Ram And Shantaram

(Ram, Shantaram, Rang De Basanti, Satham Podathae, Rajinikanth)

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு முறை – விகடனில் தொடராக வெளிவந்த தேசாந்தரியில் என்று நினைக்கிறேன் – புராதாண சின்னங்களை பாதுகாப்பது பற்றி எழுதியிருந்தார். அவற்றைப் பாதுகாப்பதில் வெளிநாட்டினர் காட்டும் அக்கறையையும் நாம் காட்டும் அக்கறையையும் ஒப்பிட்டுப் பார்த்து, மிகுந்த வருத்தத்துடன், நாம் ஏன் அவற்றைப் பாதுகாப்பதில் ஆர்வம் எடுத்துக்கொள்வதில்லை என்று வியப்பாக கேட்டிருந்தார்.

இராமாயணம் புனைவாக இருக்கலாம் இல்லையேல் உண்மையாகக் கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்? யார் proove செய்யமுடியும்? எல்லா பிரச்சனைகளுக்குமே இரு தரப்பான வாதங்கள் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கின்றன. இப்படியும் வாதாடலாம். அப்படியும் வாதாடலாம். அதானால் தானோ என்னவோ நமது நாக்கிற்கு எழும்பு என்பதே கிடையாது. எப்படி வேண்டுமானாலும் வளையும். நமக்கிருக்கும் கொள்கைகள் கணக்கிலடங்காதவை. அந்த கொள்கைகளையெல்லாம் கண்டிப்பாக மற்றவர்கள் மீது திணித்துத்தானாக வேண்டுமா? ராமர் பாலம் என்பது ராமர் கட்டினதோ அல்லது ராவணன் கட்டினதோ அல்லது ரஜினிகாந்த் கட்டினதோ, எப்படி இருந்தாலும் அது ஒரு புராதண சின்னம். Historical Place. அதை ஏன் இடிப்பானேன்? நமது புராதாண சின்னங்களை நாமே பாதுகாக்காவிட்டால் யார் தான் பாதுகாப்பது?

***

நேற்று மதியம் நன்றாக பருப்பு மற்றும் கத்தரிக்காய் புளிக்குழம்பை ஒரு கட்டு கட்டிவிட்டு, அரை மயக்கத்தில் டீவி பார்த்துக்கொண்டிருந்த பொழுது, HBOவில் Davinci Code ஓடிக்கொண்டிருந்தது. என் மனைவி (எனக்கு திருமணம் முடிந்துவிட்டது. This sep 13th. Very sorry Girls! 🙂 ) DaVinci Code படத்தை பார்த்ததில்லை. எனவே நான் அந்தக் கதையை – கர்த்தருக்கு மனைவி உண்டு என்பதையும் அவர்களுக்கு குழந்தை இருந்திருக்கிறது என்பதையும்* – விளக்கிக் கூற அவளும் ஆர்வமாகி பார்க்க ஆரம்பித்தபொழுது, வேறு வழியின்றி நான் ஒவ்வொரு காட்சியாக விளக்கத் தொடங்கினேன். எனக்கிருக்கும் பழக்கம் என்னவென்றால் படத்தின் முடிவு twistingஆ இருந்தா, அந்த முடிவைப் பற்றி கொஞ்சம் கூட hint கொடுக்கமாட்டேன். (நானே என் சொந்த அறிவால் -இருக்கும் பட்சத்தில்!- என்னிடம் கதை கேட்பவர்களை மேலும் குழப்பிவிடுவேன்! அந்த twist வரும்பொழுது அவர்கள் முகத்தில் காணக்கிடைக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை மிகவும் ரசிப்பேன்.) எனக்கு மதிய தூக்கம் சுத்தமாக போய்விட்டது. இரண்டாவது முறை பார்த்த பொழுதும் DaVinci Code நன்றாகத்தான் இருந்தது.

நான் மலேசியாவில் இருந்த பொழுது, இந்த Davinci Code நாவல், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக, Fiction Listஇல் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டிருந்தது. இந்த நாவலை Bangsar MPHஇல் வாங்கி ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். Opus Deiயும் Knights Of the Templarஉம், Priory Of Sionஉம் என்னை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தின. Internetஇல் தேடியபொழுது இவையாவும் உண்மையே என்பது போல வாதங்கள் மற்றும் ஆதாரங்கள் (?!) நிறைய கிடைத்தன. எதை நம்புவது?

Rang De Basantiஇல் சித்தார்த்தின் அப்பா சித்தார்த்தைப் பார்த்து SMS generation என்று திட்டுவார். அதென்ன SMS generation? Any speech that goes beyond 2 or 3 sentences becomes a lecture! அதே போலத்தான் என் மனைவியும், படத்தில் சேர்ந்தார் போல ரெண்டு நிமிஷம் யாராவது பேசிக்கொண்டிருந்தால், தூக்கம் வருது என்று பெரிய்ய்ய கொட்டாவி விட ஆரம்பித்துவிடுவாள். உஷாராக அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

சும்மா கதை கேட்டால் பரவாயில்லை, அதில் நிறைய சந்தேகங்கள் வேறு கேட்பாள். படத்தின் logicக்கில் டைரக்டர் விட்ட ஓட்டைகளை, நான் தான் பெரும்பாலும் அடைத்துக்கொண்டிருப்பேன். (Like Sivaji.) இல்லையென்றால், என்ன பெரிய இங்கிலீஷ் படம், நம்ப தமிழ் படம் மாதிரிதான் எடுக்கறாய்ங்க, என்று ஈசியாக சொல்லிவிடுவாள்.

இந்தப்படத்தைப் பார்த்த பிறகு, அவள் மிகுந்த வியப்பில் ஆழ்ந்துபோனாள். எப்படி இத அந்த மக்கள் ஒத்துக்கிட்டாங்க? சண்டை போடலியா? என்று கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

ஒரு மதத்தின், ஆணிவேரையே சாய்த்துப்பார்க்கக் கூடிய conceptஐ கொண்டது இந்தப்படம். யோசித்துப் பாருங்கள், ராமர் பத்தி இதேபோலதொரு controversial படத்தை இந்தியாவில் எடுத்திருந்தால் என்னவாகியிருக்கும்?

சகிப்புத்தன்மை என்கிற ஒன்று இருக்கிறதில்லையா? அதேபோல கருத்துச் சுதந்திரம் என்கிற ஒன்றும் இருக்கிறதில்லையா? ஒருவர் ராமர் இருக்கிறார் என்று சொன்னால் மற்றவருக்கு அதை மறுக்கும் உரிமை இருக்கிறதா இல்லையா?

***

சத்தம் போடாதே என்றொரு படம் பார்த்தோம். நன்றாக இருந்தது. அந்த சென்னை600028 இல் அந்த cricket teamஇல் இருந்த ஒரு பையன் (captain நூல் விடும் அந்த பெண்ணிற்கு – அந்தப் படத்தில வர்ற கிரிக்கெட் captainப்பா, மாட்டிவிட்ருவீங்க போல- அண்ணனாக நடித்தவர்..பெயர் மறந்துபோச்சு) தான் இதில் ஹீரோ. நன்றாக நடித்திருக்கிறார். பத்மப்ரியாவும் (Girlsன்னா மட்டும் பெயர ஞாபகம் வெச்சிக்கோ!) நன்றாக நடித்திருந்தார் (இவரு பெரிய சிவாஜிகணேஷன், சர்டிப்பிகேட் கொடுக்கறாரு!). யுவன்ஷங்கர் ராஜாவின் இசை அருமை. Like in Ram. ஆனால் வஸந்துக்கு இந்த கேஸ் ஸ்டவ்வை வெடிக்கவைப்பதில் அப்படி என்னதான் ஆசையோ தெரியவில்லை. Easyயான solution இல்ல?

மொத்தத்தில் படம், அமைதியான நிசப்தமான, சற்றே மர்மம் நிறைந்த, இரவு போல. அனுபவித்து ரசிக்கலாம், அமைதியாக, கொஞ்சம் திகிலோடு. தியேட்டரில் சென்று படம் பாருங்கள் -என்னைப்போல வேலை வெட்டியில்லாமல் இருந்தால். Rerecording superb.

***

நிறைய புத்தகங்களை மாற்றி மாற்றி படிக்க எடுத்தேன். George Orwell எழுதிய 1984, joseph heller எழுதிய Catch 22, mark haddon எழுதிய the spot of bother, friedman எழுதிய world is flat. இதில் 1984 நன்றாக இருந்தது. science fiction. கொஞ்சம் பிடிபட ஆரம்பித்த பொழுது, தொலைத்துவிட்டேன். (என்னது புத்தகத்தை தொலச்சியா? டாக்ஸில வந்தபோது தொலச்சுட்டேன். அப்படியே எழுந்துவந்துட்டேன்.) எதேதோ புத்தகங்கள் படிச்சிட்டு, கடைசில shantaramல வந்து நிக்கறேன். இதில் கிட்டத்தட்ட 200 பக்கங்கள் படிச்சிட்டேன். so far so good. shantaram இப்பொழுது திரைப்படமாக எடுக்கப்படுகிறது. Johny Depp Shantaramஆக நடிக்கிறார்.

இது ஒரு உண்மை கதை. Gregory David Roberts என்கிற ஒரு ஆஸ்திரிலேய கைதி (கொள்ளை மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்) , ஜெயிலில் (Victoria – maximum security prison) இருந்து தப்பித்து, இந்தியா வந்து, பாம்பேயில் பெயரை Shantaramஆக மாற்றிக்கொண்டு, வாழ்ந்தவர். பாம்பேயில் இருந்த பொழுது பல நிழல் உலக தாதாக்களிடம் தொடர்பு வைத்திருந்தவர்.

நம்ம ஊர் போலீஸ் பேசாம அவர aproover ஆக சொல்ல வேண்டியது தான? நிறைய தாதாக்களை arrest செய்யலாமே?!

***

Shantaramஇல் ஒரு வரி வரும். (p. 150)

A dream is a place where wish and fear meet. When the wish and the fear are exactly the same, we call the dream, a nightmare.

உண்மைதானோ? இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்தமான விசயம் என்னவென்றால் : அவசரமில்லாத நிதானமான descriptive narration. பாம்பேயிலிருந்த பொழுது ஒவ்வொருவரையும், ஒவ்வொரு விசயத்தையும் கூர்ந்து கவனித்திருக்கிறார். எல்லோரையும் அழகாக வர்ணிக்கிறார். Exactly like a honest narration, you know or atleast it appears like that, atleast to me. மேலும் ஆங்காங்கே அவர் தெளித்து செல்லும் philosophical thoughts. நம்மை நிறுத்தி, நிதானமாக யோசிக்க வைக்கின்றன. நிதானமாக.

***

* – As told in the novel Davinci Code written by Dan Brown.

கற்றது தமிழ்.

முதலில் ஜீவாவுக்கு பாராட்டுக்கள். கொடுத்த கதாப்பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். பின் சீட்டிலிருந்து அடுத்த கமலஹாசன் கிடச்சுட்டான் என்ற கமென்ட் கேட்க முடிந்தது. (ஆனால் ஆவாரம்பூ படத்தில் அரைலூசாக நடித்த வினீத்தைப் பார்த்துக்கூட இப்படித்தான் சொன்னோம்ங்கறது வேற விசயம்!). நன்றாக நடித்திருக்கிறார். அமைதியாக ஆக்ரோஷமாக அன்பாக ஏமாற்றமாக வெறுப்பாக கடைசியில் சைக்கோவாக அருமையாக நடித்திருக்கிறார். படத்தில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களும் ஷார்ப்பாகவே நடித்திருக்கின்றனர். குறிப்பாக தமிழய்யா. எங்கோ பாத்திருக்கிறோம் என்ற feeling கடைசிவரையில் எனக்கிருந்தது. புதுப்பேட்டையில் அமைச்சராக வருகிறவர் தானே இவர்? புதுப்பேட்டை எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. செல்வராகவனின் டைரக்சனும், யுவனின் பின்னனி இசையும் (GodFatherஐ அவ்வப்போது நினைவுபடுத்தினாலும்!), தனுசின் நடிப்பும் நன்றாக இருந்தது.

சரி. கற்றது தமிழைப் பார்ப்போம். ப்ளஸ் டூவில் ஆயிரத்து நூறு மதிப்பெண்கள் பெற்ற ஜீவாவுக்கு, உண்மையில் என்ன தான் பிரச்சனை என்பதில் தான் இயக்குனர் கொஞ்சம் (நிறையவே!) தடுமாறியிருக்கிறார். காதலா? பணமா? சமகாலத்தில் தன்னை விட அதிக சம்பளம் வாங்கும் மற்றவர்களைப் பார்த்து பொறாமையா? இல்லை விதியா? படத்தில் வரும் எக்கச்சக்க எதிர்பாராத மரணங்களால் தான் நான் விதியை இழுக்கவேண்டியதாகிவிட்டது. இல்லீன்னா just coincidence? “எனக்கு பணம் பிரச்சனை இல்லை” என்று அவரே மருத்துவரிடம் சொல்கிறார். பிறகு? அவரது வாழ்க்கையில் ஆனந்தி மட்டுமே பிரச்சனை. ஏனென்றால் ஆனந்தியைப் பார்த்தவுடன் (the same old mahanadhi style. ஆனந்தி பாம்பேவுக்கு போகிறார் என்று தெரிந்தவுடனே அவர் என்ன ஆவார் என்பது நமக்கு தெரிந்துவிடுகிறது. எத்தனை படங்கள் பார்த்திருக்கிறோம்!?) மீண்டும் அந்த பத்து வயது சிறுவன் அவனுள் தோன்றிவிடுகிறான். எனக்கு இனிமேல் பிரச்சனை இல்லை என்று கூறிவிடுகிறான். மனப்பிறழ்வு நிலையிலிருந்து வெளிவருகிறான்.

மனப்பிறழ்வு? ஆம். சும்மா இருக்கும் போது அவனது கைகள் தாமாகவே ஆட்டம் காண்கின்றன. ஏன்? கொலைசெய்ய வேண்டுமாம். ஏன்? தெரியவில்லை. போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், போதையூட்டும் பொருட்கள் கிடைக்காமல் போனால், என்னமாதிரியான ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்களோ, அதே போலாகிறான் அவன். இதற்கு சமுதாயத்தின் மீது கோபப்பார்வை வேறு. அந்த டாக்டரை ஏன் கொலை செய்கிறான் என்று எனக்கு புரியவேயில்லை. பீச்சில் உட்கார்ந்திருக்கும் ஜோடிகளை இவன் ஏன் கொல்ல வேண்டும்? சமுதாயப்பார்வையா? இதில் என்ன சமுதாயப்பார்வை வேண்டிக்கிடக்கிறது. தனக்கு ஜோடியாக ஆனந்தி கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கமும் மனப்புழுக்கத்தினாலும் தான் அவன் அவ்வாறான கொலைகளை செய்கிறான். இதில் சமுதாயப்பார்வையே இல்லையே.

ஆனந்தியின் மேல் இவன் வைத்திருக்கும் காதல் அழகானது என்பதை மறுப்பதற்கில்லை, அதற்காக பீச்சில் உட்கார்ந்திருக்கும் ஜோடிகளை, அவர்கள் அறியாமலே, பின்னால் கூலாக உட்கார்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யச்சொன்னார்களா? என்னங்கடா இது?! உனக்கு வெயிலாக இருந்தால் வீட்டுக்குள் சென்று முடங்கிக்கொள், உன்னையார் பீச்சுக்கு வரச்சொன்னார்கள்? சரி, முதலில் பட்டப்பகலில் கொளுத்தும் வெயிலில், நீ எதற்காக பீச்சுக்கு வந்தாய்? சுண்டல் வாங்கி சாப்பிடுவதற்கா? மதிய வெயிலில் பீச் சூடாக இருக்கும் என்று தெரியாதா என்ன? இங்கிலாந்திலிருந்து இப்போத்தான் இறங்கி வந்திருக்கியா என்ன? அவர்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறதப்பா, உட்கார்ந்திருக்கிறார்கள். உன்னை குடை பிடிக்கச் சொன்னார்களா? வடிவேலு பாஷையில் சொல்வதானால், சுத்த அயோக்கியத்தனமாவுல்ல இருக்கு?

அப்புறம் உட்லாண்ட்ஸ் ஷ¥ போட்டிருக்கிறவன துரத்தி துரத்தி ஷ¥ கேட்பது. செறுப்பையும் ஷ¥வையும் exchange செய்துப்போமா என்று கேட்பது. நான் பிஞ்ச செருப்ப போட்டிருக்கும் போது நீ costlyயான உட்லாண்ட்ஸ் ஷ¥ போடுவியா? நாங்க பாத்திட்டே இருப்பமா? என்று அவனை துவம்சம் செய்கிறார் (செய்வது போல தானே நினைத்துக்கொள்கிறார் என்பது போலவும் பிறகு reverseஇல் காட்டப்படுகிறது. இங்கே தான் இயக்குனர் நம்மை confuse செய்கிறார். ஒரு இடத்தில் இவன் எந்த கொலையும் செய்யவில்லையோ என்று நினைக்கத்தோன்றுகிறது.). கொலை செய்யப்பார்க்கிறார்.அவன் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறான். இது என்ன அயோக்கியத்தனம்? நீ ஏன் cigarate குடிக்கிற? வாத்தியார் வேலை செய்து குறைந்த சம்பளம் நான் வாங்குகிறேன்னு நினைக்கிறல்ல? அப்படீன்னா பீடி குடிக்கவேண்டியது தான? எத்தன பேர் பீடி குடிக்கிறவங்க இருக்காங்க? அவங்களைப் போல நீயும் பீடி குடிக்க வேண்டியது தான? எதுக்கு cigarate? உன் girl-friendக்கு ஏன் ஆயிரத்து நானூறு ரூபாய்க்கு சுடி வாங்கற? because you want the best. (atlease the best you can afford!) அதுதான் எல்லாரும் செய்யறது. செய்யறாங்க. அவங்க அவங்களால என்ன என்ன best வாங்க முடியுமோ அத வாங்கறாங்க. உனக்கென்ன வந்தது? அப்படீன்னா எல்லாரும் பிஞ்ச ரப்பர் செறுப்பு போடனும்ங்கறதுதான் உன் கொள்கையா? every one should be poor. அப்படீங்கற மனப்பான்மை. every one has to be rich அப்படீங்கற கொள்கைக்கு எதிர்மறையான negative வாதம். அவம் உட்லான்ட்ஸ் ஷ¥ போட்டிருக்கிறான், அதனால அவன தொரத்தறேன். அவன் கிட்டருந்து பிடுங்கறேங்கறதெல்லாம், டூ மச். என்ன மாதிரியான கொள்கை இது?

சரி. சாப்ட்வேர் மக்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்று இவருக்கு தெரியாதா என்ன? தெரியாமல் 1100 மார்க் வாங்கி என்ன பயன்? ஆனந்தி என்ற குறுகிய வட்டத்துக்குள் இருந்தால் அப்படித்தான் இருக்கும். ஆனந்திய விட்டுட்டு கொஞ்சம் வெளில வாங்க சார். உலகத்துல என்ன நடக்குதுன்னு கொஞ்சம் உத்து கவனிங்க சார். survival of the fittest பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இல்லீன்ன இப்படி படம் எடுத்து பொலம்ப வேண்டியதுதான். சாப்ட்வேர் இன்ஜினியருக்கு ரெண்டு லட்ச ரூபாய் சம்பளம் என்பதும், ஆபீஸ¤க்கு வா என்று சொன்னதும் வந்துட்டானே என்று அவன் நினைப்பது போல காட்டுவதும், சாப்ட்வேர் மக்களின் மீதான துவேஷம் மட்டுமே, வேறொன்றும் இல்லை. எத்தனை பேர் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள்? எவ்வளவு வரி கட்டுகிறார்கள்? 30% வரி என்பது இருக்கிறதுதானே?

விலைவாசி ஏறியதற்கு யார் காரணம்?இன்று வேளச்சேரியில் ஒரு டபுள் பெட்ரூம் ப்ளாட் என்ன வாடகை? 14ஆயிரம் ரூபாய் ஆனதற்கு சாப்ட்வேர் மக்களா காரணம்? வீட்டு ஓனர் என்னமோ இரண்டாயிரம் ரூபாய் வாடகை கேட்ட மாதிரியும், சாப்ட் வேர் மக்கள், நீங்க ஒன்னும் காமடி கீமடி பண்ணலையே, சும்மா இருங்கசார், இந்தாங்க பிடிங்க பத்தாயிரம்னு சொன்னமாதிரில்லா சொல்றீங்க? யாருக்கு உண்மையில் பேராசை? அவன் வாங்குறான், கொடுக்கட்டும் என்ற எண்ணம் தானே இருக்கு, எல்லார்கிட்டயும்.

ஆனால் படத்தின் கருவே இது இல்லை. தமிழ் இல்லை. தமிழ் படித்ததால் அவன் கஷ்டப்படவில்லை. அதிக சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் மக்களாலும் இவன் கஷ்டப்படவில்லை. இதற்கு திருக்குறள் வேறு “மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான்”. Just Ego. தமிழ் படித்த நம்ப ஹீரோவுக்கு இப்படி யெல்லாம் ஆனதற்கு யார் காரணம்? அந்த போலீஸ் அதிகாரி? நம்ப தமிழ் ஐயா ஏன் தம் அடிக்கனும்? தமிழ் படிச்சா தம் அடின்னு சொன்னாங்களா? மேலும் அந்த போலீஸ் அதிகாரி, அந்த இடத்தில் (சேச்சிக்கு பக்கத்தில்) வேறு யார் இருந்தாலும், அவ்வாறே கைது செய்திருப்பார் என்பதுதான் உண்மை. போலீஸ்அதிகாரி நம்ப ஹீரோவை அரஸ்ட் செய்யும் போது, இவர் தமிழ் படித்திருக்கிறார் என்பது அவருக்கு எப்படி தெரியும்? நெத்தில எழுதி ஒட்டிருக்கிறாரா என்ன? செய்யறதெல்லாம் செஞ்சிட்டு கடைசில செஞ்சத நியாயப்படுத்தறதுக்கு, என்ன என்னம்மோ தத்துபித்துன்னு பேசறது. இப்படி போறபோக்குல சாப்ட்வேர் மக்கள் மேலயும், (கிடச்ச எல்லார் மேலையும்!) கொஞ்சம் சேத்த வாரி தெளிச்சிட்டு போயிருக்கார் நம்ப டைரக்டர் ராம்.

“If you dare touch me here” என்ற வாக்கியத்தை கரெக்டாக நெஞ்சில் எழுதப்பட்ட டீசர்ட்டை அணிந்த பெண்ணின் மீது நம்ப ஹீரோ கை வைத்தது, என்னைப் பொறுத்தவரையில், not bad, but not good either. Its a challenge, between that girl and any other person she comes in contact with, either a boy or a girl. She is challenging. And he is doing. Thats it baby. அந்த டீசர்ட்டில் எழுதியிருக்கும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்னவென்று தெரியாமலா அந்த பெண் அதை வாங்கியிருப்பாள்? எங்கள் சுதந்திரமும்,மண்ணாங்கட்டியும் எங்கே போனது என்று கேட்கும் அரைவேக்காட்டு பெண்ணியப் பிரஜைகளுக்கு, enjoy your freedom without provoking others. எல்லாரும் முத்து மாதிரியே அமைதியா இருப்பாய்ங்களா என்ன? அனால் surprisingly இதற்கு எதிர்மறையான கருத்தையே என் நண்பர்கள் சொன்னார்கள். Just girls sympathy.

நல்ல வேலை ரமணா மாதிரி அதிக சம்பளம் வாங்குற முதல் பத்து பேரை கடத்தி வந்து, அதில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நபரை கொலை செய்வது போல காட்டவில்லை. அப்படி படம் வந்தாலும் வரும்.

மேலும் பாரதியின் அன்னை அன்னை பாடலை ஜீவா பாடுவது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்லலாமே தவிர, அந்த call centre பையனிடம் பேசுவதெல்லான், ரொம்ப டூ மச். நாற்பதாயிரம் ரூபாய்க்கு உன் பெயரை மாத்திக்கிட்டியே, அப்படீன்னா நிறைய காசு கொடுத்தா, அப்பா அம்மாவை மாத்திக்குவியான்னு கேக்கறதெல்லாம் திமிர் தனம். உனக்கு அவன் ஏதோ கொஞ்சம் காசு சம்பாதிச்சு, குடும்பத்த காப்பாத்தறது பிடிக்கலையா? உன்ன மாதிரி நடுரோட்ல கல்ல தூக்கிட்டு ஓடினா, வாடா மாப்ள வா, ன்னு சொல்லி, அன்னை அன்னை பாட்ட மொத்தமா உக்காந்து பாடி பஜன பண்ணுவீங்களா என்ன?

உண்மையில கால் சென்ட்டர்ல வேலை பாக்குற எத்தன மக்கள் car வச்சிட்டு இருக்காங்கப்பா? நிறைய நபர்களின் சம்பளம் வெறும் ஆறாயிரம் ரூபாய் தான் என்பது நம்ப டைரக்டரின் கவனத்தில் விழவில்லை போலும். யாரவது சொல்லுங்கப்பா அவர்கிட்ட.

மொத்தத்தில் படம் தெளிவற்ற அசட்டுத்தனமான complaint. Except that childhood nostalgia மற்றும் தமிழ் ஐயா. I really loved him. க்ளைமாக்ஸில், குகைக்குள் இருந்து ஹீரோவும் ஹீரோயினும், கூடவே அவர்கள் சிறு பிள்ளையாக இருந்த பொழுது, அவர்களுடன் விளையாடிய அந்த நாயும் வெளியேறுவது, அற்புதமான அழகான கவிதை.

நான் அஜீத்துக்கு எழுதிய கதையில், சாப்ட்வேர் மக்களுக்கும், மற்ற இன்ன பிற வேலை செய்பவர்களுக்கும் இடையே இருக்கும் economical gap பற்றித்தான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அந்த economic gapஐ சரிப்படுத்த, கொலை solution அல்ல. அன்றைக்கும் (முன்பு) central govtஇல் வேலையில் இருப்பவர்கள் மற்ற எல்லாரையும் விட அதிக சம்பளம் வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். பாங்க் ஆபீஸர் வீட்டு பையன்கள் , நாம் summer leaveஇல், தெருவில் திருடன் போலீஸ் விளையாட, அவர்கள் இந்தியா முழுதும் ஓசில டூர் போகத்தான் செய்தார்கள். மற்றவர்கள் அவர்களை கொலையா செய்து கொண்டிந்தார்கள்? economic gap is always there. இப்போ கொஞ்சம் அதிகமா இருக்கு.

இவ்ளோ சம்பளம் வாங்கும் இவ்ளோ மக்கள் 30% வரி கட்டுகிறார்களே, அதெல்லாம் எங்கேயப்பா போகிறது? அதை கேட்பதை விட்டுவிட்டு, உட்லாண்ட்ஸ் ஷ¥வை பிடுங்க ஓடறது, சுத்த சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்கு.

படம். புத்தகம். நியூஸ். கா·பி.

(ஜனாதிபதி பதவி, ப்ரதீபாபாட்டீல், Salman Rushdie, பத்திரிக்கை சுதந்திரம், Investigative Journalism,Paparazzi )

Salman Rushdieக்கு KnightHood கொடுத்ததை எதிர்த்து, நடந்த பேரணிகள் (இந்தியாவில், கேரளாவில் கூட!) என்னை வியப்பில் ஆழ்த்தின. அவரை எதிர்த்து அன்று பேரணியில் பங்கு பெற்றவர்கள், அவருடைய நாவல்களை வாசித்திருப்பார்களா என்ற எண்ணம் என்னுள் எழுந்ததை, இங்கே நான் சொல்லியாகவேண்டும். வாசித்திருப்பார்களா? என்ன நாவல் வாசித்திருப்பார்கள்? Satanic Versus? Shame? Fury? Midnight’s Children? The Ground Beneath Her Feet? கடைசில இன்னொரு சாய்ஸ் All Of The Above? கண்டிப்பாக படித்திருக்கமாட்டார்கள் என்றே, நான் நினைக்கிறேன். அப்படியிருக்க ஏன் இத்தனை பேர் பேரணியில் பங்கு பெற்றார்கள்? யாரோ சொல்கிறார்கள் -சிறிதும் யோசிக்காமல், சற்றும் ஆராயாமல் – நாம் அவர்களின் கூத்துக்கு, like a puppet dancing to the strings (of politicians, religious gurus and cinema celebs), சந்தோஷமாக ஆடிக்கொண்டிருக்கிறோம்.

நான், இதுவரை சல்மான் ருஷ்டி எழுதிய ஒரே ஒரு நாவலைத்தான் படித்திருக்கிறேன், அது – The Ground Beneath Her Feet. அது ஒரு பிரமாதமான நாவல். I just loved the way he narrated. அவரைப் போல யாராலும் சீரியசாக காமெடி (அல்லது கேலி!) செய்ய முடியாது. சில விசயங்களில் அவர் என்னைப் போல, பட்டப்பெயர் வைபப்தில்!. கதையில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு முதலில் பெயர் வைப்பார், தொடர்ந்து அந்த கதாப்பாத்திரத்துக்கு ஒரு பட்டப்பெயரும் வைத்துவிடுவார். பிறகு அந்தக்கதாப்பாத்திரத்துக்கு நாவல் தோறும் அதே பட்டப்பெயர் தான். நமக்கு, அந்த கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயரே மறந்துபோயிவிடும். Like Reverend Mother.

போனவாரம் தான் The Midnight’s Children படிக்க ஆரம்பித்தேன். என் deskஇல் இந்தப்புத்தகத்தைப் பார்த்த என்னுடைய boss, இதையா படிக்கிறாய்? 25 பக்கங்களைக்கூட உன்னால் படிக்க முடியாது. You will shoot that guy என்றார். நான் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு Salman Rushdieஐப் பிடிக்குமே என்று மட்டும் தான் சொன்னேன்.

ஆனால் அவர் சொன்னது உண்மை என்பதை மறுக்கமுடியாது. 25பக்கங்கள் என்ன, என்னால் 15 பக்கங்களைக்கூட தாண்ட முடியவில்லை. I just cant stand that “perforated sheet”. what a stupid and cruel imagination? எப்படி இப்படி யோசிக்கறார்? Captivity படத்தில் அந்த juice (அதாங்க கண்,காது,மூக்கு மற்றும் இத்தியாதிகள்!) கூட இப்படித்தான், எப்படி இவர்களால் இப்படி யோசிக்கமுடிகிறது? இது ஒருவகையான torture என்றால், perforated sheet வேறு வகையான torture. அது என்ன Perforated Sheet?

Perforated Sheet என்றால் ஓட்டை இருக்கிற துணி என்று அர்த்தம். கதையின் ஹீரோவின் தாத்தா காஷ்மீரில் ஒரு டாக்டர். அவர் அப்பொழுதுதான் தனது practiceஐ அந்த ஊரில் ஆரம்பித்திருக்கிறார். அங்கிருக்கும் ஒரு மிகப்பெரிய செல்வந்தரின் மகளுக்கு நோய் கண்டவுடன், அந்த செல்வந்தர் தனது ஆஸ்தான மருத்துவர் வராததால் (அல்லது வேண்டுமென்றே!), ஹீரோவின் தாத்தாவை அழைக்கிறார். செல்வந்தரின் மகளுக்கு (Reverend Mother!) இரண்டு மூன்று செக்யூரிட்டிகள் (பெண்கள்!) இருக்கிறார்கள். டாக்டர் அந்த பெண்ணின் அறைக்குள் நுழைகிறார். அந்த பெண் ஒரு துணிக்கு அப்பால் இருக்கிறார். துணியில் ஒரு ஓட்டை இருக்கிறது. அதிர்ந்த டாக்டர், நோயாளி இப்படி துணிக்கு பின்னால் இருந்தால், நான் எப்படி பரிசோதிப்பது என்கிறார். அதற்கு அந்த தந்தை சொல்கிறார், அதற்கு தான் ஓட்டை வைத்திருக்கிறோமே! அவளுக்கு எந்த எந்த பாகங்களில் பிரச்சனை இருக்கிறதோ, அந்த அந்த பாகங்களை இந்த ஓட்டையில் வைப்பாள், நீங்கள் அந்தந்த பாகங்களை பரிசோதித்துப் பார்த்து விட்டு, மருந்து கொடுக்கலாம்! வஞ்சனையில்லாம் அந்த பெண்ணுக்கு மாற்றி மாற்றி எல்லா பாகங்களிலும் நோய் வருகிறது. டாக்டரும் பரிசோதிக்கிறார். டாக்டர்கள் பெண்களைத் தொட்டு பரிசோதிப்பது, அவர்களது தொழில். ஆனால் அந்த அந்த பாகங்களை ஓட்டையில் வைத்துப் பரிசோதிப்பது தான், Cruel Imagination!

ஆனால் சில வாக்கியங்கள் எனக்கு பிடிக்கவே செய்தது. Reverend Motherக்கும் டாக்டருக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் (ஒரு கிரிமினல் கவிஞரை வீட்டில் ஒளித்துவைத்ததற்கு), டாக்டர் “வாயை மூடு!” என்று சொல்லிவிடுகிறார். அன்றிலிருந்து, அந்த Reverend Mother, யாருடனும் பேசுவதில்லை. ஏற்கனவே கணத்துப்போயிருந்த அவரது உடல், இப்பொழுது யாருடனும் பேசாமல் இருக்கும் பொழுது, மேலும் மேலும் வேகமாக இன்னும் அதிகமாக, கணமாகிக்கொண்டே போனது. அவர் பேசாமல் தன்னுள்ளே அடைத்துவைத்துருக்கும் வார்த்தைகள், அவரை ஊதி பெரிதாக்கின.

Mumtaz noticed with concern that her mother was swelling, month by month. The unspoken words inside her were blowing her up

***

Midnight’s Childrenஐத் தூக்கிப்போட்டுவிட்டு (ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகள் போதாதுன்னு,இதுல இது வேறையா!), Orhan Pamuk எழுதிய Istanbul Momories of a city படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் படித்தப்பிறகு தான் தெரிந்தது அது ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய நாவல் போன்றது அல்ல என்பது. ரசித்து படிக்க வேண்டிய ஒன்று. எனக்கு Orhan Pamukக்கின் அந்த எளிமையான நடை பிடித்திருக்கிறது, அவ்வப்போது பளீரென மின்னல் போல வெளிப்படும் சிறு சிறு நகைச்சுவையும். இப்போதைக்கு மூன்று chapters மட்டுமே படித்திருக்கிறேன்.

***

பிறகு என்ன படிப்பது என்று தெரியாமல், 1001 books you must readஐப் பார்த்து, Philip Roth எழுதிய, The Plot Against America படிக்க ஆரம்பித்தேன். என்னால் படிக்கமுடியவில்லை. இரண்டு chaptersலையே நாக்கு வெளியே தள்ளிருச்சு. அவ்ளோ பெரிய பெரிய வாக்கியங்கள். ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு மூன்று முறை படிக்கவேண்டியிருந்தது. So, அதையும் கடாசிவிட்டு, வேறு என்ன படிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். (அப்பொழுதுதான், பிரச்சனை நாவல்களில் அல்ல, என்னுடைய மூட் தான் சரியில்லை என்பது தெரிந்தது!In Cold Blood படித்துமுடித்தபிறகு கடந்த மூன்று வாரங்களாக ஒரு சில பக்கங்களை மட்டுமே படித்திருக்கிறேன்.) அப்பொழுதுதான் Libraryஇல் The Magic Of Thinking Big கண்ணில் பட்டது. கொஞ்ச காலத்துக்கு நாவல்களை தள்ளிவைத்துவிட்டு, self-help படிக்கலாம் என்றிருக்கிறேன். Lets see how it helps!

***

என்னுடைய நண்பர் ஒருவர் தான் எனக்கு இந்த புத்தகத்தைப் பரிந்துரை செய்தார். நானும் அவரும் மிக நெருங்கிய தோழர்கள் (Comrades!) ஆகிவிட்டோம், மிக குறுகிய காலத்தில். எனக்கும் அவருக்கு நிறைய விசயங்கள் sync ஆகின்றன. என்னைப் போலவே அவருக்கும் மூன்று விசயங்கள் ரொம்பப்பிடிக்கும், புத்தகம். மூவீஸ். கா·பி.
ஒரு நாள் Bordersக்கு வெளியே அமர்ந்து, CoffeeBean கா·பியை (கா·பியை விட்டுவிடுகிறேன் என்று நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் ஒரு ·ப்ரண்டிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். இந்தக் பாழாய்ப்போன கா·பியை ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் குற்ற உணர்ச்சி மேலிடுகிறது.கண்டிப்பாக மிக விரைவில் விட்டுவிடுவேன்.) ரசித்துக்குடித்துக்கொண்டிருக்கும் போது, ப்ரதீபா பாட்டில் பற்றி பேச்சு வந்தது. அவர் இப்போ ஜனாதிபதி. ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் உண்மையிலே, மனதைத் தொட்டு சொல்லுங்கள், இந்தியாவுக்கு ஜனாதிபதி பதவி என்ற ஒன்று தேவைதானா? அவர்களுக்கு இவ்ளோ பெரிய அரண்மனையும், இவ்ளோ வேலையாட்களும் தேவைதானா? இதற்கும் ப்ரிட்டிஷ் ராஜ வம்சத்திற்கும் என்ன வித்தியாசம்? சரி அது ஒரு கவுரமான பதவி என்று வைத்துக்கொண்டால், அதற்கு அரசியல்வாதிகள் எதற்கு? போன்ற கணக்கிலடங்கா கேள்விகள் தீர்ந்து போன எங்கள் கா·பிக்கோப்பையை நிரப்பிக்கொண்டிருந்தன. அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்னர் அவரைப்பற்றி தினமும் ஒரு செய்தி வெளியிட்டு வந்த பத்திரிக்கைகள், இப்பொழுது ஏன் அவரைப் பற்றி ஒரு செய்தியும் வெளியிடுவதில்லை? அவர்கள் எங்கே போனார்கள்? அப்படியானால், அவர்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் பொய்யா? இதனால் தான் பத்திரிக்கை மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் எரிச்சல் எரிச்சலாக வருகிறது. நீங்களும் உங்கள் கருத்துச்சுதந்திரமும், பிறகு மிகப்பெரிய மண்ணாங்கட்டியும். எல்லாம் சந்தர்ப்பவாதம். (கொஞ்சம் யோசித்தால் சமீபத்தில் நடந்த எத்தனை பயங்கரங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன அல்லது மறக்கடிக்கப்பட்டிருக்கின்றன என்று விளங்கும்.) இப்போ சமீபத்தில் ஆந்திரா-முடிகொண்டாவில் நடந்த துப்பாக்கிசூட்டை இன்னும் எத்தனை நாட்கள் பத்திரிக்கைகள் ஞாபகத்தில் வைத்து follow-up செய்கின்றன என்று பார்ப்போம்.

***

பத்திரிக்கை சுதந்திரம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்த அன்று தான், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் அதன் வலிமையையும் (the power of investigative journalism) கச்சிதமாக உணர்த்தும் All the presidents men என்றொரு படத்தைப் பார்த்தேன். அமெரிக்க ஜனாதிபதி Nixonஐ பதவி விலக வைத்த இரு பத்திரிக்கை நிருபர்களைப் (Bob Woodward மற்றும்
Carl Bernstein) பற்றிய படம் இது. (கடைசி வரைக்கும் நிக்சன் தான் ஊழல் –Watergate Scandal– செய்ததாக ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பை ஏற்றுக்கொண்டதால் ஊழல் செய்தவராக கருதப்படுகிறார்!)

இந்த investigationஐ இந்த இரண்டு நிருபர்கள் தான் செய்திருந்தனர் என்ற பொழுதிலும், இதற்கு பெரிதும் துணையாகவும், ஊக்கமாகவும், தூண்டுகோலகாவும் இருந்தது, The Washington Postஇன் Executive Editor, BenBradlee தான். நாடு முழுவதும் இந்த இரு ரிப்போர்ட்டர்களை நம்பாமல் (அல்லது நம்ப விரும்பாமல்!) இருந்த பொழுது, WhiteHouse மன்னிப்பு கேட்க்காவிட்டால் வழக்கு தொடர்வோம் என்று எச்சரிக்கை செய்தபொழுதும், “I am going to stick with the boys!” என்று சொல்லி உண்மையை வெளிக்கொண்டுவந்தவர்.

இந்த investigationஐ முடித்தவுடன் Bob Woodward மற்றும் Carl Bernstein, நடந்த சம்பவங்களைத் தொகுத்து All the presidents men என்ற புத்தகமாக வெளியிட்டனர். புலிட்சர் பரிசு (1973) பெற்ற இந்த Non-Fiction புத்தகத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டது தான் All the presidents men என்ற திரைப்படம். An excellent movie. எனக்கு படங்களைப் பார்த்து முடித்தவுடன் அந்தப்படத்தில் வரும் ஹீரோ போல இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பேன். For Example, காக்க காக்க பார்த்த பிறகு அசிஸ்டண்ட் கமிஷ்னர் (அதுவும் பாருங்கள், கமிஷ்னர் வேண்டாமாம். அசிஸ்டண்ட் கமிஷ்னர் தான் வேண்டுமாம்!) ஆக வேண்டும் என்று சீரியஸாக யோசித்தேன். படம் பார்த்துவிட்டு வந்து மறு நாள் காலையில் எழுந்து தன்டால் அடித்தது (இரண்டு நாட்களுக்கு மட்டுமே!) நினைவிருக்கிறது. என் நண்பர் தனக்கும் இதே போல ஒரு wierd behaviour இருப்பதை ஒத்துக்கொண்டபிறகு தான் எனக்கு ஓகே கூல் (நிறைய பேர் இப்படித்தான் இருக்காய்ங்க!) என்று தோன்றியது.

இந்தப்படத்தைப் பார்த்த பிறகு பத்திரிக்கையாளராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. Investigative Journalism. தமிழ்நாட்டில் நிறைய விசயத்தை investigate செய்யலாம். Like த்ரிஷாவை வைத்து விஜயும் அஜீத்தும் கில்லி ஆடுகிறார்களா? அதைத்தானே இங்கு investivative journalism செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்? இதுவா Investigative Journalism? இதை Paparazzi என்றல்லவா சொல்வார்கள்.

***

காந்தம்-9

முன்னும் பின்னும்.
4

இரவு வெக்கையாக இருந்தது. காற்று கொஞ்சம் கூட இல்லை. அந்த மொட்டைமலையில் இருந்த ஒற்றை ஆலமரம் என்ன செய்வதென்று தெரியாமல், தனக்கு கீழே குழுமியிருந்த சிறுவர்களை எரிச்சலோடு பார்த்தது. இன்றைக்கும் தூக்கம் போச்சா என்று அது நினைத்துக்கொண்டது போல.சிறுவர்கள் பல வயதில் இருந்தனர். ஒரு சில பெரிய பையன்கள் கூட அந்த கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் எல்லோரும் எதையோ எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தனர். அவர்கள் குழுமியிருந்த இடத்தில் நடுநாயகமாக சுள்ளிகளால் தீ மூட்டப்பட்டிருந்தது. அந்த தீ மிக மெதுவாக எரிந்துகொண்டிருந்தது. சிலர் கொண்டுவந்திருந்த சாக்கு பைகளை விரித்து படுத்து வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எண்ணுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தனர். அவ்வாறு எண்ணிக்கொண்டிருந்த சிலர் பாதியிலே எண்களை மறந்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் நேற்று பார்த்த நட்சத்திரம் இன்றும் அதே இடத்தில் இருக்கிறதா என்று தேடத்துடங்கினர். கூட்டத்திலிருந்து காளி எழுந்தான்.

படுத்துக்கொண்டிருந்தவர்கள் எழுந்து உட்கார்ந்து கொண்டார்கள். எல்லோரும் காளியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். “என்ன படம்டா காளி? மகிழன் நடிச்ச படமா?” “இல்லை” “பின்ன?” “கணேசனா?” “ம்ம்” “பொறு பொறு நாஞ்சொல்றேன்” “ம்ம்” “மனோகரா.சரியா?” “இல்ல” “பின்ன?” “நடிக்கறத பார். பிறகு சொல்லு”

காளி குரலை கணைத்துக்கொண்டான். ஏதோ சண்டைக்கு தயாராக நிற்பவன் போல விரைத்து நின்றான். அவன் முகம் பரவசம் அடைந்தது போல இருந்தது.

“சிங்கத்திருநாடே நீ சிலந்திக்காடாய் மாறியது எப்போது?” “பராசக்தி டா. எனக்கு தெரியும். எனக்கு தெரியும்.” என்று கத்தினான் ஒருவன். கொஞ்சம் வளர்ந்திருந்த சிறுவர்கள் அவன் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தனர், “சும்மா பாருடா அவசரக்குடுக்க” அவன் தலையைத் தடவிக்கொண்டே உட்கார்ந்தான். அவன் குட்டியவனை இரண்டுமுறை திரும்பி முறைத்தான்.


“சிங்கத்திருநாடே நீ சிலந்திக்காடாய் மாறியது எப்போது?
வந்தாரை வாழ வைக்கும் வளமிகு தமிழகமே..நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாள்களாக?
வீரப்பெண்களின் ஏடுகளை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற என்னருமைப் பொன்னாடே நீ வீதிகளிலே விபச்சாரிகளைத் திரியவிட்டு உன் விழிகளை மூடிக்கொண்டது ஏன்? ஏன்?
வானத்தை முட்டும் மாளிகைகள்! மானத்தை இழந்த மனிதர்கள்! உயர்ந்த கோபுரங்கள்! தாழ்ந்த உள்ளங்கள்!”

காளி கைகளை அசைத்து வீராவேசமாக பேச கூட்டம் ஆழ்ந்து ரசித்துக்கொண்டிருந்தது. சில சிறுவர்கள் கைத்தட்டிக்கொண்டனர்.

“நான் கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக.
பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல்வேஷமாகி விட்டதை கண்டிப்பதற்காக.”

காளி தலையை தாழ்த்தி எறிந்து கொண்டிருந்த நெருப்பையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அனைவரும் அமைதியாய் இருந்தனர்.

“பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பகதி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள்..ஓடினாள்..வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்”

கைதட்டல் காதைப்பிளந்தது. அருகிலிருந்த மரத்திலிருந்த சிறுசிறு பறவைகள் முழித்துக்கொண்டன. இந்த வசனத்தை காளி நூறாவது முறையாக சொல்வதைக் கேட்ட ஆலமரம் தலையைச் சிலுப்பி தன் கொந்தளிப்பைக் காட்டியது. காற்று மெதுவாக வீசியது. சுள்ளிகள் தீர்ந்துபோய் விட்டமையால் நெருப்பு அணைந்து கரிய புகை மட்டும் மேலெழும்பிக்கொண்டிருந்தது.

தூரத்தில் இருட்டில் முடங்கிக்கிடந்த ஒரு தேசாந்திரி கண்கொட்டாமல் காளியையே பார்த்துக்கொண்டிருந்தார்.

***

ஆல் இந்தியா ரேடியோ. அகில இந்திய வானொலி நிலையம். செய்தி அறிக்கை தொடர்கிறது. காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட திருமதி.இந்திராகாந்தி, இன்று, இந்திரா காங்கிரஸ் என்ற புதிய தேசியக்கட்சியைத் தொடங்கினார். விவசாயத்துறை அமைச்சராக பதவிவகித்த திரு.ஜக்ஜீவன் ராம் இந்திராக காங்கிரஸ¤க்கு தலைவராக நியமிக்கப்பட்டார். நாளை மறுநாள் நடக்கவிருக்கும்..

“ம்ம்..அந்தம்மா தெகிரியமான பொம்பளையப்பா..யாரும் ஒன்னும் —-முடியாது” தனது வேட்டியின் மடிப்பில் ஒளிந்துகொண்டிருந்த பொடிட்டப்பாவை எடுத்து டப் டப் என்று அதன் தலையில் தட்டினார், வேலுச்சாமி. வேலுச்சாமியின் கைகள் மிகவும் மெலிந்திருந்தன. புறங்கையின் நரம்புகள் மிகத்தடிமனான சரடு போல ஓடிக்கொண்டிருந்தன. கைகளில் அடர்த்தியான சுருள்சுருளாக வெள்ளைமுடிகள். கண்கள் மிகவும் சிறுத்து ஒருவிதமான தளர்வோடு இருந்தன. சட்டையணியாத மார்பில் வெள்ளையும் கருப்புமாக முடிகள் மண்டிக்கிடந்தன. தலையில் முடி அடர்த்தியாக, சிறிதளவு கூட எண்ணெய் பார்க்காமல், சிக்காக இருந்தது. குடிக்கத்தண்ணீருக்கே பத்துமைல் தூரம் நடக்கும் போது, தலைக்கு எண்ணெய் முக்கியமா என்ன?

“யேவ், யாரது போறவ? அம்முத்தாயா?” “ம்ம்..ஆமாங் மாமோய். என்ன மாமனுக்கு இப்போத்தான் பொழுது விடிஞ்சுச்சாக்கும்?” “ஏபுள்ள. ….கழுவ தண்ணியில்லீன்னாலும் எகத்தாளத்துக்கு ஒன்னும் கொரச்சல் இருக்காது..எங்க போறவ விடுக்கு விடுக்குன்னு?” “ம்ம்ம்..கலெக்டராபீஸ¤க்கு கையெழுத்துப்போட போறேன் மாமா..வாறியளா?” “அடி……. எங்கடி போறவன்னா எகத்தாளம் கேக்குதா?” “மாமரத்துப்பட்டியில கல்லொடைக்க ஆள் தேடுறாகளாம் மாமோய்..அதான் போறேன்..பிள்ளைங்க வயிறு நிறையனும்ல..இன்னியும் மழைய நம்பி உக்காந்திருக்கமுடியாது மாமோய்..” “ம்ம்..மானம்பாத்து வாயப்பொளந்து கெடக்குற காடுக என்னக்கி மழதண்ணியப்பாக்கப் போதுகளோ தெரியல..போதாயி..போ..பொழப்பபாக்கனும்ல..அதுயாரு கூட ராக்கம்மாவா?” “ஆமா மாமோய்..அவுகளும் கல்லொடைக்கத்தாம் போயிருக்காக..என்னிய வரப்பெடாதுன்னுதான் சொன்னாக..ஹ்ம்..போனா கத்துவாக..நான் போறேன் மாமா” “அதுயாரு காளியா?” “ஆமா மாமா..டேய் காளி தாத்தா கூப்படறாக பாரு போய் என்னான்டு கேளு” “சரி மாமா நாங்க வாறோம். செத்த இந்த பயல பாத்துக்கோங்க..வெயில அலையவிடாதீக..”

காளி வேண்டாவெறுப்பாக நடந்து வந்து, வேலுச்சாமியின் அருகில் நின்றான். ஒன்றும் பேசாமல், என்ன என்பது போல பார்த்தான்.வேலுச்சாமி ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் பார்த்தவர், “மூக்கையன் கடையில போயி கொஞ்சம் பொடி நான் கேட்டேன்னு வாங்கியா..” என்றார். காளி, வேலுச்சாமியில் கையில் இருந்த காலி பொடிட்டப்பாவை வாங்கிக்கொண்டு ஓட்டம்பிடித்தான்.

***

“ம்ம்..மூக்கையன் கடையில இல்ல..அந்த அக்காதான் இருந்தாங்க..இந்தாங்க..” வேலுச்சாமி பொடி டப்பாவை வாங்கிக்கொண்டு, மீண்டும் இரண்டு மூன்றுமுறை அதன் தலையில் தட்டினார், பிறகு நிதானமாக, மூடியைத் திறந்து, பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து லாவகமாக அதிலிருந்து பொடியை இரண்டு விரல்களாலும் எடுத்தார், இரண்டு முறை கையை உதறினார். பிறகு இன்னொரு கையால், பொடி அடைத்து பொடி அடைத்தே பெரிதாகிப்போயிருந்த மூக்கின் வலது புறத்தை அடைத்துக்கொண்டு, இடது புறத்தில் பொடியைத் திணித்து, இரண்டு மூன்று முறை உறிஞ்சினார். காளி அந்த உறிஞ்சலில் தான் ஈர்க்கப்படுவதைப் போல உணர்ந்தான். எதற்கும் பக்கதிலிருந்த தூணைப் பிடித்துக்கொள்வது நல்லது என்று தோன்றியது அவனுக்கு. பிறகு இடதுபுறத்தை அடைத்துக்கொண்டு, வலது புறத்தில், அதே போல, மீதமிருந்த பொடியைத் திணித்து, உறிஞ்சிக்கொண்டார். கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த, காளியை பார்த்து, “என்னடா பாக்குற?” என்றார் சிரித்துக்கொண்டே, இப்பொழுது அவரது குரல் கணமாக இருந்தது போல தோன்றியது காளிக்கு. மீண்டும் வலது புறத்தையும் இடது புறத்தையும் ஒரு தடவை விரல்களால் அடைத்து, விடுவித்தார். பிறகு காளியிடம், “எங்க கைய காட்டு” என்றார். காளி முடியாது என்று மறுத்து ஓடப்பார்த்தான். வேலுச்சாமி லாவகமாக அவனைப் பிடித்து நிறுத்தினார், வலது கையை மடக்கி, அவனை இறுக்கமாக, ஓட விடாமல், பிடித்துக்கொண்டு, நன்றாக இறுக்கமாக மூடியிருந்த இடது கையை விடுவித்தார். உள்ளே கொஞ்சம் மூக்குப் பொடி இருந்தது. அதை தட்டிவிட்டார் வேலுச்சாமி. மூக்குப்பொடி மண்ணோடு கலந்தது. இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த பொடியை தனது அழுக்கான வேட்டியில் துடைத்துக்கொண்டார். “இந்த வயசில உனக்கு பொடி கேக்குதா?” “இல்ல தாத்தா, சும்மா எப்படி இருக்குன்னு..” “…பயலே..அதுக்கெல்லாம் இன்னும் வயசிருக்குடா..இப்படி உக்கார்”

காளி அங்கிருந்த திண்டில் ஏறி உட்கார்ந்து கொண்டான். சூரியன் உச்சத்திற்கு வந்திருந்தது. வெயில் பளபளத்தது. வெக்கை அந்த மடத்தை வெகுவாக ஆக்கிரமித்திருந்தது. ஆங்காங்கே காக்கைகள் கத்திக்கொண்டிருந்தன. எங்கும் தண்ணீர் வற்றிவிட்ட இந்த ஊரில் ஏன் காக்கைகள் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்று காளிக்கு புரியவேயில்லை. அந்த சமயம் பார்த்து “நச்” என்று ஒரு தும்மல் வந்தது அவனுக்கு. தும்மல், அந்த மடத்தின் தூண்களில் மோதி, விட்டத்தை அடைந்து, சுவற்றில் அறைந்து, உள்ளே சாந்தமாக, தூசியும் நூலாம்படையும் மண்டிக்கிடந்தும், எழுந்து ஓடாமல், இன்னும் அப்படியே எனக்கென்ன வந்தது என்று, உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரின் துதிக்கையில் பட்டு, வெளியே விழுந்தடித்துக்கொண்டு ஓடியது. தும்மலின் சத்தத்தால், சிறிதும் பாதிக்கப்படாமல், அங்கே உறங்கிக்கொண்டிருந்தனர், சில கடின உழைப்பாளிகள். வெகு சிலர், திரும்பிப்படுத்து, சிறு சலசலப்பை ஏற்படுத்தினர். மற்றபடி எப்பழுதும் போலவே அன்றும், அந்த ஊர் மிகவும் அமைதியாகவே இருந்தது.

காளி சிறுது தூரத்தில், நிலத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஒற்றை மாட்டுவண்டியயே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். மாடு எங்கே சென்றிருக்கும்? அருகில் தேடினான். எங்கும் காணவில்லை. “நல்லா வசனம் பேசுவியாமே?” “ம்ம்..என்ன தாத்தா?” “நல்லா, சத்தமா, கணேசன் மாதிரி அழுத்தமா வசனம் பேசுவியாமே?” “ம்ம்ம்..பேசுவேன்..ஏன் தாத்தா,அந்த ஊர்ல, நாம தண்ணியெடுக்கப்போவமில்ல அந்த ஊர்ல மட்டும் எப்படி தண்ணியிருக்கு?” “ம்ம்” வேலுச்சாமி மடியிலிருந்து பீடி ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டார். வெளியேறிய பீடிப்புகையை அழுத்தமாக சுவாசித்தான் காளி. ஓசி பீடிப்புகை. “எங்க, மனோகரா கணேசன் மாதிரி பேசு பாப்போம்” “ஏன் நாமா நெதமும் அம்புட்டு தூரம் நடக்கனும்? அங்க இருக்குற தண்ணிய வாக்கா போட்டு இங்க கொண்டுவர முடியாதா?” வேலுச்சாமி மெலிதாக இருமினார். வெளியேறிய பீடிப்புகையை, மீண்டும் அழுத்தமாக உறிஞ்சிக்கொண்டான் காளி. “ஏந்தாத்தா முடியாதா?” வேலுச்சாமி கைகளால் காளியின் தலையை வருடினார். “ரொம்ப செலவாகும்டா..ரொம்ப செலவாகும்” “உங்களுக்கு ஒரு கால் எப்படி ஒடஞ்சது? சண்டையிலயா?” “ம்ம்” “வெட்டிட்டாங்களா?” “ம்ம்” “ஐயோ..எப்படி? கத்திய வெச்சா?” “ம்ம்” “எந்த சண்டையில?” “ம்ம்” “ம்ம் எந்த சண்டையில தாத்தா?” “ம்ம்” “துப்பாக்கி வெச்சிருந்திருப்பீங்கல்ல?” “ம்ம்” “பின்ன எப்படி அவங்கள் வெட்டவிட்டீங்க? துப்பாக்கிய வெச்சு சுட்டிருக்கலாம்ல?” “ம்ம்” வேலுச்சாமி மீண்டும் இருமுறை இருமினார். ஒன்றும் பேசாமல் கீழே கிடந்த சற்றே பெரிய கணமான கல்லையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தார். “குமார் சொல்றான்..ம்ம்..குமார் சொல்றான்.. உங்க வீட்ல பட்டாளத்துல கொடுத்த துப்பாக்கி வெச்சிருக்கீங்களாம்” “ம்ம்ம்” “நெஜமா வெச்சிருக்கீங்களா?” “ம்ம்” மீண்டும் இருமினார். நெஞ்சை நீவி விட்டுக்கொண்டார். “எனக்கு காட்டுவீங்களா?” “ம்ம்” “போலாமா? இப்பவே?” இறுமினார். “போலாமா?” அமைதி. “தாத்தா கொஞ்ச நேரம் இங்கன உக்காந்திட்டிருக்கேன். நீ போய் வெளையாடு..போ..அப்புறமா போலாம்” “எனக்கு துப்பாக்கி அப்புறமா காட்டுவீங்களா?” “ம்ம்” “சத்தியமா?” “ம்ம்”

காளி எழுந்து, இடது காலை முன் வைத்து, பிறகு வலது காலை மெதுவாக எடுத்துவைத்து, நாட்டியமாடியபடி அழகாக ஓடுவதையே, வேலுச்சாமி பார்த்துக்கொண்டிருந்தார். மிகவும் சோர்வாக இருந்த அவரது கண்கள், மிகமெதுவாக, மிகமிக மெதுவாக, மீதமிருந்த தன் பாதி வலதுகாலைப் பார்த்தன. தளர்வாக அருகிலிருந்த தூணில் சாய்ந்துகொண்டார். பீடியின் நெருப்பு வெறுமனே எறிந்துகொண்டிருந்தது, அங்கே படர்ந்திருந்த வெயிலைப்போல. வெறும் வெயிலைப் போல.

தூரத்தில், பாறையைத் தகர்க்கும் வெடியின் ஒலி நான்கு திசைகளிலும் பரவி, மிகச் சன்னமாக ஒலித்து அடங்கியது. எங்கோ பெயர் தெரியாத ஒரு பறவை புழுக்கம் தாங்க மாட்டாமல் மெதுவாக ஏதோ சொல்லியது. வேலுச்சாமியின் கண்கள் மூடிக்கொண்டன.

***

காளி யாருமில்லாத ஒரு சந்தில் நுழைந்தான். கூடவே குமார். பூட்டியிருந்த அந்த வீட்டின் வாசலில் அவனும் குமாரும் உட்கார்ந்துகொண்டனர். காளி டவுசர் பையில் கைவிட்டு, ஒரு சிறிய மடிக்கப்பட்டிருந்த தாளை எடுத்தான். உள்ளே அடர் அரக்கு நிரத்தில் கொஞ்சம் மூக்குபொடி. “கையிலயும் கொஞ்சம் வெச்சிருந்தேன், பட்டாளத்துத்தாத்தா பாத்திருச்சு. பட்டாளத்துல இருந்ததில்ல.சும்மாவா” என்று சிரித்துக்கொண்டான் காளி. “கொஞ்சம் போடுடா.தும்மவரும்டா” என்றான் குமார். காளி அவனைக் கண்டுகொள்ளாமல், பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து, இலாவகமாக மூக்குப்பொடியை எடுத்து, மூக்கில் வைத்துக்கொண்டான். அவ்வளவுதான். “ஐயோ அம்மா. எறியுதே.” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்”

இரண்டு காக்கைகள் காளி தும்முவதையே, அருகிலிருந்த மரத்திலிருந்து வெறித்துக்கொண்டிருந்தன. ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டன.

***

ஓவியம்: ramki

(தொடரும்)

படம். புத்தகம். காபி

நேத்து Fitness-Firstல எடுத்த DVDஐ ரிட்டர்ன் பண்ணப்போ, அந்த ரிஷப்சனிஸ்ட் சொன்னாங்க, “Muthu, first time you are paying fine, isnt it? Else, you are always on time!” அப்படியா?!! இல்லீங்க்கா, நீங்க என்ன ரொம்ப புகழறீங்க, ஒரு தடவையோ அல்லது ரெண்டு தடவையோ தான் நான் ஒழுங்கா டைமுக்கு ரிட்டர்ன் பண்ணிருக்கேன், மத்த எல்லா தடவையும் கண்டிப்பா fine தான். இப்போ புதுசா, Fitness-First Raffles Placeல, அந்தப்பக்கம் ஓரமா கார்னர்ல ஒரு ட்ரட்மில் இருக்குல்ல, அது நான் கட்டின fineல வாங்கினதுதான்னு எல்லாரும் சொல்றாங்க, உங்களுக்கு தெரியுமா?

சொல்லப்போனா இந்தப்படத்தை எடுத்தேனேயொழிய, நான் பார்க்கவேயில்ல. வீட்டுக்கே எடுத்திட்டு போகல. இங்க ஆபீஸ்லயே என் டெஸ்க்லையே வெச்சிட்டு போயிட்டேன். அப்புறம் அது பாட்டுக்கு ஓரமா, எனக்கென்னன்னு உட்கார்ந்திருந்திச்சு, நேத்து என்னோட boss வந்து, DVDஐ எடுத்து படம் எப்படியிருந்துச்சுன்னு கேக்கறவரைக்கும், இந்த DVDஐ நான் மறந்தேபோயிட்டேன். AKEELAH AND THE BEE, தான் அந்த DVD. படம் பார்க்காமலயே ரெண்டு டாலர் fine கட்டினேன். ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது.

***

என் ப்ரண்ட் அஸ்வின் (சம்மன சாமியார்!) திடீர்னு போன் பண்ணி வாடா இன்னிக்கு மீட் பண்ணலாம்னு சொல்வான். நாங்க எப்பவும் மீட் பண்ணும் Bordersல தான் இந்த saturdayவும் மீட் பண்ணினோம். வழக்கம் போல சில புத்தகங்களைப் புரட்டினோம். புதுசு புதுசா எழுதிட்டேயிருக்காய்ங்க. Kite Runnerஐ எழுதிய khaled hoseiniயின் Thousand Splendid Suns வந்திருக்கு. அது தான் அடுத்து வாங்கனும். சில புத்தகங்கள், தாமாகவே famous ஆகிவிடும். சில அதன் எழுத்தாளர்களின் புகழால் famous ஆகும், ஆனால் புத்தகத்தில் ஒன்றுமே இருக்காது. எடுத்துக்காட்டுக்கு, Catcher In The Rye மிக பிரபலமான புத்தகம். எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களில் ஒன்று. மறுமுறை வாசிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இந்தப் புத்தகம் வெளிவந்த பொழுது JDSalinger ஒன்றும் புகழ் பெற்ற எழுத்தாளர் கிடையாது. ஆனால் புத்தகம் Famous ஆனது. ஆனால் JDSalinger எழுதிய வேறொரு புத்தகமான, NineStories, JDSalingerக்காக famous ஆனது. ஆனால் NineStories அப்படி ஒன்றும் நல்ல புத்தகம் இல்லை. இந்த Thousand Splendid Suns, புத்தகம் எந்த வகை என்று தெரியவில்லை. பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எங்கெங்கு காணினும் HarryPotterஅடாங்கறமாதிரி, எல்லா புத்தகக்கடைகளிலும் (SAN’s bookshopல கூட!) குவிந்துகிடக்கிறது, DeathlyHallows. நான் இன்னும் வாங்கவில்லை. ஐம்பது டால்ர்களாமே?! குறையட்டும். மேலும், நான் இன்னும் HalfBlood Prince படித்து முடிக்கவில்லை. அதை படித்துமுடிக்கும் போது, PaperBack வந்துவிடும், விலையும் குறைந்துவிடும். எனக்கு Hard-Cover edition பிடிப்பதேயில்லை. (என்னிடம் எந்த நாவலுக்கும் hard-cover edition இல்லை!) யார் அதை -அவ்வளவு கணமாக- தூக்கிக்கொண்டு அலைவது? ஜெயமோகன் எழுதிய, கொற்றவை நாவலை, கொஞ்ச காலம் படிக்காமல் நிப்பாட்டிவைத்திருப்பதற்கு, ஒரு காரணம், பயமுறுத்தும் அதன் சுத்த தமிழ் உரைநடையாக இருந்தபொழுதிலும், அதன் கணமும் இன்னொரு முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை. தமிழில் பேப்பர் பேக் வருவதேயில்லை. விஷ்ணுபுரத்திற்கோ, கொற்றவைக்கோ பேப்பர்-பேக் வந்துச்சுன்னா, அதன் எடையில் கணிசமான அளவு குறைய வாய்ப்பிருக்கிறது. படுத்துக்கொண்டு ஹாயாக, கையில் பிடித்துக்கொண்டு படிக்கலாம்.

அஸ்வின், ஏனோ RK Narayanan எழுதிய புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தான். கிடைக்கவில்லை. அப்படியே எங்கயாவது சாப்டுட்டு, வீட்டுக்கு போயிருக்கலாம். படத்துக்கு போகலாம்னு SHAWக்கு போனோம்.

***

என்னோட வாழ்க்கையில, ஒரு சினிமாவுக்கு போயிட்டு, பாதில எழுந்துவந்ததுன்னா ஒரே ஒரு படம் தான். விஜய் நடித்த படம் அது. ரம்பா, தேவயாணி போன்ற நடிகையர் திலகங்களும் அதில நடிச்சிருந்தாங்க. பெயர் என்னன்னு மறந்துபோச்சு. ஆனா படத்தோட கரு ஞாபகம் இருக்கு : விஜயோட கனவில ரம்பா வருவாங்க. கூடவே அவங்களோட மச்சமும். பிறகு எல்லாருமா சேர்ந்து ரம்பாவ தேடிக்கண்டுபிடிப்பாங்க. ஒரு முக்கால்மணி நேரம் பாத்திருப்பேன், எங்க ஊர் மஹாராஜா தியேட்டரில, அப்புறம் விட்டேன் ஜூட். இதில் gate திறக்கமாட்டேன்னு சொன்னாய்ங்க. போடாங்கொய்யாலன்னுட்டு escape ஆகிட்டேன். torture படம்.

அதுக்கப்புறமா, ஓடி வந்ததுன்னா, இந்த சனிக்கிழமை பார்த்த படம் தான். Captivity. நான் உள்ளே போய் பத்து நிமிஷத்தில இதத்தான் நினெச்சேன். நம்ப ராஜ்மோகனையும் (ஜாக்குவார் தங்கம்!) கூட்டிட்டு வந்திருக்கலாமேன்னு. ரத்தத்தப் பார்த்தாலே அலறுகிறவன். இந்தப்படத்தில வரும் ஷ்பெஷல் ஜூஸைப் பார்த்தால் என்ன செய்திருப்பான்னு,எனக்கு ஒரே யோசனை. கண்டிப்பா பின்னங்கால் பிடறியில படற அளவுக்கு ஓடிருப்பான். அது என்ன ஸ்பெஷல் ஜூஸ்? காது, மூக்கு, கண்ணு, நாக்கு போன்ற (அதுக்கப்புறம் என்ன என்ன mix செஞ்சாருன்னு பாக்கல, நான் தான் இறுக்கமா கண்ண மூடிக்கிட்டன்ல!) இத்தியாதிகளை ஒரு மிக்ஸியில் போட்டு, அரைத்து அதை கட்டிப்போடப்பட்டிருக்கும் (கடத்தப்பட்டிருக்கும்!) பெண்ணுக்கு, வாயில் funnelஐ வைத்து ஊத்துவது. அஸ்வின் காதில போய் “மாமா இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடல, எஸ்கேப் ஆயிரலாம்டா” ன்னு சொன்னேன், பய ரெடியா ஓகே சொன்னான். starbucks காபி குடித்துக்கொண்டிருந்த எனக்கு, சில சீன்களில், கிட்டத்தட்ட vomit வந்தேவிட்டது. சும்மாவே starbucks காபி அப்படித்தான் இருக்கும்.

***

கொஞ்சம் தலைவலி இருந்ததால, அன்னிக்கு starbucks காபி வாங்கினேன். இப்பவெல்லாம் ஓடு தண்ணி.அவ்ளோ பெரிய கப்புல. (அதையும் நான் குடிச்சிட்டேன்ங்கறது வேறு விசயம்!) அஸ்வின், sugar போடாம வாங்கிட்டு வந்திட்டான். என்னடா sugar போட்டியான்னு கேட்டேன்? என்னது தனியா நாம sugar போடணுமா? குடுக்கற காசுக்கு அவிங்க sugar கூட போட்டுத்தற மாட்டாய்ங்களான்னு அப்பாவியா கேட்டான்!

வாங்கிட்டு வந்திட்டு, seatல உக்காந்து, குடிச்சிட்டு, அவன் கிட்ட கொடுத்தேன். கொஞ்சம் குடிச்சுப்பாருடான்னு சொன்னேன். அவன் காபி டீ எதுவும் குடிக்கமாட்டான். அமுல் பேபி. பால் மட்டும் தான் சாப்டுவார். ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடர் தான் உபயோகிப்பார். என்கிட்டருந்து வாங்கி, காபிய ஒரு மடக்கு குடிச்சான். பிறகு, உரத்த குரலில், என்னடா கழனிதண்ணி (மாட்டுக்கு வெப்பாங்கல்ல!) மாதிரி இருக்குன்னான். எனக்கு முன்னாள் உட்கார்ந்திருந்த ஒரு சைனீஸ் பொண்ணு, அதுக்கு ஏன் நீ மாடு மாதிரி கத்தறங்கறமாதிரி பாத்தா!

வெளில வரும்போது, அவன்கிட்ட கேட்டேன், “ஏன்டா, நீ கழனிதண்ணி குடிச்சிருக்கியா?!”

இந்த தியேட்டருக்கு விதிக்கப்பட்ட சாபம் போல. இந்த தியேட்டரில் (இதே screen!) நான் இன்னொரு படமும் பாத்திருக்கிறேன். Shrek3. அதுவும் torture படம் தான். வேறுவிதமான torture.

***

என் ப்ரண்ட் ராஜ்மோகனுக்கு animation movies எதுவுமே பிடிக்காது. பிடிக்காது என்றால் கொஞ்சம் கூட பார்க்கமாட்டான். ஹாலில் உட்கார்ந்திருக்கும் போது, சேனல் மாத்தும் போது, தப்பித்தவறி ஏதாவது ஒரு சேனலில் ஏதாவது ஒரு அனிமேஷன் மூவி ஓடிக்கொண்டிருந்தால் போதும், உடனே அவனிடத்திலிருந்து வரும் கமெண்ட்: “போட்டாங்கடா பொம்மப்படம்!” என்னாது பொம்மப்படமா?

முன்பு, Cars படத்துக்கு அவனை நான் வலுக்கட்டாயமாக கூப்பிட்டேன். எப்படியும் அனிமேஷன் மூவி ஒன்றை, அவனைப் பார்க்கவைத்தே தீருவது என்ற கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருந்தேன். ஏன்னா, அவனும் பாக்கமாட்டான், வீட்ல DVD போட்டாக்கா நம்பளையும் பாக்கவிடமாட்டான். ஏதாவது சொல்லி கேலி பண்ணி நம்பள torture பண்ணுவான், torture. நான் எவ்வளவு கூப்பிட்டும், எவ்வளவு offer பண்ணியும் like, டிக்கெட் போடறேன், பாப்க்கார்ன் வாங்கித்தாரேன், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் வாங்கித்தாரேன், அன்னிக்கு dinner கூட நான் sponser பண்றேன்னு சொல்லியும் வரமாட்டேன்னுட்டான். அவ்வளவு மன உறுதி அவனுக்கு. (இல்லீன்னா, சகிப்புத்தன்மை இல்லீன்னு கூட வெச்சுக்கலாம்!). இந்த முறை Shrek3 க்கு கூப்பிட்டுப் போகலாம் என்றிருந்தேன். நல்லவேலை கூப்பிடல. அவன் வந்திருக்கமாட்டாங்கறது வேற விசயம், ஆனா வந்திருந்தான்னா, இனிமேல் பொம்மப்படமே (அவன் பாஷயில்!) தன் வாழ்நாளில் பார்த்திருக்கமாட்டான். ஆனா, cars படம் ரொம்ப நல்லாயிருந்தது. Superb Movie.

***

என்னுடைய நண்பர் (கேள்வியின் நாயகன்!), முன்பொருமுறை, முன்புன்னா கொஞ்ச மாசத்துக்கு முன்ன, கொடுத்திருந்த ஒரு DVDஐ இன்னும் பார்க்காமல் வெச்சிருந்தோம். ஏன்னா அது DVD-RIP fileங்கறதனால, என்னோட stupid Philiphs DVD Playerல ஓடல. அந்தப்படம் – Stay Alive. இப்ப புதுசா நம்ப ஜாக்குவார் தங்கம் ஒரு DVD player வாங்கியிருக்கார். Panasonic Music System. அதுல என்ன போட்டாலும் ஓடுது. ரொம்பநாளைக்கு முன்ன என்னோட இன்னொரு நண்பர் கொடுத்திருந்த ரெஹ்மான் பாடல் கலெக்ஷன் DVD, எதுலையுமே ஓடல. என்னோட DVD Player, என்னோட laptop, என் ப்ரண்டோட laptopன்னு எதுலையுமே ஓடல. என்னோட ப்ரண்ட், அந்த DVDஐ திருப்பி கேட்டப்போ, போயா போ, ஓடாத DVDஐக் கொடுத்திட்டு திரும்ப வேற கேக்கறையான்னு சொல்லிட்டேன். ஆனா பாருங்க அது -எதுலையுமே ஓடாத அந்த டுபாகூர் DVD கூட – அந்த Panasonic palyerல ஓடுச்சு. அதுதான் சொன்னேன், ஜாக்குவார் தங்கத்துக்கிட்ட, நீ டெய்லி, அமிர்தா ஹோட்டல்ல இருந்து வாங்கிட்டு வாறியே சப்பாத்தி, அதுல பில்லான்னு எழுதி, போட்டீன்னாக்க, தல நடிக்கிற, இன்னும் வெளிவராத, பில்லா படம் கூட ஓடும்டான்னு. அவன் மொறச்சு பாத்தான்.

இந்த Stay Alive படத்த அன்னிக்கு பாக்கறதுக்கு ஒன்னும் இல்லாம, ஓடாதுங்கற நம்பிக்கைல தான் அந்த playerல போட்டேன். ஆச்சரியம், ஓடிருச்சு. அப்புறம் தான் ரொம்ப feel பண்ணோம், பேசாம ஓடாமலே இருந்திருக்கலாம்னு. சுத்த waste movie. Game விளையாடுவாங்களாம், அந்த Gameல வர்ற பேய், விளையாடுறவங்க gameல எப்படி சாகறாங்களோ, அதே மாதிரி, exactly like that, கொல்லுமாம். ஓவர் பூ. ஆனா, எங்க கொள்கை எப்படீன்னா, படம் எவ்வளவு டுபாக்கூரா இருந்தாலும், கடைசி வரைக்கும் பாக்காம எழுந்திருக்க மாட்டோம். So, கடைசி வரைக்கும் பார்த்தோம்.
The Urban Legend மாதிரி ஏதாவது திருப்பம் வரும்மான்னும் பாத்துட்டேயிருந்தோம். Nothing.

***

கூண்டிலடைக்கப்பட்ட பறவை

எனக்கு நீ வேண்டும்;
ஆனால் ஒருபோதும் என்
கைகளால் உன்னை
அணைத்துக்கொள்ள
முடியாதென்றும் தெரியும்.
நீ துல்லியமான
பிரகாசமுள்ள ஆகாயம்.
நானோ
கூண்டிலடைக்கப்பட்ட பறவை.

– ·பரூக் ·பரோக்சாத்

இன்சிடென்ட்ஸ்-8

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்! யாரும் பாக்கமாட்டிங்கன்னு எனக்கு தெரியும், ஆனா சொல்றது என் கடமை இல்லியா?)

இந்தமுறை ஊருக்கு சென்றிருந்த பொழுது, ஒரு ஹாட்டான மதிய நேரத்தில், நல்லா மூக்குபிடிக்க வெறால் மீன் குழம்பை ஒரு கட்டுகட்டிவிட்டு, வெத்தலை பாக்கு போட்டுகொண்டே அனந்தசயனத்தில், மேலே “எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்களேன்டா, ப்ளீஸ்!” என்று கதறி அழுது கொண்டிருந்த ·பேனிலிருந்து கீழே மிக மெதுவாய், மிக மிக மெதுவாய், ஸ்டுபிட் ஹாட் ஏர் என்னை நோக்கி இறங்கிக்கொண்டிருந்த பொழுது, என் மருமகள் (அக்காவின் மகள்) ஒரு சூட்கேஸை தூக்கமுடியாமல் தூக்கிகொண்டு வந்து என் முன்னால் வைத்தாள், கிட்டத்தட்ட தடால் என்று கீழே போட்டாள். போட்டுவிட்டு, ஆச்சி முழிச்சுக்கப்போறாங்க,ஐயோ என்று வேகவேகமாக என் அருகில் உட்கார்ந்துகொண்டாள். ஆச்சி முழித்தார் என்றால், தூங்கச்சொல்லுவாரே என்ற பயம் அவளூக்கு. நான் சிறுவனாய் இருந்த பொழுது எனக்கிருந்த அதே பயம். மதியம் விளையாடாமல் தூங்க வேண்டுமே என்கிற பயம். (இப்போ தூக்கம் வராமல் இரவு ரெண்டு மணிக்கு கூட கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டிருப்பது வேறு விசயம்!! சித்தி என்ற படத்தில் தூக்கத்தைப் பற்றிய பாடல் ஒன்று உண்டு! அந்த பாடல் நிதர்சன உண்மை. அது ஏதோ பெண்ணைக் குறித்து பாடப்பட்டது போல தோன்றினாலும், ஆணுக்கும் கச்சிதமாக பொருந்தும். ஆணுக்கும் பெண்ணுக்கும் அதே அளவு கவலைகளும் மனச்சுமைகளும் உண்டு. வகைகள் மட்டுமே வேறு!).

கீழே விழுந்த சூட்கேஸில் இருந்து தூசி சிறிய புகையாக எழும்பிக்கொண்டிருந்தது. பக்கத்தில், தோட்டத்தைப் பார்த்திருந்த ஜன்னலில் இருந்து வழிந்துகொண்டிருந்த பளீர் வெயிலில், தூசி பெரும் புகையாக மாறிவிட்டது போல இருந்தது. பார்த்திருக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த பொழுது, ஜன்னல் பக்கத்தில் மட்டுமே தூசிகள் இருக்கின்றன என்று நினைத்து, அந்த ஒளிக்கீற்றில் மின்னும் தூசிகளை கைகளால் அந்தப்பக்கம் தள்ளிவிட முயற்சித்திருக்கிறேன்.ம்ம்ஹ¥ம். நான் தள்ளிவிட தள்ளிவிட, எங்கிருந்தோ தூசி வந்து அதே இடத்தில் ஒட்டிக்கொள்ளும், நாம் எவ்வளவு துரத்தினாலும் மீண்டும் அதேவேகத்தில் நம்மில் வந்து ஒட்டிக்கொள்ளும் ஒரு சில நினைவுகளைப் போல.

அந்த சூட்கேஸில்தான் போட்டோக்கள் இருக்கின்றன. சூட்கேஸ் நிறைய போட்டோக்கள் இருக்கின்றன. விருந்தினர்கள் யாராவது தெரியாத்தனமாய் போட்டோக்கள் என்று கேட்டுவிட்டால் அவ்வளவுதான் தொலைந்தார்கள். போதுமடா சாமி என்று சொல்லும்வரை நாங்கள் எடுத்துகொடுத்து கொண்டேயிருப்போம். சன் டீவியின் சீரியல்கள் போல இது முடியவே முடியாதா என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து கொடுத்துக்கொண்டேயிருப்போம். வந்திருந்த உறவினர்கள் வீட்டுக்கு சென்றபின், வராத அவர்கள் வீட்டாரிடம், “நல்லாத்தான் இருக்காய்ங்க, ஆனா நீ போனீனா கண்டிப்பா போட்டோ பத்தி மட்டும் பேச்சு எடுத்திடாத. போட்டோ கேட்ட தொலஞ்சடிமாப்ள” என்று சொல்லுவார்களோ என்று சில சமயம் நான் சிரியஸாக யோசித்திருக்கிறேன். நமக்கு வேண்டுமென்றால் போட்டோக்கள் -ஒரு கட்டத்தில்- சலித்து விடும், ஆனால் இந்த வாண்டுகளுக்கு அதில் என்னதான் இருக்கிறதோ தெரியவில்லை. எத்தனை முறைதான் அதே போட்டோக்களை திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டிருக்குங்களோ தெரியவில்லை. “மாமா இங்க இருக்காங்க பாத்தியா? அம்மா குட்டிப்பிள்ளையா இருக்கும் போது எடுத்தது தெரியுமா? தாத்தா மீட்டிங்கில பேசறாங்க பார்” என்று பார்த்த போட்டோக்களையே மீண்டும் பார்த்து, அதே அளவு fresh ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருங்குங்கள். இன்றும் அதே சூட்கேஸை தூக்கிகொண்டு என் அருகில் கூட்டமாக உட்கார்ந்து கொண்டதுகள். எங்கள் வீட்டில் வாண்டுகள் அதிகம்.

எல்லா குட்டீஸ்களையும் ஒன்றாக அமைதியாக உட்காரவைக்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள் இருக்கின்றன, ஒன்று: கில்லி அல்லது சந்திரமுகி படத்தை டிவீடியில் போட்டுவிடுவது. இரண்டு: போட்டோ பார்க்கலாம் வாங்க என்று சொல்வது. இதில் ·பர்ஸ்ட் ஐடியா ஈசி. டிவீடிக்களைக் கிழிக்க முடியாது.

உட்காரவைக்கவில்லை என்றால் வரிசையாக இங்கிட்டும் அங்கிட்டும் ஓடிக்கொண்டே இருக்குங்க. வீட்டுக்கு முன்னாடியும், பிறகு பின்னாடியும், பிறகு மீண்டும் முன்னாடியும், பிறகு மீண்டும் பின்னாடியும் ஓடி ஓடி, இரவு மொட்டை மாடியில் படுக்கும் வரைக்கும் அப்படி என்னதான் விளையாடுங்களோ தெரியவில்லை! ஒரு முறை நானும் மற்ற எல்லோரும் வீட்டின் வாசல் படிகள் உட்கார்ந்து ஒரு சாயங்காலம் கதை அடித்துக்கொண்டிருந்தோம், குட்டீஸ்கள் வரிசையாக மேலும் கீழும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்துச்சுங்க. என்னுடைய வக்கீல் அண்ணன் “எப்பவுமே லெவல் க்ராஸிங்கல உட்கார்ந்திருக்கறமாதிரியே இருக்குடா! ஒரு ட்ரெயின் க்ராஸ் பண்றமாதிரியே இருக்குல்ல!” என்று ஒரு கமெண்ட் அடித்து எல்லோரையும் சிரிக்க வைத்தார். உண்மைதான். என்ஜினை மட்டும் ஆப் செய்தால் போதும், ட்ரெயின் நின்றுவிடும் என்றார். இன்ஜின், அக்காவின் இரண்டாவது மகள்.

ஒவ்வொரு போட்டோ ஆல்பமாக பார்த்துகொண்டுவந்தோம். அக்காபெண்களின் பள்ளிக்கூட நண்பர்கள். அவர்கள் போட்ட சண்டைகள். பள்ளிக்கூடத்து நிகழ்ச்சிகள். ஆடிய டான்ஸ். பேசிய பேச்சுப்போட்டி என்று ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டுவந்தேன். என்னுடைய பள்ளிக்கூட போட்டோ ஆல்பம் வந்தது.

***

ஒருமுறை, என்னோட பள்ளிக்கூட ஆல்பத்தை பள்ளிக்கு எடுத்துச்சென்றிருந்தேன். ஆலபம் என்றால் அதில் என்னுடைய எல்லா வயது போட்டோக்களும் இருக்கும், எல் கே ஜி யிலிருந்து பணிரெண்டாம் வகுப்பு வரை. நான் மூன்றாவது படித்துக்கொண்டிருந்த பொழுது – என்று நினைக்கிறேன் – குன்றக்குடி அடிகளாரிடம், திருமங்கலம் (மதுரை) இலக்கிய பேரவையில், மாலை வாங்கியதும் ஒரு போட்டோவில் இருக்கிறது. மாலை போட்டுக்கொண்டு, ஒரு சேரில், மாலையையே குனிந்து பார்த்துக்கொண்டு, ஒரு டார்க் ப்ளூ டீசர்ட்-டவுசரில், அமைதியாக என் தனி உலகத்தில், கற்பனையில், ஆழ்ந்திருப்பேன். அன்று என்ன யோசித்துக் கொண்டிருந்திருப்பேன்?

இலக்கிய பேரவையில் மாலை வாங்கிருக்கியா? அதுவும் மூன்றாவது படிக்கும் போதா? என்று என் இலக்கிய பெருமைகளை எண்ணி நீங்கள் வியந்து, வாவ் முத்து, யூ ஆர் ராக்கிங்! என்று சொல்வதற்கு முன்னர், உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அன்று நான் கூட்டத்தில் எதுவுமே செய்யவில்லை. அப்பாவுடன் சும்மா சென்றிருந்தேன். அப்பா இலக்கிய பேச்சாளர். புலவர். பட்டிமன்றப்பேச்சாளர். கவிஞர். (இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்). என்னை மேடையில் பார்த்த குன்றக்குடி அடிகளார், எல்லோருக்கும் மாலை போடுவதையே வெறித்து வெறித்து பார்க்கிறானே -கண்டிப்பாக வெறித்துப் பார்த்திருப்பேன் – என்று பாவப்பட்டு அவருக்கு போட்ட மாலையைக் கழட்டி எனக்கு அணிவித்தார்.

இப்படியாக குன்றக்குடி அடிகளாரிடம் மாலை வாங்கிய பெருமை எனக்கிருக்கிறது. சும்மானாச்சுகாவது வாங்கிருக்கம்ல! பிற்பாடு பத்தாவது படிக்கும் பொழுது அவர் கையால், கேடையம் வாங்கியிருக்க வேண்டியது மிஸ் ஆகிப்போனது வேறு விசயம். இன்னோரு “இன்சிடென்டில்” அதை சொல்கிறேன்.

சரி மேட்டருக்கு வருகிறேன். என் போட்டோக்களை ஆர்வமாக என் பள்ளி ·ப்ரண்ட்ஸ் பார்த்தார்கள். பார்த்துவிட்டு, ஒரு
ப்ரண்ட் சொன்னாள்: “முத்து, நீ குழந்தையாக இருக்கறப்போ அழகாத்தான் இருந்திருக்க போல?

***

பள்ளிக்கூட நாட்களில் நான் நடித்த நாடகங்களில் – அல்லது பொதுவாக stageperformance- எனக்கு மிகவும் பிடித்தது, அல்லது இன்று வரை நான் மறக்காமல் இருப்பது: வேடன்-புறா கதையை, நான் மோனோஆக்ட்(MonoAct) செய்தது. அது வெறும் நாடகம் இல்லை. அது ஒரு பாட்டு-நாடகம். (பாட்டுமன்றம் போல!). என்னுடைய அப்பா அதை எழுதித்தந்திருந்தார். அந்த நாடகத்தில் வசனங்களே இல்லை. வெறும் பாடல்கள் தான். பாடல்கள் என்றால்? சினிமா மெட்டுக்களில் அமைந்த வசன-பாடல்கள். அனைத்துப் பாடல்களையும் சினிமா மெட்டுக்களில் எழுதியிருந்தார் என் அப்பா. அது எங்கள் பள்ளியில் மிகப்பெரிய ஹிட்.

அந்தப்பாடல்களில் இரண்டு பாடல்களை நான் இன்று வரை முனுமுனுப்பதுண்டு. வேடன்-புறா கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். (அந்த கதையையும் சொல்லி -எழுதி- மேலும் மொக்க போட நான் விரும்பவில்லை!)

சீன்: வேடன் வலையை விரித்துவிட்டான். அதில் சில தாணியங்களையும் வைத்துவிட்டான் (as bait). புறாக்கூட்டங்கள் தாணியங்களைப் பார்த்ததும் அருகில் உட்கார்ந்துவிட்டன. ஆனால் தலைமைப்புறா “இவ்வளவு தாணியங்களை ஒரு சேர நான் என் வாழ்க்கையில் பார்த்ததில்லை, இதில் ஏதோ சூது இருக்கிறது” என்கிறது. ஆனால் பெரிசுக சொல்றதை என்னிக்கு வெடலப்புள்ளைக கேட்டிருக்கு?

பெரிச எதிர்த்து ஒரு வெடலை பாடுது இப்படி:

அட குவிஞ்சிருக்கு இங்க நெல்லு,
உனக்கு வேண்டானா தள்ளி நில்லு!

இனி உங்க பேச்சு
கேக்க மாட்டோம் சூச்சு

வந்தா வாங்க
வராட்டி போங்க
நாங்க போறமுங்க.

வந்தா வாங்க
வராட்டி போங்க
நாங்க போறமுங்க!”

இதற்கு தளபதியில் வரும் “ராக்கம்மா கையத்தட்டு” பாடலின் மெட்டை உபயோகிக்க வேண்டும்.

“ஜாங்கு ஜக்கு ஜஜக்கு ஜக்கு
ஜாங்கு ஜாங்கு ஜக்கு ஜா”

” வந்தா வாங்க
வராட்டி போங்க
நாங்க போறமுங்க.”

அப்புறம் வேறு ஒரு குருவி பாடும் பாட்டு:

பசிக்குது வயிறு
ருசிக்குது பயறு

(இப்பவும், எனக்கு பசிக்கும்போது இந்த வரிகள் தான் ஞாபகம் வருகின்றன! வாய் ஆட்டோமேட்டிக்கா முனுமுனுக்குது!)

என்னபாட்டு தெரியுதா? “அடிக்குது குளிரு”

இந்த மோனோ ஆக்ட்டைக் கேள்விப்பட்ட +2 மாணவர்கள் (மற்றும் மாணவியர்கள்!) – அவர்கள் அன்று போட்டியைப் பார்க்கவில்லை, ஏதோ பரிட்சையோ என்னவோ- ரொம்பவும் ஆர்வமாகி, என்னை அழைத்து தனியாக -பிர்த்தியேக ஷோ- அவர்களுக்காக மீண்டும் மோனோஆக்ட் செய்யச்சொன்னர்.

After the performance, தேவியும், தீபாவும் என் கண்ணத்தை கிள்ளி so sweet, well done! என்று சொன்னது, இன்னும் எனக்கு பசுமையாக ஞாபகம் இருக்கிறது. (இருக்கனும்ல! நான் அப்பொழுது ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்!)

இன்னொரு முறை – வீட்டுக்கு போகும் போது கண்டிப்பாக தேடிப்பிடித்து – முழு பாடல்களையும் பதிவு செய்கிறேன்.

***

(தொடரும்)

சில ஹைக்கூக்களும், முத்துவும்.

(No! when I say Haikus, I am not mentioning girls!)

ஒரு ஞாயிறு மதியம் Open Page என்கிற புத்தகக்கடையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த பொழுது, ஒரு சில ஹைக்கூ புத்தகங்கள் கிடைத்தன. சும்மா, புரட்டினேன். (பாவம் நீங்கள்!) என்னால் முடிந்த அளவிற்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.

In the mirrors on her dress
Little pieces of my
Self.
-Cor van den heuvel

அவளின் சுடிதார் கண்ணாடிகளில்
நான்
சிதறிக்கிடக்கின்றேன்.


The momment two bubbles
are united, they both vanish.
A lotus blooms.
-Murakami Kijo / TR. Makoto Ueda

இரண்டு குமிழ்கள் சந்திக்கும் தருணத்தில்
இரண்டுமே மறைந்துபோகின்றன.
அங்கே ஒரு தாமரை மலர்கிறது.

Kept awake
By the silence
Of her breathing.
-Maurice Tasnier

அவள் முச்சுக்காற்றின்
நிசப்தத்தில்
நான் முழித்திருக்கிறேன்.

Morning Shyness –
After our bath
She wraps herself in a towel.
-Brain Tasker

காலை வெட்கம் –
எங்கள் குளியலுக்கப்புறம்
துண்டு அவளைப் போர்த்திக்கொண்டது.

Looking for you
Through hundreds
Of love haiku.
-Manu Bazzano

கணக்கிலடங்கா
காதல் ஹைக்கூக்களில்
உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Since you went away
No flowers are left on earth.
-Natsume Soseki

நீயும் சென்றுவிட்டபிறகு
பூக்களே இல்லை –
இந்த பூமியில்.

A broken heart
Is an open
Heart.
-Anonymous.

உடைந்த இதயம்-
ஒரு திறந்த
இதயம்.

In Cold Blood

In Cold Blood என்ற புத்தகத்தை ஆறு மாதங்களுக்கு முன்னால் வாங்கினேன். சில மாதங்களுக்கு முன்னால் படிக்க ஆரம்பித்து, முதல் ஆறு பக்கங்கள் மட்டுமே படித்தேன். அவ்வளவு தான் படிக்கமுடிந்தது, அப்போது. (படிப்பதற்கும் mood செட்டாகவேண்டும் இல்லியா?!) பிறகு வேறு வேறு நாவல்களுக்கு தாவிவிட்டு, பிறகு மீண்டும் சென்ற வாரம், புதன்கிழமை படிக்க ஆரம்பித்தேன். இரண்டே நாட்களில் -அதுவும் weekdays- படித்து முடித்தேன். என்னால் இந்த நாவலைப் படித்துமுடிக்கிற வரையில் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அதற்கப்பிறகு, இந்த நாவலை தழுவி -தழுவி என்று சொல்லமுடியாது. அச்சு அசல் அதே போல – எடுக்கப்பட்ட திரைப்படம், In Cold Bloodஐயும் பார்த்தேன். இந்த நாவலைப் பற்றி என் நண்பரிடம் நிறைய பேசிக்கொண்டிருந்தேன். நிறையவே பேசிவிட்டேன். சாப்பிடும் போது. சாப்பிட்டு முடித்த பிறகு. வீட்டிற்கு செல்லும் வழியில். பிறகு செல்போனில். என் ஆர்வத்தைப் பார்த்த அவர், சென்ற வெள்ளியன்று, என் பிறந்தநாள் பரிசாக, Capote என்ற படத்தின் DVDஐ surprise presentஆக கொடுத்தார். அன்றே அந்த படத்தையும் பார்த்துவிட்டேன். (வேற வேலையே இல்லியாடா உனக்கு? என்கிற உங்களது குரல் என்னை வந்தடைந்து விட்டதை இங்கே தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்!)

இந்த நாவல் ஒரு புதிய முயற்சி என்று Truman Capote சொல்கிறார். அதாவது Non-Fiction Novel. நாவல் என்றாலே புனைவுதான். ஆனால் இது புனைவு அல்லாத ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல். அடிப்படை இல்லை. முழுக்க முழுக்க உண்மையே. “capote” படம் இந்த நாவலை எழுதிய Truman Capote அவர்களின் பயோகிராபி. பயோகிராபி என்று சொல்லமுடியாது. இந்த நாவல் உருவான கதை என்று வைத்துக்கொள்ளலாம். (இந்தப்பதிவில் இரு விசயங்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். In Cold Blood என்ற Truman Capote எழுதிய நாவல். Truman Capote எப்படி இந்த நாவலை எழுதினார் என்பதைப் பற்றிய படம்: Capote)

***

Kansas நகரத்திலிருந்து ஒதுங்கி தனியாக நிற்கும் Holcomb என்ற அழகான கிராமத்தில் நவம்பர் 1959இல் நடந்த நான்கு படுகொலைகளைப் பற்றியது தான் இந்த In Cold Blood என்ற நாவல். நாவல் பிரசுரம் செய்யப்பட்ட ஆண்டு 1965. 1967இல் இந்த நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் “In Cold Blood”. பிறகு 2005 Capote வெளிவந்தது. Capoteயாக நடித்த Philip Seymour Hoffman (மிஷன் இம்பாசிபில் 3ல வந்த வில்லன்!) 2005இல் சிறந்த நடிகருக்கான அகாடெமி விருதைப் பெற்றார்.

Holcomb விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட கிராமம். அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறது Clutter குடும்பம். Clutters கொஞ்சம் செல்வந்தர்கள். அந்த ஊரில் தன் நற்குணங்களால் நல்ல பெயரெடுத்தவர் Clutter. அவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன். முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணம் நடந்து வேறு வேறு ஊர்களில் செட்டில் ஆகிவிட, கடைசி மகளும் மகனும் மட்டும் Holcombஇல் அப்பா அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார்கள். Clutterஇன் மனைவி Bonnie கொஞ்சம் மனநிலை தவறியவர். சிகிச்சைக்குட்பட்டு இப்பொழுதுதான் கொஞ்சம் தேறிவருகிறார். கடைசி மகள் Nancy அந்த ஊரின் செல்லப்பெண். Everyone’s Darling. அழகான. சுறுசுறுப்பான, பொறுப்பான, மரியாதையான பெண். “Nancy Clutter is always in a hurry, yet she always has time. And that’s one definition of a lady.” என்று ஒரு neighbour அவளைப் பற்றி சொலிகிறார். Kenyon கடைசி பையன். மொத்தத்தில் Clutter குடும்பம் அந்த ஊரின் உதாரணக்குடும்பம்.

இந்த நாவலில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால் சொல்லப்பட்டவிதம். The narration. ரொம்ப யதார்த்தமாக ஆனால் ஒரு சஸ்பென்ஸ் இருந்துகொண்டேயிருக்கக்கூடிய வகையில் இந்த நாவல் முழுவதையுமே அமைத்திருக்கிறார் Truman Capote. நாவல் ஆரம்பித்து கொஞ்ச பக்கங்களிலே நான்கு படுகொலைகள் நடந்துவிடுகின்றன. ஏன், சொல்லப்போனால், எனக்கு நாவல் படிக்க ஆரம்பிக்கும் முன்னரே தெரியும், இது நான்கு படுகொலைகளைப் பற்றியதுதான் என்பது. ஆனால் தெரிந்தும், எது என்னை நாவலின் கடைசிப்பக்கம் வரைக்கும் கொண்டுசென்றது? என்னை ஈர்த்தது எது? அது கொலைக்கான motive. அதைத் தேடித்தான் நான் பக்கங்கள் தோறும் விரைந்துகொண்டிருந்தேன்.

அதாவது Holcomb என்ற கிராமத்துக்கும், clutterக்கும் சிறிதும் சம்பந்தமில்லாத இரண்டு நபர்கள் (Perry, Dick), clutterஇன் வீட்டுக்குள் நடு இரவினில் புகுந்து, வீட்டிலிருந்த நான்கு பேரையும் (clutter, clutterஇன் மனைவி Bonie, Nancy and Kenyon) சுட்டுக் கொலைசெய்கின்றனர். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்த பல பொருட்கள் அப்படியே இருக்கின்றன. including bonie’s necklace. கொலை செய்யப்பட்டவர்களும் நன்றாக சௌகரியமாக படுக்கவைக்கப்பட்டு (கழுத்துக்கு தலையணை கொடுத்து! ஏதோ அவர்களுக்கு வலிக்கும் என்று உணர்ந்தவர்கள் போல!) கைகால் கட்டிப்போடப்பட்டு, சரியாக நெற்றிப்பொட்டில் சுடப்பட்டிருக்கின்றனர். கொலையைத் துப்பறியவரும் KBI (kansas’s beurau of investigation)ஐ சேர்ந்த Dewey என்பவரும் குழம்பிப்போகிறார். ஏன் கொலைசெய்யப்பட்டனர்? மேலும் clutter 80 centsக்கு கூட செக் -No Cash!- கொடுப்பவர் என்பதை அங்கிருக்கும் மக்கள் அனைவரும் அறிவர். அப்படியிருக்க பணத்தை தேடி அவர்கள் வந்திருக்கமாட்டார்கள் என்று திட்டவட்டமாக நம்புகிறது KBI. அவர்களுக்கு எந்த clueவும் கிடைக்கவில்லை. ஒன்றைத்தவிர. அது, கொலைசெய்யப்பட்டுக்கிடக்கும் பிரேதங்களைப் படம்பிடித்ததில் தற்செயலாக, ஒரு போட்டாவில் விழுந்திருக்கும், shoe impression. அப்படியே கொலைகாரர்கள் கிடைத்தாலும், அவர்கள் அந்த ஷ¥க்களோடே சுற்றிக்கொண்டு இருக்க வேண்டும், அப்படியிருந்தால் தான், அவர்களைக் கொலைகாரர்கள் என்று கோர்ட்டில் நிரூபிக்க முடியும். Proof. Sole Proof. (wow, முத்து கலக்கற!) கொலைகாரர்கள் அவ்வளவு முட்டாள்களா என்ன? ஷ¥வை தூக்கி வீசியிருக்கமாட்டார்களா என்ன?

Perryயும் Dickக்கும் கொலைசெய்துவிட்டு மெக்ஸிக்கோவிற்கு தப்பிச்செல்கின்றனர். ஆனால் சென்ற சிறிது நாட்களிலே – கையிலிருந்த பணமும், ஓட்டி வந்த காரை விற்ற பணமும் செலவழிந்த பிறகு – மெக்ஸிகோ திகட்டிவிட அவர்கள் மீண்டும் அமெரிக்கா (LasVegas, Nevada) வருகின்றனர். அங்கிருந்து புறப்படும் போது கையில் போதுமான பணம் -காரும் இல்லை- இல்லாததால், அவர்கள் பஸ்ஸில் பயணிக்கின்றனர். Perry ஒரு சிறந்த படிப்பாளி. நிறைய புத்தகங்கள் படிக்கின்றவன்.(நிறைய புத்தகங்கள் படிக்கறவயங்களையே நம்பக்கூடாதுப்பா!) படிப்பதோடு மட்டுமில்லாமல் கிடைக்கும் புதிய வார்த்தைகளை சேகரித்து, அதை எப்படியும் -தேவையே இல்லாத போது- உபயோகின்றவன். He is building his vocabulary. எனவே தான் வைத்திருந்த புத்தகங்களையும், தன்னுடைய ஷ¥வையும் (ஆதாரம்!) ஒரு பார்ஸலில் போட்டு Nevadaவுக்கு அனுப்பி வைக்கிறார்.(மாட்னடா நீ!)

இதற்கிடையே, ஜெயிலில் Dickக்குடன் ரூமை பகிர்ந்து கொண்ட ஒருவன், தற்செயலாக ரேடியோவில் Clutterவீட்டு கொலைகளைப் பற்றிய செய்தியைக் கேட்கிறான். அவனுக்கு உடனே விசயம் பிடிபடுகிறது. அதாவது, அவன், சிறுவயதில் clutterஇன் நிலத்தில் வேலை பார்த்தவன். clutter பெறும் பணக்காரர் என்பதை நன்கறிவான். அவன் ஒரு முறை எதேச்சையாக Dickக்கிடம் இதை சொல்லிக்கொண்டிருந்த போது, அன்றே clutterஐக் கொள்ளை அடிக்கப்போவதாக முடிவு செய்திருக்கிறான், Dick. அதை அவனிடமும் கூறியிருக்கிறான். மேலும், அவன், Dickக்கிடம் clutter வீட்டின் முழு வரைபடத்தையும் வரைந்து காண்பித்திருக்கிறான் -அவனுக்கு ஞாபகம் இருக்கும் அளவுக்கு. ஆனால், அவன் ஒரு தவறான விசயத்தை Dickஇடமும் Perryயிடமும் சொல்லியிருக்கிறான். அது Clutter வீட்டில் Safe இருக்கிறது என்பது! உண்மை என்னவென்றால், Clutter என்றுமே கையில் cash வைத்துக்கொள்வது கிடையாது, 20-30டாலர்கள் தவிர. ரேடியோவில் செய்தியைக் கேட்டவுடன், அவனுக்கு எல்லாமே விளங்குகிறது. KBI, துப்புக்கொடுப்பவர்களுக்கு கொடுப்பதாக அறிவித்திருந்த ஆயிரம் டாலர் பரிசுப்பணத்தை, நினைத்து அவன் approver ஆகிவிடுகிறான்.

மெக்ஸிக்கோவில் இருந்து திரும்பிய Perryயும் Dickம், தாங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டதை அறியாமல், போலி செக்குகளை –Dick, போலி செக்குகள் கொடுப்பதில் புலி!- இன்னும் கொடுத்துக்கொண்டு திரிகின்றனர். Perry போஸ்ட் ஆபிஸில் சென்று தனது பார்ஸலை எடுக்கும் போது கையும் கலவுமாக பிடிபடுகிறான். பார்ஸலில் ஷ¥ இருக்கிறது. ஆதாரம். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொல்கின்றனர். கொள்ளைஅடிக்கப்போனதாகவும், அங்கு கொள்ளைஅடிக்க ஏதும் இல்லை என்றபொழுது, அனைவரையும் சுட்டுவிட்டோம் என்றும் கூறுகின்றனர். Plan போட்டது Dick, ஆனால் சுட்டது Perry, என்று Dick சொல்கிறான். (அதுதான் உண்மையும் கூட) ஆனால் Perry இதை ஒத்துக்கொள்ள மறுக்கிறான். நான் தான் நான்கு நபர்களையும் சுட்டேன் என்றாலும், Dickக்கும் தண்டனை வேண்டும், அதனால் இரண்டு கொலைகளை Dick செய்தான், என்றும் இரண்டும் கொலைகளை நான் செய்தேன் என்றும் வாக்குமூலம் கொடுக்கிறான். இது Perryஇன் குணம். பொறாமை. தனக்கு இல்லையென்றால் யாருக்கும் இருக்கக்கூடாது. அவரிடம் இருக்கிறதா, தனக்கும் வேண்டும்!

இருவரின் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு, இருவருக்கும் தூக்குதண்டனை வழங்கப்படுகிறது.

***

கொலை நடந்த மறுதினம் பேப்பரில் செய்தியாகப் பார்க்கும் Truman Capote இதில் ஆர்வமாகி ஒரு ஆர்டிக்கிள் எழுதுவதற்காக Holcombக்கு வருகிறார். அங்கு சென்று விசாரித்ததில், இந்த சம்பவத்தை, இதில் ஈடுபட்ட மனிதர்களின் வேறுபட்ட குணங்களை அறிந்த capote, இது ஒரு முழு புத்தகமாக எழுதுவதற்கு ஏற்றது என்று முடிவு செய்கிறார். இது வெறும் கொலையைப் பற்றிய சஸ்பென்ஸ் நாவல் இல்லை. இந்த கொலையில் சஸ்பென்ஸ் முக்கியமில்லை. மனிதர்களின் குணாதிசயங்கள், சஸ்பென்ஸை பின் சீட்டுக்கு தள்ளிவிட்டு, அவை முன் சீட்டுக்கு தாவி வருகின்றன. நாவல் நெடுகிலும் மனிதர்களின் குணங்கள் அலசப்படுகின்றன.

அன்று அவர்கள் செய்தது நான்கு கொலைகள். அதன் மூலம், அவர்களுக்கு கிடைத்த லாபம் எவ்வளவு தெரியுமா? 40-50 டாலர்கள். நான்கு உயிர்களின் மதிப்பு 50 டாலர்கள். ஏன் கொலை செய்தார்கள்? பிற்பாடு விசாரிப்பின் போது, Perry இவ்வாறு சொல்கிறான்:

“I don’t know why,” he said, as if holding it to the light, and angling it now here, now there. “I was sore at Dick. The tough brass boy. But it wasn’t Dick. Or the fear of being identified. I was willing to take that gamble. And it wasn’t because of anything the Clutters did. They never hurt me. Like other people. Like people have all my life. Maybe it’s just that the Clutters were the ones who had to pay for it.”

அவனுக்கே தெரியவில்லை, ஏன் கொலை செய்தோமென்று! Just an impulsive reaction. Clutterஐக் கொன்ற பிறகு, மத்த எல்லோரையும் கொல்லவேண்டியதாயிற்று.

Peryயின் அப்பா, ஒரு முறை அவனை நடுராத்திரியில் நடுங்கும் குளிரில் துப்பாக்கி முனையில் வீட்டை விட்டு துரத்துகிறார். அந்த நினைவு அவன் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. சிறுவயதில் தாயும் தந்தையும் பிரிந்ததில், pery தாயுடன் இருக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அவள் ஒரு குடிகாரி. அவளால் தினமும் துன்புறுத்தபடுகிறான். பள்ளிக்கு சென்றால் இவனை (half-indian என்பதால்) மற்ற சிறுவர்கள் இவனை கேலி செய்கின்றனர். இதனால் ஒரு மனநோயாளியாக வளர்கிறான். எல்லோர் மீதும் பொறாமை கொள்கிறான். Capoteக்கு Pery மீது தான் பாசம். அல்லது பாசம் வைத்திருப்பதைப் போல நடிக்கிறார். (அது Capote திரைப்படத்தில் காட்டப்படுகிறது.)

Pery மன்நோயாளியாக வளர்ந்தததற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால் Nancy போன்ற சுறுசுறுப்பான அழகான அறிவான ஒரு பெண்னைக் கொல்வது என்பதை எந்த வகையில் ஒத்துக்கொள்வது?

அப்புறம் kenyon? அந்த சிறுவனின் முன்னால் அவனது தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்தது? தன் தந்தையின் இறுதிப் போராட்டத்தையும் உடலின் துள்ளலையும் பார்த்த அந்த சிறுவனின் கடைசி நிமிடம் எப்படி இருந்திருக்கும்? இந்த சத்தத்தையெல்லாம் கேட்டுக்கொண்டு தன் பிள்ளைகளின் கதி என்னவாயிருக்கும் என்று பதறிய அந்த தாயின் கடைசி நிமிடங்கள் எப்படி இருக்கும்?
எனவே தான் கடைசியில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் ஜூரியிடம் ஜட்ஜ் இவ்வாறு சொல்கிறார்::

“What are you going to do? What are you going to do with these men that bind a man hand and foot and cut his throat and blow out his brains? Give them the minimum penalty? Yes, and that’s only one of four counts. What about Kenyon Clutter, a young boy with his whole life before him, tied helplessly in sight of his father’s death struggle. Or young Nancy Clutter, hearing the gunshots and knowing her time was next. Nancy, begging for her life: ‘Don’t. Oh, please don’t. Please. Please.’ What agony! What unspeakable torture! And there remains the mother, bound and gagged and having to listen as her husband, her beloved children died one by one. Listen until at last the killers, these defendants before you, entered her room, focused a flashlight in her eyes, and let the blast of a shotgun end the existence of an entire household.”
Pausing, Green gingerly touched a boil on the back of his neck, a mature inflammation that seemed, like its angry wearer, about to burst.-”So, gentlemen, what are you going to do? Give them the minimum? Send them back to the penitentiary, and take the chance of their escaping or being paroled? The next time they go slaughtering it may be your family. I say to you,” he solemnly said, staring at the panel in a manner that encompassed and challenged them all, “some of our enormous crimes only happen because once upon a time a pack of chicken-hearted jurors refused to do their duty. Now, gentlemen, I leave it to you and your consciences.”

Peryயும் Dickக்கும் தூக்குதண்டனைக்கு காத்திருக்கும் போது அங்கே Andy என்றொரு பதின்மவயது சிறுவன் அழைத்துவரப்படுகிறான். அவன் அவனுடைய அப்பா அம்மா அக்கா எல்லோரையும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பச்சாதாபமும் இல்லாமல் சுட்டுக்கொன்றவன். ஏன் என்று அவனுக்கு தெரியவில்லை. ஏன் கொன்றான்? அவனுக்கு பெரிய gangsterஆக வேண்டும் என்ற எண்ணம் உண்டாம்.

Dick ஒருமுறை Andy பற்றி சொல்லும் போது இவ்வாறு சொல்கிறான்:
“I really liked Andy. He was a nut-not a real nut, like they kept hollering; but, you know, just goofy. He was always talking about breaking out of here and making his living as a hired gun. He liked to imagine himself roaming around Chicago or Los Angeles with a machine gun inside a violin case. Cooling guys. Said he’d charge a thousand bucks per stiff.”

சமுதாயம் இவர்களைப் பொறுப்பில்லாமல் நடத்துகிறதா? அவனது குடும்பம் அவனைக் சரிவர கவனிக்க வில்லையா? அல்லது மனிதர்கள் குற்றவாளிகளாகவேதான் பிறக்கிறார்களா என்ன? Pery வளர்ந்த விதம் சரியில்லை என்று ஒத்துக்கொள்ளலாம். ஆனால் Dick? Dick ஒரு பாசமான குடும்பத்தை சேர்ந்தவனே. ஒழுங்காக வளர்ந்தவனே. ஆனால் அவன் மாறியதற்கு காரணம் பணத்தாசை. ஆடம்பரம். ஆடம்பரத்தால் போலி செக் கொடுக்க ஆரம்பித்தான். ஆடம்பரம் என்பது புலி வாலைப் பிடித்த கதைதான். செக் மோசடிக்கு உள்ளே சென்றவன், நான்கு நபர்களை கொலைசெய்யும் தீட்டம் தீட்டி, (ஆனால் அவன் ஒருவரைக்கூட கொல்லவில்லை) தூக்குதண்டனைக் கைதியாகி, கடைசியில் தூக்கிலிடப்பட்டு இறந்தான். இதற்கு சமுதாயம் எப்படி பொறுப்பாகும்? சமுதாயம் அவனை ஆடம்பரமாக வாழவேண்டும் என்று வற்புறுத்தியதா என்ன? ஆனால் அவன் மாறியதற்கு, நடந்த ஒரு ஆக்சிடென்ட் காரணமாக இருக்கலாம் என்று விவாதிக்கப்படுகிறது. (Richard Hickock தான் Dick.)

Dickஐப் பற்றிய Testification:
“Richard Hickock is above average in intelligence, grasps new ideas easily and has a wide fund of information. He is alert to what is happening around him, and he shows no sign of mental confusion or disorientation. His thinking is well organized and logical and he seems to be in good contact with reality. Although I did not find the usual signs of organic brain damage-memory loss, concrete concept formation, intellectual deterioration-this cannot be completely ruled out. He had a serious head injury with concussion and several hours of unconsciousness in 1950-this was verified by me by checking hospital records. He says he has had blackout spells, periods of amnesia, and headaches ever since that time, and a major portion of his antisocial behavior has occurred since that time. He has never had the medical tests which would definitely prove or disprove the existence of residual brain damage. Definitive medical tests are indicated before a complete evaluation can be said to existஸ Hickock does show signs of emotional abnormality. That he knew what he was doing and still went ahead with it is possibly the most clear-cut demonstration of this fact. He is a person who is impulsive in action, likely to do things without thought of consequences or future discomfort to himself or to others. He does not seem to be capable of learning from experience, and he shows an unusual pattern of intermittent periods of productive activity followed by patently irresponsible actions. He cannot tolerate feelings of frustration as a more normal person can, and he is poorly able to rid himself of those feelings except through antisocial activityஸ His self-esteem is very low, and he secretly feels inferior to others and sexually inadequate. These feelings seem to be overcompensated for by dreams of being rich and powerful, a tendency to brag about his exploits, spending sprees when he has money, and dissatisfaction with only the normal slow advancement he could expect from his jobஸ He is uncomfortable in his relationships to other people, and has a pathological inability to form and hold enduring personal attachments. Although he professes usual moral standards he seems obviously uninfluenced by them in his actions. In summary, he shows fairly typical characteristics of what would psychiatrically be called a severe character disorder. It is important that steps be taken to rule out the possibility of organic brain damage, since, if present, it might have substantially influenced his behavior during the past several years and at the time of the crime.”

இது Peryஐப் பற்றிய Testification.
: “Perry Smith shows definite signs of severe mental illness. His childhood, related to me and verified by portions of the prison records, was marked by brutality and lack of concern on the part of both parents. He seems to have grown up without direction, without love, and without ever having absorbed any fixed sense of moral values.He is oriented, hyper alert to things going on about him, and shows no sign of confusion. He is above average in intelligence, and has a good range of information considering his poor educational backgroundஸ Two features in his personality make-up stand out as particularly pathological. The first is his ‘paranoid’ orientation toward the world. He is suspicious and distrustful of others, tends to feel that others discriminate against him, and feels that others are unfair to him and do not understand him. He is overly sensitive to criticisms that others make of him, and cannot tolerate being made fun of. He is quick to sense slight or insult in things others say, and frequently may misinterpret well-meant communications. He feels he has great need of friendship and understanding, but he is reluctant to confide in others, and when he does, expects to be misunderstood or even betrayed. In evaluating the intentions and feelings of others, his ability to separate the real situation from his own mental projections is very poor. He not infrequently groups all people together as being hypocritical, hostile, and deserving of whatever he is able to do to them. Akin to this first trait is the second, an ever-present, poorly controlled rage-easily triggered by any feeling of being tricked, slighted, or labeled inferior by others. For the most part, his rages in the, past have been directed at authority figures-father, brother, Army sergeant, state parole officer-and have led to violent assaultive behavior on several occasions. Both he and his acquaintances have been aware of these rages, which he says ‘mount up’ in him, and of the poor control he has over them. When turned toward himself his anger has precipitated ideas of suicide. The inappropriate force of his anger and lack of ability to control or channel it reflect a primary weakness of personality structureஸ. In addition to these traits, the subject shows mild early signs of a disorder of his thought processes. He has poor ability to organize his thinking, he seems unable to scan or summarize his thought, becoming involved and sometimes lost in detail, and some of his thinking reflects a ‘magical’ quality, a disregard of reality. He has had few close emotional relationships with other people, and these have not been able to stand small crises. He has little feeling for others outside a very small circle of friends, and attaches little real value to human life. This emotional detachment and blandness in certain areas is other evidence of his mental abnormality. More extensive evaluation would be necessary to make an exact psychiatric diagnosis, but his present personality structure is very nearly that of a paranoid schizophrenic reaction.

ஆனால் அன்றைய kansas கோர்ட்டில் சட்டதிட்டங்கள் வேறு மாதிரியாக இருந்தது. விட்னஸ், “ஆம்”, “இல்லை” என்ற பதில்களை மட்டுமே கூறலாம். விளக்கம் சொல்லமுடியாது. அதனால் இருவரையும் test செய்த டாக்டர், இருவரும், மனநோயாளிகள் இல்லை (மேலோட்டமாகப் பார்க்கும் போது!) என்றே testify செய்திருக்கிறார்.

(Dick மற்றும் Perryஐப் பற்றி officialஆக அந்த டாக்டர் எந்த சான்றும் வழங்கவில்லை என்றாலும், விளக்கம் கேட்கப்படிருந்தால், அவர் மேலே சொன்னமாதிரி தான் சொல்லியிருப்பார்!)

Capoteக்கு ஒரு எண்ணம், நாவல் தோறும் இருக்கிறது. அது : கொலையாளிகளுக்கு தீர்ப்பு முறையாக வழங்கப்படவில்லை. அவர்கள் தரப்பு வாதங்களை யாரும் சரிவரக்கேட்கவில்லை. கோர்ட்டில் அவர்களின் குரல்கள் சரியாக ஒலிக்கவில்லை என்பதே. ஆனால் கொலைசெய்யப்பட்ட அந்த நால்வரின் குரல்கள் கொலையாளிகளின் மண்டையில் உரைத்ததா? Nancy “No! No! Please! Please!” என்று கெஞ்சிக் கூத்தாடினாளே? அது அவர்களின் காதுகளில் விழவில்லையா?

இறுதியாக Dick தூக்குமேடைக்கு செல்லும் முன்னர் இவ்வாறு கூறுகிறான்:
Hickock nodded. “I just want to say I hold no hard feelings. You people are sending me to a better world than this ever was”; then, as if to emphasize the point, he shook hands with the four men mainly responsible for his capture and conviction, all of whom had requested permission to attend the executions: K.B.I. Agents Roy Church, Clarence Duntz, Harold Nye, and Dewey himself. “Nice to see you,” Hickock said with his most charming smile; it was as if he were greeting guests at his own funeral

வேறொரு கொலைவழக்கில் -தொடர் கொலைகள்- கைது செய்யப்பட்ட Latham, இவ்வாறு சொல்கிறான்:
the world was hateful, and everybody in it would be better off dead. “It’s a rotten world,” Latham said. “There’s no answer to it but meanness. That’s all anybody understands-meanness. Burn down the man’s barn-he’ll understand that. Poison his dog. Kill him.” Ronnie said Latham was “one hundred percent correct,” adding, “Anyway, anybody you kill, you’re doing them a favor.”

தவறுகள் –எது தவறு? எது சரி? யாருக்கு தெரியும்? என்று வியாக்கியானம் பேசுபவர்களுக்கு: விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறுவது தவறு! கடவுள் விதித்த விதிகளையும், மனிதன் விதித்த விதிகளையும்– செய்யும் அனைவரும் தாங்கள் நல்லவர்களே என்று தான் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். தங்களைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் யாவரும் தங்களுக்கு எதிராக இருப்பதாக அவர்கள் கற்பனை செய்துகொள்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் இந்த கற்பனை நிஜமாகவே ஆகிவிடுவதுதான் துரதிர்ஷ்டம்.

***

Capote படம் நன்றாகவே இருந்தது. கொஞ்சம் slow. Capoteஐப் பற்றி அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியது இந்தப்படம். Capoteஐப் பற்றி அறிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது? அவர் ஒரு எழுத்தாளர் என்பதை விட எழுத்தாள-நடிகர் என்று சொன்னால் மிகையாகாது. அல்லது A writer full of lies. Of course, A writer has to lie, isnt it? கதையில் பொய் சொல்லலாம். கதை என்றாலே பொய் தானே? ஆனால் நிஜ வாழ்க்கையில்?

Pery மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு kindof attraction இருந்துவந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.சொல்லப்போனால், Capoteயே ஒரு open Gayதான். In Cold Blood புத்தகத்தை முக்கால் வாசி முடித்துவிட்ட நிலையில் ஒரு நாள் Peryஐ சந்திக்கவருகிறார் Capote. புத்தகம் எழுத ஆரம்பிக்கும் முன்னரே, புத்தகத்துக்கு பெயரும் வைத்துவிட்டார். (பெயர் வைத்ததோடு மட்டுமில்லாது, இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்றாக இந்த புத்தகம் பின்னாளில் அறியப்படும் என்று தன் நண்பர்களிடம் சொல்கிறார்!!) ஆனால், Pery, புத்தகத்துக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் என்று அவரிடம் கேட்கும்போது, “இன்னும் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. புத்தகத்துக்கு பெயரும் வைக்கவில்லை” என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார். Pery, Capoteஐ நம்பினானா என்பது தெரியவில்லை. நம்பியிருக்கவேண்டும். இல்லையேல், மாதக்கணக்கில் ஜெயிலில் உண்ணாவிரதம் இருக்கும் Perry, Capote வந்து உணவு கொடுத்தவுடன் ஏன் சாப்பிடவேண்டும்? (படத்தில் capoteதான் Perryயின் உண்ணாவிரத்தை முடித்துவைத்தார் என்று காட்டப்படுகிறது. ஆனால் நாவலில், capote, Pery எப்பொழுதும் கனவுகாணும் மஞ்சள் நிறப்பறவை தான், அவனின் உண்னாவிரத்தை முடித்துவைத்தது, என்று எழுதுகிறார். Capoteதான் அந்த பறவையோ?)

Capote புத்தகத்தை கிட்டத்தட்ட எழுதி முடித்துவிடுகிறார். இன்னும் க்ளைமேக்ஸ் மட்டும் தான் பாக்கி. Capote, நேரடியாக Peryயிடம் அன்று இரவு என்ன நடந்தது என்று கேட்டறிய விரும்புகிறார். முதலில் அவன் சொல்ல மறுத்து பிறகு எல்லாவற்றையும் capoteயிடம் சொல்கிறான். எல்லாம் எழுதியாச்சு. இன்னும் தூக்கு தண்டனைதான் பாக்கி. கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை நிரைவேற்றப்பட்டுவிட்டால், புத்தகத்தை publish செய்துவிடலாம். ஆனால், விதி விளையாடியது! Perry மற்றும் Dickக்கு தூக்குதண்டனையை நிறைவேற்ற கோர்ட் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. Capote நாவலை எழுதிமுடிக்க முடியவில்லை. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் இந்த ஒற்றை நாவலுக்காக செலவழித்திருக்கும் Capote, மானசீகமாக Perryக்கு தூக்குதண்டனை விரைவில் நிறைவேற்றப்படவேண்டும் என்று நினைக்கிறார். விரும்புகிறார். அவரது தோழியிடமும் –Harper Lee, To Kill A Mocking Birdஐ எழுதியவர்!- இதைச் சொல்கிறார். Perry உதவி கேட்டு எழுதும் கடிதங்களுக்கு பதில் எழுத மறுக்கிறார் capote. ஒரு வழியாக தடை விலக்கப்பட்டு, கொலையாளிகளுக்கு தூக்குதண்டனைக்கு நாள் குறிக்கப்படுகிறது. கடைசியில், அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளன்று Capote, அவர்களைச் சந்திக்கிறார். எந்த முகத்தோடு? (அதற்காக வாடகைக்காக முகம் வாங்கமுடியும்?!) “I am sorry! I have done all I could!” என்று அழுகிறார் Capote. உண்மையாகவே அழுகிறார். தன்னால் எந்த உதவியும் செய்யமுடியாமல் போனதை நினைத்து அழுதார். தன் உதவி தனக்கே பாதகமாக -நாவலை முடித்து வெளியிட முடியாது!- அமையும் என்று நினைத்து இதுநாள் வரையில் அமைதியாக இருந்துவிட்டார். ஆனால் அந்த குற்ற உணர்ச்சி, இப்பொழுது கன்ணீராக வெளிவருகிறது. Perry “i know” என்கிறான். (எதை அவன் அறிவான், என்பதை அவன் மட்டுமே அறிவான்!)

இந்த நாவலுக்கு அப்புறம் வேறு எந்த நாவலையும் Capote எழுதி முடிக்கவில்லை என்றும், கடைசியில் குடிப்பழக்கத்தில் மூழ்கி இறந்ததாகவும், படத்தின் முடிவில் காட்டப்படுகிறது.
***

காந்தம்-8

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)

முன்னும் பின்னும்.
3

சென்னை. எழும்பூர் ரயில் நிலையம்.

“…திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்ப்ரஸ் இன்னும் சிறிது நேரத்தில் முதலாவது ப்ளாட்பாரத்திலிருந்து புறப்படும்” இதே வரிகளை மீண்டும் அந்தப்பெண் ஹிந்தியில் சொல்ல ஆரம்பித்தார். அந்த இடமே மிகவும் நெருக்கடியாக இருந்தது. பயணிகளும் பயணிகளை வழியனுப்ப வந்தவர்களும் ப்ளாட்பாரத்தை ஆக்கரமிப்பு செய்து கொண்டிருந்தனர். கோவர்த்தன் அந்த சிறிய புத்தகக்கடையில் நுழைந்து அங்கிருந்த சொற்ப புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்தார். நக்கீரன், ரிப்போர்ட்டர், ஆனந்த விகடன், துக்ளக், குமுதம், ஜூவி, அவுட்லுக், ·ப்ரண்ட் லைன், த வீக், பிஸினஸ் வேர்ல்ட் என்று சிக்கின அனைத்தையும் எடுத்துக்கொண்டார். கவுண்டரில் வந்து பில் கட்டியபொழுது கவுண்டரில் இருந்த அந்த பையன் இவரை அடையாளம் கண்டுகொண்டான். “கோ. சார்” என்றான். கோவர்த்தன் சிரித்து தலையாட்டிவிட்டு “நம்ப பத்திரிக்கை வந்திருக்குமே” என்றார். “ஆமா சார் இப்போ தான் வந்தது. இன்னும் பண்டில் பிரிக்கல. வேணுமா சார்?” “ம்ம் ஒன்னு கொடு” அந்த பையன் கீழே குனிந்து இன்னும் பிரிக்கப்படாத பண்டலைப் பிரித்து “நான்காவது தூண்” என்ற கவர்ச்சிகரமான பத்திரிக்கையை எடுத்து நீட்டினான். கோவர்த்தன் அதை வாங்கிக்கொண்டு அதற்கும் சேர்த்து பில் கட்டினார். கோவர்த்தன் அந்த “நான்காவது தூண்” பத்திரிக்கையை உற்றுப்பார்த்தார். “அணி மாறும் கட்சிகள். ஜெயிக்கப்போவது யார்?” – அரசியல் வித்தகர் கோ வின் பிரத்தியேக கட்டுரை என்ற தலைப்பு கனத்த செந்நிரத்தில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. கோ தனக்குள் சிரித்துக்கொண்டார். கல்லாவிலிருந்த அந்த பையன் கேட்டான் “சார் இது உங்க பத்திரிக்கை. நீங்களே வாங்கறீங்களே சார்?”. “என் பத்திரிக்கையை நானே வாங்கலீனா வேற யார் வாங்குவா?” என்று தனது பானியில் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு “அதில்லப்பா, எப்பொழுதும் கொண்டுவருவேன். இன்னிக்கு மறந்துட்டேன். நெல்லைய பிடிக்கனும் வரட்டா” என்று சொல்லிவிட்டு கீழிறங்கி தனது கோச்சுக்கு சென்றார்.A3.

2 டயர் ஏசி கோச்சில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இரண்டு மூன்று பேர் மட்டுமே இருந்தனர். இவருக்கு எதிரே உட்கார்ந்திருந்தவர் வந்தவுடன் இவரைக் கண்டுகொண்டு சிரித்தார். கோ தனது பெட்டியிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் தலையணையை எடுத்து காற்று ஊதி பெரிதாக்கினார். பிறகு அதை தனது முதுகுக்கு கொடுத்து நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். வாங்கின புத்தகங்களை ஒவ்வொன்றாக வேகமாக திருப்ப ஆரம்பித்தார். இன்னும் பரிட்சைக்கு இரண்டு நிமிடங்களே இருக்கிறது என்கிற பொழுது ஒரு மாணவன் எப்படி திருப்புவானோ அப்படி திருப்பினார் அவர். ஒரு கால் மணி நேரத்தில் அத்தனை பத்திரிக்கைகளையும் ஒரு சுற்று படித்திருந்தார். தனது மிகப்பெரிய கண்ணாடியைக் கழட்டி வைத்துவிட்டு, மௌனமாக சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். பிறகு தனது பேக்கைத் திறந்து அதிலிருந்து பார்சல் ஒன்றை எடுத்து பிரித்தார். இட்லியின் வாடை மூக்கைத் துளைக்க, எதிரே உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தார். அவர் ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருந்தார்.

இட்லியின் வாசனை அவரையும் சென்றடைந்திருக்க வேண்டும். அவர் நிமிர்ந்து பார்த்தார். ஐம்பது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். தலை நிறைய முடி. சுருள் சுருளாக. பெரிய கண்ணாடி. இறங்கு மீசை. முள் முள்ளாக மூன்று நாள் தாடி. கூர்மையான மூக்கு. ஒள்ளியான ஆனால் திடகாத்திரமான தேகம். வெள்ளை சட்டையின் மேல் இரண்டு பட்டன்களை கழட்டிவிட்டிருந்ததால், கழுத்தில் இருந்த புலிநகம் அழகாக தெரிந்தது. கோ-வைப் பார்த்து புன்னகைத்தார்.

“இட்லி சாப்படறீங்களா?” “இல்ல Mr.கோ. நான் வீட்டிலேயே சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க” “இதுவும் வீட்ல பண்ணதுதான். என் பெண்டாட்டி எப்பவுமே அதிகமாத்தான் வெச்சுவிடுவா. உங்களுக்கும் இருக்கு. ரெண்டு இட்லி சாப்பிடுங்களேன்” “பரவாயில்ல கோ சார். எனக்கு பசி இல்ல. நான் பேசிட்டிருக்கேன். நீங்க சாப்பிடுங்க. பைதவே, என் பெயர் சிவா.” சிவா தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி பக்கத்தில் வைத்தார். கோ தன் தலையை திருப்பி சாய்வாக வைத்துக்கொண்டு அந்த புத்தகத்தின் பெயரைப் படிக்க முயற்சித்தார் “இன்டர் லிங்கிங் ஆப் ரிவர்ஸ்.”.சற்று வியப்பாக சிவாவைப் பார்த்தார். சிவா புத்தகத்தை எடுத்து கோ-விடம் கொடுத்தார். “இப்போ தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்” என்றார்.

கடைசி இட்லியை சாப்பிட்டு முடிக்கும் போது “சோ, நீங்க இந்திய ஆறுகளையெல்லாம் ஒன்றாக சேர்க்க முடியும்னு நினைக்கிறீங்க?” “முடியும். முடியாதென்பது எதுவும் இல்லை. ஆனால் உங்க அளவுக்கு இதில் எனக்கு விசயம் தெரியாது. just reading. thats it”

***

ரயில் சீரான வேகத்தோடு சென்று கொண்டிருந்தது. ரயிலின் தாலாட்டலில் அனைவரும் தூங்கிப்போயிருந்தனர். கோவர்த்தனுக்கு அடிவயிறு முட்டிக்கொண்டு வந்தது. ரயிலின் குலுங்களில் மேலும் அது அதிகமானது. சரி எழுந்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தவராய் தனது கண்ணாடியைத் தேடி எடுத்து அணிந்து கொண்டார். எழுந்து உட்கார்ந்தார். எதிரே, சிவா ஒரு சின்ன டேபிள் லேம்பின் துணையுடன் ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்தார். கோ எழுந்த சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்து சிரித்தார். கோ வெறுமனே சிரித்துவிட்டு எழுந்து சென்றார்.

***

“என்ன சிவா சார், பெரிய படிப்பாளியா இருப்பீங்க போல இருக்கு? இப்போ என்ன புத்தகம்? அதே interliking of rivers தானா?” என்று கேட்டக்கொண்டே மீண்டும் தன் படுக்கைக்கு வந்தார் கோ. சிவா தன் கையில் வைத்திருந்த அழகான போர்ஸீலியன் கோப்பையிலிருந்து காபியை உறிஞ்சிக்கொண்டே, “ம்ம்..very intersting” என்றார். “என்ன சொல்றாங்க அந்த புத்தகத்தில?” “ம்ம் இன்னவரைக்கும் ஒன்னும் பெரிசா இல்ல. ஆனா ஒரு லட்சத்து அறுபதினாயிரம் கோடி ரூபாய் செலவாகும்ங்கறது மட்டும் புரியுது..காபி சாப்படறீங்களா?” “இல்ல. நீங்க சாப்பிடுங்க. பரவாயில்ல” “நான் travel பண்ணும் போது எப்பவுமே flaskல காபி எடுத்துட்டு போவேன். நைட்ல இப்பவெல்லாம் எனக்கு தூக்கம் வற்ரதேயில்ல. இன்னும் காபி நிறைய இருக்கு. உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க. dont be shy” “குளிருக்கு சூடா காபி குடிச்சா நல்லா தான் இருக்கும். ம்ம்ம்..கொடுங்க”

flaskஐ திறந்து அதன் மூடியில் கொஞ்சம் காபியை ஊற்றி கோவிடம் கொடுத்தார் சிவா. “நான் எப்போதுமே ப்ளாக் காபி தான். நீங்களும் டயாபடீஸ் பேஷண்ட் தான். உங்களுக்கும் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன்” “வாவ். நான் டயாபடீஸ் பேஷண்ட்ங்கறதுகூட உங்களுக்கு தெரிஞ்சிருக்கு..ம்ம்” “என்ன சார் இப்படி கேட்டுட்டிங்க? எவ்வளவு பெரிய எழுத்தாளர் நீங்க? எவ்வளவு அரசியல் ஞானம். எவ்வளவு ராஜதந்திரம். கிட்டத்தட்ட ஒரு கிங்மேக்கர் நீங்க. உங்களப்பத்தி தெரியாம இருக்குமா?” “என்ன சிவா என்ன ரொம்ப புகழறீங்க” கோ காபியை முகர்ந்து விட்டு, முதல் மடக்கை ரசித்து விழுங்கினார்.

ரயில் வேறொரு ரயிலுக்காக காத்திருந்தது.

***

பணம் ஒரு பிரச்சனை தான் என்றாலும் நதிகளை இணைக்கறதில வேறு சில ஜியோகரபிகள் பிரச்சனைகள் இருக்குங்கறத நிறைய பேர் மறந்திடறாங்க” காபியைக் குடித்துமுடித்து flaskக்கின் மூடியை சிவாவிடம் கொடுத்தார் கோவர்த்தன். சிவா மூடியை வாங்கி மெதுவாக flaskஐ மூடினார். கண்ணாடியைக் கழற்றினார்.

“உன்ன மாதிரி ஆட்கள் இருக்கறவரைக்கும் எதுவுமே பிரச்சனை தான் கோ” கோ சட்டென நிமிர்ந்து பார்த்தார். “வாட்?” “50 கோடி நீ வாழ்க்கையில பாக்காத பணம் இல்ல?” “என்ன சொல்ற?” “என்ன சொல்றனா? ஹ¤ம்..50 கோடி கோவர்த்தன். 50 கோடி.” “யார் நீ?” “செல்வி ஞாபகம் இருக்கா?” “ய்ய்ய்யாய்யார் ந்நீ” “ரொம்ப சின்ன பொண்ணுல்ல அவ? நல்லாயிருந்துச்சா அன்னிக்கு? அங்கிள் அங்கிள்ன்னு உன்மேல எவ்ளோ பாசமா இருந்தா அவ?” “நீ நீ” கோ கையை தூக்க முயற்சித்தார் முடியவில்லை. “என்ன பாக்குற? உன்னால இனிமே கையையோ காலையோ அசைக்க முடியாது. எங்க try பண்ணு” “த் த் த் த் ..ன்..ன்..ன்” கோவின் கண்கள் பிதுங்கின. “ம்ம்..இப்போ எப்படி இருக்கு? Are you alright?” “த் த் த் த் த் த்” சிவா தனது சுருள் முடியை கழற்றி கீழே வைத்தார். முன் தலை வழுக்கை, ஜன்னலில் வழிந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் மின்னியது. “சூ.. சூ.. சூ..” “பரவாயில்லையே..இன்னும் என்ன நீ மறக்கல. yes. the same old stupid surya” “நீ.. நீ..” “உன்னால பேச முடியாது கண்ணா. என்கிட்ட காபி வாங்கி குடிக்கறதுக்கு முன்ன நீ யோசிச்சிருக்கனும். நல்ல ஜாலியா என்ஜாய் பண்ணு. உன் கூட்டாளிகள உனக்கு துணைக்கு அனுப்பி வெக்கறேன். Goodbye.”

கோ-வுக்கு ரத்தகுழாய்கள் வெடித்துவிடுவது போல இருந்தது. வாயில் சூடாக செக்கச்சிவப்பாய் ஒரு திரவம் வெளியேறியது. கண்கள் செருகின. “டாடி என்ன காப்பாதுங்க டாடி. ப்ளீஸ் அங்கிள் வேண்டாம் அங்கிள். வேண்டாம் அங்கிள். எனக்கு பயமா இருக்கு அங்கிள்.டாடி.டாடி.டாடி..” என்று ஒரு சிறுமி அழும் சத்தம் மட்டும் அவர் காதில் ரீங்காராமய் ஒலித்துக்கொண்டிருந்தது. கண்கள் நிலைகுத்தின.

ரயில் சிவப்புவிளக்கைப் பார்த்ததும் நின்றது.

***

சிவா கீழிறங்கினார். கையில் வைத்திருந்த மிகச்சிரிய டார்ச் லைட்டை உபயோகித்து தண்டவாளத்தை கடந்தார். கடும் இருட்டு. சிறிது தூரம் நடந்து சென்று முட் புதர்களைக் கடந்தார். நடந்து கொண்டேயிருந்தார். மேலே நிமிர்ந்து நிலாவைப் பார்த்தார். சிரித்துக்கொண்டார். செல்போனை எடுத்து மெஸேஜ் கொடுத்தார். காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் மோட்டார் பைக் ஒன்று வந்து நின்றது. மோட்டார் பைக்கில் வந்தவன் வேகவேகமாக ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு, கீழிறங்கி, சிவாவின் கைகளை குலுக்கி கட்டியணைத்துக்கொண்டான், அவன் நா தழுதழுத்தது, “வணக்கம் தலைவா. என் பெயர் ஜீவா. போகலாம்” என்றான்.

அந்த அமைதியான இரவின் ரம்மியத்தை குத்தி கிழித்துக்கொண்டு சென்றது அந்த மோட்டார் பைக்.

***