வட கலிஃபோர்னியாவில் இருக்கும் YouTube தலைமை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் காயம் அடைந்திருக்கின்றனர்.
மேலும் சுட்டவர் என்று கருதப்படும் பெண் வலாகத்தில் தானே சுட்டுக்கொண்டு இறந்திருக்கக்கூடும் என்று கருதுகிறது போலீஸ்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காயம் அடைந்தவர்களின் நிலைமை என்ன வென்று தெரியவில்லை. ஒருவர் கவலைக்கிடமாக இருக்கக் கூடும் என்று அசோசியேட்டட் ப்ரஸ் சொல்கிறது.
1700 பேர் அந்த அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள்.
சானல்கள் வெளியிட்ட காட்சிகளில் யூட்யூப் அலுவலர்கள் கைகளை உயரே தூக்கிக் கொண்டு வெளியேறுகின்றனர்.
யூட்யூபில் வேலை செய்யும் ஒருவர் தான் வேலை செய்துகொண்டிருந்த பொழுது துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும், மக்கள் அங்கும் இங்கும் ஓடியதாகவும் பின்னர் உடன் வேலை செய்பவர்களுடன் ஒரு அறையில் அமர்த்தப்பட்டனர் என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.