ஆறு வருடங்களுக்கு (ஃபெப்ரவரி 1 2004 அன்று) முன் ஜானட் ஜாக்சனும் ஜஸ்டின் டிம்பர்லேக்கும் சூப்பர் பவுல் ஃபுட்பால் போட்டியில் நடனமாடிக்கொண்டிருந்த பொழுது ஜானட்டின் ஒரு பக்க மார்பு துணியை உணர்ச்சி வேகத்தில் தெரியாமல் கிழித்து விட்டார் டிம்பர்லேக். (தெரிந்தே செய்தார்; அவருடைய பாடலில் இது போன்றதொரு வரி வருகிறது “Hurry up ’cause you’re taking too long… better have you naked by the end of this song” என்று வாதிடுபவர்களும் இருக்கிறார்கள் )
இந்த வரலாற்று அம்சம் பொருந்திய சம்பவம் நடந்தது வெறும் அரை செகன்ட் மட்டுமே. இந்த super bowl நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்த சிபிஎஸ் தொலைக்காட்சி சேனல் இந்த சம்பவத்தையும் ஒளிபரப்பிவிட்டது.
மீடியாக்களை கண்காணிக்கும் பிடிசி இந்த சம்பவம் ஒளிபரப்பானதைக் கண்டித்து இன்டீசன்சி கம்ப்ளெயன்ட் (idenceny complaint) வழக்கை பெடரல் கோர்ட்டில் (FCC) தாக்கல் செய்தது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து 540,000 புகார்கள் அமெரிக்க மக்களால் தாக்கல் செய்யப்பட்டது. கனடாவில் மக்கள் புகார் செய்தனர்.
வழக்கை விசாரித்த ஃபெடரல் கோர்ட் இதை ஒளிபரப்பிய சிபிஎஸ் க்கு 550000 டாலர் அபராதம் விதித்தது. இந்த வழக்கு இன்றும் நிலுலையில் இருக்கிறது என்பது வேறு விசயம்.
நேரடி ஒளிபரப்பில் (திட்டமிடாமல்) நடந்த தற்செயல் நிகழ்ச்சிக்கே அமெரிக்க மக்கள் 540,000 புகார்களை பதிவு செய்தனர். 550,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் சன் டீவி ஒளிபரப்பிய நித்தியானந்தர் ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்பட்டமான அத்துமீறல். திட்டமிட்ட செயல். Explicit sexual content. ப்ரைம் டைம் செய்தி நேரத்தில் ஒரு வீட்டில் எல்லோரும் அமர்ந்து செய்தி பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது எப்படி இவ்வாறான செக்ஸ் படத்தை ஒளிபரப்பினார்கள்? ஒளி ஒலி பரப்பியது குற்றமில்லையா?
முதலில் சன்டீவியின் மேல் தானே வழக்கு பதிவு செய்யவேண்டும்? குஷ்புவின் மீதும் ஜெயராமின் மீதும் நித்தியானந்தர் மீதும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் மக்கள் முதலில் தங்களது வரவெற்பறையில் என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும்.
நித்தியானந்தர் செய்தது குற்றமா இல்லையா என்பது அவரை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை சார்ந்தது;அது அவர்களை மட்டுமே பாதிக்கும்; ஆனால் சன்டீவி செய்தது எல்லோரையும் பாதிக்கும் ஒரு அப்பட்டமான அத்துமீறல்.
Do we have parental television council or media watch dog group here? மீடியாக்களை கண்காணிக்கும் குழு இந்தியாவில் இருக்கிறதா இல்லையா? ஏனென்றால் நமது குழந்தைகளும் டீவி பார்க்கிறார்கள்.