நீல பத்மநாபன், ஞானகூத்தன், மதில்கள், முத்து, முராகமி, zen

ஒரு மகிழ்ச்சியான செய்தி: ஜுன் 21ஆம் தேதி எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஸ்ரீநிதி என்று பெயரிட்டிருக்கிறோம்.

***

ஞானக்கூத்தன் கவிதைகள் என்கிற விருட்சம் வெளியிட்ட கவிதைத் தொகுப்பை படித்துக்கொண்டிருக்கிறேன் அவ்வப்போது. ஞானகூத்தன் 1968 -லிருந்து 1994 வரை எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.

என்னைக் கவர்ந்த கவிதைகள் சில:

அதனால் என்ன

பாடச் சொன்னால் வெட்கப்படுகிறார்கள்
பேசச் சொன்னால் கூச்சப்படுகிறார்கள்
ஆடச் சொன்னால் கோணுகிறார்கள்
நடிக்கச் சொன்னால் தயங்குகிறார்கள்
வரையச் சொன்னால் வராதென்கிறார்கள்
கவிதை வருமா என்றால் உடனே
எண்பது பக்க நோட்டுப் புத்தகம்
இரண்டை எடுத்து நீட்டுகிறார்கள்.

அதான?!

நாய்

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பாப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவிள் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குரைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?

பிரச்னை

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.

இந்த கவிதை தான் முத்தாய்ப்பு:

உயர்திரு பாரதியார்

சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்.

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்
துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்
கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ
கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்
கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்
பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்
நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக்கொண்டு.

மணியில்லாத பொழுது தண்டவாளத்துண்டுகள் மணிகளாக இருக்கின்றன. என்றாலும் ஒரு போது தண்டவாளத் துண்டு மணியாக முடியாது.

***

நீல.பத்மநாபன் அவர்கள் எழுதிய இலையுதிர் காலம் படித்து முடித்தேன். சுவராஸ்யம் இல்லை. சுவராஸ்யத்தைக் கூட விட்டுத்தள்ளுங்கள், நீல பத்மநாபன் அவர்களின் நேர்காணலை தீராநதியில் படித்தேன். 1968ல உறவுகள் என்கிற அழகான (நான் இன்னும் படிக்கவில்லை) நாவலை எழுதியவர். அன்றைக்கே விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டியதாம். அப்ப நான் பிறக்கவேயில்ல! அடப்பாவிகளா. அவருக்கு எப்ப விருது கிடைத்திருக்கிறது பாருங்கள்.

வெளிநாட்டில் எல்லாம் விருது பெற்ற பின்னர், அந்த எழுத்தாளரின் புத்தகங்கள் அதிகமாக விற்க ஆரம்பிக்கும். இங்கு எப்படியோ? ஆனால் இப்பாவாவது கொடுத்தார்களே. சந்தோஷம். விருது செய்தியையும் நேர்காணலையும் படித்த பின்னர்தான் நான் நூலகத்தில் தேடிப்பிடித்து இலையுதிர் காலத்தை எடுத்து படித்தேன் என்பதை இங்கு சொல்லியாகவேண்டும். அவர் 2005 எழுதிய புத்தகம் இலையுதிர் காலம். இதை முன்வைத்துத்தான் சாகித்திய அகடெமி விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. செய்யாமல் விட்ட ஒன்றை காலம் போன கடைசியில் செய்து சந்தோஷப்பட்டுக்கொள்கிறதோ அகடெமி? தெரியவில்லை. ஆனால் இலையுதிர்காலம் அகடெமி விருதுக்கு ஏற்றதா என்பது சந்தேகமே.

பேசாமல் சாகித்திய அகடெமி விருதை, வாழ்நாள் சாதனை விருது போல அறிவித்துவிடலாமே? நாங்கள் சாகித்திய அகடெமி விருது வாங்கிய ஒரு புத்தகத்தை தேடிகண்டுபிடித்து, நன்றாக இருக்குமென்று நினைத்து படித்து ஏமாற்றமடைய மாட்டோமே!

அவருடைய “தேரோடும் வீதி” அடுத்து படிக்க எடுத்து வைத்திருக்கிறேன்.

***

வைக்கம் முஹம்மது பஷீர் எழுதிய மதில்கள் என்கிற நாவலை ஏர்போர்ட்டில் வாங்கினேன். இன்னொன்று சொல்ல வேண்டும், சாருநிவேதிதா எழுதிய ராசலீலா நாவலையும் பார்த்தேன். 750 ரூபாயாம். வேலில போற ஓணான 750 ரூபாய் கொடுத்தா வாங்குவார்கள்? பேசாமல் வைத்துவிட்டேன். அதை வாங்கி படித்துவிட்டு, மூளை குழம்பி மேலும் ஒரு புல் தரையில் ரத்தம் போன்ற ஒரு கதையை எழுதினேன் என்றால், என்னுடைய ப்ளாக்குக்கு வரும் விசிட்டர்கள் ரூம் போட்டு என்னை அடித்தாலும் அடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நான் எழுதிய சிறுகதைகளிலே எனக்கு மிகவும் பிடித்தது புல் தரையில் ரத்தம் கதை தான். அந்த கதை ஒரு உண்மை சம்பவமும் கூட. The strait times-இல் செய்தியாக அதைப் படித்தேன்.

“Arrested for killing his father in 1958, Mr James was ruled mentally ill by a judge, sent to an asylum for the criminally insane – and then forgotten.

Decades after his doctors pronounced him cured, he remained trapped in a criminal justice nightmare. The hospital could release him only to the prisons authority. The prisons authority could pick him up only under a court order. The courts never called for him because they could not find his file.

When he was finally released, he became a hero in Sri Lanka, and his ordeal a source of embarrassment as it exposed the bloated, inefficient bureaucracy. ”

அதை அப்படியே ஒரு கதையாக எழுதலாம் என்று நினைத்தேன், சாருநிவேதிதாவின் ஜீரோ டிகிரி அப்பொழுதுதான் படித்து முடித்திருந்த நிலையில், என்னால் அப்படித்தான் எழுத முடிந்தது. மேலும் கதையின் நிஜ ஹீரோவான Mr.James ஒரு மனநிலை தவறியவர் என்பதாலும் மனப்பிறள்வு நிலையிலே எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

***

மதில்கள் நாவல் இல்லை. அது ஒரு குறு நாவல் அல்லது சிறுகதையை போன்ற ஒன்றே. என்னைக் கேட்டால் சற்றே பெரிய சிறுகதை என்று வைத்துக்கொள்ளலாம். “வேணுங்கறது வேணுங்கறபோது கிடைக்காது” என்பது தான் கதையின் கரு.

இதையே அழகாக:
“ஒத்திகை செய்து நடத்தப்படும் நாடகமல்ல வாழ்வு. நம் திட்டங்களையும் தீர்மானங்களையும் சிதறடித்து எதிர்பாரா தருணங்களில் ஓர் விபத்து போல மோதி நம்மை வீழ்த்தி பெப்பே காட்டுவதாகவே இருக்கிறது”
என்கிறார் சந்தியா நடராஜன். (மதில்கள்: பதிப்புரை)

வைக்கம் முஹம்மது பஷிர் எழுதிய கதைகள் எல்லாம் அவரது சொந்த அனுபவங்கள் என்று சொல்லுவார்கள். வைக்கம் முஹம்மது பஷீர் சிறை சென்றிருக்கிறாரா என்பது தெரியாது.

“ஆனால் இப்போது இந்த ஜெயில் வாழ்க்கை முழுக்க முழுக்க இலக்கியத்துக்காக.. நினைத்துப் பார்த்த போது எனக்கே பெருமிதமாக இருந்தது.” (ப:16)

இந்த கதையை சுரா மஞ்சரியில் மொழிபெயர்த்திருந்திருக்கிறார்.

ஒரு இலக்கியவாதி சிறை செல்கிறார். சிறையில் சில தலைவர்களும் உடன் இருக்கிறார்கள். சிறையின் மதில்கள் தான் “மதில்கள்”. சிறையில் அந்த இலக்கியவாதி ஆனந்தமாக பொழுதைக் கழிக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இவரைத் தவிர. தலைவர்கள் எல்லாரும் வெளியே சென்ற பின்னர், இந்த இலக்கியவாதி மட்டும் தனியே பொழுதைக் கழிக்கிறார். அப்பொழுதுதான் பெண்கள் பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. இருவரும் பேசிக்கொள்கிறார்கள். பொருட்கள் பறிமாறிக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்தது கிடையாது. இருவருக்கும் அன்பு பெருக்கெடுக்கிறது. காதலாக மலர்கிறது. இருவரும் பார்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இருவரும் தங்களது அடையாளங்களை சொல்லிவைத்துக்கொள்கிறார்கள். அந்த இலக்கியவாதி நாளை அவளை பார்த்து விடலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் பொழுது, விடுதலை செய்யப்படுகிறார்.

“வை ஷ¤ட் ஐ பி ·ப்ரீ… ஹ¥ வான்ட்ஸ் ·ப்ரீடம்?” என்கிறார் அவர்.

அது தான் வாழ்க்கை! அழகான கதை!

***

ஹருக்கி முராக்கமியின் “The wind-up bird chronicle” படித்துக்கொண்டிருக்கிறேன். ரொம்ப காலமாக படித்துக்கொண்டிருக்கிறேன், கொஞ்சம் கொஞ்சமாக. On and Off. 600 பக்க நாவல் இது. Shantaram 900 பக்க நாவல். ஆனால் Shantaramஐ படித்தது போல தொடர்ச்சியாக Mr.Wind-up birdஐ படிக்க முடியாது. இதுவும் மனப்பிறள்வு சம்பந்தப்பட்ட நாவல் தான்.

இந்த மாதிரியான நாவல்களை தொடர்ச்சியாக படிப்பதனால் சில disadvantages இருக்கின்றன.

  1. நீங்கள் washing machineஇல் துணி போட்டிருக்கலாம். கொஞ்ச நேரத்தில் rinse செய்யும் போது அது sound கொடுக்கலாம். நீங்கள் உடனே washing-machine problem என்று நினைத்திவிடுவீர்கள். நினைத்தது மட்டுமல்லாமல், உங்கள் house ownerக்கும் சொல்லிவிடுவீர்கள். ஏன் தமிழ்மணத்துக்கு கூட சொல்லிவிட வாய்ப்பிருக்கிறது. அப்புறம் அந்த weird feeling வடிந்த பிறகு, தற்செயலாக washing machineஐ பார்க்கும் பொழுதுதான் தெரியும்; “You stupid, there is no problem with the machine, really, ther problem is with your stupid head! The water outlet pipe of the washing machine was not released!” huh?!
  2. நீங்கள் நேத்து சாப்பிட பர்கரின் cheese TV remote controlஇல் விழுந்திருந்தால், TV remote controlஐ எடுத்துக்கொண்டு போய் தண்ணீரிலே கழுவி எடுப்பீர்கள். ஏதோ சாப்பிட்டு முடித்த தட்டை கழுவி வைப்பது போல.

An excerpt from the book:

Malta Kano put her elbows on the table and brought her palms together before her
face. “Neither,” she said. “There are no sides in this case. They simply do not exist. This
is not the kind of thing that has a top and bottom, a right and left, a front and back, Mr.
Okada.”
“Sounds like Zen,” I said. “Interesting enough in itself as a system of thought, but not
much good for explaining anything.”

So already weird heads, stay out of these books!

***

தமிழ்மணம் ஸ்டார் : தமிழ்மணத்துக்கு கொடுத்த CV!

என் நண்பர் ராஜாவிடம் (சாஹ்ரிதயன். spelling தெரியல ராஜா! தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க!) என்னைப்பற்றி எழுதித்தாருங்கள் என்று கேட்ட பொழுது கொஞ்சமும் சிரிக்காமல்; என்னைப்பற்றி எழுதிக்கொடுத்த அந்த உயர்ந்த உள்ளத்துக்கு நன்றிகள் பல!

“தேடுத‌ல் உடைய‌ வ‌ள‌ரும் எழுத்தாள‌ர் முத்து, க‌ணிப்பொறி துறையில் ப‌ணியாற்றிக் கொண்டு ப்ளாக் எழுதுத‌ல், சிறுக‌தை, குறு நாவ‌ல், க‌ட்டுரை என‌ த‌ன‌து த‌ள‌த்தை விரிவாக்கி வ‌ருகிறார். ஆங்கில‌ ம‌ற்றும் த‌மிழ் எழுத‌ல்க‌ளை (இல‌க்கிய‌ம்?!) விரும்பி ஸ்வாசித்து சிங்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். குடும்ப‌ம், ச‌மூக‌ம் என‌வும் அவ‌ரது ப‌ங்க‌ளிப்பு ப‌ர‌வுகிற‌து. ச‌மீப‌த்தில் தந்தையாகிருக்கிறார். ”
– Sahridayan

மேலும் இந்த ரணகளமெல்லாம் எங்கிருந்து ஆரம்பிச்சதுன்னு (History of the incident) பாக்கறதுக்கு இந்த பதிவைப் படிங்க!

Biodata!

பெயர்: முத்து MSV
ஊர்: திருப்பரங்குன்றம், மதுரை
தற்போது வசிப்பது: இது என்ன ஊர்; சிங்கப்பூர்!

படிப்பு: BE, MEPCO (பாஸ்!)
முந்தைய தொழில்: தட்டு பொட்டிதல் (ஹை! கண்டுபிடிங்க பாக்கலாம்!)
சமீபத்திய தொழில்: அதேதாம்ப்பா! கூட அப்பா வேலையும்!

பிடித்தது: வாசிப்பது, தூங்குவது, மேலும் தூங்குவது. மேலும் மேலும் தூங்குவது!
பிடிக்காதது: என் கலீக்ஸ¤ம் படிக்கறாங்க, சொல்ல முடியாது!

நீண்டகால எரிச்சல்: சரியாக ஆபீஸ் டயமுக்கு வருகிறவர்கள்!
சமீபத்திய எரிச்சல்: வீட்ல washing machine வேலை செய்யாதது!

நீண்டகால சாதனை: சிறுகதைகள் எழுதுவது (தூங்கி எழுந்து கண்ட கனவெல்லாம் எழுதறது சிறுகதையாய்யா! கொஞ்சம் புரியுற மாதிரி எழுதுய்யா!)
சமீபத்திய சாதனை: எஸ். ராமகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பாராட்டு (இத ஒன்ன சொல்லிடறான்; எங்க போனாலும்!), தமிழ்மணத்தின் அழைப்பு! (இது வேறையா?!)

பிடித்த எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (ஐஸ்டா மச்சான்!)
பிடித்த பதிவர்: சுஜாதா, ஜெயமோகன் (சரிகட்டியாச்சு!)
படித்ததில் மிகவும் பிடித்த பதிவு: நிறைய இருக்கு! Like வெட்டிப்பயலின் மணமகள் கையேடு! ஆனா இப்பவும் நினைச்ச உடனே சிரிக்கக்கூடிய பதிவு! ப்ராகாஷ்-இன் (என் நைனாவும் சாருநிவேதிதாவும்)

நீண்டகால விருப்பம்: காந்தம் கதையை எழுதி முடிப்பது. ஏதேனும் வார புத்தகத்துக்கு தொடராக கொடுப்பது! (தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!)
சமீபத்திய விருப்பம்: ஒரு புது கதை எழுதுவது. (ஐயையோ!) அதை publish செய்வது.

சமீபத்திய சர்ப்ரைஸ்: சாலமன் பாப்பையா அவர்களை விமானத்தில் சந்தித்தது! (போட்டோ எல்லாம் எடுக்கலைப்பா!)

நீண்டகால சர்ப்ரைஸ்: தமிழ் பதிவுலக நண்பர்கள்! (எப்படி இவ்ளோ fast-ஆ எல்லா விசயத்தையும் எழுதறாங்க! இன்று தமிழ்நாட்டு பாடப்புத்தகங்கள் வலையேற்றப்பட்டதை நான் அறிந்து கொண்டபொழுது, மா.சிவக்குமார் அவர்களது பதிவில் சர்வேசன் துணையோடு ஒரு ரணகளமே நடந்துவிட்டிருந்தது! Sema fast macchiஸ்!)

என்னை நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மணத்துக்கு நன்றி!

கட்டமைப்பு-கட்டுரை- Barnes-திருவிளையாடல்

தீராநதியில் ஜமாலன் எழுதிய கட்டுரையிலிருந்து:

கிரிக்கெட்டின் அடிப்படையே காலனிய ஆளும் தன்னிலைகளும், ஆளப்படும் தன்னிலைகளும் ஒருங்கிணைவதற்கான ஒரு புள்ளியை உருவாக்கி ஆளப்படும் தன்னிலைக்குள், ஆளும் தன்னிலையை உயர்ந்ததாக கட்டமைக்கும் படிநிலைப் பண்புதான்.

?! உடு ஜூட்

கிரிக்கெட்டில் உருவாக்கப்படும் “தேசபக்தி” போன்ற உணர்வுகள் உண்மையில் ஒருவகை “தேசவெறி”யையே கட்டமைக்கின்றன. இந்த தேசவெறி இன்றைய அரசியல் சூழலுக்கான தேவையை நிறைவு செய்கிறது. இன்னும் குறிப்பாகக் கூறினால், ஒருவன் தன்னை இந்தியனாக உணர்வதற்கான வெளியாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தேசபக்தி போர்க்காலச் சூழலிலேயே ஒரு குடிமகனுக்கு வெறியாக மாறும். கிரிக்கெட் என்பது ஒரு போராக அதிலும் தொலைக்காட்சி கட்டமைக்கும்..

எத்தன கட்டமைப்பு..?! இந்த கட்டுரையை ஏன் இப்படி கட்டமைக்கிறார்கள்!?

***
Julian Barnes (A History of the world in 10 1/2 chapters) எழுதிய East Wind என்கிற East German swimmers பற்றிய ஒரு கதை(Newyorker) படித்தேன். Medalகளுக்காக போட்டிபோடும் swimmers-இன் உடல் நலம் அவர்கள் சாப்பிட்ட மருந்து மாத்திரைகளால் எப்படி மாற்றம் அடைகிறது என்பதை அழகாக கூறியிருந்தார். Medals are just metals! இப்படியெல்லாம் செஞ்சு medal வாங்கணுமா என்ன? இந்தியா medal வாங்காமலிருப்பதே நல்லது! (அப்பாடா காரணம் கண்டுபிடிச்சாச்சு!)

இந்த கதையில் வரும் ஒரு line: (after Berlin wall came down)
Andrea had come out with nothing more than a relay medal at some forgotten championship in a country that no longer existed.

***

இளமையும் அதிகாரமும் ஒன்றுதான்
இருக்கு இருக்கு
என்று சொன்னால்
இல்லை என்று அர்த்தம்!

ஹி ஹி..
க்க்ர்ர்ர்ர்..

***

அரசு பதில்களில் ஒரு கேள்வி-பதில், இந்த வாரம் குமுதத்தில் பதிப்பிக்கப்பட்டிருந்த எல்லா ஜோக்குளையும் மிஞ்சி விட்டது:

கே: இரண்டு முறைகளுக்கு மேல் முதல்வர் ஆக மாட்டேன் என்கிறாரே சரத்குமார்?
: ஆமாம். அதற்குமேல் நேரம் இருக்காது. மூன்று முறை பிரதமர் ஆக வேண்டும். அதற்குப்பிறகு அமெரிக்காவுக்கு வேறு ஜனாதிபதி ஆக வேண்டும்!

***

சும்மா எதேச்சையாக extremetracking-ஐ புரட்டிக்கொண்டிருந்த பொழுது இந்த Link கிடைத்தது:
(பி.கு: எனக்கு எப்பொழுதுமே தற்புகழ்ச்சி பிடிப்பதில்லை!)

எனக்குப் பிடித்த தமிழ் blogகளில் இதுவும் ஒன்று.
நன்றாக எழுதுகிறார். இவர்
தன்னுடைய பகுப்புகளில்
ஒன்றிற்கு “எரிச்சல்” என்று பெயர் வைத்திருந்ததை வெகுவாக
ரசித்தேன். சிறுகதை தொடர்கதை எல்லாம் எழுதுகிறார்.
பின் தொடரும் நிழலைப்
பற்றிய இவரது பதிவு
எனக்குப் பிடித்தமானது()

நன்றி வேதன்!

***

ஜெயா Max-இல் உண்மையில நல்ல பாடல்கள் போடுகிறார்கள். அவரகளது “Minimum பேச்சு Maximum பாட்டு” என்கிற விளம்பரம் மிகச்சரியே! ஆனால் நடு நடுவே : அம்மா அழைக்கிறார் என்கிற கட்சி commercial தான் கடுப்படிக்கிறது.

***

கவனித்துப்பார்த்ததில் எல்லா சானலிலும் காமெடி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வீட்டுக்கு வீடு லூட்டி என்கிற ஒரு தொடர். சகிக்க முடியவில்லை. இந்த பாலக்காட்டு மாதவன் ஸ்டைல் வசனத்தை விடவே மாட்டார்களா?! போகுகிற போக்கைப் பார்த்தால், இன்னும் கொஞ்ச நாட்களில் பிரபல ஆயல் மொழி காமெடி நாடகங்கள் எல்லாம் தமிழில் டப் செய்யப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். விஜய் டீவியின் பெயரை விஜயனீஷ் (விஜய்+சைனீஸ்) என்று மாற்றி விடலாம், அவ்வளவு சைனீஸ் படங்கள்! மேலும் இன்னொரு பெயர் சிபாரிசு: ரி-விஜய்.

திருவிளையாடல் நாடகம் இன்னொரு மொக்க. ராதாரவிக்கு நாரதர் வேடம் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை. நாரதர் என்றால் கண்களில் குறும்புத்தனம் வேண்டாமா?! சிவனாக நடிப்பவருக்கு திருவிளையாடல் படத்தை திரும்பத்திரும்ப போட்டுக்காட்டி சிவாஜியை போல நடிக்கவேண்டும் என்று டைரக்டர் குச்சி வைத்து மிரட்டியிருக்கவேண்டும்! திருவிளையாடலை மீண்டும் எடுப்பது என்பது மிகவும் நல்ல Idea. ஆனால் இந்த காலத்துக்கு ஏற்றார்போல யோசித்து கொஞ்சம் மாற்றியிருக்கலாம். சுவராஸ்யமாக இருந்திருக்கும். இது அறுபது வயது தாத்தா “உன்னாலே உன்னாலே” படத்துக்கு வந்து பேக்கு பேக்குன்னு முழிக்கிற மாதிரி இருக்கு!

***

2007-இல் Internet Advertising Revenue எவ்வளவு தெரியுமா? $21 Billion, இது டீவியின் வழியாக வரும் விளம்பர வருவாயில் மூன்றில் ஒரு பங்காகும். 2011-இல் இந்த Internet advertising revenue மூன்று மடங்கு அதிகரிக்குமாம்.

Internet advertising பற்றி Rothenberg எழுதியிருப்பதை இங்கே பாருங்கள்.

***
ப்ரவீன் என்கிற என்னுடைய நண்பர் ஒருவர் அவ்வப்போது Facts and Figures என்று சில fwd அனுப்பிக்கொண்டிருப்பார்.

Pravin’s Facts and Figures:
150 Crores – Net box office revenue of his 2007 releases Chak De ! India and Om Shanti Om.

36 Crore – Earnings from 36 episode of Kya Aap Paanchi pass se Tez Hain ?

21 – Last year Khan endorsed 21 brands more than any one in TV.

300 Crore – Khan’s investment in the IPL team Calcutta Knight Riders.

42 – Age of Sharukh Khan .It’s really unbelievable with his six pack abs.

***

Infosys : Campus Placements withdrawn.

எனக்கு தெரிந்த ஒரு பையன் இன்று என்னை சந்திக்க வந்திருந்தான். 2007-ல் BE ECE முடித்தவன். நல்ல precentage வைத்திருக்கிறான். Infosys-ல் Campus placement கிடைத்திருக்கிறது. Appointment order எல்லாம் கொடுத்தாயிற்று. காலேஜ் முடித்துவிட்டு, பல கனவுகளோடு Infosys campus-க்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. Training பிறகு அவர்கள் வைக்கும் test-களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தொடரமுடியும் என்று அவர்கள் கூறினார்கள். சும்மா கொஞ்ச நஞ்ச test கிடையாது. கிட்டத்தட்ட 20 test-கள். மூன்று மாதங்கள். பிறகு இவனை இங்கு வேலை செய்ய லாயக்கில்லை என்று சொல்லி infosys வீட்டுக்கு அனுப்பிவிட்டது.

இவனை மட்டுமில்லை, இவனுடைய batch-இல் 156 பேர், கடைசியில் Infosys வேலைக்கு எடுத்துக்கொண்டது வெறும் 36 பேரை மட்டுமே! மீதமிருக்கும் 120 பேரும் வேலைக்கு லாயக்கற்றவர்களா? அது நீங்கள் campus interview நடத்தும் போதே தெரியாதா? என்னங்கய்யா இது?! ஒருவர் இருவர் என்பது வேறு விசயம், 120 நபர்களா? இதில் வேறு பிரச்சனை இருக்கிறது.

இவன் இவனது, college-க்கு வந்த முதலாவது கம்பெனியில் place ஆகியிருந்திருக்கிறான். இன்னும் பல company-கள் அதற்கு பிறகு வந்திருக்கின்றன. ஆனால் according to rules, Infosysஇல் place ஆனதால், பிற கம்பெனி interview-களை இவன் attend செய்ய முடியவில்லை. Infosys முதலிலே இவ்வளவு நபர்களை மட்டும் select செய்தால் போதும்னு நினைச்சிருந்தாங்கன்னா வேற company-யில் இவன் place ஆகியிருக்ககூடும் இல்லியா? இவனுக்கு பிறகு மத்த companyயில் (பிற சின்ன கம்பெனிகள் உட்பட) placeஆன இவனது நண்பர்கள் எல்லோரும் settle ஆகி விட்டிருக்கின்றனர்.

இப்பொழுது இவன் resumeஇல் Infosys இருக்கிறது. மூன்று மாதம் training இருக்கிறது. Interviewவுக்கு போகும் இடத்தில் எல்லாம் இதைப்பற்றிய குடைச்சல்கள். இன்னும் வேறு வேலை கிடைத்தபாடில்லை. என்னுடைய batchஇலும் (2001) இதே போல நடந்தது. பல கம்பெனிகள் தங்களது appointment order-களை withdraw செய்துகொண்டன.

படித்து முடித்து புது வேலையில் சேர ஆவலோடு வரும் students இது போன்ற சரிவுகளிலிருந்து மீள்வது மிகுந்த சிரமம். இதோ டிசம்பர் வரையில் time போச்சு. இப்ப வேலை தேடினா experience கேக்கறாங்க. அடுத்த freshers batch (2008) வெளிவந்துவிட்டது.

என்ன செய்யப்போகிறோம் என்கிற அந்த பையனின் கலக்கம் ஒரு வேலை கிடைத்தால் மட்டுமே நீங்கும்.
Freshers recruitment இருந்தால் கண்டிப்பாக சொல்லவும்.

Government, considering the future of the students, have to enforce some restrictions and laws towards companies hiring in the campus. Also colleges must not allow these companies (must have some withdrawn/placement ratio) in to their campus in future.

சுஜாதா குறிப்பிட்ட நாபகோவின் சிறுகதை: எனக்கு புரியவில்லை

நாபகோவ் எழுதிய சிறுகதை ஒன்றை சுஜாதா கணையாழியில் 1966ஆம் வருடம் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு அப்பா, ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது.

பெற்றோர்களுக்கு ஒரு தினம் ஆஸ்பத்திரியிலிருந்து டெலிபோன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும். உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்; அதற்குள் என்ன நேர்ந்துவிடுமோ என்று கவலைக் கடலில் இரவெல்லாம் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது:

டெலிபோன் மணி அடிக்கிறது. பதற்றத்துடன், பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.

“ஹென்றி இருக்கிறானா?” என்கிறது ஒரு பெண் குரல்.
“ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை; தப்பு நம்பர்” என்று வைத்துவிடுகிறார்.

மறுபடியும் சில நிமிஷம் கழித்து டெலிபோன் அடிக்கிறது.
“ஹென்றி இருக்கிறானா?” அதே பெண்.
“மிஸ், உனக்கு என்ன நம்பர் வேண்டும்?”
“5365849”
“என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச் சுழற்றுகிறாய் போலிருக்கிறது”
“ரொம்ப தாங்க்ஸ்” என்று அந்த பெண் வைத்துவிடுகிறாள்.

கதையில் இன்னும் ஒரு வரி தான் இருக்கிறது.
சில நிமிஷம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.

நாபகோவின் புத்திசாலித்தனம் புரிகிறதா?

***
எனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் கொஞ்சம் சிரமமெடுத்து, இந்த மரமண்டைக்கு புரியவைக்கவும்.

ஆட்டோ, மீட்டர் மற்றும் Chetan Bhagat

ஒரு ரூபாய் கொடுத்தால்
ஐந்து ரூபாய் கொடுக்கும்
வள்ளல்
பஸ் கண்டக்டர்!

என்ன பண்றது, சென்னையில பஸ்ல போக ஆரம்பிச்சுட்டேன். எவ்ளோ நாள் தான் ஆட்டோவுக்கு 100 ரூபாய் 150 ரூபாய்ன்னு அழறது? சும்மா கொஞ்ச நஞ்சமெல்லாம் கேக்கறதில்ல நம்ப ஆட்டோக்காறங்க. MMDA Colonyயிலருந்து Central Stationக்கு 150 ரூபாயாம். கேட்டா, பெட்ரோல் விலை கூடிப்போச்சாம்? எவ்வளவுய்யா கூடியிருக்கு? அஞ்சு ரூபாய் தானே? நுங்கம்பாக்கத்துக்கு 80 ரூபாயாம்! பஸ்ல டிக்கெட் நாலு ரூபாய். எல்லா ஆட்டோக்களிலும் மீட்டர் பாக்ஸ் இருக்கிறது. அதுவும் டிஜிட்டல். மினிமம் 14 ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கிறது. (முதல் இரண்டு கிலோமீட்டர்களுக்கு) மேலும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஆறு ரூபாய் வசூலிக்கப்படவேண்டும் என்பது சட்டம். அப்படியா வசூலிக்கப்படுகிறது? ஏன் இதை யாருமே வலியுறுத்தவில்லை? வலியுறுத்தினா மட்டும் கேட்ருவாய்ங்களா என்ன?.

மீட்டர் போடுவதில் ஆட்டோக்காரர்களுக்கு என்ன பிரச்சனை? கட்டுபிடியாவதில்லை என்று ஒரு ஆட்டோக்காரர் சொன்னார். கட்டுபிடியாகவில்லையா?! எடுத்துக்காட்டாக: இப்பொழுது வடபழனியிலிருந்து டீநகருக்கு மினிமம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 80 ரூபாய்க்கும் மேலே வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 6.6 KM. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் சராசரியாக 35 கிலோமீட்டர் கொடுக்கிறது (Bajaj autorickshaw). கூட்டிக்கழிச்சு பாத்தா (ராஜ் டீவியில அண்ணாமலை பாத்தேன்!) fuel price just 11 rupees only. ஆட்டோக்காரர்கள் வசூலிக்கும் தொகையில் மீதமிருக்கும் 65 ரூபாய் யாருக்கு? எங்கே போகிறது?

ஒழுங்கா முறையா சட்டப்படி கட்டணம் வசூலித்தால், அவர்களுக்கு கிடைக்கும் பணம் : 41 ரூபாய். 11 ரூபாய் fuel price கழிச்சா, மீதம் 30 ரூபாய் இருக்கிறது. ஒரு நாளைக்கு எத்தனை சவாரி எடுப்பார்கள்? 20 சவாரி? ஏன் ஆட்டோக்காரர்கள் மீட்டர் போட மறுக்கிறார்கள்? சென்னையிலிருக்கும் bloggers யாராவது, இதை ஒரு case study பண்ணலாம்.

***

சென்னையில் நான் வேலைசெய்துகொண்டிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவம் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது. அது ஒரு நல்ல மழை நாள். இரண்டு மூன்று நாட்களுக்கு விடாது மழை அடித்த நாட்கள் அவை. அன்று கண்டிப்பாக நான் அலுவலகம் சென்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயம். மழை அடித்து சற்று ஓய்ந்திருக்கிறது. ஆனால் இன்னும் விட்டபாடில்லை. சைதாப்பேட்டைக்கு பக்கமிருந்து நுங்கம்பாக்கத்துக்கு ஆட்டோ எடுக்கவேண்டும். அந்த ஆட்டோக்காரர் அன்று கேட்ட தொகை (ஆறு வருடங்களுக்கு முன்) 170 ரூபாய். வேறு வழியின்றி ஏறிக்கொண்டேன். உள்ளே ஏற்கனவே இரண்டு பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஓ shareஆ என்றேன், சற்றே தப்பிச்சோம்டா feelingல. இல்ல 170 ரூபாய் நீ (சென்னையில குப்ப கொட்டிட்டு மரியாதை எதிர்பார்த்தால் கிடைக்குமா) மட்டும் தான் கொடுக்கனும், அவங்களுக்கு வேற ரேட் என்றார். நான் ஒன்னும் சொல்லவில்லை.

கொஞ்ச நேரத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவரே பேச ஆரம்பித்தார். “இப்படி அநியாயமா வாங்குற காச நான் வீட்டுக்கு எடுத்துட்டு போக மாட்டேன். என் புள்ளைக நல்லா இருக்க வேண்டாமா? வீட்டுக்கு போறதுக்கு முன்னையே உங்கிட்ட எக்ஸ்ட்ரா வாங்குன காச குடிச்சே தீத்திருவேன்” பயங்கர calculative, extra காசை மட்டும் தான் குடிப்பாராம். அது சரி, குடிச்சா மட்டும் புள்ளைங்க நல்லா இருப்பாங்களா?

***

நேற்று நுங்கம்பாக்கம் Landmark சென்றிருந்தேன். சும்மா browsing என்று தான் நினைத்து சென்றிருந்தேன். நான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த புத்தககடைகளிலே மிக பெரியது Landmark தான். அந்த பிம்பம் இன்னும் என் மனதில் அப்படியே இருந்தது. மிகப்பெரியது என்கிற பிம்பம். ஆனால் இப்பொழுது Landmarkக்கு உள்ளே நுழைந்தவுடன் என்னது இது, stationary shop மாதிரி இருக்கு என்றே நினைக்கத் தோன்றுகிறது. Singaporeஇன் PageOne, மற்றும் Malaysiaவின் TimeSquareஇல் இருக்கும் Bordersஐ பார்த்த பிறகு அப்படித்தான் தோன்றும். அதே போலத்தான் Hotel Arunachalaவும். அப்ப ஏதோ பெரியதாய் தோன்றியது, இப்ப சும்மா சர்வ சாதாரணமாய் தோன்றுகிறது.

தாழ்தளை பேருந்து, சொகுசு பேருந்து, automatic ticketing என்று எவ்வளவோ புதிதாக வந்துவிட்டது. ஆனாலும் பஸ்கள் கூட்டமாகத் தான் செல்கின்றன. 100 feet ரோட்டில் அவ்வளவு traffic. Like ஏதோ race நடக்கிற மாதிரி.இந்தப்பக்கம் ஒரு பஸ் வருது, இந்தப்பக்கம் லாரி வருது, நான் உட்கார்ந்திருந்த ஆட்டோ இரண்டுக்கும் நடுவே செல்ல பார்க்கிறது. என்னையும் என் மனைவியையும் signalஇல் நிறுத்தி இறங்கிக்கொள்ள சொல்கிறார். நானும் இறங்குகிறேன். அங்கே ஒரு traffic police நிற்கிறார். எனக்கு பகீர் என்றது. அவர் ஒன்னுமே சொல்லவில்லை, அடித்து பிடித்து சிக்னலை க்ராஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 100feet ரோட்டில் நிறைய இடங்களில் traffic police இல்லை. சிக்னல் கரெக்ட்டாக தவறாக வேலை செய்கிறது. அல்லது அவ்வாறே design செய்யப்பட்டிருக்கிறது. red signal விழும் போது நிறைய பேர் காத்திருக்கிறார்கள். green சிக்னல் விழும் போது, ஒன்றிரண்டு பேர் மட்டுமே நிற்கிறார்கள். அப்ப எப்படி மக்கள் ஒழுங்கா traffic rules follow பண்ணுவாங்க?

***

GetIt service மிகவும் உபயோகமாக இருந்தது. வீட்டில் internet வேலைசெய்யவில்லை, நாளை flightஇல் மதுரைக்கு போகவேண்டும். ஒரு கால் to GetIt. எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் Travel Agent address அடுத்த இரண்டு நிமிடங்களில் கிடைக்கிறது. நடந்து சென்று கூலாக டிக்கெட் வாங்கிக்கொண்டு வரலாம். அப்புறம் Airtelஇன் 7 days 75 rupees internet. Just one SMS. 75 rupees deducted from your account. settings received. save it. then browse using whatever you have. Laptop or PC. DataCable இல்லீன்னா Bluetooth இருந்தா போதும். Just like that! No application. Nothing.

***
Landmarkஇல் சில புத்தகங்கள் வாங்கினேன்:

1. கணையாழி கடைசிப்பக்கங்கள் – சுஜாதா – 1965-1998
2. ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா
3. ஜே.ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
4. திக் திக் திக் – இந்திரா சௌந்தர்ராஜன்
5. சனிக்கிழமை விபத்து – ”
6. யாரென்று மட்டும் சொல்லாதே – ”

costlyயாகத்தான் இருந்தது. Landmarkஇல் தமிழ் புத்தகங்கள் நல்ல கலெக்சன்ஸ் இல்லை என்றே நினைக்கிறேன். சுஜாதாவும் பாலகுமாரனுமே நிறைந்து கிடக்கின்றனர். வேற எங்கே வாங்கலாம்? second hand bookshops? இல்லீன்னா நல்ல கலெக்சன்ஸ் இருக்கக்கூடிய பெரிய கடைகள்? ஒரு mobile library பத்தி கேள்விப்பட்டேன். விபரம் தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்.

***

இப்பொழுது the 3 mistakes of my life – chetan bhagat படித்துக்கொண்டிருக்கிறேன். Atlast we have realised and started using our strengths என்றே சொல்லவேண்டும். IPL ஒரு மிகச்சிறந்த உதாரணம். பல வெள்ளக்காரன் நொள்ளக்காரனெல்லாம் கையக்கட்டிட்டு உக்காந்திருந்தத பாக்க முடிஞ்சது, மனசுக்கு சந்தோஷமா இருந்தது.

Landmarkஇல் இந்த புத்தகம் அதிகமாக தென்பட்டது. இவரது மற்ற பழைய புத்தகங்களும் மீண்டும் விற்க ஆரம்பித்துவிட்டன என்று நினைக்கிறேன். Five point someone கூட ஆங்காங்கே தென்பட்டது. புத்தகத்தின் விலை 95 ரூபாய்.

இந்த புத்தகத்தில் வரும் ஒரு dialogue.
“they (australia) have twenty million people. we have one billion, growing at two percent a year. Heck, we create an Australia every year. Still they cream us. Something is wrong about this”

இதற்கு பதில் அடுத்த சில பக்கங்களில் ஒரு Australia playerஇன் வழியாக கிடைக்கிறது:
“right now you (India) rely on talent more than training. You have a big population, a tiny number of them are born excellent. Like Tendulkar, or may be like Ali (a little boy in the story, who has some hyper-reflex-kinda gift)”

கிடைத்தால் கண்டிப்பாக படியுங்கள்.
***

ஞாநி பேசுகிறார்!

குமுதம் டாட் காமில் ஞாநி பாலகுமாரனிடம் நடத்திய பேட்டி பார்த்தீர்களா? நான் பார்த்தேன். இன்று காலை மூனு மணிக்கு உக்காந்து பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பாவமாக இருந்தது. பாலகுமாரனுக்கு ஞாநியை சமாளிக்க முடியவில்லையோ என்று தோண்றியது! சகிப்புத்தன்மைன்றார் இல்லைன்றார். கொள்கைங்கறார். கேட்டாங்க எழுதிக்கொடுத்தேங்கறார். தலித் பற்றி ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு அவங்க என்ன எழுதவேண்டாம்னுட்டாங்கன்னு சொல்றார். எனக்கு அவங்க வலி புரியாது அதனால எழுதலன்னு சொல்றார். ஞாநி வசமா புடிச்சார். அப்ப பெண்களை பத்தி மட்டும் எப்படி எழுதுனீங்க? அதுக்கு பெண்களை பற்றியும் நான் இன்னும் சரியா புரிஞ்சுக்கலேன்னு சொல்றார். எனக்கு பாலகுமாரனிடம் பிடிக்காத ஒரு விசயம் adultry. விஜய் டீவியில சில்லுன்னு ஒரு சந்திப்புல அவரே சொன்னது: அவரது தோழியை (ரசிகை) பற்றி. அந்த தோழி பாலகுமாரன் adultery பற்றி எழுதுவதை விரும்பவில்லை என்றும், நீ அதை எழுதினா ரொம்ப convincingஆ இருக்குன்னு அவர் சொன்னதாக சொன்னார். அதே அபிப்பிராயம் தான் எனக்கும். இது மாதிரியான வெகுஜன எழுத்தாளர்கள் இதேயே பற்றி மீண்டும் மீண்டும் எழுதினால் அது ரொம்பவும் natural thing ஆகிவிடுமே! உடனே நம்ப டபாக்காத்துவவாதிகள் எது தப்பு எது சரின்னு நீ எப்படி சொல்ற? உனக்கு யாரு வரையறை கொடுத்தா? யாரு பெர்மிஷன் கொடுத்தா? அப்படி இப்படின்னு கன்னா பின்னான்னு கேள்வி கேக்க ஆரம்பிச்சுடுவாங்க. தப்புன்னோ சரின்னோ இந்த உலகத்துல எதுவுமே தப்பு கிடையாதுன்னா பின்ன ஜெயில் எதுக்கு? எதுவும் தப்பு இல்ல எதுவும் சரியில்ல எல்லாம மாயை அப்படி இப்படின்னு ழார் மத்தார் சொன்னாருன்னு புரியாம பேசறதுதான் இப்போ ·பேசனா போச்சு. ஞாநி கரெக்ட்டா கேட்டார்: உங்களுக்குன்னு ஒரு கொள்கை இருக்கும்மேன்னு! கொள்கை என்பது ஒரு முடிவு. முடிவுகள் மாறிக்கொண்டேயிருக்கும். கொள்கைகளும் மாறிக்கொண்டேயிருக்கும் என்கிறார் பாலகுமாரன். முடிவுக்கே வரமுடியாதுங்கறார். முடிவே கிடையாதுங்கறார். வாழ்க்கையை பாத்து அதிசயச்சுக்கிட்டே இருக்கேன்னு சொல்றார். கொஞ்சநாட்களுக்கு முன்னர் ஆண் பெண் உறவு. adultery. இப்பொழுது ஆண்மீகம். yes! கொள்கைகள் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. its quite true. பாலகுமாரன் சுஜாதாவின் தோள் மீதும் திஜாவின் தோள் மீதும் தாவி ஏறியதாகவும் சொன்னார். அவர் சொல்லமறந்தவர்களுள் : Ayn Randஉம் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். பாலகுமாரனுக்கு ஞாநியை சமாளிக்க தெரியவில்லையா?!

***

தொல் திருமாவின் பேட்டி எனக்கு பிடித்திருந்தது. ஆர்ப்பாட்டமில்லாமல் நிதானமாக கூலாக இருந்தது. அவர் ஞாநியை சரியாக tackle செய்தார். Afterall one has to win an argument. தமிழ் பாதுகாப்பு இயக்கம் (?!) சிங்கள இயக்குனரை (புலிகளின் உரிமை போராட்டத்தை அவமதிப்பதாக அந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்கிற காரணத்தை காட்டி) அடித்ததை குறித்த கேள்வி ஒன்றில் ஞாநி எல்லாருக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறதல்லவா? அவரும் சொல்லலாம். அதற்கு எதிர்மறையாக நீங்களும் (சீமான் போன்றோரை!) நல்ல கருத்தை (புலிகளுக்கு ஆதரவாக) முன்வைத்து திரைப்படங்கள் எடுங்கள் என்றார். சற்றும் தாமதிக்காமல் திருமா சொன்னார்:

நீங்கள் சொல்வது வீட்டுக்குள்ளே நரகல் இருக்கிறது. அது பாட்டுக்கு கிடக்கட்டும்.
ஊதுபத்தி கொளுத்தி வையுங்கள் என்பதை போல இருக்கிறது என்றார்

. இதையும் அதையும் ஒப்பிட முடியுமா முடியாதா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், திருமாவின் பதிலடி ரசிக்கும் படியாகவே இருந்தது. அவருடைய தோல்வியை பற்றிக்கேட்டபொழுது: தலித் கட்சி ஒன்றுக்கு கூட இதுநாள் வரையிலும் நிரந்தர சின்னம் கிடைக்காததே தோல்வி என்று குறிப்பிட்டார். அவரது கட்சிக்கு விரைவிலேயே நிரந்தர சின்னம் கிடைக்க வாழ்த்துக்கள்

***

ஞாநியும் இடைவிடாது இட ஒதுக்கீட்டை பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறார். சரியாக பேசிக்கொண்டிருக்கிறார் என்பது தான் இங்கே குறிப்பிடவேண்டும். இடஒதுக்கீட்டில் ஞாநியின் நிலைப்பாடு தான் என் நிலைப்பாடும். 27% இடஒதுக்கீடு சுத்தமாக IITயிலும் IIMமிலும் கொடுக்கப்படவேண்டும். அதாவது: இப்பொழுது 100 சீட் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், 27% பிற பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கவேண்டும் என்றால், மேலும் 27 சீட்டுகளை மட்டும் கூட்டி 127 சீட்கள் ஆக்குவது. ஆனால் 27% என்பது 127 சீட்டுக்குத்தானே?!

ஞாநி சொல்வதை கேளுங்கள்:

இப்போது உச்ச நீதிமன்றமும் அரசாங்கமும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சரியில்லை என்பதற்கான இன்னொரு சான்று, உயர் கல்வி நிறுவனங்களில் இடங்களை அதிகரிப்பது என்ற நடவடிக்கையாகும். அதாவது ஒரு ஐ.ஐ.டியில் இப்போது 100 இடங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீட்டு உத்தரவின்படி 27 சதவிகிதம் கொடுத்தாகவேண்டும். (இதையே 9 சதவிகிதத் தவணையில் மூன்று வருடங்கள் படிப்படியாகத்தான் தருவார்களாம்.) எனவே 73 இடங்கள் மற்றவர்களுக்கு இனி கிடைக்கும். இதர ஜாதிகளுக்கு (மேல் ஜாதிகள்) 27 இடம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக என்ன செய்கிறார்கள் என்றால் 100 அப்படியே இருக்கும். புதிதாக 27 உருவாக்கி பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தருவார்களாம்.

இதில் இரண்டு கோளாறுகள். ஒன்று, மொத்த இடம் இப்போது எவ்வளவு? 127. அப்படியானால் இதில் 27 சதவிகிதம் எவ்வளவு 27 இடமா? இல்லையே. 34 அல்லவா? தொடர்ந்து 7 இடம் ஏமாற்றப்படுகிறது. இரண்டாவது பிரச்சினை இப்படி புதிதாக இடம் உருவாக்கி மேல் ஜாதிகளைக் காப்பாற்றுவதற்காக ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? சென்ற வருடம் மட்டும் ஐ.ஐ.டி.களுக்கும் ஐ.ஐ.எம்.களுக்கும் இதற்காக தரப்பட்ட தொகை 1400 கோடிகள். அடுத்த 3 வருடங்களில் இன்னும் 1771 கோடி ரூபாய்கள் தரப்படும்.

1771 கோடி ரூபாய்! யாருக்காக செலவிடப்படுகிறது? கேட்டால் think tank. talent hub என்கிற பினாத்தல்கள் வேறு! யாரோட think tank? யாரோட talent hub?ன்னு தான் புரியல!

திருமாவிடம் அவர் பேட்டி எடுத்தபொழுதும் கிரீமி லேயர் பற்றி அவர் சொல்லியிருந்தார். அதாவது கிரீமி (கிருமி அல்ல!) லேயர் என்பது should not be based upon economical justice, it has to be based up on educational justice. அதாவது ஒரு படித்த ஏழை அர்ச்சகரை கட்டிலும் ஒரு பணக்கார படிக்காத நிலக்கிழாருக்கே இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை தரவேண்டும் எனபது. இதில் கிரீமி லேயர் யார் யார் என்பதை வரையறுக்க அரசு வைத்திருக்கும் அளவு எல்லாமே economical based. ஞாநி அதற்கு மாற்றாக முன் வைக்கும் யோசனை என்னவெனில், முதன்முறையாக இடஒதுக்கீட்டில் மூலம் கல்வி பெறும் குடும்பத்துக்கே முன்னிரிமை தரவேண்டும் என்பது. எடுத்துக்காட்டாக: ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக இடஒதுக்கீட்டின் மூலம் படித்திருக்கிறார்கள். இன்னொரு குடும்பத்தில் இதுவே அவர்கள் இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி பெறுவது முதல் முறை என்றால், இந்த குடும்பத்துக்கே முன்னுரிமை தரவேண்டும் என்கிற வாதம்.

இதில் ஒரு advantage இருக்கிறது. அதாவது இவ்வாறான சுழற்சிக்கு பின்னர், பல தலைமுறைகளாக இடஒதுக்கீட்டில் பயன் பெற்றுவிட்டதால் அந்த சமூதாயத்தையே இட ஒதுக்கீட்டிலிருந்து அப்புறபடுத்திவிடலாம். கிரீமி லேயரை நடைமுறைப்படுத்துவதால் கொஞ்சம் கொஞ்சமாக இடஒதுக்கீடு பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற பயம் ஜாதிகளிடமும் அந்த ஜாதி ஓட்டுகளை நம்பி இருக்கும் கட்சிகளிடமும் தெரிகிறது. அதானால் தான் கிரீமி லேயர் கிருமி லேயராக கருதப்படுகிறது. open quotaவிலும் இந்த கிரீமி லேயர் புகுத்தபடவேண்டும்.

இடஒதுக்கீட்டை தலைமுறைகளாக அனுபவித்து விட்டவர்கள் தங்கள் ஜாதியில் இருக்கும் இன்னும் இடஒதுக்கீட்டை பெறாத மற்ற குடும்பங்களுக்கு வழிவிடவேண்டும். அப்பொழுதுதான் இட ஒதுக்கீட்டின் குறிக்கோள் நிறைவுபெறும். அனைவருக்கும் கல்வி என்கிற நிலை உருவாகும். மேலும் கொஞ்ச காலத்துக்கு பிறகு இடஒதுக்கீடே தேவையில்லை, எல்லாரும் பயன் பெற்றாகிவிட்டது என்று தூக்கிவிடவும் செய்யலாம்! சமச்சீர் கல்வி கிடைக்கப்பெறும்!

***

இப்படி எல்லாரையும் மடக்கி மடக்கி கேள்வி கேட்கும் ஞாநியிடம் ஒரு கேள்வி:
ஞாநி சார் நீங்கள் தனியார் அலுவலகங்களில் வேலைவாய்ப்புக்கு இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா?

***

என்ன‌ சொல்லி நாங்க‌ அழ‌?


இதையும் இன்னும் கொஞ்ச‌ நாளில் நாம் ம‌ற‌ந்துவிடுவோம். எத்த‌னை விச‌ய‌ங்க‌ளை நாம் ம‌ற‌ந்திருக்கிறோம்?! அல்ல‌து ம‌ற‌க்க‌ முய‌ற்சி செய்கிறோம்?

இத‌ற்கு யார் கார‌ண‌ம்? ஏன் இது ந‌ட‌ந்த‌து? இனியும் இது போன்ற‌ அவ‌ல‌ங்க‌ள் ந‌ட‌க்காம‌ல் இருக்க‌ அர‌சு என்ன‌ செய்ய‌ப்போகிற‌து? த‌டுப்பூசி சில‌ குழ‌ந்தைக‌ளுக்கு ஒத்துக்கொள்ளாது என்று வாத‌ம் செய்வ‌து வேலைக்காகா‌து, அத்த‌னை குழ‌ந்தைக‌ளுக்குமா ஒத்துக்கொள்ளாம‌ல் போகும்? இதை புல‌னாய்வு செய்து அறிக்கை வெளியிட‌ எத்த‌னை நாட்க‌ள் ஆகும்? ப‌த்து நாட்க‌ள்?! ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அரசு ம‌ருத்துவ‌ம‌னைக்கு ஆம்புல‌ன்ஸ் வ‌ருவ‌த‌ற்கு தாம‌தமான‌து என்று ஒரு செய்தி வெளியாகியிருந்த‌து. தாம‌த‌மாக‌ வ‌ருவ‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? இத‌யெல்லாம் விட்டுட்டு ந‌டிகை ம‌ல்லிகா செராவ‌த்தின் மீது த‌மிழ் க‌லாச்சார‌த்தை சீர‌ழித்த‌த‌ற்காக‌ வ‌ழ‌க்காம்! யார் மேல‌ வ‌ழ‌க்கு போட்டா பிர‌ச்ச‌னை வ‌ராதுன்னு பாத்து அவிங்க‌மேல‌ போட‌ற‌து. நீங்க‌ளும் உங்க‌ள் பொதுந‌ல‌ தொண்டும். அட‌ போங்க‌ப்பா.

ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌த்துக்கு ஒரு வார‌த்துக்கு முன்பு திருவ‌ள்ளூர் மாவ‌ட்ட‌த்தில் ப‌வ‌ர் க‌ட் அதிக‌ம் இருந்த‌தால் கூட‌ த‌டுப்பூசி ம‌ருந்து (குளிர்சாத‌ன‌ பெட்டியில் ஒரு குறிப்பிட்ட‌ டெம்ப‌ரேச்ச‌ரில் ம‌ருந்தை வைக்க‌வேண்டும்) கெட்டுப்போயிருக்க‌லாம் என்றும் ஒரு செய்தி வெளிவந்திருந்த‌து. ம‌ருந்தை உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு முன்ன‌ர் அதை சோதிப்ப‌த‌ற்கு ஏதும் வ‌ச‌தி இல்லையா? தெரிய‌லீங்க‌ அதுதான் கேக்க‌றேன்.

என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்னார்: முத்து இதைவிட‌ ஒரு விச‌ய‌ம் என்னை ரொம்ப‌ பாதிச்ச‌து. ச‌ட்ட‌ச‌பையில‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளுக்கு, ஆர‌சு மூனு ல‌ட்ச‌ ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித்த‌பொழுது, அங்கிருந்த‌ நாம் தெர்ந்தெடுத்து அனுப்பிவைத்த‌ ம‌க்க‌ள், சிரித்துக்கொண்டே கைத‌ட்டி ஆர‌வார‌ம் செய்த‌து.

ந‌ம்ப‌ர் ஒன் புல‌னாய்வு நாளித‌ழ் என்று மார்த‌ட்டிக்கொள்ளும் ஜூவியும் இது போல‌ ஒரு க‌விதை ம‌ட்டும் எழுதிவிட்டு, த்ரிஷாவையோ ந‌ய‌ன்தாராவையோ க‌வ‌னிக்க‌ போய்விடும்.

ஜூவி சார், நீங்க‌ளே இதெல்லாம் புல‌னாய்வு செய்ய‌லேன்னா, வேற‌ யார் செய்வா? இத்த‌னை கோடி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இந்த‌ நாட்டில் ம‌ருத்துவ‌த்துறையை க‌ட்டுப்ப‌டுத்த‌ தீவிர‌மான‌ ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ள் வேண்டும். இல்லையென்றால் ம‌க்க‌ளின் ப‌ய‌த்தையும் ந‌ம்பிக்கையையும் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌ இங்கே நிறைய‌ ந‌ப‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள்.

ஸீரோ டிகிரி : ஆப்பிரிக்க எழுத்தாளர் டபாகாவும், பின் டபாகாத்துவமும், non-perpendicular, pythagoras சிந்தனையும்.

oh my god! oh my god! oh! my! god! வேறென்ன சொல்லமுடியும்? எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இந்த நாவலை(?!) தமிழகம் தாங்கிக்கொண்டுள்ளது? எப்படி இவரது இந்த வகையான எழுத்தை இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ள முடிகிறது? எப்படி இந்த நாவல் சிங்கப்பூர் நூலகத்தில் இவ்வளவு ஈசியாக யாவரும் எடுத்து படிக்கும் படியாக வைக்கப்பட்டிருக்கிறது? முற்றிலும் குரூரங்களையே கற்பிக்கும் இந்த புத்தகத்தின் கடைசி பக்கங்களில் என் செல்ல குட்டி இளவரசிக்கு என்று நான்கு கடிதங்களை எழுதி தான் கற்பித்த குரூரங்களை கலைய முற்படுகிறார் சாரு நிவேதிதா.

கட்டமைப்பு என்கிற வார்த்தையை நிறைய மக்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சிற்றிலக்கியவாதிகள் (?! இந்த வார்த்தையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எனக்கே தொற்றிக்கொண்டுவிட்டது) அதிகப்படியாக உபயோகிக்கும் வார்த்தை “கட்டமைப்பு” என்பதாகும். இவற்றையெல்லாம் படிப்பதாலேயோ என்னவோ என் நண்பரும் “கட்டமைப்பு” என்கிற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். கட்டமைப்பு என்கிற சொல்லைக் கேட்டாலே எனக்கு என்னவோ போல வருகிறது. “புராதான தாயாக விரும்பிய நவீன தந்தை” என்கிற ஜமாலன் அவர்களின் தீராநதியில் வெளி வந்த கட்டுரையில் எத்தனை முறை கட்டமைப்பு என்கிற வார்த்தை வந்திருக்கிறது என்பதை கவனித்து பாருங்கள். Is it a fashion? இதற்கு முன்னர் யாரும் கட்டுரைகள் எழுதவில்லையா? பின்நவீனத்துவம் அடுத்த வார்த்தை. எதற்கெடுத்தாலும் போர்ஹே, கொர்த்தஸார். non-linear முறை என்பது தானகவே அமைய வேண்டும். அல்லது அவ்வாறான சிந்தனை இயற்கையிலே வேண்டும். இதை விட்டுவிட்டு சகட்டுமானிக்கு எழுதிதள்ளிவிட்டு, வீட்டிலிருக்கும் சிறு பிள்ளையிடம் கொடுத்து பக்க வரிசையை கலைக்க சொல்லி, அதை அப்படியே அச்சு ஆபீஸ¤க்கு கொடுத்தது போல எழுதுவது தான் non-linear writinga? ஏன் non-perpendicular phythagoras சிந்தனை எல்லாம் உங்களிடம் இல்லையா? (லத்தீன் அமெரிக்கவாசிகள் pythagoras முறையில் சிந்தித்தவுடன் நாங்களும் சிந்திப்போம் என்கிற உங்களது முனகல் என்னை வந்தடைந்து விட்டதை இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்) அந்தமாதிரியும் சிந்தித்து புது “கட்டமைப்பை” உண்டாக்குவதுதானே? இதில் Big-bang theory வேறு. Black hole வேறு. புதுமைபித்தனின் எழுத்துக்கள் மீது சத்தியம் வேறு. இதில் மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் குமாஸ்தா எழுத்தாளர்களாம்?! காலையில் ஆபீஸ் போய்விட்டு மாலையில் பொழுதுபோக்கிற்காக எழுதுகிறார்களாம். வக்கிரங்களை சொல்வதுதான் புரட்சியா? அப்ப பாரதி செஞ்சது என்ன? என்ன கட்டமைப்பு சார்? என்ன kind of thinking சார்? parallelogram? உங்களோடதுதான் நக்கலா? அப்ப புதுமைப்பித்தன் செஞ்சது? அவரு எல்லாம் சக எழுத்தாளர்களை எவ்வளவு கிண்டல் செஞ்சிருக்கார்? ஆனா அவரோட எழுத்து? அவரோட கட்டுரைகள்? படிச்சிருக்கீங்களா சார்? போர்ஹேக்கு முன்னாடி புதுமைபித்தனை ஒரு வாட்டி படிங்க சார். அவருடைய metaphor மாதிரியில்லீன்னாக்கூட ஒரு 0.00000000000000000000000000000001% அளவுக்காவது எழுதுங்க சார். ஆப்பிரிக்கா. இலத்தீன் அமெரிக்கா. அன்டார்டிக்கா. அன்ஜன்கஞ்சாநீசிபூசியா. ழீ மூசியார். ழாழா அம்னீகாரி. கம்னீகாரி. சம்னீகாரிழாழிகூழாபாப்ழிபு. ழார் கத்தார் சொன்னாரு. பார் மத்தார் சொன்னாருன்னு. உங்களுக்கு என்ன தோணுச்சு? where is originality?

யாருக்கும் இதை தான் எழுதவேண்டும், இதை எழுதக்கூடாது என்று யாரும் கட்டளையிட முடியாது. கட்டளை என்ன சும்மா உன் நல்லதுக்கு தான் சொல்கிறேன் என்று கூட சொல்லிவிட முடியாது. அது அவரவர் விருப்பம். படிப்பதும் அவரவர் விருப்பம் தான். யாரும் என்னை சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி என்கிற நாவல் (?!) non-linear தனமாக எழுதப்பட்டிருக்கிறது, அப்படித்தான் ஆப்பிரிக்க காட்டில் வாழும் டபாகா என்கிற அதிமேதாவி எழுத்தாளர் (அவர் தான் “பின்டபாகாத்துவம்” என்கிற எழுத்து முறையை தோற்றுவித்தார்) எழுதுவார், அதே போல தமிழிலும் இப்பொழுது உலகத்தரத்தில் (ஹோமோ செக்ஷ¤வல்ஸ் பற்றியும் பெண்களின் அந்தரங்கங்களையும் பற்றி பேசினால் மட்டுமே போதும் அது international தரத்துக்கு வந்துவிடுகிறது) எழுதப்பட்டிருக்கும் நாவல் இது, ஆதலால் கண்டிப்பாக படியுங்கள் என்று யாரும் எனக்கு சொல்லவில்லை. சொல்லப்போனால் இந்த புத்தகத்தை படிப்பதற்காக எடுத்துவந்திருக்கிறேன் என்று சொன்னவுடன் என் நண்பர், அதையா படிக்கப்போகிறீகள் அது “வக்கிரங்களின் ஊற்று” என்று வருணனை செய்தார். பிறகும் நான் எதற்கு படித்தேன்? என் நண்பர் ஓவர் ரியாக்ட் செய்கிறார் என்றே நான் நினைத்தேன்.

சிலர் நக்கலான நடை என்றும் சுஜாதாவுக்கு அடுத்த படியான கவனிக்கத்தக்க நடை என்றும் சொல்கிறார்கள். நடையை விட்டுத்தள்ளுங்கள். எல்லாரும் டயாபடீஸா வந்திருக்கிறது? நடையை கட்டிக்கொண்டு அழுவதற்கு? இந்த குரூரத்தில் நடை எதற்கு? நடையாவது சடையாவது.

இந்த நாவலை படிக்கும் டீன் ஏஜ் குழந்தைகள் கடுமையான மனச்சிதைவும் depressionம் அடைவதற்கு வாய்ப்பிருக்கிறது.வேறு எவ்வளோ புஸ்தகங்களை அவர்கள் தேடிப்பிடித்து படிக்கத்தான் செய்வார்கள். போதாக்குறைக்கு internet இருக்கிறது. ஆனால், அது வேறு இது வேறு. இது இலக்கியம் என்று நாமே அறிமுகப்படுத்தக்கூடாது. இதைப் படித்துவிட்டு இதெல்லாம் most natural thing in the world என்று அவர்கள் நினைத்துவிடலாகாது. Atleast you must give a warning. இதை தடை செய்யவேண்டும் என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். But categorize it. யாவரும் எளிதாக படிக்கும்படி வைக்காதீர்கள். Atleast to rent this book from library you must have restrictions.

நான் சிங்கப்பூர் நூலகத்தை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் : இந்தப்புத்தகத்தை யாவரும் படிக்கும் படியாக (குழந்தைகள், டீன் ஏஜ்) பொதுவில் வைத்திருக்கிறீர்கள். கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்கள். ப்ளீஸ். (இந்திய நூலகங்களில் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை!)

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் : சர்வதாரியும் அப்பாவி தமிழனும்

வலைப்பூ நண்பர்களுக்கு என் இனிய “சர்வதாரி” தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.ஆமாம் சர்வதாரி என்றால் என்ன? “எல்லாவற்றையும் தாங்குபவன்” என்பதா? அப்படீன்னா சர்வதாரி என்றால் “அப்பாவி தமிழன்” என்று தான் அர்த்தம் வருகிறது?! அடடே ஆச்சரியக்குறி! ச(ஸ)ர்வதாரி என்பது தமிழ் பெயர் போல தெரியவில்லையே?

எந்த பழக்கவழக்கமும் தொடர்ந்து மூனு மாசத்துக்கு இருந்தாத்தான் அதை பழக்கமுன்னே சொல்லனும்னு சொல்லுவாங்க. அதாவது இன்னீலேருந்து புதுசா காலையில் எழுந்து ஜாக்கிங் போறோமுன்னு வெச்சுக்கோங்க, நீங்க அத “நான் காலையில் எழுந்து தினமும் ஜாக்கிங் போவேனாக்கும்” என்று உடனே தம்பட்டம் அடிக்க முடியாது. கூடாது. ஜாக்கிங் நீங்க மூனு மாசத்துக்கு தொடர்ந்து போனாத்தான், அத பழக்கம்னு சொல்லலாம். வழக்கமானால் தான் அது பழக்கம்.

அது போல, தமிழ் புத்தாண்டு மாற்றம், போன்ற ஆணைகளை, உண்மையிலே கடைப்பிடிக்கவேண்டுமென்றால், அடுத்த ஆட்சி பதவியேற்று அப்பொழுதும் இந்த ஆணை நீடிக்கிறதா என்று பார்க்கவேண்டும். இதுவும் நம்ப கண்ணகி அவர்கள் படும் அவஸ்தை போல ஆகிவிட வாய்ப்பிருக்கிறது. கண்ணகியைப் போல நாமும் அரசியல் கட்சிகளுக்கு இடையே கிடந்து அல்லாட வாய்ப்பிருக்கிறது.

பள்ளி கூடங்களில் இருக்கும் பாடத்திட்டத்தை மாற்றவேண்டுமே? வருடம் தையிலிருந்தா தொடங்கவேண்டும்? இந்த பஞ்சாங்கம் கணிப்பதை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. அதில் இந்த மாசக்கணக்கெல்லாம் இருக்கிறதா என்ன?

மேலும், எனக்கு காலையிலயிருந்து ரொம்ப குழப்பமாகிருச்சு. அதாவது நான் கறி சாப்பிடாமல் கட்டுப்பாடாக இருக்கும் நாட்கள் வெகு குறைவு. அதில் ஒன்று தமிழ் புத்தாண்டு. இன்று மனைவி வேறு ஊரில் இல்லை. எழுந்ததோ லேட். சும்மா burger சாப்பிட்டுவிட்டு வரலாம் என்றால், அதில் கறி இருக்கும். அரசு வேறு இன்று தமிழ் புத்தாண்டு இல்லை என்று சொல்லிவிட்டது. என்ன செய்வது? (ரொம்ப முக்கியம்) கொள்கையை காற்றில் பறக்கவிட்டுவிடலாமா? கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மையும் அவர்களைப் போல மாற்றிவிடுவார்கள். யாதும் ஊரே. யாவரும் கொள்கையற்றவர்கள்.

சமீபத்தில் MIDS ஐ சேர்ந்த நாகராஜன் என்பவர் விவசாயத் தற்கொலைச் சாவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் 89362 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். 2002க்கு பிறகு 30 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரம் தெரிவித்திருக்கிறார்.
தீராநதி பக்கம் 13 ஏப்ரல் 2008

தமிழ் புத்தாண்டை தை மாசத்துக்கு மாற்றிவிட்டால் போதுமா விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை குறைத்துக்கொள்வார்களா? “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன்” என்று தமிழர்கள் குறித்து நாஞ்சில் நாடன் சொன்னது எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது.