அடிமைகளுக்கு சாகவும் உரிமையில்லை

Esi Edugyan எழுதிய Washington Black படித்துக்கொண்டிருக்கிறேன். பாதி முடித்துவிட்டேன். ப்ளாண்டேஷன்களில் வேலை பார்க்கும் ஒரு கருப்பு அடிமையின் கதை. அடிமையின் பெயர் தான் வாஷ்ங்க்டன் ப்ளாக். சிறிய பையன். அந்த ப்ளாண்டேஷனிலே பிறந்தவன். அடிமைகளுக்குள் ஒரு நம்பிக்கை இருக்கிறது: ப்ளாண்டேஷனில் தற்கொலை செய்து இறந்துபோகும் நபர், அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு அவரதுசொந்த ஊரில் மீண்டும் பிறப்பார் என்பது தான் அது. இதை நம்பி ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி தற்கொலை செய்து கொண்ட ஒரு அடிமையைப் பார்த்து, முதலாளி இவ்வாறு சொல்கிறார்:

What you see here, this nigger, killed himself. He was my slave. He has therefore stolen from me. He is a thief.

இந்த அடிமை தற்கொலை செய்து கொண்டான். இவன் என்னுடைய அடிமை. அதனால் அவன் என்னிடமிருந்து திருடப்பட்டிருக்கிறான். எனவே இவன் ஒரு திருடன்.

அடிமைகளின் உயிர் கூட அவர்களதில்லை.wb