2009இல் சிறந்த கண்டுபிடிப்புகள் – TIME

மின்சாரக் கண்

MIT ஆராய்ச்சியாளர்கள் கண் பார்வையற்றவர்களுக்கு பெரிதும் பயன்படும் விதமாக ஒரு மைக்ரோ சிப் உருவாக்கிக்கொண்டுள்ளனர். இந்த மைக்ரோ சிப் முழுமையான கண்பார்வை கொடுக்காது எனினும்; முகங்களை அடையாளம் தெரிந்து கொள்ளவும்; எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு யார் துணையும் இன்றி பார்வையற்றவர்கள் நகர்ந்து செல்லவும் உதவுமாம்.

இந்த சிப் (தண்ணீர் பட்டு கெட்டுவிடாமல் இருக்க, டைட்டானியத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது) பார்வையற்றவர்களின் கண்களுக்குள் பொருத்தப்படும். அவர்கள் சின்ன காமெராக்கள் பொருத்தப்பட்ட கண்ணாடி அணிந்துகொள்ளவேண்டும். இந்த காமெரா தன் படங்களை கண்ணுக்குள்ளே பொருத்தப்பட்டிருக்கும் அந்தச் சிப்புக்கு அனுப்புமாம்; அந்த சிப் மூளைக்கு அனுப்புமாம்.

பத்து மில்லியன் மதிப்புமிக்க மின்சார விளக்கு
டச் நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிலிப்ஸ் அமெரிக்காவின் Department of Energy’s L Prize போட்டிக்குள் நுழைந்த முதல் கம்பெனி என்கிற பெருமை பெறுகிறது. நாம் எப்பொழுதும் உபயோகிக்கும் அறுபது வாட்ஸ் பல்புக்கு மாற்றாக LED பல்புகளைக் கண்டுபிடித்திருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால் அமெரிக்கா வருடந்தோறும் தற்போது 17.4 மில்லியன் வீடுகளுக்கு தேவையான அளவு மின்சாரத்தை சேமிக்கமுடியுமாம். அதற்கும் பத்து மில்லியனுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது, பிலிப்ஸ் L Prizeஐ வென்று விட்டால் அமெரிக்காவுடன் 10 மில்லியன் டாலர் விற்பனை ஒப்பதம் கிடைக்குமாம்.

பிலிப்ஸின் LED பல்ப் ஒரு அறுபது வாட்ஸ் பல்பு தரும் அதே அளவு வெளிச்சத்தைக் கொடுக்கும் ஆனாலு அறுபது வாட்ஸ் பல்பை விட இது பத்து வாட்ஸ் கம்மியாகப் பயன்படுத்தும்; மேலும் 25,000 மணி நேரம் உழைக்குமாம். அறுபது வாட்ஸ் பல்பைவிட 25 மடங்கு அதிகமான உழைப்பு!

20 டாலர் முட்டி
கால் இழந்த ஏழைகள் விலை மலிவான ஜெய்பூர் பொய் கால்களை உபயொக்கித்துக் கொள்ளலாம்.ஆனால் முட்டியை இழந்து விட்ட ஏழைகளுக்கு பத்தாயிரம் டாலர் செலவழித்துத் தான் ஒரு டைட்டானியம் முட்டியைப் பொருத்தவேண்டும். வேறு வழியே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது ஸ்டான்பொர்ட் என்ஜினியரிங் மாணவர்கள் மிக மிக மலிவான விலையில் (இருபது டாலர்கள் மட்டுமே!) முட்டியைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இது அச்சு அசலாக நிஜ முட்டியைப் போலவே செயல்படுமாம். Jaipur foot groupஇன் உதவியோடு கண்டுபிடிக்கப்பட்ட இந்த முட்டியில்; உராய்தலைத் தவிர்ப்பதற்காக எண்ணெய் நிறப்பப்பட்ட நைலான் வைக்கப்பட்டுள்ளதாம்.

தற்பொழுது இதை இந்தியாவில் மூன்னூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்குப் பொருத்தி டெஸ்ட் செய்து வருகிறார்களாம்.

எய்ட்ஸ¤க்கு தடுப்பூசி
எய்ட்ஸ¤க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது என்றால் அது தான் மகத்தான கண்டுபிடிப்பாக இப்போது இருக்கமுடியும். எய்ட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டப்பிறகு தற்பொழுது அதற்கு தடுப்பூசி கண்டுபிடித்திருக்கின்றனர். ஆறு வருட சோதனைக்குப் பிறகு, ஒவ்வொருவருக்கும் இரண்டு முறை இந்த தடுப்பூசி போட்ட பிறகும், இது எய்ட்ஸை தடுக்கவில்லை என்றாலும், ஏற்கனவே எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 31% பாதிப்பைக் குறைத்ததாம். ரத்தத்தில் உள்ள வைரஸ்களின் எண்ணிக்கை எந்த வகையிலும் குறையாமல் இருக்கும் பொழுது பாதிப்பு மட்டும் எப்படி குறைகிறது என்று விஞ்ஞானிகள் மண்டையைப்பிய்த்துக்கொள்கிறார்களாம். இந்த மருந்து இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், எய்ட்ஸ¤க்கான மருந்து கண்டுபிடிப்பின் பாதையில் இது ஒரு மைல்கள்.

எனக்குப் பிடித்தவை அவ்வளவே. மேலும் பல கண்டுபிடிப்புகளை இங்கே காணலாம்.

***
நவம்பர் ஏழு Carl Sagan day என்பது ஞாபகம் இருந்தும் மறந்துவிட்டேன். நானும் என் நண்பர் சஜித்தும் Carl Saganஇன் விசிறிகள்.

எனக்குப் பிடித்தமான அவரது ஒரு Quote:
“Somewhere there is something incredible waiting to be known”

எங்கோ நம்பமுடியாத ஏதோ ஒன்று நம் நம்பிக்கைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது!

Fantastic!

***