சாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க

இளைய ராஜா பற்றிய விவாதங்களின் போதெல்லாம் அவர் ரீரெக்கார்டிங்கில் கிங் என்று சொல்லி என் வாயை அடைத்து விடுவார்கள். நானும் அது சரிதான் என்று சரண்டராகி தோல்வியை ஒப்புக் கொண்டு ஓடி வந்து விடுவேன். நேற்று இரவு ஒரு பிரபலமான இசைக் கலைஞர் வீட்டில் Bedrich Smetana என்ற செக் நாட்டு கம்போஸரின் இசைத் தொகுப்புகளைக் கேட்ட போது இளைய ராஜாவின் ரீரெக்கார்டிங் சாதனையெல்லாம் இந்த ஸ்மெட்டானாவிடமிருந்து உருவப் பட்டது என்பதைத் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன்” என்று இங்கே அவர் சொல்லியிருக்கிறார்..சாருவின் எந்த எழுத்துக்களையும் நான் ஸீரோ டிகிரி படித்ததற்கப்புறம் படிப்பதில்லை..ஆனால் எப்படியோ அவரது சமீபத்திய இந்த அஞன்கன்பூசியா உளரல் என் கண்ணில் பட்டுத் தொலைத்துவிட்டது..

சாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க..

முதல் மரியாதையில இருந்து..

சிந்துபைரவியிலிருந்து..

மூடுபனியிலிருந்து

நாயகனிலிருந்து

மௌனராகத்திலிருந்து..

ராஜபார்வையிலிருந்து

கோபுரவாசலிலே..

ஜானியிலிருந்து

Mouna Ragam – Chasing Sequence

*****
சாருநிவேதிதாவுக்கு இந்த வீடியோ சமர்பணம்:

வெளிர் நீலப் புள்ளி

இந்தப் படத்தில் ஒரு வெளிர் நீலப் புள்ளி தெரிகிறதா? அது தான் பூமி. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள்!

·பெப்ரவரி 14 1990 அன்று வாயேஜர்-1 ப்ளூட்டோவைக் கடந்து சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி பரந்து விரிந்த அண்டத்தில் கிட்டத்தட்ட 60,000 கிமீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. கடைசியாக ஒரு முறை சூரியமண்டலத்தைப் பார்த்து விட சட்டென அது திரும்பியது. திரும்பிய வேகத்தில் பூமியை ஒரு புகைப்படம் எடுத்தது. அது தான் மிகப் பிரபலமான வெளிர் நீலப் புள்ளி எனப்படும் புகைப்படம். The Pale Blue Dot. இந்தப் புகைப்படத்தை எடுக்குமாறு நாசாவை வற்புறுத்தியவர் கார்ல் சாகன்.

இந்தப் படம் கிட்டத்தட்ட 6.1 பில்லியன் கிலோமீட்டர் தூரத்திலிருந்து எடுக்கப்படது. அண்டத்தின் பரப்பில் இது ஒரு சொற்ப தூரம் தான். இத்தனை குறைவான தூரத்திலிருந்து எடுக்கும் பொழுதே பூமி ஒரு புள்ளியாகத்தான் தெரிகிறது!

தனது புகழ்பெற்ற வீடியோவான காஸ்மோஸில் கார்ல் சாகன் பின்வறுமாறு சொல்கிறார்:

இவ்வளவு தூரத்திலிருந்து பார்க்கும் பொழுது மற்றவர்களுக்கு இந்த சிறு தூசியின் மேல்ப் பெரிதாக ஈர்ப்பு ஏதும் ஏற்படப்போவதில்லை. ஆனால் நமக்கு? மீண்டும் ஒரு முறை அந்தப் புள்ளியைப் பாருங்கள். அந்தப் புள்ளி தான் இந்த பூமி. அந்தப் புள்ளியில்தான் நாம் வாழ்கிறோம். அந்தப் புள்ளி தான் நாம். இங்கே தான் – நீங்கள் அன்பு செலுத்தும் ஒவ்வொரு மனிதனும், உங்களுக்கு தெரிந்த ஒவ்வொரு மனிதனும், நீங்கள் இது நாள் வரை கேளிவிப்பட்டு தெரிந்து கொண்ட ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்திருக்கிறான் – வாழ்ந்துகொண்டிருக்கிறான். நம்முடைய சுக துக்கங்கள், ஆயிரக்கணக்கான மதங்கள், நம் கொள்கைகள் கோட்பாடுகள் பொருளாதார சித்தாந்தங்கள்; ஹீரோக்கள், கோழைகள்; ஒவ்வொரு நாகரிகத்தை உருவாக்கியவரும், அந்த நாகரீகத்தை அழித்தவரும்; ஒவ்வொரு அரசனும், விவசாயியும், ஆண்டியும்; எல்லா இளஞ்சோடிகளும்; ஒவ்வொரு அப்பாவும் அம்மாவும்; ஒவ்வொரு குழந்தையும்; ஒவ்வொரு கண்டுபிடிப்பாளரும், ஆய்வாளரும், ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியும்; அறநெறி போதித்த ஒவ்வொருவரும்; ஒவ்வொரு ஊழல் அரசியல்வாதியும்; ஒவ்வொரு சூப்பர் ஸ்டாரும்; ஒவ்வொரு தலைவரும்; ஒவ்வொரு முனிவரும் – உங்களுக்கு இதுவரைத் தெரிந்த தெரியாத மனித குலத்தில் தோன்றிய எல்லோரும்; மற்ற உயிரினங்கள் எல்லாமும்; இந்த சிறு தூசியில் தான் இருந்திருக்கிறார்கள்.


பரந்து விரிந்த அண்டத்தில் பூமி ஒரு மிகச்சிறிய மேடை. ஒரு தூசி. இந்த தூசியின் ஒரு மிகச்சிறிய பகுதியில் கணநேர அதிகாரத்தை அடைவதற்காக சிந்தப்பட்ட ரத்த ஆறுகள் எத்தனை எத்தனை. இந்த தூசியின் ஒரு பகுதியின் மனிதன் அவனைப் போலவே தூசியின் அந்தப் பக்கத்திலிருக்கும் மனிதனிடம் காட்டிய குரூரங்கள் எத்தனை எத்தனை. இவர்களுக்குள் ஏற்பட்ட புரிதலின்மைகள் எத்தனை. இவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ள எத்தனை முனைப்போடு இருக்கிறார்கள். இவர்களுக்குள் இருக்கும் வெறுப்புகள் எத்தனை.


ஊதிப் பெரிதாக்கப்பட்ட நமது நம்பிக்கைகள், நாமே உருவாக்கிய மதிப்பீடுகள்; நம்முடைய சுயமுக்கியத்துவம்; நமக்கு இந்த அண்டத்தில் எதோவொரு சலுகை இருக்கிறது போன்ற வாதங்களை எல்லாம் இந்த சிறிய புள்ளி கேள்விக்குறி ஆக்குகிறது. பரந்து விரிந்த இருண்ட அண்டத்தில் நாம் ஒரு சிறிய புள்ளி. நம்மிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேறு எங்கோ இருந்து உதவி வரும் என்கிற நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் இல்லை.


இது வரை நமக்குத் தெரிந்த அண்டத்தில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய காலத்துக்கு வேறு எங்கும் நாம் புலம்பெயர முடியாது. போகமுடியலாம். ஆனால் அங்கேயே வாழமுடியுமா என்றால் – இன்னும் நேரம் வரவில்லை. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ நம்முடைய வாழ்க்கை இங்கேதான்.


வானவியல் நம்மை எளிமைப் படுத்தும் நற்பண்புகளை வளர்க்கும் ஒரு அனுபவம் என்று சொல்லுவார்கள். மனிதனின் முட்டாள் தனமான தற்பெருமைகளை உடைத்தெரிய இந்த சிறிய புள்ளியை விட வேறு ஏதும் தேவையிருக்காது. என்னைப் பொருத்தவரையில், நாம் நமக்கிடையே இருக்கும் வெறுப்புகளைக் களைந்துவிட்டு; அன்பைச் செலுத்தி; நமக்குத் தெரிந்த ஒரே இருப்பிடத்தை – இந்த வெளிர் நீலப்புள்ளியை – பாதுகாக்க வேண்டும் என்பதையே இந்தப் புகைப்படம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


– கார்ல் சாகன்

Pale blue dot – Video.

இந்தப் புகைப்படம் (இந்த விஞ்ஞானியும்) தான்; என்னை புரட்டிப்போட்டது. என் சிந்தனைகளை மாற்றியமைத்தது. நான் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து, இந்த புகைப்படத்தினாலும் கார்ல் சாகனாலும் தங்களது சிந்தனைகளை மாற்றிக் கொண்டவர்கள் பலர். தன்னை தன்னிடமிருந்து விடுவித்துக்கொண்டவர்கள் பலர்.

ஆனால் மாற்றம் அவ்வளவு எளிதல்ல – தொடர்ந்த வாசிப்பும்; திறந்த மனமும்; நிறைய கேள்விகளுமே மாற்றத்தை உருவாக்கும்.

அண்ட‌ம் எவ்வ‌ளவு பெரிய‌து?

நான் எத்த‌னை முறை இந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்தாலும்; இந்த‌ப்ப‌ட‌ம் என்னை ஆச்ச‌ரிய‌த்திலும், விய‌ப்பிலும்; நான் எவ்வ‌ள‌வு சிறிய‌வ‌ன் என்ப‌தையும் உண‌ர்த்திக்கொண்டேயிருக்கும்.

இந்த‌ப் ப‌ட‌த்தில் நீங்க‌ள் பார்க்கும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு கேலெக்ஸி. த‌மிழில் ந‌ல்ல‌ சொல் தேடிப்பார்த்தேன் ந‌ட்ச‌த்திர‌க்குடும்ப‌ம் என்று தான் கிடைத்த‌து. பால்வெளி என்று சொல்வ‌து த‌வ‌று. ஏனென்றால் பால்வெளி என்ப‌து ந‌ம‌து ந‌ட்ச‌த்திர‌ம‌ண்ட‌ல‌த்தை ம‌ட்டுமே குறிக்கும் ஒரு பெய‌ர்ச்சொல். முத்து என்ப‌தைப் போல‌; மில்கி வே.

மில்கிவே கேல‌க்ஸி என்ப‌து எப்ப‌டி வ‌ந்த‌து என்று தெரியுமா? வானில் சில‌ நேர‌ங்க‌ளில் லைட் பொல்யூச‌ன் இல்லாத‌ இட‌ங்க‌ளில் பால் போன்ற‌ வெள்ளைக் கோடு தெரியும். அது நாம் குடியிருக்கும் ந‌ம‌து மில்கிவே கேல‌க்ஸி தான். கிரேக்க‌ர்க‌ள் த‌ங்க‌ள் க‌ட‌வுளான‌ ஹெராவின் மார்பிலிருந்து பீய்ச்சி அடித்த‌ பால் என்று ந‌ம்பினார்க‌ள். கேல‌க்ஸி என்ப‌த‌ற்கு கிரேக்க‌த்தில் பால் என்று பொருள்.

ச‌ரி இந்த‌ப் ப‌ட‌த்துக்கு வ‌ருவோம். ம‌றுப‌டியும் நான் சொல்ல‌வ‌ருகிற‌ க‌ண‌க்கு உங்க‌ளுக்கு புரிய‌வில்லை என்றால்; என்னுடைய‌ விய‌ப்பை நீங்க‌ள் புரிந்துகொள்ள‌வில்லை என்றால்; மீண்டும் சொல்கிறேன் ‍ நீங்க‌ள் இந்த‌ப் ப‌ட‌த்தில் பார்க்கும் ஒவ்வொரு புள்ளியும் ஒரு கேல‌க்ஸி.

ஒரு கேல‌க்ஸியில் சுமார் 250 பில்லிய‌ன் ந‌ட்ச‌த்திர‌ங்கள் (சூரிய‌ன்க‌ள்) இருக்கும் என்று க‌ண‌க்கிடுகிறார்க‌ள். மொத்த‌ம் தோராய‌மாக‌ நூறிலிருந்து இருநூறு பில்லிய‌ன் கேல‌க்ஸிக‌ள் இருக்கும் என்று க‌ணித்திருக்கிறார்க‌ள். நாம் பேசிக்கொண்டிருப்ப‌து பில்லிய‌ன் க‌ண‌க்கு என்ப‌தை ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள். ஒரு பில்லிய‌ன் = 1000000000!

ந‌ம்ம‌ ந‌ட்ச‌த்திர‌ம் (சூரிய‌ன்) ஒரு க‌டைசில‌ இருக்கிற‌ ஒரு கேல‌க்ஸில‌ ஒரு க‌டைசில‌ இருக்கிற‌ ஒரு மிக‌ச்சாத‌ர‌ண‌ ந‌ட்ச‌த்திர‌ம். அதை சுத்தி வ‌ர்ற‌ மிக‌ச் சிறிய‌ கிர‌க‌ம் நம்ம‌ பூமி. அந்த‌ பூமில‌ ஒரு சின்ன‌ இட‌த்தில‌ வ‌சிக்கிற‌ ஒரு துக‌ள் நான். அப்ப‌, நான் எவ்வ‌ள‌வு சிறிய‌வ‌ன்? அண்ட‌ம் எவ்வ‌ளவு பெரிய‌து?

சால்வ‌டார் டாலியின் இந்த‌ ஓவிய‌மும் இதைத்தான் சொல்கிற‌து.

பாரீஸில் இவ‌ர‌து ஓவிய‌க் க‌ண்காட்சி ஒன்று இருக்கிற‌து. பாரீஸ் போனால் க‌ண்டிப்பாக‌ப் போய்வாருங்க‌ள்.

நமக்கு பக்கத்தில் பூமி போல ஒரு கிரகம்

பூமியைப் போன்று மூன்று மடங்கு பெரிதான ஒரு கிரகம் நமக்கு அருகில் இருக்கும் சிறிய சிவப்பு (red dwarf) நட்சத்திரமான கில்லசி 581ஐ (Gilese 581) சுற்றி வந்து கொண்டிருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில் இது ஒரு மிகபெரிய செய்தி. இந்த மாதிரி கிரகங்களை கண்டுபிடிப்பது மிக மிகக் கடினம். (ஏன் இதுநாள் வரை ஜோதிடர்களால் இது போன்றதொரு கிரகத்தைக் கணக்கிட்டு கண்டுபிடிக்க முடியவில்லை? அதானே, அவர்கள் இது வரையிலும் சூரியனையும் சந்திரனையும் கிரகங்கள் லிஸ்டில் வைத்திருப்பவர்கள் தானே?!)

மிகவும் ஆச்சரியம் அளிக்கும் செய்தி என்னவென்றால் நட்சத்திரத்திலிருந்து இந்த கிரகம் அமைந்திருக்கும் தொலைவு அதை கால்டிலாக் ஜோனில் வைக்கிறது. (Goldilock Zone) – அதாவது நட்சத்திர மண்டலத்தின் இந்தப் பகுதியில் தான் தண்ணீர் திரவமாக இருக்கும்!

1) Gilese 581 ஒரு சிறிய வெப்பம் குறைந்த நட்சத்திரம். நம்மிடமிருந்து (பூமியிலிருந்து) வெறும் 20 ஒளிஆண்டு தூரமே! (ஒரு ஒளி ஆண்டு என்பது பத்து ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு கொஞ்சம் குறைவான தூரம்!) இருபது ஒளிஆண்டு என்பது பிரபஞ்சத்தின் பரப்போடு ஒப்பிடும் பொழுது, மிக மிகக் குறைவான தூரம். (குறைவான தூரம் என்று சொன்னாலும், நாம் இருநூறு ட்ரிலியன் தூரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்க!)

2) இந்த கிரகம் அந்த நட்சத்திர குடும்பத்திலிருக்கும் மற்ற ஆறு கிரகங்களில் ஒன்று. (இது வரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை தான் இது) எல்லா கிரகங்களின் சுற்றுப்பாதையும் தெளிவான வட்டவடிவமாய் இருப்பதால், இந்த நட்சத்திரக்குடும்பம் கொஞ்சம் நிலையாக இருக்கிறது. இந்த புதிய கிரகம் தன் நட்சத்திரத்தை ஒரு முறை சுற்றிவர 37 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. நட்சத்திரத்திலிருந்து இந்த புதிய கிரகம் அமைந்திருக்கும் தூரம், பூமி சூரியனிலிருந்து அமைந்திருக்கும் தொலைவில், 1/6 மடங்காகும். இது அந்த சூரிய குடும்பத்தில் சூரியனிலிருந்து நான்காவது கிரகம்.

3) சரி இந்த மாதிரி கிரகங்களை பூமியில் உட்கார்ந்து கொண்டு எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? டாப்லர் முறையைப் பயன்படுத்தி தான்! கிரகம் நட்சத்திரத்தை சுற்றி வரும் பொழுது நட்சத்திரத்தை கொஞ்சம் இழுக்கும், அப்படி இழுக்கும் பொழுது நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியின் அலைநீளத்தில் (wavelength) கொஞ்சம் மாற்றம் இருக்கும். கிரகத்தின் நிறை (mass), தன் நட்சத்திரத்திலிருந்து அது அமைந்திருக்கும் தொலைவு, அதன் கோளப்பாதை போன்றவை இந்த அலைநீளத்தின் (wavelength) மாற்றத்தை தீர்மானிக்கும். இந்த அலைநீளத்தின் மாறுதல், கிரகத்தின் குணங்களை விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள உதவிபுரிகின்றது.

இவைதான் நமக்கு தெரிந்த விசயங்கள். நாம் வேறு எந்தெந்த விசயங்களில் உறுதியாக இருக்கிறோம்?

நீங்கள் நட்சத்திரத்துக்கு மிக அருகில் இருந்தால் தண்ணீர் திரவ வடிவில் இருக்காது; ஆவியாகிவிடும். நட்சத்திரத்திலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்தால் வேறு பிரச்சனை தண்ணீர் உறைந்து விடும். ஏனவே நட்சத்திரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் தண்ணீர் திரவ வடிவமாக இருக்கும்! இது தான் நான் மேற் சொன்ன கால்டிலாக் ஜோன் (Goldilock zone). மேலும் இது கிரகத்தைப் பொருத்தும் அமையும். வீனஸில் தண்ணீர் திரவ வடிவில் இருந்திருக்கக்கூடும் ஆனால் அதன் மிக அடர்த்தியான வளிமண்டலம் க்ரீன் ஹவுஸ் எ·பகெட்டை ஏற்படுத்தி கிரகத்தை 460 டிகிரி செல்சியஸிற்கு சூடாக்கி விடுகிறது! மார்ஸ் (செவ்வாய்) கிரகத்தின் வளிமண்டலம் அடர்த்தியாக இருந்திருந்தால் தண்ணீர் அங்கு திரவ வடிவில் இருந்திருக்கும்! எனவே கால்டிலாக் ஜோனை மீறி கிரகத்தின் தன்மையும் தண்ணீரின் திரவத்தன்மையை தீர்மானிக்கிறது.

கில்லசி 581ஜி – அப்படித்தான் புதிய கிரகத்தை அழைக்கிறார்கள் – நட்சத்திரத்திலிருந்து சரியான தொலைவில் இருக்கிறது. பூமியைப் போன்று மூன்று மடங்கு பெரிதாக இருப்பதனால் இது கேஸ் ஜெயன்ட்டாக (Gas Giant) – ஆவியால் ஆன கிரகம் – இருக்க வாய்ப்பில்லை. ஆவியால் ஆன கிரகமா? புதுசா இருக்கே! ஆமாம். நம் நட்சத்திரக் குடும்பத்திலே நான்கு ஆவி கிரகங்கள் இருக்கின்றன அவை ஜூப்பிடர், சாட்டர்ன், நெப்டியுன் மற்றும் யுரேனஸ். (இந்த ஆவி சமாச்சாரம் ஜோதிடர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் மனிதன் செத்ததற்கு பிற்பாடு ஆவியாகி இந்த கிரகங்களுக்குத் தான் போகிறான். அங்கே உங்களை எண்ணைக் கொப்பரையில் போடாமல் இருக்கவேண்டுமென்றால் இவை ஒவ்வொன்றையும் முறையே சனி, திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்களில் நானூற்றி நாற்பது முறை சுற்றி வந்து நெய் தீபம் ஏற்றி தென்கிழக்கே திரும்பி வழிபட வேண்டும் என்று தோஷ நிவர்த்தி சொன்னாலும் சொல்வார்கள். உஸ்..அப்பா முடியல!)

ஆனால் இதையெல்லாம் வைத்து, நாம் இந்த புதிய கிரகத்தில் வசிக்க முடியும் என்று சொல்லமுடியாது. பூமி போல இருக்குமா என்றும் சொல்லமுடியாது. இங்கே தண்ணீர் இருக்குமா என்பதும் நமக்குத் தெரியாது. எனவே அங்கே உயிரினங்கள் இருக்கிறது என்றும் எப்படி நாம் அங்கே குடியேறலாம் என்றும் மூச்சுவிடாமல் மீடியா பேசினால் நம்பிவிடாதீர்கள். 🙂

இருந்தாலும் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து சிலவற்றை யூகிக்க முடியும்.

இந்த கிரகம் தன் நட்சத்திரத்தை சுற்றி வர வெறும் 37 நாட்கள் மட்டும் எடுத்துக்கொள்வதால் இது நட்சத்திரத்துக்கு வெகு அருகில் இருக்கிறது. ஆனால் அந்த நட்சத்திரம் நம் நட்சத்திரத்தை போன்றது அல்ல. நான் ஏற்கனவே சொன்னது போல அது ஒரு சிறிய சிவப்பு நட்சத்திரம் (red dwarf). (நட்சத்திரங்களின் வகைகளைப் பற்றி பிரிதொருமுறை பேசலாம்.) நட்சத்திரம் சிறிதாக இருப்பதால் இந்த கிரகம் நட்சத்திரத்துக்கு அருகில் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் சூடாகாது.

நட்சத்திரத்துக்கு அருகில் இருந்தால் கண்டிப்பாக கிரகம் மிகுந்த வெப்பமாகி விடவேண்டும் என்பதில்லை ;). ஆனால் நட்சத்திரத்துக்கு அருகில் இருப்பதால் அந்த நட்சத்திரம் இந்த கிரத்தின் மீது பலமான ஒரு விசையை செலுத்தும். அந்த விசையின் பெயர்: டைடல் விசை. இந்த டைடல் விசை கிரகம் நட்சத்திரத்தை சுற்றி வரும் வேகத்தை மந்தப்படுத்தி இறுதியில் கிரகம் தன்னைத்தானே சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும், நட்சத்திரத்தை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் ஒரே அளவில் இருக்கும். இது கிட்டத்தட்ட கண்டிப்பாக இந்த கிரகத்துக்கு நடந்திருக்கிறது – எனவே இந்த கிரகத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்துக்கு சமம். நிலா பூமிக்கு எப்பொழுதும் தன் ஒரே முகத்தை (பகுதியை) காட்டிக்கொண்டிருப்பதைப் போல இந்த கிரகமும் தன் நட்சத்திரத்துக்கு ஒரே முகத்தைக் காட்டிக்கொண்டிருக்கும்.

இது இங்கே உயிரனங்கள் தோன்றுவதற்கு கொஞ்சம் தடையாக இருக்கும். நட்சத்திரத்தை பார்த்தே இருக்கும் கிரகத்தின் பகுதி மிகுந்த வெப்பமாகிவிடும். அதே நேரத்தில் கிரகத்தின் மற்ற பகுதி கடும் குளிராக இருக்கும். ஆனால் வளிமண்டலம் குளிர் பகுதியிலிருந்து குளிர் காற்றை வெப்பமிகுந்த மற்ற பகுதிக்கு அனுப்புவதன் மூலம் அந்தப் பகுதியின் வெவப்பம் குறைவதற்கு சாத்தியங்கள் இருந்தாலும், கிரகத்தில் வளிமண்டலம் இருக்கிறதா என்பது நமக்கு இப்பொழுது தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. நமது பால்வெளியில் மட்டும் 200 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன. நமது பால்வெளியின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு பயணிப்பதற்கு 100,000 ஒளி ஆண்டுகள் ஆகும். நமக்கு வெகு அருகில் 20 ஒளி ஆண்டு தூரத்தில், பூமியைப் போன்ற தன்மை மிகுந்த ஒரு கிரகத்தை நாம் இப்பொழுது கண்டுபிடித்திருப்பது, பரந்து விரிந்த அண்டத்தில் (தோராயமாக 125 பில்லியன் விண்வெளி மண்டலங்கள் – galaxy) இது போன்று பல ஆயிரக்கனக்கான கிரகங்கள் கண்டிப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கையை விஞ்ஞானிகளுக்கு அளித்திருக்கிறது.

ஒரு அண்டத்திலே (universe) இப்படி என்றால் பல அண்டங்கள்(multiverse) இருக்கக்கூடும் என்று வேறு சில விஞ்ஞானிகள் பட்டையை கிளப்புகிறார்கள்!

எந்திர‌ன்

ர‌ஜினிக்கு ந‌டிக்க‌த்தெரியாதுன்னு சொல்ற‌வ‌ங்க‌ இந்த‌ ப‌ட‌த்தைப் பாருங்க‌. ஹாலிவுட் த‌ர‌த்துக்கு ப‌ட‌ம் ந‌ம்மால‌ எடுக்க‌ முடியாதுய்யான்னு சொல்ற‌வ‌ங்க‌ளும் க‌ண்டிப்பா இந்த‌ ப‌ட‌த்த‌ப் பாருங்க‌.

ஹாலிவுட் த‌ர‌மென்ன‌ அதுக்கு மேல‌யே எடுத்திருக்காங்க‌. த‌மிழ் சினிவாவின் ஏன் இந்திய‌ சினிமாவின் மைல் க‌ல் இந்த‌ப் ப‌ட‌ம்.

ர‌ஜினிக்கு ஃபுல் மீல்ஸ். ர‌ஜினி ர‌சிக‌ர்க‌ளுக்கு க‌ல்யாண‌ சாப்பாடு (!). ஹூ இஸ் செல்லாத்தா என்ப‌தாக‌ட்டும் செல்லாத்தா போல‌ ப‌த்து கைக‌ள் போல‌ விரித்துக் காட்டுவ‌து ஆக‌ட்டும் ஹூ இஸ் த‌ ப்ளாக் ஷீப் என்ப‌தாக‌ட்டும் ப்ரேக் ஆடுவ‌தாக‌ட்டும் ப‌ர‌த‌நாட்டிய‌ம் ஆடுவ‌தாக‌ட்டும், நான் சிட்டி வெர்ஷ‌ன் 2.0 என்று சொல்வ‌தாக‌ட்டும்; ஐஸ்வ‌ர்யாவிட‌ம் “இது என்ன‌ க‌வுக்க‌ற‌துக்கான‌ ப்ளானா இருக்குமோன்னு ச‌ந்தேக‌மா வேற‌ இருக்கு”னு சொல்ற‌தாக‌ட்டும் ர‌ஜினி சும்மா பிச்சு உத‌றியிருக்கிறார்.

வ‌ச‌ன‌ங்க‌ள் ஷார்ப். லீவுக்கு வ‌ந்த‌ ரிஷி. ஆக்ஸிடென்ட் ஆக‌ப்போகுது ஐன்ஸ்டின் ஒரு குட்டி பாப்பா யார‌ காப்பாத்துவீங்க‌? தாட்ஸ் எ ஹிப்போத‌ட்டிக‌ல் கொஸ்டீன். நிறைய‌. ர‌ங்குஸ்கி கொசு ந‌ல்ல‌ திங்கிங். ஸ்டீஃப‌ன் ஹாக்கிங் எழுதிய‌ ப்ரீஃப் ஹிஸ்ட‌ரி ஆஃப் டைம் புத்த‌க‌ம் ப‌ட‌த்தில‌ வ‌ருது. கார்ல் சாக‌ன் வ‌ருவாரான்னு பார்த்தேன், வ‌ரல‌.நிறைய‌ பேருக்கு புரியுமா என்று தெரிய‌வில்லை. ஆனால் ஸ்டீஃப‌ன் ஹாக்கிங் த‌மிழ் ப‌ட‌த்தில‌ வ‌ர்றாருன்னா என்ன‌மோ ந‌ட‌க்குதுன்னு தான் அர்த்த‌ம்.

ம‌னித‌ன் உருவானது ஒரு விப‌த்து (ப‌ரிணாம‌ வ‌ள‌ர்ச்சி) என்றொரு வ‌ச‌ன‌ம் வ‌ருகிற‌து. க‌ட‌வுள் இருக்கிறாரா இல்லியா என்கிற‌ கேள்விக்கு “க‌ட‌வுள்ன்னா யார்?” என்று சிட்டி கேட்கிறார். ர‌ஜினி கேட்கிறார்.

அப்புற‌ம் நிறைய‌ ஹெ டெக் சமாச்சார‌ம் இருக்கிற‌து. க்ளைமாக்ஸ் அட்ட‌காச‌ம். த‌மிழ் ப‌ட‌ம் தானான்னு நிறைய‌ வாட்டி என்னையே கேட்டுக்கிட்டேன்.

இன்னிக்கு ஆஃபீஸ்ல‌ சாப்பிட‌ உட்கார‌ப்போ ஒரு சோன‌கிரி வ‌ந்து உக்காந்துச்சு. உக்காந்த‌ உடனே விக்ர‌ம் சூர்யா இத‌விட‌ பெட்ட‌ரா ப‌ண்ணிருப்பாங்க‌ன்னு சொல்லுச்சு. ப‌ட‌ம் பாத்துருச்சான்னா பாக்க‌ல‌. அப்புற‌ம் எப்ப‌டிய்யா இப்ப‌டி சொல்ல்முடியுது?ஐஸ்வ‌ர்யாவுக்கு ர‌ஜினியை விட‌ ரெண்டு கோடி ரூபா ச‌ம்பள‌ம் ஜாஸ்தியாமே? அப்ப‌டீன்னு அடுத்த‌ கேள்வி.ர‌ஜினி மேல‌ அப்ப‌டி என்ன‌தான்யா காண்டு?

அப்புற‌ம் இன்னொரு சோன‌கிரி: நியு ப‌ட‌ம் மாதிரில்ல‌ இருக்கு. அவ‌ன் அப்ப‌வே எடுத்துட்டானே! அட‌ க‌ரும‌மே. அப்புற‌ம் இங்கிலீஷ் ப‌ட‌ம் பாக்கிற கோஷ்டி தொல்ல‌ தாங்க‌முடிய‌ல‌ப்பா. ப‌ட‌ம் வ‌ர்ற‌துக்கு முன்ன‌யே இது பைசென்ன்டின‌ல் மேன் ப‌ட‌த்தோட‌ காப்பின்னு சொல்ற‌துக‌ள். அட‌ ப‌த‌ருக‌ளா, பை சென்டின‌ல் மேன் வேற‌ இது வேற‌. அந்த‌ ரோபோ தானா எவால்வ் ஆகும்; இந்த‌ ரோபோ அப்ப‌டியில்ல‌. எல்லா ப‌டத்துக்கு ட்ரெயில‌ர் பாத்துட்டு க‌தை சொல்ற‌து போல‌ இதுக்கும் சொல்ல‌ப்ப‌டாது. ப‌ட‌ம் பார்த்து க‌தை சொல்ல‌வும். விம‌ர்ச‌ன‌ம் ப‌ண்ண‌வும். என்ன‌ சோன‌கிரிகளா?

அப்புற‌ம் மேலும் சில‌ர் ப‌ட‌த்தை புற‌க்க‌ணிக்க‌ப் போவ‌தாக‌வும் அக‌க்க‌ழிக்க‌ப் போவ‌தாக‌வும் கோஷ்டிக‌ள் பிரித்திருக்கின்ற‌ன‌ர். என்ன‌வேனா ப‌ண்ணுங்க‌ப்பா. ஹூ கேர்ஸ்? ஆனா இந்த‌ கோஷ்டிக‌ளை யாராவ‌து தியேட்டரில் பாத்தீங்க‌ன்னா ட‌க்குன்னு வீடியோ எடுத்திருங்க‌.

வேற‌ ஒன்னும் சொல்ற‌துக்கில்ல‌. நேத்து நைட் ப‌ர்ஸ்ட் ஷோ ரெக்ஸ்ல‌ பார்த்தேன். வீட்டுல‌ போய் உட‌னே எழுத‌ முடிய‌ல‌. காலைல‌ மீட்டிங் இருந்த‌து. கெட‌ச்ச‌ கேப்ல‌ எழுத‌றேன்.

ர‌ஜினி சொன்ன‌ மாதிரி ப‌ட‌ம் ஒரு அனுப‌வ‌ம். க‌ண்டிப்பாக தியேட்ட‌ரில் பார்க்க‌வும்.

PS:
எம்ஜிஎம் ஜேம்ஸ்பாண்ட் ஃப்ராண்சைஸ‌ ரிலைய‌ன்ஸ்க்கு விக்க‌ போற‌தாக‌வும், அவ‌ர்க‌ள் த‌யாரிக்க‌ப்போகும் அடுத்த‌ ஜேம்ஸ்பாண்ட் ப‌ட‌த்திற்கு ர‌ஜினியும் லிஸ்டில் இருப்ப‌தாக‌ ஒரு செய்தி அடிப‌டுகிற‌தே உண்மையா?!

ஐ லவ் இளையராஜா

இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்னோட ·பேவரிட் சாங். இதற்கு இணையான லவ் சாங் ஏதும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

அதே படத்திலிருந்து வேரொரு பாட்டு. இரண்டாம் ஸ்டான்சாவுக்கு முந்தைய பிட்டைக்கேளுங்கள்.

வாரிசு அரசியல். ஊழல். மீடியா. இரும்புத்திரை.

ஆங்கிலத்தில் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். ஒரு பதிவும் தொடங்கியிருக்கிறேன். http://booksmoviesastronomy.blogspot.com. Books Movies Astronomy என்று பெயர் வைத்திருக்கிறேனே தவிர கிடைக்கிற எல்லாவற்றையும் பற்றி எழுதலாம் என்று தான் நினைத்திருக்கிறேன்! இரண்டு காரணங்கள். ஒன்று ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்கிற எண்ணம். மற்றொன்று தமிழ் தவிர பிற மொழி பேசுவோரையும் மொக்க போடலாம் என்கிற நல்லெண்ணம் தான். அவ்வப்போது அங்கேயும் வாருங்கள். 🙂

*

Spectrum ஊழல் தொடர்பான செய்திகளைக் கவனித்துக்கொண்டுதான் இருப்பீர்கள். இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..ச்சே..சாரி..இந்திய வரலாற்றிலே மிகப்பெரிய ஊழல் என்று சொல்கிறார்கள். 60,000 கோடி என்கிறார்கள் ஒரு லட்சம் கோடி என்கிறார்கள்; எவ்வளவு கோடி என்பது ஆள்பவர்களுத்தான் வெளிச்சம். நித்யானந்தா வீடியோவை அத்தனை முறை ஒளிபரப்பு செய்தவர்கள் கிடைத்திருக்கும் இந்த ஆடியோ க்ளிப்பை எத்தனை முறை ஒளிபரப்பினார்கள்? பாரீஸில் எனக்கு இந்தியத் தொலைக்காட்சிகள் குறிப்பாக தமிழக தொலைக்காட்சிகள் கிடைப்பதில்லை.
*

 இங்கே ஐரோப்பாவில் க்ரீஸ் திவாலாகப் போகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது திவாலாகமல் இருக்கவேண்டும் என்றால் தோராயமாக தேவைப்படும் தொகை 120 பில்லியன் டாலர். யூரோப்பியன் யூனியனும் IMF உம் சேர்ந்து அதைக் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. பணம் கொடுப்பதற்குப் பல கண்டிஷன்கள் போட்டிருக்கிறார்கள். அப்புறம் பணம் கொடுப்பவன் சும்மா கொடுப்பானா? அறிவுரைகளும் கூடவே சில கண்டிஷன்களும் வரும் தானே. எனக்குத் தெரிந்த சில கண்டிஷன்கள்: அரசு வேலை பார்ப்பவர்கள் இப்பொழுது இன்னும் பணிரெண்டு வருடங்கள் அதிகமாக வேலை பார்க்கவேண்டும். இப்பொழுது அவர்கள் ரிட்டையர் ஆகும் வயது 55 என்று வைத்துக்கொள்ளுங்கள் இனி அவர்கள் 67 வயதில் தான் ரிட்டையர் ஆக முடியும். பணிரெண்டு வருட கூடுதல் உழைப்பு!

இன்று கார்டியனில் நான் படித்தது மற்றும் என் நண்பர் கொடுத்த தகவல்கள்.கிரீஸ் நாட்டு மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். யார் மீது கோபம்? அரசியல்வாதிகள் மீது. பத்திரிக்கையாளர்கள் மீது. தொழிலதிபர்கள் மீது. மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரையில் அவர்கள் யார் மீது கோபப்படலாம் என்றால்? நியாயமாக அவர்கள் மீதேதான். முப்பது வருட ஊழலை யார் சரிக்கட்ட முடியும்? சில மாதங்களில் அது எப்படி சரியாகும்? ஊழலுக்கு யார் பொறுப்பேற்பது?

க்ரீஸில் இன்று வரை நடந்துவந்தது ஒரு இரும்புத்திரை அரசாங்கம். அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது. அந்த இரும்புத்திரையை உருவாக்கி அந்த திரை விலகிவிடாமல் போற்றிப் பாதுகாத்துவந்தவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சர்வென்ட்ஸ் என்கிற அரசு ஊழியர்கள். குறிப்பாக உயர்பதவியில் இருந்த அரசு ஊழியர்கள். இந்த இரும்புத்திரை அவர்கள் செய்யும் ஊழல்களை எளிதாக மறைக்க உதவியது. பிரச்சனை என்னவென்றால் க்ரீஸின் மக்கள் தங்களுக்கு எல்லாம் கிடைக்கிற வரை நமக்கேன் வம்பு என்று இருந்தது தான். மேலும் கிரீஸில் நான்கில் ஒரு பங்கு அரசு ஊழியர்களாம். எனவே நமக்கு நிரந்தர அரசு வேலை இருக்கிற வரை என்ன கவலை? மாதம் முடிந்தால் சம்பளம் கிடைக்கிறதா? அதுவும் பதினான்கு மாத சம்பளமாம். பிறகென்ன? யார் ஊழல் செய்தால் நமக்கென்ன?

அரசியல்வாதிகள் மக்கள் கண்டுகொள்ளாததால் அவர்கள் போக்குக்கு வேலைசெய்துகொண்டிருந்தார்கள். புதிது புதிதாக வேலைகளை உருவாக்கினார்கள். கடன் வாங்கிக்கொண்டேயிருந்தார்கள். அவர்கள் செய்வதை ஆய்வு செய்யவும் மதிப்பீடு செய்யவும் யாரும் இல்லை. அவர்களைக் கண்காணிக்க யாரும் இல்லை.

இந்த அரசியல் முறை வேறென்னத்துக்கு வழிவகுக்கும்? கண்காணிப்பில்லாத துறை ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். அதுதான் நடந்தது. புதிதாக உருவான தொழிலதிபர்கள் அரசு கான்ட்ராக்ட்களை எளிதாக எடுத்தார்கள். கனிசமாக அரசிடம் பணம் வசூலித்தார்கள். கொள்ளை லாபம் பார்த்தார்கள். அப்படி கொள்ளை லாபம் பார்ப்பதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க அரசியல் வாதிகளுக்கு பணம் கொடுத்தார்கள். இந்த ஊழல் அவ்வப்போது கொஞ்சம் கசிந்தது. ஊழல் கசியாமல் இருக்கவே இருக்காது. யாருக்கும் தெரியாமல் ஊழல் செய்யமுடியுமா என்ன? அப்படியென்றால் நம்ம பணத்தை நாம ஊழல் செஞ்சா மட்டுமே முடியும். செய்தி கசிந்தது. மக்கள் சில மந்திரிகளின் மிக ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிற மீடியாவும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான். மீடியாவும் கண்டுகொள்ளவில்லை; நீதித்துறையும் கண்டுகொள்ளவில்லை. ஊழல் நடப்பது தெரிகிறது. மீடியாவில் துப்பறியும் துறை கண்டிப்பாக இருக்கும். ஏன் கண்டுகொள்ளவில்லை?

இப்படி முப்பது வருடங்களாக நடந்த ஊழலை எப்படித் திருத்துவது? ஜனாதிபதி முதல் சராசரிக் குடிமகன் வரை எல்லோரும் எல்லார் மீதும் கோபமாக இருக்கிறார்கள். ஹீரோவாக இருக்கவேண்டும், மக்களைக் காப்பாற்றவேண்டும் என்று ஜனாதிபதியை எல்லோரும் தேடுகிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இப்பொழுது எதை எதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதெல்லாம் 1980இல் இப்பொழுதிருக்கிற நம்ம ஹீரோ ஜனாதிபதியின் அப்பா ஏற்படுத்திய மாற்றங்களாம்.

வாரிசு அரசியல். ஊழல். மீடியா. இரும்புத்திரை.மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது.

*

300. 2 States

ரொம்ப நாள் ஆச்சு நான் நாவலோ கதையோ சிறுகதையோ படித்து. புதினத்தைக் கொஞ்ச காலம் ஒதுக்கிவைத்துவிட்டு புதினம் அல்லாத புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் கார்ல் சாகன் என்கிற விஞ்ஞானி. கிட்டத்தட்ட நம்ம சுஜாதா மாதிரி. என் நண்பர் சஜித் எனக்கு கார்ல் சாகனின் த காஸ்மோஸ் (ப்ரபஞ்சம்) என்கிற வீடியோவைக் கொடுத்தார். ப்ரபஞ்சத்தைப் பற்றிய எளிய அறிமுகம். சுஜாதா எழுதிய ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் போல.

இது புத்தகமாகவும் வந்தது. கண்டிப்பாகத் தேடிப்பிடித்து படியுங்கள். வீடியோ கிடைத்தாலும் பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்குக் காண்பியுங்கள். படிக்கச் சொல்லுங்கள்.

காஸ்மோஸ் பற்றியும் நான் படித்த மற்ற புத்தகங்களைப் பற்றியும் மற்றொரு நாள் எழுதுகிறேன் இப்பொழுது நான் சமீபத்தில் படித்த சேட்டன் பகத் எழுதிய 2 states பற்றிப் பார்ப்போம். சேட்டன் பகத்தின் The three mistakes of my life பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மேலும் 3 இடியட்ஸ் பிரச்சனைக்குப்பிறகு சேட்டன் பகத் உலக அளவில் மிகவும் பிரபலமாகியிருக்கிறார்.

மெதுவாக ஆங்கில நாவல்கள் படிக்கத்துவங்கும் கார்பரேட் இளைஞர்கள் பெரும்பாலும் சேட்டன் பகத்தின் எல்லா புத்தகங்களையும் படித்திருக்கின்றனர். 3 இடியட்ஸ் பிரச்சனைக்குப்பிறகு அவர்கள் சேட்டன் பகத் வஞ்சிக்கப்பட்டதாகவே நினைக்கின்றனர். எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை சேட்டன் பகத் ஒப்பந்தந்தத்தில் கையெழுத்துப்போட்டிருக்கிறார்.

ஒப்பந்தம் இங்கே இருக்கிறது. முழு ரைட்ஸ¤ம் கொடுத்திருக்கிறார். நிபந்தனையற்ற ரைட்ஸ். படிக்காமல் கையெழுத்துப்போட்டாரா?

2 states நாவல் நான் வேலை செய்யும் அலுவலகத்தில் நான் மேற்குறிப்பிட்டது போன்ற புதிதாகச் சேர்ந்த ஒரு இளைஞர் படிக்கச்சொல்லி எனக்கு கொடுத்தார். நான் அவருக்கு பதிலுக்கு shantaram கொடுத்தேன். Shantaram is a tough read.

சிங்கப்பூரிலிருந்து பாரீஸ் வரும் வழியில் இரண்டே மணிநேரத்தில் இந்த நாவலைப் படித்து முடித்தேன். நாவல் என்று சொல்லுவது சரியாக இருக்காது; சற்றே பெரிய கதை என்று சொல்லலாம். அஸ் யூஸ்வல் இதும் ஒரு feel good, அதென்ன வார்த்தை, ம்ம்ம்ம்…பைங்கிளிக் கதை. ஸீரோ டிகிரியைப் பற்றி நான் எழுதிய விமர்சனத்தைப் படித்து விட்டு கடுங்கோபம் கொண்ட ஒருவர் என்னுடைய நசீர் கதையை பைங்கிளிக்கதை என்றுதான் ஏளனமாகக் குறிப்பிட்டார்! 😦

ஹீரோ பஞ்சாபி. ஹீரோயின் தமிழ் பிராமின். இருவரும் ஐஐஎம்மில் படிக்கின்றனர். இருவரும் காதல் வருகிறது. செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர். திருமணம் பற்றி யோசித்து விட்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடுதான் திருமணம் என்று முடிவு செய்கின்றனர். பிறகு ஹீரோ ஹீரோயினின் வீட்டுக்கு சென்று அனைவரையும் தன்பால் ஈர்க்கிறார். ஹீரோயினும் அ·தே செய்கிறார். நடுவில் மேலும் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர். பிறகு கடைசியில் திருமணம் முடிகிறது.

ஒரு பாலிவுட் மசாலாவுக்குத் தேவையான அனைத்தும் இதில் இருக்கிறது. தமிழில் சூர்யா ஜோதிகா நடித்த படம் ஒன்று இதே போல் ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன் வந்துவிட்டது. என்ன அவர்கள் ஐஐஎம்மில் படிக்கவில்லை. திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை. அவ்வளவே.

நாவலில் தமிழ்நாடு பற்றியும் தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் ஏகத்துக்கும் எழுதியிருக்கிறார் சேட்டன் பகத். இதோ சில:

The first thing I noticed, excuse my shallowness was that almost ninety percent of the people were dark complexioned. Of these ninety percent, eighty percent had dabbed talcum that gave them a grey skin tone. I understood why Fair & Lovely was invented.

Most women at the conveyor belt looked like Ananya’s mother; I couldn’t tell one from the other. They all wore tones of gold,

 First, the sign in every shop was in Tamil. The Tamil font resembles those optical illusion puzzles that give you a headache if you stare at them long enough. Tamil women, all of them, wear flowers in their hair. Tamil men don’t believe in pants and wear lungis even in shopping districts. The city is filled with film posters. The heroes’ pictures make you feel even your uncles can be movie stars. The heroes are fat, balding, have thick moustaches and the heroine next to them is a ravishing beauty. Maybe my mother had a point in saying that Tamil women have a thing for North Indian men.

The driver stopped the auto. He craned his neck out of the auto and folded his hands. ‘What?’ I gestured. ‘Thalaivar,’ he said, pointing to the poster. I looked out. The poster was for a movie called Padayappa. I saw the actors and recognised only one. ‘Rajnikant?’ The auto driver broke into a huge grin.

 Any impressions of Tamil men being timid (influenced by Ananya’s father) evaporated as I felt a driver tap my back

Be careful, your building is vegetarian. No alcohol also.’ ‘Really?’ ‘Yes, people here are like that. For them, anything fun comes with guilt,’ he said as the lift doors shut

The Tamil sense of humour, if there is any, is really an acquired taste.

‘ ‘One tip, never leave before your boss,’ he said and winked at me. He laughed, and I didn’t find it funny at all. I want to see what a Tamil joke book looks like.

Tamilians love to irritate non-Tamil speakers by speaking only in Tamil in front of them. This is the only silent rebellion in their otherwise repressed, docile personality.

பாவம் ஜெயராம் வட நாட்டவராகப் பிறந்திருக்க வேண்டும்.

உலகின் பிரபலமான எரிமலைச் சீற்றங்கள்

ஐஸ்லாந்தின் எரிம‌லையிலிருந்து வ‌ரும் புகை(ப்ப‌ட‌ங்க‌ள்) பார்ப்ப‌த‌ற்கு அழ‌காக‌ இருக்க‌லாம் ஆனால் அத‌னுடைய‌ விளைவுக‌ள் க‌டுமையான‌தாக‌ இருக்கும். ஏற்க‌ன‌வே ப‌ல‌ விமான‌ங்க‌ள் கான்ச‌ல் செய்ய‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌. மீண்டும் விமான‌ நிலைய‌ங்க‌ள் எப்பொழுது திற‌க்கும் என்று தெரிய‌வில்லை. திற‌ந்தாலும் ப‌ய‌ண‌ம் செய்ய‌ இய‌லாம‌ல் போன‌ ப‌ய‌ணிகளுக்கு மீண்டும் எப்பொழுது ப‌ய‌ண‌ம் செய்ய‌ சீட் கிடைக்கும் என்ப‌தும் தெரிய‌வில்லை. இது மெதுவாக‌ அர‌சிய‌லாக‌வும் மாறிக்கொண்டிருக்கிற‌து.

பிரிட்ட‌னுக்குத் திரும்ப‌ முடியாம‌ல் த‌விக்கும் த‌ங்க‌ள் ம‌க்க‌ளை அழைத்து வ‌ர ராய‌ல் நேவியைப் பய‌ன்ப‌டுத்த‌ப்போவ‌தாக‌ச் சொல்லியிருக்கிற‌து.(மிக‌ விரைவில் தேர்த‌ல் வ‌ருவ‌தால்!) த‌ற்காலிக‌மாக‌ சில‌ ப‌ணி நீக்க‌ங்கள் செய்ய‌ நேரும் என்று ப்ரிட்டிஷ் ஏர்வே ப‌ய‌முறுத்தியிருக்கிற‌து. ஐஸ்லாந்திலும் புகை சூழ்ந்துள்ள‌ ம‌ற்ற‌ ப‌குதிக‌ளிலும் ஆசிட் ம‌ழையும் குடி த‌ண்ணீர் பாதிக்கும் அபாய‌மும் இருப்ப‌தாக‌வும் தெரிகிற‌து. ஆனால் உல‌கில் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ எரிம‌லை வெடிப்புக‌ளைப் பார்க்கும் பொழுது இது ஒன்றும் அவ்வ‌ள‌வு பெரிதாக‌த் தெரிய‌வில்லை. இதுகாரும் உல‌கில் வெடித்த‌ ந‌ம‌க்கு தெரிந்த‌ வ‌ர‌லாறில் எரிம‌லைக‌ளைப் ப‌ற்றிப் பார்ப்போம்.

La Garita Caldera, Colorado

Colorado எரிம‌லை மொத்த‌ம் 1200 க்யூபிக் மைல் லாவாவைக் க‌க்கியிருக்கிற‌து. அந்த‌ வெடிப்பிலிருந்து வ‌ந்த‌ சாம்ப‌ல் இன்னும் ப‌டிந்திருப்ப‌தை ப‌ட‌த்தில் காண‌லாம். இது ந‌ட‌ந்த‌து 28 மில்லிய‌ன் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால். உடைந்து போன‌ எரிம‌லை அடிப்ப‌குதி 21 பை 45 மைல்க‌ளாம்.

Tambora, Indonesia

நெருப்பு வ‌ளைய‌ம் என்று இந்தோநேசியாவைச் சொல்லுவார்க‌ள். அந்த‌ அள‌வுக்கு எரிம‌லைகளும் பூக‌ம்ப‌ங்க‌ளும் நிறைந்த‌ பூமி இது. த‌ம்போரா என்கிற‌ சும்பாவா என்னும் தீவிலிருக்கிற‌ எரிம‌லை 1815இல் வெடித்த‌போது அது தான் அதிக‌ப‌ட்ச‌ ம‌ர‌ண‌ங்களையும் இழ‌ப்புக‌ளையும் கொடுத்த‌ எரிம‌லைச் சீற்ற‌மாக‌ இருந்த‌து. காற்றில் கல‌ந்த‌ எரிம‌லைச் சாம்ப‌ல் அமெரிக‌காவையும் ஐரோப்பாவையும் க‌டுமையாக‌ப் பாதித்த‌து. அவ‌ர்க‌ளுக்கு ச‌ம்ம‌ரே வ‌ர‌வில்லை. வெப்ப‌நிலை மிக‌வும் குறைந்து போய் க‌டும் வ‌ர‌ட்சி ப‌ர‌விய‌து. ப‌த்தொன்ப‌தாம் நூற்றாண்டின் க‌டுமையான‌ வ‌ர‌ட்சி இது தான். எரிம‌லைச் சீற்ற‌த்தால் ப‌லியானோர் எண்ணிக்கை 70,000. இது ப‌க்க‌விளைவுக‌ளில் உயிர் இழ‌ந்தோரின் எண்ணிக்கையைச் சேர்க்காத‌து.

Krakatau, Indonesia

1883இல் ஜாவா மற்றும் சுமாத்ராவுக்கு இடையே இருக்கும் Krakatoa வில் எரிமலை வெடித்தது. எரிமலையின் சீற்றம் மூவாயிரம் மயில்களுக்கு அப்பால் இருக்கும் மொரீசியஸில் வசிக்கும் மக்களுக்குக் கேட்கும் அளவுக்கும் படு பயங்கரமாக இருந்ததாம்.200 மெகாடன் டிஎன்டி சக்தி கொண்டது இந்த வெடிப்பு.ஓகே எல்லாரும் செய்யும் ஒப்பிடலையே நானும் செய்கிறேன்.ஹீரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டு போல 13,000 மடங்கு சக்திவாய்ந்தது.ஐரோப்பா முழுவதும் சிவப்பு நிற சாம்பலை இது அள்ளித்தெளித்தது. இதுவே எட்வார்ட் மன்ச் வரைந்த The Scream என்னும் ஓவியத்துக்கு காரணமாக இருந்தது.

Katmai, Alaska

1912இல் Katmaiஇல் இருக்கும் Novarupta என்கிற எரிமலை அறுபதி மணிநேரத்துக்கும் மேலாக புகை கக்கியது. 40 சதுர மைல்கள் சாம்பலை இது கக்கித்தீர்த்தது.இது தான் நமக்கு தெரிந்த வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த எரிமலையாகும். செயின் ஹெலனின் சீற்றத்தை விட நாற்பது மடங்கு சக்திவாய்ந்தது. ஆனால் யாரும் வாழாத பகுதியில் இந்த எரிமலை இருப்பதால் உயிரிழப்பு ஏதுமில்லை. எரிமலை வெடிப்புக்குப் பின் எரிமலையைச் சூழ்ந்த பகுதியை பூங்காவாக மாற்றினர். 1915இல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எஞ்சியிருக்கும் பாதிப்பைக் காட்டுகிறது.

Pinatubo, Philippines

இருபதாம் நூற்றாண்டில் காட்மாய்க்கு அப்புறம் இரண்டாம் இடத்திலிருக்கும் மிகுந்த சக்திவாய்ந்த எரிமலை சீற்றம் இதுதான்.ஆனால் உயிரிழப்பு மிக அதிகம். 1991இல் ·பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கரையோரம் இருக்கிற Luzon என்கிற தீவின் Mount Pinatubo என்கிற எரிமலை வெடித்தபொழுது ஏற்பட்ட உயிரிழப்பு மொத்தம் 800. எரிமலை வெடித்த பொழுது மிகச்சரியாக அதே நேரத்தில் புயல் ஒன்று தாக்கியது. விளைவு: சாம்பல் மற்றும் லாவா தீவு முழுவதும் மழையெனப் பொழிந்து நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றது. இயற்கையின் சக்தி வினோதமானது.

Kilauea, Hawaii

ஹவாய் தீவு ஒன்றோடு ஒன்று தொடர்புடைய எரிமலைகளால் ஆனது. ஆனால் அவையெல்லாம் தூங்கியபடிதான் இருந்தன. ஆனால் 1983இல் Kilauea குமுற ஆரம்பித்தது. இன்று வரை நிறுத்தவில்லை. இதனால் பூமியின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலை என்று பெயரெடுத்திருக்கிறது இந்த எரிமலை. Kilauea என்றாலே துப்புவது அல்லது பரப்புவது என்று அர்த்தமாம். எரிமலையிலிருந்து புறப்படும் குழம்பு பசிபிக் பெருங்கடலில் சென்று இணைகிறது. இது மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக மாறிவிட்டதாம். சூரிய அஸ்தமனத்தின் பொழுது எரிமலைக் குமுறலைப்பார்க்க மக்கள் கூடிவிடுவார்களாம்.

Mount St. Helens, Washington

அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான இந்த எரிமலைச்சீற்றம் அதன் மூதாதயர்களை விட சிறியதாக இருந்தாலும் இது மூன்று பில்லியன் இழப்பை ஏற்படுத்தி 57 பேரைக்கொல்லவும் செய்தது. நூறு வருடங்களாகத் தூங்கிக்கொண்டிருந்த இந்த எரிமலை 1980இல் சீற்றம் கொண்டது. இதன் புகை 80,000 அடிக்கு உயர்ந்தது.

Eyjafjallajokull, Iceland

Eyjafjallajokull எரிமலையிலிருந்து வெளியேறிய புகையும் சாம்பலும் மிக உயரத்தில் எழும்பி தெற்கு பக்கமாகத் திரும்பி இங்கிலாந்தின் பகுதிகளிலும் ஐரோப்பாவின் பகுதிகளிலும் சென்று தேங்கியது. இதனால் கண்டம் முழுவதும் விமானப்போக்குவரத்து பாதித்தது.

மேலும் சில எரிமலைச் சீற்றங்கள்:
Mt. Pelee Martinique 1902,
Ruiz Columbia 1985,
Unzen Japan 1792,
Laki Iceland 1783,
Kelut Indonesia 1919,
Galunggung Indonesia 1882,
Vesuvias Italy in 1631 & 79 CE.
Yellow stone

Thanks: Newsweek.