முப்ப‌த்தியிர‌ண்டு கேள்விக‌ள்

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

பாலாவின் எழுத்து இன்ஃப‌ர்மேட்டிவ்வாக‌ இருக்கும். என்னை ஆர‌ம்ப‌கால‌த்தில் ஊக்குவித்த‌வ‌ர்க‌ளில் மிக‌ முக்கிய‌மான‌வ‌ர்.அவ‌ர‌து அனாலிஸிஸ் டைப் ப‌திவுக‌ள் என‌க்குப் பிடிக்கும்.

உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
குர‌ல்வ‌லை? ப்ளாக் ஆர‌ம்பிக்க‌வேண்டும் என்கிற‌ எண்ண‌ம் வ‌ந்த‌வுட‌ன் தோன்றிய‌ முத‌ல் பெய‌ர். அப்ப‌டியே வைத்துவிட்டேன். முத்து? என் தாத்தாவின் பெய‌ர். என்னுடைய‌ அப்ப‌த்தாவிட‌ம் கேட்டால் அவ‌ரு அர்ச்சுன‌ரு என்பார். அர்ச்சுன‌ர் என்றால் சக‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் என்று அர்த்த‌மாம். அவ‌ர் அர‌சு ப‌ள்ளியில் த‌லைமை ஆசிரிய‌ராக‌ வேலை பார்த்த‌வ‌ர். நாட‌க‌ம் ந‌டிப்பு இசை என்று ப‌ல‌ துறைக‌ளில் கால் ப‌தித்த‌வ‌ர். ல‌ட்சிய‌ ந‌டிக‌ர் எஸ்.எஸ்.ஆர் என் தாத்தாவின் மாண‌வ‌ர் என்று அப்பா சொல்லுவார். என் தாத்தா இற‌க்கும் பொழுது நான் நான் நிறை மாத‌மாம். அத‌னால் தான் என‌க்கு முத்து என்கிற‌ பெய‌ர் கிடைத்த‌து.

உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
ம்ம்..நிறைய‌.

கடைசியாக அழுதது எப்போது?
என் அண்ண‌ன் ம‌க‌ள் ச‌க்தி எங்க‌ளை விட்டுப் பிரிந்த‌ பொழுது.

உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பிடிக்கும். பிடிக்காது. என் கையெழுத்து என் ம‌ன‌ நிலையைப் பொருத்து மாறுப‌டும்.

பிடித்த மதிய உணவு?
டிப‌ன் பாக்ஸில் த‌க்காளி சாத‌ம், த‌யிர் சாத‌ம். வீட்டில் என்றால் வெஜிட்டேரிய‌னில் ப‌ருப்பு க‌த்திரிக்காய் கூட்டு. நான் வெஜ் : மீன் குழ‌ம்பு.

நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
இது என்ன‌ கேள்வி? க‌ண்டிப்பாக‌.

கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
அருவியில‌ தான் குளிக்க‌ப் பிடிக்கும். ஆனால் அருவியில் நான் குளித்த‌தே இல்லை. 😦

ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
க‌ண். சிரிப்பு.

உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
த‌ன்ன‌ம்பிக்கை+ச‌கிப்புத்த‌ன்மை. கோப‌ம்+சோம்பேறித்த‌ன‌ம்.

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?
த‌ன்ன‌ம்பிக்கை+ச‌கிப்புத்த‌ன்மை+பொறுமை; ஒன்றுமில்லை.

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
ஏதுமில்லை.

இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மா. அப்பா. ஊர்ல‌ இருக்காங்க‌.

இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெறும் லுங்கி ம‌ட்டும்.

என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
உன் மேல‌ ஆச‌தான் (ஆயிர‌த்தில் ஒருவ‌ன்) நேஷ‌ன்ல் ஜியோக‌ராஃபியில் மெகா ஸ்ட‌ர்க்ச்ச‌ர்ஸ்.

வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ஸ்கை ப்ளூ.

பிடித்த மணம்?
காஃபி; ம‌ல்லிகை; ம‌ழை ம‌ண் வாச‌னை; செடி ம‌ர‌ங்க‌ள் ம‌ண்டிய‌ இட‌ங்க‌ளில் வ‌ரும் ப‌ச்சை வாசனை.

பிடித்த விளையாட்டு?
க்ரிக்கெட்; டேபிள் டென்னிஸ்;

கண்ணாடி அணிபவரா?
சோடாபுட்டி.

எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
ம‌ர்ம‌ம்; யூகிக்க‌முடியாத‌ க்ளைமாக்ஸ்; திடீர் திருப்ப‌ங்க‌ள் கொண்ட‌ ப‌ட‌ங்க‌ள்; அதே ச‌ம‌ய‌த்தில் தெளிந்த‌ நீரோடை போன்ற‌ அமைதியான‌ அழ‌கான‌ ப‌ட‌ங்க‌ள்; அனிமேஷ‌ன் மூவிஸ் எல்லாம்.

கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்ட‌ரில் ஒரு வ‌ருட‌த்துக்கு முன்பு குசேல‌ன்; டீவியில் ச‌மீப‌த்தில் LA Confidential.

பிடித்த பருவ காலம் எது?
மெல்லிசான‌ காற்றுட‌ன் கூடிய‌ இலையுதிர் கால‌ம்.

என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
1. Joel on Software.
2. Cosmos – Carl Sagan

உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ம‌னைவி ம‌ற்றும் குழ‌ந்தையின் ந‌ல்ல‌ புதிய‌ போட்டோ கிடைக்கும் பொழுது.

பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
ப‌ள்ளிக்குழ‌ந்தைக‌ள் ப‌டிக்கும் ச‌த்த‌ம்; ப்ளாக் போர்டில் சாக்பீஸ் சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நாராச‌மாய் ஒரு ச‌த்த‌ம் கொடுக்குமே அந்த‌ ச‌த்த‌ம்..

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இந்தியாவில் விசாக‌ப‌ட்டின‌ம்.

உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தூங்குவ‌தெல்லாம் திற‌மை லிஸ்டில் வ‌ராது என்ப‌தால்; வேக‌மாக‌ப் ப‌டிப்ப‌து(Fast Reading)

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
குழ‌ந்தைக‌ளை அடிக்கும் பெற்றோர்க‌ள்;பெற்றோர்க‌ளுக்கு அட‌ங்காத‌ வ‌ள‌ர்ந்த‌ பொறுப்ப‌ற்ற‌ ஆண் பிள்ளைக‌ள்.

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நானே.

உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
Nothing Specific.

எப்படி இருக்கணும்னு ஆசை?
ஸ்ட்ராங்காக‌; ஸிக்ஸ் பேக்ஸ்; புஜ‌ ப‌ல‌ம் காட்டுப‌வ‌னாக‌; அம்மா அப்பாவுட‌ன் ஆன‌ந்த‌மாக‌ பொழுதைக் க‌ழிப்ப‌வ‌னாக‌; ம‌னைவி குழ‌ந்தையுட‌ன் இன்னும் நேர‌ம் செல‌வ‌ழிப்ப‌வ‌னாக‌; சிக்க‌ன‌மான‌வ‌னாக‌;

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை மிக‌ மிக‌ குறுகிய‌து; என‌வே வாழ்ந்துவிடுங்க‌ள்.

நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

1. பொன்ஸ்: என்னைப்போல‌வே திடீர் திடீர்ன்னு எப்ப‌வாச்சும் எழுத‌ற‌வ‌ர்; என்னைப் போல‌ அல்லாம‌ல் எழுதினால் ந‌ச்சுன்னு எழுத‌ற‌வ‌ர்.
2. நிர்ம‌ல்: அமைதியான‌ அழ‌கான‌ சிந்திக்க‌ வைக்கும் ப‌திவ‌ர்; ரொம்ப‌ நாளா ஆள‌வே காணோம்.
3. வெட்டிப்ப‌ய‌ல் (ஏற்க‌ன‌வே எழுதிட்டாருன்னு நினைக்கிறேன்) என‌க்குப் பிடித்த‌ ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்; எந்த‌ விச‌ய‌த்தையும் சுவ‌ராஸ்ய‌மாக‌ எழுத‌க்கூடிய‌வ‌ர்.
4. சுகுமார்: நான் பார்த்து விய‌க்கும் ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌ர்; குறுகிய‌ கால‌த்தில் வ‌லையுல‌கில் பிர‌ப‌ல‌மான‌வ‌ர்; ப‌ய‌ங்க‌ர‌ கிரியேட்டிவ்வான‌ ஆள்;
5. அதிஷா : இவ‌ருடைய‌ ந‌க்க‌ல் என‌க்கு ரொம்ப‌வும் பிடிக்கும்.
6. எஸ் ராம‌கிருஷ்ண‌ன் : பிடித்த‌ எழுத்தாள‌ரைப் ப‌ற்றி மேலும் தெரிந்து கொள்வ‌த‌ற்கு.
7. ஜெய‌மோக‌ன்:பிடித்த‌ எழுத்தாள‌ரைப் ப‌ற்றி மேலும் தெரிந்து கொள்வ‌த‌ற்கு.

***

 

பாத்ததும் படித்ததும்

(அரவிந்த அடிகா, விகாஷ் ஸவரூப், ஸ்லம்டாக், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் படங்கள்)

அரவிந்த் அடிகா வைட் டைகருக்கு அப்புறம் Between The Assasinations என்றொரு சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கிறார். பாப்புலரில் இன்று பார்த்தேன். தொகுப்பு பாப்புலராகிவிட்டதா என்று தெரியவில்லை. தற்பொழுது படிப்பதற்கு நிறைய இருப்பதால் இப்போதைக்கு வாங்கவேண்டாம் என்று நினைத்திருக்கிறேன். சல்மான்ருஷ்டிக்கு பிறகு இந்திய ஆங்கில எழுத்து மிகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். கிரண் தேசாய், அருந்ததி ராய், விக்ரம் செத், அரவிந்த் அடிகா, அமிதவ் கோஷ் போல நிறைய பேர் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றனர். புக்கர் பரிசை வரிசையாக தட்டிச்செல்கிறார்கள். இந்த வரிசையில் மேலும் ஒருவர்: ஸ்லம் டாக் மில்லியனரை எழுதிய விகாஷ் ஸ்வரூப். இன்று கூட சிங்கப்பூரிலிருந்த வெளிவரும் இந்திய வாரப்பத்திரிக்கையான Tablaவில் கூட இவர்களைப் பற்றிய கட்டுரை வந்திருந்தது. பிரிட்டிஷ் எப்படி வளைச்சு வளைச்சு அட்டாக் பண்ணி காலணிய ஆதிக்கம் பண்ணாங்களோ அதே போல இந்தியர்கள் சகட்டுமேனிக்கு எல்லாத் துறைகளிலும் புகுந்து வெளுத்துக் கட்டுறாங்க. அதுவும் எழுத்துத் துறையில் முக்கிய இடம் பிடிப்பது என்பது மிக நன்று.

தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் Three Cups Of Teaக்கு அப்புறம் Tagging என்றொரு புத்தகத்தை எடுத்து வைத்திருக்கிறேன். Fiction படிப்பதை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கலாம் என்றிருக்கிறேன், Michio Kaku எழுதிய புத்தகங்களின் மேல் ஒரு கண் இருக்கிறது. மேலும் அயன் ரான்ட்-இன் Atlas Shrugged படிக்கவேண்டும் என்றும் நினைத்திருக்க்றேன். பார்ப்போம்.

*

என் அண்ணன் நெடுங்குருதி ஒரு வழியாக படித்துமுடித்து விட்டேன் என்று சொன்னார். நெடுங்குருதி பற்றி ஒரு நெடும் பதிவு தான் போடவேண்டும்,. சிங்கப்பூருக்கு வந்த பொழுது இங்கே நூலகத்தில் மெம்பராக சேர்ந்த பொழுது முதன் முதலாக இரண்டு புத்தங்கள் எடுத்தேன். Code To Zero மற்றும் நெடுங்குருதி. கடைசி அறுபது எழுபது பக்கங்கள் கொஞ்சம் தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டால் நெடுங்குருதி தமிழில் ஒரு மிக முக்கியமான நாவல். ராமகிருஷ்ணனின் அழுங்காத அலட்டல் இல்லாத எழுத்து நடை எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய சிந்தனையும் உவமைகளும் மிகவும் புதிதாக இருந்தது. ராமகிருஷ்ணன் மிக நுனுக்கமான பார்வை கொண்டவர். வெயிலையும் எறுப்புகளையும் அவர் பின் தொடர்ந்து செல்வது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நெடுங்குருதியில் வரும் அந்த சிறு பையன் கண்டிப்பாக அவராகத்தான் இருக்கவேண்டும். அனுபவிக்காத ஒருத்தரால் எழுதப்பட்ட நாவல் இல்லை இது. அந்த நாவலின் நான் வாங்கிய மறுபதிப்பில் ராமகிருஷ்ணன் முன்னுரை எழுதியிருப்பார் அது கூட அவ்வளவு அழகாக இருக்கும். மீண்டும் ஒரு முறை படிக்கவேண்டும்.

ஆனால் அவரது யாமம் படித்தபொழுது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏன்? ஏன் ராமகிருஷ்ணன் இது போன்றதொரு நாவல் எழுதினார் என்று நான் நிறைய நாட்கள் எனக்குள்ளும் என் நண்பர் ராஜாராமிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன். அவருக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை. கடைசியாக ராமகிருஷ்ணனை சிங்கப்பூரில் சந்தித்தபொழுது அந்தக் கேள்வியை நான் கேட்டேவிட்டேன். நீங்கள் இந்த நாவல் எழுத வேண்டிய கட்டாயம் என்ன என்று. சிரித்த ராமகிருஷ்ணன் சொன்ன பதில் எனக்கு ஞாபகம் இல்லை. இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டு கண்டிப்பாக எட்டு மாதங்கள் இருக்கும். யாமம் படித்து ஒரு வருடம் இருக்கும். கண்டிப்பாக மீண்டும் யாமம் படிக்கும் எண்ணமில்லை. adultryஐ ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் எழுதினால் எனக்கு பிடிப்பதில்லை. பாலகுமாரன் எனக்கு பிடிக்காமல் போனதற்கு அது தான் காரணம்.

*

ஸ்லம்டாக் மில்லியனர் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தான் பார்த்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் நன்றாக இருந்தாலும் பிறகு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஹாலிவுட்ல இருந்து வந்து படம் எடுத்தாலும் பாலிவுட் படத்துக்கு கண்டிப்பா லவ் இருக்கனும்ங்கற விதியை கடைப்பிடித்திருக்கிறார் டேனி போயல். நிறைய கேள்விகளுக்கு படத்தில் பதில் இல்லை. சேரியில் வளர்பவர்களுக்கு எப்படி இவ்வளவு இங்கிலீஷ் பேச வருகிறது. அது தான் மிக முக்கியமான கேள்வி. ஆஸ்கார் வாங்கியிருக்கிறதில்லியா? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துகொள்ள கோனார் நோட்ஸைப் புரட்டிப்பார்ப்பது போல விகாஸ் ஸ்வருப்பின் ஒரிஜினல் நாவலை (Q&A) எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள்?

நான் நாவல் படிக்கவில்லை. படிக்கவும் விருப்பம் இல்லை. நாவல் படித்துவிட்டு படம் பார்க்கலாம். நன்றாக இருக்கும். ஹாரி பாட்டர் ஒரு உதாரணம். படித்து அனுபவித்த சாகச காட்சிகளை நேரில் படமாகப் பார்ப்பது என்பது தனி ஆனந்தம் தான். ஆனால் படம் பார்த்து விட்டு நாவல் படிக்க முடியுமா? இந்தமாதிரி விடை தெரியா கேள்விகள் இருக்கிற படங்களுக்கு நாவல் படித்து முழுவதும் புரிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

Telluride Film Festivalஇன் போது டேனி போயலிடம் “நீங்கள் எப்பொழுதும் எடுக்கும் சினிமாவை விட்டுவிட்டு ஏன் இந்தியாவை சப்ஜக்ட்டாகக் கொண்ட படத்தை இயக்குகிறீர்கள்?” என்ற கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதில் சொன்னாராம்: “எனக்கு இந்தியாவைப் பற்றி ஏதும் தெரியாது, நான் இந்தியாவுக்கு போனதே இல்லை. அதானால் இதை ஒரு சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டேன்” என்றாராம். இதேபோல “எனக்கு நீயுயார்க் நகர கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை தெரியாது, நான் நியூயார்க்குக்குப் போனதேயில்லை, அதனால் தெரிந்துகொள்வதற்காக நான் படத்தை இயக்குகிறேன்” என்று சொன்னால் என்ன நடக்கும் என்கிற கேள்வியைக் கேட்டிருந்தார் சல்மான்ருஷ்டி. கிழிச்சிருக்கமாட்டாய்ங்க.

சரி. படத்துக்கும் நாவலுக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறதென்று பார்ப்போம். படத்தின் ஹீரோ ஜமால் மாலிக் படத்தில் காட்டுவதைப் போன்ற கலவரத்தால் அனாதையாக்கப்பட்டவர் அல்ல. பிறந்த உடன் கைவிடப்பட்டு ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் எட்டு வயது வரை டெல்லியில் வளர்க்கப்பட்டவர். பாதிரியாரும் கதோலிக்க சர்ச்சும் டெல்லியும் படத்தில் வரவேயில்லை. ஆங்கில கதோலிக்க பாதிரியாரால் வளர்க்கப்பட்டதால் தான் ஜமால் ஆங்கிலம் பேசுகிறான். ஜமால் சரி, கோனார் நோட்ஸைப் பார்த்து தெரிந்து கொண்டாயிற்று மற்றவர்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறார்கள்? கதோலிக்க சர்ச் வரவில்லை சரி, இந்து முஸ்லீம் கலவரம் ஏன் படத்தில் திணிக்கப்பட்டது? வளர்த்த பாதிரியார் பிறகு மற்றொரு பாதிரியாரால் கொலை செய்யப்படுகிறார். இதுவும் படத்தில் வரவில்லை. மேலும் பல வித்தியாசங்களுக்கு இங்கே பார்க்கவும்.

இந்தப் படத்துக்கு ஆஸ்கார் கொடுத்திருக்கத்தான் வேண்டுமா? இதற்கு முன்னர் ஆஸ்கார் வாங்கிய No Country For Old Men, Crash போன்ற படங்களுக்கு பக்கத்திலாவது இது வரமுடியுமா? கண்டிப்பாக கிடையாது. தாரே ஜமீன் பர் ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு பகுதியைக் கூட இது ஏற்படுத்தவில்லை. ரஹ்மான் அப்படி என்ன படத்துக்கு இசையமைத்துவிட்டார்? ஜெய் ஹோ பாடல் ரஹ்மானின் தரத்துக்கு மிக மிக சாதாரணம் தான். படத்தில் ஜெய் ஹோ என்று கடைசியில் பாலிவுட் ஸ்டைலில் டான்ஸ் வேறு. அது சாதாரண டான்ஸை விட மிகவும் கேவலமாக இருந்தது. அப்படி இருக்க ஆஸ்கார் கொடுக்குமளவுக்கு என்ன இருக்கிறது படத்தில்?

படத்தில் ஒன்றும் இல்லை. படத்துக்கு வெளியே நாம் இருக்கிறோம். இந்தியர்கள் இருக்கிறார்கள். கடந்த வருடம் No country for old men படம் ஆஸ்கார் வாங்கியது என்று எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? அதை எத்தனை பேர் லைவ்வாக Oscar Show பார்த்திருப்பார்கள்? What was the viewership rating? இந்திய மொழி படம் ஒன்று ஆஸ்காருக்குள் நுழைந்தஉடன் எத்தனை பேர் ஆஸ்கார் ஷோவைப் பார்த்திருப்பார்கள்? Thats the trick. ஆசியாவிலும் ஆஸ்கார் மிகவும் பிரபலமடைந்துவிடும். This film was at the right time. Thats it.

இனி வருடம் தோறும் ஒரு ஆசிய மொழி படத்துக்கு எதோ ஒரு விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நான் சொல்வதை நம்பவில்லையென்றால் இதைப் பாருங்கள்:
போனவருடம் எப்படி இருந்தது?
இந்த வருடம் எப்படி இருந்தது? 13% viewership கூடியிருக்கிறது.

கமல் படத்தில் உள்ள எல்லா கேரக்டர்களையும் நானே செய்வேன் என்று அடம்பிடித்து மூன்னூறு மணி நேரம் மேக்கப் போடாமல் அழகாக இயல்பாக மனதை தொடுகிற சப்ஜெக்ட்டோடு நடித்தார் என்றால் சீக்கிரமே ஆஸ்கார் நாயகன் ஆகிற வாய்ப்பிருக்கிறது. ஜெய் ஹோ.

*

Gran Torino பார்த்தேன். எனக்கு ஏதோ ரஜினி படம் பார்த்ததைப் போல இருந்தது. கறுப்பர்களிடம் வெறும் விரல்களைக் காட்டி மிரட்டும் போது ஆகட்டும், அவருடைய புல் தரையில் சண்டைப் போடும் சீன குண்டர்களைப் பார்த்து துப்பாக்கியைக் காட்டி “If you ever step in to my lawn..” என்று கர்ஜிக்கும் பொழுதாகட்டும், Client Eastwood is still a lion. க்ளைமாக்ஸ் தான் ஒட்டவில்லை. வித்தியாசமாக இருந்தது. ஆனால் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை.

மற்றொரு படம் The Lost (2009). மற்றொரு மல்டிப்பிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் கதை. நம்ப விடாது கருப்பு தொடர் மாதிரி. I doubted the end. But I didnt doubt. Mummy : The Tomb of the dragon empire. கன்றாவி. விஜயகாந்த் எவ்வளவோ தேவலாம். Fraserக்கு வயசாகி விட்டது.

அபியும் நானும். ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். மற்றபடி நெஞ்சைத் தொடும் விதமாக ஏதும் இல்லையென்றே எனக்குத் தோன்றியது. பிச்சக்காரரைப் பார்த்த உடன் ப்ரகாஷ்ராஜ் டக்கென்று ஐஸ்வர்யாவிடம் “உன்னொட சொந்தக்காரரா?”ன்னு கேக்குற இடம் நச். மற்றபடி த்ரிஷா தனது லவ்வருடன் சேர்ந்து நடப்பதைப் பார்க்கும் போது ப்ரகாஷ்ராஜ் கோபப்படுவதைப் பார்க்கும் பொழுது நமக்கு கடுப்பு தான் வருகிறது. என் அனுமதி இல்லாமல் பாய் ·ப்ரண்ட் வெச்சிருக்கியேன்னு கோபப்படுறது ஒரு ரகம். ஒத்துக்கொள்ளலாம். இதெல்லாம் கொஞ்சம் டூமச் தான். ஆனால் மகள் மீது possesiveஆக இருக்கும் அப்பாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். I know what I am doing டயலாக் ·பேஷனாகியிருக்குமே?

சொல்லமறந்துவிட்டேன், ஒரு அற்புதமான படம் பார்த்தேன், பெயர்: அருந்ததி. அப்பப்பா என்ன படம். என்ன நடிப்பு. என்ன வேகம். சான்சே இல்ல. இது போன்ற ஒரு படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு. ஹைலி எமோஷனல் மூவி. மூன்று மணி நேரம் நம்மை இழுத்துப் பிடித்து உட்காரவெச்சிருந்தார் டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா. அம்மன் படம் பாத்தப்பவே நான் அவரது ரசிகன். இப்போ பரம் விசிரி ஆகிவிட்டேன். அனுஷ்கா அருமையான செலக்ஷன். எப்படி ரம்யாகிருஷ்ணனை கரெக்ட்டாக அம்மனுக்கு பிடிச்சாரோ அதே போல. மண்டையில் தேங்காய் உடைத்து உயிர் தியாகம் செய்யும் போதாகட்டும், இந்த ஜென்மத்தில் முன் ஜென்மத்தில் தானே வரைந்த படத்தில் இருக்கும் செய்தியை decode செய்யும் பொழுதாகட்டும், சயாஜி ஷிண்டே தூக்கியெறியும் வாளை பிடிப்பதாகட்டும் தூள். வாளை லாவகமாக பிடிக்கும் பொழுது இன்னொரு பாட்ஷா போல இருந்தது.

*

சன் டீவி குங்குமம் தொல்லை தாங்கமுடியல. ஒரு அட்டு படத்தை எடுத்துற வேண்டியது. அப்புறம் படத்தில் நடிச்சவங்கள ஊர் ஊரா கூட்டிட்டு போய் டான்ஸ் ஆடவெச்சு அமர்க்களம் பண்ணவிடுறது. பாக்க வந்த மக்கள கை ஆட்ட வெச்சு படம் பிடிக்கிறது. குங்குமத்தில் ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுத வேண்டியது. அப்படித்தான் நான் ஒரு படத்துக்கு ஏமாந்தேன். படிக்காதவன். பொதுவா நான் குங்குமம் விமர்சனம் எல்லாம் படிக்கிறதில்ல. ஆனா விதி வலியது இல்லியா, அன்னிக்கின்னு பார்த்து என் கண்ணில பட்டுத் தொலைஞ்சது. அப்படி இப்படி ஆஹா ஓஹோன்னு ஒரே அலம்பல். எனக்கு இவிங்க படம்ங்கிறது தெரியாது. தெரிஞ்சிருந்தா தப்பிச்சிருப்பேன். தனுஷ் நடிச்ச முந்தைய படங்கள் கொஞ்சம் பாக்கிற மாதிரி இருந்துச்சா, அதானால் நல்லா இருக்கும் போலருக்குன்னு நாலு டாலர் கொடுத்து வாடகைக்கு எடுத்துவந்தேன். தனுஷ் சார் சந்தானம் கருணாஸ் இந்த படத்துல இல்லியா சார்? மயில்சாமி, சன் டீவில வர்ற காமெடியன்கள்ன்னு ஒரே அப்பா வயசு ப்ரண்ட்ஸ் உங்களுக்கு! சகிக்கல. நானும் படத்தில இப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும் அப்ப டர்னிங் பாயின்ட் வந்திரும்னு உக்காந்து உக்காந்து ஏமாந்துட்டேன். விவேக் காமெடியும் சகிக்கல. எப்படித்தான் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம படத்த ஆஹா ஓஹோன்னு விமர்சனம் எழுதமுடியுதோ தெரியல.

விகடனும் இதுக்கு விதிவிலக்கல்ல. SMS படத்துக்கு மார்க் மழை பொழிந்திருந்ததைப் பார்த்தேன். அவ்ளோ நல்லாவாயிருக்கு படம்? நான் பாக்கல.

*

நான் கடவுள் நான் பார்க்கவேயில்லை. பார்க்கவேண்டும் என்றும் தோன்றவும் இல்லை. ஜெமோவின் ஏழாவது உலகம் நாவல் படித்திருக்கிறேன். அது ஏற்படுத்திய பாதிப்பு குறையவே நீண்ட நாட்கள் ஆனது. படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட விரும்பவில்லை.

*

வாரணம் ஆயிரம் இப்போத்தான் பார்த்தேன். சூர்யா அழகாக இருக்கிறார். இப்ப அவர் தான் மீடியாக்களுக்கு சுல்த்தான் போல? விஜன் அவார்ட்ஸ்ல பார்த்தீங்களா? சூர்யா ஜோதிகாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை? பாவம் விஜய் இருக்காறா இல்லியாங்கிற அளவுக்கு உக்காந்திருந்தார். யாரும் கண்டுக்கிடல. இப்ப வருகிற படங்கள கவனிச்சீங்களா? சூரியாவின் உடைகளுக்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்தை. அயனையும் ஆறுவையும் பாருங்கள். வித்தியாசம் தெரியும்.

அயன் மற்றொரு படம். நன்றாக இருந்தது. சண்டை பாட்டு காதல் காமெடி சென்ட்டிமெண்ட் என்று கலந்து அடித்து விளையாடியிருந்தார் இயக்குனர் KV ஆனந்த். ஜெகன் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். அவரை விஜய் டீவியில இப்ப பாக்க முடியிறதில்லையே? அந்த ஆப்பிரிக்க சண்டைக்காட்சி சேசிங் அற்புதம். ஆனால் குவாண்டம் ஆ·ப் சோலேஸை நினைப்படுத்தியது. இதே போல ஒரு சண்டைக் காட்சி The Bourne Ultimatumவிலும் உண்டு. ஞாபகம் இருக்கிறதா? ஹனி ஹனி பாடல் என்னுடைய ·பேவரிட்டாக ரொம்ப நாள் இருந்தது. இப்பொழுது “காற்றுக்குள்ளே” பாடல் சர்வம் படத்திலிருந்து தான் என்னுடைய ·பேவரிட்.

அடுத்து சர்வம். விஷ்ணுவர்த்தன் அடுத்த மணிரத்னம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு நாளும் மணி இது போன்ற ஒரு படம் கொடுக்கமாட்டார். படம்மாய்யா இது? சும்மா காமிரா மட்டு அழகாக இருந்தால் போதுமா? Trailer பாத்து ஏமாந்தேன்யா. அவ்ளோ அழகா இருந்தது Trailer. நல்ல கதையும் கூட. ஆர்யா த்ரிஷா யுவன் நீரவ்ஷாவை வைத்துக்கொண்டு இதற்குமேலும் வீணடிக்க முடியாது. படத்தில் சொல்கிறார் போல மனதில் நிற்கிறார் போல ஒரு காட்சி கூட இல்லை. சர்வ நாசம்.

யாவரும் நலம் நல்ல முயற்சி. அழகாக நேர்த்தியாக எடுத்திருந்தார்கள். முடிவு கச்சிதம். ஆனால் எனக்கு Amityville Horror படம் நினைவுக்கு வந்தது ஏனென்று தெரியவில்லை.

*

மூன்று தேநீர் கோப்பைகள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அது குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கிராமப்புற மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்பது.

நான் சில அரசு பள்ளிகளுக்கு சென்றிருக்கிறேன். வகுப்பில் ப்ளாக் போர்டு, டேபிள், சாக்பீஸ் போன்ற விசயங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாத்தியார் இல்லாமல் இருக்கலாமா? அதை விட கொடுமை வேறு என்ன இருக்கமுடியும்? நிறைய அரசு பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன. நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை. பல நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் வகுப்புக்கு வந்துவிட்டு மாணவர்களை அவர்களாகவே பாடம் படித்துக்கொள்ளச்சொல்லிவிட்டு தூங்கும் ஆசிரியர்களைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் குக்கிராமங்களில் தான் இது போல நடக்கின்றன என்று நினைக்கிறேன். மொத்த பள்ளிக்கும் ஒரே ஆசிரியர் தான் இருப்பார். மிஞ்சிப்போனால் இருவர் அல்லது மூவர். மூவர் இருந்தாலும், பெரும்பாலும் மூவரும் வருவதில்லை. சொல்லிவைத்துக்கொண்டு லீவு போட்டு விடுகிறார்கள். அல்லது பெர்மிசன் என்கிற பெயரில் மதியம் கிளம்பிவிடுகிறார்கள். டிஇஓ திடீர் விசிட் அடித்தால் மட்டும் அவர் என்ன செய்யப்போகிறார்? வேலை பார்க்கும் நமக்கு மனசாட்சி வேண்டும். சம்பளம் வாங்குகிறோமா இல்லையா?

ஆசிரியராக இருந்துகொண்டு மாணவர்களுக்கு சரியாக பாடம் சொல்லிக்கொடுக்காமல் இருப்பது பெரும் துரோகம். அந்த ஏழை அறியா மாணவர்களுக்கு நீங்களும் பாடம் சொல்லிக்கொடுக்கவில்லையென்றால் யார் தான் சொல்லிக்கொடுப்பார்கள்? இங்கே பணிரெண்டாம் வகுப்புக்கு கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், மாத்ஸ் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர்களைப் பற்றி நான் சொல்லவில்லை. அதெல்லாம் அடுத்த லெவல். இதுவும் தவறு தான் என்றாலும் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படியோ படித்துக்கொள்ளத் தெரியும். அவர்களுக்கு புரிந்துகொள்கிற வயது. ஆனால் பச்சிளம் குழந்தைகள்? They need a good start.

சம்பளம் போதவில்லையா? I dont think so.

இப்படி இருக்கும் பொழுது செய்யும் வேலையில் மட்டும் ஏன் தொய்வு? ஆசிரியராக இருந்துகொண்டு நீங்கள் என்னென்ன செய்யலாம்? எப்படி எப்படி பாடம் எடுக்கலாம்?

1. கொஞ்சம் செலவு செய்ய மனமிருந்தால் போதும் அட்டகாசமாய் சார்ட்கள் வாங்கி வெட்டி ஒட்டி பாடம் எடுக்கலாம்.
2. கதைகள் படித்து அழகாய் குழந்தைகளுக்கு சொல்லலாம்.
3. கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு பொது அறிவு கற்றுக்கொடுக்கலாம். அதற்கு முதலில் நீங்கள் கற்க வேண்டும். விஜய் டீவியில் நீயா நானாவில் ஒரு முறை ஆசிரியர்கள் பற்றிய நிகழ்ச்சியில் “சந்திராயன் வெற்றியா தோல்வியா?” என்கிற கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குக் கூட விடை தெரியாமல் இருந்தது கொஞ்சம் வருத்தப்படவேண்டிய விசயம்.
4. ஆங்கிலம் நீங்கள் படித்துகொண்டு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கலாம்.
5. சுத்தம் கற்றுக்கொடுக்கலாம்.
6. ஒழுக்கம் கற்றுக்கொடுக்கலாம்.
7. ரைம்ஸ் கற்றுக்கொடுக்கலாம். எத்தனையோ வீசிடிகள் மற்றும் டீவிடிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உங்கள் டீவிடி ப்ளேயரை எடுத்துக்கொண்டு (வீட்டில் டீவிடி ப்ளேயர் இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள்!) ஊரில் இருக்கும் பொது டீவியில் அந்த வீசிடிகளை போட்டுக் காட்டலாம்.
8. புதிதாக விளையாட்டு கற்றுக்கொடுக்கலாம். புட் பால் வாங்கிக்கொடுங்கள். கிரிக்கெட் பேட் வாங்கிக்கொடுங்கள். பாட்மிட்டன் ராக்கெட் வாங்கிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகள் குடிக்கும் காம்ப்ளானுக்கு இலவசமாக கிடைக்கும் டென்னிஸ் பந்துகளையாவது அட்லீஸ்ட் கொடுங்கள்.
9. டீம் ஸ்பிரிட் கற்றுக்கொடுக்கலாம். உங்களுக்கு தெரிந்திருந்தால்.
10. இலக்கியம் கற்றுக்கொடுக்கலாம்.
11. தேடலை கற்றுக்கொடுக்கலாம். உங்கள் ஹேர்பின், ஹேண்ட்பேக், கண்ணாடி, செருப்பு பொன்றவற்றை தேடச்சொல்கிறீர்களே அதைப் பற்றி நான் சொல்லவில்லை, அறிவுத் தேடல் பற்றி சொல்கிறேன். Teach them how to acquire knowledge.
12. உங்கள் பிள்ளைகளை ஒரு நாள் பள்ளிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தெரிந்தவற்றைக் கற்றுக்கொடுக்கச்சொல்லுங்கள். பகிர்ந்துகொள்ளச்சொல்லுங்கள்.

நான் சொன்னவை மிக மிக குறைவு. குறைந்த செலவில் நீங்களே அரசை எதிர்பார்க்காமல் இன்னும் நிறைய செய்யமுடியும்.முயற்சி செய்யுங்கள். Find a role model and be a role model.

The Three Cups of Tea கிடைத்தால் படியுங்கள்.

ப்ரான்ஸ் பயணம் – 3

எங்கள் பக்கத்தில் ஒரு ப்ரெஞ்ச் ஜோடி அமர்ந்திருந்தார்கள். கொஞ்சம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்ததும் நன்றாக பேசினார்கள். ஓ நீங்கள் பிஸினஸ் விசயமாகப் போகிறீர்களா? அதான பாத்தோம் இந்த குளிர்ல எதுக்கு இவங்க ப்ரான்ஸ¤க்கு டூர் வந்திருக்காங் அதுவும் சின்ன குழந்தையைத் தூக்கிக்கிட்டுன்னு நாங்க யோசிச்சிட்டிருந்தோம்னு சொன்னாங்க. நல்லா யோசிச்சீங்க போங்க! நாங்க போக வேண்டிய இடம் செயின் க்வென்ந்தான். (முதலில் என்னுடைய மேலாளர்(ப்ரெஞ்ச்காரர்) இந்த ஊரை சொன்னபோது எனக்கு செங்கோட்டை போல இருந்தது.) அவர்கள் செயின் க்வென்ந்தான் போகவேண்டும் என்றால் நீங்கள் டாக்ஸி பிடிக்கவேண்டும். ஆமா பிடிக்கனும். ட்ரெயினில் போவதற்கு ரொம்ப நேரம் ஆகும். ஆமா தெரியும். மேலும் இந்த அதிகாலையில் (எங்களுடைய ப்ளைட் அதிகாலை ஐந்தேமுக்கால் அளவில் தரையிரங்கும்) டாக்ஸி கிடைப்பது ரொம்பவும் கடினம். என்னது? உன்னை ஏமாற்றினாலும் ஏமாற்றிவிடுவார்கள். அடப்பாவிகளா? சொல்லவேயில்ல! என்னுடைய சகா ஒருவர் ஏற்கனவே பாரீஸ¤க்குப் போயிருக்கிறார். அவர் ப்ரான்ஸிலிருக்கும் கறுப்பர்களைக் குறித்து ரொம்பவும் பயமுறுத்தியிருந்தார். ஜன்னலை உடைத்து ஹோட்டலுக்குள் வருவார்கள். துப்பாக்கியைக்காட்டி பணத்தைப் பிடுங்குவார்கள். கத்தியைக் காட்டி கண்ணை நோண்டுவார்கள் என்று அடுக்கடுக்காய் அவர்களை பற்றி புகழ்ந்து தள்ளியிருந்தார். அதிகாலை. ஏமாற்றிவிடுவார்கள். கறுப்பர்கள். இந்த மூன்று வார்த்தைகளும் சற்றுமுன் சாப்பிட்ட செட்டிநாட்டு கருவாட்டு குழம்பு வயிற்றைக்கலக்குவது போல கலக்க ஆரம்பித்திருந்தது. இன்று நீங்கள் போகவிருக்கும் இடத்தில் வெப்பநிலை என்னவென்று தெரியுமா? தெரியாது. 1 டிகிரி என்று புளியை மேலும் கரைத்தார். நீங்களே எங்களுக்கு டாக்ஸி பிடித்துக்கொடுங்களேன் என்று நான் கெஞ்சாத குறையாக கேட்க, அவர் ஆபத்பாந்தவனாய் உதவுகிறேன் ஆனால் மூன்று டாக்ஸிகளிடம் தான் கேட்ப்பேன் அதற்குபிறகு நீங்கள் எங்களுடன் ட்ரெயினில் தான் வரவேண்டும் என்று கன்டிஷனோடு வாக்குறுதியளித்துவிட்டு தூங்கிப்போனார். எனக்கு தூக்கம் வரவில்லை. என்னது ட்ரெயின்ல போறதா? இவ்வளவு லக்கேஜையும் தூக்கிக்கிட்டா? நேரம் பாலுமகேந்திராவின் வீடு படத்தையும் விட மிக மிக மெதுமாக ஓடிக்கொண்டிருந்தது.

ப்ளைட் அமைதியாகத் தரையிறங்கியது. நாங்கள் வெளியேறுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த பொழுது, நிறைய பேர் எங்களிடம் எங்கே போகிறீர்கள்? உங்களை பிக் அப் செய்ய யாராவது வருகிறார்களா? என்று அன்பின் மிகுதியால் கேட்டனர். ஒருவர் ஸ்ரீநிதியைப் பார்த்து வெளியே பயங்கர குளிராக இருக்கும் ஸ்வெட்டர் கேப் எல்லாம் போட்டுக்கோங்க என்று சொன்னார். பின்னால் உட்கார்ந்திருந்த ஒரு இங்கிலீஷ் லேடி (ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்துவிட்டு இங்கிலாந்துக்கு திரும்பிச் செல்கிறார்) அனுஷாவிடம் பாப்பாவைக்காட்டி, “She is a good child, and You are a very good mother. You were exceptionaly patient with your child today” என்று பல பாராட்டுக்களை அள்ளித் தெளித்துவிட்டுப் போனதில் அனுஷாவின் ப்ளைட் மீண்டும் டேக் ஆப் ஆகி வானத்துக்கு சென்று விட்டது. அது தரையிரங்க நீண்ட நேரம் ஆனது. நாங்கள் மூவரும் ஏதோ போருக்கு செல்லும் வீரர் (யாரு நீயா?), வீராங்கனை (நோ கமென்ட்ஸ்) மற்றும் குட்டிவீராங்கனை போல சில பல உடைகளை அணிந்துகொண்டு டயிங் என்று கிளம்பி நின்றோம். வெளியேறுகையில் Strollerஐ எங்கே என்று அங்கு ப்ளைட் வாசலில் கடமைக்கு அழகாக சிரித்து வழியனுப்பும் அந்த பொம்மையிடம் கேட்கையில் அது மற்ற பாக்கேஜ்களுடன் வந்துவிடும் என்று சிரிப்பு மாறாமல் அழகாக சொன்னது.

ப்ளைட்டையும் ஏர்போர்ட்டையும் கனெக்ட் செய்யும் நடைபாதையில் காலடி எடுத்துவைத்த அந்த நொடியில் கடுங்குளிர் என்றால் என்னவென்பதை நான் தெரிந்துகொண்டேன். ஊசிபோலக் குத்தும் என்பதை நான் படித்திருக்கிறேன். குத்துவதோடு நிறுத்தாமல் குத்திக்கிழிக்கவும் செய்யும். மூச்சுவிடுவதற்கு சிரமம் ஏற்படுத்துமளவுக்கு குளிர். மைனஸ் ஒன் டிகிரி செல்சியஸ். வேகமாக நடக்கவேண்டும் என்று விரும்பினாலும் சம்திங் புல்ஸ் யூ பேக். ஏர்போர்ட்டுக்குள்ளே நுழைந்ததும் கொஞ்சம் குளிர் பின்வாங்கிவிட்டதைப் போல இருந்தது.

கும்பலைப் பார்த்து மிரண்டு போய் நிற்கையில் அங்கிருந்த ஒரு ஆபிஸர் எங்களை பிஸிக்கலி சாலஞ்ச்ட் க்யூவுக்கு போகச்சொன்னார்கள். இந்த அனுபவம் எனக்கு ஏற்கனவே இருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு செல்கையில், அப்பொழுது என் மனைவிக்கு ஏழு மாதம், இதே போல கும்பலைப் பார்த்து மிரண்டு போயிருக்கையில், அங்கிருந்த ஒரு ஆபிஸர், எங்களை இதே போன்றதொரு க்யூவிற்கு அனுப்பி வைத்தார். ஊனமுற்றோருக்கான வரிசை. வரிசையில் யாரும் இல்லை. அந்த வரிசைக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆபிஸர் ஒரு பெண்மணி. ஒரே ஒரு பயணி மட்டும் தான் இருந்தார், அவரையும் அந்தப் பெண்மணி செக் செய்து அனுப்பி விட்டார். நானும் என் மனைவியும் சென்று வரிசையில் நிற்கவும், “என்ன?” என்றார் அந்தப் பெண்மணி. “அந்த் ஆபிஸர் தான் அனுப்பிச்சார்” என்றேன். என் பையைப் பிரித்து என் டாக்குமென்ட்ஸை எடுக்கும் முன்னர், அத எடு இத எடுன்னும் ஏகத்துக்கும் ஒருமையில் என்னை அழைத்தார். நான் அமைதியாக எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்தேன். என் டாக்குமென்ட்ஸை அவர் சரிபார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, அதே வரிசையில் ஒரு வயதான பெண்மணி ஒரு பையை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்து நின்றார். இந்த ஆபிஸர் பெண்மணி அவரை முறைத்துப் பார்த்தார். அந்தப் பெண்மணி அசட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். “அந்த தே..மகனுக்கு வேற வேலையில்லையா?” என்றாரே பார்க்கலாம். வாவ். fantastic. what a hostility? அவர் திட்டியது அங்கிருந்து வயதானவர்களை, ஊனமுற்றோர்களை, மாசமாக இருக்கும் பெண்களை இந்த வரிசைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் அந்த ஆபிஸரை. வரிசையில் கூட்டம் அதிகம் இல்லையேம்மா? ஒன்னு ரெண்டு பேர் தான வாராங்க? அவங்கள செக் பண்றதுதான உன் வேலை? அதுக்குத் தான சம்பளம் வாங்குற? பிறகு எதுக்கு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தற? என்ன காரணத்தினாலோ நான் அன்று அமைதியாக வந்தேன். என்னால் என்ன செய்திருக்க முடியும் என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் என்ன பேசினாலும் பிரச்சனையை என் மீது எளிதாக அந்தப் பெண் திருப்பிவிடுவாள் என்பதையும் நான் அறிந்தேயிருந்தேன். சரியான சந்தர்ப்பத்தில் அந்தப் பெண் மாட்டுவாள். இந்த விதமான attitude பத்திதான் Aravind Adiga “The White Tiger”இல் எழுதியிருக்கிறார்.

அனால் பாரீஸிலிருந்த அந்த ஆபிஸர் எங்களை இந்த அளவிற்கு மட்டமாக நடத்தவில்லையென்றாலும் என் பாஸ்போர்ட்டை திருப்பி திருப்பிப் பார்த்தார். எங்கே போகிறீர்கள்? என்ன விசயம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டேயிருந்தார். என் கம்பெனியின் இன்விட்டேஷனை காண்பித்ததும் மறு பேச்சில்லாமல் சாப் அடித்துக்கொடுத்தார். ப்ரெஞ்சில் வாழ்த்துக்கள் சொன்னார்.

எனக்கு எப்படா ஹோட்டல் போவோம் என்றிருந்தது. அடித்துப்பிடித்து கீழே வந்து லக்கேஜ் இருக்கும் செக்சனுக்கு வந்து லக்கேஜ்ஜை கலெக்ட் செய்துகொண்டு ஓட்டமும் நடையுமாக விமான நிலையத்தை விட்டு வெளியேறுகையில், அந்த ப்ரெஞ்சு ஜோடி எங்களுக்காக காத்திருந்தது. வாவ். குட். எங்களை டாக்ஸி ஸ்டாண்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அவரே ஒரு டாக்ஸியைப் பிடித்து எங்களை வழியனுப்பிவைத்தார். வெளியே டாக்ஸி பிடிக்கையில் என் ஹோட்டல் ரிசர்வேஷன் ஸ்லிப்பைக் காட்டி எங்கே போகவேண்டும் என்று சொல்லும் போது, குளிர் சின்ன சின்னதாக என் பின் கழுத்திலும் கன்னத்திலும் துளையிட ஆரம்பித்திருந்தது.

வேன் மெதுவாகச் செல்வது போல இருந்தது. அந்த் அதிகாலையில் ப்ரான்ஸ் மிக அழகாகவே இருந்தது. பெரிய பெரிய அகலமான சாலைகள். சப்வேஸ். நான் வழிநெடுகிலும் இருக்கும் போர்ட்களில் என்ன பெயர் போட்டிருக்கிறார்கள்; செங்க்குவெந்த்தானுக்கு சரியாக போகிறோமா என்று ஒரு வகையான திகிலுடன் கவனித்துக்கொண்டே வந்தேன். எந்த போர்டிலும் செங்க்குவெந்தான் என்கிற பெயர் வரவில்லை. நேரம் செல்லச்செல்ல பயம் அதிகரித்தது. சிறிது தூரத்தில் ரோட்டின் ஓரங்களில் வெள்ளை வெள்ளையாக் ஏதோ தெரிந்தது. அருகில் வர வரத்தான் தெரிந்தது, ஸ்னோ. வாவ். அங்கிருந்து ஆரம்பித்து செங்க்குவெந்தான் வருகிற வரையிலும் வழி நெடுகிலும் பனி தான். பட்டுப்போன மரங்கள். மரங்களின் கிளைகள் முழுவதும் அப்பிக்கொண்டிருக்கும் பனி. மணல் சரிவில் பனி. பாலத்தின் ஓரத்தில் பனி. நின்று கொண்டிருக்கும் கார்களின் மேலே பனி. நாங்கள் இப்பொழுதுதான் முதன் முறையாக பனியைப் நேரடியாகப் பார்க்கிறோம். இந்த சிலிர்ப்பில் செங்குவெந்தான் வருகிறதா இல்லையா என்பதை நாங்கள் கவனிக்கத் தவறியிருந்த தருணத்தில் செங்க்குவெந்தான் வந்துவிட்டிருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை.

பார்த்து இறங்குங்கள். தரை முழுதும் பனி; வழுக்கும் என்று சொல்லிவிட்டு, சொன்னதோடு நில்லாமல், எனக்கு முன்னர் இறங்கி வந்து என் கதவுக்கு அருகில் நின்று கொண்டு நான் கவனமாக இறங்குகிறேனா என்று கவனித்த அந்த டிரைவர் வாழ்க. நான் முன்னால் சென்று ஹோட்டலின் ரிஷப்சனில் என் ரிசர்வேஷனை சரிபார்த்துக்கொண்டு மீண்டும் காருக்கு வந்தேன். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக லக்கேஜை இறக்கு ஹோட்டலுக்கு முன்னால் வைத்துவிட்டு; என் மனைவியையும் குழந்தையையும் கவனமாக கீழிறக்கி உள்ளே அனுப்பிவிட்டு, அந்த ட்ரைவருக்கு பணம் செட்டில் செய்துவிட்டு வரும் பொழுது நிம்மதியாக இருந்தது. அப்பாடா ஒரு வழியாக வந்து சேர்ந்தாச்சுன்னு ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு பனியை ரசித்துக்கொண்டு ஹோட்டலுக்குள் வருகையில் “ஏங்க strollerஅ ஏர்போர்ட்டிலே விட்டுட்டு வந்துட்டோம்ங்க” என்றார் என் மனைவி.

ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை.

By M K Bhadrakumar
அசலைப் படிக்க.

முன்னொரு காலத்தில் நாம் பிரபாகரனை உருவாக்கினோம். சிறுவனாக இருந்த அவரை எங்கிருந்தோ நாம் தேர்ந்தெடுத்தோம். அவரிடத்தில் நம்மைக் கவர்ந்த விசயம் – அவருக்கு அரசியல் தெரியாது என்பது. அவர் பயந்தசுபாவமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்டவராகவும் ராணுவ ஆட்சியில் நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். அவருடைய இத்தகைய குணாதிசயங்கள் அப்பொழுது நம் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

அது என்னவென்றால் இலங்கையில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த ஜெயவர்தனேயின் அரசை அவமானப்படுத்துதல். அதன்மூலமாக இந்தியப்பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியாவை மதிக்காமல் நடந்தால் என்னென்ன ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என்கிற பாடத்தை இலங்கைக்கு கற்றுக்கொடுப்பது. ஜெயவர்தனே மேலை நாடுகளின் மேல் அதீத கவர்ச்சி கொண்டவராக இருந்தார் மேலும் அவர் ஆக்ஸ்·போர்டில் வரலாறு படித்தபோது மன்றோ டாக்டரின் என்கிற ஒன்றை படிக்காதது போலவே இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறார். மேலும் இஸ்ரேலியர்களுடனும் அமெரிக்கர்களுடனுமான அவரது இணக்கமான போக்கு நமக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இது நமது கொள்ளைப்புரத்திலே நடந்துகொண்டிருப்பது நமக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது.

எனவே நாம் பிரபாகரனை ஊக்கப்படுத்தினோம் ஜெயவர்தனேயின் போலிக் கவுரவத்தில் துளைபோடுவதற்கு நாம் அவரைப் பயன்படுத்தினோம். டெக்கானின் சீக்கியத் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே போல.

காலம் சென்றது. கொலும்பு அரசின் மேற்கத்தியப்போக்கின் மேல் நமக்கு வேறொரு இணக்கமான பார்வை உருவாகியிருந்த பொழுது, பிரபாகரனின் தேவை முடிவடைந்துவிட்டதாகவே நாம் கருதினோம். மேலும் ஜெயவர்தனேயை அடியோடு வெறுத்த நமது அகந்தை கொண்ட தலைவர் இப்பொழுது ஆட்சியில் இல்லை. புதிதாக வந்திருக்கும் மென்மையான தலைவர் முந்தையவரின் அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை.

மாறிவிட்டிருந்த நமது கொள்கைகளுக்கு இணங்கவேண்டும் என்று பிரபாகரனின் கைகளை நாம் முறுக்கினோம். ஆனால் அதற்குள்ளாக பிரபாகரன் ஒரு முழுமையான ஆண்மகனாக வளர்ச்சி அடைந்துவிட்டிருந்ததை நாம் மறந்துவிட்டிருந்தோம்.

நமது அச்சுறுத்தல்களையும் நமது நிர்பந்தங்களையும் அவர் எதிர்த்தார்.நாம் மேலும் அவரை நிர்பந்தித்து அடிபணியவைக்க நாம் முனைந்த பொழுது அவர் நம்மை திருப்பி அடித்தார். அவர் கொலைகாரர்களை அனுப்பி நம் பாசத்துக்குறிய தலைவரைக் கொன்றார். அதன் பிறகு அவர் நமது ஜென்ம விரோதியாக மாறிப்போனார்.

ஆனாலும் நாம் அவரை ஏதும் செய்யமுடியவில்லை. அவர் மிகுந்த வலுவடைந்துவிட்டிருந்தார். அவரது மக்களிடையே ஒரு முடிசூடா மன்னராக மாறிப்போனார். நாம் பொறுத்திருந்தோம். பொறுமையாக காத்திருந்தோம். நாம் தான் எருமை போல பொறுமை உள்ளவர்கள் ஆயிற்றே. நம்முடைய வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது. நம்மைப் போல பொறுமைசாலிகளாக இருக்க யாரால் முடியும் சொல்லுங்கள்? நமது அண்டவெளிகளில் பரவியிருக்கும் மதம் நமக்கு பொறுமையையும், உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறது. நாம் நமது நேரத்திற்காக காத்திருந்தோம்.

அப்புறம் அந்த நாளும் வந்தது. நாம் நமது வேலையை முடித்துக்கொள்ள பிரபாகரனின் எதிரிகளோடு கூட்டு வைத்துக்கொண்டோம். திட்டம் போட்டோம். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கினோம். அவர்களுக்கு கொல்வதற்கான பயிற்சிகளை முறையாக அளித்தோம். நமது உளவுநுட்பங்களை உபயோகித்து அவர்களை சரியாக வழிநடத்தினோம். பிரபாகரன் தப்பிப்பதற்கு உண்டான வழிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அடைத்தோம். அதற்கப்புறம் பிரபாகரனின் கழுத்தில் கயிறு இறுகும் வரை பொறுமையாக காத்திருந்தோம்.

இன்று அவர் இல்லை. நம்பினால் நம்புங்கள் அவருடைய சாவில் நமக்கு எந்த பங்கும் இல்லை. அவர் எங்கு எப்பொழுது இறந்தார் என்பது இனி மர்மத்தில் சூழப்பட்ட புதிராகவே இருக்கும். நமக்கு தெரிந்தவற்றை நாம் வெளியிடுவோமா என்ன?

நமக்குத் தெரிந்ததெல்லாம் பிரபாகரனின் இறப்பு செய்தி உலகத்தின் காதுகளுக்கு எட்டி அது முழித்துக்கொண்டபொழுது இந்தியாவின் தெற்குப்பக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் மே 13 அன்று தேர்தல் முடிந்துவிட்டிருந்தது என்பது மட்டுமே. இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் என்னவாகியிருக்கும்? ஜனநாயகம் விசித்திரமானது.

சிங்கள மக்கள் இந்தியாவின் நண்பர்கள். நமது முதல்தர மக்களும் அவர்களது முதல்தர மக்களும் ஒரே மொழிகளைப் பேசுபவர்கள். இருவருக்கும் ஆங்கிலம் நன்றாக வரும். இருவரும் கோல்· நன்றாக விளையாடுவார்கள். இருவருக்கும் சில்லென்ற பியர் ரொம்பவும் பிடிக்கும். எனவே நாம் அவர்களை இந்தநேரத்தில் வாழ்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நமது கைகளில் ரத்தம் இருப்பது உண்மைதான். அது ஒரு சபிக்கப்பட்ட சங்கடம். ஆனால் நமது கைகளில் ரத்தம் இருப்பது நமது வரலாற்றில் முதல்முறை அல்லவே.

எங்கள் வார்த்தைகளை நம்புங்கள். நீண்டகாலம் நீடிக்கக்கூடிய தீங்குகள் ஏதும் நடந்துவிடாது. ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை.

-M K Bhadrakumar
(Ambassador M K Bhadrakumar was a career diplomat in the Indian Foreign Service. His assignments included the Soviet Union, South Korea, Sri Lanka, Germany, Afghanistan, Pakistan, Uzbekistan, Kuwait and Turkey
Thanks: Asia Times Online )

அசலைப் படிக்க.

ப்ரான்ஸ் பயணம் -2

அன்று இரவு மிகவும் அசதியாக இருந்த காரணத்தால் பேக் செய்யவில்லை. ஏற்கனவே அனுஷா கொஞ்சம் கொஞ்சமாக பேக் செய்து வைத்திருந்தார். பேக் செய்வதற்கு எங்களிடம் இரண்டு லிஸ்ட் இருந்தது. ஒன்று மிக அத்தியாவசியமான பொருட்கள். பாஸ்போர்ட், ரெஸிடென்ட் கார்ட், லென்ஸ் கேஸ் போன்ற ஐட்டங்கள். மற்றவை அடுத்த லெவல் அத்தியாவசிய தேவைகள் லைக் என்னோட டவுன் ஜாக்கெட், அனுஷாவோட டவுன் ஜாக்கெட், ஸ்ரீநிதியோட ஜாக்கெட், க்ளவுஸ், வுல்லன் சாக்ஸ் மற்றும் பல பல. குளிர் பிரதேசத்தில் உடைகள் மிக மிக அத்தியாவசியத் தேவை.

எதெல்லாம் ஹேண்ட் லக்கேஜ்ல போகனும்ங்கறதே பெரிய டிபேட்டா இருந்தது. புது ரைஸ் குக்கர் வாங்குவதா இருப்பதையே எடுத்துச்செல்வதா என்கிற டிபெட்டும் ரெண்டு மூனு நாளாக இருந்து கொண்டு வந்தது. என்னது ரைஸ் குக்கர் கொண்டுபோனீங்களாங்கற கேள்வி கேட்கிற மக்களுக்கு, நாங்கள் ஹீட்டிங் ப்ளேட் மற்றும் மிக்ஸியே எடுத்துக்கொண்டு போனோம். பாப்பா இருக்கிறதல்லவா? பாப்பாவை அழைத்துச் செல்வதால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்கிற ப்ளான் எல்லாம் ரெடி. முப்பது நாட்களுக்கு தேவையான Gerber, Rice போன்றவை ஏற்கனவே வாங்கிவைத்தாயிற்று. இருக்கிற ரைஸ் குக்கர் கொஞ்சம் பெரியதாக இருப்பதால், வேறொரு சிறியதான ரைஸ்குக்கர் வாங்கினால் கொஞ்சம் இடம் ·ப்ரியாகும் என்பதால், முத்து பேக்கிங்கை பாதியில் விட்டுவிட்டு புது ரைஸ் குக்கர் வாங்கக் கிளம்பினான்.

ஒரு வழியாக சிற்சில சண்டைகளோடு பேக்கிங் முடிவுக்கு வந்தது. அஞ்சப்பரில் சாப்பாடு ஆர்டர் செய்திருந்தோம். கரெக்ட்டாக வந்து சேர்ந்தது. சாப்பிட மனமும் இல்லை பசியும் இல்லை. எங்கள் சிந்தனை முழுவதும் எப்பொழுது பாரிஸில் இறங்கி ஹோட்டலுக்கு போவோம் என்பதில் இருந்தது. எல்லோரும் ரெடி. ஸ்ரீநிதி அழகாக பிங் டாப்ஸ் மற்றும் பிங் பேண்டில் அழகாக உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தார். என்னுடைய பாஸ் காரில் என்னை ஏர்போர்ட்டில் விட்டுவிடுகிறேன் என்று சொல்லியிருந்தார். செந்திலும் உடன் வருவார். அவர்கள் வரும் நேரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு கொஞ்சம் ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தோம். வீடெங்கிலும் குப்பைபூமியாக இருந்ததால் கூட்டிவிட்டுவருகிறேன் என்றார். அவர் பாதி கூட்டிமுடிப்பதற்குள் ஸ்ரீநிதி திடீரென்று வாமிட் எடுக்க ஆரம்பித்தார். வாமிட் எடுத்துக்கொண்டேயிருந்தார்.

எங்களுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன ஆயிற்று என்று பார்ப்பதற்குள் நிறையவே வாமிட் எடுத்துவிட்டிருந்தாள். எனக்கு தேவையான நேரத்தில் மூளை அஸ்தமனமாகிவிடும். அன்றும் அப்படியே ஆனது, ஆனால் அனுஷா சமயோஜிதமாக டக்கென்று விரல்களை வாயுனுள் நுழைத்து தொண்டையில் சிக்கிக்கொண்டிருந்த அந்த சிறு பேப்பரை எடுத்துவிட்டார். பிறகு தான் வாமிட் நின்றது. எப்பொழுதும் சுத்தமாக இருக்கும் எங்கள் வீடு. அன்று கிளம்பும் அவசரத்தில் வீட்டையும் சுத்தப்படுத்தவில்லை, பாப்பாவையும் சரியாக கவனிக்கவில்லை. ஸ்ரீநிதி இப்படி வாமிட் எடுத்தது இதுவே முதல்முறை. இதெல்லாம் பிள்ளைவளர்ப்பில் சகஜம் என்பது பின்னாளில் புரிந்தது.

*

மூன்றுமணிநேரத்திற்கு முன்னர் ஏர்போர்ட்டில் இருப்பது என்னுடைய வழக்கம். பாப்பாவேறு கூட வருவதால், அன்று கரெக்ட்டாக சென்றுவிட்டேன். முதலில் போனால் தான், ப்ளைட்டில் பேபி ட்ரே கிடைக்கும். இல்லையேல் யாராவது எடுத்துக்கொண்டால் கஷ்டம் தான். பிறகு பதினான்கு மணி நேரம் பாப்பாவை மடியிலே தான் வைத்திருக்கவேண்டும். அது ரொம்பவும் கஷ்டம். சிங்கப்பூரில் இருந்து இந்தியா போகும் மூன்று மணி நேரத்திற்குள் எங்களுக்கு போதும் போதும் என்றாகிவிடும் பொழுது, பதினான்கு மணி நேரம்?

ப்ரான்ஸ் போகிறோம் என்று முடிவாகிவிட்டபொழுது மிகவும் சந்தோசமானவர் என்னுடைய அண்ணன் தான். இப்பத்தெரியும்டா உனக்கு லாங் ஜர்னின்னா என்ன? பதிமூணு பதிநாலுமணி நேரம் ப்ளைட்ல உக்கார்றதுன்னா என்னன்னு புரியும். குளிர்ன்னா என்னன்னு புரியும் என்றார். வாஸ்தவம் தான். எனக்கு பிஸினஸ் க்ளாஸ். அனுஷா மற்றும் குழந்தைக்கு எகனாமி க்ளாஸ். ப்ரான்ஸ் ஏர்லைன்ஸ்.

பிஸினெஸ் க்ளாஸ்னா லக்கேஜ்ல கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருக்கமாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா ப்ஸினெஸ் க்ளாஸ்னாலும் எந்த க்ளாஸ்னாலும் ஒரு பெட்டிக்கு முப்பது கிலோவுக்கு மேலே வெக்கக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார் அந்த பெண்மணி. செந்திலும் என்னுடைய பாஸ¤ம் கஷ்டப்பட்டு ரீபேக் செய்தனர். தாங்க்ஸ் டு போத் ஆ·ப் யு கைஸ். எங்களுடைய strollerஐ விமானத்தின் உள்ளேயே கொடுத்துவிடலாம் என்று சொன்னார்கள். எங்களுக்கு வசதியாகப் போயிற்று.

*

அனுஷா என்ன ஆனாலும் பிஸினெஸ் க்ளாஸை விட்டுக்கொடுக்காதீர்கள் என்று சொல்லியிருந்தார். என்னோட பிஸினெஸ் க்ளாஸ் சீட்டில் என்னுடைய ஹேண்ட் பேக்கை வைத்துவிட்டு அனுஷா,ஸ்ரீநிதி உட்கார்ந்திருக்கும் இடத்தில் கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருந்தேன். பேபி ட்ரே இன்னும் கொஞ்சநேரத்தில் கொடுப்போம் என்று சொன்னார்கள். பிஸினெஸ் க்ளாஸ்க்கும் அனுஷா உட்கார்ந்திருக்கும் சீட்டிற்கும் அதிக தூரமில்லை. சொல்லப்போனால் அனுஷா எகானமி க்ளாஸ் ஆரம்பிக்கும் முதல் சீட்டில் உட்கார்ந்திருந்தார். டயபர் பேக்கை அவரிடம் கொடுத்துவிட்டு, நான் என்னுடைய இடத்திற்கு சென்றேன். ஸ்ரீநிதி சிரித்துகொண்டேயிருந்தாள். Aisleக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்திருந்த வெள்ளைக்காரதாத்தாவுடன் விளையாடிக்கொண்டே இருந்தாள். விமானம் நகரத் தொடங்கியது.

விமானம் ரன்வேயில் வேகம் எடுத்தது. ஏதோ குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஸ்ரீநிதி. அழுகை என்றாள் அப்படியொரு அழுகை. எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எழுந்து சென்றால் அங்கே உட்கார்ந்திருந்த விமானப்பணிப்பெண் விடமாட்டேன் என்கிறார். ஸ்ரீநிதி அழுகை நிற்கவில்லை. ஸ்ரீநிதிக்கு என்னுடைய O2 செல்போன் ரொம்பவும் பிடிக்கும். அது அவளுடைய toy. அதற்குத்தான் O2 லாயக்கு. :(. அந்தப்பக்கம் ஓட்டமும் நடையுமாக சென்ற ஒரு விமானப்பணிப்பெண்ணிடம் கொடுத்துவிட்டேன். O2 தான் இதுநாள் வரை செய்துகொண்டிருந்த ஒரே வேலையையும் இப்பொழுது செய்யவில்லை. ஸ்ரீநிதியின் அழுகை நின்றபாடில்லை.

விமானம் மேலெழும்பி நிதானமடைந்தவுடன் ஓட்டமும் நடையுமாக ஸ்ரீநிதியின் இடத்தைத் தேடி ஓடினேன். இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. அருகிலிருந்த பெண்ணிடம் நீங்கள் பிஸினெஸ் க்ளாஸில் அமர்ந்துகொள்கிறீர்களா என்று கேட்டேன்? என் கேள்விமுடியும் முன் ராமபிராண் ராமாயணத்தில் டஸ்ஸென்று மறைவதுபோல மறைந்தார். பின்னாலிருந்த ஒரு வெள்ளக்கார தாத்தா பாட்டி ஏதேதோ விளையாட்டுக்காட்டினார்கள். ம்ஹ¥ம்.

02 ·பெயில் ஆனதால் ஐபோனின் துணையை நாடினேன். எப்பவுமே ஒரு ஒழுங்கு முத்தின வாழக்கா கூடவே இருக்கும்ல அது போல ஒன்னு பக்கத்திலே உக்காந்திருந்தது. மற்றொரு வெள்ளக்காரத்தாத்தா. செல்போன் யூஸ் பண்ணக்கூடாதாம். யோவ் பிள்ளை இப்படி கத்திட்டிருக்கு உனக்கு என்னய்யா வந்தது? ஆனா ஐபோன்ல ஏர்ப்ளேன் mode ஒன்னு இருக்கு. அத ஸ்விட்ச் பண்ணிட்டோம்னா செல்போன் வொர்க் ஆகாது. அத அவருக்கு அந்த ரணகளத்திலயும் explain செய்தேன். But he is ignorant and arrogant. He repeatedly asked me to put off the phone. I really didnt took much care of him. I just asked him to go to hell.

அப்புறம் கொஞ்ச நேரத்தில் என் மகள் கொஞ்சம் சாந்தமானாள். தூங்கிப்போனாள். பேபி ட்ரே மிகவும் உதவியாக இருந்தது. She slept comfortably. எங்களுக்கு dinner வந்தது. We took our time to finish our dinner. முதல் சீட் என்பதால் கால் நீட்டிக்கொள்ள நிறையவே இடம் இருந்தது. முன்னாள் உட்கார்ந்திருந்த ஒரு தாத்தாவிடம் சொல்லி நானும் அனுஷாவும் ஒரு photo எடுத்துக்கொண்டோம்.
மணி என்ன இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று பார்த்தபொழுது: இன்னும் பதினோறு மணி நேரம் இருந்தது.

ஸ்ரீநிதி அவ்வப்போது விழித்து அழுதுகொண்டிருந்தாள். அனுஷா கையில் வைத்து தூக்கிக்கொண்டே பாட்டு பாடி தூங்கவைத்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக நேரம் கரைந்துகொண்டிருந்தது ஒரு மிகப்பெரிய மெழுகுதிரி போல.

என் மகள் அப்பதான் தூங்க ஆரம்பித்திருப்பாள், Turbulance warning நாராசமா ஒலிக்கும். தூங்குகிற குழந்தையை தூக்கி belt போட்டுக்கொள்வோம். தூக்கனுங்கற அவசியம் இல்லை, ஆனால் நமக்கு பயமாக இருக்கும். தூக்கிருவமா வேணாமா தூக்கிருவமா வேணாமான்னு யோசிச்சு யோசிச்சு சரி தூக்கிருவோம்னு பொதுகுழுவில முடிவுபண்ணி தூக்கி மடியில வெச்சுக்குவோம். பிறகு பெல்ட் போட்டுவிட்டு தூங்கவெச்சு அப்பாடான்னு உக்காந்திருப்போம். பிறகு பேபி ட்ரேயில குழந்தையை மீண்டும் தூங்கவைக்கலாம்னு தோணறதுக்குள்ள ரொம்ப நேரம் போயிருக்கும். தூங்கபோட்டவுடன் மீண்டும் Turbulance warning. மனுசனுக்கு எப்படி இருக்கும்?

அருகில இருந்த ஒரு French Coupleஇடம் நான் மெதுவாக பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்.

*

ப்ரான்ஸ் பயணம் -1

ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சது, ஆனா தள்ளி தள்ளிப் போய் இப்போ தான் நேரம் கிடைச்சிருக்கு. முதல்ல கண்டிப்பா எழுதனுமான்னு நினைச்சேன், ஆனா போனவாரம் விவோசிட்டி ஷாப்பிங்மால் மனைவியுடனும் குழந்தையுடனும் போயிருந்த பொழுது, ப்ரான்ஸ்க்கு கிளம்புவதற்கு முந்தின நாள், இரவு பத்தரை மணிக்கு எல்லா ஷாப்பிங்கும் முடித்துவிட்டு ஒருவிதமான பயத்துடனும் சந்தோசத்துடனும் திகிலுடனும் வீட்டுக்கு வருவதற்கு டாக்சிக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தது எங்கள் இருவருக்கும் ஞாபகம் வந்தது. அன்று நாங்கள் கால் செய்திருந்த டாக்ஸி எங்களை பிக் அப் செய்யாமல் வேறொருவரை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டது. மிகுந்த அலுப்புடன், குழந்தை வேறு அழுதுகொண்டிருந்தது, மீண்டும் கால் செய்து இந்தமுறை எங்களை டாக்ஸி மிஸ் செய்துவிடாமல் இருப்பதற்கு டாக்ஸி மாலின் டாக்ஸி ஸ்டாண்டிற்குள் நுழையும் இடத்திற்கே சென்று நின்றதும், ஜஸ்ட் லைக் எ ப்ளாஸ், எங்களுக்கு ஞாபகம் வந்தது. வந்ததும் சிலீரென்ற ஒரு சந்தோஷமான திருப்திகரமான உணர்வு எனக்கு தோன்றியது. என் மனைவிக்கும் தோன்றியிருக்கிறது. அவரும் அந்த நாளை நினைவுகூர்ந்தார். வீ ·பெல்ட் ஹேப்பி. ப்ரான்ஸ¤க்கு சென்று வந்த அந்த சுகமான த்ரில்லான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

*

இன்னும் இரண்டு வாரத்தில் ப்ரான்ஸ் கிளம்பவேண்டும் என்று முடிவு செய்த பிறகு, நான் தனியாகப் போகிறேனா அல்லது மனைவியையும் குழந்தையையும் அழைத்து செல்லப்போகிறேனா என்கிற கேள்வி எங்கள் இருவரிடமும் தொக்கி நின்றது. முதலில் எங்களுக்கு இருந்த சந்தேகம் குழந்தையின் உடல்நிலை. குழந்தைக்கு எட்டுமாதம். ப்ரான்ஸில் சீதோஷ்னநிலை எப்படி இருக்கும் என்று பார்த்ததில் எங்களுக்கு ஷாக்:2 டிகிரி செல்சியஸ் இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ரெண்டு டிகிரி செல்சியஸ் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில், கொடைக்கானலும் ஊட்டியும் மட்டுமே எங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அதுவும் இரவில் மட்டுமே ரெண்டு டிகிரி செல்சியஸ் இருக்கும். இங்கு நாள் முழுவதும் குளிரில் இருக்கவேண்டும். எப்படியும் ஹோட்டலில் தான் தங்கப்போகிறோம். அங்கு ஹீட்டர் இருக்கத்தான் போகிறது. ரூமில் இருக்கும் வரை குளிருக்கு பயமில்லை. ஆனால் வெளியே போகும் பொழுது? இவ்வளவு தூரம் போய்விட்டு ரூமுக்குள்ளே இருக்க முடியுமா? ப்ரான்ஸில் இருக்கும் சில நண்பர்களிடம் விசாரித்ததில் மார்ச் இறுதியில் தான் குளிர் கொஞ்சம் குறையும் என்று சொன்னார்கள். நாங்கள் பயணம் செய்யப்போகும் மாதம் – பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை. முதலில் எங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேட்டோம். அவர் மிகவும் குளிராக இருக்குமே என்றார். பிறகு என் மனைவியைப் பார்த்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றார். ஆ·ப் கோர்ஸ் அவர் என்னுடன் வரத்தானே விரும்புவார். பாப்பாவுக்கு நிறைய துணி எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். Dress in layers என்றார். ஒன்னும் பயப்படத்தேவையில்லை என்றார். அவர் அப்படித்தான் சொல்லுவார், நாமல்ல யோசிக்கனும். என் மனைவி கண்டிப்பாக வருவேன் என்று சொல்லிவிட்டார்.வந்து ரூம்முக்குள்ளே இருந்தாலும் இருப்பேன் ஆனா கண்டிப்பா வராம இருக்கமாட்டேன்னுட்டார். நான் ஒவ்வரிடமும் தகவல் சேகரிக்க ஆரம்பித்துவிட்டேன். First things first. How does this 2 degree celcius thing feels like? என்னுடைய அண்ணனிடம் கேட்டபொழுது அவர் it is horrible என்று சொன்னார். ஆனால் ஒரு விசயத்தை அவர் மறந்துவிட்டதை நான் போய்வந்தபிறகு தான் அறிந்துகொண்டேன். வேறு சில நண்பர்களும் என்னை பயமுறுத்தவே செய்தனர். நான் என்னுடைய ஐபோனில் weather appஇல் பாரீஸையும் சேர்த்துக்கொண்டேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாரீஸில் இப்பொழுது என்ன வெட்பம் என்று பாத்துக்கொள்வேன். Always 2 or 3.

*

முதலில் எனக்கு தைரியம் அளித்தது என்னுடைய அம்மா தான். ஒன்னும் ஆகாது தைரியமா கூட்டிட்டுப் போய்ட்டு வா. குளிருதுன்னா அதுக்கு ஏத்தமாதிரி ஸ்வெட்டர் குல்லா எல்லாம் வாங்கிக்க, இப்போ போகாம அனுஷா பிறகு எப்போ போவா? நேரம் வாய்க்கிற பொழுது போயிட்டு வந்திடனும் என்கிற தைரியம் தருகிற வார்த்தைகளை அவர் கொடுத்தார். என் மனைவியும் மிகவும் பிடிவாதமாக இருந்தார். நானும் என்னென்னவோ சொல்லிப்பார்த்தேன். ம்ஹ¥ம் கேக்கிற மாதிரி தெரியல. எனக்கும் கூட்டிட்டு போகனும்னு ஆசை தான். ஆனா குழந்தையை அழைத்துச்செல்வதில் தான் கொஞ்சம் பயம் இருந்தது. மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டிருந்தேன். நானும் என் மனைவியும் மீண்டும் மீண்டும் பேசினோம். வேறு என்ன என்ன ஆப்ஸன்ஸ் இருக்கிறது என்பதை யோசித்தோம். மீண்டும் துடங்கின இடத்திலே வந்து நின்றோம். என் மனைவி தனது முடிவில் இருந்து மாறவேயில்லை. She was so confident. அவர் போக்கிரி விஜய் மாதிரி.

*

ஒரு வழியாக முதலில் நான் எனக்கு விசா அப்ளை பண்ண சென்றேன். ப்ரான்ஸ் விசா யூஎஸ் ஹெச் ஒன் பி போல இல்லை என்பது எனக்கு தெரிந்திருந்தும் ஏதோ கொஞ்சம் த்ரில்லாகத்தான் இருந்தது. But that officer was so humble and polite, particularly not so rude as some US Counsalates are. அப்பொழுதே முடிவு செய்து விட்டேன், என் மனைவியையும் குழந்தையையும் அழைத்து செல்வது என்று. எனக்கு விசா அப்ளை செய்வதில் ஒரு சிக்கலும் இருக்கவில்லை. டிக்கெட் இன்ஸ¥ரன்ஸ் போன்ற இத்யாதிகளை ஆபீஸே கவனித்துக்கொள்ளும். என் மனைவிக்கும் குழந்தைக்கும் விசா அப்ளை செய்ய டிக்கெட் புக் செய்யவேண்டும் பிறகு இன்சூரன்ஸ் எடுக்கவேண்டும். Serangoon Travels எனக்கு எளிதாக டிக்கெட்டும் இன்ஸ¥ரன்ஸ¤ம் எடுத்துக்கொடுத்தது. முப்பது நாளைக்கு ·பேமிலி இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டேன். முன்னூரு டாலர் ஆனது என்று நினைக்கிறேன். மறுநாள் மனைவியையும் குழந்தையையும் French Embassyக்கு நேரே வரச்சொல்லிவிட்டு நானும் சென்றேன். அங்கிருந்த ஒரு தமிழ் செக்கியூரிட்டி என்னுடன் கொஞ்ச நேரம் என் மனைவி வரும் வரை பேசிக்கொண்டிருந்தார். நான் அப்ளை செய்த அதே கவுன்சலர் லக்லி இருந்தார். அப்ளை ப்ராஸஸ் வாஸ் எ ப்ரீஸ்.

*

விசா அப்ளை செய்தவுடன் பர்சேஸ் செய்ய ஆரம்பித்துவிட்டோம். முதலில் பாப்பாவுக்கு. நிறைய லேயர் சட்டைகள் வாங்கிக்கொண்டோம். என் அலுவலகத்தின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருக்கும் டாம் அன்ட் ஸ்டிப்பானியில் ஆரம்பித்தோம். எங்களைப் பொறுத்தவரை ட்ரெஸ்களில் நிறைய டிசைன்ஸ் தேவையில்லை. மேலே மேலே போடுவதற்கு சீப்பாக அதே சமயத்தில் குளிரைத் தாங்கக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டும் என்பதே. டாம் அன்ட் ஸ்டிப்பானியில் எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி ட்ரெஸ் கிடைத்தன. பிறகு மறுநாள் முஸ்தபா சென்றோம். நான் கிளம்பும் வரையிலும் எனக்கு வேலைப்பளு அதிகம். சனிக்கிழமை கூட செல்லவேண்டிய நிர்பந்தம். ஞாயிறு ஒரு நாள் தான் பர்ச்சேஸ் செய்யமுடியும். அந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்தபாவில் பாப்பாவுக்கு மேலும் சில ட்ரெஸ்களும் pack செய்வதற்கு சில bagsஉம் வாங்கிக்கொண்டோம். We had a list. A complete list. அதை இரண்டாக பிரித்துக்கொண்டோம், என்னால் வீக் டேஸில் பர்சேஸ¤க்கு வரமுடியாத சூழ்நிலை இருப்பதால், வீட்டுக்கு அருகிலேயே கிடைப்பவற்றை என் மனைவி வாங்கிக்கொள்வது என்றும் மீதம் இருப்பவற்றை வேறொரு லிஸ்டிற்கும் மாற்றிக்கொண்டோம். இது தவிர, கிளம்பும் முன் முக்கியமான திங்க்ஸை சரிபார்த்துக்கொள்வதற்கு ஒரு லிஸ்ட் என்று மொத்தம் மூன்று லிஸ்ட். என் மனைவி கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு அருகிலேயே வாங்கிக்கொண்டிருந்தார். புதன்கிழமை விசா அப்ரூவ் ஆனது. டிக்கெட் கன்·பார்ம் செய்யவேண்டும். வழக்கம்போல எனக்கு வேலை அதிகம். அன்று செராங்கூன் ப்ளாசா போக முடியவில்லை. சனிக்கிழமை கிளம்பவேண்டும் இன்னும் நாங்கள் குளிருக்கான ப்ரத்யேக உடை ஏதும் வாங்கவில்லை. இன்னும் ஷாப்பிங் லிஸ்ட் நிறைய இருக்கிறது. அன்று காலை மட்டும் நான் விடுமுறை. அதற்கு முன்னதாக என் மனைவி winter clothes விற்கும் எல்லா கடைகளுக்கும் கால் செய்து கேட்டுவிட்டார் என்னுடைய குழந்தைக்கு down jacket கிடைக்கவில்லை. நான் vivocityயில் இருக்கும் winter timesக்கு அதற்கு முந்தின நாளே அவசர விஸ்ட் ஒன்று அடித்திருந்தேன். They didnt have down jackets for babies. I dont know the reason yet. It is pretty wierd, Babies are also supposed to wear down jackets right?

*
சிங்கப்பூரில் winter clothes கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். அதுவும் ஆ·ப் சீசனில் தேடினால் கொஞ்சம் காஸ்ட்லியாகவும் இருக்கும். எங்கெங்கு வாங்கலாம் என்கிற இந்த லிங்கைப் பாருங்கள்.

அன்று டோபிகாட்டில் இருக்கிற Cold Wearஇல் முதலில் எங்கள் winter clothes பர்சேஸை ஆரம்பித்தோம். அங்கிருந்த ஒரு சேல்ஸ் கேர்ள் எங்களுக்கு கொஞ்சம் டிப்ஸ் கொடுத்தார். அங்கிருந்த ஒரு மானிடரில் பாரீஸை தேடிக்கண்டுபிடித்து தட்பவெட்ப ஹிஸ்டரியைக் கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல என்ன வாங்கவேண்டும் என்கிற ஆலோசனை கொடுத்தார். அது எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

அவர் சொன்ன லிஸ்ட்
1. Thermal Long John Pants
2. Full sleeve cotton TShirt
3. Sweater
4. Down Jacket
5. Scarf
6. Cap
7. Hand Gloves
8. Inner Pants
9. woolen Socks
10. Good grip shoe

They didnt have anything for babies. They pointed towards Mother Care.
*
மதர்கேரில் ஸ்ரீநிதிக்கு(பாப்பா) ஒரே ஒரு ஸ்வெட்டர் தான் இருந்தது. டவுன்ஜாக்கெட்டும் அல்ல ஸ்வெட்டரும் அல்ல. இரண்டுக்கும் நடுவே இருக்கிற ஒரு ஜந்து. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு வேறு வழியின்றி அதை வாங்கிக்கொண்டோம். எனக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வரவே அன்றைய பர்ஸேஸ் அத்துடன் முடிந்தது.

வெள்ளிக்கிழமை விவோசிட்டிக்கு படைஎடுத்தோம். அங்கே winter times இருக்கிறது. அங்கிருந்த ஒரு சேல்ஸ் ரெப்ரஸன்டேடிவ் நிறையவே ஒத்துழைத்தார். கிட்டத்தட்ட மூன்று மணிக்கு ஆரம்பித்த எங்களது பர்சேஸ் இரவு ஏழுமணிக்குத்தான் முடிந்தது. ஸ்ரீநிதிக்கு Long John Pants வாங்கிக்கொண்டோம். எங்களுக்கு வாங்கவில்லை. அனுஷா மிக மார்டனான ஒரு டவுன்ஜாக்கெட் எடுத்துக்கொண்டார். நமக்கு எப்பொழுதும் போல மிகச்சாதாரணமாக தோற்றம் அளிக்கும் டவுன்ஜாக்கெட். அழகுக்கு எதற்கு அழகு? ஒரு வழியாக winter timesஇல் அமைதி திரும்பியபொழுது Giantஇல் சூராவளி தொடங்கியிருந்தது. எல்லா பர்சேஸையும் முடித்துக்கொண்டு டாக்ஸிக்கு காத்திருக்கையில் மறுநாள் பயணத்தை நினைத்து வயிறு கலங்க ஆரம்பித்திருந்தது. ஸ்ரீநிதியும் கடும் கோபத்தில் இருந்தார்.

*
(தொடரும்)

பாத்துகங்கப்பா நானும் பொலிடிக்கல் அனலிஸ்ட் தான்!

முன்னமே சொல்லிருக்கன்ல என்கூட ஒரு தெலுங்குக்காரர் ஒர்க் பண்றாருன்னு, இன்னக்கி அவரு கூட உக்காந்து சாப்பிட்டேன். விளைவு பல அரசியல்:தெலுங்கு சட்டமன்ற நிலவரங்களை தெரிந்து கொண்டு என் ஜெலரல் நாலட்ஜை வளர்த்துக்கொள்ள உதவியாக இருந்தது. அவரும் மற்றொரு தெலுங்குக்காரரும் சாப்பிடும்பொழுதெல்லாம் அரசியல் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். இன்றும் சாப்பிடும்பொழுது சிரஞ்சீவி, தெலுங்குதேசம் போன்ற பெயர்கள் கூட்டுபொறியல்களாக ருசிக்கப்பட்டுக்கொண்டிருந்த பொழுது, தெரியாத்தனமா சிரஞ்சீவி எப்படி? என்கிற ஒரு கேள்வியைக்கேட்டுவிட்டேன். அவ்வளவுதான். என்னால் முடிந்த அளவுக்கு (ஞாபகம் இருக்கிற அளவுக்கு) தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

சிரிஞ்சீவிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது. ஆனா அவர் தான் ஆட்சியில் யார் அமர்வார் என்பதை முடிவுசெய்வார். (எங்கபாத்தாலும் கிங் மேக்கரா இருக்காய்ங்கப்பா. எல்லாரும் கிங்மேக்கர் ஆயிட்டா அப்புறம் யார் கிங் ஆகுறது?) விஜயசாந்தி விஜயசாந்தின்னு ஒரு லேடி சூப்பர்ஸ்டார் இருந்தாங்களே அவங்களோட கட்சி என்ன ஆச்சு? ஓ இருக்காங்க. அவங்க ரோஜா எல்லாரும் தெலுங்கு தேசம் கட்சியில சேர்ந்திட்டாங்க. என்னது விஜயசாந்தி கட்சியை கலைச்சிட்டாங்களா? (என்னை அரசியல் ஞானசூன்யம் போல நண்பர் பாக்கறார். நண்பர் ஒரு முறை தினமலர் படித்துக்கொண்டிருந்தைப் பார்த்ததாக ஆங்காங்கே வதந்தி நிலவி வருகிறது. அவர் தமிழ் நன்றாகப் பேசுவார். கிட்டத்தட்ட நம்ப தசாவதாரம் சிபிஐ கமல் போல! ஒரு நாள் தெரியாத்தனமா நான் அவரிடம்: உங்களுக்கு தமிழ் வாசிக்கத்தெரியுமான்னு கேட்டுத் தொலைச்சிட்டேன். என்னை விசித்திரமாக பார்த்த அவர், தமிழ் என்ன இசை வாத்தியமா வாசிக்கிறதுக்கு, படிக்கத்தெரியுமான்னு கேளுங்கய்யான்னார்.) ஆமா. கலைச்சிட்டாங்க. அப்புறம் அவங்களோட தனித்தெலுங்கானாங்கற கொள்கை என்னவாச்சு? சிரிக்கறார். பிறகு மீண்டும் ரோஜாவைப் பற்றிய செய்திகள். ரோஜா ரசிகராக இருந்திருக்க வேண்டும். இப்போ ரோஜா நம்ப கம்ப்யூட்டர் தாத்தா சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்துகொண்டு சிரஞ்சீவியை கண்டபடிக்கு பேசுகிறார்கள். சிரஞ்சீவி ஒரு நடிகர். நடிகர்கள் எல்லாம் நடிகைகளை கேவலமாக நடத்துவார்கள் என்று ஒட்டுமொத்த நடிகர்களையும் குறைகூறுவதோடு சிரஞ்சீவியையும் வாரியிருக்கிறார் தெரியுமா? ரோஜா அரசியல் பிரச்சாரம் செய்யும் பொழுது சில இடங்களில் மக்கள் ஆடச்சொல்வார்களாம். (நம்பாளுகளுக்குத்தான் தெரியுமே: இதுதான்டா சந்தர்ப்பம். இப்ப என்னகேட்டாலும் செய்வாய்ங்கன்னு நல்லா ராகிங் செஞ்சிருக்காய்ங்க போல.) ரோஜாவும் ஏதோ மக்கள் கலா ஆர்வத்தில் தான் நடனமாடச்சொல்கிறார்கள் என்று எப்பொழுதும்போல மக்களை புரிந்துகொள்ளாமல் நடனமாடியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரை பிரச்சார பீரங்கி பதவியிலிருந்து இறக்கி, நடனசிகாமனி ஆக்கியிருக்கிறார்கள் தெலுங்கு மக்கள். (நக்கல் பிடிச்சவைங்கப்பா) ஆனா நடிகைகளின் கேள்விக்கு பதிலாக சிரஞ்சீவி: இப்போத்தான் தெரியுதா நான் (ஹீரோ) ரொம்ப கெட்டவன்னு? போன வருஷம் என்னோட ப்ளட் பாங்க் மற்றும் ஹாஸ்பிட்டல்ல நடந்த விழாவுக்கு வந்து என்னைப் பாராட்டி இவர்தான் வர வேண்டும் என்று பேசியது நினைவில்லையா என்று கேட்டிருக்கிறார் (அது போன வருஷம் இது இந்த வருஷம்ப்பா. ஆமா ஏன் சிரஞ்சீவி ரோஜா விஜயசாந்தியெல்லாம் பிடிச்சு போடல. பேமெண்ட் அதிகமாகியிருக்குமோ?) ஆனாலு ஒரு கட்சியின் தலைவர் பதவியிலிருந்துகொண்டு நடிகைகளைப் போல பேசமுடியாதல்லவா, அதனால் தனது மகளிர் அணியினரை வைத்து பேசவைத்திருக்கிறார் (இல்லை அவர்களே சிரஞ்சீவியின் மீது கொண்ட அன்பினால் பேசியிருக்கிறார்கள். ஆஹா இப்பத்தான்யா புரியுது ஏன் இவங்க எல்லா மகளிர் அணி வெச்சுக்கிறாங்கன்னு.) (இப்படியாக நடிகர் நடிகைகளிடையே அரசியில் அரைகுறை ஆடையோடு நடுத்தெருவில் நடனமாடிக்கொண்டிருக்கிறது.)

நீங்க சிரஞ்சீவி ரசிகரா? கேள்வியை எதிர்பாக்காத அந்த நபர், சுதாரித்து, தன் டிபன்பாக்ஸில் மீதமிருந்த தயிர் சாதத்தை இரண்டு ஸ்பூன் எடுத்து டபக் டபக் என்று வாயில் போட்டுக்கொள்கிறார். அருகிலிருந்த பாவக்கா பொறியலையும் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறார். பிறகு: அரேயார் (யாரது அரே?) வேறு என்ன சாய்ஸ் இருக்கிறது. ஒன்னு பாலகிருஷ்ணா. இல்லீன்னா சிரஞ்சீவி. பாலகிருஷ்ணாக்கு சிரஞ்சீவி எவ்வளவோ மேல். ஆமா. அது என்னவோ வாஸ்தவம் தான். யூடியூபில பாலய்யான்னு தேடுங்க போதும். அவ்ளோ க்ளிப்ஸ். எல்லாம் பாலய்யாவோட ஒரிஜினல் திங்கிங் அன்ட் கிரியேட்டிவிட்டி. ஒரு காட்சியிலெல்லாம் ரயில் பெட்டியை வெறும் கையை வைத்தே நகர்ந்து போக வைப்பார். இத்தனைக்கு கைக்கும் ரயில் பெட்டிக்கும் இடையே ரொம்ப தூரம் இருக்கும். நீங்க நம்பலைல? எனக்கு தெரியும். வேணுமினா நீங்களே செர்ச் பண்ணி பாத்துக்கங்க.

அப்புறம் தெலுங்குதேசம். இன்னும் எலெக்ஷன் முடிவடையவில்லை சந்திரபாபு நாயுடுக்கு இப்பொழுதே தான் ஜெயித்து முதல் மந்திரியாகிவிட்டதாக நினைப்பு. மக்களிடம் படிவங்கள் கொடுத்து அவற்றை பூர்த்தி செய்து தருமாறு நச்சரிக்கறாராம். என்ன படிவங்கள்ன்னு நான் கேட்டாத்தான் நண்பர் சொல்வாரா? அவரே சொல்ல ஆரம்பித்தார். சந்திரபாபு அறிவித்திருக்கிற திட்டத்தைப் பார்த்தால், பேசாம இந்தியா போயிட்டு (ஆந்தரா) வீட்ல இருந்துட்டு தூங்கி தூங்கி எந்திருச்சா போதும். வேலைக்கே போகவேண்டாம். அப்படி என்ன திட்டம்? ஏழை மக்களுக்கு இலவச வீடு. இலவசமாக கரண்டு. இலவசமாக கலர் டீவி (ஒருத்தர ஒருத்தர் பாத்து படிச்சுக்கிறதுதான். இதுலயாச்சும் தமிழ்நாடு முன்னோடியா இருக்கம்னு ஒரு பெருமை!) இருபது கிலோவோ நாற்பது கிலோவோ அரிசி. மாதம் இரண்டாயிரம் ரூபாய் பணம். உங்கள் கண்கள் சரியாகத்தான் வாசித்துக்கொண்டிருக்கின்றன. யெஸ். மாதா மாதம் இரண்டாயிரம் ரூபாய் இலவசம். அப்புறம் எதற்கு வேலைக்கு போகவேண்டும்? (தமிழ்நாட்டில் வீடுதோறும் இலவசமாக் மாதத்துக்கு பத்து திருட்டு டீவிடிக்கள் கொடுப்பதாகவும் அந்தந்த கட்சி சேனல்களில் மக்கள் பங்குபெரும் இன்னும் பல நடனநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவதாகவும் வாக்குறுதிகள் அளித்திருப்பதாக கேள்வி!) ஆஹா இந்த திட்டம் நல்லாயிருக்கே. யாராவது நம்ப அரசு பொங்கலுக்கு வழங்கிய பம்ப்பர் பரிசை ஒன்று இரண்டு என்று வரிசைப் படுத்துங்கப்பா. அதுசரி, யார் ஏழை யார் பணக்காரர் என்பதை யார் முடிவு செய்வது? எப்படி முடிவு செய்வார்கள்? என்னை விசித்திரமாக பார்த்த அவர்: வேறயார் அரசியல்வாதிகள் தான் முடிவு செய்வார்கள். ரேஷன் கார்டை வைத்துத்தான். எல்லோரிடமும் வெள்ளை அல்லது பிங்க் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பார்கள். வெள்ளை ரேஷன் கார்டு ஏழை மக்களுக்காம். (நம் ஊரில் பிங்க் ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் எல்லோருரிடமும் வெள்ளை ரேஷன் கார்டும் இருப்பது விந்தையிலும் விந்தை) இந்த வெள்ளை ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை மக்கள் கண்டுபிடிக்கப்படுவார்களாம். மொத்தம் ஒரு கோடியே என்பது லட்சம் ஏழை மக்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்கு இவ்வளவு இலவசங்களை அள்ளிக்கொடுக்க முப்பதாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுமாம். (பின்னர் அவரே திருத்திக்கொள்கிறார்: முப்பதாயிரம் கோடி கோடி ரூபாய்) எனது கணிதமூளை இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் ஷட்டவுன் ஆகிவிடுவது வழக்கம். இன்றும் அவ்வாறே செய்தது. காங்கிரஸ்காரர்கள் இத்தனையையும் எப்படி செய்யப்போகிறார் என்பதை சொல்லவேண்டும் என்று கேட்கிறார்களாம் (ஐ! ஆச தோச. நீங்க காப்பிஅடிக்கவா? தவிரவும், எங்களுக்கே இன்னும் புரியாமல் இருக்கும் பொழுது உங்களுக்கு எப்படி விளக்கமுடியும்?)

பாலகிருஷ்ணா. த ஒன் மேன் ஆர்மி. த பாலய்யா. த பால்ட்ரிக்ஸ் (லைக் மேட்ரிக்ஸ்) அவரும் சந்திரபாபு நாயுடுவும் பிரதர் இன் லாவாம். இப்பொழுது பாலய்யாவின் மகளை சந்திரபாபுநாயுடுவின் மகன் கல்யாணம் செய்திருக்கிறாராம். (குட்!) அதனால், பாலய்யா காட் நோ சாய்ஸ். எனக்கு The White Tigerஇல் அரவிந்த அடிகா எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது:

My cousin-sister Reena got hitched off to a boy in the next village. Because we were the girl’s family, we were screwed. We had to give the boy a new bicycle, and cash, and a silver bracelet, and arrange for a big wedding—which we did. Mr. Premier, you probably know how we Indians enjoy our weddings—I gather that these days people come from other countries to get married Indian-style. Oh, we could have taught those foreigners a thing or two, I tell you! Film songs blasting out from a black tape recorder, and drinking and dancing all night! I got smashed, and so did Kishan, and so did everyone in the family, and for all I know, they probably poured hooch into the water buffalo’s trough.

பாலய்யாவும் பெண்ண பெத்தவர் தான? பிரச்சாரம் பண்ணுன்னா பண்ணத்தான வேணும்?! பாலய்யாவிடம் மீடியா ஒரு முறை காங்கிரஸை பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் சொல்லியிருக்கிறார்: என் பவர் தெரியாம என்னோட மோதறாங்க. நான் ஒரு முறை முறைத்தேன் என்றால் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும் (அடங்கப்பா!) இதை மீடியாக்காரர்கள் காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டிருக்கிறார்கள்: அவர்கள் அவர் ஒரு சூப்பர்மேன். அவர் நினைத்தால் என்னவேண்டும் என்றாலும் செய்வார். ப்ளீஸ் எங்கள மாட்டிவிட்டுடாதீங்கன்னு நக்கல் அடித்திருக்கிறார்கள்.

பாலய்யா போகிற இடமெல்லாம், தொடையில தட்டி தட்டி பிரச்சாரம் செய்கிறாராம். (தொடயில் தட்றது அவரோட ஸ்டைல் அப்படீன்னு அவரே நினைச்சுக்கறார்!) போகிற இடத்தில் எல்லாம் மக்கள் அவரை அதே ஸ்டைல் பண்ணச்சொல்லி கேட்கிறார்களாம். நம்மை ஓட்டுகிறார்கள் என்று புரியாமல் இதுவும் மாங்குமாங்கென்று ஸ்டைல் பண்ணி காட்டியிருக்கிறது. (எனக்கு ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது: நான் காலேஜ் படிக்கும் பொழுது மெக்கானிக்கல் வாத்தியார் இருந்தார். அவரோட ஒவ்வொரு க்ளாஸ்லையும் மாரல் ஸ்டோரி சொல்லுவார். செம மொக்கையா இருக்கும். கிட்டத்தட்ட இந்த பதிவு போலன்னு வெச்சுக்கங்களேன். ஆனா கேர்ள்ஸ் எல்லாம் ரொம்ப ரசிக்கிற மாதிரி ஆக்ட்கொடுக்குங்க. அவர் க்ளாஸ¤க்கு வந்ததுதான் தாமதம். கேர்ள்ஸ் சார் மாரல் ஸ்டோரி சார். மாரல் ஸ்டோரி சார்ன்னு கேக்க ஆரம்பிச்சிடுங்க. அவருக்கு முகத்தில் பெருமையைப் பாக்கனுமே. அப்பப்பா தாங்காது. மனுஷனுக்கு பொண்ணுங்க எல்லாம் நம்மள ஓட்டுதுகன்னு கடைசிவரைக்கும் தெரியாது!)

பாலய்யா இப்படி தொடையில் கைய வெச்சு தட்டி தட்டி ஸ்டைல் பண்ணி பண்ணி, காங்கிரஸோட சின்னம் (ஐந்து விரல்கள்) பாலய்யாவின் தொடையில் பதிந்தேபோய்விட்டதாம். இந்த ரகசியத்தை எப்படியோ மர்மமான முறையில் துப்புதுலக்கி தெரிந்துகொண்ட காங்கிரஸ்காரர்கள், காங்கிரஸ் சின்னத்தை தனது தொடையிலே பதித்துவைத்துக்கொண்டிருக்கும் தெலுங்குதேச கட்சிக்காரரான பாலய்யாவே உண்மையில் காங்கிரஸ்காரர் தான் என்று அவரை வைத்தே எதிர் பிரச்சாரம் செய்கிறார்களாம். (இது எப்படி இருக்கு!)

Blog.Magazines.WhiteTiger.WolfTotem.

இந்த நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக எதைக்கூறுவீர்கள் என்று என்னிடம் கேட்டால் நான் சொல்வது: Blog. Blog வருவதற்கு முன்னரும் Personal பக்கங்கள் இருக்கத்தான் செய்தன என்றாலும், அவ்வாறான பக்கங்களை உருவாக்குவது தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கே சாத்தியமாக இருந்தது. Learning HTML was a very big hurdle. இப்பொழுது அந்த தடை நீங்கிவிட்டதால் சொந்த பக்கங்களை வைத்துக்கொள்வது மிக மிக எளிதாகிவிட்டது. தமிழ்வாத்தியார்கள் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் blog வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஒரு நாள் என் அண்ணியிடமிருந்து ஒரு மெயில். என்னுடைய அண்ணன் மகள்களுக்கு புதிய ப்ளாக் ஆரம்பித்திருப்பதாக. அவர்கள் வரையும் படங்களை பகிர்ந்துகொள்வதற்கு blog உதவியாக இருக்கிறது. இந்த ப்ளாக் என்கிற கான்சப்ட் வராமல் இருந்திருந்தால், அவர்கள் உலகத்துடன் படங்களை பகிர்ந்துகொள்வது கண்டிப்பாக சாத்தியப்பட்டிருக்காது. Moreover, when someone is listening, when you know there is an audience, your creativity increases exponentially.

*

சில வருடங்களுக்கு முன்னர் வரை நிறைய software magazines ப்ரிண்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. திடீரென்று அவையெல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக இந்த Programmer’s Magazine culture அழிந்துகொண்டுவருகிறது. Software Magazine was absorbed by Dr.Dobb’s Portal. ASP.NETPro இப்பொழுது இலவசமாக PDF உருவில் கிடைக்கிறது. I am going to unsubscribe CODE magazine. இருக்கிற blogகளை follow ( ?! 😦 ) செய்வதே மிகக்கடினமாக இருக்கிறது.

*

இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். அரவிந்த் அடிகா எழுதிய The White Tiger மற்றும் Jiang Rong எழுதிய Wolf Totem. The White Tigerஐ ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். I cannot put it down. மேலும் அவர் நடையில் இருந்த நக்கலை மிகவும் ரசித்துப்படித்தேன். சல்மான் ருஷ்டியிடம் தான் இந்த எழுத்து நடையை நான் வாசித்திருக்கிறேன். அவருக்கு பிறகு இந்தியர்களையும் அவர்களது வாழ்க்கையையும் இவ்வளவு நுனுக்கமாக யாரும் நக்கலடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். I liked “the minister’s sidekick” என்கிற கதாப்பாத்திரம். ஒரு சாப்டரில் சைட்கிக் (அல்லக்கை) என்று சொல்லிவிட்டால், அவர் அடுத்து வரும் அனைத்து சாப்டர்களிலும் சைட்கிக் தான். முதல் சாப்டரில் சொல்லிவிட்டு பத்தொன்பதாவது சாப்டரில் அவரை பற்றிக்கூறும் பொழுதும் சைட்கிக் தான். மேலும் Rooster Camp மிக அற்புதமான ஒரு உதாரணம். நன் ஹிந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? 30,000,000 கடவுள்களா? இருக்கும்ல. காட்பாடில ஆரம்பிச்சு கட்பாடிவரை எண்ணுனோமினா கூடவே வரும். தமிழர்களை நீக்ரோக்கள் என்று சொன்னது வேண்டுமானால் தமிழன் என்கிற முறையில் வருத்தமாக இருந்தது. ஆனால் உக்காந்து யோசிக்கும் பொழுது, நீக்ரோக்கள் சொந்தமண்ணைச்சேர்ந்த மக்கள் என்கிற பொருள் தருவதாயின், தமிழர்கள் நீக்ரோக்கள் என்பது சந்தோஷமே. என் நண்பர் ஒருவருக்கு (இந்தியர்களையும் இந்தியர்களின் அட்ஜஸ்ட் கரோ யார் என்கிற கொள்கையும் வெகுவாக நக்கலடிப்பவர்) forward செய்து வைத்தேன். நாவல்களை படித்திராத அவர், இந்த நாவலை இரண்டே நாட்களில் படித்து முடித்தார். அவ்வளவு உண்மை. இந்த புத்தகத்தை கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும். பிறிதொரு நாள் இந்த புத்தகத்தைப் பற்றி ஒரு தனிபதிவிடவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.

*

Wolf Totem. Totem என்கிற வார்த்தையை இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டதில்லை. Totem என்பது என்னவென்று தெரியாமலே தான் இந்தப் புத்தகத்தை நான் வாங்கினேன். பிறகு encyclopediaவில் தேடியபொழுது காவல் தெய்வங்கள் என்கிற தோராயமான பொருள் வருவது தெரிந்தது. நம்ம ஊர்ல கருப்பசாமி தூண் இருப்பது போல.

முதல் அறுபது பக்கங்கள் படித்துமுடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட நேஷனல் ஜியோகராபியில் ஒரு த்ரில்லான டாக்குமென்டரி பார்த்தது போல ஒரு உணர்வு. ஓநாய்களின் வேட்டைத்திறனை அற்புதமாக எடுத்துச்சொல்லியிருக்கிறார் எழுத்தாளர்.

*

மங்கோலியாவின் ஒரு பகுதியில் பனி படர்ந்து வருகிறது. அந்த மலையின் ஒரு புறம் காற்று எப்பொழுதும் அழுத்தமாக வீசிக்கொண்டிருக்கும். அதனால் பனி படர்ந்து தங்குவதில்லை. அங்கிருக்கும் புல்வெளி எப்பொழுதும் பனியிலிருந்து தப்பித்துவிடும். ஆனால் மலையின் மறுபுறம் காற்று அவ்வளவாக வீசாத காரணத்தால் பனி ஒரு ஆள் உயரத்துக்கு கூட சேர்ந்துவிடும். பனியினால் மலையில் புல்வெளி மீதம் இருக்கும் இந்தப்பகுதியில் மான்கள் இரைதேட வந்துவிடும். நீண்டநாட்கள் புற்களைப் பார்க்காமல் பயணம் செய்த இந்த மான்கள் ஒரே சமயத்தில் பச்சைப் பசுமையாக இவ்வளவு புற்களைப் பார்த்தபிறகு வாய் ஓயாமல் சாப்பிட ஆரம்பிக்கும். ஒநாய்கள் மான்களை மோப்பம் பிடித்துவிடும். ஆனால் உடனடியாக வேட்டையாடிவிடாது. காத்திருக்கும். மான்கள் புற்களைத் தின்று வயிற்றை நிறப்பும் வரையிலும் காத்திருக்கும். இரை கிடைத்த சந்தோஷத்தில் மான்களும் புற்களை வயிறு வெடிக்கும் அளவிற்கு தின்னும். ஓநாய்கள் மிகத்தந்திரமானவை. நரிகள் தான் தந்திரமானவை என்று பாடங்களில் படித்திருக்கிறோம். ஆனால் அது மிகப்பெரிய பொய். தந்திரம் என்பதை விட ஓநாய்களைப் போல திட்டமிட வேறு எந்த உயிரினத்துக்கும் தெரியாது. மனிதனே மிக தந்திரமான போர் தந்திரங்களை ஓநாய்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறான். மான்களை வேட்டையாட ஓநாய்கள் அதிகாலை நேரத்தைத்தான் தேர்ந்தெடுக்கும். இரவுமுழுவதும் தூங்கிவிட்டு சிறுநீர்கழிக்காமல் படுத்திருக்கும் மான்கள். அந்த நேரத்தில் ஓநாய்களை அவற்றை வேட்டையாடும் பொழுது அவற்றால் நீன்ட தூரம் ஓட இயலாது. உண்மைதான். வெகுசில கிழமான்கள் மட்டுமே தூக்கத்தின் நடுவே எழுந்து சிறுநீர்கழித்துக்கொள்ளும். மேலும் அதே ஒரு சில கிழமான்கள் மட்டுமே, புற்களை வயிறு முட்ட தின்னாது. அல்·பா மேல்(Alpha Male) எனப்படும் ஓநாய்களின் தலைவன் உண்டுவிட்டு கலைத்திருக்கும் மான்களை வேட்டையாட பாதி வட்டமாய் தன் சகாக்களை நிறுத்திக்கொண்டு அந்த சரியான தருணத்திற்காக காத்திருப்பான். தருணம் எட்டியவுடன் வேட்டை துவங்கும் பொழுது மான்களுக்கு தாங்கள் செய்துவிட்ட தவறு புரிந்திருக்கும். ஆனால் இந்தப்பாடம் அவைகளுக்கு மிக மிக காஸ்ட்லி.

wolf totemஇல் கொடுக்கப்பட்டிருக்கும் ஓநாய்களின் வேட்டைத்திறனின் ஒரு சாராம்சம் இது. படித்துக்கொண்டிருக்கிறேன்.

*

நேஷனல் ஜியோகர·பியில் சிறுத்தை மான்களை வேட்டையாடுவதை வழக்கம்போல காட்டிக்கொண்டிருந்தார்கள். எத்தனை முறை இதைப் பார்த்தாலும் நமக்கு இது போர் அடிப்பதே இல்லை. அதே ஆச்சரியமான அகல விரித்த கண்களுடனே தான் நாம் இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மான்களுக்காக நான் கவலையெல்லாம் படப்போவதில்லை. இந்தமுறை நான் பார்த்தபொழுது ஒரு விசயத்தை கூர்ந்து கவனித்தேன். சிறுத்தை தான் அதிவேகமாக ஓடும் சக்திபடைத்தது. ஆனால் பார்த்திருக்கிறீர்களா, அவை வேட்டையாடும் பொழுது, டப்பென்று எகிறிகுதித்து ஓடுவதில்லை. அதிவேகமாக ஓடும் சிறுத்தை கூட பம்மி பம்மி தான் தனது வேட்டையை துவக்குகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? (நீ வேலைவெட்டி இல்லாம சும்மா உக்காந்து டீவி பார்த்துகிட்டிருக்குறன்னு தெரியுது) சும்மாவா திருவள்ளுவர் சொல்லியிருக்கார்:
(அறத்துப்பாலில் பம்மல் அதிகாரத்தில் ஒன்பதாவது குறள்)
பம்முவார் பம்மாதார் பம்மாவிடில் சட்டென
பம்மி பயன்பெ றுவார்.

சிறுத்தைகிட்டருந்து கத்துக்கோங்கப்பா.

*

ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் (ஐ லவ் இளையராஜா)

இளையராஜாவின் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. இளையராஜாவே ஒரு மிகப்பெரிய ரசிகர் என்பது : குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து என்று பாடும் பொழுதும் ஆனாலும் நீ ரொம்பத் தாராளம் தான் என்கிறபொழுதும் நன்றாகத்தெரியும். தாராளம் என்கிற வார்த்தையை அவர் உச்சரிப்பதே அழகு தான்.