லையாயா உங்களுக்கு. என்ன தான் கிழிக்கிறீங்க? போங்க போய் இவரு யாரு என்னன்னு பாருங்க. ஏட்டைய்யா பையனை கூப்பிட்டுட்டு போய் என்னன்னு பாருங்க. கொலை அது இதுன்னு உளறுறான். கையில வேற ரத்தமா இருக்கு. வேணும்னா கூட 206ஐயும் கூப்பிட்டுக்கோங்க. ராமசாமி ஐயாவோட ஆதரவாளர்கள் தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் பண்றாங்களாம். நான் அங்க போகணும். நீங்க கிளம்புங்க. டேய் பையா உம் பேரென்ன சொன்ன? ராமன் ஆங்.. போ ஏட்டைய்யா கூட போய் எங்க ரத்தம் பாத்தன்னு சொல்லு.

என்னய்யா ரெக்கார்ட்ஸ்ல பாத்தீங்க சொல்லுங்க. கிழம் எங்க வார்டன் சார்? அவரை இப்பத்தான் டாக்டர்ஸ் செக்கப்புக்கு கொண்டுபோய் இருக்காங்க. சார் ரெக்கார்ட்ஸ் பார்த்ததுல இவரு இங்க இருபது வருஷத்துக்கும் மேலா இருக்கார் போல தெரியுது சார். என்னது இருபது வருஷத்துக்கும் மேலையா? என்னய்யா சொல்றீங்க? ஏன் இவரை விடுதலை செய்யல? என்ன தப்பு செஞ்சிருக்கார்? கொலை சார். கொலையா? இவரா? அப்படீன்னு தான் சார் போட்டிருக்கு. ஆறடி இரண்டு அங்குலம் உயரம் இருக்கும் ராமச்சந்திரன்…ம்ம்ம்…1957இல்..என்னது? 1957லா? டேய் எங்கடா ரத்தம்? இதோ இங்கதான் சார். இங்கயா? எங்கடா இருக்கு? இதோ இங்க சார். யோவ் 206 இங்கவாய்யா. எங்க இருக்கு ரத்தம்? இல்ல ஏட்டைய்யா. இவன் ஏதோ உளறுறான். குழிக்குள்ள இருக்கு சார். குழிக்குள்ளயா? பாருங்க சார்..ரத்தம் இருக்கு. 206 இவனுக்கு பைத்தியம் முத்திப்போச்சு. எங்கையுமே ரத்தம் இல்லையே, டேய் போ போய் ஒழுங்கா வேலைய பாரு. பக்கத்து வீட்டுக்காரன்ங்கிறதால விடறேன். போ. இல்ல ரத்தம் பாத்தேன். நான் பாத்தேன். ஏட்டைய்யா இவன் சொல்றமாதிரி புல் தரையில ரத்தம் இல்ல. ஆனா இவன் கையில ரத்தம் இருக்கே கவனிச்சீங்களா? ஹா..ஆமா 206..டேய் உங்கப்பா எங்க? அதான் சொல்றேனில்ல. யாரோ கொன்னிருக்காங்க. டேய் லூசு.. வாடா உங்க வீட்டுக்கு போகலாம். 206 இவன் வீடு வரைக்கும் போயிட்டு வரலாமா?

ஆமா சார். 1957ல்ல தான்..ம்ம்ம்ம்…ரங்கசாமி என்பவரை கத்தியால் குத்தி…இவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர்…தில்லையிலிருக்கும் மனநலகாப்பகத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டார்…அங்கு சிகிச்சை முடிந்து குணமானதும்…1957ல்ல கொலை செஞ்சிருக்காரா? என்னய்யா இது? இன்னி வரைக்கும் ஜெயில்ல என்ன செய்யறார்? கிட்டத்தட்ட 50 வருஷம் ஆச்சே? எனக்கு ·புல் ஹிஸ்டரி கிடைக்குமா? எடுத்திட்டு வர முயற்சி பண்ணுங்க. யார் இவர்? எதற்காக இவ்வளவு வருஷம் சிறையில் இருக்கிறார். ஏன் இவரை யாருமே கண்டுகொள்ளவில்லை. உறவினர்கள்? அப்பா? அம்மா? அவ்வளவு வேண்டாதவர்களாக போய்விட்டாரா? ஹலோ வார்டன். டாக்டர் என்னாச்சு டாக்டர்? வழக்கமா வயசானா வருகிற வியாதிதான். கண்ணுக்கு ஆபரேஷன் தான் செய்யனும். ஆபரேஷன் செஞ்சாலும் அத தாங்குவாரான்னு தெரியல. இங்க விட்டுட்டு போறீங்களா இல்ல.. தெரியல டாக்டர்..இவருடைய கேஸ் புதிராக இருக்கிறது..இன்னும் நிறைய விசாரிக்கனும்..நாங்க வர்றோம்….யோவ்..கிழத்த பிடிச்சுக்கோங்க..

206 இவன பிடிச்சுக்கோ..ஓடிட போறான்..என்னது யாருமே இல்லயா வீட்ல..ரங்கசாமி..ரங்கசாமி..டேய் உங்க அப்பா எங்கடா போயிட்டார்..கொன்னுட்டாங்க சார்..போட்டன்னா..ரங்கசாமி..என்னது பிசுபிசுப்பா இருக்கு..206 தீப்பெட்டி வெச்சிருக்கீங்களா? 206 தீப்பெட்டி இல்ல ஏட்டைய்யா..ஒன்னு தான் இருக்கு..யோவ்?! இருங்க ஏட்டைய்யா கொளுத்தறேன்..ரங்கசாமி..ரங்கசாமி..ஏட்டையா..இங்க பாருங்க..அடப்பாவி..கத்தியால குத்தப்பட்டிருக்கிறார்..யாரோ நிறைய தடவை குத்திருக்காங்க..ஐயோ..ரங்கசாமி..மூச்சு இல்லய்யா..அடப்பாவி அப்பாவையே கொன்னுட்டியே..பிடிங்க அவனை..என்னடா ஆச்சு? ஏன் இப்படி பண்ணின? ஏன் உங்கப்பாவை குத்தின? ஏட்டையா இங்க இருக்கு கத்தி..

எத்தன வாட்டி கத்தி கத்தி கேக்குறது, கிழத்துக்கு காதுலையே விழல..அடச்சே..தாத்தா..உங்க பேர் என்ன? ஹாங்..ராமன்..ராமன் என்கிற இந்த சிறுவன் தன் தந்தையை நான்குமுறை நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த காரணத்துக்காக, சிறுவன் என்பதை மனதில் கொண்டு இந்த நீதிமன்றம் அவனை மனநலக்காப்பகத்தில் சேர்க்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறது. மேலும் தண்டனை காலத்துக்கு முன் மனநலம் தேறிவிட்டால்ராமனுக்கு மூக்கில் ரத்தம் வழிய ஆரம்பித்தது..ஜட்ஜின் வெள்ளை முடியில் புழுக்கள் நெளிய ஆரம்பித்தன..மூக்கிலிருந்து ஒரு வண்டு வெளியேறி வாயினுள் நுழைந்தது..அவனை பாம்புகள் கொத்த ஆரம்பித்தன..ராமன் ஐயோ ஐயோ என்று கத்த ஆரம்பித்தான் ராமன்.. இந்த சிறுவனை யாரேனும் பார்க்க வருவதென்றால்…ஏன் தாத்தா உன்ன யாருமே பாக்கவரலை? 50 வருஷமாச்சு…உனக்கு தண்டனை கொடுத்து..ஏன் நீ வெளியிலே வருவதற்கு முயற்சி செய்யல? இப்படி ஒன்னுமே பேசாம இருந்தா எப்படி? நீங்களும் நானும் ஒரே ஊர் தான் தெரியுமா? வார்டன் சார். என்னய்யா..அந்த மனநலகாப்பக ரெஜிஸ்டர் பாத்தோம்..யாரோ காசின்னு ஒருத்தர்..இவருக்கு மாமா முறை வேணுமாம்..அவருதான் ரெகுலரா கொஞ்ச நாளைக்கு வந்து பாத்திருக்கிறார்..யாரு காசியா?

என் பெயர் காசி..இங்க காப்பகத்துல இருக்கிற ராமனுக்கு நான் மாமா…என்ன கொண்டுவந்திருக்க அந்த லூசு பையலுக்கு..போ..அந்த கடைசில இருப்பான்..என்ன தான் பெறக்குவானோ..கீழ இருந்து கல்லு கல்லா பெறக்குதான்..திடீர்ன்னு மேலே நிமிந்து பாக்கான்..பின் ஐயோ ஐயோன்னு கத்..டேய் ராமா.. நான் காசி வந்திருக்கன்..டேய் ராமா..கல்லு பெறக்குனது போதும் இப்படி வந்து உக்கார்..கல்லா? நான் இளநி பெறக்குறேன்..அங்க உக்காராத மாமா..பாம்பு நெறைய இருக்கு..ம்ம்ம்..இந்தா தயிர்சாதம்….உனக்கு பிடிக்குமே..உனக்கு ஒன்னு தெரியுமா? சொன்னா உனக்கு புரியுமா? தடாலென்று அன்னாந்து வானத்தை பார்க்கிறான் ராமன்..உங்கப்பா ரங்கசாமி சாகலை தெரியுமா? ஹா ஹா ஹா ஹா..காசியா? அவரோட ஊரு பேரு? எதுனாலும் கெடச்சதா? இல்ல சார்.. தேடிட்டிருக்கோம்..நான் சொல்றேன்..அப்பாடா கிழம் பேசிருச்சு…காசி எனக்கு மாமா முறை வேணும்…என் மேல ரொம்ப பாசமா இருப்பார்..அவர் மட்டும் தான்..அவர் மட்டும் தான்..என்னை எப்படியும் வெளில கூட்டிட்டு போயிருவேன்னு சொல்லிட்டேயிருப்பார்.

தாத்தா…தாத்தா..காசி.. காசி இப்ப இருக்காரா? கிழம் சிரித்தது…காசியும் நடயனேரியில தான் இருந்தாரா? ஆமா எங்க வீட்டுக்கு பக்கம் தான்…அடுத்த தெரு.. அவர் தெக்குவீட்டுக்கு பக்கத்தில இருந்தார்..தெக்குவீடா? வார்டன் அவசர அவசரமாக தன் பர்ஸைத் திறந்து அதிலிருக்கும் போட்டோ ஒன்றை எடுத்து காட்டுகிறார்..இவரா..இ..இவரா..காசி.. ஆ..ஆமா..நான் தான் நீங்க சொல்ற காசி வடிவேல் முருகனுடைய பேரன்..காசி வடிவேல் முருகன் இந்த ஜெயிலுக்கு வார்டனா ரெண்டு மாசத்துக்கு முந்திதான் வந்தேன்… ராமன் சிரிக்கிறார். தாத்தா..எனக்கு உங்களை பாத்ததுமே ஏதோ ஒன்னு பிடிபட ஆரம்பிச்சது..ஏதோ ஒன்னு..ஏதோ ஒன்னு..

ஆ..ஆமா நானும் அப்பலேருந்து கேட்டுட்டே இருக்கேன்ல.. ஏன் நீங்க 50 வருஷமா இப்படியே இங்கேயே இருந்திட்டீங்க? வெளில வர முயற்சி செய்யலையா? சிரிக்கிறார் ராமன். சிரிக்கிறார். நான் லூசுப்பா..லூசு….இந்த லூச யாருமே கவனிக்கல..யாருமே..நான் இன்னும் அதிகமா முயற்சி செஞ்சிருக்கனும்னு இப்போ தோணுது..இப்போ தோணுது..

லைன்ஸ்மாருங்க

(சிறுகதை)

நாங்க அப்பவெல்லாம் எங்க அப்பா தங்கியிருந்த க்வார்ட்டர்ஸ்க்குப் போவோம் தெரியுமா? எப்பவெல்லாம்டி? ம்ம்..படிச்சிட்டிருக்கப்போ. என்ன படிச்சிட்டிருந்த? குமுதமா? ம்ம்..உன் மூஞ்சி..ஸ்கூல் படிச்சிட்டிருந்தப்போ. ஓ நீ ஸ்கூல் எல்லாம் போயிருக்கியா? பரவாயில்லையே. ம்ம்..நாங்க போயிருக்கமே. சர்டிப்பிக்கேட் கூட வெச்சிருக்கேன் தெரியுமா? ம்ம்..குட்..வெரிகுட்..அதுசரி உங்க அப்பா ஏன் குவார்டர்ஸ்ல போய் தங்கினாரு? உங்க கூட எல்லாம் சண்டையா? போடா பொறுக்கி. அவர் அங்க வேலை செஞ்சாருடா. எங்க? குவார்ட்டர்ஸ்லயா? ஐயோ..என்ன ஒழுங்கா சொல்லவிடறயா? இப்போ தான் எனக்கு ப்ளாஷ்பேக் மூடே வந்திருக்கு..கொஞ்ச நேரம் சும்மா இரேன்.. நீ உன் டுபாகூர் கேர்ள்ப்ரண்ட்ஸ் பத்தி அள்ளிவிட்ட ரீல் எல்லாம் நான் பொறுமையா கேட்டேன்ல..மரியாதையா என் டீ எஸ்டேட் ப்ளாஷ்பேக்க கேக்கற புரியுதா? என்னம்மா? தோ வாரேன்..அப்படியே லைன்ல இரு..அம்மா கூப்பிடறாங்க..வாரேன்..

ஹலோ..ஹலோ..எங்கடாபோய்ட்ட? ஸ்டுபிட்..இடியட்..ம்கும் ம்க்கும்..ஐயோ வாயேன்டா..ஹலோ..ஹாங்..யாரு? ய்யாழு? ஹை..கௌசல்யாவா? உங்க மாமா எங்கடி போனாரு? மா..மா..அ..ங்..க.. யா..ன.(கீச் கீச் என்று கத்துகிறாள் சிரிக்கிறாள்)..டக் டொக் ..டொக்..ஹலோ..யாராச்சும் எடுங்களேன்..தடியா..டக் டொக்..காது வலிக்குது..கட் பண்ணப்போறேன்டா..ஹலோ..தடியா..என்னடி? எங்கடா போன? உனக்கு ஒன்னு தெரியுமா? நான் யான பாத்தனே? எங்க தெருவுக்குள்ள வந்துச்சு..ம்ம்க்கும்..ஐயோ பப்பு யானைய பாத்துச்சா..ஜுஜுஜு..எருமமாடு..யானை பாக்கறதா இருந்த கண்ணாடி முன்ன போய் பாக்கறதுதான? நல்லா பன்னிக்குட்டி மாதிரி இருந்துக்கிட்டு யான பாத்தேன்னு கொஞ்சரதபாரு..வோய்..யாரப்பாத்துடி பன்னிக்குட்டின்னு சொன்ன..நீ பன்னிக்குட்டி..உன்….போதும் போதும்..அத்தோட நிப்பாட்டிக்கடா..அப்புறம் நான் பத்ரகாளியாயிடுவேன்டா..ஆகா இப்ப மட்டும் என்னவாம்..அப்படித்தான இருக்க? போடா நீ தான்டா எரும..யான..எல்லாமே..நீ தான்..போடா நான் காத பொத்திக்கிட்டேன்..நீ தான்.. நான் கேக்கல..கேக்கல..கேக்கல..என்னம்மா வேணும் உனக்கு இப்போ? ஏன் தொனதொனன்ட்டு இருக்க? அடியேய்..காலைல இருந்து ரெண்டு பேரும் பேசிட்டு தான இருக்கீங்க..கல்யாணம் செஞ்சிட்டு பேசத்தான போறீங்க..அது எங்களுக்கு தெரியும்..உனக்கு என்ன வேணும் அத மட்டும் சொல்லு? மூஞ்சிய கீஞ்சிய கழுவிட்டு வந்து வெளக்க பொறுத்தி வைடி..அதுக்கப்புறம் பேசுடி..வேணாம்னா சொல்றேன்..சரிடா..நான் அப்புறமா பேசறேன்..அடப்பாவி..எஸ்கேப் ஆயிட்டான்..

***

வீடெல்லாம் பெருசு பெருசா இருக்கும் தெரியுமா? ஒவ்வொரு ரூமும் ரொம்ப பெருசா இருக்கும். வீட்டுக்கு கடைசில கிச்சன் இருக்கும். வீட்டுக்கு பின்னாடி சின்ன தோட்டம் இருக்கும். நான் மொத மொத போனப்போ..கிச்சன் கதவத் திறந்தனா..ஹையோ..எப்படி இருந்துச்சு தெரியுமா? பின்னால பூராம் மலை..பூராம் பச்சை பச்சையா இருந்துச்சு..எனக்கு அப்படியே ஹையோன்னு இருந்துச்சு..நானும் எங்க அக்காவும் கீழ இறங்கி புல் தரையில நல்லா சத்தம் போட்டு கத்திக்கிட்டு குதி குதின்னு குதிச்சோம்.. நிறைய குட்டி குட்டி குருவியா..குருவியா என்னன்னு தெரியல..இருந்துச்சு..அத வெரட்டிக்கிட்டே போனோம்..அங்க க்யூட்டா ஒரு செம்பருத்தி செடி இருக்கும் தெரியுமா? செடி பூராம் செம்பருத்தியா பூத்திருக்கும்..அப்புறம் கீழ கூட விழுந்திருக்கும்..நாங்க எடுத்து தலைக்கு வெச்சிக்குவோம்..அப்புறம் அதக் காயவெச்சு அரச்சு..அம்மா என்ன என்னவோ போடுவாங்க..தலைக்கு ஷாம்புவா யூஸ் பன்னுவோம்…வீட்டுக்கு முன்னாடி குட்டி குட்டியா புல் மொளச்சிருக்கும்..எல்லாம் ஒரே ஹைட்ல இருக்கும் தெரியுமா..நாங்க நல்லா படுத்து உருளுவோம்..முன்னால இருக்குற அந்த தோட்டம்..நல்லா பெருசா ப ஷேப்புல இருக்கும்..சுத்தி வேலி போட்டிருப்பாங்க..அங்க அங்க பாறையா இருக்கும்..நானும் எங்க அக்காவும் டேவிட்டும் குட்டனும் அதில தான் ஏறி நின்னு மீட்டிங்ல பேசுற மாதிரி பேசுவோம்..யாரு? டேவிட்டா? சொல்லவேயில்ல..பொறுடா..கதைய மட்டும் கேளு..ம்ம்..சரிங்க மேடம்..அப்பவெல்லாம் எங்க அக்கா பெரிய வாயாடி..இப்ப மட்டும் என்னவாம்? பொறுக்கி..வாய மூடு.. இங்கிலீஷ்ல பேசுதுகளாம்..மேல ஏறி நின்னுக்கிட்டு..கைய மைக் மாதிரி வெச்சுக்கிட்டு..லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் அப்படீன்னு ஆரம்பிக்குங்க…அப்புறம் என்ன பேசறதுன்னு தெரியாது..அஸ¤புஸ¤இவிஸ்குவிஸ்..ன்னு ஏதோ உளருவோம்..நீ இப்ப வரைக்கும் அப்படித்தானடி இங்கிலீஸ் பேசற? இருடா உன்ன வந்து கவனிச்சுக்கறேன்..யாரு இங்கிலீஸ் ஒழுங்கா பேசமாட்டா? நான் ஹிந்தியே நல்லா பேசுவனே? ஹிந்தியா? சொல்லவேயில்ல? ம்ம்ம்..தீவாளிக்கு துணி எடுத்தாச்சா படம் பாத்துதான் நான் மொதோ ஹிந்தியே கத்துக்கிட்டேன்..என்னது தீவாளிக்கு துணி எடுத்தாச்சாவா? பொங்கலே வரப்போகுதுடி.. அது என்ன தீவாளிக்கு துணி எடுத்தாச்சா படம்?..ம்ம்ம்..சொல்லமாட்டேன் கண்டுபிடிடா பாப்போம் ..

***

டேவிட்டோட அப்பாவும் எங்க அப்பாவும் ஆபிஸரா இருந்தாங்க..நீ பாக்கனுமே..எங்க அப்பா வீட்டுக்கு வர்றப்போ, பின்னாலயே ப்யூன் பைல எடுத்துட்டு வர்றத..ஏன் உங்க அப்பா ஆபிஸ்ல வேலை செய்யாமா தூங்குவாரோ? வோய்..உன்ன மாதிரின்னு நினைச்சியா..அவ்ளோ வேலை பொறுக்கி..ம்ம்..டேவிட்டும் குட்டனும் அண்ணன் தம்பிங்க. ம்ம்..அப்புறம் என்ன அக்கா தங்கச்சியாவா இருப்பாய்ங்க..கதைய சொல்லுடி..சும்மா..சன் டீவி நாடகம் மாதிரி இழுத்துக்கிட்டு இருக்க…உனக்கு நக்கல் ஜாஸ்தியாகிடுச்சுடா..வந்து கவனிச்சுக்கறேன்..டேவிட் பத்தி சொல்லுடி..ம்ம்..டேவிட் நல்ல குண்டு குண்டுன்னு குண்டு பூசனி மாதிரி இருப்பான்..நல்லா ஹைட்டா..கண்ணு பூனக்கண்ணு..உன் கண்ணு மாதிரி..இல்ல அதவிட பூனக்கண்ணு..எங்க கேங்கலயே அவனுக்கு மட்டும் தான் மலையாளம் தெரியும்..அதுனால அவனுக்கு திமிரு ஜாஸ்தி..ரொம்ப பண்ணிக்குவான்..குட்டன் அமைதியானவன்..திக்கு வாய்…அதனால ரொம்ப பேசமாட்டான்.. குட்டனுக்கு மலையாளம் தெரியாதா? பேரு மலையாளப்பேரு மாதிரிதான இருக்கு? ஐயே பேரு அதில்ல..நாங்க குட்டன் குட்டன்னு தான் கூப்பிடுவோம்..உண்மையான பேரு என்னன்னு எனக்கு தெரியல..தெரியலயா? எத்தானாப்பு படிச்சிட்டிருந்த அப்போ? ம்ம்..ஒரு ஆறவது இருக்கும்னு நினைக்கிறேன்..

***

நீ குட்டன் வீட்ட பாக்கனுமே..அவ்ளோ டெக்கரேட் பண்ணி வெச்சிருப்பாங்க..எனக்கு தெரிஞ்சு அவ்ளோ அழகா டெக்கரேட் யாரும் செஞ்சது இல்ல..பெரிய இவ..உலகம் பூராம் சுத்திருக்கா..வோய் டுபுக்கு அதான் எனக்கு தெரிஞ்சளவுக்குன்னு சொல்றோம்ல..மரத்தோட அடிப்பாகத்த வேரோட அறுத்திட்டு வந்து..அதுக்கு அழகா வார்ணீஷ் பெயின்ட் எல்லாம் அடிச்சு வெச்சிருப்பாங்க..நல்லா வேர் வேரா பிண்ணிக்கிட்டு இருக்கறமாதிரி எல்லாம் என்னவோ செஞ்சிருப்பாங்க..அழகா பெயிண்ட் அடிச்சிருப்பாங்க..அப்ப எல்லாம் டியூப் லைட் இல்லன்னு நினைக்கிறேன்…நீ இருக்கற கிராமத்துல இப்பவரைக்கும் டியூம் லைட் இல்லலடி..உத வாங்குவ..நாங்க கிராமத்துல இருக்கமா? சென்னைடா..செம்பட்ட தலையா..என்னாது? செம்பட்ட தலையா? உனக்கு திமிராயிடுச்சுடி..உஷ்..கதைய கேளு..அப்போ எல்லாம் குண்டு பல்ப் தான்..உன் சைஸ்க்கு ஏத்தமாதிரியே உங்க அப்பா பல்ப் வெச்சிருந்திருக்காருடி..கொஞ்சநேரம் அமைதியா இருக்கியா? குண்டு பல்ப் எல்லாம் கம்பெனிலையே கொடுத்திடுவாங்க.. உங்க அப்பா என்ன கிழக்கிந்திய கம்பனிலையா வேலை பாத்தாரு? வந்தேன் அடி பிச்சிருவேன்..டீ எஸ்டேட் டா..டீ எஸ்டேட்..அது என்னவோ பேரு..க்ளன்மேரி..ம்ம்..அதான்..கொடுவால கூட வேலைபாத்திருக்காரு..கொடுவாவா? என்ன வாயில ஓடுமே அதுவா? ஐயோ..அது ஒரு எஸ்டேட்..பாம்பனார் பக்கத்துல இருக்கு..என்னது பாம்பன் பாலமா? ஐயோ..

***

பாம்பனார் தெரியாதா? குமிளிக்கு அடுத்து இருக்கு..ஓ..நான் குமிளியே போனதில்ல தெரியுமா? ரொம்ப முக்கியம்….அடிப்பாவி..ஒரு நாள் காலையில நல்லா பொங்கல ஒரு கட்டு கட்டிட்டு..ஒரு முயல் குட்டிகூட விளையாடிட்டு இருந்தமா..ஐ..ஒரு முயல் குட்டி இன்னொரு முயல்குட்டியிடம் விளையாடுகிறது..டேய்..அக்காவும் விளையாண்டாடா..ஓ அப்படியா..ரைட்டு விடு..மேல சொல்லு..அப்பதான் டேவிட் வேகவேகமா மூச்சிரைக்க ஓடிவந்தான்..வந்து ஒரு யானை செத்துப்போச்சு..பாக்க வர்றீங்களான்னு கேட்டான். உடனே சரின்னு சொல்லிட்டோம்..நாங்க முயல் குட்டிய கூண்டில விட்டுட்டு அவன் கூட கிளம்பினோம்..வீட்ல கூட எங்க போறோம்னு சொல்லல..

***

அன்னிக்கின்னு பாத்து வெயிலு கொளுத்துச்சு பாத்துக்க..ஓ அந்த வெயில்ல தான் நீ கருப்பாயிட்டயோ..ஆமா இவரு பெரிய சிவப்புன்னு நினைப்பு..டேவிட் தான் லீடர்..அவனுக்கு தான் வழி தெரியும்..மலையாளமும் தெரியும்..நான், குட்டன்,அக்கா எல்லாரும் போனோம்..வழி பூராம் தார் ரோட்டுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒரே மரம்…என்னது ஒரு மரம் தானா? ஒரேஏஏஏஏஏஏஏ மரமா இருந்துச்சு..என்ன மரம் தெரியுமா? தெரியாது..ஐயோ அவ்ளோ அழகா இருக்கும்..அது செடி மாதிரியும் இருக்காது..மரம் மாதிரியும் இருக்காது..செடிமரம்னு வெச்சுக்க..ம்ம்..சரி வெச்சுக்கறேன்..இலை எப்படி தெரியுமா இருக்கும்? நடுவுல ஒரு வெயின் மாதிரி, மீனுக்கு இருக்கும்ல நடுவுல எலும்பு..நல்லா திம்பா போல தெரியுதே..எலும்பு மாதிரி இருக்கும்..அதுல இருந்து இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் அடர்த்தியா நெருக்கமா ரொம்ப மெல்லிசா நீளமா பச்சை பச்சையா இலை இருக்கும்..மரம் பூராம் அந்த இலை தான் இருக்கும்..அடர்த்தியா…பாக்கவே அவ்ளோ அழகா இருக்கும்…ரோட்டுக்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் டீ எஸ்டேட் இருக்கும்..அங்க லைன்ஸ்மார் எல்லாம் தேயிலை பரிச்சிட்டு இருப்பாங்க…

***

லைன்ஸ்மாருங்களா? அது என்ன லைன்ஸ்மாருங்க? ஹா ஹா அது ஒரு விசித்திரமான பேரு..எனக்கே அத யாரவது சொல்லக்கேட்டா சிரிப்பு வரும்…லைன்ஸ்மாருங்கன்னா லைன் வீட்டில குடியிருக்கவங்கன்னு அர்த்தம்..அவங்க தோட்டத்தில வேலை செய்யறவங்க..லைனா அவங்க வீடு இருக்கும்..பூராம் மஞ்சள் பெயின்ட் அடிச்சிருக்கும் தெரியுமா..பாக்கறதுக்கு ஒரே மாதிரி சின்னச்சின்னதா அழகா இருக்கும்..அங்க குடியிருக்கவங்களத்தான் லைன்ஸ்மாருங்கன்னு சொல்லுவாங்க..ஆனா எனக்கு அந்தப் பேரு பிடிக்கவே பிடிக்காது..அது என்ன இங்கிலீஸ¤ம் தமிழும் கலந்த பேரு..ஒன்னு இங்கிலீஷ்ல சொல்லனும் இல்லைன்னா தமிழ்ல சொல்லனும்..சை..நான் மெட்ராஸ்க்கு வந்ததுக்கப்புறம் இதே போல ஒரு வார்த்தை கேட்டேன்..இன்ன வரைக்கும் அந்த வார்த்தை கேக்கறப்பவெல்லாம் எனக்கு சிரிப்பா வரும்..என்ன வார்த்தைடி? அரஅவரு.. எவரு அவரு? ச்சி..லூஸ¥..அரை ஹவர்..half an hour அப்படிங்கறததான் இப்படி சுருக்கிட்டானுங்க..

***

ரொம்ப தூரம் நடந்தோம்..டேவிட் இந்தா வந்திருச்சு இந்தா வந்திருச்சுன்னே எங்கள ரொம்பதூரம் நடக்கவெச்சிட்டான்..உனக்கு ஒன்னு தெரியுமா? நடுவுல சுடுகாடு ஒன்னு இருந்துச்சு..ஐயோ நான் சொல்லல..எனக்கு பயமா இருக்குடா…சொல்லுடி..இல்ல நான் சொல்லல..அந்த லூசுங்களுக்கு பேய்க்கதை சொல்றதுக்கு வேற நேரமே கிடைக்கலையா? அப்ப போய் சொல்லுச்சுங்க..ரோட்ல யாருமே இல்ல.. ரோட்டுக்கு சைட்ல சமாதி சமாதியா இருந்துச்சு..மேல சிலுவை.. எனக்கு பயமா போயிருச்சு..நான் சைடு பக்கமே திரும்பல..கைய இருக்கமா மூடிக்கிட்டு வேகவேகமா அவங்க கூடவே நடந்தேன்..திடீர்னு என்ன பண்ணுச்சுங்க தெரியுமா..என்ன விட்டுட்டு திடுதிடுன்னு ஓட ஆரம்பிச்சிருச்சுங்க..நான் அலறி அடிச்சுக்கிட்டு பின்னாலையே ஓடினேன்..

***

கொஞ்ச நேரம் கழிச்சு அதோ அங்கதான் யான செத்துக்கெடக்குன்னு காமிச்சான் டேவிட். அங்க கொஞ்சம் கூட்டமா இருந்துச்சு..எனக்கு என்னவோ மாதிரி ஆகிடுச்சு..நடந்து வந்த டயர்ட் வேற..வந்திருக்கவே கூடாதோன்னு தோணிச்சு..அங்க கொஞ்சம் பேர் நின்னுட்டிருந்தாங்க..எல்லாம் ஒல்லியா..கைலியும் பனியனும் போட்டுட்டு..யாரும் டேவிட் அளவுக்கு குண்டு இல்ல..ஐயாமாரு வீட்டு பிள்ளைங்களான்னு அவுங்க கேட்டாங்க..நான் யானையப் பாக்கவே இல்ல கொஞ்ச நேரம் வரைக்கும்..யானையத் தவிர வேற எல்லா இடத்தையும் பாத்திட்டிருந்தேன்..யூக்கலிப்டஸ் மரம்..அதோட ஸ்மெல்..உன்னி செடி..உன்னிப் பூ..ஆனா அத்தன ஸ்மலையும் தாண்டி ஒரு வேண்டாத ஸ்மல் அந்த இடத்தில் இருக்குற மாதிரி இருந்துச்சு..

***

யானையப் பாக்க பாவமா இருந்துச்சு தெரியுமா..தந்தமே இல்லை..யானை அவ்ளோ பெருசா இருந்துச்சு..துதிக்கை நல்லா சுருண்டு இருந்துச்சு..அதோட உடம்பு சைஸ¤க்கு துதிக்கை ரொம்ப சிறுசா தோனிச்சு..கண்ணு பளிச்சுன்னு திறந்திருந்துச்சு.. அதுல பூராம் ஈயா மொச்சிக்கிட்டு இருந்துச்சு..வாய்க்கு பக்கமும் ஈயா இருந்துச்சு..தந்தம் இருந்திருக்க வேண்டிய இடத்துல இன்னும் அதிகமா ஈ இருந்துச்சு..யானை அப்படியே ஹான்னு படுத்திருந்துச்சு..கால் நகம் எல்லாம் ரொம்ப பெரிசா இருந்துச்சு..தோல் நாங்க நடந்து வந்த தார் ரோடு மாதிரி கரடு முரடா இருந்துச்சு..ஏதேதோ பறவை சத்தம் கேட்டிட்டே இருந்துச்சு..கொஞ்சம் ஒரு மாதிரிதான் இருந்தது அந்த இடமே..யானை செத்து கிடந்த அந்த இடத்துக்கு பக்கத்தில அங்கிருந்த ஆட்கள் சிலர் பெரிய குழி தோண்டிட்டு இருந்தாங்க..நான் டேவிட் கிட்ட இந்த யானைய அந்த குழில போடுவாங்களான்னு கேட்டேன்..ஆமா பின்ன உன்னையா போடுவாங்கன்னு கேட்டான்..எவ்ளோ திமிர் அவனுக்கு..எப்படி தூக்குவாங்க அவ்ளோ பெரிய யானையன்னு நான் யோசிச்சிக்கிடே வந்தேன்..அவன் கிட்ட கேக்கல..அந்த திமிர் பிடிச்சவன் கிட்ட கேக்கனுங்கற அவசியம் இல்லன்னு நினைச்சுக்கிட்டேன்..இப்ப நினைச்சா சிரிப்பா வருது..

***

வரும்போது இன்னும் வெயில் ஜாஸ்திஆகிடுச்சு..எங்களால நடக்கவே முடியல..டேவிட் மட்டும் ஜாலியா இருந்தான்..குட்டன் தண்ணி வேணும் தண்ணிவேனும்னு வர்ற வழி எல்லாம் கேட்டுக்கிட்டே வந்தான்..சின்ன பையன் இல்லையா..அவன் எத்தனாப்புடி படிச்சான்? ம்ம்..அஞ்சாவதுன்னு நினைக்கிறேன்..ஆமா நீ ரொம்ப பெரிய பிள்ளையா இருந்தியாக்கும்? நாங்களும் எங்கயாச்சும் பைப் இருக்கான்னு தேடிகிட்டே இருந்தோம்..இல்லவே இல்ல..அவன் தண்ணி தண்ணின்னு கேக்கறதப் பாத்ததும் எனக்கும் தண்ணி தவிக்க ஆரம்பிச்சிடுச்சு..ஆனா வர்ற வழி எல்லாம் உன்னி பூ நிறைய இருந்தது..நீ உன்னிப்பூ பாத்திருக்கையா? இல்லையேடி.. அவ்ளோ க்யூட்டா இருக்கும்..குட்டி குட்டியா சிவப்பு கலர்ல பூ எல்லாம் ஒரே இடத்துல குவிஞ்சு அழகா ஒரே பூவா இருக்கும்..பூ வெளில சிவப்பு கலர்ல இருக்கும்..நடுவில மஞ்சள் கலரில இருக்கும்..சூப்பரா இருக்கும்..அதுல உன்னிப்பழம் கூட இருக்கும் தெரியுமா? ரொம்ப டேஸ்டா இருக்கும்..நம்ப குட்டித்தக்காளி இருக்கும்ல அது மாதிரி இருக்கும்..குட்டன் புலம்பல் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு..

***

ஒரு வழியா தேயிலை பறிச்சுக்கிட்டு இருந்த லைன்ஸ்மாருங்கல பாத்துட்டோம்..எவ்ளோ அழகா பறிப்பாங்க தெரியுமா? சிஸர்ஸ் மாதிரி ஒன்ன வெச்சுக்கிட்டு..கச்சக் கச்சக் கச்சக்ன்னு..எப்படிடி? ம்ம்..கச்சக் கச்சக் கச்சக்ன்னு..ஹ்..ஹா..ஹ்..ஹா..ஹா.ரொம்ப சிரிக்காதடா..பல்லு சுழிச்சுக்கப் போகுது..ம்ம்..அது சிஸர்ஸ் மாதிரி ஒரு பக்கம் தான் இருக்கும்..இன்னொரு சைட் வெட்டின இலைகள சேகரிக்கிற பை மாதிரி இருக்கும்..டப் டப்ன்னு வெட்டிட்டு..பின்னால தோள்ல போட்டிருக்கற பைல ஸ்டைல ரஜினி சிகரட்ட தூக்கிப்போடற மாதிரி போடுவாங்க..அதுவும் சிகரெட் கரெக்டா போய் உக்கார்ற மாதிரி பின்னால பையில போய் விழும்..எனக்கென்னவோ அவங்கள பாக்கும் போது கங்காருவோட ரிவர்ஸ் சைட் மாதிரி இருக்கும்..அழகா…வரிசையா நடந்து போவாங்க..

***

லைன்ஸ்காரங்க கிட்ட தண்ணி இருந்துச்சு..நான் டேவிட் அக்கா மூனு பேரும் தண்ணி நல்லா குடிச்சுக்கிட்டோம்..அந்த குட்டன் பயல் மட்டும் குடிக்கவேயில்ல தெரியுமா? அக்சுவலா அவன் தான் தண்ணி தண்ணின்னு கேட்டுட்டே வந்தான்..அவன் புலம்பல் தாங்க மாட்டாம தான் நாங்க லைன்ஸ்மாருங்க கிட்ட கேட்டோம்..அவன் கடைசிவரைக்கும் குடிக்கவேயில்ல..அவன் முகம் ஏதோ கோபமா இருக்குற மாதிரியே இருந்துச்சு..திக்கி திக்கி வேணாம் வேணாம்னு சொன்னான்..அவன் அண்ணன் டேவிட் குடிச்சான்..அப்பக்கூட அவன் கையப்புடிச்சு இழுத்து..எதோ திக்கி திக்கி சொன்னான்..அவன் பேசாம இருடா..அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொன்னான்..நான் என்னன்னு கேட்டேன்..சொல்லமாட்டேன்னுட்டான்..எனக்கு கோபம் கோபமா வந்திருச்சு..டேய் தண்ணி கேட்டலடா..தண்ணி கொடுக்கறாங்கல்லடா..வாங்கி குடிக்கவேண்டியதுதானடான்னு கேட்டேன்..நான் குடிக்கமாட்டேன்னு பிடிவாதமா இருந்துட்டான்..தலைய இங்கிட்டும் அங்கிட்டும் ஆட்டிக்கிட்டு அவன் அண்ணன முறைச்சுக்கிட்டு இருந்தான்..

***

அதுக்கப்புறம் அண்ணனும் தம்பியும் பேசிக்கவேயில்ல..குட்டன் ஏனோ எங்க பக்கதுலையே வர மாட்டென்னுட்டான்..உர்ன்னு வந்தான்..எங்களால நடக்கவேமுடியல..டேவிட்டுக்கு தான் மலையாளம் தெரியுமே..அவன்..அந்தப்பக்கம் போன டிராக்டர் ஒன்ன கை காமிச்சு ஏதோ அவிட இவிடன்னு பேசி எங்கள ஏத்திவிட்டுட்டான்..டிராக்டர்ல உக்காந்துட்டு வீடு வந்து சேர்ந்தோம்.. இனிமே இது மாதிரி யான செத்துச்சு..பூன செத்துச்சுன்னு பாக்க போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சோம்…

***

அவ்ளோ தான் கத. டேய்.. டேய்..தூங்கிட்டியா..ஸ்டுபிட்..
சரி தூங்குமூஞ்சி போய் தூங்கு….ம்ம்ம்ம்..என்னடா யோசிக்கற?
ம்ம்ம்..குட்டனப் பத்திதான்..

ஆமா அது என்ன ஹிந்திப்படம்டி? தீபாவளிக்கு துணி எடுத்தாச்சா? சொல்லுடி..
அடப்பாவி இன்னும் நீ கண்டுபிடிகக்லையா? டியூப் லைட்டா நீ.
தில்வாலே துல்கானியா லேஜாயேங்கே..அதுதான் தீவாளிக்கு துணி எடுத்தாச்சா!

ஒகே பை. தூங்கு. குட் நைட். குட் நைட்.

**

(நைட் ரொம்பநேரம் கண்ணுமுழிச்சு தன் ·பியான்ஸியுடன் பேசிக்கிட்டிருந்த அவன், அவள் கதை சொன்ன போது கீழே வரும் இந்த இடத்தில் மட்டும் தூங்கிவிட்டான்:)

குட்டன் ஏன் தண்ணி குடிக்கல தெரியுமா? எனக்கு அதுக்கப்புறம் தான் தெரியும்..டேவிட் சொன்னான்..நாங்க ரொம்ப அதட்டி கேட்டதுக்கப்புறம்..ஆட்டைக்கு சேத்துக்கமாட்டோம்டான்னு சொன்னதுக்கப்புறம் தான் அவனே சொன்னான்..எங்களுக்கு கோபம் கோபமா வந்துச்சு..எவ்ளோ திமிர் அந்த குட்டன் பயலுக்கு..இந்த வயசில அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சதுன்னு இப்போ நான் யோசிக்கறேன்..

இப்போ நான் குட்டனப் பாத்தேனா சப்பு சப்புன்னு நாலு அறை அவனுக்கு கொடுப்பேன்..ஏன்டா அவங்ககிட்ட தண்ணி வாங்கிக்குடிச்சா எந்தப்பக்கம்டா குறஞ்சு போயிடுவன்னு..

ஆனா அவன் சொல்லிருக்கான் : ஒரு ஆபிஸர் வீட்டு பையன், எப்படி லைன்ஸ்மாருங்க கிட்ட தண்ணி வாங்கிக்குடிக்கிறது?

***

ஹலோ அஸ்விக்குட்டி

(சிறுகதை)

சென்னை. சோழா செராட்டன். ஜூன் 2000. 02.

“நீயெல்லாம் எதுக்குடா பேச்சிலர்ஸ் பார்ட்டிக்கு வர்ற? தம் அடிக்க மாட்ட, தண்ணியடிக்க மாட்ட, பப்ல கொஞ்சம் அப்படி இப்படி ஆட கூட மாட்ட, சும்மா உக்காந்து சிக்கன் சாப்டறதுக்கு வரணுமாடா?” ராஜா சொல்வதை சிவா கண்டுகொள்ளவேயில்லை. காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. அவன் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பெப்பர் சிக்கனை எடுத்து மீண்டும் ரசித்து ருசித்து சாப்பிடத் தொடங்கினான். “நீயெல்லாம்..ஹ்ம்ம்” என்று ராஜா சலித்துக்கொண்டு வேறு விசயத்துக்கு தாவினான். “டேய் மச்சான்” “டேய் மச்சான்” “டேய் டோப்பாத்தலையா” “ம்ம் என்னடாமச்சி” “அங்க பாரு” “எங்க் எங்கடா” “அங்கடா.உனக்கு லெப்ட்ல. அந்த பிங்க் டாப்ஸ்ல சும்மா…ஹ்ம்ம்ம்” “ஆ ஆ ஆ..உன்னத்தான்டா பாக்குறாடா. ராஜா நீ மச்சக்காரன்டா” “டேய் சிவா டொப்பாத்தலையன கூட்டிட்டு போக முடியாது நீ வர்றியா. போய் கொஞ்சம் வறுத்துட்டு வரலாம்” “போடாங்..எனக்கு வேற வேலையில்லையா? உன்னமாதிரின்னு நெனச்சயா? எனக்கு என் தேவதை இருக்கா. நீ போ எக்கேடோ கெட்டு தொலை!” ராஜா சிறிது நேரம் முறைத்து விட்டு, பின் தன் தலையில அடித்துக்கொண்டான். “உன்ன திருத்தவே முடியாதுடா. பெரிய ராமசந்திரமூர்த்தி. உன் அஸ்வி பாரு உன்ன விட்டுட்டு போக போறாளா இல்லையான்னு” “நெவர்!” ராஜா எழுந்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டான். ரொம்ப ஸ்டைலாக நடப்பதாக நினைத்துக்கொண்டு ரொம்ப கேவலமாக நடந்தான். பெண்களின் எதிரில் சென்று அமர்ந்தான். “ஹே ய்யா..” அந்த பெண்கள் கொஞ்சம் அதிகமாகவே சிரித்தனர்.

சிவா தனக்குள் சிரித்துக்கொண்டான். செல்போனை எடுத்தான். ஸ்க்ரீனில் பளிச்சென்று ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. பின்னர் பச்சை பட்டனை அழுத்தினான். அஸ்வினி என்று திரையில் தோன்றியது.

ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங்.
“ஹலோ தடியா..” பேரிரைச்சல். “ஹலோ அஸ்வி” “ஹலோ அஸ்வி” “ஹலோ அஸ்விக்குட்டி” “டேய் செல்லம்”. கால் துண்டிக்கப்பட்டது.

மீண்டும் டயல் செய்தான். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”.

“ஸ்டுபிட் அஸ்வி. என்னைக்குத்தான் நீ பேட்டரிய ஒழுங்கா சார்ஜ் பண்ணிவெக்கப்போறியோ!”

ராப் மியூசிக் காதைப்பிளந்தது. ராஜா ஒரு பெண்ணோடு ஆடிக்கொண்டிருந்தான். அவளது இடுப்பில் ஒரு கை. மற்றொரு கை..சிவா “டிஸ்கஸ்டிங்” என்று முனுமுனுத்தான்.

***

காரியாபட்டி. டிசம்பர். 2000.

இரவு மணி 9:30. எங்கும் இருள் சூழந்திருந்தது. எங்கும் பேரமைதி. காற்று கொஞ்சம் கூட இல்லை. அந்த வீட்டின் முன்னால் இருந்த தென்னை மரம் ஆடாது அசையாது சிவனின் பாட்டை கேட்டது போல இருந்தது. வீட்டினுள் மிக மங்கலான விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. உள்ளே யாரோ இருமும் சத்தம் கேட்டது. “சிவா. டேய் சிவா” வயதான ஒரு பெண்ணின் குரல் மிக சன்னமாக கேட்டது. படிக்கட்டில் நிழல் ஆட அந்த பெண்மனி உள்ளிருந்து வெளியே வந்தார்.

படிக்கட்டில் நின்றவாறு இங்கும் அங்கும் பார்த்தார். பின்னர் வீட்டின் வலது பக்கத்தில் இருந்த படிக்கட்டை நோக்கி சென்றார். படி ஏறப் போனவார் அதிர்ச்சியில் உரைந்தார். அங்கே ஒரு கரிய உருவம் அசையாமல் உட்கார்ந்திருந்தது. சுற்றிலும் புகைமூட்டம். தடுமாறிய அந்த பெண்மணி, எட்டி, விளக்கைப் போட்டார். மிகவும் மங்காலான வெளிச்சம் உட்கார்ந்திருந்த அந்த உருவத்தின் மீது படர்ந்தது. அந்த உருவம் அசைந்து கொடுக்கவில்லை. கண்கள் எங்கோ சொருகியிருந்தன.

“டேய். சிவா. ஏண்டா இப்படி பண்ற? எத்தன தடவடா சொல்லிருக்கேன். ஐயோ. இப்படி கொஞ்சம் கொஞ்சமா உன்ன நீயே அழிச்சிக்கறீயடா? உங்க அப்பனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். சிவா. டேய் சிவா.” “என்னத்த?” “உள்ளவாடா. மாமா வற்ரதுக்குள்ள சாப்பிட்டுட்டு போயிடுடா. அந்த மனுசன் வந்தா கத்துவாரு. வாடா எந்திரிடா” சிவா தடுமாறி எழுந்திருக்கிறான். சிறிய கல் இடறி தொப்பென்று கீழே விழுகிறான்.

“ஐயோ. சிவா. என் கண்ணா. ஏன்டா இப்படி ஆயிட்ட.” அந்த பெண்மணிக்கு கண்களில் நீர் வழிந்துகொண்டேயிருக்கிறது.

***

காரியாபட்டி. டிசம்பர். 12. 2011.

“ஆரத்தி எடுங்கம்மா” “ம்ம்” குலவைசத்தம் கேட்டது ஆங்காங்கே. புதுமணத்தம்பதியினர் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். வாசலில் செக்கச்செவப்பாய் ஆரத்தி. மணமகள் கால்கள் அழகாக செந்நிரத்தில் தடம் பதித்திருந்தது. இருவரும் ஹாலில் சென்று அமர்ந்தனர். மணமகன் மணமகளைப் பார்த்தி ரகசியமாக சிரித்தான். “அஸ்வினி. நீ ரொம்ப அழகா இருக்க தெரியுமா?” மிகவும் சிவந்திருந்த அவளது கண்ணங்கள் மேலும் சிவப்பாயின. அவள் பதிலேதும் கூறாமல் தலையை தாழ்த்திக்கொண்டாள். “டேய். சுரேஷ். ரொம்பத்தான் வழியாத. இந்தா கர்சீப் தொடச்சுக்கோ” என்று சுரேஷின் மாமா கர்சீப்பை எடுத்து நீட்ட, இப்பொழுது சிவந்ததென்னவோ சுரெஷின் கண்ணங்கள். மிகச்சத்தமாக ஒரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.

***

காரியாபட்டி டிசம்பர். 15. 2011.

ம்ம்க்கும் ம்ம்க்கும். சுரேஷ் தொண்டை கமறல் எடுக்கவே, தூக்கத்திலிருந்து விழித்து கண்களைத் திறந்தான். இருட்டு லேசாக படர்ந்திருந்தது. கதவு திறந்திருந்தது. பக்கத்தில் அஸ்வினி இல்லை. தூரத்தில் ஏதோ ஒரு பூச்சியின் ஓசை ரீங்காரமாக கேட்டுக்கொண்டிருந்தது. அஸ்வினி. அஸ்வினி. பதில் இல்லை. பக்கத்திலிருந்த மேசையின் மேலிருந்த கெடிகாரத்தை எடுத்து மணி பார்த்தான். மணி 12:10. ஜன்னல் வழி நிலாவின் மிக மெல்லிய வெளிச்சம் அடித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் ஏதோ ஒரு நாய் மிகச் சன்னமாக உளையிட்டது.

சுரேஷ் எழுந்தான். கைலி அவிழ்ந்துவிடவே இறுக்கமாக கட்டிக்கொண்டான். மெதுவாக லைட்டைப் போடாமல் ருமை விட்டு வெளியேறி ஹாலுக்கு வந்தான். ஹால் அமைதியாக இருந்தது. அம்மாவின் ரூமைப் பார்த்தான் பூட்டியிருந்தது. திரும்பி வெளிக்கதவைப் பார்த்தான். கதவு திறந்திருந்தது. மிக மங்கலான வெளிச்சம் பரவிக்கொண்டிருந்து. ஏனோ ஹாலின் அந்த கெடிகாரத்தின் டக் டக் என்ற சத்தம் அவனை அச்சுறுத்துவதாகவே இருந்தது. அஸ்வினி. வேகமாக நடந்து வெளியே சென்றான். ஹாலைக் கடப்பதற்குள் மிகவும் வேர்த்து விட்டது. யாரோ பின் தொடர்வதைப் போல இருக்கவே, சட்டென் திரும்பிப் பார்த்தான். ஒருவரும் இல்லை. வெளி வராண்டவில் ஜன்னல்களுக்கு போடப்பட்டிருந்த திரைச்சீலைகள் மிக மெதுவாக காற்றில் அலைந்து கொண்டிருந்தது.

வெளிக்கதவை அடைந்து படியில் நின்றான். அஸ்வினி என்றான். ஒரு நாயின் மெல்லிய முனகல் கேட்டது. வலதுபக்கம் திரும்பிப் பார்த்த சுரெஷ் திடுகிட்டான். அங்கே மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுக்கு முன்னால் நாலைந்து நாய்கள் மிகவும் மவுனமாக அமர்ந்து படியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. நாய்களின் வாய்யில் எச்சில் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது நீண்ட நாக்கு வெளியேறி பின் மீண்டும் உள் சென்றது.

சுரேஷ் சூ சூ என்றான். ஒரு நாயும் அசைந்து கொடுக்கவில்லை. பின் மிக மெதுவாக படி இருக்கும் இடத்தை நோக்கி சென்றான். நாய்கள் மிக மெதுவாக ஊளையிடத் தொடங்கின. சுரேஷ் நெருங்க நெருங்க அவை மிகப் பயங்கரமாக ஊளையிட்டன. படிக்கு அருகில் வந்த சுரேஷ் திடுக்கிட்டான். அங்கே மேல் படியில் அஸ்வினி உட்கார்ந்திருந்தாள். மிக அமைதியாக. சுரேஷ் சத்தமாக அஸ்வினி என்றான். நாய்கள் இப்பொழுது தான் முழித்துக்கொண்டதைப் போல மிக பயங்கரமாக உறுமின. அஸ்வினி அங்க என்ன பண்ற இறங்கிவா. பதிலில்லை. அஸ்வினி இறங்குமா. பதிலில்லை. அஸ்வினி.

சுரேஷ் படிகளில் வேகவேகமாக ஏறினான். அஸ்வினி வாம்மா. நாய்க்கு பயந்து இங்கயே உட்கார்ந்திட்டியா? வா. பதிலில்லை. சுரேஷ் அவள் கையை பிடித்தான். கை மிகவும் சில்லென்றிருந்தது. டக்கென்று அஸ்வினி திரும்பினாள். அவளது பெரிய கண்கள் வழக்கத்தை விட மிகவும் பெரியதாக இருந்தன. கண்களின் சீற்றத்தைக் கண்டு சுரேஷ் தடுமாறினான். பிறகு சுதாரித்துக்கொண்டு “இந்நேரம் இங்க எங்கம்மா வந்து உட்கார்ந்திருக்க. வா அஸ்வினி. வீட்டுக்குள்ள போகலாம்” “டேய். யாருடா அஸ்வினி? நான் அஸ்வினி இல்லடா. சிவா. இது என்னோட இடம். இங்கதான் நான் இருப்பேன்.” என்று மிக பயங்கரமாக பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு சொன்னாள் அஸ்வினி.

***

தஞ்சாவூர். டிசம்பர் 1999.

அது ஒரு திருவிழா. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும். சாமி இந்த வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. இந்த வீட்டின் சொந்த பந்தங்கள் எல்லாம் இந்த திருவிழாவை தவறவிட்டதே இல்லை. என்றைக்குமே. சாமி கும்பிடுவது முக்கியம் என்றாலும் விட்டுப்போன சொந்தத்தை தொடர்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். சிவாவும், அவனுடைய அப்பாவும் அம்மாவும், அவனது தங்கையும் சென்னையிலிருந்து வந்திருக்கின்றனர்.

மேளச்சத்தம் ஒலித்துக்கொண்டேயிருந்தது. சங்கும் சேகண்டி ஓசையும் அந்த சூழ்நிலையில் பக்தியை அதிகப்படுத்தவே செய்தன. சிவா கண்களை மூடி இறைவனை வேண்டிக்கொண்டிருந்தான். சூடதீபாரதனை காட்டப்பட்டதும் கையை மேலே தூக்கினான்.

பக்கத்தில் யாரோ அழும் சத்தம் கேட்டு திரும்பிப்பர்த்தான். அழகான மருதாணி அணிந்த நீண்ட விரல்கள் மூக்கையும் இதழ்களையும் மறைத்துக்கொண்டிருந்தன. மிக அழகாக செதுக்கப்பட்ட புருவம். இரு புருவங்களுக்கு மத்தியில் மோட்சம் அடைந்து விட்ட கருப்பு பொட்டு. நெற்றியின் ஓரத்தில் கூட முடி. அழகான கழுத்து. கையில் சிறிது சிறிதான பூனை முடி. அவள் அழுவதை நிறுத்தவேயில்லை. சிவா அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கைகளை பிரித்தாள். ஆ. கைக்குள்ள வெச்சு செர்ரி பழம் சாப்பிட்டுட்டு இருந்திருக்காளோ? இல்லை இல்லை செர்ரி பழம் எப்படி கீழே விழாமல் இருக்கும். ஓ. இதழ்களா? ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம். அளவான கூர்மையான மூக்கு. மூக்கு வலப்புரத்தில் சிறிய மூக்குத்தி. கண்ணீரின் ஒற்றைத் துளி அவளது மூக்கின் மேல் ஏறுவதற்கு சிரமப்பட்டுக்கொண்டிருந்தது. கண்களை திறந்தாள். இரண்டு முறை கண்களை திறந்து மூடினாள். இந்த உலகத்தை இருள் சூழ்ந்து வெளிச்சம் மீண்டும் வந்தது. பிறகு சிவாவைப் பார்த்தாள். வேகமாக கண்களைத் துடைத்துக்கொண்டாள். சொர்கத்திலிருந்து விடை வருத்தத்தில் இருந்த கண்ணீர் துளி, அவள் புறங்கை பட்டு மோட்சம் அடைந்தது. இவனைப் பார்த்தது போல காட்டிக்கொள்ளாமல் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று விட்டாள்.

“ஏய் யாரவது போய் கத்தரிப்பான் எடுத்துட்டு வாங்கப்பா” சிவாதான் நின்றுகொண்டிருக்கிறான். அவன் தான் போக வேண்டும். அவன் பேசாமல் நின்றான். “சொல்றாங்கல்ல யாராவது போய் எடுத்திட்டு வாங்க. சிவா போடா அந்த ரூமில இருக்கு போய் எடுத்திட்டு வா” என்றார் சிவாவின் சித்தி. சிவா வேகவேகமாக அருகிலிருந்த ருமிற்குள் சென்றான். எங்கே கத்தரிப்பான் இருக்கிறது என்று தெரியவில்லை. இங்கும் அங்கும் மனதில் படாமல் தேடிக்கொண்டிருந்தான். சரி இல்லையென்று சொல்லிவிடுவோம் என்று நினைத்துகொண்டிருந்த பொழுது, ஒரு தென்றல் உள்ளே நுழைந்தது. கூடவே நூறு சாம்பிரானி, பத்தியின் நறுமனம். பின்னாலேயே அவள் வந்தாள்.

நேரே சிவாவிடம் வந்தாள். சிவாவுக்கு மிக அருகில் இருந்த ஷெல்பில் அழகாக பெரிதாக உட்கார்ந்திருந்தது கத்தரிப்பான். “அதோ அங்கே இருக்கு பாருங்க அதுக்கு பேர் தான் கத்தரிப்பான். அதத்தான் கேக்கறாங்க. கொஞ்சம் எடுத்துக்கொடுங்க” சிவா சற்றும் அசையவில்லை. அவளது கண்கள் மிக மெல்லிதாக திறந்து மூடின. இதழ்கள் சிறிய ரோஜாவைப் போல சுழித்துக்கொண்டன. ரோஜாக்கள் கூட சுழிக்குமா? ஹ்ஹ்ஹ்ம்ம்ம். “எடுக்கறீங்களா இல்லையா?” என்று அவள் தனது சிறிய உள்ளங்கையை விரித்தாள். சிவா பதில் பேசாமல் எடுத்தான். மருதாணி அணிந்த அவளது கைவிரல்கள் மிகவும் அழகாக இருந்தன. உள்ளங்கையில் அழகான மருதாணி கோலங்கள். பூக்களுக்கு கூட கோலங்கள் தேவைப்படுகின்றனவா? பூவின் மீது கத்தரிப்பானை வைக்க மணமில்லாது, அவனே எடுத்து வெளியே சென்றான். பின்னால் அவள் அவனை திட்டுவது மெதுவாக காதில் கேட்டது. என்ன ராகத்தில் பாடுகிறாள் என்று நினைத்துக்கொண்டே வெளியே சென்றான் சிவா.

“டேய் சிவா. நாளைக்கு வீட்டவிட்டு எங்கயும் வெளியில போயிடாத.” “ஏன் சித்தி” சிவா அம்மாவின் மடியில் பருத்துக்கொண்டிருந்தான். அம்மா அவனது தலையை கோதிவிட்டுக்கொண்டிருந்தார். சமையல் அறைக்கு வெளியே உட்கார்ந்திருந்தார்கள். “என்னடா தெரியாத மாதிரி கேக்கற? உன்னத்தான் தெக்குவீட்டு பொண்ணுங்க எல்லாம் கட்டம் கட்டி வெச்சுறுக்காளுக” சிவா எனக்கு ஒன்னும் தெரியாதுங்கற மாதிரி அம்மாவைப் பார்த்தான். “நாளைக்கு மஞ்சத்தண்ணி ஊத்தறதுடா. உனக்குத்தான் இங்க நெறைய மொறப்பொண்ணுங்க இருக்குதுங்களே. உன்மேலத்தான் வெரட்டி வெரட்டி ஊத்தப்போறாளுக. ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்றார் இன்னொரு சித்தி “அப்படியா” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் சிவா. “ஆஹா. ஒன்னுமே தெரியாதமாதிரி மூஞ்ச வெச்சுக்கிறான் பாரு. அக்கா உம்மகன மட்டும் நம்பிடாத. அன்னைக்கு அஸ்வினியை கண் கொட்டாம சைட் அடிச்சத நான் மட்டும் தான பார்த்தேன். அவளும் அப்பப்போ பாத்துக்கிறா? டேய் சிவா. என்னடா நடக்குது” என்றார் சித்தி. “யாரு சித்தி அஸ்வினி?” “நடிகர் திலகம் தோத்தார்க்கா. எப்படி நடிக்கறான் பாருக்கா? நீயும் தான பாத்த? இனி மேல் உன் பேரு செவாலியர்டா. இன்னைக்கு ரோஸ் சுடில, வைட் துப்பட்டால ஒரு தேவதை உனக்கு சாம்பார் ஊத்துச்சுல்ல, நீ கூட போதும் போதும்ன்னு உன் முகத்துல லிட்டர் கணக்கா ஜொள்ளு வழிய விட்டயே..அவ பேரு தான் அஸ்வினி” “சரி சரி சித்தி. போதும் மானத்த வாங்காத” “ஏண்டா உனக்கு அஸ்வினிய புடிச்சிருக்குதான?” “அடியே நீ பேசாம இருக்கமாட்டியா?” “நீ சும்மாஇருக்கா. முறைப்பையன் தான். இதுல என்ன இருக்கு” “ஏண்டா உனக்கு புடிச்சிருக்கு தான?” “ம்ம்” “எவ்ளோ” “ரொம்ப.” “எவ்ளோ ரொம்ப” “ரொம்ப ரொம்ப ரொம்ப” “அண்ணன் முகத்தில வெக்கத்த பாரு. இரு நான் அஸ்வினி கிட்ட சொல்றேன்” என்று எழுந்து ஓடினாள் சத்யா, சித்தியின் மகள்.

இரவு நிலா மிகவும் அழகாக இருந்தது. மொட்டைமாடியில் சிவா, சிவாவின் அம்மா, சித்தி, இன்னொரு சித்தி, சித்தியின் மகன்கள், மகள்கள் என்று ஒரு பெரிய பட்டாளமே உட்கார்ந்திருந்தார்கள். ஏதேதோ கதை ஓடிக்கொண்டிருந்தது. “அண்ணா. எனக்கு இந்த கம்ப்யூட்ட சயின்ஸ் புரியவே மாட்டேங்குதுண்ணா. அது என்ன ஒன்னையும் ஜீரோவையும் மட்டுமே வெச்சுக்கிட்டு கூட்டிக்கிட்டு திரியுராய்ங்க? இதத்தான் நீங்களும் செய்யறீங்களா? இதுக்கு பேரு சாப்ட்வேர் இஞ்சினியராக்கும்?” “ஆடி போட்டன்னா. நாங்க எல்லாம் ப்ரோகிராம் செய்யறோம்டி. சித்தி உன் மகளுக்கு ரொம்பத்தான் வாய்” “ம்ம்..சரி. ஒழுங்கா லெவன்த் பாஸ் பண்ணிருவியாடி?” “என்னண்ணா இப்படி கேட்டுட்ட, உன்னோட ஸ்டுபிட் கம்யூட்டர் சயின்ஸ் தவர எல்லாம் நமக்கு கைவந்தது. அண்ணா அண்ணா அங்க பாரு” அங்கே கொஞ்ச தூரத்தில் மூலையில் இருந்த புகைக்கூண்டின் அருகே கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவள் நின்றிருந்தாள்.

நிலவின் ரம்மியமான வெளிச்சத்தில் அவளது ஒரு பகுதி முகம் மட்டும் அழகாக தெரிந்தது. நிலவை விட மிகவும் பிரகாசமாக இருந்தது. (?!) ஒரு முறை அவள் திரும்பிப் பார்த்தாள். நெஞ்சின் ஊடாக கூர்மையான ஈட்டி ஒன்று பாய்ச்சப்பட்டது போல இருந்தது. வேல் விழியாள். முன் தலையின் கேசம் மெதுவாக காற்றில் ஆடியது. இருமுறை உள்ளங்கைகளை அழகாக கண்ணத்தில் வைத்துக்கொண்டாள்.

“அண்ணா ஜொள்ளு விட்ட்து போதும். ஏண்ணா இப்படி அலையுற? நான் கூப்படறேன் பாரு.”ஏய் அஸ்வினி இங்கவாடி.” “சத்யா. வாடி போடின்னெல்லாம் கூப்பிடக்கூடாது. என்ன இருந்தாலும் உனக்கு அண்ணியில்லையா?” என்றார் சித்தி தன் பங்குக்கு. சத்யா என்னை திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு, மீண்டும் அஸ்வி இங்க வாடி. அம்மா கூப்பிடறாங்க பார். அவளும் அவளுடைய அம்மாவும் வந்தார்கள். சிவா அவள் மேல் வைத்திருந்த கண்களை எடுக்கவேயில்லை. அவள் அம்மா, சிவாவின் அம்மாவிடம் அண்ணி எப்படியிருக்கீங்க என்றார் சிரித்துக்கொண்டே. கூட்டத்துடன் ஐக்கியமானார். பிறகு தம்பிதான் மெட்ராஸ்ல வொர்க் பண்ணுதோ என்றார் சிவாவைப் பார்த்தபடி. அஸ்வினி கூட சென்னைல தான் வொர்க் பண்றா. சிவா அஸ்வினியின் பாதி தாழ்ந்திருந்த இரு முட்டைக்கண்களை விடாமல் பார்த்துக்கொண்டேயிருந்தான். “நீங்க மெட்ராஸ்ல முன்ன இருந்த அதே மாம்பழம் தண்டவாளத்துக்கு பக்கத்துல இருக்குற குவார்ட்டர்ஸ்ல தான இருக்கீங்க?” என்றார் சிவாவின் அம்மா. “ஆமா அண்ணி. ஆனா வீடு மாத்தனும். அவருக்கு சர்வீஸ் முடியப்போது” என்றார் சிரித்துக்கொண்டே. சிறிது நேரத்தில் பாதிதாழ்ந்திருந்த கண்கள் முழுதும் திறந்தன. சிவாவைப் பார்த்தன. சிறிய அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்டன. பிறகு மீண்டும் தாழ்ந்து கொண்டன. அடுத்த வினாடி மீண்டும் முழுதும் திறந்தன. இந்த முறை சில வினாடிகள் நிலைத்து நின்று சிவாவைப் பார்த்தன. உதடுகள் மட்டுமா சிரிக்கும்? கண்களும் கூட பல சமயங்களில் சிரிக்கும்.

“அஸ்வி, டு யூ லவ் மீ?” “ஸ்டுபிட். என்ன கொஸ்டின் இது? ஐ லவ் யூ சோ மச்” “எவ்ளோ?” “ரொம்ப” “எவ்ளோ ரொம்ப?” “ரொம்ப ரொம்ப” “எவ்ளோ ரொம்ப ரொம்ப” “மடையா. தடியா. என் க்யூட் சீஸ் கேக். என் செல்ல டெடி பியர். என் புஜ்ஜு கண்ணா. இந்த பீச்ல எவ்ளோ மணல் இருக்கு? அவ்ளோ உன்ன நான் லவ் பண்றேன்” சிவா அவளது இரு உள்ளங்கைகளை எடுத்து தன் கண்ணத்தில் வைத்துக்கொண்டான். “என்னடா கண்ணா? சோ செண்டி டுடே? எதுவும் ஸ்டுபிட் தமிழ் மூவி பாத்தியா?” “இல்லடி. லவ் யூ” “லவ் யூ டூ”

***

சென்னை. ராயல் பப். ஜூலை 2000.

சிவா மிதந்து கொண்டிருந்தான். இசை அவனை செலுத்திக்கொண்டிருந்தது. அவனது கால்கள் நிற்பதேயில்லை. கைகள் எதிரே தன்னுடன் ஆடிக்கொண்டிருந்தவளின் இடையை கெட்டியாகப்பிடித்துக்கொண்டிருந்தான். “உன்னக்கூட்டிக்கிட்டு கடைக்கு போறேன் உனக்கு வேண்டியத வாங்கித்தாரேன்” அவள் மிகக்குறைந்த அளவே உடைகள் உடுத்தியிருந்தாள். “என் வீட்டுக்குத்தான் கூட வாடி எங்கு போனாலும் கூட வா நி” மங்கிய வெளிச்சம் மிகவும் போதையேற்றியது. “நேத்து உன்ன பாக்கலையே
அட இன்னைக்கின்னம் தூங்கலையே
” அவளின் பாடிஸ்ப்ரே கிறங்கடித்தது. “அஸ்வினி” “அஸ்வினி ஐ லவ் யூ” “ஹே பேப். நான் அஸ்வினி இல்ல. ஹேமா. கமான் டேக் இட் ஈசி” அவள் அவனின் கழுத்தை சுற்றி இறுக்கிக்கொண்டாள். “காலையில் என்னாகும் அட கல்யாணம் யாருக்காகும்? காலையில் என்னாகும் அட கல்யாணம் யாருக்காகும்?” சிவாவுக்கு பூமி அதிர்ந்தது. தள்ளாடியது. கண்கள் மிகவும் மங்கலாக தெரிந்தது. அவளது கழுத்தில் மெதுவாக உதடு பதித்தான். “போதையில் புத்திமாறுமா வட்ட நிலாவும் சதுரமாகுமா?” நெஞ்சு வலித்தது. கண்கள் கசிந்தன. அவள் அவனை நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள். இசையின் சத்தம் அதிகரித்தது. சிவா விலகினான். அஸ்வினி பக்கத்தில் நின்றுகொண்டிருந்தாள். “என் வீட்டுக்குத்தான் கூட வாடி எங்கு போனாலும் கூட வா நி” ப்ப்ப்ப்பாபாபாய்ய்ய் ஒன் ம்ம்ம்ம்ம்மோர். அஅஅஸ்ஸ்ஸ்ஸ்வ்வ்வ்வி. கம் ஹியர். ஐ யாம் ய்ய்ய்ய்யுவ்வர் ஸ்ஸ்வ்வவீட் ஹ்ஹ்ஹ்ஹ்ஹார்ட். “போதையில் புத்திமாறுமா வட்ட நிலாவும் சதுரமாகுமா?” ஹே..ஹ¥..ஆர் யூ மேன்? ஹக் ஹக் ..ஹக்..டான்ஸிங் வித் மை ஸ்ஸ்வ்வீட்டி. ஓங்கி ஒரு அறை கன்னத்தில் விழுந்தது. சிவா நிலைதடுமாறி கீழே விழுந்தான். ஹேமா தாங்கிப் பிடித்தாள். ஹே சிவா. அஸ்வினி இங்க இல்ல. சி இஸ் சம் அதர் ஸ்டுபிட் கேர்ல். “அஸ்வினி” “ஸ்டாப் இட் சிவா” அதற்குள்ளாக பம்பர்ஸ் சிவாவை அலேக்காக தூக்கி வெளியே எறிந்தனர். சிவா தடுமாறி எழுந்து நின்றான். இன்னக்கு கொஞ்சம் ஸ்பீடா எர்த் ரொட்டேட் ஆகுதுன்னு நினச்சுக்கிட்டான். ஒரு பெண் அருகே வந்தாள். ஹேமாவை விட குறைவான டிரஸ் அனிந்திருந்தாள். ஹாய் ஸ்வீட்டி என்று அவனுடைய சட்டையைபிடித்து இழுத்தாள். சிவா அவளது முகத்துக்கு அருகே இழுக்கப்பட்டான். “அஸ்வினி.” “அஸ்வினி.ஹ¥ இஸ் தாட்? வான கோ ஹோம் பையா?” “ய்யா. ய்யா” அந்தப்பெண் அவனை இழுத்து அனைத்துக்கொண்டாள். ஒரு டாக்ஸியை அழைத்தாள். அஸ்வினி கிட்ட இருந்தும் இப்படித்தான் ஸ்மெல் வரும். “போதையில் புத்திமாறுமா வட்ட நிலாவும் சதுரமாகுமா?” க்ரேட். அவளது கழுத்தில் தஞ்சம் புகுந்தான். ஐ லவ் யூ. “கெட்டப்பின் ஞானம் ஏனம்மா அட கட்டிலில் நியாய தர்மமா?

ஆகஸ்ட் 2000.

“சிவா. உன்ன மானேஜர் கூப்பிடறார்.” “ஐ நோ மேன். வாட் இட் இஸ் அபவுட்” சிவாவின் கண்கள் சிவந்திருந்தன. சட்டை கலைந்திருந்தது. “ஐ யாம் பீயிங் ·பயர்ட்? இஸின்ட் இட்?” அவன் மௌனமாக இருந்தான். “ஐ நோ” சிவா வருத்தப்படாத. என்னோட கன்ஸல்டண்ட் கிட்ட உன்னோட ரெஸ்யூம் ·பார்வேர்ட் பண்றேன். யூ வில் கெட் எ ஜாப் சூன். ஹவ் ஹோப் மேன்” ஹக் ஹக் ஹக் ஹக். சிவா தன் டிராயரில் தேடி செல்போனையும், இன்னும் சில பேப்பர்களையும் எடுத்துக்கொண்டான். செல்போனை ஆன் செய்தான், ஸ்கிரீனில் அஸ்வினி அழகாக சிரித்துக்கொண்டிருந்தாள். ஹக் ஹக் ஹக் ஹக் ஹக் ஹக்.

அக்டோபர் 2000

“ஆண்ட்டி. சாரி என்ன மன்னிசிடுங்க. அதோ அந்த கட்டுமரம் இருக்கு பாருங்க அதுக்கு பக்கத்துல தான் எப்பவுமே படுத்துக்கிடப்பான். எந்த ஒரு நாளும் அவன் என்ன செஞ்சாலும் செய்யாடினாலும் எங்க போனாலும் போகாட்டினாலும் இந்த பீச்சுக்கு இந்த இடத்துக்கு வராம இருக்க மாட்டான். இது தான் அவங்க ரெண்டு பேரும் கடைசியா சந்திச்ச இடம். சாரி என்னால எதுவும் செய்யமுடியல ஆண்ட்டி. அவன் என்ன மீறி போயிட்டான் ஆண்ட்டி” என்று ராஜா அழ ஆரம்பித்தான். “பெத்தவங்க எங்க பேச்சையே கேக்கறதில்ல. நீ சொன்ன எப்படிப்பா கேப்பான். நாங்க வெயிட் பண்றோம். அவன் இங்க வருவான்ல?”

நவம்பர் 2000

“ஏங்க இவன் இப்படியே இருந்தான்னா சென்னையில் கெட்டு சீரழிஞ்சு போயிடுவாங்க. காரியாபட்டில இருக்குற உங்க தங்கச்சி வீட்டுக்கு அனுப்பிடுங்க. அங்க கொஞ்சம் நால் இருந்தான்னா சரியாயிடுவான். அதுக்குள்ளயும் ஒரு நல்ல சம்பந்தமா நாமும் பார்த்தடலாம்”

***

காரியாபட்டி டிசம்பர் 2000.

சிவாவின் மாமா முழித்துப்பார்த்தார். மிகவும் நிசப்தமாக இருந்தது. குளிர்ந்த காற்று மெல்லிசாக வீசியது. ஏனோ அவருக்கு மிகவும் வேர்த்தது. அருகில் இருந்த கெடிகார்த்தில் மணி பார்த்தார். மணி 12:10. அருகில் அவருடைய மனைவி தூங்கிக்கொண்டிருந்தார். நிமிர்ந்து சிவாவின் ரூமைப் பார்த்தார். திறந்திருந்ததைப் போல இருந்தது. மெதுவாக தட்டினார். திறந்திருந்தது. திறந்தார். சிவா. பதில் இல்லை. லைட் போட்டார். யாரும் இல்லை. திரும்பிப் பார்த்தார். வெளிக்கதவு திறந்திருந்தது. ஏனோ பயம் அவரைக் கவ்விக்கொண்டது. மெதுவாக வெளியே வந்தார். சிவா. படிகளில் இறங்கி நின்றார். வலது பக்கம் திரும்பிப் பார்த்தவர். அதிர்ந்தார். அங்கே படிக்கட்டுக்குப் பக்கத்தில் நாலைந்து நாய்கள் முன்னங்கால்களை தாங்கி உட்கார்ந்திருந்தன. அவைகளில் வாயில் எச்சில் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அவை யாவும் நிசப்தமாக உட்கார்ந்திருந்தன. சிவாவின் மாமா அதிர்ந்தார். மெதுவாக நடந்தார். சூ. சூ. அவை அசைந்து கொடுக்கவில்லை. சூ சூ. மெதுவாக நடந்தார். ஒரு நாய் மெதுவாக ஊளையிடத்தொடங்கியது. மற்ற நாய்களும் சேர்ந்துகொண்டன. சிவாவின் மாமா மெதுவாக நடந்து படிக்கட்டைப் பார்த்தார். படிகளின் மேலே சிவா அசையாமல் உட்கார்ந்திருந்தான். சிவாவின் மாமா படிகள் ஏறிச்சென்றார். நாய்கள் பயங்கரமாக குறைக்க ஆரம்பித்தன. சிவா. சிவா. டேய் சிவா. சிவாவின் மாமா தொட அவன் சாய்ந்து விழுந்தான். வாயில் நுரை. சிவாவாவாவா. நாய்கள் குரைப்பதை நிறுத்திவிட்டு அமைதியாக வெறித்தன. “ஐயோ சிவா”

***

காரியாபட்டி. டிசம்பர் 14. 2011.

“சொல்லுப்பா உனக்கு என்ன வேணும். ஏன் இந்த சின்ன புள்ள மேல ஏறிகிட்டிருக்க? போயிடுப்பா. அவ வாழவேண்டிய குறுத்து. விட்டுட்டு போயிடுப்பா” பூசாரி அஸ்வினியைப் பார்த்து கெஞ்சிக்கொண்டிருந்தார். அஸ்வினி நிலை குத்திய பார்வையோடு உட்கார்ந்திருந்தாள். “போகமாட்டேன். நான் போகமாட்டேன்” அஸ்வினி ஆண் குரலில் பேசிக்கொண்டிருந்தாள். “உனக்கு வேண்டியத கேள் தந்திடரோம். போயிடு. சொல்லு என்ன வேண்டும்” “சொல்லப்போறியா இல்லையா” அஸ்வினி அழ ஆரம்பித்தாள். “எனக்கு என் அம்மாவ பாக்கனும். எனக்கு என் அம்மாவ பாக்கனும். எனக்கு என் அம்மாகூட பேசனும். மன்னிப்பு கேக்கனும். அம்மா வேணும். அம்மா வேணும்” சிவா அழுதுகொண்டிருந்தான். அழுதுகொண்டேயிருந்தான்.

காரியாபட்டி. டிசம்பர் 16. 2011.

சிவாவின் அம்மா நிலைகுத்தி நின்றார். அஸ்வினி. நீ என்னோட மருமக அஸ்வினி மாதிரியே இருக்கம்மா. அச்சு அசல் அதே மாதிரி இருக்க. அதே பேர். எப்படி சாத்தியம்? அதுவும் இதே வீட்டுக்கு நீ வந்திருக்க பாரு. ம்ம்ம்ம்..இந்த வீடு என்னோட நாத்தனாரும் அவருடைய வீட்டுக்காரரும் காலம் காலமா இருந்த வீடு. சிவா போயிட்ட பிறகு அவங்களுக்கு இங்க இருக்கவே பிடிக்கல. வீட்ட வித்துட்டு போயிட்டாங்க. அதுக்கப்புறம் நிறைய பேர் இருந்திருக்காங்க. இப்ப நீங்க வந்திருக்கீங்க. இது வரைக்கு யாரையும் தொந்தரவு செய்யாம இருந்தவன், உன்ன பாத்த பிறகு உன்ன எனக்கு காமிக்கனும்னு நினைச்சிருக்கான். அது தான் என்ன கூப்பிட்டுருக்கான். தைரியமா இரும்மா. இனி அவன் வரமாட்டான். சிவா வரமாட்டான். என் வீட்டுக்கு ஒரு தடவ வந்துட்டு போம்மா. நீ என் மருமக.

***

சென்னை. ஜூன் 02. 2000.

எலக்ட்ரிக் ட்ரெயினை விட்டு கீழே இறங்கினாள் அஸ்வினி. ரிங் ரிங் ரிங் ரிங். நடந்து கொண்டே தனது பையில் துலாவி செல்போனை எடுத்தாள். “ம்ம் சரிடி. ச்சீ போடி. அதெல்லாம் கிடையாது. நாங்க உங்கள மாதிரியெல்லாம் கிடையாது. சரி. ஓகெ..பை பை.” செல் போனை உள்ளே போட்டுவிட்டு, தண்டவாளத்தில் இறங்கி நடந்தாள். இரு தண்டவாளங்களைக் கடந்தால் அந்தப்பக்கம் போய் விடலாம். ரிங். ரிங். ரிங். சிவா தடியன் கால் பண்றான். இவ்ளோ நேரம் எங்க போனானாம்? நின்று கைப்பையில் தேடி செல்போனை எடுத்தாள். ஏ ஏ ஏ பொண்ணு சத்தம் கேட்டது. யாரோ கூப்பிட்டார்கள். கால் ஆன்சர் பண்ணினாள். “தடியா..” சொல்லிக்கொண்டே திரும்பினாள். எதிரே மிக ருகில் எலக்ட்ரிக் ட்ரெயின். மிகுந்த இரைச்சலுடன்.

செல்போன் தூக்கியெறியப்பட்டு ஒரு முள்ளுச்செடிக்கு அருகே சென்று விழுந்தது.உலகம் சுழன்றுகொண்டுதான் இருந்தது.

“ஹலோ அஸ்வி” “ஹலோ அஸ்வி” “ஹலோ அஸ்விக்குட்டி” “டேய் செல்லம்”. கால் துண்டிக்கப்பட்டது.

மீண்டும் டயல் செய்தான். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”. மீண்டும். “நீங்கள் டயல் செய்த எண் தற்சமயம் உபயோகத்தில் இல்லை”.

ஸ்டுபிட் அஸ்வி. என்னைக்குத்தான் நீ பேட்டரிய ஒழுங்கா சார்ஜ் பண்ணிவெக்கப்போறியோ!”

***