நேற்று பூனாவில் நடைபெற்ற சன்ரைசர்ஸ்க்கெதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
Following the recent trend, வெற்றி தோல்வி என மாறி மாறி கண்ணாமூச்சி காட்ட, சென்னை அணி 11ஆம் தேதி ஜெய்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. டாஸில் வென்ற தொனி ஆச்சரியமாக பேட்டிங் தெர்வுசெய்தார். அணியின் management அறிவுரை என்றார். வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. பிட்சில் ஏகப்பட்ட விரிசல்கள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். பின்னர் பவுலிங் செய்ய வரும்போது சுழல்பந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற ஒரு காரணமாகவும் இருக்கலாம்.
Par score 160 என்று இருக்கையில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. இதில் ராஜஸ்தான் அணி தானமாக கொடுத்த 10 வைட் ரன்கள் அடக்கம். தொடர்ந்து பேட்டிங் செய்த வந்த ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் முதல் மூன்று பந்தில் 3 பவுன்ரிகள், அடுத்து ஓவரிலும் 2 பவுன்ரிகள் 1 சிக்ஸர் என அதிரடி துவக்கம் தந்தார். பவர் ப்ளேவின் முடிவில் 52 ரன்கள் குவிக்க ஆட்டம் சூடுபிடித்தது. நடுவில் கொஞ்சம் விக்கட்டுகள் விழ கடைசி 3 ஓவரில் 38 ரன்கள் தேவையிருக்க ப்ராவாவோனின் ஓவரில் தோனி ஒரு கடினமான கேட்சை தவறவிட்டார். கடைசி 2 ஓவரில் 28 ரன்கள் தேவையிருந்தது.
டி20 போட்டிகளில் கடைசி 5 ஓவர்களை death overs என்பார்கள். இந்த ஓவர்களில் ஆட்டத்தின் போக்கே மாற வாய்ப்புண்டு. 19வது ஓவரை வீச வந்த டேவிட் வில்லி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த போட்டியை மறக்க முயலுவார். கர்னாடகா ரஞ்சி வீரர் கிருஷ்ணப்பா கௌதம் 2 சிக்ஸர்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த ஓவரில் மொத்தம் 16 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ப்ராவோவின் ஓவரில் ஜாஸ் பட்லர் ஒரு இமாலய சிக்ஸருடன் 2 ரன்களாக மூன்று முறை எடுக்க ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.
You can’t win just because you are talented, you need to execute well.
சென்னை அணி இதை நன்றாக உணர்ந்திருக்கும். வழக்கமாக உணர்ச்சிவசப்படாத Captain Cool தோனி அன்று பேட்டியில் சென்னை அணி பவுலர்களை வருத்தெடுத்ததை பார்த்த பலரின் புருவங்கள் உயர்ந்திருக்கும்.
Will Dhoni’s reaction fire up the CSK bowlers என்ற கேள்வியுடன் ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டி மற்றொறு masterclass. Not just a contest between table toppers, but a contest between the best bowling unit and the best batting unit என்பதால் சுவாரசியத்திர்க்கு பஞ்சமில்லை. டாஸ் வென்ற தோனி வழக்கம் போல் பவுலிங் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஒதுங்கியிருந்த தீபக் சகார் உள்ளே வர பவுலிங் கொஞ்சம் வலுவடைந்தது.
ஆரம்பமே அமர்க்களமாக அமைய நான்காவது ஓவரில் தீபக் சகாரின் பந்தில் அலெக்ஸ் ஹால்ஸ் அவுட். இரண்டாவது விக்கட்டுக்கு தாவனும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன்னும் சேர்ந்து 123 ரன்கள் குவித்தனர். நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இன்னொரு Mr. Cool. மிக துல்லியமான திட்டமிடல், தன் அணி வீரர்களின் திறமையை முழுவதும் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றல், அலட்டிக்கொள்ளாத attitude என்று கேப்டன் பதவிக்கான முழுத்தகுதியும் உள்ளவர்.
நம் எம்.ஜி.யாரைப் போல் ஓடி ஓடி உழைக்கனும் என்று பாடியவாரே விளையாடுவார் என்று நினைக்கத் தோன்றும்.
ஸ்டைர்க் ரேட் 130 முதல் அதிகபட்சமாக 135 இருக்கும். ஆனால் பவுண்ரிகளும் சிக்ஸர்களூம் அதிகம் இருக்காது. பல சந்தர்ப்பங்களில் டேவிட் வார்னரை விட மிக சிறப்பாக அணியை வழிநடத்துகிறார். இன்னிங்ஸ் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 179 ரன்கள் குவித்திருந்தது.
பின்னர் விளையாட வந்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராயுடுவும் வாட்சனும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆந்திராவுக்கே கோங்குராவா என்று அம்பத்தி “பாகுபலி” ராயுடு வந்த ஓவ்வொறு பந்தையும் திருப்பதி லட்டாக மாற்றியது தான் highlight. ஒரு பக்கம் வாட்சன் விளாச மறுபக்கம் சன்ரைசர்ஸ் அணியின் ஒவ்வொறு ஸ்டார் பவுலர்களையும் பதம் பார்த்தார். 7 பவுண்ரிகளும் 7 சிக்ஸர்களும் பறக்க வெறும் 62 பந்துகளில் டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார்.
சென்னை அணியைப் பொருத்தவரை மும்பை இந்தியனஸ் அணியிடமிருந்து “களவாடிய” வீரர்கள் அனைவரும் மிகச் சிறந்த வீர்களாக உருமாரியது கொஞ்சம் அதிசயம். ப்ராவோ, டுவைன் ஸ்மித், ராயுடு, ஹர்பஜன் சிங் என அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தவரை low capital with high returns என்ற முதலீடு வகையைச் சேர்ந்தவர்கள். யாரும் சோடை போனதில்லை.
எந்த ஒரு நிறுவனம் தன் ஊழியர்கள் மீது உண்மையான நம்பிக்கை வைத்து ஊக்கமும் அளிக்கின்றதோ அந்த அளவுக்கு அந்த ஊழியர்கள் தங்கள் திறனை வெளிக்கொணர்வார்கள்.
இதற்கு சென்னை அணியும் ராயுடு, வாட்சன் போன்ற வீரர்கள் சிறந்த உதாரணம். தோனியும் தன் பங்கிற்க்கு ஒரு பவுண்ரியும் சிக்ஸரும் தெரிக்க விட, சென்னை அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்த வரை புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, ரஷீத் கான், சித்தார்த் கவுல் என IPL போட்டிகளின் ஆகச் சிறந்த பவுலர்கள் இருந்தாலும் இந்த வருடத்தில் அவர்களுக்கெதிறாக மூன்று அணிகளின் வீரர்கள் (க்ரிஸ் கெய்ல், ரிஷப் பந்த், அம்பத்தி ராயுடு) சதமடித்திருப்பது விசித்திரம்.
கிட்டத்தட்ட ப்ளேஆஃப் சுற்றுக்கு தேர்வான நிலையில், இதே நாளில் நடந்த மற்றொறு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றதன் மூலம் சென்னை அணி தனது ப்ளேஆஃப் தேர்வை உறுதி செய்தது. சூரியன் கிழக்கில் உதிக்காமல் கூட போகலாம் ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போகாது என்று ரசிகர்கள் ட்வீட்டியது நியாயமானதே.
For yet another clinical performance, சென்னை அணிக்கும் ராயுடுவுக்கும் ஒரு சூப்பர் விசிலுடன்,
ஹரிஹரன்