IPL விசில் போடு – 3

ஹரிஹரன்

3

சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன்வரவேற்கிறது.
1095 நாள் காத்திருப்பு ஒருவழியாக முடிந்தது! இத்தனை காலம் காத்திருந்த பலனாக சென்னை ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இந்த போட்டி அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வென்று சேப்பாக்கம் தன் கோட்டை என நிருபித்தது. Welcome back to the den Lions!
ஆனால் இந்த போட்டியை முழுமையாக ஏனோ ரசிக்க முடியவில்லை. அரங்கத்தில் போட்டியை காணவந்த சில ரசிகர்கள் தாக்கப்பட்டனர். போட்டியின் போது சென்னை வீரர் டூபெளிசியின் மீது செருப்பு வீசப்பட்டது. சென்னை இதுவரை பார்த்திராத காட்சிகள் இவை. கோல்கத்தா மற்றும் இன்னும் சில வட இந்திய நகரங்களில் இவ்வாறு நடந்ததுண்டு.
சாதாரண கிரிக்கெட் ரசிகனுக்கும் இந்த நிகழ்வகளுக்கும் தொடர்பிருக்காது என நாம் சொன்னலும் knowledgeable crowd என அனைவராலும் பாராட்டப்படும் சென்னை மக்களுக்கு இது ஒரு களங்கம். 1999 ஆண்டு சென்னையில் நடந்த பாக்கிஸ்த்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எதிரணி வென்றாலும் எழுந்து நின்று கைதட்டி பாரட்டிய நிகழ்ச்சி தான் கண் முன் வந்து சென்றது. இந்த நிகழ்வுகளின் காரணமாக சென்னையில் போட்டி தடைபடாது என நம்புவோமாக. Hope good sense will prevail.
Coming back to the splendid contest, சென்னை ஒரு புது ஹீரோவை அடையாளம்கண்டுகொண்டது.இங்கிலாந்து வீரர் சாம்பில்லிங்ஸ் அதிரடியை காட்டசார் ஜடேஜா முத்தாய்ப்பாய் சிக்கர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். சாம்பில்கிங்ஸ் இன்னமும் ஒருவளர்ந்து வரும் வீரராகவே இங்கிலாந்தில் கருதப்படுகிறார். இருந்தாலும்தம்பி வா, தலைமையேற்கவா என்று இங்கிலாந்துவாரியம் அவருக்கு காப்டன்பதவிக்கு அழைப்புகொடுக்கலாம்.
சென்னை மாதிரியானமைதானத்தில் டாஸ் ஒருமுக்கியமான விஷயமாகக் கருதப்படுகின்றது. ஆட்டம் செல்லச் செல்ல பிட்ச்மெதுவடையும். அவ்வாறு இருக்கையில் டாஸ் வென்றஅணி வழக்கமாக பேட்டிங்செய்யும். ஏனேன்றால், அடுத்துபந்து வீசும்போது பிட்ச்சுழற்பந்துக்கு சாதகமாகஇருக்கும். டாஸ் வென்றதோனி ஆச்சிரியமாக பவுலிங் தேர்வு செய்தார்.எதிரணியில் நிறைய அதிரடிஆட்டக்காரர்கள் இருப்பது ஒருகாரணமாக இருக்கலாம்.இதனால் ரன் இலக்குகை குறிவைத்து ஆடுவது எளிது என்று நினைத்திருக்கலாம்.இரண்டாவதாக சென்னை மைதானத்தில் இரவு பனிப்பொழிவு அதிகம்.அதனால் பவுலர்ககளுக்கு இரண்டாவது இன்னிங்ஸில்பந்து வீசுவது கடினம் என்று நினைத்திருக்கலாம்.
கோல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினர்.ஒரு பக்கம் விக்கட்டுகள் சரிந்தாலும் பத்து ஓவர்களில்கிட்டத்தட்ட 90 ரன்களுக்கு மேல் எடுத்தனர். பின்னால்வந்த ஆன்ரே ரசல் பதினோரு சிக்சர்களை அடித்து அரங்கத்தை அதிரவைத்தார்.
மேற்க்கிந்திய வீரர்கள் அதிரடி ஆட்டப்பிரியர்கள்.தொடக்ககாலந்தொட்டு தன்அபார ஆட்டத்திறனால் எதிரணி வீரர்களை குலை நடுங்கச்செய்வர். 2000வருடத்திற்க்குப்பின் இரங்குமுகந்தான். அடுத்து வரும் உலக கோப்பை தகுதி சுற்றில் ஸ்காட்லேண்ட் ஜிம்பாப்வே அணிகளுடன் மொதும் பரிதாபமான சூழ்நிலை. ப்ராவோ,போலார்ட், சாமுவேல்ஸ்,கெயில், ஆன்ரே ரசல், சுனில்நரேன் போன்ற சிறந்த வீரர்கள்இருந்தும் சிறந்த அணியாகத் திகழாதது துரதிஷ்டவசம்.
நவக்கிரஹம் போல தனியாகபலனை தருவார்கள், கூட்டாக/அணியாக அல்ல.
சென்னை அணியின் முரளிவிஜய் மறுபடியும் மிஸ்ஸிங். போட்டிக்கு இரண்டு நாள் முன்பாக நாம் எடுத்த கருத்துகணிப்பில் பெரும்பாலானொர் முரளி விஜய் வரவேண்டுமென்று பதிவு செய்தார்கள்.


ஆனால் சென்ற போட்டியில் களமிறங்கிய ராயுடுவும் வாட்சனும் நானும் ரவுடி தான் என்று நினைதார்களோ என்னவோ, கொல்கத்தா பவுளர்களை பதம் பார்த்தார்கள். முரளி விஜய் இனி களமிரங்குவது சிரமமென தெரிகிறது. சாம் பில்லிங்ஸ், ப்ராவோ மற்றும் ஜடேஜா கைகொடுக்க சென்னை ஒரு பந்து மிதமிருக்க வெற்றி கண்டது.

Opening and lower order looks formidable now. சென்னை மிடில் ஆர்டரில் கவனம் செலுத்துவது நல்லது. காயமடைதொரின் என்னிக்கை வேறு கூடுகிறது. அனேகமாக playing XI போல் Injured XI வருமோ என்னவோ.


Opening and lower order looks formidable now. சென்னை மிடில் ஆர்டரில் கவனம் செலுத்துவது நல்லது. காயமடைதொரின் என்னிக்கை வேறு கூடுகிறது. அனேகமாக playing XI போல் Injured XI வருமோ என்னவோ

தல தோனியின் அதிரடி ஆட்டத்தை காணவந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றந்தான். அடுத்த போட்டியில் தல கலக்குவார் என்ற நம்பிக்கையுடன், welcome once again lions.
சூப்பர் விசிலுடன்,
ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு -1

IPL விசில் போடு – 2


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும்இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

-ஹரிஹரன்

2

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

CSK is back with a bang! 2018 IPL முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்க்கடித்து தனது வருகையை பதிவு செய்தது.

அதென்ன சார் சொந்த மண்? தோனியும் ரெய்னாவும் பாக்கிஸ்தான் வீரர்களா என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு IPL பற்றி இன்னும் புரிதல் வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் ஊரில் உங்களுக்கு எதிராக ஒரு வெளிநாட்டவர் விளையாடினால் கூட உங்கள் கண் முன்னே ஐம்பதாயிரம் பேர் அந்த வெளினாட்டவருக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள். அப்போது உங்களுக்கு அது தன்னுடைய சொந்த மண் என்ற உணர்வு எப்படி வரும்?

damyvovwkaab32m3939227663761785487.jpg

காலன், கரிகாலன் ப்ராவோ தன் விஸ்வரூபத்தைக்காட்ட, ஜாதவ் நீ கேலி செய்த ஆள் நானில்லை என்று சொல்லாமல் சொல்ல, தன் அபாரமான ஆற்றலை CSK   வெளிக்கொணர்ந்தது. ஏழு சிக்ஸர்கள் எடுத்த எரிமலை என நீ அன்போடு அழைக்கப்படுவாய் ப்ராவோ என்று நெட்டிஸன்கள் கொண்டாட , மங்களகரமாக சென்னை தன் அக்கௌண்டை துவக்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தவரையில் நாம் அந்த அணியை உலகின் பிரசிதிப்பெற்ற Manchester United அணியுடன் ஒப்பீடு செய்யலாம்.

Value for money, huge fan base என அனைத்தும் சூப்பர் கிங்ஸுக்குப் பொருந்தும். ஏலத்தின் போது யார் யாரை கேலி செய்தார்களோ அவர்கள் தான் நேற்றய போட்டியில் பிளந்து கட்டினார்கள்.

டாசில் வெற்றி பெற்ற தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். Playing XI எனப்படும் களமிறங்கும் வீரர்கள் பெயர்களை பார்த்த போது அனைவரும் கொஞ்சம் அதிர்ச்சியானது உண்மைதான். மூன்று நான்கு வீரர்களை தவிர்த்து impact players யாரும் இல்லை. கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி பார்த்தால் கூட ஆக்ரோஷமாக ஆடும் வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. Is this a winning team என்ற கேள்வி வராமல் இல்லை. ஒட்டுமொத்தமாக தோனியை நம்பியே அணியை அமைத்திருக்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்தது.

 2015 ஆண்டு வரை தோனி தன் அணியில் ஆக்ரோஷமாக ஆடும் தொடக்க ஆட்டக்காரர்களை களமிரக்குவார். ஒரு solid lower down இருக்கும். சுழர் பந்தில் அஷ்வின் கலக்குவார். அத்தனையும் மிஸ்ஸிங்.

குறிப்பாக அஷ்வின், கிளிக்கு இறக்கை முளைச்சுடுத்து ஆத்த விட்டு பறந்துபோயிடுத்து என்று ரசிகர்கள் முகநூலிலும் டுவிட்டரிலும் புலம்பியது நியாயமானதே.

ஏழு பவுலர்கள் தேவையா தல என்ற கேள்வி தோனிக்கு மட்டுமில்லை சென்னை அணியின் மங்களம் சார் ஸ்டீபன் பிளமிங்கையும் யோசிக்கவைத்திருக்கும். Anyways, இது நமது முதல் போட்டி. வீரர்களை சோதனை அடிப்படையிலேயே தேந்தெடுத்திருப்பார்கள் என நம்புவோமாக.


ஸ்கோர்கார்ட்

Batting

bowling


எது எப்படியோ இந்த வெற்றி இரண்டு வருடங்களாக ஏங்கித்தவித்த ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. மும்பை இந்தியனஸ் அணி எப்போதுமே ஆரம்பத்தில் வாமன அவதாரம் எடுத்து பின் ஒரே அடியில் இறுதியில் எதிரணியை வெல்லும். அதனால் இந்த தோல்வி அவர்களுக்கு துளியும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது. காண்டாகி அம்பானி ஜியோவில் கைவைப்பாரோவென்ற கலவரம் கிரிக்கெட் பார்க்காதவர்கள் கண்களில் தெரிந்தது. 

போட்டிகள் செல்லச்செல்ல போட்டித்தன்மை மாறமாற அணிகளும் தங்களின் யுக்த்திகளை மாற்றும். ஓரிரு வாரங்களில் அணிகளின் உண்மையான பலமும் பலவீனங்களும் தெரியவரும். சென்னை சூப்பர் கிங்ஸும் தன் பங்கிர்க்கு எவ்வாறு தன் யுக்திகளை கையாளும் என்பதை பொருத்துத்தான் பார்க்க வேண்டும். அதுவரை,

இன்னும் பலமான விசிலுடன்.

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்: IPL விசில் போடு -1


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.