ஞாநி பேசுகிறார்!

குமுதம் டாட் காமில் ஞாநி பாலகுமாரனிடம் நடத்திய பேட்டி பார்த்தீர்களா? நான் பார்த்தேன். இன்று காலை மூனு மணிக்கு உக்காந்து பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பாவமாக இருந்தது. பாலகுமாரனுக்கு ஞாநியை சமாளிக்க முடியவில்லையோ என்று தோண்றியது! சகிப்புத்தன்மைன்றார் இல்லைன்றார். கொள்கைங்கறார். கேட்டாங்க எழுதிக்கொடுத்தேங்கறார். தலித் பற்றி ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு அவங்க என்ன எழுதவேண்டாம்னுட்டாங்கன்னு சொல்றார். எனக்கு அவங்க வலி புரியாது அதனால எழுதலன்னு சொல்றார். ஞாநி வசமா புடிச்சார். அப்ப பெண்களை பத்தி மட்டும் எப்படி எழுதுனீங்க? அதுக்கு பெண்களை பற்றியும் நான் இன்னும் சரியா புரிஞ்சுக்கலேன்னு சொல்றார். எனக்கு பாலகுமாரனிடம் பிடிக்காத ஒரு விசயம் adultry. விஜய் டீவியில சில்லுன்னு ஒரு சந்திப்புல அவரே சொன்னது: அவரது தோழியை (ரசிகை) பற்றி. அந்த தோழி பாலகுமாரன் adultery பற்றி எழுதுவதை விரும்பவில்லை என்றும், நீ அதை எழுதினா ரொம்ப convincingஆ இருக்குன்னு அவர் சொன்னதாக சொன்னார். அதே அபிப்பிராயம் தான் எனக்கும். இது மாதிரியான வெகுஜன எழுத்தாளர்கள் இதேயே பற்றி மீண்டும் மீண்டும் எழுதினால் அது ரொம்பவும் natural thing ஆகிவிடுமே! உடனே நம்ப டபாக்காத்துவவாதிகள் எது தப்பு எது சரின்னு நீ எப்படி சொல்ற? உனக்கு யாரு வரையறை கொடுத்தா? யாரு பெர்மிஷன் கொடுத்தா? அப்படி இப்படின்னு கன்னா பின்னான்னு கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாங்க. தப்புன்னோ சரின்னோ இந்த உலகத்துல எதுவுமே தப்பு கிடையாதுன்னா பின்ன ஜெயில் எதுக்கு? எதுவும் தப்பு இல்ல எதுவும் சரியில்ல எல்லாம மாயை அப்படி இப்படின்னு ழார் மத்தார் சொன்னாருன்னு புரியாம பேசறதுதான் இப்போ ·பேசனா போச்சு. ஞாநி கரெக்ட்டா கேட்டார்: உங்களுக்குன்னு ஒரு கொள்கை இருக்கும்மேன்னு! கொள்கை என்பது ஒரு முடிவு. முடிவுகள் மாறிக்கொண்டேயிருக்கும். கொள்கைகளும் மாறிக்கொண்டேயிருக்கும் என்கிறார் பாலகுமாரன். முடிவுக்கே வரமுடியாதுங்கறார். முடிவே கிடையாதுங்கறார். வாழ்க்கையை பாத்து அதிசயச்சுக்கிட்டே இருக்கேன்னு சொல்றார். கொஞ்சநாட்களுக்கு முன்னர் ஆண் பெண் உறவு. adultery. இப்பொழுது ஆண்மீகம். yes! கொள்கைகள் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. its quite true. பாலகுமாரன் சுஜாதாவின் தோள் மீதும் திஜாவின் தோள் மீதும் தாவி ஏறியதாகவும் சொன்னார். அவர் சொல்லமறந்தவர்களுள் : Ayn Randஉம் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். பாலகுமாரனுக்கு ஞாநியை சமாளிக்க தெரியவில்லையா?!

***

தொல் திருமாவின் பேட்டி எனக்கு பிடித்திருந்தது. ஆர்ப்பாட்டமில்லாமல் நிதானமாக கூலாக இருந்தது. அவர் ஞாநியை சரியாக tackle செய்தார். Afterall one has to win an argument. தமிழ் பாதுகாப்பு இயக்கம் (?!) சிங்கள இயக்குனரை (புலிகளின் உரிமை போராட்டத்தை அவமதிப்பதாக அந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்கிற காரணத்தை காட்டி) அடித்ததை குறித்த கேள்வி ஒன்றில் ஞாநி எல்லாருக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறதல்லவா? அவரும் சொல்லலாம். அதற்கு எதிர்மறையாக நீங்களும் (சீமான் போன்றோரை!) நல்ல கருத்தை (புலிகளுக்கு ஆதரவாக) முன்வைத்து திரைப்படங்கள் எடுங்கள் என்றார். சற்றும் தாமதிக்காமல் திருமா சொன்னார்:

நீங்கள் சொல்வது வீட்டுக்குள்ளே நரகல் இருக்கிறது. அது பாட்டுக்கு கிடக்கட்டும்.
ஊதுபத்தி கொளுத்தி வையுங்கள் என்பதை போல இருக்கிறது என்றார்

. இதையும் அதையும் ஒப்பிட முடியுமா முடியாதா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், திருமாவின் பதிலடி ரசிக்கும் படியாகவே இருந்தது. அவருடைய தோல்வியை பற்றிக்கேட்டபொழுது: தலித் கட்சி ஒன்றுக்கு கூட இதுநாள் வரையிலும் நிரந்தர சின்னம் கிடைக்காததே தோல்வி என்று குறிப்பிட்டார். அவரது கட்சிக்கு விரைவிலேயே நிரந்தர சின்னம் கிடைக்க வாழ்த்துக்கள்

***

ஞாநியும் இடைவிடாது இட ஒதுக்கீட்டை பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறார். சரியாக பேசிக்கொண்டிருக்கிறார் என்பது தான் இங்கே குறிப்பிடவேண்டும். இடஒதுக்கீட்டில் ஞாநியின் நிலைப்பாடு தான் என் நிலைப்பாடும். 27% இடஒதுக்கீடு சுத்தமாக IITயிலும் IIMமிலும் கொடுக்கப்படவேண்டும். அதாவது: இப்பொழுது 100 சீட் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், 27% பிற பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கவேண்டும் என்றால், மேலும் 27 சீட்டுகளை மட்டும் கூட்டி 127 சீட்கள் ஆக்குவது. ஆனால் 27% என்பது 127 சீட்டுக்குத்தானே?!

ஞாநி சொல்வதை கேளுங்கள்:

இப்போது உச்ச நீதிமன்றமும் அரசாங்கமும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சரியில்லை என்பதற்கான இன்னொரு சான்று, உயர் கல்வி நிறுவனங்களில் இடங்களை அதிகரிப்பது என்ற நடவடிக்கையாகும். அதாவது ஒரு ஐ.ஐ.டியில் இப்போது 100 இடங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீட்டு உத்தரவின்படி 27 சதவிகிதம் கொடுத்தாகவேண்டும். (இதையே 9 சதவிகிதத் தவணையில் மூன்று வருடங்கள் படிப்படியாகத்தான் தருவார்களாம்.) எனவே 73 இடங்கள் மற்றவர்களுக்கு இனி கிடைக்கும். இதர ஜாதிகளுக்கு (மேல் ஜாதிகள்) 27 இடம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக என்ன செய்கிறார்கள் என்றால் 100 அப்படியே இருக்கும். புதிதாக 27 உருவாக்கி பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தருவார்களாம்.

இதில் இரண்டு கோளாறுகள். ஒன்று, மொத்த இடம் இப்போது எவ்வளவு? 127. அப்படியானால் இதில் 27 சதவிகிதம் எவ்வளவு 27 இடமா? இல்லையே. 34 அல்லவா? தொடர்ந்து 7 இடம் ஏமாற்றப்படுகிறது. இரண்டாவது பிரச்சினை இப்படி புதிதாக இடம் உருவாக்கி மேல் ஜாதிகளைக் காப்பாற்றுவதற்காக ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? சென்ற வருடம் மட்டும் ஐ.ஐ.டி.களுக்கும் ஐ.ஐ.எம்.களுக்கும் இதற்காக தரப்பட்ட தொகை 1400 கோடிகள். அடுத்த 3 வருடங்களில் இன்னும் 1771 கோடி ரூபாய்கள் தரப்படும்.

1771 கோடி ரூபாய்! யாருக்காக செலவிடப்படுகிறது? கேட்டால் think tank. talent hub என்கிற பினாத்தல்கள் வேறு! யாரோட think tank? யாரோட talent hub?ன்னு தான் புரியல!

திருமாவிடம் அவர் பேட்டி எடுத்தபொழுதும் கிரீமி லேயர் பற்றி அவர் சொல்லியிருந்தார். அதாவது கிரீமி (கிருமி அல்ல!) லேயர் என்பது should not be based upon economical justice, it has to be based up on educational justice. அதாவது ஒரு படித்த ஏழை அர்ச்சகரை கட்டிலும் ஒரு பணக்கார படிக்காத நிலக்கிழாருக்கே இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை தரவேண்டும் எனபது. இதில் கிரீமி லேயர் யார் யார் என்பதை வரையறுக்க அரசு வைத்திருக்கும் அளவு எல்லாமே economical based. ஞாநி அதற்கு மாற்றாக முன் வைக்கும் யோசனை என்னவெனில், முதன்முறையாக இடஒதுக்கீட்டில் மூலம் கல்வி பெறும் குடும்பத்துக்கே முன்னிரிமை தரவேண்டும் என்பது. எடுத்துக்காட்டாக: ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக இடஒதுக்கீட்டின் மூலம் படித்திருக்கிறார்கள். இன்னொரு குடும்பத்தில் இதுவே அவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி பெறுவது முதல் முறை என்றால், இந்த குடும்பத்துக்கே முன்னுரிமை தரவேண்டும் என்கிற வாதம்.

இதில் ஒரு advantage இருக்கிறது. அதாவது இவ்வாறான சுழற்சிக்கு பின்னர், பல தலைமுறைகளாக இடஒதுக்கீட்டில் பயன் பெற்றுவிட்டதால் அந்த சமூதாயத்தையே இட ஒதுக்கீட்டிலிருந்து அப்புறபடுத்திவிடலாம். கிரீமி லேயரை நடைமுறைப்படுத்துவதால் கொஞ்சம் கொஞ்சமாக இடஒதுக்கீடு பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற பயம் ஜாதிகளிடமும் அந்த ஜாதி ஓட்டுகளை நம்பி இருக்கும் கட்சிகளிடமும் தெரிகிறது. அதானால் தான் கிரீமி லேயர் கிருமி லேயராக கருதப்படுகிறது. open quotaவிலும் இந்த கிரீமி லேயர் புகுத்தபடவேண்டும்.

இடஒதுக்கீட்டை தலைமுறைகளாக அனுபவித்து விட்டவர்கள் தங்கள் ஜாதியில் இருக்கும் இன்னும் இடஒதுக்கீட்டை பெறாத மற்ற குடும்பங்களுக்கு வழிவிடவேண்டும். அப்பொழுதுதான் இட ஒதுக்கீட்டின் குறிக்கோள் நிறைவுபெறும். அனைவருக்கும் கல்வி என்கிற நிலை உருவாகும். மேலும் கொஞ்ச காலத்துக்கு பிறகு இடஒதுக்கீடே தேவையில்லை, எல்லாரும் பயன் பெற்றாகிவிட்டது என்று தூக்கிவிடவும் செய்யலாம்! சமச்சீர் கல்வி கிடைக்கப்பெறும்!

***

இப்படி எல்லாரையும் மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் ஞாநியிடம் ஒரு கேள்வி:
ஞாநி சார் நீங்கள் தனியார் அலுவலகங்களில் வேலைவாய்ப்புக்கு இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா?

***

என்ன‌ சொல்லி நாங்க‌ அழ‌?


இதையும் இன்னும் கொஞ்ச‌ நாளில் நாம் ம‌ற‌ந்துவிடுவோம். எத்த‌னை விச‌ய‌ங்க‌ளை நாம் ம‌ற‌ந்திருக்கிறோம்?! அல்ல‌து ம‌ற‌க்க‌ முய‌ற்சி செய்கிறோம்?

இத‌ற்கு யார் கார‌ண‌ம்? ஏன் இது ந‌ட‌ந்த‌து? இனியும் இது போன்ற‌ அவ‌ல‌ங்க‌ள் ந‌ட‌க்காம‌ல் இருக்க‌ அர‌சு என்ன‌ செய்ய‌ப்போகிற‌து? த‌டுப்பூசி சில‌ குழ‌ந்தைக‌ளுக்கு ஒத்துக்கொள்ளாது என்று வாத‌ம் செய்வ‌து வேலைக்காகா‌து, அத்த‌னை குழ‌ந்தைக‌ளுக்குமா ஒத்துக்கொள்ளாம‌ல் போகும்? இதை புல‌னாய்வு செய்து அறிக்கை வெளியிட‌ எத்த‌னை நாட்க‌ள் ஆகும்? ப‌த்து நாட்க‌ள்?! ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அரசு ம‌ருத்துவ‌ம‌னைக்கு ஆம்புல‌ன்ஸ் வ‌ருவ‌த‌ற்கு தாம‌தமான‌து என்று ஒரு செய்தி வெளியாகியிருந்த‌து. தாம‌த‌மாக‌ வ‌ருவ‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? இத‌யெல்லாம் விட்டுட்டு ந‌டிகை ம‌ல்லிகா செராவ‌த்தின் மீது த‌மிழ் க‌லாச்சார‌த்தை சீர‌ழித்த‌த‌ற்காக‌ வ‌ழ‌க்காம்! யார் மேல‌ வ‌ழ‌க்கு போட்டா பிர‌ச்ச‌னை வ‌ராதுன்னு பாத்து அவிங்க‌மேல‌ போட‌ற‌து. நீங்க‌ளும் உங்க‌ள் பொதுந‌ல‌ தொண்டும். அட‌ போங்க‌ப்பா.

ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌த்துக்கு ஒரு வார‌த்துக்கு முன்பு திருவ‌ள்ளூர் மாவ‌ட்ட‌த்தில் ப‌வ‌ர் க‌ட் அதிக‌ம் இருந்த‌தால் கூட‌ த‌டுப்பூசி ம‌ருந்து (குளிர்சாத‌ன‌ பெட்டியில் ஒரு குறிப்பிட்ட‌ டெம்ப‌ரேச்ச‌ரில் ம‌ருந்தை வைக்க‌வேண்டும்) கெட்டுப்போயிருக்க‌லாம் என்றும் ஒரு செய்தி வெளிவந்திருந்த‌து. ம‌ருந்தை உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு முன்ன‌ர் அதை சோதிப்ப‌த‌ற்கு ஏதும் வ‌ச‌தி இல்லையா? தெரிய‌லீங்க‌ அதுதான் கேக்க‌றேன்.

என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்னார்: முத்து இதைவிட‌ ஒரு விச‌ய‌ம் என்னை ரொம்ப‌ பாதிச்ச‌து. ச‌ட்ட‌ச‌பையில‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்கு, ஆர‌சு மூனு ல‌ட்ச‌ ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித்த‌பொழுது, அங்கிருந்த‌ நாம் தெர்ந்தெடுத்து அனுப்பிவைத்த‌ ம‌க்க‌ள், சிரித்துக்கொண்டே கைத‌ட்டி ஆர‌வார‌ம் செய்த‌து.

ந‌ம்ப‌ர் ஒன் புல‌னாய்வு நாளித‌ழ் என்று மார்த‌ட்டிக்கொள்ளும் ஜூவியும் இது போல‌ ஒரு க‌விதை ம‌ட்டும் எழுதிவிட்டு, த்ரிஷாவையோ ந‌ய‌ன்தாராவையோ க‌வ‌னிக்க‌ போய்விடும்.

ஜூவி சார், நீங்க‌ளே இதெல்லாம் புல‌னாய்வு செய்ய‌லேன்னா, வேற‌ யார் செய்வா? இத்த‌னை கோடி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இந்த‌ நாட்டில் ம‌ருத்துவ‌த்துறையை க‌ட்டுப்ப‌டுத்த‌ தீவிர‌மான‌ ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ள் வேண்டும். இல்லையென்றால் ம‌க்க‌ளின் ப‌ய‌த்தையும் ந‌ம்பிக்கையையும் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ இங்கே நிறைய‌ ந‌ப‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள்.