அடிமைகளுக்கு சாகவும் உரிமையில்லை

Esi Edugyan எழுதிய Washington Black படித்துக்கொண்டிருக்கிறேன். பாதி முடித்துவிட்டேன். ப்ளாண்டேஷன்களில் வேலை பார்க்கும் ஒரு கருப்பு அடிமையின் கதை. அடிமையின் பெயர் தான் வாஷ்ங்க்டன் ப்ளாக். சிறிய பையன். அந்த ப்ளாண்டேஷனிலே பிறந்தவன். அடிமைகளுக்குள் ஒரு நம்பிக்கை இருக்கிறது: ப்ளாண்டேஷனில் தற்கொலை செய்து இறந்துபோகும் நபர், அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு அவரதுசொந்த ஊரில் மீண்டும் பிறப்பார் என்பது தான் அது. இதை நம்பி ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி தற்கொலை செய்து கொண்ட ஒரு அடிமையைப் பார்த்து, முதலாளி இவ்வாறு சொல்கிறார்:

What you see here, this nigger, killed himself. He was my slave. He has therefore stolen from me. He is a thief.

இந்த அடிமை தற்கொலை செய்து கொண்டான். இவன் என்னுடைய அடிமை. அதனால் அவன் என்னிடமிருந்து திருடப்பட்டிருக்கிறான். எனவே இவன் ஒரு திருடன்.

அடிமைகளின் உயிர் கூட அவர்களதில்லை.wb

IPL விசில் போடு – 13: Champions CSK!

படையப்பா படத்துல ரம்யாகிருஷ்ணன் ஒரு டயலாக் ரஜினி சாரை பார்த்து சொல்லுவாங்கவயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகவே இல்லன்னு,”  அது ரஜினி சாருக்கு மட்டுமில்லாது சென்னை சுப்பர் கிங்சுக்கும் பொருந்தும். Against all backslashes,  conspiracy, criticism and hatred, CSK has emerged as a champion side! எத்தனை ஏச்சுக்கள், எத்தனை கிண்டல் கேலிகள், அத்தனையும் தாண்டி சாதித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2018 IPL இறுதிப்போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை வென்று கோப்பையை தட்டிச் சென்றது சென்னை சூப்ப்ர கிங்ஸ். Way to go CSK!

deobxdquwaexsck

போட்டி என்னவோ வான்கடே அரங்கத்தில் நடந்தாலும் ரசிகர்களிடையே “எங்கே செல்லும் இந்த கோப்பை? MRC நகர் (மாறன்) வீட்டுக்கா? இல்லை 300 மீட்டர் தூரத்தில் போட் கிளப் ரோட்டில் இருக்கும் என். சீனிவாசன் வீட்டுக்கா” என்று ஒரு பெரிய யுத்தமே ட்விட்டெரில் நடந்தது.  சென்னை ரசிகர்கள் என்னவோ கொண்டாடியது “சீனி மாமா” என்ற என்.சீனிவாசனைத் தான்.

நம் ரசிகர்களை பொருத்தவரை, தாய் மாமா என்பது ஒரு relation.  சீனி மாமா என்பது ஒரு emotion.

டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். மெதுவாகவே தன் கணக்கை ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணி நன்றாகவே விளையாடியது. சென்னை அணியின் வழக்கமான கர்ண வள்ளள்கள் சர்துல் தாகூர் மற்றும் டுவைன் ப்ராவோ தயவில் 20வது ஓவரின் முடிவில் 178 ரன்கள் குவித்தது. தாகூர், ப்ராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் மொத்தமாக வீசிய 9 ஓவர்களில் மட்டும் சன்ரைசர்ஸ் 101 ரன்கள் குவித்தது. இதில் 5 சிக்ஸர்களும் 9 பவுன்ரிகளும் அடக்கம். மும்பை மைதானதில் சன்ரைசர்ஸ் போல திறமையான பவுலர்களை கொண்ட அணிக்கு இது மிகவும் competitive total என்றே கூறலாம்.

தொடர்ந்து விளையாட வந்த சென்னை அணி ஆமை வேகத்தில் விளையாட நினைத்தாலும் ஸ்கோர் போர்ட் என்னவோ கல் சிலை போல் நகராமல் இருந்து. This innings from Watson will be unforgetable for various reasons. முதல் ரன்னை எடுக்க அவர் 9 பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சென்ற அரையிருதி சுற்றில் முதல் 5 பந்துகள் எதிர்கொண்டு 6வது பந்தில் ஆட்டமிழந்தது நினைத்து கொஞ்சம் tension ஆகியிருக்கலாம். வாட்சன் ஒரு பக்கம் ரன்கள் எடுக்காதது மறுபக்கம் டூப்ளெசியின் மீது pressure ஏற நான்காவது ஒவரில் சந்தீப் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆறாவது ஓவரில் மறுபடியும் சந்தீப் சர்மா. இந்த முறை வாட்சனின் தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகரிக்க ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருட்ன பவர் ப்ளே ஓவர்கள் முடிவடைந்தது. இலக்கை எட்ட ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 7 வது ஓவர் முதல் சென்னையின் அதிரடி ஆட்டம் தொடங்கியது. சன்ரைசர்ஸ் அணியின் ரஷித் கானை சென்னை வீரர்கள் கையாண்ட விதம் அற்புதம். ஆக்ரோஷமாகவும் ஆடாமல் அதே சமயம் விக்கெட் எதுவும் கொடுக்காமலும் சாதுர்யமாக விளையாடியனர்.

புவனேஷ்வர் குமார் மற்றும் ரஷீத் கானை தவிர்த்து ஏனைய பவுலர்களை target செய்தது ஒரு master plan! கடந்த ஆட்டங்களில் சிறப்பாக பவுலிங் செய்த சித்தார்த் கவுலின் பந்துகளை வாட்சனும் ரெய்னாவும் சிக்ஸர்களாகவும் பவுன்ரிகளாகவும் விளாசினர். 13வது ஓவர் கிட்டத்தட்ட game changer எனலாம். ஷேன் வாட்சன் சந்திரமுகியாகிய ஓவர். சந்தீப் சர்மா வின்

முதல் பந்து: தப்பித்தது. ரன்கள் ஏதுமில்லை

இரண்டாம் பந்து: எக்ஸ்ரா கவரில் பவுன்டரி

மூன்றாம் பந்து: நினைத்த படி சந்தீப் சர்மா ஷார்ட் பந்தாக வீச, லாங் ஆனில் சிக்ஸர்

நான்காம் பந்து: யார்கர் வீச நினைத்து வேறு என்னமோ வீச, மறுபடியும் சிக்ஸர்

ஐந்தாம் பந்து: இந்த முறை length ball. மறுபடியும் லாங் ஆனில் சிக்ஸர்

ஆறாம் பந்து: டென்ஷனில் வைட்

மறுபடியும் ஆறாம் பந்து: சற்று outside off ஆக வந்த பந்தை off side இல் பவுன்ரி

கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்தது என்றே நினைக்க தோன்றியது. 9.37 என்ற ரன்ரேட் சந்தீப் சர்மாவின் ஓவருக்குப் பின் 6.85. அதன் பின் ஓவ்வொறு ஓவரிலும் பவுன்ரிகள் எடுக்க 19வது ஓவரில் இலக்கை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை அணி வெல்ல பல காரணங்கள் இருந்தாலும் அதில் சில இதோ:

  1. டாஸில் வெற்றி
  2. லுங்கி மற்றும் தீபர் சஹாரின் துல்லியமான பந்து வீச்சு
  3. சன்ரைசர்ஸ் அணி பவுலர்களை, குறிப்பாக புவனேஷ்வர் குமாரையும் ரஷீத் கானையும் கையாண்ட விதம்
  4. வாட்சனின் அபாரமான ஆட்டம்

ப்ளேஆஃப் சுற்று வரை நம்பர்-1 அணியாக வலம் வந்த சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டில் தோல்வியடைந்தது பல காரணங்களினால்:

  1. முதலில் களமிறங்கும் ஷிகர் தவான் மற்றும் கேன் வில்லியம்சன் மீதே அதீதமாக நம்பியது
  2. மிடில் ஆர்டரில் யாரும் பொறுப்பேற்காதது. 11 கோடி கொடுத்து வாங்கிய மனீஷ் பாண்டே முதல் போட்டி முதல் சொதப்பினார். கடைசி 2-3 போட்டிகளில் அவரை களமிறக்கவில்லை. இந்த வருடத்தில் அதிகமாக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி சார்பில் ஷிகர் தவான் மற்றும் கேன் வில்லியம்சன் தவிர வேறுயாருமில்லை.
  3. சுழற்பந்தில் ரஷித் கானைத் தவிர வேறுயாரும் சோபிக்கவில்லை – வேறுயாரும் இல்லையென்றே சொல்லலாம்
  4. டேவிட் வார்னர் இல்லதது

சினிமாவில் ஹீரோ முதலில் ஆதிக்கம் செலுத்துவார், ஹீரொயின்களுடன் டூயட் பாடுவார். படத்தின் இடையில் வில்லன் ஹீரோவை முடக்க, க்ளைமாக்ஸில் ஹீரோ வில்லனை அடித்து துவைத்து வெற்றி காண்பார். சென்னை அணியின் கதையும் இதே போலத்தான். 2010 மற்றும் 2011 வருட சாம்பியன் அணி 2015இல் தற்காலிகமாக தடை வாங்கி மறுபடியும் களமிறங்கிய போது அனைவரும் நம்பிக்கையிழந்து உண்மை.

  • சென்னை அரங்கில் போட்டி நடைபெறாது போனது முதல் அடி. ஏலத்தில் எடுக்கும் வீரர்களை தங்கள் home groundஇன் சூழலுக்கேற்ப்பவே தேர்ந்தெடுப்பர். When a home pitch is shifted, it always affects the team dynamics.
  • எதிர்பார்ப்புடன் ஏலத்தில் எடுத்த நியுசிலாந்து வீரர் மிச்செல் சாண்ட்னெர் மற்றும் கேதார் ஜாதவ் காயம் காரணமாக ஒதுங்கினர்.
  • ஏலத்தின் முடிவில் ரசிகர்களின் அதிருப்தி

அத்தனை சோதனைகளை கடந்து சாதித்தது சாதாரண காரியமில்லை. Hats off CSK for making it happen!

Here is their journey to finals

அடுத்த வருடம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தியாவில் போட்டிகள் நடைபெறுமா என பொருத்திருந்து பார்க்க வேண்டும். அதற்க்குள் அணிகள் தங்கள் சுயபரிசோதனைகளை செய்வார்கள். எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் சென்னை ரசிகர்கள் அடுத்த வருட போட்டிகள் தொடங்கும் வரை தங்கள் கொண்டாட்டங்களை நிறுத்தப் போவதில்லை.

அதுவரை சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சூப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….
IPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…
IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….

 

Checklist of CSK:

Be one among the top 2 teams : Check – Done ☑️

Qualify for playoffs : Check – Done ☑️

Ensure low scoring target : Check – Done ☑️

Heart Attack for fans : Check – Done ☑️

நன்றாக விளையாடி, பின் தடுமாறி, அதன்பின் மயிரிழயில் தப்பிப்பது எப்படி ஏன்ற புத்தகம் இருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதை வெளியிடலாம்.

ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைத்து, நகங்கள் தேய, இதயத்துடிப்பு பன்மடங்காக அதிகரிக்க, “ஐயா, ராசா முடியலப்பா சாமிஎன கடைசியில் புலம்ப வைத்து அதன்பின் ஓரிரெண்டு பந்துகளிளோ ஓரிரெண்டு விக்கட்டுகளிளோ ஒரு அணி வென்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியென அறிவோமாக.

இந்த வருடத்தின்திக் திக்” CSK போட்டிகள் (கடைசி 3 ஓவர்களில் எடுத்த ஓட்டங்கள் அடிப்படையில்):

47 off 2.5 vs MI, Wankhede

41 off 2.5 vs KKR, Chennai

44 off 2.4 vs RCB, Bengaluru

43 off 2.1 vs SRH, Wankhede

Anyways, Well done CSK for making it to yet another finals!

இதுவரை கலந்துகொண்ட ஓவ்வொரு வருடமும் (இடையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்ட 2 வருடங்கள் தவிர்த்து) ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி என்பது சாதாரண சாதனை அல்ல.  அதையுந்தாண்டி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவது மிகப்பெரிய விஷயம், especially when you comeback from a suspension. தடை முடிந்து திரும்ப்ம்போது, தனி நபரோ அல்லது அணியோ, சம்மந்தப்பட்ட வீரர்களும் ரசிகர்களும் மனதளவில் மிகவும் சோர்ந்த நிலையில் இருப்பர். இவ்வாறு இருக்கையில்  மறுபடி எழுந்து எதிரியின் வீழ்த்துவது சினிமாவில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் சாத்தியம் என்று நிறுபனம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

CSK

No prizes for guessing, டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். அணியில் பில்லிங்ஸுக்கு பதில் வாட்சன். ஆரம்பமே படு ஜோராக அமைய, முதல் ஓவரில் முதல் பந்தில் ஷிகார் தாவனின் ஸ்டம்புகள் பறந்தன. போட்டியின் momentum சற்றும் குறையக்கூடாது என அடுத்து வந்த ஆட்டக்காரர்கள் counter attack முறையில் ரன்களை குவித்தாலும், ஓவர்கள் கடந்து செல்லச்செல்ல விக்கட்டுகள் விழ ஆரம்பித்தன, thanks to the shuffling in bowling by Dhoni.

வழக்கமாக கடைசி 5 ஓவர்கள் (death overs)  வீச வரும் ப்ராவோவை இந்த முறை 7வது ஓவர் வீச அழைத்தார் தோனி, which can be considered as a very smart and tactical move. 2 முக்கியமான விக்கட்டுகள் எடுத்ததுமின்றி, அந்த கேட்சை சர்வசாதாரனமாக பிடித்தது தான் highlight. தப்பாம தான்யா பேரு வைச்சுருகாங்க Bravo!

17வது ஓவர் வரை அடக்கி வாசித்த சன்ரைசர்ஸ் அணி, 18வது ஓவர் முதல் தன் ருத்ரதாண்டவத்தை தொடங்கியது. 2016 டி20 உலகக்கோப்பை புகழ் கார்லோஸ் ப்ராத்வேட் தன் அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க நினைத்தாரோ என்னவோ, பழம் நழுவி பாலில் விழுந்து அங்கிருந்து நழுவி வாயில் விழுந்த கதையானது. சென்னையின் கொடை வள்ளல் ஷர்துல் தாகூரின் தயவில் 18வது ஓவரில் 17 ரன்களும் 20வது ஓவரில் 20 ரன்களூம் வாரி வழங்கினார். இதில் நான்கு சிக்ஸர்களும் ஒரு பவுன்ரியும் அடக்கம்.

140 என்ற சுலப இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய சென்னை கிட்டத்தட்ட சன்ரைசர்ஸ் அணியைப் போலவே விளையாடியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இரு இன்னிங்ஸையும் ஒப்புனோக்க ஏகப்பட்ட ஒற்றுமைகள்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சென்னை சூப்பர் கிங்ஸ்

தாவன் (முதல் பந்து) 0-1

வாட்சன் (ஐந்தாவது பந்து) 0-1

கோஸ்வாமி : 2-43 (3.5 ஓவர்)

ரைய்னா : 2-24 (3.3 ஓவர்)

வில்லியம்சன் : 3-36 (4.2 ஓவர்)

ராயுடு : 3-24 (3.4 ஓவர்)

100 ஓட்டங்கள் – 17.1 ஓவர்களில்

100 ஓட்டங்கள் : 17.2 ஓவர்களில்

18வது ஓவரில் – 17 ஓட்டங்கள்

18வது ஓவரில் – 20 ஓட்டங்கள்

20 ஓவரில் – 20 ஓட்டங்கள்

19வது ஓவரில் – 17 ஓட்டங்கள்

7 விக்கட்டுகள் இழந்து தோல்வியின் நுனியில் சென்னை நின்ற நிலையில்அவ்வளவு தான் bro. ஆட்டம் ஓவர், கிளம்பளாம்என்று சென்னை ரசிகர்கள் நினைத்த போதுதான்நில்லுங்கபா, இனி தான் ஆட்டமேஎன்று டூப்ளெஸி தன் அதிரடியை ஆரம்பித்தார்.  18வது ஓவரில் ஒரு சிக்ஸர் 3 பவுன்ரிகள், 19வது ஓவரில் ஷர்துல் தாகூர் (ஆம் நம் சென்னையின் கர்ண பிரபுவே தான்) 3 பவுன்ரிகள் விளாசினார். தல தோனியின் ஸ்டையிலை பின்பற்றி டூப்பெளிஸியும் 20வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னொறு முறை IPL போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இதோ அந்த கடைசி இரண்டுதிக் திக்ஓவர்கள்

யாராவது உங்களை “IPL என்றால் என்ன?” என்று கேட்டால் “A tournament where 7 teams fight each other to meet CSK in finals” என்று பதில் கூறலாம்.

இன்று நடக்கும் eliminator போட்டியில் வெற்றி பெறும் அணியை ஹைதராபாத் கொல்கத்தாவில் அடுத்து சந்திக்கவிருக்கின்றது. இந்த  போட்டிகளை சென்னை கூர்ந்து கவனித்து தன் யுக்திகளை நிர்ணயிக்கும்.

இன்று தெற்கு ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் “Mr. 360 degree” டிவில்லியர்ஸ் தன் ஓய்வை அறிவித்தது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக இருந்ததுஅடுத்த வருசம் உலகப்கோப்பை போட்டிகள் இருக்கு, விளையாடி கோப்பைய ஜெய்ச்சுட்டு ஓய்வெடுக்கலாமே தல என்று ட்விட்டரில் ரசிகர்கள் உருகினர். Cricket world will certainly miss you sir! Royal salute to the most loved cricketer in the world! சென்று வாருங்கள் டிவில்லியர்ஸ்.

dd5htkgvaaecbvx

சென்னை அணிக்காகவும், டிவில்லியர்ஸுக்காகவும் ஒரு சூப்பர் விசிலுடன்.

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…
IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…

நேற்று பூனாவில் நடைபெற்ற சன்ரைசர்ஸ்க்கெதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

Following the recent trend, வெற்றி தோல்வி என மாறி மாறி கண்ணாமூச்சி காட்ட, சென்னை அணி 11ஆம் தேதி ஜெய்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. டாஸில் வென்ற தொனி ஆச்சரியமாக பேட்டிங் தெர்வுசெய்தார். அணியின் management அறிவுரை என்றார். வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. பிட்சில் ஏகப்பட்ட விரிசல்கள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். பின்னர் பவுலிங் செய்ய வரும்போது சுழல்பந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

Par score 160 என்று இருக்கையில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. இதில் ராஜஸ்தான் அணி தானமாக கொடுத்த 10 வைட் ரன்கள் அடக்கம். தொடர்ந்து பேட்டிங் செய்த வந்த ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் முதல் மூன்று பந்தில் 3 பவுன்ரிகள், அடுத்து  ஓவரிலும் 2 பவுன்ரிகள் 1 சிக்ஸர் என அதிரடி துவக்கம் தந்தார். பவர் ப்ளேவின் முடிவில் 52 ரன்கள் குவிக்க ஆட்டம் சூடுபிடித்தது. நடுவில் கொஞ்சம் விக்கட்டுகள் விழ கடைசி 3 ஓவரில் 38 ரன்கள் தேவையிருக்க ப்ராவாவோனின் ஓவரில் தோனி ஒரு கடினமான கேட்சை தவறவிட்டார். கடைசி 2 ஓவரில் 28 ரன்கள் தேவையிருந்தது.

டி20 போட்டிகளில் கடைசி 5 ஓவர்களை death overs என்பார்கள். இந்த ஓவர்களில் ஆட்டத்தின் போக்கே மாற வாய்ப்புண்டு. 19வது ஓவரை வீச வந்த டேவிட் வில்லி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த போட்டியை மறக்க முயலுவார். கர்னாடகா ரஞ்சி வீரர் கிருஷ்ணப்பா கௌதம் 2 சிக்ஸர்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த ஓவரில் மொத்தம் 16 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ப்ராவோவின் ஓவரில் ஜாஸ் பட்லர் ஒரு இமாலய சிக்ஸருடன் 2 ரன்களாக மூன்று முறை எடுக்க ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.

You can’t win just because you are talented, you need to execute well.

சென்னை அணி இதை நன்றாக உணர்ந்திருக்கும். வழக்கமாக உணர்ச்சிவசப்படாத Captain Cool தோனி அன்று பேட்டியில் சென்னை அணி பவுலர்களை வருத்தெடுத்ததை பார்த்த பலரின் புருவங்கள் உயர்ந்திருக்கும்.

Will Dhoni’s reaction fire up the CSK bowlers என்ற கேள்வியுடன் ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டி மற்றொறு masterclass.  Not just a contest between table toppers, but a contest between the best bowling unit and the best batting unit என்பதால் சுவாரசியத்திர்க்கு பஞ்சமில்லை.  டாஸ் வென்ற தோனி வழக்கம் போல் பவுலிங் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஒதுங்கியிருந்த தீபக் சகார் உள்ளே வர பவுலிங் கொஞ்சம் வலுவடைந்தது.

ஆரம்பமே அமர்க்களமாக அமைய நான்காவது ஓவரில் தீபக் சகாரின் பந்தில் அலெக்ஸ் ஹால்ஸ் அவுட். இரண்டாவது விக்கட்டுக்கு தாவனும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன்னும் சேர்ந்து 123 ரன்கள் குவித்தனர். நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இன்னொரு Mr. Cool. மிக துல்லியமான திட்டமிடல், தன் அணி வீரர்களின் திறமையை முழுவதும் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றல், அலட்டிக்கொள்ளாத attitude என்று கேப்டன் பதவிக்கான முழுத்தகுதியும் உள்ளவர்.

நம் எம்.ஜி.யாரைப் போல் ஓடி ஓடி உழைக்கனும் என்று பாடியவாரே விளையாடுவார் என்று நினைக்கத் தோன்றும்.

ஸ்டைர்க் ரேட் 130 முதல் அதிகபட்சமாக 135 இருக்கும். ஆனால் பவுண்ரிகளும் சிக்ஸர்களூம் அதிகம் இருக்காது. பல சந்தர்ப்பங்களில் டேவிட் வார்னரை விட மிக சிறப்பாக அணியை வழிநடத்துகிறார். இன்னிங்ஸ் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 179 ரன்கள் குவித்திருந்தது.

பின்னர் விளையாட வந்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராயுடுவும் வாட்சனும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆந்திராவுக்கே  கோங்குராவா என்று அம்பத்திபாகுபலிராயுடு வந்த ஓவ்வொறு பந்தையும் திருப்பதி லட்டாக மாற்றியது தான் highlight. ஒரு பக்கம் வாட்சன் விளாச மறுபக்கம் சன்ரைசர்ஸ் அணியின் ஒவ்வொறு ஸ்டார் பவுலர்களையும் பதம் பார்த்தார். 7 பவுண்ரிகளும் 7 சிக்ஸர்களும் பறக்க வெறும் 62 பந்துகளில் டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார்.

சென்னை அணியைப் பொருத்தவரை மும்பை இந்தியனஸ் அணியிடமிருந்துகளவாடியவீரர்கள் அனைவரும் மிகச் சிறந்த வீர்களாக உருமாரியது கொஞ்சம் அதிசயம். ப்ராவோ, டுவைன் ஸ்மித், ராயுடு, ஹர்பஜன் சிங் என அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தவரை low capital with high returns என்ற முதலீடு வகையைச் சேர்ந்தவர்கள். யாரும் சோடை போனதில்லை.

எந்த ஒரு நிறுவனம் தன் ஊழியர்கள் மீது உண்மையான நம்பிக்கை வைத்து ஊக்கமும் அளிக்கின்றதோ அந்த அளவுக்கு அந்த ஊழியர்கள் தங்கள் திறனை வெளிக்கொணர்வார்கள்.

இதற்கு சென்னை அணியும் ராயுடு, வாட்சன் போன்ற வீரர்கள் சிறந்த உதாரணம். தோனியும் தன் பங்கிற்க்கு ஒரு பவுண்ரியும் சிக்ஸரும் தெரிக்க விட, சென்னை அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ddfsmuoxkaepamy

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்த வரை புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, ரஷீத் கான், சித்தார்த் கவுல் என IPL போட்டிகளின் ஆகச் சிறந்த பவுலர்கள் இருந்தாலும் இந்த வருடத்தில் அவர்களுக்கெதிறாக மூன்று அணிகளின் வீரர்கள் (க்ரிஸ் கெய்ல், ரிஷப் பந்த், அம்பத்தி ராயுடு) சதமடித்திருப்பது விசித்திரம்.

கிட்டத்தட்ட ப்ளேஆஃப் சுற்றுக்கு தேர்வான நிலையில், இதே நாளில் நடந்த மற்றொறு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றதன் மூலம் சென்னை அணி தனது ப்ளேஆஃப் தேர்வை உறுதி செய்ததுசூரியன் கிழக்கில் உதிக்காமல் கூட போகலாம் ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போகாது என்று ரசிகர்கள் ட்வீட்டியது நியாயமானதே.

For yet another clinical performance, சென்னை அணிக்கும் ராயுடுவுக்கும் ஒரு சூப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

போராடுவோம்

இருட்டில் வாழ்கிறாய் நீ
குருட்டு நம்பிக்கையோடு
வெளிச்சம் தேடித் தேடி
வெறகில் வெந்து சாவாய்
காணிக்கை பேரில் இங்கு
கல் சிலைக்கு
லஞ்சம் கோடி
கோடி குமியுது
உண்டியலில்
நாட்டில் ஆனால் பஞ்சம்

நிற்த்தாலும் மதத்தாலும்
பிரிந்துவிட்டோம்
மனிதாபிமானத்தை
நாமெல்லாம்
மறந்துவிட்டோம்
காசின் திருவிளையாடல் கண்டு
நாம் மயங்கி விட்டோம்
அடையாளம் நாம்
தொலைத்துவிட்டோம்
உரிமையை
இழந்துவிட்டோம்
நாம் இறந்துவிட்டோம்

அலட்சியம்
ஏழையின் உயிரென்றால்
அலட்சியம்
பணந்தான் நோயின்
மருத்துவம்
மருத்துவமணையின் அரசியல்

உதவிசெய்யத் தகுதி இருந்தும்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஊமைகள் வாழுமிடத்தில்
வார்த்தைகளை விற்கிறாய்
வார்த்தைகளை விற்கிறாய்

நிலம் நீர் எங்கள் உரிமை
போராடுவோம்
எங்கள் வறுமைகள் ஒழிய
போராடுவோம்
புது புரட்சி உருவாக்கப்
போராடுவோம்
எங்கள் தலைமுறை காக்கப்
போராடுவோம்
எங்கள் கண்கள் தூங்கும் வரைப்
போராடுவோம்
எங்கள் இறுதி மூச்சுவரைப்
போராடுவோம்

போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
நாங்கள்
போராடுவோம்

*
ரஞ்சித்து ஆசம்யா ஆசம்..#காலா

IPL விசில் போடு – 7: The name is Dhoni

Yet another high scoring game! Yet another last over drama! சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் வெற்றிக் கொடியை பெங்களூரிவிலும் நாட்டியது.

எப்படி மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்குமோ, அவ்வாறே ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டிகளிலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். சார், ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கும் பெங்களூருவுக்கும் என்ன சம்மந்தம்? யாராவது ஒரு கர்னாடகா ரஞ்சிக் கோப்பை வீரரை காட்டுங்கள் என்று நீங்கள் கேட்கலாம் – indeed you are right. கிட்டத்தட்ட எல்லா அணிகளும் இப்படித்தான். பெயரளவில் மட்டுமே தங்கள் ஊர்களை தாங்கி வருகின்றது. Welcome to IPL. அப்படியென்றால் சென்னை – ராயல் சாலஞ்சர்ஸ் போட்டிகளில் ஏன் சார் இவ்வளவு டென்ஷன்? தெரியவில்லை. ஒரு வேளை “அவங்க தண்ணி கொடுக்காத பசங்க சார்” என்று சென்னை ரசிகர்கள் விளக்கம் கொடுக்கலாம்.

எது எப்படியோ நேற்றைய ஆட்டம் ஒரு classic T20 battle. ஒரு டி20 போட்டியின் சாமுத்ரிகா லட்சனங்கள் அத்தனையும் அடக்கம். சிக்ஸரிகளும் பவுண்ரிகளும் பறக்க, சில ரசிகர்கள் பிராத்தனைகளில் இறங்க, கடைசி ஓவரில் டென்ஷன் ஏற, அந்த டெப்ஷனில் அம்பையர்கள் சொதப்ப, சிறாஜ் வைடாக பந்துகளை போட, போட்டி அதகளம்.

dbppis4u0aat55i

டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். டூபெளசியும் கரன் சர்மாவும் வெளியேற, ஹர்பஜனும் இம்ரான் தாஹீரும் உள்நுழைந்தனர். ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் கிரிஸ் வோக்ஸுக்கு பதிலாக காலின் க்ராண்ட்ஹோம்.

ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் டிகாக்கும் டிவில்லியர்ஸ்ஸும் மிகச்சிறப்பாக விளையாடினர். சில பேட்ஸ்மென்களின் ஆட்டத்தை பார்க்கும் போது இவர்கள் கிரிக்கெட் விளையாடவே பிறந்தார்களா எனத்தோன்றும். விவியன் ரிச்சர்ட்ஸ், கவாஸ்கர், குண்டப்ப விஸ்வனாத், சச்சின் டெண்டுல்கர், கோலி வரிசையில் டிவில்லியர்ஸையும் சேர்க்கலாம்.

கர்ணன் கவச குண்டகங்களொடு பிறந்தது போல் இவர்கள் ஹெல்மெட் பேட் சகிதம் பிறந்தார்களோ என்னவோ.

டிவில்லியர்ஸ் அடித்த சிக்சர்கள் அனைத்தும்  நின்று பேசும் அவர் புகழை. அவர் அடித்த 8 சிக்ஸர்களில் ஒன்று அரங்கத்தின் வெளியே சென்று கானாமலே போனது. அனேகமாக பெங்களூரில் தடுக்கி விழுந்தால் தென்படும் ஏதாவது சாப்ட்வேர் இஞ்சினியர் மேல் விழுந்திருக்கலாம.

ஒரு சமயத்தில் சென்னை அணிக்கு இலக்கு 230லிருந்து 240 வரை இருக்கும் என்று கூட தோன்றியது. சரியான நேரத்தில் இம்ரான் தாஹீர் டிவில்லியர்ஸ் விக்கட்டை எடுக்க அட்டத்தின் momentum சற்று கட்டுக்குள் அடங்கியது. பின்னால் வந்த மந்தீப் சிங்கும் வாஷிங்டன் சுந்தரும் தன் பங்குக்கு விளாச 20ஆம் ஓவரின் முடிவில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 205 ரன்கள் குவித்தது.

இந்த ரன் குவிப்பை வேறொறு கோனத்தில் பார்க்கும் போது டி20 போட்டிகள் கடந்த சில ஆண்டுகளில் கொண்டுவந்த பரிணாம வளர்ச்சிகள் தான் காரணமோ எனத் தோன்றுகிறது. சிறிய மைதானம், பவுலர்களுக்கு சற்றும் உதவாத பிட்ச், lightning fast outfield என அனைத்தும் பேட்ஸ்மென்களுக்கு ஆதரவான ஒரு அம்சங்கள். இதன் காரணமாக பெங்களூரு போன்ற மைதானத்தில் 190 என்பதே ஒரு par score. இதன் காரனமாக டி20 என்றால் என்ன? Is it a sheer exhibition of muscle strength? என்ற கேள்வி வராமல் இல்லை. இதன் அடுத்த பரிணாம நிலை என்னவாக இருக்கும் என்பதை யாரெனும் கணிக்க முடியுமா என்பதே அடுத்த கேள்வி. காலமே இதற்கு விடை கூறட்டும்.

dbtfcgmwkaizr4s

டி20 போட்டிகளில் திறமை இருந்தாலும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ராயல் சாலஞ்சர்ஸ் அணியைப் பொருத்தவரை சற்று அதிர்ஷ்ட்டமில்லா அணியென்றே தோன்றுகிறது. பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும் நாரோடு சேர்ந்த பூவும் நாரும் என்பதற்கேற்ப்ப கோலி, டிவில்லியர்ஸ் போன்ற தலை சிறந்த ஆட்டக்காரர்களின் முயற்சி அனைத்தும் வீனாவது கொஞ்சம் துரதிஷ்டம் தான்.

சென்னையின் வாட்சன், ரெய்னா, சாம் பில்லிங்ஸ் மற்றும் ஜடேஜா 9 ஓவர்களுக்குள் வெளியேற சென்னை 74 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. ரசிகர்கள் முகத்தில் டென்ஷன் ஏற ஆரம்பித்தது. ஐந்தாவது விக்கட்டுக்கு ராயுடுவும் தோனியும் 100 ரன்கள் சேர்க்க ரசிகர்கள் கொஞ்சம் கூல் ஆனார்கள். கடைசி 5 ஓவர்களில் கிட்டத்தட்ட 70 ரன்கள் தேவையிருக்க தோனி தான் டி20 போட்டியின் முடிசூடா மன்னன் என மற்றொறு முறை அறிவித்தார். ஒவ்வொறு ஓவரிலும் கணக்காக இலக்கை வைத்து ரன் குவிக்க, சிக்ஸர்கள் பறக்க சின்னசாமி அரங்கமே அதிர்ந்தது.

தன் impact bowlers உமேஷ் யாதைவையும் செகாலையும் 13  ஓவருக்குள்ளேயே தங்களின் 4 ஓவர்களை முடித்தது ஏனென நெட்டிசன்கள் புலம்பாமல் இல்லை. சென்னையைப் போலவே ராயல் சேலஞ்சர் அணியின் பவுலிங் சொதப்பல்கள் அப்பட்டமாகவே வெளிப்பட்டது. 18வது ஓவரில் ராயுடு ரன் அவுட்டாக, காலன் கரிகாலன் ப்ராவோ தன் பங்கிற்க்கு 20வது ஓவரில் ஒரு பவுன்ரியும் சிக்சரும் விளாச, தோனி தன் trademark (2011ஆம் உலககோப்பை இறுதிப்போட்டி) ஷாட்டுடன் ஒரு சிக்ஸர் அடிக்க, இரண்டு பந்துகள் மீதமிருக்க சென்னை அட்டகாசமான வெற்றி கண்டது.

dbptclevmaanqp_

Nothing like beating the opponent in their own backyard!

சென்னை சூப்பர் கிங்ஸ் மறுபடியும் table toppers. தங்களின் தொடர் வெற்றியை தக்கவைக்க முனைவார்கள். ராயல் சாலஞ்சர் அணி playoff தகுதிசுற்றுக்கு தகுதிபெறுவது சந்தேகமே எனத்தோன்றுகிறது. கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இனி எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற முனையவேண்டும்.

தல தொனியின் மற்றொறு கலக்கல் ஆட்டத்திற்காக ஒரு சுப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!

இனி சென்னை சூப்பர் கிங்ஸின் போட்டிகளூக்கு முன் “பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள், இதய நோயாளிகள், கர்பிணி பெண்கள் பார்க்க வேண்டாம்” என்ற எச்சரிக்கை அறிக்கை வெளியிட வெண்டும். கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் கடைசி பந்து வரை போட்டியை இழுத்து ரசிகர்களை நுனி நாற்காலியில் உட்கார வைத்து, தங்கள் நகங்களை கடிக்க வைத்து, Masters of the heartbeat என்று அவர்களை முகநூலில் வழக்கம் போல கதற வைத்தார்கள்.

In the battle of Southern spices, it is always the Andhra flavor that adds more taste.

ஆந்திராவுக்கே ஊருகாயா என்று ராயுடு விளாச, சென்னை அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசஸ் அணியை வென்றது.

உடல் நிலை காரணமாக இம்ரான் தாஹிர் வெளியேற டூப்ளெசிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹைதராபாத் அணியில் ஷிகார் தவான் வெளியேற மற்றொறு ஆந்திரா வீரர் ரிக்கி புய்க்கு வாய்ப்பு கிடைத்தது. டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். முன்பு நடந்த போட்டி போல் அல்லாமல் மிக மெதுவாக கணக்கை துவக்கியது சென்னை. இந்த வருடம் நடந்த IPL போட்டிகளில் பவர்ப்ளே ஓவர்களில் ஆக குறைவான் ரன்களை, அதாவது 27 ரன்களை மட்டுமே எடுத்தது. பத்தாவது ஓவரின் முடிவில் வெறும் 50 ரன்களே எடுத்திருந்தது. அந்த நிலையில் 20வது ஓவரின் முடிவில் 120 ரன்களாவது எடுக்குமா என்றே தோன்றியது.

Hats off to the Sunrisers bowlers, முதல் 10 ஓவர்களில் மிக துல்லியமாக பவுலிங் செய்தனர். துவக்க ஆட்டக்காரராக வந்த டூப்ளெசியாலும் வாட்சனாலும் நிறைய பந்துகளை connect செய்ய முடியவில்லை. சன்ரைசர்ஸ் அணியை பொருத்த வரை, பவர்ப்ளே ஓவர்களில் இரண்டாவது ஆக குறைவான  economy rate உடையவர்கள். புவவேஷ்வர், ரஷீத் கான், பில்லி ஸ்டான்லேக், கிரிஸ் ஜோர்டான் போன்ற சிறந்த சர்வதேச பவுலர்களையும், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, பசீல் தம்பி போன்ற உள்ளூர் பவுலர்களும் அந்த அணியில் உள்ளது மிக சிறப்பான ஒன்றாகும்.

குறிப்பாக ரஷீத் கான் – comes with a very high expectation. ஆப்கானிஸ்தானுக்கும் சுழற்பந்து பவுலிங்கிற்கும் என்ன connection என்று நீங்கள் கேட்டால் டி20 போட்டிகளில் அவர்களின் கடந்த ஆண்டு சாதனைகளை பார்க்க வேண்டும். இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி ரஷீத் கான் (9 கோடி), மொஹமத் நபி (1 கோடி), பஞ்சாப் அணி முஜீப் உர் ரெஹ்மான் (4 கோடி), ராஜஸ்தான் அணி ஜகீர் கான் (60 லட்சம்) ஆகிய சுழர் பந்து வீரர்களை வாங்கியது. That’s a nice way to recognize an associate nation!

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு – ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீரர்களுக்கு சென்ற இடமெல்லாம் வாய்ப்பு.

ஆஸ்திரேலிய வீரர்களூம், தென் ஆப்ரிக்க வீரர்களூம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த IPL போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்களூம் ஆதிக்கம் செலுத்துவது ஒரு மிகப் பெரிய மாற்றம்!

Returning back to today’s wonderful contest, ராயுடு 37 பந்துகளில் 79 ரன்களை விளாசித் தள்ளினார். அவர் அடித்த ஒனபது பவுண்ரிகளும் நான்கு சிக்ஸர்களும் – treat to the eyes. தன் பங்கிற்க்கு Mr. IPL ரெய்னாவும் 54 ரன்களை குவிக்க விறுவிறுப்பு கூடியது. 3வது விக்கட்டுக்கு இருவரும் 112 ரன்கள் சேர்த்தனர். அதன் பின் வந்த தோனியும் தன் பங்கிற்க்கு ஒரு சிக்ஸரும் மூன்று பவுண்ரிகளூம் அடிக்க 182 ரன்களை சென்னை அணி குவித்தது. கடைசி 11 ஓவர்களில் மட்டும் சென்னை அணி 141 ரன்கள் குவித்தது.

அடுத்து வந்த சன்ரைசர்ஸ் அணி தீபக் சகாரின் பந்தில் சிக்கித் திணறியது. வீசிய ஒவ்வொரு ஓவரிலும் ஒவ்வொரு விக்கட்டுகளை வீழ்த்தினார் சகார். There is always a connection between CSK and uncapped seamers! மன்ப்ரீத் கோனி, மோஹித் சர்மா வரிசையில் தீபக் சகார் மற்றும் ஷர்துல் தாகூரையும் சேர்க்கலாம். It’s not about spending big money, but about finding talents என்பதே சென்னையின் யுக்தியாக இருந்து வருகிறது!

பின்னால் வந்த சன்ரைசர்ஸ் அணியின் கேன் வில்லியம்சன் தான் டேவிட் வார்னருக்கு சற்றும் சளைத்தவரல்ல என்பதை நிருபித்தார். 51 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பிற்க்கு தன் அணியை அழைத்துச் சென்றார். 18 மற்றும் 19 ஓவர்களில் கேன் வில்லியம்சனும் யூசப் பதானும் வெளியேர, 19 ரன்கள் தேவை என்ற நிலையில் அடுத்து வந்த ரஷீத் கான் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரும் பவுன்ரிகளூம் விளாச, சென்னை ரசிகர்கள் முகத்தில் டென்ஷன் டென்ஷன் டென்ஷன் ! கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ப்ராவொவின் துல்லியமான யார்கரில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்க, சென்னை ரசிகர்கள் மூச்சு விட ஆரம்பித்தனர்!

Yet another match, yet another hero – இந்த வழியில் ராயுடுவிம் சகாரும் திருப்புமுனை தந்தனர்!  Loss against a quality team is a pride – பாராட்டுக்கள் சன்ரைசர்ஸ் அணி. 2013ஆம் வருடத்திற்க்குப் பிறகு வார்னரும் தாவனும் ஒன்றாக களமிறங்காத முதல் போட்டி என்ற நிலையில் தங்கள் திறனில் பெருமை கொள்ளலாம்!

dbzthmuvqaq-suy

For another nail biting finish and for bringing back the excitement, ஒரு பெரிய விசிலுடன்

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு – 5: பைசா வசூல்!

IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

IPL விசில் போடு – 3

IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

IPL – விசில் போடு – 1


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 5: பைசா வசூல்!

சென்னை சூப்பர் கிங்ஸின் புது வீட்டின்கிருஹப்ரவேசம்இனிதாக முடிந்தது! தன் புது வீடான பூனாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி கண்டது.

பூனாவில் நடைபெற்ற போட்டியைக் காண சென்னை ரசிகர்களை சூப்பர் கிங்ஸ் அணி  “விசில் போடு எக்ஸ்பிரஸ்” என்ற சிறப்பு ரயிலில் ஆழைத்துச் சென்றது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. உணவு, தங்கும் இடம் மற்றும் நுழைவு சீட்டு என அனைத்தும் இலவசம். இது போல கடந்த காலத்தில் ஒரு அணி தன் ரசிகர்களூக்காக மெனக்கெட்டு ஏற்ப்பாடு செய்திருக்குமா என்பது சந்தேகமே. IPL போட்டிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்துக்கு மாறுவது இது முதல் தடவையல்ல. 2010ல் தெலுங்கானா பிரச்சைனையின் காரணமாக டெக்கான் சார்ஜஸ் அணியின் போட்டிகள் அனைத்தும்  ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இதுபோல் எந்த அணியும் தன் ரசிகர்களுக்காக முயற்ச்சியில் இறங்கியதில்லை, especially when money is the driving factor in IPL. ரசிகர்களூக்கும் தனக்கும் இடையில் இருக்கும் இணக்கத்தை/நெருக்கத்தை சென்னை அணி போல எந்த அணியும் ஏற்படுத்தியதில்லை என்றே கூறலாம்.

You can take away CSK matches from Chennai, but you cannot take away CSK from Chennai fans!

ஒரு வேளை திருவிளையாடல் திரைப்படத்தை இப்போது எடுத்திருந்தால் “பிரிக்க முடியாத்து என்னவோ?” என்ற கேள்விக்கு “சென்னை சுப்பர் கிங்சும் ரசிகர்களும்” என்ற பதில் வந்திருக்கலாம்.

Well done CSK!

சென்ற போட்டியின் போது காயமடைந்த தோனி இம்முறை களமிளங்குவாரா என்ற சந்தேகம் இருந்தாலும் தல தோனியைக் காண 21 மணி நேரம் பயணம் செய்த ரசிகர்கள் ஏமாற்றமடையவில்லை. மணிக்கொருதரம் தமிழில் ட்வீட்டும் திருபஜன் சிங் என்ற  ஹர்பஜனும், முரளி விஜயும் வெளியேற, ரெய்னாவும் கரன் சர்மாவும் களமிறங்கினர். டாஸ் வென்ற ரகானே சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். Win the toss and ask the opponent to bat first seems to be the new trend these days. தன் போலர்கள் மீதுள்ள நம்பிக்கையின்மையா அல்லது பின்னால் எந்தவொரு இலக்கையும் சந்திக்கலாம் என்ற தன் பேட்ஸ்மென் மீதுள்ள நம்பிக்கையா? தெரியவில்லை.

முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டிய வாட்சனுக்கு இரண்டு முறை அதிர்ஷமடித்தது. ராகும் த்ரிபாதி இருமுறை வாட்சன் கொடுத்த catch-சை தவறவிட, அதற்கு ராஜஸ்தான் 98 ரன்கள் நஷ்டயீடு கட்ட வேண்டியிருந்தது. Catches win matches என்பார்கள் – குறிப்பாக டி20 போட்டிகளில் யாரோ ஒருவரின் மேலான்மை இருக்கும். அது பவுலர்களாகவும் இருக்கலாம், பேட்ஸ்மென்களாகவும் இருக்கலாம். வந்த வாய்ப்பை தவற விட்டால் போட்டியை இழக்க வேண்டியது தான். ஒரிரண்டு ஓவர்களில் போட்டியின் சூழலே மாறும் தன்மையுடையது டி20 போட்டிகள். ரெய்னா ஒரு பக்கம் பவுண்ரிகளாக அடிக்க வாட்சன் மறுபக்கம் சிக்ஸர்களாக வீசினார். அடுத்துதடுத்த வந்த ஓவர்களில் வாட்சன் சிக்ஸர்களும் பவுண்ரிகளும் தெரிக்கவிட, 6 ஓவர்களின் சென்னை அணி 69 ரன்கள் எட்டியது.

சென்ற முறை ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய வாட்சன் சென்னை அணிக்கெதிராக சதமடிக்க, இந்த முறை, சென்னை அணிக்காக விளையாடி ராஜஸ்தான் அணிக்கெதிராக சதமடித்தார். சின்ன கல்லு பெத்த லாபம் என்ற யுக்தியை ஏலத்தின் போது கையாண்ட சென்னை அணி கிட்டத்தட்ட அனைவரையும் குறைந்த விலைக்கு வாங்கியது. வாட்சனை 4 கோடிக்கு வாங்கிய போது சென்னை அணியை அதன் ரசிகர்களே கேலி செய்தனர். அதே ரசிகர்களின் மனநிலை இன்று மாறியிருக்கும்! அவர் அடித்த 6 சிக்ஸர்களும் 9 பவுண்ரிகளும் spotless!

நேற்றைய போட்டியில் சதமடித்த கெயிலும் சரி, இன்றைய போட்டியில் சதமடித்த வாட்சனும் சரி,

ஏலத்தில் எடுத்தாரா ஒறுத்தல் அவர்

நாண சதமடித்து விடல்

என்று IPL குறள் வழி age is just a number என்பதை தன் பழைய அணிக்கு சொல்லாமல் சொல்லிச் சென்றனர்.

dbp9hmbwsaahtcu

ஏலத்தின் போது பெரிய அளவில் எதிர்பார்புடன் வாங்க்கப்பட்ட ஜெயதேவ் உனாட்கட்டும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சும் பெரிய அளவில் கைகொடுகாதது ராஜஸ்தான் அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். பேட்டிங்கில் முனைப்புடன் விளையாடாது, வந்த கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது என்று மேலும் சொதப்பல்கள். கோலிக்கு நிகராக கருதப்பட்ட ரஹானே பவர்ப்ளே 6 ஓவர்களில் 5 பவுளர்களை மாற்றியது சற்று ஆச்சரியத்தை தருகிறது. 205 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் 140 ரன்களுக்கு சுருண்டது.

மற்ற அணிகள் கிட்டத்தட்ட ஒரே ஆட்டக்காரர்களை தன் வெற்றிக்காக நம்பியிருக்க, சென்னை அணியின் ஒவ்வொரு போட்டிகளிளும் ஒவ்வொரு ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடுவது ரசிகர்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியடைய வைத்திருக்கும்.

தோனியும் இளைய தளபதி விஜய் போல ஒரு தடவை முடிவெடுத்தா தன் பேச்சை தானே கேட்க மாட்டார் – தன் set ஆன அணியில்  மாற்றத்தை கொண்டுவர விரும்பமாட்டார். டூப்பிளசி, டேவிட் வில்லி போன்ற வீரர்களூக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே எனத்தோன்றுகிறது. இனி வரும் போட்டிகளில் எவ்வகையான மாற்றத்தை கொண்டுவருவார் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அது வரை, வாட்சனின் சததிற்காகவும், table toppers CSK காகவும், ஒரு பெரிய விசிலுடன்.

ஹரிஹரன்.

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

IPL விசில் போடு – 3

IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

IPL – விசில் போடு – 1


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காவிரி பிரச்சனையின் காரணமாக சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் அனைத்தும் பூனாவிற்க்கு மாற்றப்பட்டது. இது தமிழர்களூக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிகழ்வுகளால் கர்னாடகா மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு சித்தம் தெளிவாகி காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்து விடுவாரென நம்புவோம். அப்படியே சனி ஞாயிற்றுக் கிழமைகளிளும் சீரியல் ஒளிபரப்பும் சேனல்களையும் தமிழ்நாட்டிலிருந்து உப்புமாவையும் தடை செய்ய வேண்டுமென்று பாதிக்கப்பட்ட சிலர் டுவிட்டரிலும் முகநூலிலும் அனல் பரக்க ஆவேசமாக முழங்கினர். இவர்கள் கோரிக்கைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளூம் என்றும் நம்புவோமாக.

Yet another high scoring game, yet another dramatic end!

197 என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்ஞாப் அணியிடம் தோல்வியடைந்தது. ப்ரீத்தி ஜிந்தா ஆனந்த நடமாட, ரசிகர்கள் ஆர்பரிக்க, அஷ்வின் T20 போட்டிகளில் தன் value என்ன என்பதை நிரூபித்தார். எதிர்பாராத விதமாக கெயிலை களமிரக்கியது, சரியான நேரத்தில் ராயுடுவை ரன் அவுட்டாக்கியது, மோஹிட் சர்மாவுக்கு தைரியமாக கடைசி ஓவரை கொடுத்தது ஏன்று அனைத்தும் master stroke.

அஷ்வினும் தோனியும் எதிரெதிர் அணியினர் என்று விளையாடும் நிலை சென்னை ரசிகர்களை சற்று எரிச்சலையடைய வைத்திருந்தாலும், this is the beauty of IPL என்ற எதார்த்தத்தை உணர்ந்தாக வேண்டும். இருவரும் டாஸ் நேரத்தில் சந்தித்துக் கொள்ளூம் போது உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே என்று சென்னை ரசிகர்கள் சோகமாக பாடியிருக்க கூடும். டாஸ் வென்ற தோனி பஞ்ஞாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

அணிகள் மாறியிருந்தாலும் இருவரும் தத்தமது பலங்களையும் பலவீனங்களையும் அறிந்திருந்ததால்  போட்டி சுவாரசியமாகவே அமையும் என்ற எதிர்பார்ப்பு வீனாகவில்லை.

கே.எல்.ராகுலும் கெயிலும் அடித்த அடியில் சென்னை பவுலர்கள் சிக்கித் திணறினார்கள். பவர்ப்ளே (6வது ஓவர்) முடிவில் பஞ்ஞாப் அணி 75 ரன்கள் எடுத்திருந்தது.  ஒன்பதாவது ஓவரின் முடிவில் நூறு ரன்களை தாண்டியிருந்தது. கெயில் தான் இன்னமும் Universal Boss என்பதை உரக்கச் சொன்னார். Darling of IPL and a nightmare to every bowler,

கெயில் புயல் இன்னமும் ஓயவில்லை. ஏலத்தில் தன்னை எடுக்காத அணியிணர்க்கு ஒரு message அனுப்புவதாகவே இருந்தது அவரது இன்றைய innings.

பொதுவாகவே இடதுகை ஆட்டக்காரர்களிடம் ஒருவித தனி ஸ்டைல் & ஆக்ரோஷம் இருக்கும். அவர்களின் கட் ஷாட்டுகளும் புல் ஷாட்டுகளும் வலதுகை ஆட்டக்காரர்களின் ஷாட்டுகளை விட பார்ப்பதற்க்கு மிகவும் பிரம்மிப்பானவை. டேவிட் வார்னர், மாத்யூ ஹைடன், ஆடம் கில்கிரிஸ்ட், மைக்கெல் ஹாஸி, குமார் சங்ககாரா, கங்கூலி, கேரி சோபர்ஸ், ஜெயசூர்யா, சயீத் அன்வர் என புகழ் பெற்ற இடதுகை ஆட்டக்காரர்கள் பலர். இவர்களுக்கு பந்து வீசுவது அவ்வளவு எளிதல்ல. It’s always going to be tough to adjust the line and length. இவ்வரிசையில் கெயில் சற்று வித்தியாசமானவர். Footwork அவ்வளவாக இருக்காது, ஆனால் ஒவ்வொரு ஷாட்டிலும் அதிகமான power இருக்கும். நின்ற இடத்திலேர்ந்து சிக்ஸ்ர் அடிப்பார்.

Back to the game again, கடைசி நான்கு ஓவர்களில் 67 ரன்கள் தேவை என்ற நிலையிலும் சென்னை அணி ஓரளவு பதற்றம் அடையாமல் ஆடியது. ப்ராவோ மற்றும் ஹர்பஜன் விக்கெட்டுகள் கையில் இருப்பது காரணமாக இருக்கலாம். ஆரம்பந்தொட்டு பேட்டிங்கில் வேகம் இல்லை. விஜயும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. கிட்டத்தட்ட ஒன்பது பேட்ஸ்மென் இருக்கும் போது சென்னை அணி சற்று defensive ஆக விளையாடியது.

image 20180411 1339007944988610149401853..jpg

அதிக ரன்கள் இலக்காக இருக்கும் போது முன்பு சிறப்பாக ஆடிய ப்ராவோவை ஏன் முன்பாக ஆட அனுப்பவில்லை, ஜடேஜாவை அனுப்பியது ஏனென்ற கேள்விகள் வராமலில்லை.    தல தோனியின் 5 சிக்சர்களும் 6 பவுன்ரிகளும் சென்னை ரசிகர்களுக்கு பெரிய ஆறுதல்.

வடிவேவுக்கு பாடி ஸ்டாராங் பேஸ்மெண்ட் வீக்சென்னை அணிக்கு பேட்டிங் ஸ்டாராங் போலிங் வீக்.

இந்நிலை சற்று மாறும் என நம்புவோமாக.

For fighting till the last ball, for hitting the maximum number of sixes in the last overs in IPL, for keeping his opponents in their toes, that’s Dhoni for you. கெத்தாக விளையாடிய தல தோனிக்கு ஒரு பெரிய விசிலுடன்,

ஹரிஹரன்

 

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு -1

IPL விசில் போடு – 2

IPL விசில் போடு – 3


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.