எரிமலை புகை விமானங்களுக்கு ஏன் மிகவும் அபாயகரமானது?

ஐஸ்லாந்தில் இருக்கும் Eyjafjallajoekull எரிமலை கக்கும் புகையால் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் ஏனைய விமானநிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. சென்ற வியாழக்கிழமையிலிருந்து ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 64000 விமானங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. மில்லியன் கணக்கில் பயணிகள் ஏதும் செய்ய இயழாமல் தவிக்கின்றனர். பயணிகளுக்காக வருத்தப்படும் இந்நேரத்தில், விமானங்கள் தடை செய்யப்பட்டது சரியானதே என்று தோன்றுகிறது; ஏனென்றால் எரிமலைப் புகை விமானிகளின் பார்வைத்திரனைப் பாதிப்பதோடு மட்டுமில்லாமல் இன்னும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எரிமலைப்புகை பார்ப்பதற்கு சாதாரண மேகம் போலவே இருப்பதுதான் மிக முக்கியமான பிரச்சனை.கண் பார்வைக்கு மட்டுமில்லை ராடார் பார்வைக்கும் அப்படித்தான் தெரியும்.கண்ணுக்கு எரிமலையின் சாம்பல் தெரியாமல் போனாலும் அவற்றுள் மறைந்திருக்கும் ரசாயனங்கள் விமானத்திற்கு பாதகம் ஏற்படுத்தும்.

விமானத்தின் ஜெட் இஞ்சின் வழியாக உள்ளே புகும் காற்றில் எரிமலைப்புகை இருந்தால் அது எஞ்சினை பழுதடையச்செய்யும். எரிமலை புகையில் இருக்கும் சாம்பலில் பவுடர் போலவும் சின்னச்சின்ன மணல் துகள் போலவும் இக்ஜீசியஸ் பாறைகள் கலந்திருக்கின்றன. விமானத்தின் ஜெட் இஞ்சினின் உள் இருக்கும் வெப்பநிலை 1832 ·பாரன்ஹீட் டிகிரீஸ். இந்த வெப்பநிலையில் அந்த இக்னீசியஸ் பாறைகள் சட்டென உருகிவிடும்.

டர்பைன் வேன்ஸ் (turbine vanes) என்கிற பாகம் தான் விமானத்தை செலுத்தும் ப்ரப்பலருக்குச் செல்லும் காற்று விகிதத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த டர்பைன் வேன்ஸில் உருகிய இக்னீசியஸ் பாறைகள் ஒட்டிக்கொண்டு இன்ஜினை சுத்தமாக நிறுத்திவிடும்.

குறைந்த அளவில் இந்த எரிமலைப் புகை விமானத்தின் மின் சக்தியை பாதித்து விமான கட்டுப்பாட்டுத் தளத்தை பாதித்துவிடும் அபாயம் இருக்கிறது. எரிமலைப்புகை மேகத்தை சாதாரண மேகம் தான் என்று நினைத்து உள்ளே சென்றுவிட்ட பிறகு பார்வை கடுமையாகப் பாதிப்படைந்து விமானிகள் விமானத்தின் வழித்தடத்தை சரியாக கணிக்க இயலாமலும் போய்விடும்.

சில சம்பவங்கள்:
1. 1980இல் 727 மற்றும் DC-8 விமானங்கள் தனித்தனியாக வாஷிங்டனில் இருக்கும் செயின் ஹெலன் எரிமலையிலிருந்து வந்த புகையில் மாட்டிக்கொண்டன. விமானத்தின் முன் கண்ணாடி உடைந்து போனது. இரண்டு விமானங்களும் பாதுகாப்பாகத் தரையிறங்கின.

2.1982 இல் இந்தோனேசியாவில் இருக்கும் Galunggung என்கிற எரிமலைப்புகையில் பல 747கள் சிக்கிக்கொண்டன. கோலாலம்பூரிலிருந்து ஆஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த ஒரு விமானத்தில் நான்கு என்ஜின்கள் செயலிழந்து விட்டன. 36000 அடியிலிருந்து 12500 அடிவரை திடுமென கீழிறங்கிய அந்த விமானத்தின் இன்ஜின் பிறகு முழித்துக்கொண்டது. என்ஜின் பழுதடைந்தாலும் பாதுகாப்பாகத் தரையிறங்கியது அந்த விமானம்.

3.1989இல் புத்தம்புதிய 747-400 Anchorageஇல் இருக்கும் Mt.Redoubtஇன் புகையில் சிக்கிக்கொண்டது. புகை என்ஜினுக்குள் சென்றவுடன் புகையாக மாறினாலும் விமானம் பாதுகாப்பாக Anchorageஇல் தரையிறங்கியது.

இதுபோன்ற சம்பவங்களால் பாதுகாப்பாக விமானங்களை தடைசெய்வது சரியான முடிவாகத்தோன்றுகிறது. எனினும் இன்று ஜெர்மனியின் லுப்தான்சாவும், டச்சின் KLM, ப்ரான்சின் ஏர் ப்ரான்ஸ் மற்றும் ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் சோதனை விமானங்களை அனுப்பியது. ஏதும் பிரச்சனை ஏற்படவில்லை. விமானங்கள் பறக்கத்தயாராக இருக்கின்றன.

போனவருடம் recessionஇல் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்தே இன்னும் பல விமான கம்பெனிகள் மீண்டு வராத நிலையில் இப்பொழுது இந்த எரிமலை குழப்பக்கங்கள் அவர்களுக்கு மேலும் பெரிய இழப்பை ஏற்படுத்தும். ஒரு நாளுக்கு 200 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று கணித்திருக்கின்றனர்.

தற்பொழுது எரிமலைப்புகை வடகிழக்காக திரும்பியிருப்பதால் நாளை மதியம் ஐரோப்பாவில் சில விமானநிலையங்கள் திறக்கப்படலாம் என்று நம்புகின்றனர். நாளை மதியம் Eurocontrol ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்திருக்கிறது. அதற்கப்புறமே முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Boston.com வெளியிட்டிருக்கும் அற்புதமான படங்கள் இங்கே இருக்கின்றன.

Thanks:MSNBC

என‌க்கு பிடித்த‌ சில‌ சினிமா காட்சிக‌ள்-3

Se7en படத்தில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான காட்சி இது. க்ளைமேக்ஸ். ஹாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான மூன்று நடிகர்கள் இருக்கும் காட்சி இது. கெவின் ஸ்பேஸி, மார்கன் ·ப்ரீமேன் மற்றும் ப்ராட் பிட்.

எனக்குத் தெரிந்து அந்நியனுக்கான இன்ஷ்பிரேஷன் ஷங்கருக்கு இந்தப்படத்திலிருந்து தான் கிடைத்திருக்க வேண்டும். அந்நியனின் ஒரு பகுதி மட்டும். அந்நியன் கொலைகள் செய்வதற்கான காரணமும் அவன் கொலை செய்யும் முறையும் இந்தப்படத்தில் அப்படியே இருக்கின்றன. செவன் கிறிஸ்தவ மத நம்பிக்கையைச் சார்ந்தது. அந்நியன் இந்து மத நம்பிக்கையைச் சார்ந்தது. நான் அப்பவே சொன்னேன் அந்நியனின் ஒரு பகுதி மட்டும்தான் என்று. அந்நியனின் மீதமிருக்கும் பகுதி: மல்டிபில் பர்சனாலிட்டி. ஷிட்னி ஷெல்டன் எழுதிய டெல் மி யுவர் ட்ரீம் நாவல் படித்துப்பாருங்கள். அந்நியன் போதும். காக்க காக்கவுக்கும் இந்தப்படத்துக்கும் ஒரு முக்கியமான சம்பந்தம் உண்டு. படம் பாருங்கள் தெரியும். ப்ராட் பிட்டுக்கு மிக முக்கியமானதொரு படம் இது.

இந்தப்படத்தில் நிறைய காட்சிகள் மிக நன்றாக இருக்கும். அதில் எனக்குப் பிடித்த எனக்குக் கிடைத்த காட்சிகள் சில:

Title:

மார்கன் ·ப்ரீமேன் ப்ராட் பிட்டின் வீட்டுக்கு டின்னர் சாப்பிட வருவார். அப்பொழுது ப்ராட்பிட்டின் வீட்டுக்குப் பக்கத்தில் மெட்ரோ ரயில் பாதை இருக்கும். ஒவ்வொரு முறை ரயில் போகும் போதும் ப்ராட் பிட்டின் வீடு ஆடும். டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது ரயில் போக டின்னர் டேபிள் ஆட மார்கன் ·ப்ரீமேன் ஒரு கமென்ட் அடிப்பார்: “a nice soothing house..” என்று சொல்லிவிட்டு அவ்வளவு அழகாகச் சிரிப்பார். Thats what I call acting! அருமையான படம்.

ப‌ராக் ஒபாமா: செவ்வாய் கிர‌க‌த்துக்கு ம‌னித‌னை அனுப்பிவைப்போம்

2025க்குள் நில‌வைத் தாண்டி மேலும் செல்ல‌ விண்க‌ல‌ம் க‌ண்டுபிடித்துவிடுவோம் என்று ப‌ராக் ஒபாமா கூறியுள்ளார். ப‌ல‌ ப‌ட்ஜெட் க‌ட்டிங்குகளுக்கு அப்புற‌ம் இது நாசா விஞ்ஞானிக‌ளின் வ‌யிற்றில் பாலை வார்க்கும் ஒரு செய்தியாகும். பூமிக்குப் ப‌க்க‌த்தில் நில‌வை விட‌ தொலைவில் இருக்கும் விண்க‌ல்லுக்கு முத‌லில் ம‌னித‌னை அனுப்புவ‌தும் பிற‌கு செவ்வாயைச் சுற்றி வ‌ர‌ ம‌ட்டும் அனுப்புவ‌தும் பிற‌கு செவ்வாயில் ம‌னித‌ன் இற‌ங்குவ‌த‌ற்கு விண்க‌ல‌ம் அனுப்ப‌வும் திட்ட‌ம் இருப்ப‌தை ஒபாமா இன்று அறிவித்திருக்கிறார். விரைவில் செவ்வாயில் ம‌னித‌ன் த‌ரையிற‌ங்கி ப‌ல‌ ஆராய்ச்சிக‌ள் செய்வ‌தை பார்க்க‌முடியும் என்று நினைக்கிறேன். கென்ன‌டி 1961 இல் இன்னும் ப‌த்து வ‌ருட‌ங்க‌ளில் ம‌னித‌னை நில‌வுக்கு அனுப்புவோம் என்று சொன்ன‌தையும் 1969இல் ம‌னித‌ன் நில‌வுல் கால‌டி எடுத்துவைத்த‌தும் நினைவிருக்க‌லாம்.

இன்னும் எத்த‌னை கால‌த்துக்குத் தான் ராக்கெட்டிலே ப‌ய‌ண‌ம் செய்துகொண்டிருப்ப‌து? 2025க்குள் வார்ம்ஹோல் க‌ண்டுபிடித்து ட‌க்குன்னு மார்ஸுக்கோ வேறு தூர‌மான‌ கிர‌க‌ங்க‌ளுக்கோ அல்ல‌து தொலைவில் இருக்கும் ந‌ட்ச‌த்திர‌த்துக்கோ சென்றுவிட‌வேண்டுமெ. வார்ம்ஹோல் என்ப‌து அண்ட்த்தில் இருக்கும் ஒரு குறுக்குப்பாதை. ஒரு இட‌த்தில் இருந்து வெகு வெகு தூர்த்தில் இருக்கும் ம‌ற்றொரு இட‌த்திற்கு எளிதாக‌ செல்ல‌ உத‌வும் ஒரு பால‌ம்.

வார்ம் ஹோல் இன்னும் ஆதார‌ப்பூர்வ‌மாக‌க் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட‌வில்லை. ஆனால் ஜென‌ர‌ல் ரிலேட்டிவிட்டியின் ப‌டி வார்ம் ஹோல் என்ப‌து சாத்திய‌மே. கார்ல் சாக‌ன் எழுதிய‌ கான்ட்டாக்ட் நாவ‌ல் ப‌டித்திருக்கிறீர்க‌ளா? அல்ல‌து ஜோடி ஃபாஸ்ட‌ர் ந‌டித்த‌ கான்ட்டாக்ட் ப‌ட‌ம் பார்த்திருக்கிறீர்க‌ளா? அதில் வார்ம்ஹோல் ப‌ய‌ன் ப‌டுத்தித்தான் ந‌ம் சூரிய‌ குடும்ப‌த்திலிருந்து லைரா ந‌ட்ச‌த்திர‌க்குடும்ப‌த்தில் இருக்கும் வேகா என‌ப்ப‌டும் ந‌ட்ச‌த்திர‌த்துக்கு போவார் ஜொடி ஃபாஸ்ட‌ர்.

இன்னும் ச‌ரியாக‌ புரிந்துகொள்ள‌ வேண்டுமாயின் இர‌ண்டு ப‌ரிமான‌த்தில் அண்ட‌த்தை மேலும் கீழுமாக‌ வ‌ளைந்து இருக்கும் ஒரு துணிபோல‌ நினைத்துக்கொள்ளுங்க‌ள்; மேலிருக்கும் துணியின் மேலேயே ப‌ய‌ண‌ம் செய்து கீழிருக்கும் துணியை அடைவ‌த‌ற்குப் ப‌திலாக‌, மேலிருக்கும் துணியில் ஒரு துளையை ஏற்ப‌டுத்தி கீழிருக்கும் துணிக்கு ட‌க்கென்று செல்ல‌முடியும‌ல்ல‌வா? அந்த‌ துளையும் துளை ஏற்ப‌டுத்திக்கொடுக்கும் பாதையும் தான் வார்ம்ஹோல். எப்ப‌டி ஒரு புழு மாம்ப‌ழ‌த்தைத் துளைத்து ம‌ற்றொரு புற‌ம் வ‌ருகிற‌தோ அது போல‌!
 

மேலே இருப்ப‌து லோர‌ன்ட்சிய‌ன் வார்ம்ஹோல் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் நாம் பார்த்த‌ ஒரு வ‌கையான‌ பால‌ம். இன்னும் யாரும் க‌ண்டுபிடிக்க‌வில்லை என்ப‌தை நினைவில் கொள‌க. க‌ண்டுபிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு நோப‌ல் ப‌ரிசு நிச்ச‌ய‌ம்!

என‌க்கு பிடித்த‌ சில‌ சினிமா காட்சிக‌ள்-2

Munich. (IMDB)

ம்யூனிக் திரைப்ப‌ட‌த்தில் வ‌ரும் காட்சி.முழுப்ப‌ட‌மே அருமையாக‌ இருக்கும் என்றாலும், இந்த‌ காட்சி தான் ப‌ட‌த்தின் க‌ரு. மேலும் த‌க‌வ‌ல்க‌ளுக்கு இங்கே பாருங்க‌ள்.

ம்யூனிக் ஒலிம்பிக்ஸில் இஸ்ரேலிய‌ விளையாட்டு வீர‌ர்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்ட‌த‌ற்குப் பிற‌கு இஸ்ரேல் ர‌த்த‌துக்கு ர‌த்த‌ம் என்று முடிவு செய்து இந்த‌ ப‌டுகொலைக‌ளுக்குக் கார‌ண‌மான‌ ப‌தினோரு ந‌ப‌ர்க‌ளைத் தேடிப்பிடித்துக்கொல்ல‌ த‌னிப்ப‌டை அமைக்கிற‌து. என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ப‌து ப‌ட‌ம்!

கீழே இருக்கும் வீடியோ ஒலிம்பிக்ஸ் வீர‌ர்க‌ளைப் பிணைக்கைதிக‌ளாக‌ ஆக்குவ‌தைக் காட்டுகிற‌து.

பின்ன‌னி இசையும் ந‌ன்றாக‌ இருக்கும்!

அடுத்த‌ வீடியோ போன‌ஸ்! 🙂

இஸ்ரேலின் ப‌ழிவாங்க‌ல் நட‌வடிக்கையின் முத‌ல் கொலை.

Do you know why we are here?

(More to come)

என‌க்கு பிடித்த‌ சில‌ சினிமா காட்சிக‌ள்-1

From Godfather.

But you don’t ask with respect. You don’t offer friendship. You don’t even think to call me Godfather. Instead, you come into my house on the day my daughter is to be married, and you ask me to do murder for money.

Good. Someday, and that day may never come, I’ll call upon you to do a service for me. But until that day – accept this justice as a gift on my daughter’s wedding day

.

I buy you you don’t buy me out

fredo, you’re mine older brother and i love you, but don’t ever takes side with anyone against the family again….ever.

I’m going to make him an offer he can’t refuse.

(more to come)