அம்பேத்கர் : காவியாகி மீண்டும் நீலத்திற்கு திரும்பினார்

நீங்கள் மேலே காண்பது, படௌன் நகரில் உத்திரப்பிரதேசத்தில், காவிமயமாகி காட்சிதரும் அம்பேத்கர் சிலை. அப்புறம் பி எஸ் பி கட்சிப் பிறமுகர் ஒருவர் அதை நீலத்திற்கு மாற்றுகிறார்.

இதற்குமுன்னர், யோகி அதியநாத்தின் அரசாங்கம், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் என்கிற பெயரில் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்ற முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

மகனின் காதுகுத்தை நடத்தலாமா எலெக்‌ஷன் கமிஷன் ஆபீசர்?

மகனின் காதுகுத்தை நடத்தலாமா என்று கணவன் மனைவியிடமோ அல்லது மனைவி கணவனிடமோ கேட்பது வழக்கம், ஆனால் எலெக்‌ஷன் கமிஷன் ஆபீசரிடம் கேட்பது?

கர்நாடகாவில் இந்த தேர்தல் நேரத்தில், என்ன்வெல்லாம் செய்யலாம் என்ன செய்யக்கூடாது, என்கிற தெளிவில்லாததால், பொதுமக்கள் எலெக்‌ஷன் கமிஷனரை சாதாரண விசயத்துக்குக் கூட அனுகுகின்றனர். கல்யாண ஏற்பாடு செய்யலாமா, காது குத்தலாமா, தங்கம் வாங்கலாமா, பேர்வைப்பு வைபவம் செய்யலாமா, பிறந்தநாள் கொண்டாடலாமா என்பன போன்ற கேள்விகள் எலெக்‌ஷன் கமிஷனுக்கு வருகிறதாம்.

இவ்வாறான விழாக்களுக்காக வாங்கப்படும் பரிசுகள், நகைகள், பொருட்கள் பொதுவாக கட்சிகள் மக்களுக்கு ஓட்டுப்போடக் கொடுப்பதால், இவ்வாறான குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.

சீஃப் எலெக்‌ஷன் ஆபிசர் சஞ்சீவ் குமார் குடும்ப விழாக்களை நடத்த அனுமதி வாங்கத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

IRNSS-1I – ISROவின் புதிய சாட்டிலைட் நாளை வின்னில் பறக்கிறது

ஸ்ரீஹரிகோட்டோ நாளை வியாழக்கிழமையன்று புதிய வழிசொல்லி (Navigation) செயற்கைக்கோளை வின்னில் ஏவத்தயாராகி வருகிறது. இந்த மாதத்தில் வின்னில் ஏவப்பட்ட இரண்டாவது செயற்கைக்கோள் இது.

சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவிலிருக்கும் சதிஷ் தாவன் வானாராய்ச்சி மைய்யத்திலிருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படும். 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.

US GPSக்கு இணையாக வழிசொல்லி செயற்கோள்களை இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது. இது பொதுமக்களுக்கும் மிலிட்டரிக்கும் இருக்கும் இடத்தைப் பற்றிய டேட்டாவைக் கொடுக்கும்.


  • ஒரு நபரின் (அல்லது பொருளின்) இடத்தையும், நேரத்தையும், பயனிக்கும் வழியையும் கண்டுபிடிக்க உதவும் சிக்னல்களை அனுப்பும். இப்பொழுது நாம் உபயொகப்படுத்தும் ஜிபிஎஸ் அமெரிக்காவினுடைய செயற்கொள்களால் நமக்குக் கிடைக்கிறது.
  • 1,425 எடையுள்ள இந்த செயற்கைக்கோள் 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.
  • NavICயின் எட்டாவது செயற்கைக்கொளான இது, PSLV ராக்கட்டில் அனுப்பப்படும்.

மார்ச் 29 அன்றுதான் தொடர்புக்கான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பியது. இது அனுப்பிய மூன்றாம் நாள் தன்னுடைய சுற்றுக்கு சென்றுவிட்டது, ஆனால் எந்த சிக்னல் அனுப்புவதை நிறுத்திக்கொண்டது.

இந்த செயற்கைக்கோள்கள் பத்துவருடம் வேலை செய்யும் என்று நம்பப்பட்டது ஆனால் IRNSS-1A வின் ருபீடியம் அடாமிக் கடிகாரம் அனுப்பிய இரண்டாவது ஆண்டே வேலை செய்யாமல் போய்விட்டது.

ஒரு நபரின் தற்போதைய இடத்தையோ அல்லது நேரத்தையோ சரியாக 24 மணி நேரமும் கணக்கிட இந்த ஏழு செயற்கைக்கோள்களும் சரியாக வேலைசெய்ய வேண்டும்.

கூகுள் ஹோம் ஸ்பீக்கர்ஸ் இந்தியாவில் அறிமுகம்

கூகுள் செவ்வாயன்று “பேசுவதை கேட்டு வேலை செய்யும்” (வாய்ஸ் ஆக்டிவேட்டட் ஸ்பீக்கர்ஸ்) ஸ்ப்பீக்கர்களான ஹோம் மற்றும் ஹோம் மினியை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இதற்குப்பின்னால் இருக்கும் தொழிநுட்பம் கூகுள் அஸிஸ்டெண்ட். நீங்கள் உங்கள் ஆன்ட்ராய்டு ஃபோனில் ஓகே கூகுள் என்று சொன்னவுடன் உங்கள் உத்தரவிற்காகக் காத்திருக்கிறேன் மன்னா என்று முழித்துக்கொண்டு நீங்கள் தேடச்சொல்லுவதை தேடிக்கொண்டு வருகிறதே , அதே தான்.

இந்த சாதனம் அமேசானின் எக்கோவுடன் போட்டிபோடும். ஹோம் மற்றும் ஹோம் மினியின் விலை ₹9,999 மற்றும் ₹4,499 ஆகும். இவை ஆன்லைனில் தற்சமையம் ஃபிலிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும். 750 பிற கடைகளில் ரிலையன்ஸ் டிஜிட்டல் உட்பட் கிடைக்கும்.


இந்த மாதிரியான சாதனங்கள் பற்றிய கட்டுரையையும் படித்துவிடுங்கள்.

அந்த விளம்பரம் அலெக்சா என்ன பேச முடியும் என்பதைப் பற்றியதாக இருந்தாலும் – நிறைய டிஜிட்டல் உதவியாளர்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலம் நம் வீட்டிற்குள் வந்துவிட்ட இந்தக் கால கட்டத்தில், முக்கியமான கேள்வி, அலெக்சாவால் நாம் பேசுவதிலிருந்து என்னவெல்லாம் ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்பதே.

அலெக்சா, நீ என்ன ஒட்டுக் கேட்கிறாய்?


ட்விட்டர் உலா: மகேஷ் மூர்த்தி, த்ரிஷா, பா.ரஞ்சித், நீல் டைசன்..

முதலீட்டாளர் மகேஷ் மூர்த்தி, ஃபேஸ்புக்கின் மாதாந்திர மக்கள் வரத்து (!) குறைந்திருக்கிறது என்று சொல்கிறார். #சோனமுத்தாபோச்சா?


பிரபல விஞ்ஞானி (கார்ல் சாகனின் காஸ்மோஸ் சீரிஸின் ரீமேக்கின் ப்ரசண்டர்) நீயூட்டனின் மூன்றாம் விதியை கவித்துமாக்கியிருக்கிறார். #ரொமாண்டிக்


ட்ரம்ப் தொடர்ந்து மொக்கவாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய கட்டிடத்தில் தீ பிடித்த செய்தியைப் பகிர்கையில், தீயணைப்பு வீரர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லையாம். #மனமில்லியோ?


சிரியாவில் 7 ஆண்டுகளாக தொடரும் போரைப் பற்றிய ட்வீட்டை பா.ரஞ்சித் ரீ ட்வீட்டியிருக்கிறார்.#முடிவே இல்லியா?


ஸ்டார்டப்களுக்கும் மாணவர்களுக்கும் குருவாக இருக்கும் தொரை தோட்லா ஃப்ரான்சின் ஆர்ட்டிஃபீசியல் இண்டெலிஜென்சில் கடுமையாக முதலீடு செய்து வருவதை ட்வீட்டிருக்கிறார். #நீங்களும்செய்யவேண்டும்


வெளிச்சத்தைப் பார்த்து நில்லுங்கள், நிழல் உங்கள் பின்னால் விழும் என்று கருத்திட்டிருக்கிறார் த்ரிஷா #செம


பூனம் யாதவ் : ஏழ்மைப் பலுவை தூக்கியெறிய பலு தூக்குவதே வழி!

தொடர்புடைய செய்தி:

காமன்வெல்த் போட்டிகள் : இந்தியாவுக்கு மேலும் மூன்று தங்கம்


நேற்று பூனம் யாதவ், இங்கிலாந்தின் சாரா டேவிஸை வென்று பலுதூக்கும் போட்டியில் இரண்டாவது பதக்கத்தை வென்றார். 2014 க்ளாஸ்கோ போட்டிகளில் இவர் வெண்கலம் வென்றார்.

22 வயதான பூனம் யாதவுக்கு ஏழ்மையை விட்டு வெளியேற பலு தூக்குவது ஒன்றே வழியாகயிருந்திருக்கிறது. வாரனாசிக்கு அருகிலிருக்கும் சண்டமாரியிலிருக்கும் இவருடைய குடும்பத்தில் இவருடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர். மூன்று பெண்கள். ஒரு பையன். சிறிய விவசாயியான இவரது தந்தை விவசாயத்திலிருந்து வரும் சொற்ப வருமானத்தில் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும்.

வாரனாசியிலிருக்கும் STC (சாய் ட்ரெயினிங் செண்டர்) யில் தான் முதலில் இவரது அக்கா சஷி பலுதூக்குவதற்கு பயிற்சி எடுத்துகொண்டிருந்தார். அரசாங்க வேலை வாங்கிவிட வேண்டும் என்பது அவரது பெருங்கனவாக இருந்தது. பூனம் ஒரு வருடம் கழித்து அந்த செண்டரில் சேர்ந்தார். பிறகு அவரது தங்கையும் – பூஜா – சேர்ந்துகொண்டார். இந்த மூன்று வீராங்கனைகளுக்கும் சரியான சாப்பாட்டை சத்தான உணவை, அவரது தந்தையால் தனது சொற்ப வருமானத்தை வைத்து கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்களுள் மிக்ச்சிறந்தவரான பூனத்தை மட்டும் அவர்கள் தயார்படுத்த ஏகமனதாக முடிவுசெய்தனர்.

“அவருக்கு திறமை இருக்கிறது என்று நாங்கள் அறிந்து கொண்டபிறகு அவருக்கு முடிந்தவரை நாங்கள் சப்போர்ட் செய்ய முடிவெடித்தோம். விட்டிலிருக்கும் எருமை மாட்டின் பாலை கொஞ்சம் பணம் கிடைக்குமே என்று விற்போம், பூனத்துக்காக நான் கொஞ்சம் பாலை மறைத்து வைத்து அவருக்கு கொடுப்பேன். என் சாப்பாட்டை கொஞ்சம் எடுத்து வைத்து அவருக்கு அதிகமான உணவு தேவைப்படுவதால் அவருக்கு கொடுத்திருக்கிறேன்” என்கிறார் பூனத்தின் அக்கா சாஷி. குடும்பத்தினரின் தியாகம் வீண் போக வில்லை. 2014ஆம் ஆண்டு பூனம் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். தொடர்ந்து காமல்வெல்த்திலும் வெண்கலம் வென்றார்.

பூனத்திற்கு வெற்றிகள் குவிந்தன. 2015இல் காமல்வெல்த் சாம்பியன்சிப்ஸை வென்றார். 69கிலோ பிரிவுக்கு முன்னேறி 2017 காமன்வெல்த்தில் மொத்தம் 217கிலோ தூக்கி வெள்ளி வென்றார்.

காமன்வெல்த் போட்டிகளே அவருடைய குறிக்கோளாய் இருந்தது. போட்டிகளுக்காக கிளம்பும் சில நாட்களுக்கு முன், “என் குடும்பத்திற்கு நான் நிறைய செய்யவேண்டும். நிறைய வெற்றிகளைப் பெற்று அவர்களைப் பெருமை அடையச் செய்யவேண்டும்” என்று பூனம் சொன்னார்.

மேலும் பல வெற்றிகள் பெற தங்க மங்கை பூனம் யாதவை குரல்வலை வாழ்த்துகிறது.

காமன்வெல்த் போட்டிகள் : இந்தியாவுக்கு மேலும் மூன்று தங்கம்

XXI காமன்வத் போட்டிகளில், நேற்று இந்தியாவுக்கு தங்கநாள், இந்தியா வீராங்கனைகள் மூன்று தங்கங்களை அள்ளினர்.

  • இந்த அதிரடியால் இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தியா மொத்தம் 7 தங்கமும், 2 வெள்ளியும், 3 வென்கல பதக்கங்களை இன்றுவரை அள்ளியிருக்கிறது.
  • பூனம் யாதவ், பெண்கள் பிரிவின் 69 கிலோ பலுதூக்கும் போட்டியில், தங்கம் வாங்கினார். பலுதூக்கும் போட்டியில் இந்தியா மொத்தம் 5 தங்கங்களை வென்றது. விகாஸ் தாகூர் ஆண்கள் பிரிவின் 94 கிலோ போட்டியில் வென்கலம் வென்றார்.
  • 16வயது மனு பகேர் பத்து மீட்டர் சூட்டிங்கில் தங்கம் வென்றார். ஹீனா சிது வெள்ளி வென்றார். ரவிக்குமார் வெண்கலம் வென்றார்.
  • பெண்கள் டேபில் டென்னிஸ் அணியான மனிகா பத்ரா, மதூரிகா பட்கர் மற்றும் மௌமா தாஸ், நடப்பு சாம்பியனான சிங்கப்பூரை வென்று முதல் தங்கப்பதக்கத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தனர்.

மேலும்:

  • ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி வேல்ஸ் அணியை 4-3 என்கிற செட் கணக்கில் வென்றது. பெண்கள் பிரிவு இங்கிலாந்தை 2-1 என்கிற செட் கணக்கில் வென்றனர். இருவரும் செமி ஃபைனல் போகிறார்கள்.
  • பாக்சர் மேரி கோம் செமி ஃபைனல் செல்கிறார். அவருக்கான பதக்கம் உறுதியாயிற்று.

பூனம் யாதவ்

ஹீனா சிது, மனு பக்கேர்