Black Swan Event என்றால் என்ன?

கோரோனா வைரஸ் ஒரு Black Swan Eventஆ? பில் கேட்ஸ் இது வரை எவ்வளவு பணம் ஆராய்ச்சிக்காகவும், கல்விக்காகவும், பொதுதொண்டுக்காகவும் கொடுத்திருக்கிறார்? இதுவரையில் இந்த உலகத்தில் எவ்வளவு கொள்ளைநோய்கள் வந்திருக்கின்றன? எத்தனை மக்கள் இறந்திருக்கிறார்கள்? மேலே உள்ள வீடியோவில் பார்க்கலாம்! #coronavirus #corona #virus #BillGates #BlackSwanEvent #NicolasTaleb #pandemic #epidemic

CORONAVIRUS திட்டமிடப்பட்ட சதியா? பார்ட் #1

#CORONAVIRUS எப்படி பரவுகிறது என்று பல புரளிகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவையெல்லாம் உண்மையா? #5Gtower கொரோனாவை பரப்புகிறதா? #BillGates பண்ண திட்டமிட்ட சதியா? எது உண்மை? பல பகுதிகளாகப் பார்ப்போம்.

Coronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு

இந்த வீடியோ வைரஸ்களின் அனாடமியை விவரித்து, அது நம் உடம்பினுள் செல்லும் பொழுது என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதையும் அதை எப்படி நம் உடல் எதிர் கொண்டு அழிக்கிறது என்பதையும், வைரஸுக்கு மருந்து இல்லை எனும் போது, தடுப்பூசியில் இருக்கும் மருந்து என்ன என்பதையும் எளிதாக சிம்பிள் கிராப்க்ஸ் கொண்டு விளக்குகிறது.

புத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்?

என்னென்ன புத்தகங்கள் படிக்கக் கூடாது என்று பல நாடுகள் தங்கள் மக்களுக்கு லிஸ்ட் கொடுக்கின்றன. வாசிக்கக்கூடாத புத்தகங்கள் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் வாசிக்கத்தேவையில்லாத புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. தவிர்க்கவேண்டிய புத்தகங்கள் என்னென்ன என்று ஒரு பதிவு பார்த்தேன்.
கார்ல்சாகன் புத்தகம் வாசிப்பதைப் பற்றி காஸ்மோஸ் புத்தகத்தில் எழுதியது ஞாபகம் வரவே,அதன் தோராயமான சாரம்சம் கீழே:

புத்தகங்கள் விதைகளைப் போல. ஒரு நல்ல புத்தகம் அவ்விதைகளை உங்கள் மனதில் விதைத்துவிடவேண்டும். அந்த விதை விருட்சமாக வளரும். எழுத்து வடிவுமும், அதைப் பதிவு செய்து வைக்கும் முறையும் தான் மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு, இன்றுவரையிலும்.

யோசித்துப் பாருங்கள் புத்தகங்கள் இல்லையென்றால் மனிதனின் முன்னேற்றம் எவ்வளவு பாதித்திருக்கும்? ஒரு எ.கா: எகிப்த்தின் அலெக்சாண்ட்ரியா நூலகம் (கிமு 300-கிபி 300 காலகட்டம்) சூரையாடப் பட்டு புத்தகங்கள் எரிக்கப்பட்டன. அந்த நூலகத்தில் அரிஸ்ட்டார்கஸ் எனபவர் எழுதிய ஒரு புத்தகம் இருந்தது. அவர் அப்பொழுதே பூமி சூரியனைச் சுற்றித்தான் வருகிறது என்றும், சூரியன் மிக மிக அதிகமான தூரத்தில் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார். நூலகம் சூரையாடப்பட்டபொழுது அந்தப் புத்தகம் போயே போச்சு. போயிந்தே. பிறகு மீண்டும் பூமி சூரியனைச் சுற்றித்தான் வந்து கொண்டிருக்கிறது என்று கண்டறிய நம் முன்னோர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனது. 

நூலகங்களும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. அசுர்பனிபாலின் அசிரியன் நூலகத்தில் ஆயிரக்கணக்கான களிமன் புத்தகங்கள் இருந்திருக்கின்றன. மேலே குறிப்பிட் எகிப்தின் அலெக்சான்ட்ரியா நூலகத்தில் லட்சக்கணக்கில் பாப்பிரஸ் சுருள்கள் (ஓலைச்சுவடிகள் போல) இருந்திருக்கின்றன. இன்று நியூயார்க் பொது நூலகத்தில் மட்டும் ஐந்து கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கின்றன. இதை பிட்ஸ் கணக்கில் பார்த்தால் எத்தனையோ லட்சம் கோடிக்கும் மேல போகும். (இதெல்லாம் எனய்யா பிஸ்கோத்து.. இருபது லட்சம் கோடியவே அசால்ட்டா பாத்தவிங்க நாங்க..) இது நமது ஜீனில் இருக்கும் தகவல்களை விட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகம். நம் மூளை சேகரிக்கக்கூடிய தகவல்களை விட பல நூறு மடங்குகள் அதிகம்.

சரிப்பா.. இதெல்லாம் எப்படி வாசிப்பது? படிப்பது? (ஏன் படிக்கனும்னெல்லாம் கேக்கப்பிடாது) 

நாம சிட்டி ரோபோ இல்லியே புத்தகத்த அப்படி இப்படின்னு விசுக்கு விசுக்குன்னு திருப்பிப் பார்த்து வாசிச்சு முடிக்க? வாரத்துக்கு ஒரு புத்தகம் என்கிற கணக்கில் வாசித்தால் கூட (வாய்ப்பேயில்லை ராசா!) வாழ்நாளில் சில ஆயிரம் புத்தங்களே நம்மால் வாசிக்க முடியும். சில ஆயிரம் புத்தங்கள் என்பது உலகத்தில் இருக்கும் புத்தகங்களை கணக்கிலெடுத்தால் தக்கணூண்டு. ஒரு விழுக்காட்டில் இருமா அளவுக்கும் கம்மி. (இருபது லட்சம் கோடில உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்? அதைப் போல, மொதல்ல கிடைக்குமா?!)

அப்ப எப்படி? ட்ரிக் என்னன்னா: எந்த புத்தகங்களைப் வாசிக் வேண்டும் என்று தெரிந்து வைத்துக்கொள்வது! (நம்ப மார்க்கு மாதிரி: உங்களுக்கு எந்த பதிவு பிடிக்கவில்லை என்கிற விசயத்தை வைத்து அவன் பெரிதாக சம்பாதிக்க முடியாது. உங்களுக்கு என்ன பிடிக்கிறதுன்னு தெரிஞ்சுக்கிறதில தான் அவன் பிஸினஸ் இருக்கு!) வாசிப்போம். புத்தகங்களை தேடித்தேடி வாசிப்போம்.

பிகு: உலகில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் இருக்கும்? சிங்கப்பூரில் 26 பொது நூலகங்கள் இருக்கின்றன – மொத்தம் ஒரு கோடி புத்தகங்கள் இருக்கின்றன இந்த நூலகங்களில்..

பிபிகு: இண்டர்நெட்டில் எவ்வளவு விசயங்கள் இருக்கின்றன? ஒரு எக்ஸாபைட் என்பது ஒரு பில்லியன் பில்லியன் பைட்ஸ். இப்போதைக்கு தோராயமாக ஆயிரம் எக்ஸாபைட்ஸ் அளவு தகவல்கள் இருக்கலாமாம்..

பிபிபிகு: என் ஐபேடில் ஐநூறுக்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கி..!!

பிபிபிபிகு: இப்ப படிச்சிட்டிருக்கும் புத்தகம்: The Sleuth Investor

தலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி

நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரராக இருந்தால் Our Planetஐ கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள். அதில் ப்ளூ ஆல்கான் என்கிற பட்டாம்பூச்சியைப் பற்றிய ஒரு எபிசோட் வருகிறது. இதை எப்படி படம் பிடித்தார்கள் என்பதும் இணையத்தில் இருக்கிறது. அது நான் இங்கே சொல்லப்போகும் கதையைவிட சுவராஸ்யமானது. இணையத்தில் தேடிப்பாருங்கள்.

சரி பட்டாம்பூச்சிக்கு வருவோம். 

இந்த பட்டாம்பூச்சி வசீகரமானது. அழகானது. அளவில் பெரியதும் கூட. ஆனால் பயங்கர தந்திரமானது. நயவஞ்சகமானது. 

முட்டை போட்டுவிட்டால் மட்டும் போதுமா. மூட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவை (கம்பளிபூச்சியை) யார் பார்த்துக்கொள்வது? நேரத்திற்கு யார் உணவளித்து, சொந்தப்பிள்ளை போலப் பார்த்துக்கொள்வார்கள். பறவைகள் தங்கள் லார்வாவை கொத்தித் திண்ணாமல் எப்படி மறைத்துவைப்பது? ம்ம்.. இது என்னடா பட்டர்ஃப்ளைக்கு வந்த சோதனை, என்று நினைத்தது அந்த ப்ளூ பட்டர்ஃப்ளை. 

அந்த நீல வண்ண பட்டாம்பூச்சி, தான் தலையிலிருந்தல்லாவா வந்தோம், காலிலிருந்து வந்தவர்கள் தனக்கு சேவை செய்யவேண்டுமே என்கிற நம்பவே முடியாத அரிய வகை வேதத்தை எப்படியோ துப்புதுலக்கி தெரிந்துகொண்டுவிட்டது. பிறகு ஒரு திட்டம் தீட்டியது. கம்பளிப்பூச்சிக்கு வேலாவேலைக்கு உணவளித்து ராஜாவை விட (கவனிக்க, ராஜா போல அல்ல, ராஜாவைவிட) மேலாக கவனிக்க வைக்க வேண்டும். உணவு வேண்டும், பிச்சையாக அல்ல, அதிகாரமாக. பறவைகளிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும். உணவு. மரியாதை. பாதுகாப்பு. அப்பொழுது அந்த வழியாக தினமும் உழைக்கச் செல்லும் உழைக்கும் வர்க்கமான சிகப்பு எறும்புகள் அதன் கண்களில் பட்டது. கவனிக்க: சாதாரண எறும்பில்லை, சிகப்பு எறும்பு. 

எறும்புகள் உழைப்பதிலே கவனமாக இருப்பதால் அதற்கு அரசியலைத் தெரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ நேரமில்லை. அழகா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்கிற உண்மையை முழுசாக ஏற்றுக்கொண்டவர்கள் அந்த உழைக்கும் வர்கத்தைச் சேர்ந்தவர்கள். எதையாவது சும்மா சொன்னால் போதும், ஆதாரம் என்ன, இவன் எதற்கு இதைச் சொல்கிறான், இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன, இவனுக்கு இதனால் கிடைக்கும் ஆதாயம் என்ன என்று சிந்திக்காது. சட்டென்று நம்பிவிடும். ஏனெனில் பயம் ஜாஸ்தி. நாளைக்கு உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பயத்திலே வாழ்வதால் ஆழ்ந்து சிந்திக்கும் திரனை முழுவதுமாக இழந்துவிட்ட அந்த உழைக்கும் வர்க்கத்தை எளிதாக ஏமாற்றிவிடலாம். திட்டம் ரெடி. 

அப்படி முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவான கம்பளிப்பூச்சி செடிகளின் இலைகளைத் தின்று கொழுத்தவுடன், இலைகளிலிருந்து பட்டு நூலின் வழியாக தேவதூதனைப் போல கீழே இறங்கும். சிகப்பு எறும்புகள் சாரை சாரையாக உழைக்கச்செல்லும் வழியில் தந்திரமாகப் படுத்துக்கொள்ளும். பிறகு தன் உடம்பிலிருந்து ஒரு வகையான இரசாயனத்தை வெளிப்படுத்தும். அந்த ரசாயனத்தின் மணம் சிகப்பு எறும்புகளின் குட்டிகளிடமிருந்து (லார்வா) வரும் மணத்தைப் போன்றே இருக்கும். எறும்பும் ஏமாந்து இதுவும் தன் குட்டிதான் என்று நினைத்து பட்டுப்பூச்சியின் லார்வாவைத் தனது எறும்பு புற்றுக்குள் பத்திரமாகத் தூக்கிச் சென்று விடும். 

இப்பொழுது பட்டுப்பூச்சியின் லார்வாவும், எறும்புகளின் லார்வாவும் ஒன்றாக எறும்புகளின் ப்ரூட் சாம்பர் என்றழைக்கப்படும் இடத்தில் இருக்கும். ப்ரூட் சாம்பர் என்பது எறும்புகள் தங்கள் லார்வாக்களுக்கு உணவளித்து வளர்த்து ஆளாக்கும் இடம். எறும்புகள் தங்களது லார்வாக்களுக்கும், பட்டுப்பூச்சியின் லார்வாக்களுக்கும் ஒரே மாதிரியாக உணவளித்து சூப்பரா பராமரிக்கும். ஆனால் இது பட்டுப்பூச்சிக்குப் போதவில்லை. போதாதல்லவா? நாம தலையிலிருந்தல்லவா வந்தோம்? நமக்கு சாமியைபோலல்லவா சிறப்பு அங்கீகாரமும் முதல் மரியாதையும் கிடைக்கவேண்டும்.!!எறும்புகளின் “ராணி எறும்பு” போல கம்பளிப்பூச்சி இப்பொழுது ஒலி எழுப்ப அரம்பிக்கும். அவ்வளவுதான் எறும்புகள் இன்னும் விழுந்தடித்துக்கொண்டு உணவளித்துப் பராமரிக்கும். எந்தளவிற்கென்றால் – தன் குட்டிகளுக்கு உணவில்லையென்றால் கூட எறும்புகள் பட்டுப்பூச்சியின் குட்டிகளுக்குத்தான் முதலில் உணவளிக்கும். இப்படி எறும்புகளின் ராஜ்ஜியத்திற்குள் புகுந்து கொண்டு எறும்புகளுக்கு பயம் ஏற்படுத்தி, நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக தின்று கொழுக்கும் அந்த நயவஞ்சக கம்பளிப்பூச்சி. 

இப்படி உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்றி ஏய்த்து பிடுங்கித் தின்று கொழுத்த கம்பளிப்பூச்சி ஒரு நாள் அழகான பெரிய நீல நிற பட்டாம்பூச்சியாக உருமாறி எறும்புகளின் ராஜ்ஜியத்தை விட்டுப் பறந்து செல்லும். பிடிங்கித்தின்றால் ருசியாகத்தானே இருக்கும். பிடிங்கித் திண்பவன் கொழுத்துத்தானே கிடப்பான். பட்டாம்பூச்சி பறந்து சென்று விட, அது பறந்து செல்வதற்கு நாம் தான் காரணம் என்பதை அறியாத அடிமுட்டாள் எறும்புக்கூட்டம் வழக்கம் போல அடுத்த பட்டாம்பூச்சிக்கு உணவளிக்க உழைக்க ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த ப்ளூ ஆல்கன் பட்டாம்பூச்சி முற்றிலுமாக இந்த எறும்புகளை நம்பியே இருக்கிறது. எறும்புகள் இல்லையென்றால் அதன் இனமே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இது அந்த எறும்புகளுக்கு ஒரு போவதும் தெரியப்போவது இல்லை. தெரிந்து கொள்ளவும் அவை விரும்பாததுதான் விந்தையிலும் விந்தை. 


பிகு: இந்த எபிசோட் யூடியூபில் கூட இருக்கிறது. https://www.youtube.com/watch?v=XmtXC_n6X6Q

பிபிகு: Our Planet முழுக்கவே சுவராஸ்யமாக இருக்கும். டேவிட் அட்டன்பரோ லயித்து நரெட் செய்யும் குரலுக்காகவே பார்க்கலாம். யானைகள் நீருக்காக தேடி அலைவதும், ஆழ்கடலின் உயிரினங்களும் ஆச்சரியமூட்டும் எபிசோட்கள்.

பிபிபிகு: சமூகநீதிக் காவலர் கட்டுமரத்தின் 96வது பிறந்தநாள் ஜூன் 3 அன்று வருகிறது.

பிபிபிபிகு: அவரை கட்டுமரம் என்றழைப்பதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை. அவருக்கு இதனால் எந்த இகழ்ச்சியும் இல்லை. என்றென்றும் அவர் எங்கள் கட்டுமரம்.

அடிமைகளுக்கு சாகவும் உரிமையில்லை

Esi Edugyan எழுதிய Washington Black படித்துக்கொண்டிருக்கிறேன். பாதி முடித்துவிட்டேன். ப்ளாண்டேஷன்களில் வேலை பார்க்கும் ஒரு கருப்பு அடிமையின் கதை. அடிமையின் பெயர் தான் வாஷ்ங்க்டன் ப்ளாக். சிறிய பையன். அந்த ப்ளாண்டேஷனிலே பிறந்தவன். அடிமைகளுக்குள் ஒரு நம்பிக்கை இருக்கிறது: ப்ளாண்டேஷனில் தற்கொலை செய்து இறந்துபோகும் நபர், அடிமைத்தளையில் இருந்து விடுபட்டு அவரதுசொந்த ஊரில் மீண்டும் பிறப்பார் என்பது தான் அது. இதை நம்பி ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி தற்கொலை செய்து கொண்ட ஒரு அடிமையைப் பார்த்து, முதலாளி இவ்வாறு சொல்கிறார்:

What you see here, this nigger, killed himself. He was my slave. He has therefore stolen from me. He is a thief.

இந்த அடிமை தற்கொலை செய்து கொண்டான். இவன் என்னுடைய அடிமை. அதனால் அவன் என்னிடமிருந்து திருடப்பட்டிருக்கிறான். எனவே இவன் ஒரு திருடன்.

அடிமைகளின் உயிர் கூட அவர்களதில்லை.wb

IPL விசில் போடு – 13: Champions CSK!

படையப்பா படத்துல ரம்யாகிருஷ்ணன் ஒரு டயலாக் ரஜினி சாரை பார்த்து சொல்லுவாங்கவயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகவே இல்லன்னு,”  அது ரஜினி சாருக்கு மட்டுமில்லாது சென்னை சுப்பர் கிங்சுக்கும் பொருந்தும். Against all backslashes,  conspiracy, criticism and hatred, CSK has emerged as a champion side! எத்தனை ஏச்சுக்கள், எத்தனை கிண்டல் கேலிகள், அத்தனையும் தாண்டி சாதித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2018 IPL இறுதிப்போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை வென்று கோப்பையை தட்டிச் சென்றது சென்னை சூப்ப்ர கிங்ஸ். Way to go CSK!

deobxdquwaexsck

போட்டி என்னவோ வான்கடே அரங்கத்தில் நடந்தாலும் ரசிகர்களிடையே “எங்கே செல்லும் இந்த கோப்பை? MRC நகர் (மாறன்) வீட்டுக்கா? இல்லை 300 மீட்டர் தூரத்தில் போட் கிளப் ரோட்டில் இருக்கும் என். சீனிவாசன் வீட்டுக்கா” என்று ஒரு பெரிய யுத்தமே ட்விட்டெரில் நடந்தது.  சென்னை ரசிகர்கள் என்னவோ கொண்டாடியது “சீனி மாமா” என்ற என்.சீனிவாசனைத் தான்.

நம் ரசிகர்களை பொருத்தவரை, தாய் மாமா என்பது ஒரு relation.  சீனி மாமா என்பது ஒரு emotion.

டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். மெதுவாகவே தன் கணக்கை ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணி நன்றாகவே விளையாடியது. சென்னை அணியின் வழக்கமான கர்ண வள்ளள்கள் சர்துல் தாகூர் மற்றும் டுவைன் ப்ராவோ தயவில் 20வது ஓவரின் முடிவில் 178 ரன்கள் குவித்தது. தாகூர், ப்ராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் மொத்தமாக வீசிய 9 ஓவர்களில் மட்டும் சன்ரைசர்ஸ் 101 ரன்கள் குவித்தது. இதில் 5 சிக்ஸர்களும் 9 பவுன்ரிகளும் அடக்கம். மும்பை மைதானதில் சன்ரைசர்ஸ் போல திறமையான பவுலர்களை கொண்ட அணிக்கு இது மிகவும் competitive total என்றே கூறலாம்.

தொடர்ந்து விளையாட வந்த சென்னை அணி ஆமை வேகத்தில் விளையாட நினைத்தாலும் ஸ்கோர் போர்ட் என்னவோ கல் சிலை போல் நகராமல் இருந்து. This innings from Watson will be unforgetable for various reasons. முதல் ரன்னை எடுக்க அவர் 9 பந்துகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சென்ற அரையிருதி சுற்றில் முதல் 5 பந்துகள் எதிர்கொண்டு 6வது பந்தில் ஆட்டமிழந்தது நினைத்து கொஞ்சம் tension ஆகியிருக்கலாம். வாட்சன் ஒரு பக்கம் ரன்கள் எடுக்காதது மறுபக்கம் டூப்ளெசியின் மீது pressure ஏற நான்காவது ஒவரில் சந்தீப் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆறாவது ஓவரில் மறுபடியும் சந்தீப் சர்மா. இந்த முறை வாட்சனின் தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகரிக்க ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருட்ன பவர் ப்ளே ஓவர்கள் முடிவடைந்தது. இலக்கை எட்ட ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 7 வது ஓவர் முதல் சென்னையின் அதிரடி ஆட்டம் தொடங்கியது. சன்ரைசர்ஸ் அணியின் ரஷித் கானை சென்னை வீரர்கள் கையாண்ட விதம் அற்புதம். ஆக்ரோஷமாகவும் ஆடாமல் அதே சமயம் விக்கெட் எதுவும் கொடுக்காமலும் சாதுர்யமாக விளையாடியனர்.

புவனேஷ்வர் குமார் மற்றும் ரஷீத் கானை தவிர்த்து ஏனைய பவுலர்களை target செய்தது ஒரு master plan! கடந்த ஆட்டங்களில் சிறப்பாக பவுலிங் செய்த சித்தார்த் கவுலின் பந்துகளை வாட்சனும் ரெய்னாவும் சிக்ஸர்களாகவும் பவுன்ரிகளாகவும் விளாசினர். 13வது ஓவர் கிட்டத்தட்ட game changer எனலாம். ஷேன் வாட்சன் சந்திரமுகியாகிய ஓவர். சந்தீப் சர்மா வின்

முதல் பந்து: தப்பித்தது. ரன்கள் ஏதுமில்லை

இரண்டாம் பந்து: எக்ஸ்ரா கவரில் பவுன்டரி

மூன்றாம் பந்து: நினைத்த படி சந்தீப் சர்மா ஷார்ட் பந்தாக வீச, லாங் ஆனில் சிக்ஸர்

நான்காம் பந்து: யார்கர் வீச நினைத்து வேறு என்னமோ வீச, மறுபடியும் சிக்ஸர்

ஐந்தாம் பந்து: இந்த முறை length ball. மறுபடியும் லாங் ஆனில் சிக்ஸர்

ஆறாம் பந்து: டென்ஷனில் வைட்

மறுபடியும் ஆறாம் பந்து: சற்று outside off ஆக வந்த பந்தை off side இல் பவுன்ரி

கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்தது என்றே நினைக்க தோன்றியது. 9.37 என்ற ரன்ரேட் சந்தீப் சர்மாவின் ஓவருக்குப் பின் 6.85. அதன் பின் ஓவ்வொறு ஓவரிலும் பவுன்ரிகள் எடுக்க 19வது ஓவரில் இலக்கை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை அணி வெல்ல பல காரணங்கள் இருந்தாலும் அதில் சில இதோ:

 1. டாஸில் வெற்றி
 2. லுங்கி மற்றும் தீபர் சஹாரின் துல்லியமான பந்து வீச்சு
 3. சன்ரைசர்ஸ் அணி பவுலர்களை, குறிப்பாக புவனேஷ்வர் குமாரையும் ரஷீத் கானையும் கையாண்ட விதம்
 4. வாட்சனின் அபாரமான ஆட்டம்

ப்ளேஆஃப் சுற்று வரை நம்பர்-1 அணியாக வலம் வந்த சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டில் தோல்வியடைந்தது பல காரணங்களினால்:

 1. முதலில் களமிறங்கும் ஷிகர் தவான் மற்றும் கேன் வில்லியம்சன் மீதே அதீதமாக நம்பியது
 2. மிடில் ஆர்டரில் யாரும் பொறுப்பேற்காதது. 11 கோடி கொடுத்து வாங்கிய மனீஷ் பாண்டே முதல் போட்டி முதல் சொதப்பினார். கடைசி 2-3 போட்டிகளில் அவரை களமிறக்கவில்லை. இந்த வருடத்தில் அதிகமாக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி சார்பில் ஷிகர் தவான் மற்றும் கேன் வில்லியம்சன் தவிர வேறுயாருமில்லை.
 3. சுழற்பந்தில் ரஷித் கானைத் தவிர வேறுயாரும் சோபிக்கவில்லை – வேறுயாரும் இல்லையென்றே சொல்லலாம்
 4. டேவிட் வார்னர் இல்லதது

சினிமாவில் ஹீரோ முதலில் ஆதிக்கம் செலுத்துவார், ஹீரொயின்களுடன் டூயட் பாடுவார். படத்தின் இடையில் வில்லன் ஹீரோவை முடக்க, க்ளைமாக்ஸில் ஹீரோ வில்லனை அடித்து துவைத்து வெற்றி காண்பார். சென்னை அணியின் கதையும் இதே போலத்தான். 2010 மற்றும் 2011 வருட சாம்பியன் அணி 2015இல் தற்காலிகமாக தடை வாங்கி மறுபடியும் களமிறங்கிய போது அனைவரும் நம்பிக்கையிழந்து உண்மை.

 • சென்னை அரங்கில் போட்டி நடைபெறாது போனது முதல் அடி. ஏலத்தில் எடுக்கும் வீரர்களை தங்கள் home groundஇன் சூழலுக்கேற்ப்பவே தேர்ந்தெடுப்பர். When a home pitch is shifted, it always affects the team dynamics.
 • எதிர்பார்ப்புடன் ஏலத்தில் எடுத்த நியுசிலாந்து வீரர் மிச்செல் சாண்ட்னெர் மற்றும் கேதார் ஜாதவ் காயம் காரணமாக ஒதுங்கினர்.
 • ஏலத்தின் முடிவில் ரசிகர்களின் அதிருப்தி

அத்தனை சோதனைகளை கடந்து சாதித்தது சாதாரண காரியமில்லை. Hats off CSK for making it happen!

Here is their journey to finals

அடுத்த வருடம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தியாவில் போட்டிகள் நடைபெறுமா என பொருத்திருந்து பார்க்க வேண்டும். அதற்க்குள் அணிகள் தங்கள் சுயபரிசோதனைகளை செய்வார்கள். எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் சென்னை ரசிகர்கள் அடுத்த வருட போட்டிகள் தொடங்கும் வரை தங்கள் கொண்டாட்டங்களை நிறுத்தப் போவதில்லை.

அதுவரை சென்னை சூப்பர் கிங்ஸுக்கு சூப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….
IPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…
IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….

 

Checklist of CSK:

Be one among the top 2 teams : Check – Done ☑️

Qualify for playoffs : Check – Done ☑️

Ensure low scoring target : Check – Done ☑️

Heart Attack for fans : Check – Done ☑️

நன்றாக விளையாடி, பின் தடுமாறி, அதன்பின் மயிரிழயில் தப்பிப்பது எப்படி ஏன்ற புத்தகம் இருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதை வெளியிடலாம்.

ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைத்து, நகங்கள் தேய, இதயத்துடிப்பு பன்மடங்காக அதிகரிக்க, “ஐயா, ராசா முடியலப்பா சாமிஎன கடைசியில் புலம்ப வைத்து அதன்பின் ஓரிரெண்டு பந்துகளிளோ ஓரிரெண்டு விக்கட்டுகளிளோ ஒரு அணி வென்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியென அறிவோமாக.

இந்த வருடத்தின்திக் திக்” CSK போட்டிகள் (கடைசி 3 ஓவர்களில் எடுத்த ஓட்டங்கள் அடிப்படையில்):

47 off 2.5 vs MI, Wankhede

41 off 2.5 vs KKR, Chennai

44 off 2.4 vs RCB, Bengaluru

43 off 2.1 vs SRH, Wankhede

Anyways, Well done CSK for making it to yet another finals!

இதுவரை கலந்துகொண்ட ஓவ்வொரு வருடமும் (இடையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்ட 2 வருடங்கள் தவிர்த்து) ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி என்பது சாதாரண சாதனை அல்ல.  அதையுந்தாண்டி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவது மிகப்பெரிய விஷயம், especially when you comeback from a suspension. தடை முடிந்து திரும்ப்ம்போது, தனி நபரோ அல்லது அணியோ, சம்மந்தப்பட்ட வீரர்களும் ரசிகர்களும் மனதளவில் மிகவும் சோர்ந்த நிலையில் இருப்பர். இவ்வாறு இருக்கையில்  மறுபடி எழுந்து எதிரியின் வீழ்த்துவது சினிமாவில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் சாத்தியம் என்று நிறுபனம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

CSK

No prizes for guessing, டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். அணியில் பில்லிங்ஸுக்கு பதில் வாட்சன். ஆரம்பமே படு ஜோராக அமைய, முதல் ஓவரில் முதல் பந்தில் ஷிகார் தாவனின் ஸ்டம்புகள் பறந்தன. போட்டியின் momentum சற்றும் குறையக்கூடாது என அடுத்து வந்த ஆட்டக்காரர்கள் counter attack முறையில் ரன்களை குவித்தாலும், ஓவர்கள் கடந்து செல்லச்செல்ல விக்கட்டுகள் விழ ஆரம்பித்தன, thanks to the shuffling in bowling by Dhoni.

வழக்கமாக கடைசி 5 ஓவர்கள் (death overs)  வீச வரும் ப்ராவோவை இந்த முறை 7வது ஓவர் வீச அழைத்தார் தோனி, which can be considered as a very smart and tactical move. 2 முக்கியமான விக்கட்டுகள் எடுத்ததுமின்றி, அந்த கேட்சை சர்வசாதாரனமாக பிடித்தது தான் highlight. தப்பாம தான்யா பேரு வைச்சுருகாங்க Bravo!

17வது ஓவர் வரை அடக்கி வாசித்த சன்ரைசர்ஸ் அணி, 18வது ஓவர் முதல் தன் ருத்ரதாண்டவத்தை தொடங்கியது. 2016 டி20 உலகக்கோப்பை புகழ் கார்லோஸ் ப்ராத்வேட் தன் அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க நினைத்தாரோ என்னவோ, பழம் நழுவி பாலில் விழுந்து அங்கிருந்து நழுவி வாயில் விழுந்த கதையானது. சென்னையின் கொடை வள்ளல் ஷர்துல் தாகூரின் தயவில் 18வது ஓவரில் 17 ரன்களும் 20வது ஓவரில் 20 ரன்களூம் வாரி வழங்கினார். இதில் நான்கு சிக்ஸர்களும் ஒரு பவுன்ரியும் அடக்கம்.

140 என்ற சுலப இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய சென்னை கிட்டத்தட்ட சன்ரைசர்ஸ் அணியைப் போலவே விளையாடியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இரு இன்னிங்ஸையும் ஒப்புனோக்க ஏகப்பட்ட ஒற்றுமைகள்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சென்னை சூப்பர் கிங்ஸ்

தாவன் (முதல் பந்து) 0-1

வாட்சன் (ஐந்தாவது பந்து) 0-1

கோஸ்வாமி : 2-43 (3.5 ஓவர்)

ரைய்னா : 2-24 (3.3 ஓவர்)

வில்லியம்சன் : 3-36 (4.2 ஓவர்)

ராயுடு : 3-24 (3.4 ஓவர்)

100 ஓட்டங்கள் – 17.1 ஓவர்களில்

100 ஓட்டங்கள் : 17.2 ஓவர்களில்

18வது ஓவரில் – 17 ஓட்டங்கள்

18வது ஓவரில் – 20 ஓட்டங்கள்

20 ஓவரில் – 20 ஓட்டங்கள்

19வது ஓவரில் – 17 ஓட்டங்கள்

7 விக்கட்டுகள் இழந்து தோல்வியின் நுனியில் சென்னை நின்ற நிலையில்அவ்வளவு தான் bro. ஆட்டம் ஓவர், கிளம்பளாம்என்று சென்னை ரசிகர்கள் நினைத்த போதுதான்நில்லுங்கபா, இனி தான் ஆட்டமேஎன்று டூப்ளெஸி தன் அதிரடியை ஆரம்பித்தார்.  18வது ஓவரில் ஒரு சிக்ஸர் 3 பவுன்ரிகள், 19வது ஓவரில் ஷர்துல் தாகூர் (ஆம் நம் சென்னையின் கர்ண பிரபுவே தான்) 3 பவுன்ரிகள் விளாசினார். தல தோனியின் ஸ்டையிலை பின்பற்றி டூப்பெளிஸியும் 20வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னொறு முறை IPL போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இதோ அந்த கடைசி இரண்டுதிக் திக்ஓவர்கள்

யாராவது உங்களை “IPL என்றால் என்ன?” என்று கேட்டால் “A tournament where 7 teams fight each other to meet CSK in finals” என்று பதில் கூறலாம்.

இன்று நடக்கும் eliminator போட்டியில் வெற்றி பெறும் அணியை ஹைதராபாத் கொல்கத்தாவில் அடுத்து சந்திக்கவிருக்கின்றது. இந்த  போட்டிகளை சென்னை கூர்ந்து கவனித்து தன் யுக்திகளை நிர்ணயிக்கும்.

இன்று தெற்கு ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் “Mr. 360 degree” டிவில்லியர்ஸ் தன் ஓய்வை அறிவித்தது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக இருந்ததுஅடுத்த வருசம் உலகப்கோப்பை போட்டிகள் இருக்கு, விளையாடி கோப்பைய ஜெய்ச்சுட்டு ஓய்வெடுக்கலாமே தல என்று ட்விட்டரில் ரசிகர்கள் உருகினர். Cricket world will certainly miss you sir! Royal salute to the most loved cricketer in the world! சென்று வாருங்கள் டிவில்லியர்ஸ்.

dd5htkgvaaecbvx

சென்னை அணிக்காகவும், டிவில்லியர்ஸுக்காகவும் ஒரு சூப்பர் விசிலுடன்.

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…
IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…

ஒரு வழியாக லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து ப்ளேஆஃப் சுற்று போட்டிகள் தொடங்கவுள்ளன. Amidst all the drama, intensity and anxiety the top 4 teams have qualified for the knockoff! கடைசி கட்ட போராட்டங்களுக்கும் எதிர்ப்பார்புகளுக்கும் ரசிகர்களூம் அணிகளும் தயாராகிவிட்டன. இந்த வார போட்டிகள் அனைத்தும் அதிரடி பைசா வசூல். புள்ளிகளை அதிகரிக்கவெண்டும் என சில அணிகள் போராட, தான் போட்டியில் நிலைக்க மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்நோக்கி சில அணிகளும் காத்திருக்க கடைசி போட்டியின் 16வது ஓவர் வரை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் அணி எதுவாக இருக்கும் என ரசிகர்களை ஈர்க்க வைத்தது இந்த வருட IPL.

வார தொடக்கத்திலேயே சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸும் ப்ளேஆஃப் தகுதிசுற்றுக்கு முன்னேற, 3வது மற்றும் 4வது இடத்துக்கு கடும் போட்டி. எஞ்சி இருந்த 2 இடங்களுக்கு டெல்லி அணியைத்தவிர மற்ற 5 அணிகளும் கடுமையாக மோதின.   And here is how the tournament unfolded:

மே 19: கோல்கத்தா அணியின் judgement day. ஹதராபாதில் நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை சென்னை நம்பியதோ இல்லையோ, ஆளப்போறான் தமிழன் என்று கொல்கத்தா நம்பியது வீண்போகவில்லை. இத்தனை போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதும் இந்திய அணியில் இடம்பெறாதது வெறும் அரசியல்.

நம்ம நாட்ல ஒரு பக்கம் அரசியல்வாதிங்க விளையாடராங்க, இன்னொரு பக்கம் விளையாட்ல அரசியல். இது மாறாத வரைக்கும் இரண்டும் உருப்படாது.

என்ற சாமானியனின் குரலில் நியாயம் இருக்கவே செய்கிறது.

மே 20:  லீக் சுற்றின் கடைசி நாளான நேற்று மும்பை அணிக்கு வாழ்வா சாவா என்ற நிலை. போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய மும்பை அணியின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்தது டெல்லி அணி. 175 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பையின் ஸ்டார் ஆட்டக்காரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப்ப ரன்களூக்கு ஆட்டமிழந்தனர். 18வது ஓவரை வீச வந்த லியம் ப்ளங்கெட் இந்த நாளை மறக்க நாட்களெடுக்கும். மும்பையின் பென் கட்டிங் 3 சிக்ஸர்கள் 2 பவுன்ரிகள் என விளாசினாலும், கடைசி ஓவரில் ஹர்ஷல் பட்டேல் ஓவரில் அவுட்டானதும் மும்பையின் அத்தனை நம்பிக்கையும் சிதறியது.

பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவும், எவின் லூயிஸும் தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மென்னும் இந்த வருடம் 300 ரன்களை தாண்டவில்லை. Just for comparison, இந்த வருடம் கொல்கத்தாவின் சுனில் நரேன் அடித்த ரன்கள் 327, மும்பையின் அணித்தலைவர் ரோஹித் சர்மா எடுத்தது 286 ரன்கள்.

Big names can only win matches but not the championship

என்ற கசப்பான உண்மையை உணர்ந்திருப்பார்கள்.

மும்பை இந்தியன்ஸ் வெளியேறியதை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியானது. ரன்ரேட் விகிதத்தில் மிகவும் பிந்தங்கியிருந்த பஞ்சாப் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸுகும் அதே நாளில் நடந்த கடைசி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. 160 என்ற சுலப இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வெளியேறியதும் தல தோனி ஹர்பஜனையும் அவரை தொடர்ந்து தீபக் சகாரையும் அனுப்பியது utter chaos. அஷ்வின் முதற்கொண்டு அத்தனை பவுலர்களும் தலையை சொறிய தோனியின் யூகம் என்னவென்று தெரியாமல் குழம்பியது தான் highlight.

சென்ற வருடம் வரை டி20 போட்டிகளில் impact bowler ஆக வலம் வந்த அஷ்வினின் ஓவரில் தீபக் சகார் 3 சிக்ஸர்கள் அடித்தது அவரின் நம்பிக்கையை கொஞ்சம் ஆட்டங்கான வைத்திருக்கும். இந்த வருடம் ஆரஞ்சு தொப்பியை வென்ற பஞ்சாப் அணியின் ஆன்ரு டையின் 19வது ஓவரில் ரெய்னா 2 சிக்ஸர்களூம் 2 பவுன்ரிகளும் எடுத்தது speldid treat for eyes.

உங்க இலக்கை எட்ட தோனியோ ப்ராவாவோ ஜடேஜாவோ தேவையில்லை, எங்க ஹர்பஜனும் சகாரும் போதும் என்று அவர்களை அனுப்பி அவர்களூக்கும் ஒரு live practise கொடுத்தது அஷ்வினின் ego வை சீண்டிப் பார்த்திருக்கும்.

தீபக் சகாரின் ஆட்டத்தை பார்த்ததும், “நீ அடிச்சது பத்தாதுன்னு இன்னும் போக வர சின்ன பயலெல்லம் கூப்பிட்டு அடிச்சு பழகிக்க வேற சொல்லற. பழக இது என்ன உடம்பா இல்ல பள்ளிக்கூடமா? ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா இந்த டீமை யாரு காப்பாத்தறது, இவங்க family-ய யாரு மைண்டைன் பன்னறது. இரக்கமில்லையா உனக்குஎன்று நம்ம வடிவோலுவின் வண்டு முருகன் டயலாகை அணியின் முதலாளி ப்ரீத்தி ஜிந்தா சொல்வதாக உங்களுக்கு நினைவில் வந்தால் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது.

5 விக்கட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற, ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் உறுதியானது:

ddqquxlu8aas1ab

Kudos to the CSK think tanks for believing in talents that no one believed.

மும்பை அணி வெளியேறியது மிக்க மகிழ்ச்சி என ப்ரீத்தி ஜிந்தா (விளையாட்டாக?) அரங்கத்தில் சொன்னது நேற்றைய ஹைலைட்.

எது எப்படியோ ஜாஸ் பட்லரும் பென் ஸ்டோக்ஸும் இல்லத நிலையில் ராஜஸ்தான் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது அதிர்ஷ்டமா? விடா முயற்ச்சியா? கடவுளின் அருளா? என நெட்டிசன்கள் திண்டுக்கல் லியோனின் தலைமயில் ஒரு சிறப்பு பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்க, அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் அந்த வீரர்கள் கொண்டாடும் பதிவை அணி ட்விட்டரில் பதிய, மற்ற அணிகள், குறிப்பாக மும்பை அணி, காண்டாகி கொண்டிருப்பார்கள்.

இந்த வாரம் நடந்த மற்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் சில:

சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டிவில்லியர்ஸின் அபாரமான கேட்ச் நம் நினைவிலிருந்து மறைய நிறைய வருடங்களாகும். Against gravity, against all improbability, this catch is out of the world!

மும்பையின் ஹர்திக் பாண்டியாவும் பஞ்சாபின் கே.எல். ராகுலும் தங்கள் சட்டையை மாற்றிக்கொண்டது அதிரடி தூள்! பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் இவ்வாறு வீரர்கள் தங்கள் சட்டையை மாற்றி உடுத்திக்கொள்வது அரிது, கால்பந்து போட்டிகளில் இவ்வாறு நடப்பது சகஜம். போட்டியைத் தாண்டி பிரியாத நட்பே ப்ரெண்ட்ஷிப்பா என்று உணர்த்தியது simply superb!

 

அதே போட்டியில் ரசிகர்களுக்கு தான் வென்ற போட்டி நாயகன் (man of the match) விருதை கொடுத்தார் கே.எல். ராகுல்.

When life throws a Rahul, make it KL and not Gandhi!

எப்படியோ அத்தனை சோதனைகளையும் கடந்து முதல் நான்கு அணிகளுக்கிடையே நடக்கும் ப்ளேஆஃப் சுற்றுப் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளன.

ddtrpinvmaaka-a

சென்னையின் ஆதிக்கம் தொடருமா? தல தோனி இன்னும் ஒருமுறை கோப்பையை வெல்வாரா? இன்னும் சில தினங்களில் இந்த கேள்விகளுக்கான பதில்கள் தெரியவரும். அதுவரை சென்னை சூப்பர் கிங்ஸுக்காக ஒரு பெரிய விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.