வீடு மாற்றம் இல்லை, விளம்பரம், ஒரு கவிதை, ஒரு பல்ட்டி

 

***
Bloggerஇல் இருந்து wordpressக்கு மாறும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்போதைக்கு வீடு மாற்றும் எண்ணம் இல்லை. போனவாரம் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டகொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். Blogger to wordpress import tool எல்லாருக்கும் வேலை செய்யும் எனக்கு மட்டும் வேலைசெய்யாது. நானும் நிறைய தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. என்னிடம் 175 போஸ்ட்டுகள் தான் இருக்கின்றன. சரியாக எல்லாதடவையும் 87 போஸ்ட்டுகளே import ஆகிறது. இது பாதியிலே நின்று விட்டதால் பின்னூட்டங்களும் import செய்யப்படவில்லை. போங்கப்பா என்று விட்டுவிட்டேன். பின்னூட்டங்களை விட்டுவிட்டு போக மனமில்லை. மேலும் இருக்கிற பதிவுகளையும் அப்படியே விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கவும் மனமில்லை. மனமிருந்தால் மார்க்கபந்து தான் ஆனா நமக்கு வேலை செய்யமாட்டேங்குதே!

***
கொஞ்ச காலத்துக்கு blogger தான் என்று முடிவாகிவிட்டபின், இருக்கிற தொடப்பத்த வெச்சு வீட்ட எப்படி சுத்தப்படுத்தறது என்று யோசிச்சேன். Labelsஐ பயன்படுத்தியே categories போட்டுவிட்டேன். மேலும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு இடம் இடப்பக்கமும் வலப்பக்கமும் கொடுத்துட்டேன். ஆனால் அவை தற்சமயம் dynamic இல்லை. நாமளே தான் மாற்றவேண்டும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. stumbleupon, digg this, del.ico.us போன்ற bookmarks சேர்க்கவேண்டும்.

***
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. எனக்கும் தூக்கம் வருகிறது. இதோ ஒரு கவிதை:

மழை என்னும் பிராணி

திடீரென
விழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்

-த அகிலன்

ஆமாம், நனையப்போன தூக்கம், வேகமாக திரும்பி மீண்டும் என்னை தலையணைக்கு அழைக்கிறது. கனவுகள் எனக்காக காத்திருக்கின்றன.

***

ஒரு “நானா சொன்னேன்?” வகை:
டிசம்பர் 14 2007
“It is necessary for the sake of maintaining peace and security in the country”
DATUK SAMY VELLU speaking a day after the five Hindraf leaders were detained for organising a massive rally last nov 25 to protest against government policies which allegedly discriminate against Indian Community.

மார்ச் 30 2008
“This is done in fairness, sympathy and also we feel that we as Indians have to do something about it. It is not a publicity stunt”
DATUK SAMY VELLU, calling for detainee’s release yesterday.

நடந்து முடிந்த தேர்தலில் சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

***

வீடு மாற்றம் இல்லை, விளம்பரம், ஒரு கவிதை, ஒரு பல்ட்டி

Bloggerஇல் இருந்து wordpressக்கு மாறும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்போதைக்கு வீடு மாற்றும் எண்ணம் இல்லை. போனவாரம் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டகொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். Blogger to wordpress import tool எல்லாருக்கும் வேலை செய்யும் எனக்கு மட்டும் வேலைசெய்யாது. நானும் நிறைய தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. என்னிடம் 175 போஸ்ட்டுகள் தான் இருக்கின்றன. சரியாக எல்லாதடவையும் 87 போஸ்ட்டுகளே import ஆகிறது. இது பாதியிலே நின்று விட்டதால் பின்னூட்டங்களும் import செய்யப்படவில்லை. போங்கப்பா என்று விட்டுவிட்டேன். பின்னூட்டங்களை விட்டுவிட்டு போக மனமில்லை. மேலும் இருக்கிற பதிவுகளையும் அப்படியே விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கவும் மனமில்லை. மனமிருந்தால் மார்க்கபந்து தான் ஆனா நமக்கு வேலை செய்யமாட்டேங்குதே!***
கொஞ்ச காலத்துக்கு blogger தான் என்று முடிவாகிவிட்டபின், இருக்கிற தொடப்பத்த வெச்சு வீட்ட எப்படி சுத்தப்படுத்தறது என்று யோசிச்சேன். Labelsஐ பயன்படுத்தியே categories போட்டுவிட்டேன். மேலும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு இடம் இடப்பக்கமும் வலப்பக்கமும் கொடுத்துட்டேன். ஆனால் அவை தற்சமயம் dynamic இல்லை. நாமளே தான் மாற்றவேண்டும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. stumbleupon, digg this, del.ico.us போன்ற bookmarks சேர்க்கவேண்டும். .

***
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. எனக்கும் தூக்கம் வருகிறது. இதோ ஒரு கவிதை:

மழை என்னும் பிராணி

திடீரென
விழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்

-த அகிலன்

ஆமாம், நனையப்போன தூக்கம், வேகமாக திரும்பி மீண்டும் என்னை தலையணைக்கு அழைக்கிறது. கனவுகள் எனக்காக காத்திருக்கின்றன.

***

ஒரு “நானா சொன்னேன்?” வகை:
டிசம்பர் 14 2007

It is necessary for the sake of maintaining peace and security in the country

DATUK SAMY VELLU speaking a day after the five Hindraf leaders were detained for organising a massive rally last nov 25 to protest against government policies which allegedly discriminate against Indian Community.

மார்ச் 30 2008

This is done in fairness, sympathy and also we feel that we as Indians have to
do something about it. It is not a publicity stunt

DATUK SAMY VELLU, calling for detainee’s release yesterday.

நடந்து முடிந்த தேர்தலில் சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

***

நசீர் 3-4

(குறுநாவல்)

3
எங்க ஊர் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்றோம். ஊருக்கு போனஉடன் போன் பண்ணு என்று சொல்லிவிட்டு ராஜேஷ் போய்விட்டான். இவன் கூட வந்தால் நன்றாக இருந்திருக்கும். எவ்வளவு சொன்னாலும் மாட்டேனுட்டான். தனியாகத்தான் போகவேண்டும். மதுரைக்கு போகும் பஸ்ஸை தேட ஆரம்பித்தேன்.

பஸ் கிளம்பிவிட்டிருந்தது. நான் 28ஆவது சீட். எனக்கு அருகில் இருந்த ஜன்னல் சீட் காலியாக இருந்தது. ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டேன். பக்கத்து கடையில் இருந்த டொரினோ பாட்டில்கள் எல்லாம் ஆசிட் பாட்டில்கள் போலத் தோன்றவே, நகர்ந்து பழையபடியே அமர்ந்து கொண்டேன். எதுக்கு வம்பு?!

பஸ் விழுப்புரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. நல்ல இருட்டு. பஸ்ஸ¤க்கு உள்ளேயும் வெளியேயும். பஸ் வேகம் குறைந்தது. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. எட்டிப்பார்த்தேன். பஸ்ஸின் ஹெட் லாம்ப் வெளிச்சத்தில் ஒரு 10,15 பேர் கையில் எதேதோ வைத்துக்கொண்டிருந்தனர். டிரைவர் இஞ்சினை ஆப் செய்தார். இறங்கி ஓடத்தொடங்கினார். பயணிகள் அனைவரிடமும் பயம் தொற்றிக்கொண்டது. அனைவரும் முண்டியடித்துக்கொண்டு ஓடுவதற்கு தயாராக எழுந்தனர். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. அனைவரும் என்னைத் தள்ளிக்கொண்டு ஓடுகிறார்கள். கதவு சாத்தப்பட்டது. பஸ் எங்கிலும் பெட்ரோல் நெடி. அருகில் இருந்தவர் ஜன்னலை உடைக்கிறார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வசந்தன் கண் முன் வந்தான். பிள்ளையாரே அந்த ஆட்டோ தாடிக்காரனுக்கு பயந்து குங்குமத்தை அழித்தது தவறுதான். மன்னித்துவிடு என்று வேண்டுகிறேன். பிள்ளையார் சிரிக்கிறார். அதனால் என்ன இந்தா குங்குமம் என்று கை நீட்டுகிறார்.. அதற்குள் எனக்கு அருகில் இருந்தவர் குதித்துவிடுகிறார். அடுத்து குதிக்கப்போகும் மற்றொருவரிடம் பிள்ளையார் குங்குமத்தை குடுக்கிறார். அவன் வாங்கிக்கொள்ளாமல் குதித்து விடுகிறான். அவன் குதித்தவுடன் அவனது கைகள் வெட்டப்படுகிறது. தீ எறிய ஆரம்பிக்கிறது. நான் கதறுகிறேன். பிள்ளையார் துதிக்கையில் காற்று ஊதி, தீயை அணைத்துவிட முயற்சிக்கிறார். நான் கதறுகிறேன். முருகா, ஞான பண்டிதா….விழுப்புரம் விழுப்புரம் டீ காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம். வண்டி 15 நிமிடம் நிற்கும். சத்தம் தெளிவாக கேட்டது. அடப்பாவிகளா பஸ்ஸே எறிந்து கொண்டிருக்கிறது உங்களுக்கு டீ காபி ஒரு கேடா!

சுற்றும் முற்றும் பார்த்தேன். பயணிகள் டீ குடிக்க இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

எழுந்து உட்கார்ந்தேன்.

4

டீ குடித்து விட்டிருந்தேன். கொஞ்சம் தெளிந்தார் போல இருந்தது. பஸ்ஸில் ஏறினேன். என் இருக்கையில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தார். எதிர் இருக்கையில் தலையை கவிழ்ந்திருந்தார். அருகில் சென்றேன். ‘சார்’ பதில் இல்லை. ‘சார்’ சார் நிமிர்ந்து பார்த்தார். சார் இல்லை. ‘தம்பி. இது என் இருக்கை. நீங்கள் ஜன்னல் சீட்டில் அமர்ந்துகொள்ளுங்கள்’ என்றேன். தம்பி பார்த்தார். கோதுமை நிறம். அழகான முகம். மீசை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. கூர்மையான கண்கள். சிரமப்பட்டு நகர்ந்து உட்கார்ந்தான். நான் என் சீட்டில் அமர்ந்தேன். என்னால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. சிலரது முகம், ஒருமுறை பார்த்தால் மறுமுறையும் பார்க்கத் தோன்றும் காந்தத் தன்மை கொண்டதாக இருக்கும். மறுபடியும் பார்த்தேன். அவன் முகத்தை ஜன்னல் பக்கமாக திருப்பிக்கொண்டான்.ம்ம்ம்ம்..என்ன செய்ய..சிலரது முகம் என்னைப்போல இரும்பாய் இருக்கிறது.

பஸ் கிளம்பியது. நடத்துனர் பயணிகள் எண்ணிக்கையை சரி பார்த்தார். சரியாக இருந்திருக்கும் போல, என்னிடம் வந்தார். என்னிடம் எதற்க்காக வருகிறார்? நான் எனது டிக்கெட் இருக்கிறதா என்று என் சட்டைப் பையில் பார்த்தேன். ஐயோ காணவில்லை. எங்கே வைத்தேன். பேண்ட் பாக்கெட்டில். ஐயையோ காணோமே. என்ன செய்ய. எங்கே பொகணும் என்றார். ‘அது…வந்து..’ என்று ஆரம்பித்தேன். ‘மதுரைக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்…’ என்றது கணீர் குரல். பையன் டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்தான். நான் அமைதியானேன். மணி பார்த்தேன். 11:45. அட! இதோ டிக்கெட்டை கடிகாரத்தில் சொருகி வைத்திருக்கிறேன்.ம்ம்..புத்திசாலி! பிழைத்துக்கொள்வாய். என்று நினைத்து கொண்டேன்.

நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. பஸ் எறிந்த பொழுது நான் என்ன ஆனேன் என்று தெரியவில்லை. இந்த முறை அப்படியெல்லாம் விடக்கூடாது! கடைசி வரை பார்க்கவேண்டும்! இன்னும் நன்றாக கண்களை மூடிக்கொண்டேன். விசும்பும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. கனவில் படம் ஏதும் தெரியவில்லை. சந்தேகம் வரவே கண் முழித்துப் பார்த்தேன். பையன் விசும்பிக்கொண்டிருந்தான். கனவல்ல நிஜம் தான் போலிருக்கிறது. எனக்கு என்னவோ போல் இருந்தது.

சிறுது நேரம் அழுவதும் சிறிது நேரம் அமைதியாக இருப்பதும் என்று இருந்தான் அந்தப்பையன். எனக்கு வருத்தமாக இருந்தது!

‘தம்பி’ பதில் இல்லை. அழுகை நின்று விட்டது. ஸ்விட்ச் வெச்சிருப்பானோ? ‘தம்பி’ ம்ஹீம் அசையவில்லை. ‘யாருப்பா நீ? ஏன் அழுகிற? டிக்கெட் தான் எடுத்துட்டியே? பிறகு எதுக்கு அழுகிற? மேற்கொண்டு ஊருக்கு போக உன்னிடம் பணம் இல்லியா? ஏன் அழுகிற?’ பதில் இல்லை.

‘தம்பி உன்னுடைய சோகத்தை என்னிடம் சொல்லக்கூடாதா’

நிமிர்ந்து பார்த்தான். அந்த இருளிலும் கண்கள் கண்ணீரால் பளபளத்துக்கொண்டிருந்தது. ‘நீங்கள் இந்துவா’ என்றான். நான் பதில் ஏதும் சொல்லவில்லை.

‘என் பெயர் நசீர்’ என்றான்.

(தொடரும்)

நசீர் 1-2

(குறுநாவல்)

முன்னுரை:
நான் சென்னையில் 2001 ஆம் ஆண்டு வேலை செய்யத் தொடங்கிய போது எழுதிய குறுநாவல் இது. என் அறை நண்பர்கள் இதை விரும்பிப் படிப்பார்கள். என் நண்பன் நவநீதகிருஷ்ணன் தான் எனது முதல் ரீடர். ஒவ்வொரு அத்தியாயம் எழுதி முடித்தவுடன் வாங்கி படித்து விடுவான். நான் முழுவதுமாக எழுதி முடித்த ஒரே தொடர் கதை இது. இதை அப்படியே இங்கு கொஞ்சம் கொஞ்சமாக பதிவு செய்ய இருக்கிறேன்.

1

‘மூனு நாள் லீவு தெரியுமா?’ என்றான் ராஜேஷ். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ‘விளையாடுறியா! வீட்டுக்கு போக கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம், உனக்கு மூனுநாள் லீவு கேட்கிறதா?” என்றேன் சிரித்துக்கொண்டே. ‘இல்லடா மூனுநாள் லீவாம். MD சொன்னார்’ என்றான். நாங்கள் வேலை செய்யும் நிறுவனம் மலேசியாவிற்கு புரோகிராம் செய்து கொடுக்கும் நிறுவனம். வேலை பலு அதிகம். அப்படியிருக்க மூனுநாள் லீவு என்பது இயலாத காரியம். ‘சரி! எதற்காக லீவு?’ என்றேன். ‘டிசம்பர் ஆறு வருதுல்ல அதுக்குத்தான்’ என்றான் ராஜேஷ். எனக்கு பகீர் என்றது. டிசம்பர் ஆறுக்கெல்லாமா மூனு நாள் லீவு விடுவார்கள். எதற்காக விடுமுறை விடவேண்டும். ஏன் இப்படி செய்கிறார்கள். ‘மலேசியாவில் ரம்ஜான் கொண்டாடுகிறார்களாம். அதனால் நமக்கு இங்கே மூனுநாள் லீவுடா’ என்றான். ‘ஓ ரம்ஜானா..அதற்குத்தான் லீவா…’ ச்சே நான் எதற்கு வேண்டாததையெல்லாம் கற்பனை செய்து கொள்கிறேன். வீட்டிற்குப் போகலாமா! என்னுடைய ஊர் மதுரைக்கு பக்கமாக உள்ள ஒரு கிராமம். கிராமம் என்றாலும் சற்றே பெரிய கிராமம். அரசியல் கூட்டங்களுக்கும், சாதிக் கூட்டங்களுக்கும், மத போதகர்களுக்கும், ஆத்திகர்களுக்கும் நாத்திகர்களுக்கும் பெயர் போன ஊர். மதுரைக்கு அருகில் இருப்பதால் கூடுதல் அங்கீகாரம். வீட்டிற்கு போய் ஒரு மாதம் ஆகி விட்டதால் டிசம்பர் ஐந்து கிளம்பலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

இரவு அறையில் வசந்தன் வந்திருந்தான். தானும் ஊருக்கு போக வேண்டும் என்றான். ‘எப்படா கிளம்பற’ என்றேன். ‘வெள்ளிக்கிழமை இரவு. நீ எப்ப போற’ ‘நான் டிசம்பர் ஐந்து. வியாழன் இரவு போகிறேன்’ ‘உனக்கும் ரம்ஜான் அன்று லீவு தானே. நீயும் வியாழக்கிழமையே கிளம்பினால் நாம சேர்ந்தே போகலாம்லடா’ ‘இல்லடா நான் வரல. மறுநாள் டிசம்பர் 6. நான் வரலப்பா’ எனக்கு என்னவோ போல இருந்தது. பய்மாகவும் இருந்தது. எதுவும் அசம்பாவிதமாக நடந்து விடுமோ. நாம போகும் பஸ்ஸை திடீரென்று ஒரு பதினைந்து பேர் சூழ்ந்து கொண்டு கதவை அடைத்து விட்டு தீ வைத்து சென்று விடுவார்களோ. ஐயையோ வேண்டாம். வேண்டாம். பஸ் வேண்டாம். டிரெயினிலே போகலாம். டிரெயினா? அது பஸ்ஸைவிட பாதகமாயிற்றே. ஒரே ஒரு காந்தக்கல் போதுமே. ச்சே ஏன் இப்படி நான் நினைக்கிறேன். அதெல்லாம் ஒன்னும் நடக்காது. வருவது வரட்டும். நான் டிசம்பர் 5 கண்டிப்பாக ஊருக்கு போவேன். இதைவிட்டால் எனக்கு வேறு லீவு கிடைக்காது. லீவு போனால் வேறு லீவு வரும். ஆனால்..ச்சே..நல்லதையே நினைப்போம். பேப்பரை புரட்டினேன். டிரெயினை கவிழ்க்க சதி! தீவிரவாதிகள் பிடிபட்டனர்! செய்தியை படித்தேன். பஸ்ஸில் போவது என்று முடிவு செய்து கொண்டேன். வசந்தனை பார்த்தேன். வேறொரு பேப்பரில் ஆழ்ந்திருந்தான்.

2
மணி 5:30. வேலை முடிந்து கிளம்பினேன். ராஜேஷ் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஊர் என்பதால், அவனும் என்னுடன் வந்தான். அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுக்கொண்டேன். ராஜேஷ¤ம் தான். பிள்ளையாரிடம் அன்று வேண்டுதல் பலமாக வைத்தேன். ஏன் என்றே தெரியவில்லை. நிறைய நேரம் சாமி கும்பிட்டு விட்டேன். உக்கி வேறு. எப்பொழுதும் மூன்று தான். இன்று மூன்று அதிகமாக போட்டேன். குங்குமமும் திருநீரும் இட்டுக்கொண்டேன். ராஜேஷப் பார்த்தேன். அவனைக் காணவில்லை. இவனுக்கு இதே வேலை…ச்சே..தேடினேன். பக்கத்துக் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தான். பாதி டீ குடித்துவிட்டிருந்தான். நிறைய நேரம் ஆகிவிட்டிருந்தது போல! ‘என்னடா பலமான வேண்டுதல் போல தெரியுது!’ ‘ஆமா…சும்மாவா… ஊர் போய் சேரனுமில..ஒரு டீ சொல்லு..’

ஆட்டோ பிடித்தோம். உள்ளே சென்று உட்கார்ந்தேன். ஆட்டோ நகர்ந்தது. ராஜேஷ் ஒன்றுமே பேசவில்லை. ரியர்வியூ மிரரில் ஆட்டோ ஓட்டுனரின் முகம் தெரிந்தது. தாடியெல்லம் நிறைய வைத்திருந்தார். கொஞ்சம் முரடாகத்தான் இருந்தார். எனக்கு என்னவோ ஒஸாமா ஞாபகம் வந்தது. ஆட்டோவை வேறு வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். கொஞ்சம் மெதுவாக சென்றால் தேவலாம் போல தோன்றியது. சட்டென்று அவர் என்னை திரும்பிப்பார்த்தார். என்னை முறைப்பது போல தோன்றவே, பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டேன். கொஞ்சம் நகர்ந்து ஆட்டோவின் இடது ஓரமாக அமர்ந்தேன். கண்ணாடி பார்ப்பதை தவிர்த்தேன். சினிமா போஸ்டர்க்ள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தேன். படம் ஓடுதோ இல்லியோ போஸ்டர் ஓடுது. ஆட்டோ சிக்னலில் நின்றது. பம்பாய் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மனிஷாவைக்கூட பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பினேன். கண்ணாடி தெரிந்தது. இப்பொழுது கண்ணாடியில் எனது முகம். திருநீரும் குங்குமமும் நிறைய இட்டுக்கொண்டிருந்தேன். குங்குமம் மட்டும் பெரிதாக தெரிந்தது. ஆட்டோக்காரர் நிமிர்ந்து பார்த்தார். நான் வேகவேகமாக குங்குமத்தை அழித்தேன்.

இப்பொழுது பிள்ளையார் குங்குமத்தை அழித்துவிட்டோமே என்ற பயம் வேறு சேர்ந்து கொண்டது.

(தொடரும்)