அம்பேத்கர் : காவியாகி மீண்டும் நீலத்திற்கு திரும்பினார்

நீங்கள் மேலே காண்பது, படௌன் நகரில் உத்திரப்பிரதேசத்தில், காவிமயமாகி காட்சிதரும் அம்பேத்கர் சிலை. அப்புறம் பி எஸ் பி கட்சிப் பிறமுகர் ஒருவர் அதை நீலத்திற்கு மாற்றுகிறார்.

இதற்குமுன்னர், யோகி அதியநாத்தின் அரசாங்கம், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் என்கிற பெயரில் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்ற முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

மகனின் காதுகுத்தை நடத்தலாமா எலெக்‌ஷன் கமிஷன் ஆபீசர்?

மகனின் காதுகுத்தை நடத்தலாமா என்று கணவன் மனைவியிடமோ அல்லது மனைவி கணவனிடமோ கேட்பது வழக்கம், ஆனால் எலெக்‌ஷன் கமிஷன் ஆபீசரிடம் கேட்பது?

கர்நாடகாவில் இந்த தேர்தல் நேரத்தில், என்ன்வெல்லாம் செய்யலாம் என்ன செய்யக்கூடாது, என்கிற தெளிவில்லாததால், பொதுமக்கள் எலெக்‌ஷன் கமிஷனரை சாதாரண விசயத்துக்குக் கூட அனுகுகின்றனர். கல்யாண ஏற்பாடு செய்யலாமா, காது குத்தலாமா, தங்கம் வாங்கலாமா, பேர்வைப்பு வைபவம் செய்யலாமா, பிறந்தநாள் கொண்டாடலாமா என்பன போன்ற கேள்விகள் எலெக்‌ஷன் கமிஷனுக்கு வருகிறதாம்.

இவ்வாறான விழாக்களுக்காக வாங்கப்படும் பரிசுகள், நகைகள், பொருட்கள் பொதுவாக கட்சிகள் மக்களுக்கு ஓட்டுப்போடக் கொடுப்பதால், இவ்வாறான குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.

சீஃப் எலெக்‌ஷன் ஆபிசர் சஞ்சீவ் குமார் குடும்ப விழாக்களை நடத்த அனுமதி வாங்கத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

காமன்வெல்த் போட்டிகள் : இந்தியாவுக்கு மேலும் மூன்று தங்கம்

XXI காமன்வத் போட்டிகளில், நேற்று இந்தியாவுக்கு தங்கநாள், இந்தியா வீராங்கனைகள் மூன்று தங்கங்களை அள்ளினர்.

 • இந்த அதிரடியால் இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தியா மொத்தம் 7 தங்கமும், 2 வெள்ளியும், 3 வென்கல பதக்கங்களை இன்றுவரை அள்ளியிருக்கிறது.
 • பூனம் யாதவ், பெண்கள் பிரிவின் 69 கிலோ பலுதூக்கும் போட்டியில், தங்கம் வாங்கினார். பலுதூக்கும் போட்டியில் இந்தியா மொத்தம் 5 தங்கங்களை வென்றது. விகாஸ் தாகூர் ஆண்கள் பிரிவின் 94 கிலோ போட்டியில் வென்கலம் வென்றார்.
 • 16வயது மனு பகேர் பத்து மீட்டர் சூட்டிங்கில் தங்கம் வென்றார். ஹீனா சிது வெள்ளி வென்றார். ரவிக்குமார் வெண்கலம் வென்றார்.
 • பெண்கள் டேபில் டென்னிஸ் அணியான மனிகா பத்ரா, மதூரிகா பட்கர் மற்றும் மௌமா தாஸ், நடப்பு சாம்பியனான சிங்கப்பூரை வென்று முதல் தங்கப்பதக்கத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தனர்.

மேலும்:

 • ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி வேல்ஸ் அணியை 4-3 என்கிற செட் கணக்கில் வென்றது. பெண்கள் பிரிவு இங்கிலாந்தை 2-1 என்கிற செட் கணக்கில் வென்றனர். இருவரும் செமி ஃபைனல் போகிறார்கள்.
 • பாக்சர் மேரி கோம் செமி ஃபைனல் செல்கிறார். அவருக்கான பதக்கம் உறுதியாயிற்று.

பூனம் யாதவ்

ஹீனா சிது, மனு பக்கேர்


காவிரி – பிரச்சனையின் நதிமூலம்

காவிரிப் பிரச்சனை 1892ஆம் ஆண்டு சென்னை பிரசிடென்ஸிக்கும் மைசூர் மாகானத்துக்கும் இடையே ஆற்றின் தண்ணீரைப் பிரித்துக்கொள்வதில் ஆரம்பித்தது. அந்த நாளிலிருந்து இன்று வரை அப்பம் யாருக்குச் சொந்தம் என்கிற விடை கிடைத்தபாடில்லை.

Plate-51552568429

1910 ஆம் ஆண்டு இரண்டு மாநிலங்களும் ஆற்றில் அணைக்கட்ட முற்பட்டன. இந்த பிரச்சனையை பிரிட்டிஷ் அரசாங்கம் கையிலெடுத்து யாருக்கு எவ்வளவு பங்கு என்று பிரித்துக்கொடுத்தது. 1924இல் இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்த ஒப்பந்தத்தில் இப்பொழுது இருக்கும் பாசன வசிதிகளை புதிதாக கட்டப்படும் எந்த அனைக்கட்டும் சேதப்படுத்தக்க்கூடாது என்றும், அப்படி புதிதாகக் கட்டப்படும் எந்த அனையும் தமிழ்நாட்டின் ஒப்புதலோடுதான் கட்டப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. சரியாகச் சொன்னால், மைசூர் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லவே முடியாது.

ஆனால் கர்நாடகா மேற்குறிப்பிட்ட எதையுமே செய்யவில்லை. அதற்குப் பதிலாக மத்திய அரசின் அனுமதி பெறாமல் புதிதாக நான்கு (ஹரங்கி, கபினி, ஹேமாவதி, சுவர்னாவதி) கட்டுமானப் பணிகளைத் துவக்கியது.

1910இல் மைசூரு அரசாங்கம் கண்ணம்பாடியில் ஒரு நீர்த்தேக்கம் கட்டுவதற்கு மெட்ராஸ் அரசாங்கத்திடம் அனுமதி கோரியது. மெட்ராஸ் அரசாங்கம் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தார் சொன்ன தீர்ப்பை மெட்ராஸ் ஏற்றுக்கொள்ளவில்லை, மேல் முறையீடு செய்தது. இந்திய அரசாங்கம் இந்த விசயத்தில் தலையீடு செய்யவில்லை, காரியங்கள் நடந்தேரின, 1924 ஒப்பந்தம் கையெழுத்தானது.

நீங்கள் இந்திய வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும்:

765 கிமீ நீளம் உள்ள காவிரி ஆறு இரண்டு மாநிலங்களை கடந்து ஓடுகிறது: கர்நாடகா, தமிழ்நாடு.

கர்நாடகாவின் கொடகு மாவட்டத்தில் இருக்கும் தலைக்காவிரியில் தொடங்குகிறது. கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலுமே பெரும்பாலும் ஓடினாலும் இதன் ஆற்றுப்படுகை கேரளாவிலும் புதுச்சேரியிலும் இருக்கிறது.

Irrigation map.jpg

1892 மற்றும் 1924இல் போடப்பட்ட ஒப்பந்தம்: மொத்த தண்ணீரில் 75 சதவிகிதம் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும், 23 சதவிகிதம் கர்நாடகாவிற்கும், எஞ்சியிருக்கும் தண்ணீரை கேரளாவிற்குக் கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு மாநிலங்களைப் பிரிக்கும் பொழுது தான் பிரச்சனை ஆரம்பித்தது. அதற்கு முன்பு பிரச்சனைகள் பேசியே தீர்த்துக்கொள்ளப்பட்டன. பிறகு தமிழ்நாடு ஆற்றின் குறுக்கே அனைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதே சமயத்தில் கர்நாடகா கொடுக்கும் தண்ணீரை நிறுத்திவிடத் துடித்தது. 1924இல் போடப்பட்ட ஐம்பது வருடத்துக்கான ஒபந்தம் 1974இல் காலாவதியாகிவிட்டது, காவிரி கர்நாடகாவில் தொடங்குவதால் எங்களுக்கே காவிரியில் உரிமை அதிகம் என்று வாதிட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் மைசூர் மகாராஜாவுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் இப்பொழுது செல்லாது செல்லாது என்று விஜயகுமாராய் திமிர் காட்டியது.

1974க்கு அப்புறம் கர்நாடகா காவிரியை மேற்குறிப்பிட்ட நான்கு நீர்த்தேக்கங்களுக்கு திருப்பிவிட்டது. இதற்கு தமிழ்நாட்டின் ஒப்பந்தத்தைப் பெறவில்லை.

விவசாய நிலங்கள் பெருகிவிட்ட காரணத்தால் தமிழ்நாடும் காவிரியைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. தண்ணீர் பிரிப்பதில் சிக்கல் ஆனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கபடும் என்று வாதிட்டது தமிழ்நாடு. 1972இல் மத்திய அரசு எந்தெந்த மாநிலங்கள் – தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி – எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகின்றனர் என்கிற கணக்கு எடுப்பதற்கு ஒரு கமிட்டியை நியபித்தது. அந்தக் கமிட்டி தமிழ்நாடு 566 tmcf பயப்படுத்துகிறது என்றும் கர்நாடகா 177 tmcf பயன்படுத்துகிறது என்றும் கண்டறிந்தது. முன்பு பயன்படுத்தியதைப் போலவே இப்பொழுதும் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் என்று அந்தக் கமிட்டி பரிந்துரைத்தது .

Cauvry basin

சர்வதேச முறைப்படிதான் – அதாவது இருவருக்கும் சரி சமமாக – தண்ணீரைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா வாதிட்டது. 94 சதவிகிதத்தை கர்நாடகாவும் தமிழ்நாடும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றும் மீதமிருப்பதை புதுச்சேரிக்கும் கேரளாவிற்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படியே இப்பொழுதும் தொடரவேண்டும் என்று தமிழ்நாடு சொன்னது.

1986இல் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு விவசாயிகள் குழுமம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு ட்ரிபியூனல் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொன்னது. 1990இல் இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் இருவரும் பேசித்தீர்த்துக்கொள்ள கால அவகாசம் கொடுத்தது. ஆனால் இருவரும் ஒத்துவராத காரணத்தால் காவிரி ட்ரிப்யூனல் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.

1980 இல் இருந்து 1990 வரையிலான நீர் உபயோகத்தை ஆராய்ந்து, காவிரி ட்ரிப்யூனல், 1991இல் கர்நாடகா தமிழகத்துக்கு வருடந்தோரும் ஜூன் முதல் மே மாததிற்குள், மேட்டூர் அணைக்கு 205 tmcf அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் கர்நாடகா விவசாய நிலங்களை அதிகப்படுத்தக்கூடாது என்றும் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.

எதிர்பார்த்தபடியே இந்தத் தீர்ப்பை கர்நாடகா ஏற்றுக்கொள்ளாமல் அதை செல்லாது என்று அறிவிக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இது தான் தீர்ப்பு மாற்றமுடியாது, டாட் என்று சொல்லிவிட்டது. கர்நாடகா அடிபணியவில்லை. இந்திய அரசாங்க கெசட்டில் இந்த இடைக்காலத் தீர்ப்பு பதிவுசெய்யப்பட்டது.

அடுத்த மூன்று வருடங்களுக்கு இரு மாநிலத்திலும் நல்ல மழை இருந்ததால் பெரிய போராட்டங்கள் இல்லாமல் இரு மாநிலங்களும் அமைதியாக இருந்தன. 1995இல் கர்நாடகாவில் மழை சரிவர இல்லாத காரணத்தால், இடைக்காலத்தடையை அது மதிக்கவில்லை. தமிழ்நாடு, சுப்ரீம் கோர்ட்டை நாடி 30 டி எம் சி தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்தது. சுப்ரீம் கோர்ட்டும் கர்நாடகாவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பிறகு நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் அன்றைய பிரதம மந்திரி பி வி நரசிம்மராவ் தலைமையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ராவ் இரண்டு மாநில முதலமைச்சர்களையும் கலந்து ஒரு வழி சொல்லி இருவரையும் சம்மதிக்கவைத்தார்.

1998இல் காவிரி அதிகார மைய்யம் அமைக்கப்பட்டது. பிரதமந்திரி அந்த குழுவிற்கு தலைமை தாங்கினார். மற்ற மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

பதினாறு வருடங்கள் கழித்து 2007இல் காவிரி ட்ரிபியூனல் (CWDT) இறுதித் தீர்பை வழங்கியது. 1892, 1924 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தம் இன்றும் செல்லும் என்று அறிவித்தது. தமிழ்நாட்டிற்கு 410 டி எம் சியும், கர்நாடகாவிற்கு 270 டி எம் சியும், கேரளாவிற்கு 30 டி எம் சியும் புதுச்சேரிக்கு 7 டி எம் சியும் அறிவித்தது. கர்நாடகா இதை எதிர்த்து மாநிலம் தழுவிய பந்த அறிவித்தது.

2013இல் பிப்ரவரி 19 அன்று மத்திய அரசு CWDTஇன் இறுதித் தீர்ப்பை உறுதிசெய்து கெஜட்டில் பதிவு செய்தது , காவிரி மேலான்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரை அமைக்கப்படவேயில்லை.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்திற்குள் தண்ணீர் வரவில்லையெனில் சம்பா பயிர்கள் வாடிவிடுமே என்ற கவலை விவசாயிகளிடம் தொற்றிக்கொள்ளும். ஏப்ரல் மேயிலே பிரச்சனை ஆரம்பமாகிவிடும். மேமாதத்திலிருந்து கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டுமே? கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாது. தமிழ்நாடு கையேந்தி நிற்கும். சுப்ரீம் கோர்ட் படியேறும். கடைசியில் செப்டம்பருக்கு கொஞ்சம் முன்பு சுப்ரீம் கோர்ட் 15000 குசக்ஸ் (கிட்டத்தட்ட ஒரு டி எம் சி) அளவு மட்டுமாவது திறந்துவிடுங்கள் என்று கேட்கும். அதை மறுத்து கர்நாடகாவில் பந்த் வெடிக்கும். போராட்டம் நடக்கும். தமிழ் கடைகள் உடைக்கப்படும்.

தண்னீர் வந்து சேரும் வரை, விவசாயி வயிற்றில் புளியைக் கரைத்துக் இலவு காத்த கிளியாகக் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

சென்னை ட்ரெக்கிங் க்ளப் நிறுவனர் பீட்டர் முன் ஜாமீன் கேட்டு மனு

அந்த மிகவும் துரதிர்ஷ்டமான குரங்கனி ட்ரெக்கிங்கை ஏற்பாடு செய்த சென்னை ட்ரெக்கிங் க்ளப்பின் நிறுவனர் பீட்டர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்திருக்கிறார்.

குரங்கனி போலீஸ் அவர் மீது எஃபையார் பதிவு செய்து, முதல் குற்றவாளியாக சேர்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள செக்‌ஷன்களில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது:

 • செக்‌ஷன் 174
 • செக்‌ஷன் 336 (அடுத்தவர்களுடைய பாதுகாப்புக்கும் உயிருக்கும் கேடு விளைவிக்கும்படி நடந்து கொள்வது)
 • செக்‌ஷன் 337 (அடுத்தவர்களுடைய பாதுகாப்புக்கும் உயிருக்கும் கேடுவிளைவுக்கக் கூடிய தீங்கை செய்வது)
 • செக்‌ஷன் 338 (மிக மோசமான காயங்களை ஏற்படுத்தி அதன் மூலம் உயிருக்கும் பாதுகாப்புக்கும் கேடுவிளைவிப்பது)
 • செக்‌ஷன் 304(2) (கொடூரமான கொலை ஆனால் திட்டமிடப்பட்ட கொலை அல்ல)

சம்பவம் நடந்த அன்று போடி காவல் நிலையத்தில் போடப்பட்ட எஃபையாரில் பிரபு அளித்த வாக்குமூலத்தின் பேரில் யாரும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பில்லை என்றே இருந்தது என்றும் கூறியிருக்கிறார்.

அவர் மேலும் சென்னை ட்ரெக்கிங் க்ளப் ஒரு தன்னார்வக் குழு, உறுப்பினர் சேர்க்கைக்கு யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.


மேலும் ஒருவர் பலி

மேலும் மார்ச் 11இல் நடந்த குரங்கனி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த புதன் கிழமையன்று காலமானார். இறப்பு எண்ணிக்கை 23ஆக உயர்வு.


பீட்டர் ஒரு ஃபிட்னஸ் பிரியர். ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை ஓடவும் நீந்தவும் மலை ஏறவும் ஊக்குவித்தவர். சென்னையில எங்க பாஸ் நீந்தறது? எங்க ஓடுறது? மலை ஏறுவதா சான்சே இல்லை என்று சொன்னவர்களுக்கு மனது இருந்தால் மார்க்கபந்து என்று செய்து காட்டியவர்.

குப்பைகளை கார்பரேஷன் கிளீன் செய்கிறதோ இல்லியோ இவர் க்ளீன் செய்தார். அடையார் ஆறாகட்டும், சென்னை கடற்கரையாகட்டும், நீர் நிரம்பிய குவாரிகளாகட்டும் இவர் அள்ளிய குப்பைகள் ஏராளம்.

படம்: சென்னை ட்ரெக்கிங் க்ளப் ஃபேஸ்புக் பேஜ்

இரத்த தானத்தை ஒரு பிரச்சாரமாகவே செய்து உறுப்பினர்களை ஊக்குவித்து தானம் செய்ய வைத்தவர். கடந்த சென்னை வெள்ளத்தின் போது கடுமையாக உழைத்து மக்களை கரையேற்றினார். மக்களுக்கு மறந்து போன உடல் உழைப்பை மீண்டும் கற்றுக்கொடுத்தவர். இந்த வழக்கிலிருந்து மீண்டு வருவார் என்று நம்புவோம்.

ஆப்கள் செல்ஃபோன் காமெராவை வைத்து என்னென்ன செய்ய முடியும்?

ஒரு செயலிக்கு (ஆப்) நீங்கள் உங்கள் கேமராவை உபயோகப்படுத்த அதிகாரம் கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த செயலியால் என்னென்ன செய்ய முடியும்?

அந்த செயலியால்,

 • முன் பக்க, பின் பக்க காமராவை உபயோகப்படுத்த முடியும்
 • அந்த செயலி திரையில் இருக்கும் பொழுது, எந்த நேரமும் உங்களை ரெக்க்கார்ட் செய்ய முடியும்
 • உங்களிடம் கேட்காமல் உங்களை படம் பிடிக்கவோ, வீடியோ எடுக்கவோ முடியும்
 • எடுத்த படங்களை/வீடியோவை உடனுக்குடன் பதிவேற்ற முடியும்
 • முகத்தை அடையாளம் காணும் மென்பொருளை உடனுக்குடன் லைவ்வாக பயன்படுத்தி, உங்களது முக அம்சங்களையும் முக பாவனைகளையும் கண்டுபிடிக்க முடியும்.
 • பதியப்பட்ட முக பாவனைகளையும் முக அம்சங்களையும் ஒரு நல்ல முக அடையாள மென்பொருளைப் பயன்படுத்தி இணையத்தில் உங்கள் முகத்தைத் தேட முடியும். கிடைக்கும் ஃபோட்டோக்களை வைத்து உங்களை முகத்தை 3டி மாடலாக உருவாக்கமுடியும்
 • காமராவை லைவ்வாக ஸ்ட்ரீம் பண்ண முடியும்.
 • ஃபோன் பயன் படுத்துபவர் தனியாக இருக்கிறாரா அல்லது இரண்டு நபர்களுடன் இருக்கிறா என்று கண்டுபிடிக்க முடியும்
 • நீங்கள் நீயூஸ் ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கும் பொழுதி, முன் பக்க பின் பக்க காமராவைப் பயன் படுத்தி அழகான ! போட்டோக்கள் எடுக்க முடியும்.

அடங்கப்பா.

சரி, என் பாத் ரூம் அவ்வளவு அழகாக இருக்காதே, எப்படி என்னைப் பாதுகாத்துக் கொள்வது?

 • முற்றிலும் பாதுகாப்பான வழி காமரா கவர்களை வைத்து காமராவை மறைப்பது. அல்லது சிம்பிளாக டேப் வைத்து மறைப்பது. நான் என் மேக் புக் காமராவை அப்படித்தான் மறைத்து வைத்திருந்தேன்.
 • காமராக்கான அக்ஸஸ் ரைட்சை எல்லா செயலிகளிலிருந்தும் தூக்குவது. ஃபோனில் இருக்கும் காமரா செயலியை பயன்படுத்தி ஃபோட்டோக்கள் எடுத்து பிறகு அந்த அந்த ஆப்களின் ஃபோட்டோ தேர்ந்தெடுக்கும் அப்ஷனை வைத்து எடுத்த போட்டோவை செலக்ட் செய்யுங்கள்.
 • இதையும் செய்யக்கூடாது என்றால் உங்கள் ஃபோட்டோவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அந்த ஸ்க்ரீன் ஷாட்டை காப்பி பேஸ்ட் செய்யவும்

நம்மை மற்றும் ஊர் உலகத்தையே ஃபோட்டோ எடுத்து போஸ்ட் செய்ய வைக்கும் மார்க் தம்பியே காமராவை மறைத்துத் தான் வைத்திருக்கிறார்.

தம்ப்ரி, நீ சொன்னா நம்ப முடியாது, வெள்ளக்காரன் சொன்னாத்தான் நம்புவோம்னா, இங்கே ஆதாரமும், சாம்பிள் ப்ராஜெக்டுமே இருக்கிறது. நீங்கள் சோர்ஸ் கோடை எடுத்து ஆப்பை ஓட்டியே பார்க்க முடியும்.

பீ கேர்புல். நான் என்னச் சொன்னேன்.

YouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு, நான்கு பேர் காயம்

வட கலிஃபோர்னியாவில் இருக்கும் YouTube தலைமை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் காயம் அடைந்திருக்கின்றனர்.

மேலும் சுட்டவர் என்று கருதப்படும் பெண் வலாகத்தில் தானே சுட்டுக்கொண்டு இறந்திருக்கக்கூடும் என்று கருதுகிறது போலீஸ்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காயம் அடைந்தவர்களின் நிலைமை என்ன வென்று தெரியவில்லை. ஒருவர் கவலைக்கிடமாக இருக்கக் கூடும் என்று அசோசியேட்டட் ப்ரஸ் சொல்கிறது.

1700 பேர் அந்த அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள்.

சானல்கள் வெளியிட்ட காட்சிகளில் யூட்யூப் அலுவலர்கள் கைகளை உயரே தூக்கிக் கொண்டு வெளியேறுகின்றனர்.

யூட்யூபில் வேலை செய்யும் ஒருவர் தான் வேலை செய்துகொண்டிருந்த பொழுது துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும், மக்கள் அங்கும் இங்கும் ஓடியதாகவும் பின்னர் உடன் வேலை செய்பவர்களுடன் ஒரு அறையில் அமர்த்தப்பட்டனர் என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.

வின்னி மண்டேலா காலமானார்

mandela-wife

வின்னி மண்டேலா, நெலசன் மண்டேலா தென் ஆப்பிரிக்க சிறையிலிருந்து 1990இல் வெளிவந்த பொழுது எடுக்கப்பட்ட படம். 1996இல் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

நிறவெறியை எதிர்த்துப் போராடிய வின்னி மண்டேலா தனது 81ஆவது வயதில் காலமானார். இவர் நெல்சன் மண்டேலாவின் இரண்டாவது மனைவி.

புத்திசாலியான, அக்ரோஷமான, சொல்திறமிக்கவரான, அழகான மடிகிஜேலா மண்டேலா, மண்டேலாவைக் கரம் பிடித்த பொழுது உலகுக்கு அறிமுகமானார்.

வின்னி மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் அடித்தட்டு மக்களிடம் தனக்கான இடத்தை அவராகவே தனது போராட்டத்தினால் பெற்றிருந்தார். ஏப்ரல் 2016இல் ஜனாதிபதி ஜாகோப் ஜி ஜுமா, மடிகிஜேலா மண்டேலாவுக்கு, நாட்டின் உயரிய விருதான the Order Of Luthuliஐ அவருடைய ஜனநாயகப் போராட்டத்துக்காக அளித்தார்.

வின்னி மண்டேலா அவருடைய நிறவெறிப் போராட்டம் அவரது கணவரின் உலகலாவிய புகழினால் மறைக்கப்பட்டுவிட்டது என்று கவலை கொண்டார். கடைசிக் காலத்தில் மீண்டும் தனது இழந்த புகழை, தேசத்தின் தாயாக மீண்டும் மாற எடுத்த முயற்சிகள் பெரிய வெற்றி அடையவில்லை. “நான் மண்டேலாவால் உருவாக்கப்படவில்லை.நான் எனது பல்லாயிரக்கணக்கான மக்களின் கனவுகளால் உருவாக்கப்பட்டவள். எனது எதிரிகளின் கொடுரத்தால் உருவாக்கப்பட்டவள்” என்று ஒரு முறை கூறினார். அவர் எதிரிகள் என்று சொன்னது தென் அப்பிரிக்காவை ஆண்டு கொண்டிருந்த மேற்கத்திய வெள்ளைக்காரர்களின் அரசு. அவர் வெள்ளைக்காரர்களால் கொடுமைகளுக்கு உள்ளானவர் – வெள்ளைக்காரர்கள் இவரை மொத்தமாக ஒழித்துவிடவும் முயற்சித்தனர்.

03mandela

வின்னி மண்டேலா 1986இல் தென் ஆப்பிரிகாவின் க்ரூகெர்ஸ் ட்ராப் நீதிமன்றத்திற்கு வந்தபொழுது அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தனர். நெலசன் மண்டேலாவைத் தாண்டி அவரை பின்பற்றுபவர்கள் நிறைய இருந்தனர்.

மண்டேலா கேப் டவுனிலிருந்து சிறிது தூரத்திலிருக்கும் ராபன் தீவில் 27 வருடங்கள் சிறை வைக்கப்பட்ட பொழுது, இவர் தான் மண்டேலாவுக்கும் அவரை பின்பற்றுபவர்களுக்குமான பாலமாக இருந்தார். ஆனால் வந்த செய்திகள் மிகவும் குறைவு – ஏனென்றால் மிக சொற்பமான முறையே அவர் சிறைக்குள் அனுமதிக்கபட்டார். அந்த சந்திப்பில் இவர் மண்டேலாவை தொடக்கூட அனுமதி மறுக்கப்பட்டது.

1996இல் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதற்கப்புறம் மண்டேலா, முன்னால் மொசாம்பிக் ஜனாதிபதியான சமோரா மசெல்லின் மனைவியான க்ராசா மசேலை (சமோரா மசேல் இறந்துவிட்ட பிறகு) தனது 80ஆவது வயதில் 1998இல் திருமணம் செய்துகொண்டார். இது மண்டேலாவின் மூன்றாவது திருமணம்.