கதம்பம்

ஏனோ சில நாட்களாக பேப்பரில் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றிய செய்திகள் நிறைய வருகின்றன. இந்தியாவில் AIDS நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் மேல் என்கிறது சர்வே. இன்னும் அதிகம் இருக்கக்கூடும் என்பது என் எண்ணம். UNAIDS/WHO செய்த சர்வே, இந்தியாவில் 2005 இல் 2,70,000 – 680,000 மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள் என்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் 52,036 aids case இருக்கின்றன. மாநிலங்களை வகைப்படுத்தியதில் தமிழகமே AIDS இல் முன்னனியிலிருக்கிறது. பார்க்க பக்கம். கர்நாடகாவில் மொத்தம் 2,896 கேஸ்கள். இந்த சர்வேக்கள் துள்ளியமாக இல்லை எனினும், ஒரு whole idea கிடைக்க வழி செய்கிறது. நல்லது.

AIDS விசயத்தில் முன்னனியிலிருக்கும் தமிழ்நாட்டில் AIDS பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் எந்த நிலையில் இருக்கிறது? புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? இருக்கு ஆனா இல்லை போன்ற innovative விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தவிர ஒரு விதமான தேக்க நிலையே இருக்கிறது. மக்களிடம் எளிதாக சென்றடையக்கூடிய சக்தி வாய்ந்த, நடிகர்களும் நடிகைகளும் AIDS பற்றிய விழிப்புணர்வு படங்களில் நடிக்கலாம். ஒரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை “காவ்யாஞ்சலி” தொடரின் விளம்பரத்தை ஒளிபரப்பும் விஜய் டீவி, AIDS பற்றிய செய்தி குறும் படங்களை ஒளிபரப்பலாம். சன் டீவி தனது எண்ணற்ற விளம்பரங்களுக்கு மத்தியில் கொஞ்சம் சமூக சேவையாக இதைச் செய்யலாம். ஏன் நாமே கூட, ப்ளாகர்ஸ் மீடிங்குடன் AIDS தடுப்புக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம். புதிய கவர்ச்சிகரமான எண்ணங்கள் கிடைத்தால் அதை மக்களுக்கு எடுத்துச்செல்லலாம். நான் அனைவரும் இணைந்து குறும்படங்கள் கூட தயாரிக்கலாம். விளம்பர போர்ட்கள் நிறுவலாம்.

கர்நாடக முதல்வரின் இந்த செயல் கொஞ்சம் awareness கொடுக்கும் என்றே நம்புகிறேன்.

இந்தியாவிலே AIDS இல் முன்னனியில் இருக்கும் நமக்கு இது போலவெல்லாம் செய்ய நேரம் இருக்கிறதா என்ன?

மேலும் இந்த இளைஞரின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் மற்றும் Hats Off.

மேலும் கவலையளிக்கக் கூடிய ஒரு மிக முக்கியமான ஒரு செய்தி:

யாராக இருந்தாலும், BSc (எந்த துறையானாலும்) MSc (எந்த துறையானாலும்) BE (எந்த துறையானாலும்) இல்லை வேறு என்ன படித்திருந்தாலும் அனைவரும் software engineer ஆகவே விரும்புகின்றனர். தவறில்லை. Agriculture revolution மற்றும் Industrial Revolution இல் சாதிக்காத ஒன்றை இந்தியா சத்தமில்லாமல் இப்பொழுது சாதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சாதனைகளில் தொலைநோக்கு பார்வையும் இருக்கவேண்டும். இந்திய கம்பெனிகள் புதிது புதிதான ஆராய்ச்சிகளுக்கு நிறைய செலவழிக்கவேண்டும். ஹார்டுவேராகட்டும் சாப்ட்வேராகட்டும் ஒரிஜனல் இந்திய தொழில்நுட்பமே நம்மை தன்னிரைவுக்கு இட்டுச்செல்லும். அமெரிக்காவுக்கு எப்படி windows இருந்ததோ இருக்கிறதோ, அதே போல நமக்கும் தொலைநோக்கு பார்வை கொண்ட – அட்லீஸ்ட் அடுத்த பத்து வருடங்களுக்கு – products வேணும்.

மற்றொரு விசயம் : இந்த செய்தியைப் படித்துவிட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

என்ன இப்படி கிளம்பிட்டாங்க? என்னால ஜீரணிக்க முடியாத டயலாக்: “காக்கா பிடிக்க சால்வையா?” 🙂 ஒன்றைப் பத்தாகத் திரித்தல் என்ற பத்திரிக்கை தர்மம் தினமலருக்கும் பொருந்துமா என்றும் தெரியவில்லை.

விஜய் டீவியில் சில நகைச்சுவைகள்:

ஸ்கூல் inspection க்கு வந்திருக்கும் ஒருவர், ஒரு class ல ஒரு மாணவனை எழுப்பி ஒரு கேள்வி கேட்கிறார்.
ஆபிஸர் : தம்பி, இராமயணத்தில வில்ல ஒடச்சது யாருப்பா?
பையன் அழ ஆரம்பிக்கிறான்.
ஆபிஸர் அருகிலிருக்கும் ஆசிரியரை அழைத்து, “என்னங்க சார் உங்க class பையனுக்கு இது கூட தெரியல” என்கிறார்.
அதற்கு ஆசிரியர், “இப்படித்தான் சார் போன வகுப்புல ஒருத்தன் இன்னொருத்தனோட pencil ல எடுத்து வெச்சுக்கிட்டான். கேட்டாக்க இல்லன்னு அழ ஆரம்பிச்சுட்டான். அப்புறம் ரெண்டு அடி போட்டப்பறம் நான் தான் திருடினேன்னு ஒத்துகிட்டான். அது போல இவனையும் ரெண்டு அடி போடுங்க சார் வில்ல நான் தான் உடச்சேன்னு ஒத்துக்கிடுவான்” என்றார்.
ஆபிஸர் என்னடா ஆசிரியரும் சரியில்லயேன்னு ஸ்கூல் தலைமை ஆசிரியர கூப்பிட்டிருக்கார். தலைமை ஆசிரியர் வந்தார்.
தலைமை ஆசிரியர்: “இந்த பையனுக்கு தெரியல சார். class ல ஒண்ணுரெண்டு பேர் அப்படித்தான் இருப்பாய்ங்க. அதுக்காக இந்த வாத்தியாரும் இப்படி சொல்லியிருக்கக்கூடாதுதான். நீங்க அந்த வில்லு என்ன வெலைன்னு சொல்லுங்க நாங்க காசு கலெக்ட் பண்ணி வாங்கிகொடுத்துடறோம்” என்றாராம்.

சிரிக்காத உம்மனாம்மூஞ்சிகளுக்கு,

ஒருத்தர் காதல் படம் பார்த்திட்டு CD ய fridge க்குள்ள வெச்சுட்டாராம்
ஏன்
அடுத்து ஜில்லுன்னு ஒரு காதல் பார்க்கத்தான்

அட சிரிங்க சார்.

சன் டீவியில கணிகா நடத்தும் புரோகிராம்ல, personality guessing நடந்து கொண்டிருந்தது. personality : manoj night shyamalan.

அதில் கேட்கப்பட்ட கேள்விகள்.

அவர் இந்திய வம்சாவழியினர்
அவர் கேரளாவை சேர்ந்தவர்
இந்தியாவில் பிறந்தார்
ஹாலிவுட் இயக்குனர்.

ஒருவர் நீண்ட யோசனைக்குப் பிறகு, நான் ரிஸ்க் தான் எடுக்கறேன்னுட்டு சொன்னார் : samuel jackson.

samuel jackson கேராளாவைச் சேந்தவரா? சொல்லவேயில்ல. (வடிவேலு போல சொல்லவும். சமீபத்தில் தான் snakes on the plane படம் பார்த்திருப்பார் போல!)

அவர் samuel jackson ன்னு சொன்ன உடனே எனக்கு சிரிப்பு தாங்கல..தெரியாம வாய்தவறி தவறா சொல்லியிருக்கலாம்..ஆனா சொன்னா சொன்னதுதானே ;-)அதான் கேராளாவில பிறந்தவர்ன்னு சொல்றாங்கல்ல? பின்ன என்ன கொஞ்சம் கூட யோசிக்காம சொல்றது. இன்னொருத்தர் பயங்கர ரிஸ்க் எடுத்துக்கொண்டேயிருந்தார், தப்பு மேல தப்பு, அதுவும் அந்த round ல தப்பா சொன்னா points போயிடும். சகட்டுமேனிக்கு buzzer அழுத்தி தப்பா சொல்லிக்கிட்டேயிருந்தார், கடுப்பான அவரோட சின்ன பையன் “போய்யா..” என்பது போல கையைக் காட்டினானே பார்க்கலாம்.. மேலும் ஒரு சிரிப்பு round இருக்கிறது. குழந்தைகளுக்கு சிரிப்பு துணுக்குகளைப் போட்டு காண்பித்து சிரிக்க வைப்பது. Defaulta எல்லாருக்கும் 500 பாயிண்ட்ஸ் கொடுத்துடறாங்கன்னாலும், கொஞ்சம் சிரிக்கும் படியா காமெடி க்ளிப்ஸ் போடலாம். குழந்தைகள் கண்டிப்பா சிரிச்சேயாகனுமேன்னு சிரிக்கறதப்பாக்கும் போது பாவமா இருக்கு!

அப்புறம் ஒரு கவிதை:

அடியே ரோசா
உனக்கு செலவழிச்சதெல்லாம் காசா
வாங்கி குடிச்சியேடி ஜூசா
என்ன ஆக்கிட்டியேடி லூசா

ஹா…கவிதை எழுதுவது எவ்வளவு எளிது?

கவிதை ஆய்வாளர் மறைமலை அவர்கள் சொன்ன ஒரு ஹைக்கூ:

அனைவருக்கும் கல்வி
சாசனம்
அமைச்சர் கைநாட்டு.

சுஜாதா சார் சொன்ன ஹைக்கூ:

தலைவரின் பிறந்த நாள்
செக்யூரிட்டியின் நெற்றியிலும்
குங்குமம்.

-மார்கன்

இதெல்லாம் கவிதையா என்று முறைக்கும் நபர்களுக்கு, மனுஷ்யபுத்திரன் ‘கடவுளுடன் பிரார்தித்தல்’ என்ற தொகுப்பில் எழுதிய ஒரு சீரியஸ் கவிதை, முடிஞ்சா புரிஞ்சுக்கோங்கப்பா.

பார்வையற்ற குழந்தை
மாடிப்படிகளில் இறங்கி
வந்துகொண்டிருக்கிறாள்
அவளுக்கு
அது ஒரு பிரச்சனையே இல்லை

அவளாகக் கற்பித்துக்கொண்ட
இந்த உலகின் ஒழுங்கில்
ஏழாவது படிக்குப் பிறகு
ஒன்பதாவது படி
வராதவரை

பார்வையற்ற குழந்தை
நிதானமாகவே படிகளில்
இறங்கிக்கொண்டிருக்கிறாள்.

சச்சினின் செஞ்சுரி பத்திரிக்கைகளை படபடப்புகொள்ள வைத்திருக்கிறது. கங்கூலியின் perfect shots, டிராவிட்டின் பொறுப்பான ஆட்டம், டோனியின் அதிரடி, படான், அகார்கரின் பவுலிங் ஒரே ஒரு செஞ்சுரியால் மறைக்கப்பட்டன. தினமலர் செய்தி வெளியிடுகிறது. சச்சின் சதத்தால் இந்தியா வெற்றி. என்னங்கய்யா?

cricinfo வில் வெளியான ஒரு செய்தி:

First Among Equals. உண்மைதானே?

நன்றி: தினமலர்.

பழைய கதம்பம்