sivaji – a flash review

எனக்கு ரெண்டு சந்தேகங்கள் இருக்கு. ஒன்னு இந்தப் படத்தோட டைரக்டர் உண்மையிலேயே ஷங்கர் தானா? இந்தப் படத்தில நடிச்சிருக்கிறது உண்மையிலே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தானா? ரஜினியை இவ்வளவு இளமையாக, யூத் புல்லாக இது வரை பார்த்ததில்லை. அவ்வளவு ஸ்டைலாக இருக்கிறார். அழகாக இருக்கிறார். படத்தில் இருப்பது ரஜினி மட்டுமே. ஷங்கர் எங்கே இருக்கிறார் என்று எவ்வளவு தேடியும் கடைசிவரைக்கும் கிடைக்கவேயில்லை.

க்ளைமாக்ஸ் காட்சியில் பணத்தைப் பறக்கவிட்டு பைட் எடுத்திருக்கிறார்கள். அதைத்தான் உண்மையிலே செய்திருக்கிறார்கள். பணத்தைப் பறக்கவிட்டு படம் எடுத்திருக்கிறார்கள். மொட்டை ரஜினி சிம்ப்ளி சூப்பர்ப். நான் சிவாஜி இல்ல எம்ஜிஆர் என்று சொல்வது அதிரடி. ஏதோ ஒரு கிராமத்தை முன்னேற்றம் செய்யுமாறு காண்பித்திருக்காலம், அது என்ன தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் கிராமம்? தருமபுரி மட்டும் தான் இன்னும் முனேறாமல் இருக்குதா என்ன? இதெல்லாம் குசும்பு. ஆமாம் தருமபுரி யாரோட தொகுதிப்பா? எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுச்சுன்னு சொல்லிருக்கன்ல. இப்பவாவது உண்மைன்னு நம்பறீங்களா?

அப்புறம் ஸ்டைல் பாடல் அட்டகாசம். ரஜினியா இது என்று ஆச்சரியப்படவைக்கும் ஸ்டைல். அதிரடிக்காரனில் நெற்றிப்பொட்டில் குண்டை நிப்பாட்டுவது கொஞ்சம் ஓவர். “என்ன கொடுமை சரவணா?” ரிப்பீட் ஆக வாய்ப்பிருக்கிறது. என்ன கொடுமை சரவணா என்று சொல்வதற்கு படத்தில் நிறைய இருக்கிறது. அந்த ட்ரைவ் இன் தியேட்டர் பைட் மட்டுமே போதும். அப்புறம் “பன்னிதான் கூட்டம் கூட்டமா வரும், சிங்கம் எப்பவும் சிங்கிளாதான் வரும்” பைட்டும் அடக்கடவுளே!

ஸ்டார்டிங்ல ரஜினியை முகமூடி மாட்டி கோர்ட்டுக்கு கூட்டிட்டு வரும் போது “ஆகா என்னமோ பண்ணிருக்காய்ங்கய்யா”ன்னு நெனச்சேன். ஆனா படம் முடியும் போது, வடிவேலு டயலாக் தான் ஞாபகம் வருது “உங்க ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா ப்னிசிங் சரியில்லையேப்பா”.

பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டே பேசும் ஸீன் நன்றாக இருந்தது. ரஜினி கெட்ட அலம்பல் பண்ணிருக்காரு. நிறைய இடத்தில. ஆனா ப்ளாக்மணிய பத்தி வற்ரதெல்லாம் காமெடியோ காமெடி! தாங்கல ராசா. பாடல்கள் பிரமாதம். செட்டிங்கஸ் கலக்கல். “பல்லேலக்கா பல்லேலக்கா” வை மட்டும் கெட்ட வேஸ்ட் செஞ்சிருக்காங்க. ரஜினி ரொம்ப மெனக்கெட்டிருக்கார். க்ரேட் சேஞ்.

சாலமன்பாப்பையா தன் இரண்டு பெண்களைப் பற்றி கமெண்ட் அடிப்பது ப்ரச்சனைக்குள்ளாகலாம். லேப்டாப்பில் வாய்ஸ் ரெகக்னிஷன் சாப்ட்வேர ப்ரேக் பண்ணமுடியாமல் திண்டாடுவதும், அப்புறம் மிமிக்ரி ஆர்டிஸ்டக்கூட்டிட்டு வந்து பேசவெக்கிறதெல்லாம், உண்மையிலே காமெடிதானா? அட போங்கப்பா.

ரஜினி தண்டவாளத்தில் தற்கொலை முயற்சி செய்வதும் ரயில் வரவர பின்னால தாவி தாவி போவதும் அமர்க்களம். “என்ன வெச்சு ஒன்னும் காமெடி கீமடி பண்ணலையே” என்று கேட்பது அழகாக இருக்கிறது.

இதுக்குமேல ஒன்னும் சொல்றதுக்கில்ல. சொன்னா அப்புறம் படத்தில இருக்குற கொஞ்சம் நஞ்சம் சுவராஸ்யமும் போய்டும். படம் பாத்திட்டு வாங்க. அப்புறமா நிறைய பேசலாம்.

“அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான் டேய்” உண்மைதான். ரஜினிக்கு பொருந்தும்.

ஷங்கர் சார் ரொம்ப பிஸியோ, அசிஸ்டெண்ட வெச்சு டைரக்ட் செஞ்சிருக்கீங்க? எவ்வளவு பெரிய சான்ஸ்? எப்படி அசால்டா மிஸ் பண்ணிருக்கீங்க? கதை கிடைக்கலையா என்ன? பசங்க மாஞ்சு மாஞ்சு நெட்ல நெறைய கதை சொன்னாய்ங்கல்ல? அத ஒன்ன சுட்டாவது ஒழுங்கா எடுத்திருக்கலாம்ல?

8 thoughts on “sivaji – a flash review

  1. review enra perula ippadi pottaa ungalukku popularity varumnu nanappo!! ungala vechu dhaan yaaro comedy pannanum HA HA HA

    Like

  2. Yours is one among many first review. nalla velai, neenga kathai sollala!!! nandriEager to enjoy the Sivaji feast. kathai solra blog ellam padikkama irukka try panren… :)- Lakshman

    Like

  3. பாபா மாதிரி ஓவர் கிராபிக்ஸ் காமெடி இருக்கக்கூடாதுனு கடவுள வேண்டிக்கிறேன்.

    Like

  4. anoop: அப்படியா? லக்ஷ்மண்: ஆமாம் one among the first review தான். sivaji is surely a rajini feast! full meals!blogeswari: போடலாம். ஆனால் நிறைய உண்மைகளை சொல்லவேண்டும் :(. நேரம் இருந்தால் second-look எழுதலாம். ஆனால் அது அவ்வளவு முக்கியமில்லை. நிறைய பேர் இந்நேரம் நிறைய எழுதியிருப்பார்கள்.ராஜா: thanks raja.siva: yes. COOOOOOOOOOOOOOOOOL.

    Like

Leave a comment