என் உயிர்த் தோழன் – 6

6

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரப்போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்

க்ளாஸ் ரூம். ஐ திங் இட் வாஸ் அ மேக் சி·ப்ட் க்ளாஸ் ரூம். நாளைக்கு ஏதோ எக்ஸாம். நாங்க எல்லாம் படிச்சிட்டு இருக்கோம். நான் எப்போதுமே கீழ உக்காந்து தான் படிப்பேன். இன்னிக்கும் அப்படித்தான் படித்துக்கொண்டிருக்கிறேன். சித்தார்த் மேலே பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறான். இன்டர்வெல். எழுந்து செல்கிறேன்.

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே

அவன் டெஸ்க்கு முன்னால் நின்று கொள்கிறேன். அவனிடம் பேசுகிறேன். அவன் ஏதோ சொல்கிறான். எனக்கு கேட்கவில்லை. மீண்டும் சொல்கிறன். எனக்கு கேட்கவில்லை.

வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் திளைக்கிறேன்
காதலால் நானும் ஒர் காற்றாடி ஆகிறேன்.

என் கால் மேல ஏறி நிக்கிற கீழ இறங்கு லூசு. ஓவ்..சாரி சித்தார்த்..நான்..

வெள்ளிக்கம்..ஹாங்..ஹாங்..
வாட் டூ யூ விஷ் டு ஹாவ் மேம்
ஹாங்
வெஜ் ஆர் நான்-வெஜ்
நான் வெஜ்
ஓகே. வுட் யூ லைக் டு ஹேவ் சிக்கன் ஆர் ..
நோ நோ..ஐ ஆம் வெஜ்…ப்ளீஸ் கிவ் மீ வெஜ் மீல்ஸ்

தூங்கியிருக்கிறேன். நன்றாக தூங்கியிருக்கிறேன். சீட்டில் நன்றாக சாய்ந்து கொண்டு எனக்கெதிரே இருந்த திரையில் சேனலை மாற்றி விமானம் எங்கே பறந்துகொண்டிருக்கிறது என்று பார்த்தேன். அட்லான்டிக் பெருங்கடலில் எங்கோ ஒரு புள்ளியில் சென்று கொண்டிருந்தது விமானம். இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது. நியுயார்க் செல்வதற்கு.

நியுயார்க்கில் பிடியாட்ரிக்ஸ் போஸ்ட் க்ராஜுவேஷன் பண்ணப்போகிறேன். அங்கே என் சித்தி இருக்கிறார். அவர் வீட்டில் தற்சமயம் தங்கிக்கொள்வதாக ப்ளான். எப்படியும் ஒரு வருடம் இருப்பேன். அந்த ஏர்ஹோஸ்டஸ் சிரித்துக்கொண்டே ப்ரேக்பாஸ்ட் கொடுத்தாள். வரண்ட ரொட்டியைப் பிரித்து நிதானமாக பட்டர் தடவினேன். ஜாம் தடவினேன். இன்னும் கொஞ்ச காலத்துக்கு ரொட்டி தான்.

சித்தப்பா விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவருடைய பெரிய வேனில் ஏறிக்கொண்டேன். ரொம்ப தூரம் வேன் சென்றுகொண்டேயிருந்தது. அவர் அப்பாவைப் பற்றியும் குடும்பத்தை பற்றியும் நிறைய கேட்டுக்கொண்டே வந்தார். அகல அகலமான ரோடுகள். பெரிய பெரிய கட்டிடங்கள். பிறகு மீண்டும் அகலமான ரோடுகள். பெரிய பெரிய காலியிடங்கள். வெற்றிடங்கள். பின் மீண்டும் அகலமான ரோடுகள்.

ஒரு மணி நேரம் கழித்து ஒரு சின்ன டவுனுக்குள் நுழைந்தோம். கொஞ்சம் சுற்றலுக்குப் பின் மீண்டும் பெரிய ரோடுகளைக் கடந்து வரிசையாக நின்றுகொண்டிருக்கும் வீடுகளுக்கு அந்துசேர்ந்தோம். பெரிய பெரிய வீடுகள். என் சித்தியும் அவருடைய சின்னப்பையனும் நின்று கொண்டிருந்தார்கள். சித்தி ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.

ரொம்ப நேரம் பேசி களைத்த பிறகு மீண்டும் பேசத்தொடங்கினோம். இந்தியாவைப் பற்றி பேசினால் அதற்கொரு முடிவே இருக்காது போல. பழங்கதைகள். அவ்வாவைப் பற்றிய கதைகள். எனக்கு மொட்டை போட்டது முதற்கொண்ட கதைகள். சித்தப்பா நாளை முதல் ட்ரெயினில் எப்படிப் போவது என்கிற பெரிய போரிங் லெக்ச்சர் கொடுத்தார். ரொம்பவும் காம்ப்ளக்ஸ் போல. எனக்கு எதுவுமே மண்டையில் ஏறவில்லை. நாளை ஒரு நாள் என்னுடன் ட்ரெயினில் வருவதாக சொன்னார்.

லைப் இன் யூஎஸ் இஸ் ஸோ டி·பரண்ட். இந்தியாவிலும் எங்கள் வீடு மிகப்பெரியதாக இருக்கும் என்றாலும் இவ்வளவு வசதிகள் கொண்டதாகவும் இவ்வளவு ஸ்டைலாகவும் இல்லை. எனக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் என்னுடைய லக்கேஜ்ஜை வைக்க சித்தப்பா ரொம்பவே சிரமப்பட்டார். கொஞ்ச நேரம் தூங்கு என்றதும், டப்பென்று போய்ப் படுத்துக்கொண்டேன்.

நிம்மதியான தூக்கம். எழுந்து கீழே போய் சாப்பிட்டுவிட்டு வந்தேன். மீண்டும் தூக்கம்.

எழுந்தபோது மணி என்னவென்று தெரியவில்லை. லக்கேஜ்ஜை பிரிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. எனிவே மணி என்னவென்று பார்த்தேன். இரவு இரண்டு மணி. வீட்டிற்கு பேசவேண்டும் போல இருந்தது. எப்படி பேசுவது என்றுதெரியவில்லை. லக்கேஜ் எடுத்து பிரித்து எனக்கு கொடுக்கப்பட்டிருந்த அலமாரியில் அவற்றை அடுக்கினேன். நாளைய இன்டர்வியூவுக்கு போட வேண்டிய ட்ரஸ் எடுத்து வைத்தேன். சர்ட்டிபிக்கேட்ஸ் டாக்குமென்ட்ஸ் எடுத்துவைத்தேன். மீண்டும் பெட்டில் வந்து உட்கார்ந்து கொண்டேன். தலையனையில் சாய்ந்து கொண்டேன். கால்களை நன்றாக நீட்டிக்கொண்டேன். கைகளை நெஞ்சுக்கு குறுக்காக வைத்துக்கொண்டேன்.

அன்றைய இன்டர்வியூ சரியாகப் போகவில்லை. நான்கு எக்ஸாம் வேறு எழுத வேண்டும். எக்ஸாமுக்கு ப்ரிப்பேர் பண்ணுவதே மிகப்பெரிய வேலையாகிப்போனது. வெதர் வேறு சரியில்லை. நல்ல குளிர். இது போல குளிரை நான் பார்த்ததில்லை. குளிருடன் சண்டைபோடுவதுதான் மிகப்பெரிய வேலை. இருக்கும் வேலைகளை செய்வதற்கு எனக்கு நேரம் போதவில்லை.

முழுதாக எட்டு மாதங்கள் ஓடி விட்டன. நான் நியூயார்க் வந்து எட்டு மாதங்கள் ஓடிவிட்டன. எனக்கு இங்கே ஒரு யுனிவர்ஸிட்டியில் இன்டர்ன்ஷிப் கிடைத்துவிட்டது. அதே யுனிவர்ஸிட்டியில் பிடியாட்ரிக்ஸ¤ம் கிடைத்துவிட்டது. கொஞ்சம் ப்ரண்ட்ஸ் கிடைத்திருக்கிறார்கள்.

எனக்கு கொடுக்கப்பட்ட லெப்டாப்பில் என் வேலை போக மீதமிருந்த நேரத்தில் ஈமெயில் அனுப்பக் கற்றுக்கொண்டேன். சாட் செய்யவும் கற்றுக்கொண்டேன். அமெரிக்க இந்திய தோழிகள் சிலரது ஆலோசனையின் பேரில் ஆர்குட்டிலும் மெம்பர் ஆகிவிட்டேன். எனக்கு பெரும்பாலும் நைட் டூட்டி தான் இருக்கும். டூட்டி முடிந்து வருவதற்கு மறுநாள் காலை பதினோரு மணி ஆகிவிடும். அதற்கப்புறம் நன்றாக தூங்கிவிடுவேன். முழு நாளும் தூக்கம் தான். சில நேரம் வீட்டுக்குப் போகணும் போல இருக்கும். சில நேரம் நான் படித்த பள்ளிக்கு செல்லவேண்டும் போல இருக்கும். வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பெண்களுடை எடுத்தவனே
தங்கக் குடை கொடுத்தவனே
ராசலீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே

என் அண்ணனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. எனக்கு பார்க்கவேண்டும் போல இருக்கிறது.

மோகனங்கள் பாடி வந்து
மோகவலை விரித்தாயே
மோகனங்கள் பாடி வந்து
மோகவலை விரித்தாயே

அவளுடைய ·போட்டாவை யாகூவில் பார்த்தேன். கொள்ளை அழகு. அப்படியே அள்ளிக்கொள்ளலாம் போல இருந்தது.

சேலைகளைத் திருடி – அன்று
செய்த லீலை பல கோடி

சம் டே ஐ வில் கோ டு இந்தியா அன் ஹாவ் ஹெர் இன் மை ஹேண்ட்ஸ். தூங்குதற்கு முன் ஒரு முறை மெயில் செக் பண்ணிவிட முடிவு செய்தேன்.

வானில் உள்ள தேவரெல்லாம்
போற்றிப்பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே..

Orkut – Muthu has written you a scrap book entry.
முத்து என்கிற யாரோ ஒருவன் எனக்கு ஆர்குட்டில் மெஸேஜ் அனுப்பியிருந்தான்.

“You have exactly the same name of my friend: Ramya Rajagopal. Just a Hi from me!”

பூ முத்தம் தந்தவனே
வந்தாய் கோபாலனே..
பூ முத்தம் தந்தவனே

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் போபாலனே
பூ முத்தம் தந்தவனே..

ஐ ஸ்டாப்ட் மை சிடி ப்ளேயர். ஹ¥ இஸ் திஸ் கை? ஐ ச்செக்ட் ஹிஸ் ப்ரெ·பைல்.

(தொடரும்)

என் உயிர்த் தோழன் – 5

5
மீண்டும் அவனுடைய அப்பா.

“சார்..சீ.சாரி.. அங்கிள்..நான் ரம்யா பேசறேன். சித்தார்த் இருக்கானா..சீ..இருக்காங்களா”
“அடடே..ரம்யாவா? அப்ஸர்வேசன் நாட்புக்க நீயே வெச்சுக்குவியாம். அப்புறம் காலேஜில வந்து வாங்கிக்கிறானாம்”
“அப்சர்வேசன் நோட்? ஓ..ஓகே அங்கிள். சித்தார்த்..”
“சித்தார்த்துக்கு நேத்துலருந்து கொஞ்சம்..கொஞ்சம் என்ன நெறயவே டயரியா..ஆஸ்பத்திரியில இருக்கான்.டாக்டர் ஒரு நாள் தங்கிட்டு போங்கன்னு சொல்லிருக்கார்..நான் இப்போதான் வீட்டுக்கு வந்தேன். நீ கால் பண்ணுவ.. பண்ணினா ஒன்னும் அப்ஸர்வேசன் நோட்டுக்கு ஒன்னும் அவசரமில்லன்னு சொல்லச்சொன்னான்”
“அங்கிள்..சித்தார்த்.. இப்போ எப்படி இருக்கான்?”
“அதான் சொன்னேனே நல்லாயிருக்கான்ம்மா..பத்துபதினோறு மணிக்கெல்லாம் டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்கன்னு நினைக்கிறேன்”.
“அங்கிள்..அங்கிள் எந்த ஹாஸ்பிடல்?”
“திருமங்கலம். தருண் கிளினிக்ம்மா”
“ஓகே அங்கிள். தாங்க்ஸ்”

“அம்மா”
“நான் சிந்து வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா?”
“ஏன்? இந்நேரத்திலயா?? நீ போக மாட்டியே? அவ தான எப்பவும் வருவா?”
“ம்ம். அவளுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலையாம். டயரியாவாம்”
“என்னாச்சு அவளுக்கு? அண்ணன அவ வீட்ல ட்ராப் பண்ணச்சொல்றேன். போயிட்டுவா”
“அவ்வா”
“நான் சொல்லிக்கிறேன்”

அண்ணன எப்படி சமாளிக்கிறதுன்னு நான் யோசிச்சிட்டிருந்தப்போதான், அவனே என்னை தெருமுக்கில இறக்கிவிட்றதா சொன்னான். நல்லதாப்போச்சு. சிந்து வீட்ல இருந்து கொஞ்ச தூரத்தில தான் இருக்கு க்ளீனிக். அக்சுவலா எங்க ஸ்கூலுக்கு பக்கத்தில தான் இருக்கு. ம்ம்..நாங்க படிச்ச ஸ்கூலுக்கு பக்கத்தில தான் இருக்கு. சிந்துவீட்டுக்கு போயிட்டு அவளையும் கூட்டிட்டு போகலாமா? இல்ல நாமளே தனியா போகலாமா? சிந்துவக்கூப்பிட்டா அவ நீ எதுக்கு இவ்ளோ மெனக்கெடுறன்னு கேப்பா. என்ன பதில் சொல்றது. நானே தனியா போறதுன்னு முடிவெடுத்தேன்.

“இங்க சித்தார்த்ன்னு..”
“நேர போய் லெப்ட்ல திரும்பும்மா. ரூம் நம்பர் 89”
“சரிங்க”

நான் வேகவேகமா நடந்து திரும்பறதுக்கும் கௌரி என் மேல மோதறதுக்கும் கரெக்ட்டா இருந்தது.

“அக்கா. நீங்க எங்க இங்க?”
“கௌரி..நீ”
“இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தானே சும்மா தான இருக்கேன்னுட்டு அப்பா கூட ஹாஸ்பிட்டல் வந்தேன்”
“ஓ..ஓகே”
“அக்கா யூ வில் பி சர்ப்ரைஸ்ட். உங்களுக்கு ஒன்னு தெரியுமா?”
“என்ன?”
“சித்தார்த் ஞாபகம் இருக்கா? ஸ்கூல்ல உங்க ப்ரண்ட்”
“ஆங்… ஞாபகம் இருக்கு”
“அவர் இங்க தான் இருக்கார். டயரியா. போய் பாருங்க ரூம் நம்பர் 89”
“ஓ இஸ் இட்?” “ஓகே நான் போய் பாக்கறேன்”
“ஓகே அக்கா. BYE.”
“BYE”

“ஆமா அக்கா நீங்க எதுக்கு வந்தீங்க..”
“ம்ம்..சும்மா தான்..”

கௌரியோட அப்பாதான் இங்க டாக்டர். என்னை ரொம்ப நல்லா தெரியும். எல்லார் கிட்டயும் உண்மை சொல்லிருந்தாக்கூட ஒன்னும் இல்ல. ஹ்ம்ம்..யாராவது பாத்து கேட்டா என்ன சொல்றது?

டக் டக் டக்
வாம்மா..நீ..
நான் ரம்யாம்மா..சித்தார்த்தோட க்ளாஸ்மேட்..
ஓ..உள்ளவாம்மா..எப்படிம்மா இருக்க
நல்லாயிருக்கேன்ம்மா
சித்தார்த் இங்க இருக்கறது அதுக்குள்ள உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருச்சா.
ஜஸ்ட் இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தேன்..கௌரி சொன்னா..
ஓ..கௌரி சொன்னால? இங்க தான் இவ்ளோ நேரம் இருந்தா..இப்போத்தான் தூங்கினான்..வயிறு பெயின் இருக்கும் போல..எழுப்பட்டும்மா
..
எழுப்பட்டும்மா
..
நீ அவன் காலேஜ் க்ளாஸ்மேட்டா?
..
உங்க வீடு எங்க இருக்கு? தூங்கறான்..எழுப்பட்டுமா..

சித்தார்த் ரொம்பவும் ஒல்லியான மாதிரி இருந்தது. முகம் ரொம்பவும் டயர்டா இருந்தது. நான் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். அவனுடைய அம்மா பேசியதை நான் கவனிக்கவில்லை. என் கவனம் முழுவதும் சித்தார்த் மேலேயே இருந்தது. ஏன் எனக்கு அழுகை வருகிறது. அழக்கூடாது. அவன் கைகளைப் பிடித்தேன். ஜில்லென்றிருந்தது. அவன் நல்லா தூங்கிட்டிருந்தான். எழுப்பறேன்னு தான் சொன்னாங்க. ஆனா எழுப்பவில்லை. கைகளில் பள்ஸ் பார்த்தேன். வயிறை தொட்டுப்பார்த்தேன். அவனுடைய அம்மா பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள். பிறகு மீண்டும் பல்ஸ் பாக்குற சாக்கில அவன் மணிக்கட்டில ஒரு கிள்ளு கிள்ளினேன். டப்புன்னு முழிச்சுப்பாத்தான். என்னைப் பார்த்தவுடனே பயந்தே போயிட்டான். பிறகு வந்துட்டியா? நல்லாயிருக்கியாங்கற மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சான். அவ்வளவுதான். எனக்கு அது போதும். தூங்கி நல்லா ரெஸ்ட் எடுடான்னு சொன்னேன். சொல்லல.

சிந்துவின் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக சென்றேன். அந்த தெரு கொஞ்சம் குறுகலான தெரு. காலையில் இட்லி வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது போல
இருந்தது. நான் வேகத்தை கூட்டினேன். இங்கிருந்து பார்க்கும் பொழுது சிந்துவின் வீடு தெரியும். தெரிந்தது. பக்கத்தில் எங்களுடைய காரும் தெரிந்தது.

அமைதியாக உள்ளே நுழைந்தேன். அண்ணன் உட்கார்ந்திருந்தான். சிந்து என்னைப் பாவமாகப் பார்த்தாள். அண்ணன் கிளம்பலாமா என்றான்.

ட்ரிங்
ட்ரிங்
ட்ரிங்
ஹலோ
ரம்..
தயவுசெய்து இனிமே கால் பண்ணாத ப்ளீஸ்
டக்

அந்த ஞாயிற்றுக்கிழமை அவன் மீண்டும் கால் செய்த பொழுது, என் அருகில் வீட்டில் இருக்கும் எல்லோரும் உட்கார்ந்திருந்தனர். ஐ விஷ் ஆர் நாட் ஐ டோல்ட் த சேம் எக்ஸாக்ட் ஸ்டுபிட் லைன்ஸ். சித்தார்த்.. சித்தார்த்.. என்னை மன்னிச்சிடுடா ப்ளீஸ். மன்னிப்பியா. ப்ளீஸ். நான் ஹாஸ்டல்ல தங்கல அதுக்கப்புறம். அப்பா என்னை தினமும் காரில ட்ராப் செஞ்சு ஈவினிங் பிக் அப் பண்ணிடுவார். ஒரு நாள் காலேஜில இருந்து அவன் வீட்டுக்கு நான் டயல் செஞ்சேன். அவனுடைய அப்பா எடுத்தார்.

ஹலோ
ஹலோ
சித்தார்த்
சித்தார்த் இல்லியேம்மா. வெளில போயிருக்கான்.
சரி அங்கிள்.

ஒரு நாள் என்னைத் தேடி ஈவினிங் காலேஜுக்கு வந்திருக்கான். நான் தான் காலேஜில தங்குறது இல்லியே. நான் இல்லைன்னு சொன்னதா என் ப்ரண்ட் சொன்னா. ரொம்ப நேரம் அந்த மரத்தினடியில இருக்கிற அந்த பெஞ்சிலே உட்கார்ந்திருக்கிறான். நான் எப்பொழுதும் அங்கே பார்க்கும் அணிலிடமாவது ஏதாவது அவன் சொல்லிருக்கலாம். மறுநாள் நான் அந்த அணிலை நான் தேடிச்சென்றேன்.

துக்கம் தொண்டையை அடைக்க மீண்டும் அவன் வீட்டுக்கு டயல் செய்தேன். இந்த தொலைபேசி உபயோகத்தில் இல்லை. நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும். மீண்டும் டயல் செய்தேன். மீண்டும் அதே மெசேஜ். அந்த மரத்தினடியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சித்தார்த் ப்ளீஸ் இப்போ வாடா. ப்ளீஸ் இப்போ வாடா. ப்ளீஸ்டா. என்னம்மா க்ளாஸ¤க்கு போகலையான்னு கேட்டது அந்த அணில்.

(தொடரும்)

என் உயிர்த் தோழன் – 4

4
“ஹாய் ரம்யா”
“ஹாய் செல்வா? என்ன இந்தப்பக்கம்”
“சும்மா வந்தேன். வரலாமில்ல”
“ஓ ஸ்யர்”

“உட்காரலாமா?”
“ஓ ஸ்யர்”

“என்ன பண்ணிட்டிருந்த”
“சும்மா..ஜஸ்ட் லைக் தட்”

“சாப்பிட்டாச்சா”
“இப்போ போகலைன்னா எனக்கு சாப்பாடு கிடைக்காது”
“இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடாம டயட்ல இரேன்”

“கேர் ·பார் ஆன் ஐஸ்க்ரீம்”
“ஐஸ்க்ரீம்? நோ செல்வா. ஐ ஹாவ் டு கோ “
“ஜஸ்ட் டென் மினிட்ஸ். ப்ளீஸ்”
“பட்..”
“ப்ளீஸ் ரம்யா.”

“எங்க?”
“ஜஸ்ட் உன் காம்பஸ்ல இருக்கிற க்வாலிட்டி ஐஸ்க்ரீம்முக்கு போவோம்”
….

வழியிலெங்கும் சும்மா எதுனாச்சும் பேசிக்கொண்டே வந்தான். எனக்கு எரிச்சலாக இருந்தது. யாரோ வந்திருக்கிறார்கள் என்று சொன்னதும் என் மனதின் ஓரத்தில் சித்தார்த்தாக இருக்குமோ என்கிற ஆசை இருந்தது. நல்லவேளை ஐஸ்க்ரீம் பார்லர் வேகமாக வந்துவிட்டது.

நான் உள்ளே கால் எடுத்து வைத்ததும், டப் என்றொரு சத்தம் கேட்டது. பலூன் வெடிக்கும் சத்தம். ஹ¥ய் என்று சத்தம். பின் ஹாப்பி பர்த் டே டூ யூ பாடல். கடையில் இருந்த நீல நிற திரையை விலக்கிக்கொண்டு சௌமியா, கணேஷ், இந்திரா, கோபால், ஷீபா எல்லோரும் வந்தனர். கடைசியாக சித்தார்த் வந்தான். இன்று எனக்கு பர்த்டே.

எல்லோரும் சென்று விட்ட பிறகு, சித்தார்த் என்னை காலேஜ் ஹாஸ்டலில் விட்டுவிட வந்தான்.
இருவரும் ஹாஸ்டலுக்கு வெளியே மரத்தினடியில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தோம்.

“எப்படி இருக்க”
“ம்ம்..அஸ் யூ ஸீ”
“யூ ஹேவ் ச்சேஞ்ச்ட் எ லாட்.”
“யூ டூ”
“குட். யூ லுக் குட்.”
“இஸ் இட்? ஓவ் ஓக்கே. அப்பைத்தான் என்னோட கேர்ஸ் ப்ரண்ட்ஸ¤ம் சொல்றாங்க”
“அய்யே..ரொம்ப அலட்டிக்காத..அப்புறம்”
“நத்திங்”
“உன்னோட கேர்ள் ப்ரண்ட்ஸ¤க்கு மத்தில என்னோட பர்த்டே கூட ஞாபகம் வெச்சிருக்கிற”
“ம்ம். ஐ வில்”
“சாப்பிட்டியா”
“இன்னும் இல்ல”
“வீட்டுக்கு எப்படிப் போவ?”
“உனக்கென்ன கவலை?”
“சொல்லுடா”
“வண்டி”
“தள்ளுவண்டியா?”
“ஆமா உங்கப்பா இழுக்கற தள்ளுவண்டிதான்”
“அப்பாவ ஏன் இழுக்கற”
“நான் எங்க இழுக்கறேன். உங்க அப்பா தான் இழுக்கறார் தள்ளுவண்டி”
“ஸ்டுபிட்”
“ம்ம் சரி”
….
….
“நீ என்ன சாப்பிடுவ?”
“என்னவேணுன்னாலும் சாப்பிடுவேன்”
“இன்னிக்கு உங்க கேண்டீன்ல என்ன போடுறாங்க? டெட் பாடி பார்ட்ஸ்ல செஞ்ச ப்ரியாணி தான?”
“உன் மூஞ்சி. ச்சை. உவ்வே”
“மூஞ்சிய கோணலா வெச்சாத்தான் நீ நல்லாயிருக்கிற”
“வாட்” (கோணலா ஒரு சிரிப்பு)
“ஒண்ணுமில்ல”
“அது” (கோணல் சிரிப்பு இன்னும் மாறவில்லை. இமைகள் ஒரு முறை தாழ்ந்து நிமிர்கின்றன. கண்கள் சிரிக்கின்றன.)
“சரி நான் கிளம்பறேன்”
“கிளம்பு” (மெல்லிய சிரிப்பு)
“வர்றேன்”
“வராத” (மிக மெல்லிய சிரிப்பு)
“போயிடுவேன்”
“போகாத”
..
“வா”
..
“உக்காரு”
“உன் வார்டன் திட்டப்போறாங்க”
“திட்டமாட்டாங்க”
“ம்ம். என்ன சொல்லு”
“ஒண்ணுமில்ல”
“இப்பவும் புக்ஸ கட்டிட்டு தான் அழறயா?”
“ம்ம். வாட் எல்ஸ்”
“பாய் ப்ரண்ட்ஸ் வெச்சுக்க வேண்டியதுதான”
“அது இருக்காங்க ரொம்பபேர்”
“ம்ம்ம்.”
“யார செலக்ட் பன்றதுன்னு தான் தெரியல”
“ம்ம்ம்”
“என்ன ம்ம்?”
“யாரையாவது செலக்ட் பண்ணிக்கோ”
“அது எங்களுக்கு தெரியும். ப்ராஸஸ் பண்ணிட்டிருக்கேன்”

“சரி. உனக்கு எத்தனை கேர்ள் ப்ரண்ட்ஸ்”
“மூனு”
“அடப்பாவி. அசால்ட்ட சொல்ற”
“இதுல என்ன இருக்கு”
“பேர் சொல்லு”
“உனக்கெதுக்கு”
“சொல்லுடா”
“முடியாது”
“சொல்லுடா”
“முடியாது போடி”
..
“நான் போட்டா?”
“ம்ம்”
“வார்டன் திட்டுவாங்க”
“ம்ம்” “ஒழுங்கா சாப்பிட்டுட்டு நிம்மதியா படுத்து தூங்கு”
“ம்ம்”
“என்னோட வீட்டு போன் நம்பர் வேணுங்கறவங்க கேட்டு வாங்கிக்கலாம்.”
“ஹை போன் வாங்கியாச்சா”
“ம்ம்”
“சரி நான் ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வரும்போது எனக்கு போன் பண்ணு”
“ம்ம்”
“யர்லி மார்னிங்..ஆறு மணிக்குள்ள பண்ணு”
“ம்ம்..என்னது ஆறு மணியா. நோ சான்ஸ்.”
“என்னோட பேசணும்னு நினைக்கறவங்க காலைல ஆறு மணிக்குள்ள பேசுங்கப்பா”
..
“சரி நான் கிளம்பறேன்”
“சென்று வா மகளே”
..
..
“ரம்யா”
“என்ன? போகவிடமாட்டியே”
“க்ரீட்டிங் கார்ட்”
“தாங்க்ஸ். தாங்க்ஸ் எ லாட். இந்த பர்த்டேய நான் என்னைக்குமே மறக்கமாட்டேன்”
“ரொம்ப சென்டிமெண்ட்டா ஆகாத”
“ம்ம்” (கீழே குணிந்து கொள்கிறாள்.)
“சரி. வார்டன் உள்ள விடலன்னா என்ன பண்ணுவ. கிளம்பு.”
“ஏன் உன் வீடு பக்கத்துல தான இருக்கு”
“அடிப்பாவி. வீட்ல உத வாங்க வைக்க பாக்குறயா?”
“சரி. நான் கிளம்பறேன். உன் தள்ளுவண்டிய பாத்து பத்திரமா உருட்டிட்டு போ.”
“சரிங்க மேடம். நீங்க உங்க டெட் பாடிஸ பத்திரமா பாத்துக்கோங்க”

எல்லா ஞாயிறும் சித்தார்த் கரெக்ட்டாக ஆறு மணிக்கு எங்கள் வீட்டுக்கு கால் பண்ணுவான். அஸ் யூஸ்வல் எங்களுக்கும் சிக்னல் இருந்தது. ஒரு கால். ஒரு ரிங். ரெண்டாவது கால். ரெண்டு ரிங். மூணாவது கால். மூணு ரிங். எங்கள் வீட்டில் சித்தார்தை நன்றாக தெரியும் என்றாலும், ஒரு த்ரிலுக்காகத்தான் சிக்னல் வைத்துக்கொண்டோம். மேலும் சித்தார்த் தான் என்று தெரிந்துவிட்டால் அவ்வா, என்னடி ஆம்பள பையனுடன் இப்படி பேச்சு என்று திட்டுவார்கள் இல்லியா? அதற்கு முந்தைய ஞாயிறு வரை லேட்டாக எழுந்திருக்கும் நான், இப்பொழுதெல்லாம் கரெக்ட்டாக ஆறு மணிக்கு எழுந்துவிடுவது அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வாவுக்கும் தான். எழுந்து ஏதோ நாட்டு நடப்புகளில் ஆர்வம் இருப்பவள் போல பேப்பரை எடுத்துக்கொண்டு ·போனைப் பார்த்து உட்கார்ந்து கொள்வேன். கரெக்ட்டாக ஆறு மணிக்கு ஒரு மணி அடிக்கும்.

ட்ட்ரிங்

ஹலோ சார்
ஹலோ மேடம்
எப்படி சார் இருக்கீங்க
நல்லாயிருக்கேன் மேடம்
என்ன பண்றீங்க சார்
குளிறுது நல்லா போர்வைக்குள்ள இருக்கேன்.
எனக்கும் குளிறுது
எப்படி போச்சு இந்த வாரம்
உன் தொல்லையில்லாம ரொம்ப நல்லா போச்சு
அப்படியா? ஹரிஷ் எப்படி இருக்கான்?
அவன பத்தி இப்போ என்ன?
சரி விடு கேக்காட்டி ஹரிஸ் பத்தி ஏதும் கேக்கலையேன்னு வருத்தப்படுவியேன்னுதான் கேட்டேன்
ச்சேஞ் த டாபிக்
ம்ம் இந்த வாரம் என்ன இன்ட்ரஸ்டிங்..?
பொறுடி..ப்ரண்ட்ம்மா..ம்ம்..ஆமா சிந்து தான்..
அடிப்பாவி.
கண்டுகிடாத..அப்புறம் என்னடி இவ்ளோ வேகமா எழுந்திட்ட..

ஒரு வாரம் ·போன் கால் வரவில்லை. மணி ஆறாச்சு. ஆறரை ஆச்சு. எனக்கு பொறுக்கமுடியவில்லை. அவன் நம்பருக்கு நானே டயல் செய்துவிட்டேன். என் வீட்ல அவனை நன்றாக தெரிந்தாலும், அவன் வீட்ல என்னை அவ்வளவாக தெரியாது. அவன் அப்பா எடுத்தார்கள். டப் என்று கட் செய்துவிட்டேன். பயம். என்ன செய்வது? என்ன செய்வது? நீங்கள் இது மாதிரியான ஒரு சூழ்நிலையில் இருந்தீர்கள் என்றால் தான் உங்களுக்கு இது புரியும். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எனக்கிருக்கும் ஒரே சாய்ஸ். மீண்டும் கால் செய்வது தான். அதுவும் வேகமாக செய்யவேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டில் எல்லோரும் எழுந்து விடுவார்கள். அப்புறம் பேசவே முடியாது. அப்புறம் அடுத்த வாரம் தான். மீண்டும் டயல் செய்தேன். என் விரல்கள் நடுங்கின. சித்தார்த் எடுத்திருடா. ப்ளீஸ்.

(தொடரும்)

என் உயிர்த் தோழன் – 3

3

“சித்தார்த்”
சித்தார்த்திடம் பேசிக்கொண்டிருந்த லக்ஷ்மி, கணேஷ் எல்லாரும் விலகிக்கொண்டார்கள்.
“ரம்யா”
“நல்ல மார்க் கிடைக்கலையா”
“ம்ம். பரவாயில்ல. 1120”
“ம்ம் நானும் தான்” “ஐ ஹோப் ஐ வில் கெட் மெடிக்கல்”
“எனக்கு கிடைக்காது”
“ம்ம்..”
..
..
“எங்க ஜாயின் பண்ணப் போற”
“தியாகராஜா. கம்ப்யூட்டர் சயின்ஸ்”


“எப்ப பார்க்கலாம்?”
“டைம் கிடைக்கும் போது”

“நான் மதுரை மெடிக்கல் காலெஜில தான் சேருவேன். சென்னை போகமாட்டேன்.”
“ம்ம். போகாத.”

“எப்ப பார்க்கலாம்?”
“எப்பவேணுமின்னாலும்”

“அழாத ரம்யா”
“ம்ம்”

..

“இங்க தான இருக்கப்போறோம். பாத்துக்கலாம்”
“ம்ம்”
“உங்க அண்ணன் வர்றார்”
“ம்ம். எப்போ பார்க்கலாம்?”
“அழாத. கண்ண துடைச்சுக்கோ. உங்க அண்ணன் வர்றார்.”

“என்ன ஆச்சு? ரெண்டு பேரும் நல்ல மார்க் தான வாங்கிருக்கீங்க?”
“இல்லண்ணா. இன்னும் கொஞ்சம் அதிகம் வாங்கிருக்கலாம்”

என் அண்ணன் என்னை அழைத்துக்கொண்டு வந்தபிறகு, யாருமற்ற தனிமையில் அந்த மரத்தினடியில் அவன் நின்றுகொண்டிருந்ததைத் தான் நான் கடைசியாகப் பார்த்தேன். அவன் உடைந்துபோயிருந்தான். ஐ வாண்டட் டு பி வித் ஹிம் ·பார் எ வைல்.

நான் மெடிக்கல்காலேஜில் சீட் கிடைத்ததை பற்றி அவனுக்கு தான் முதலில் லெட்டர் போட்டேன். congrats என்று பதில் லெட்டர் வந்தது. பிறகு புதன் கிழமை தோறும் எனக்கு அவனிடமிருந்து லெட்டர் வரும். நான் ஒவ்வொரு ஞாயிறும் அவனுக்கு லெட்டர் போஸ்ட் பண்ணுவேன். சும்மா என்ன படிச்சோம் என்ன பார்த்தோம்னு. எனக்கு சினிமா பார்க்கிற வழக்கம் இல்லையென்பதால் அவன் சொல்லுகிற சினிமா செய்திகளை சும்மா கேட்டுக்கொள்வேன். ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்டட் இன் சினிமா. எனக்கு சினிமா பார்ப்பது பிடிக்காது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஸ்கூலிலே அவன் நிறைய தடவை என்னிடம் கேட்டிருக்கிறான். உண்மையிலே நீ சினிமா பாக்கமாட்டியா இல்ல சும்மா சொல்றியான்னு. எனக்கு பாடல்களும் தெரியாது. ஆனால் எனக்கு என்ன பாடல் பிடிக்கும் என்பது அவனுக்கு தெரியும். பாடறியேன் படிப்பறியேன் தான் என்னுடைய ·பேவரிட் சாங். ஏனென்றால் அது மட்டும் தான் எனக்கு தெரியும்.

ஒன்பது மாதங்கள் ஓடி விட்டன. அவன் லெட்டர் எனக்கு கிடைக்கும் பொழுதெல்லாம் எனக்கு அவனை பார்க்கவேண்டும் போல இருக்கும். அவனுக்கு எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அவனுடைய லெட்டரில் ஒரு சின்ன வெற்றிடம் கூட விடாமல் ஏதாவது எழுதியிருப்பான். எங்கள் பள்ளி ஆண்டுவிழா நெருங்கிக்கொண்டிருந்தது. பள்ளி ஆண்டுவிழாவுக்கு பழைய பாட்ச் மாணவர்களை அழைப்பார்கள். வாராவாரம் இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இன்னும் ரெண்டு வாரம் இருக்கிறது. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என்று லெட்டரில் எழுதிக்கொண்டு வந்தோம். இருவருக்குமே ரொம்ப நாள் கழித்து பார்க்கப்போகிறோம் என்கிற ஆவல் இருந்தது. ஐ வாஸ் ஹைலி எக்ஸைட்டட்.

“ஹே சித்தார்த் வந்துட்டான். அங்க பாரு”
“ஹே ஆமா”
எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன. புல்லரித்தது. கழுத்து சூடாக ஆனது. கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டேன். கைவிரல்கள் சில்லிட்டிருந்தன. அவனைப் பார்த்தேன். ஒன்பது மாதங்கள் கழித்து அவனைப் பார்த்தேன். இங்கதான இருக்கோம் எப்பவேனா பாத்துக்கலாம்னு சொன்னான். இப்ப ஒன்பது மாசம் ஆச்சு. எனக்கு கண்கள் கலங்கின. கொஞ்சம் குண்டாகிவிட்டான் போல. தலையில் முடி நிறைய வைத்திருந்தான். அதே சிரிப்பு. அதே சோடாபுட்டி. எங்களை நோக்கி வேகவேகமாக வந்துகொண்டிருந்தான். அவன் என்னைப் பார்த்தது போலவே தெரியவில்லை. என்னடா ஹேர் ஸ்டைல் இதுன்னு பயாலஜி மேடம் கேட்டாங்க. பக்கத்தில இருந்த ஷீபா அப்பாஸ் ஹேர்ஸ்டைல் மேம் என்றாள்.

இரவாகியது. என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் என்ன தப்பு செஞ்சேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அழுதேவிட்டேன்.

“சித்தார்த்”
“ஹாய் ஷீபா. எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன். ரம்யா கூட ஏன் பேசமாட்டேன்ற?”
“பேசினேனே.”
“பொய் சொல்லாத. அவ அழறா”

“பேசறேன்”
“ஏன் இப்படி பண்ற?”

கிளம்பும் முன் என்னிடம் வந்தான். ஏதோ சும்மானாச்சுக்கும் பேசற மாதிரி பேசினான். கிளம்பறேன்னு கிளம்பிட்டான். எனக்கு கோபம் கோபமா வந்தது. அழுகை அழுகையா வந்தது. போடா லூசு. போடா லூசுன்னு திட்டிட்டேயிருந்தேன். ஐ ஹேட் ஹிம். பார்க்கப்போறோம் பேசப்போறோம்ன்னு எத்தனை நாள் காத்திருந்தேன். அன்று தான் வீட்டில் அவ்வாவிடம் முதலில் கோபப்பட்டேன். எனக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை. அவ்வா சாப்பிட வற்புறுத்தவே “போறீங்களா இல்லியா?” ன்னு கத்திட்டேன். அவ்வா முகம் வாடிப் போச்சு. போயிட்டாங்க. சாரி அவ்வா.

பிறகு அடுத்த புதன் கிழமை அவனிடமிருந்து லெட்டர் வந்தது. பேச என்னவோ போல இருந்ததாம். இடியட். இதெல்லாம் ஒரு காரணமா? நீ ஏன் பேசலன்னு என்கிட்ட கேட்டான். அவன் பேசாட்டி என்ன? நான் ஏன் அவன் கிட்ட பேசல? தாட் டே கேம் அன் வென்ட். ஜஸ்ட் லைக் தட். ஜஸ்ட் லைக் தட்.

இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. நோ கான்ட்டாக்ட்ஸ். லெட்டர் தொடர்பு நின்று போய்விட்டது. ஏன் எதற்கு என்கிற கேள்வி இல்லை. ஜஸ்ட் லைக் தட். நான் இரண்டு முறை லெட்டர் போட்டேன். சும்மா ஏனோ தானோன்னு பதில் எழுதினான். முன்னெல்லாம் கேப் விடாம எழுதறவன் இப்போ ஒரு பக்கம் தான் எழுதினான். இப்போ கொஞ்ச நாளா அதுவும் இல்ல. எனக்கும் எக்ஸாம்ஸ். ப்ராக்டிக்கல்ஸ். டெட்பாடீஸ். ஐ வாஸ் டோட்டலி ஆக்குப்பைட்.

“ரம்யா”
“ஐரினா? என்னப்பா?”
“யாரோ உன்ன பார்க்கவந்திருக்காங்கடி”
“குளிச்சிட்டிருக்கேன். வர்றேன்னு சொல்லு ஐரின்”

மணி இரவு ஏழாகிறது. இன்னேரம் யார் என்னைப் பார்க்க வந்திருப்பா? அண்ணன்? மெதுவாக படிகளில் இறங்கினேன். வானம் இன்னும் இருட்டவில்லை. குளித்து முடித்து வந்ததால் கழுத்தில் மீதமிருந்த நீர்த்துளிகளில் காற்று மோதி அவற்றை உடைத்து நொறுக்கியது. ஜில்லென்று இருந்தது. ஐ ·பெல்ட் ·ப்ரஸ். யார் வந்திருக்கிறா? எங்கே என்று தேடினேன். ஹ¥ இஸ் தட்? செல்வா?

(தொடரும்)

என் உயிர்த் தோழன் – 2

2

அவன் ரொம்ப நேரம் வரலைன்னவுடனே எனக்கு அழுகையா வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு அவன் இல்லாட்டா எப்படி? பஸ் லேட்டோ? பஸ்ல இருந்து கீழே விழுந்துட்டானோ? என் மண்டை குழம்பிக்கிட்டே இருந்துச்சு. கடைசியில் வந்தான். லூசு மாதிரி ஒரு பேண்ட் ஒரு சர்ட் போட்டுட்டு வந்தான். நான் இன்னைக்கு ரெட் சுடி போட்டிருந்தேன். முன்ன ஒரு தடவ சனிக்கிழமை ஸ்பெஷல் க்ளாஸ¤க்கு நான் போட்டுட்டு வந்திருந்தப்போ நல்லாயிருக்குன்னு சொன்னான். நேரே வந்து ப்ரோகிராம் ஸ்கெடியூல் செக் பண்ணிட்டு. ஸ்டேஜூக்கு ஏறிட்டான். ஏதோ கையில பேப்பர் வெச்சிருந்தான். எடுத்து கடகடன்னும் வாசிக்க ஆரம்பிச்சிட்டான். வரவேற்புரை. அவங்க அப்பா எழுதிக்கொடுத்திருக்கனும். இந்த லூசுக்கு இப்படியெல்லாம் எழுத தெரியாது. என் கூட அதிகமா பேசவேயில்ல. பேசும்போது கையவெச்சு மூக்க பொத்திக்கிட்டேதான் பேசினான். முதல்ல ஷீபாதான் குளிக்காம வந்திட்டா போலன்னு நினைச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது அவன் மூக்குல அழகா பெரிய ஒரு பரு. சார் அதனால தான் மூக்க பொத்திக்கிட்டே பேசியிருக்கார். பர்சனாலிட்டி கொறஞ்சு போச்சுன்னா? நான் தான் சொன்னேன் : பரு இருந்தாலும் நல்லாத்தான் இருக்க. கைய எடுத்துட்டு நார்மலா பேசுன்னு. அதுக்கபுறமும் மூக்க மூடிட்டேதான் பேசினான்.

“எனக்கும் கவி அரங்கத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ ஸ்டேஜுக்கு வரணும்”
“வாட்? நெவர். என்ன ஒரு தடவை அவமானப் படவெச்சது பத்தாதா?”
“நீ ஒன்னும் செய்யவேண்டாம். ஜஸ்ட் வந்து உக்காரு போதும்.”
“வேற யார் யார் வர்றா?”
“ஐ ஹேவ் ஆஸ்க்ட் ஹிந்தி ஜீ அன்ட் சயின்ஸ் மேடம்”
“லூசா நீ? உன் சாய்ஸ் எல்லாம் வித்தியாசமா இருக்கு”
“யெஸ். இங்க இருக்கிற யாருக்குமே கவிதைன்னா என்னன்னு தெரியாது. பின்ன யார கூப்பிட்டா என்ன? நான் எனக்கு பிடிச்சவங்கள கூப்படறேன். யூ ஆர் கம்மிங்”

கூப்பிட்டது மட்டுமில்லாம என்னைத்தான் நடுவில உக்காரவெச்சான். ஆனா அவன் பக்கத்தில உட்கார்ந்திருந்ததால எனக்கு ஒன்னும் தெரியல. என்னை கூப்பிட்டதுக்கு அவன் க்ளீனா காரணம் சொன்னான்: க்ளாஸ் லீடர். சரியான ஆள் தான் நம்மாளு.

(நடு ராத்திரியில எழுந்து லைட்டப்போட்டு டைரிய தேடிக்கண்டுபிடித்து. நம்மாளு என்கிற வார்த்தையை ஒன்றும் தெரியாதவாறு பேனாவை வைத்து அடிக்கிறாள். டைரியையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.)

ஆனா பிடிச்சவங்களைக் கூப்பிடறேன்னு சொன்னது எனக்கு பிடிச்சிருந்தது.

“சித்தார்த்”
(மேத்ஸ் புக்கிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறான்)
“என்னோட ஆட்டோகிராப் புக்.”
“ஓ. ஓகே”
வாங்கி பக்கத்தில் அமர்ந்திருக்கும் சூரியாவிடம் கொடுக்கிறான். மேத்ஸ் புக்கில் மூழ்கிப்போகிறான்.
..
“சூர்யா..ஒரு நிமிஷம்..நான் என் டீட்டெய்ல்ஸ் கொஞ்சம் ·பில் பண்ணிக்கொடுக்கிறேன். ஆட்டோகிராப் புக்க கொஞ்சம் கொடேன்”
“ஓகே ரம்யா. இந்தா”

“சித்தார்த்”
(இப்போ பயாலஜி புக்கிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறான் சித்தார்த்)
“என்னொட ஆட்டோகிராப் புக்”
“ஓ ஓகே”


“ஹே நான் தான் முதல்ல எழுதப்போறேன்”
“யெஸ் யெஸ் சித்”

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஐ வாஸ் ஹேப்பி. ஐ வான்டட் ஹிம் டு ·பில் அப் பர்ஸ்ட்.

(நடு ராத்திரியில் எழுந்து ஆட்டோகிராப் புக்கை திறந்து பார்க்கிறாள். முதல் பக்கத்தில் “Unshared is an ocean” என்று எழுதப்பட்டு சித்தார்த் என்று கிறுக்கப்பட்டிருந்தது)

“சூர்யா. கொஞ்ச நேரம் இங்க உக்காந்துக்கவா?”
“ஓ ஸ்யர் ரம்யா” சூர்யா எழுந்துகொண்டான்.
“சித்தார்த்”
“என்ன ரம்யா?”
“தமிழ் கட்டுரை போட்டிக்கு போறியா இல்லியா?”
“அதான் போகலைன்னு சொன்னேன்ல”
“போயேன் ப்ளீஸ்”
“ஐ டோன்ட் வாண்ட் டு பார்டிசிபேட். எனக்கு எக்ஸாம் தான் முக்கியம்”
“எக்ஸாக் இருக்கட்டும் நீ நல்லா பண்ணிடுவ. இது எல்லா ஸ்கூலுக்கும் நடக்கிற போட்டி.நீ போயேன் ப்ளீஸ். நீ கலந்துக்கிட்டினா நீ தான் பர்ஸ்ட் வருவ.”
“ரம்யா..”
“எனக்காக போயேன் ப்ளீஸ்”

“எனக்காக. ஐ வாண்ட் டு சீ யூ வின். ப்ளீஸ்”

சொன்னோம்ல. சொன்னோம்ல. எட்டு ஸ்கூளுக்கு நடந்த போட்டில அவன் தான் பர்ஸ்ட் வாங்கினான். ஹி இஸ் ஸ்மார்ட். தலைப்பு ஏதோ பெண்ணிய முன்னேற்றமாம். பன்னிய முன்னேற்றம்னு தலைப்பு கொடுத்திருந்தாக்கூட அவன் தான் பர்ஸ்ட் வாக்கிருப்பான். அவனுக்கு கொடுத்த பரிசை என்னிடம் கொடுத்தான். நான் வேண்டாம்னு சொன்னேன். பிறகு சந்தோஷமாக வாங்கிக்கொண்டேன். ஒரு ஷீல்ட். அவன் பெயர் போட்டது. இப்பொழுது என்னிடம் தான் இருக்கிறது. எப்பொழுதும் என்னிடம் தான் இருக்கும்.

“ரம்யா”
“ஹாய் சித்தார்த்”
“எக்ஸாம் எப்படி எழுதின?”
“குட். நல்லா எழுதினேன். நீ”
“நானும் நல்லா எழுதியிருக்கேன்” “இன்னைக்கு ·பேர்வெல் பார்ட்டிக்கு வருவேல்ல”
“கண்டிப்பா. என்ன கேள்வி இது?”
“இல்ல லேட் ஆயிடும். உங்க அவ்வா விடுவாங்களா?”
“விடுவாங்க”
“வீட்டுக்கு போயிட்டு வருவியா?”
“ம்ம். யூனி·பார்மோட இருக்கவேண்டாம்னு நினைக்கிறேன்”
“ம்ம்”
“நீ வீட்டுக்கு போறியா?’
“ஆமா.”
“பஸ்ல போகனுமே. போயிட்டு வந்திடுவியா?”
“சுதாகரும் வர்றான். ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு போயிட்டு ட்ரெஸ் ச்சேஞ் பண்ணிட்டு வந்திடுவோம்”
“என்ன ட்ரெஸ் போடப்போற?”
“என்ன போடட்டும்?”
“என்ன கேட்டா?”
“சரி ஏதாவது போட்டுக்கிறேன்”
….
“ரெட் டீசர்ட் போடு. க்ரீம் பேண்ட் போடுவியே அதப் போடு”
“ம்ம் சரி தொவைச்சிருக்கான்னு தெரியல பாக்குறேன்”
..
“நான் என்ன போடட்டும்?”
“என்ன போடப்போற?”
“சொல்லேன்..”
“ரெட் சுடி போடேன்”

அவன் அப்படி பார்த்ததை நான் பார்த்ததில்லை. என்னையே பார்த்துக்கொண்டிருந்தது போல இருந்தது. நான் எப்பொழுது அவன் பக்கம் பார்த்தாலும் அவன் என் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தான். நான் குணிந்தே உட்கார்ந்திருந்தேன். ·பேர்வெல் பார்ட்டியில் அவனை திடீர்னு பேசச்சொல்லிட்டாங்க.

“சித்தார்த். எப்படி இப்படி பேசுற?”
“நல்லாயிருந்துச்சா?”
“ரொம்ப நல்லாயிருந்துச்சு”
“யூ லுக் குட்”
“வாட்” (ஸ்மைல். மைல்ட் வெக்கம். கீழே குனிந்துகொள்கிறாள்)
“சுடி நல்லாயிருக்கு”
“ம்ம்” (வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறாள்)

பார்ட்டி முடிஞ்சு ரொம்ப நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் பிரிவைப் பற்றி யாருக்கும் கவலையிருப்பதாக தெரியவில்லை. இராவகிவிட்டது. அவனோடு தனியாக பேசவேண்டும் என்று நினைத்தேன். முடியவேயில்லை. அவன் எங்கே போனாலும் என் கண்கள் அவனையே பின் தொடர்ந்தன. சாப்பிட்டுவிட்டு கை கழுவச்செல்லும் போது அவன் வருவதைப் பார்த்தேன். மெதுவாக கை கழுவினேன். மிக மெதுவாக. என்னருகில் வந்தவன் சிரித்தான். இருட்டில் நாங்கள் இருவர் மட்டும். எனக்கு இருதயதுடிப்பு அதிகரித்தது. கைகழுவிக்கொண்டான். கர்சீப் தேடினான். இல்லை. என்னிடம் கை நீட்டினான். என் கர்சீப்பை கொடுத்தேன். முகத்தில் ஒற்றிக்கொண்டு பின் கைகளைத் துடைத்தான். மீண்டும் என்னிடம் கொடுத்தான். சிரித்தான். போகலாமா என்றான்.

“எக்ஸாம் எல்லாம் முடிச்சதுக்கப்புறம் உன்னையெல்லாம் பாக்கவேமுடியாதுல்ல”
“ஏன் சித்தார்த் எப்போவேணுன்னாலும் வீட்டுக்கு வா. நீ தான் வந்திருக்கியே”
“அது இப்போ. ஸ்கூல் முடிச்சாச்சுன்னா உன்ன பாக்கவர்றதுக்கு சரியான காரணம் நான் சொல்லனும். இல்லியா?”

அவன் பஸ்ஸ்டான்டுக்கு போகணும். என் வீடு பஸ்ஸ்டாண்ட் தாண்டித் தான் இருக்கு. அதனால நான் லக்ஷ்மி, சௌமியா, வாணி, சூர்யா எல்லாரும் நடந்தே வந்தோம். அவன் சௌமியாவுடன் தான் பேசிக்கொண்டே வந்தான். என்னிடம் பேசவேயில்லை. நானும் வாணியும்தான் பேசிக்கொண்டே வந்தோம். “ரம்யா” என்றொரு குரல் கேட்கவே திரும்பிப்பார்த்தேன். அப்பா. ஸ்கூட்டரில். நான் வண்டியில் ஏறிக்கொண்டேன். அவன் என் பார்வையில் புள்ளியாகித்தேயும்வரை நான் அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.எனக்கு அழுகையாக வந்தது. ஐ க்ரைட். நாங்கள் ·பேர்வெல் பார்ட்டி முடித்துவிட்டோம். ·பேர்வெல்.

(தொடரும்)

என் உயிர்த் தோழன் – 1

(குட்டித் தொடர்கதை)

1

“என்னாச்சு ரம்யா? ஏன் ரொம்ப நாளா ஸ்கூலுக்கு வரல?”
“ம்ம்..உடம்புக்கு முடியலடா”
“ஜான்டீஸா”
“ம்ம்ம்ம்”
“இப்போ சரியாப்போச்சா”
“ம்ம்”
“ஏன் சரியாவே பேசமாட்டேன்ற?”
“ஒன்னுமில்லடா” “இந்தச் செயின் நல்லாயிருக்கா?”
“சூப்பரா இருக்கு. புதுசா?”
“ம்ம் அவ்வா வாங்கிக் கொடுத்தாங்க”
“ஜான்டீஸ் வந்ததுக்கா?”

சித்தார்த் கேட்டப்போ எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. ஒரு நாள் அவனுக்கு புரியும்.

“இன்னிக்கு ரிகர்சல் எப்படி இருந்தது?”
“சூப்பரா இருந்தது”
“நான் நடிச்சது பிடிச்சிருந்தா?”
“நீ நடிச்சத விட, அந்த மைக் கீழ விழுந்தப்போ நீ கொடுத்த ரியாக்ஷன் நல்லா இருந்தது”

நல்லா நடிக்கிறான். நல்லா பேசறான். நல்லா படிக்கிறான். எங்க அப்பாவுக்கு இவன ரொம்ப பிடிக்கும். என்கிட்ட நிறைய தடவை அவன பத்தி பேசியிருக்கிறார், ஸ்கூலுக்கு வரும் பொழுதெல்லாம் இவன் கிட்ட பேசாம போனதேயில்ல.அவன் கைய பிடிச்சுக்கிட்டு நின்னு பேசிட்டிருப்பார். அவனுடைய நண்பர்கள் என் அப்பா வருவதைப் பார்த்தவுடன் “டேய் உன்னோட மாமா வர்றாருடா” என்று என் காதுபடவே கிண்டல் செய்கிறார்கள். சித்தார்த் ரொம்ப நல்லவன் இதையெல்லாம் அவன் காதில் போட்டுக்கொண்டதைப் போலவே தெரியவில்லை.

“அப்பா”
….
“அப்பா”
“என்னடா?”
“இனிமே ஸ்கூலுக்கு வரும்போது சும்மா சும்மா சித்தார்த்தோட பேசாதீங்கப்பா”
“ஏன்?”

“பசங்க கிண்டல் பண்றாங்களா?”

“சரி. இனிமே தேவைன்னா மட்டும் பேசறேன்”

ஆனால் இன்றும் அப்பா பள்ளிக்கு வந்திருந்தபோது சித்தார்த்திடம் பேசியதைப் பார்த்த செல்வா வேண்டுமென்றே நான் க்ளாஸ¤க்கு வரும்பொழுது, சித்தார்த்தைப் பார்த்து “டேய் சித்தார்த் மாமா வந்திருந்தாரே. என்ன சொன்னார்?” என்று கேட்டுத்தொலைத்தான். இடியட். நான் தான் க்ளாஸ் லீடர் என்றாலும், கிட்டத்தட்ட அவன் தான் க்ளாஸ் லீடர். நான் உப்புக்குச்சப்பானி. ப்ரிண்ஸி எதுன்னாலும் ரெண்டு பேரையும் சேத்துதான் கூப்பிடுவாங்க.

“மேடம்”
“என்னாச்சு ஆயா?”
“ப்ரின்ஸி மேடம் சித்தார்த்தையும் ரம்யாவையும் கூட்டிட்டு வரச்சொன்னாங்க”
..
“சித்தார்த், ரம்யா போயிட்டுவாங்க”
..

நான் தான் ஏதும் பேசவில்லை என்றால், அவனாவது ஏதாவது பேசியிருக்கலாம். எங்கள் க்ளாஸிலிருந்து பிரின்ஸி ரூம் ரொம்ப தூரம். அட்லீஸ்ட் இன்னைக்கு அப்படி தோன்றியதா? இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. அவன் இன்றைக்கு ஷ¥ போடவில்லை. வெறும் செறுப்பு தான் போட்டிருந்தான். டை கட்டவில்லை. இன் செய்யவில்லை. ஏன் இப்படி இருக்கிறான்? அதுவும் இன்று ப்ரின்ஸி ரூமுக்கு வேற போனோம். அது சரி. இவன் தான் ஸ்கூலுக்கு செல்லப்பிள்ளை ஆச்சே. எல்.கே.ஜில இருந்து ஒரே ஸ்கூல்ல படிச்சா இப்படித்தான் ஆகும். பெரிய தாதான்னு நினைப்பு. ஆனா ரொம்ப திமிர். ப்ரின்ஸி இந்தமுறை குழந்தைகள் தினவிழாவை நாங்கள் தான் (+2) நடத்தவேண்டும் என்று சொல்லிவிட்டார். திமிர் பிடிச்சவன் போகும் போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வரும் பொழுதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவனும் என்னை திரும்பிப் பார்க்கவில்லை.

“ரம்யா. நாங்க இந்தப்பாட்டு செலக்ட் செஞ்சிருக்கோம்”
வெல்வெட்டா வெல்வெட்டா..
மன்மதன் கல்வெட்டா..
“ச்சீ என்ன பாட்டுடி இது? இது ·பிப்த் பசங்களுக்கா?”
“அப்ரூவ் பண்றியா இல்லியா?”
“நான் அப்ரூவ் பண்றனா இல்லியாங்கறது வேற விசயம். சித்தார்த் அப்ரூவ் பண்ணனும்”
“நீ போய் அவன் கிட்ட கேளு.. சரின்னுடுவான்”
“என்ன விளையாடுறியா? இந்த பாட்ட நான் அவன் கிட்ட போட்டு காட்டனுமா?”
“யெஸ்”
“நெவர்”
“லைன்ஸ் தான் அப்படி இருக்கும். ஆனா டான்ஸ¤க்கு இந்த பாட்டு கரெக்ட்டா இருக்கும். ஸீ த பீட்ஸ்..”
..
“என்னவோ சொல்ற..சரி டேப் ரிக்கார்டர கொடு..நீயும் கூட வா..”

நான் போய் அவன் கிட்ட இந்தப்பாட்ட போட்டு காண்பிச்சேன். அவன் ஒன்னுமே சொல்லல. தூக்கிட்டு ஓடிறுன்னு மட்டும் தான் சொன்னான். ஷீபா ஏதோ சொல்ல ஆரம்பிச்சா.. வேற பாட்டு செலக்ட் பண்ணுங்க ப்ளீஸ்ன்னு டக்குன்னு சொல்லிட்டான். அவ வாய மூடிட்டு வந்தா. நாங்க திரும்பி நடந்து வரும் போது கோபால் அவன் கிட்ட ஏதோ சொல்லிருக்கான். அவன் முறைச்சானாம். ஷீபா தான் கேட்க சொன்னான்னா எனக்கு எங்க போச்சு அறிவு. முண்டம். கண்டிப்பா சித்தார்த் ஒத்துக்கமாட்டான்னு தெரியும். பட் ஐ ஜஸ்ட் வாண்டட் டு நோ வாட் ஹீ திங்க்ஸ்.

“எக்ஸ்க்யூஸ்மி மிஸ்”
“யெஸ் கம் இன் சித்தார்த்”



“என்னாச்சு சித்தார்த்”
“நத்திங் மிஸ்”

..
“என்னாச்சுடீ உன் ஆளுக்கு”
“என் ஆளா? உதைப்பேன்”
“என்னம்மோ எல்லாரும் கீழ குணிஞ்சு குணிஞ்சு பாக்குறாங்க?”
“ஆமா..என்னாச்சுடி?”

அவன் பக்கத்து ஊரிலிருந்து பஸ்ஸில் பள்ளிக்கு வருபவன். இன்று கொஞ்சம் லேட். இன்று என்ன இன்று எப்போதுமே அவன் லேட் தான். ப்ரிண்ஸி சித் லேட்டா வந்தா மட்டும் கண்டுகொள்ளாது. அவனை மட்டும் போகச்சொல்லிடும். பணிரெண்டாவது படிக்கிற எருமைமாடு லெட்டா வந்தா போகச்சொல்றதா? ஏன்னா அவன் ஸ்கூலோட ஹீரோ. இன்னிக்கு பஸ்ஸ¤ல ரன்னிங்க்ல இறங்கிருக்கான். கீழ விழுந்துட்டான். ஸ்கூல்ல ஹீரோன்னா, விழுந்தா ரத்தம் வராதா? முழங்கால் எல்லாம் ரத்தம். மிஸ் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுது. எல்லோரும் என்ன என்னன்னு பாத்தாங்க. நான் கண்டுக்கிடல. எனக்கென்ன வந்தது?

“சித்தார்த் என்ன ஆச்சு?”
“நத்திங். ஐ யாம் ஓகே ரம்யா”
“கால்ல காயமா?. பஸ்ல விழுந்துட்டியா?”
“ம்ம்..சும்மா ஒன்னுமில்ல..”


(கோபால் சித்தார்த்தின் காதில் ஏதோ சொன்னான்)
“ஏய் ஏன் அழற?”
“உன் மூஞ்சி. நான் எங்க அழறேன்” “லஞ்ச் கொட்டிடுச்சாமே”
“ம்ம்”
“எங்க கூட வந்து சாப்பிடேன்” (மெதுவாக மூக்கை உறிஞ்சுகிறாள்)
“நீ தயிர் சாதமும் பொட்டுகடலையும் தான கொண்டு வந்திருப்ப?”
“வேணாட்டிப்போ”
..

ஆனா இன்னிக்கு அம்மா மோர் குழம்பு கொடுத்திருந்தாங்க. பொட்டுக்கடலை எப்பொழுதும் கொண்டுவருவேன் என்பது உண்மைதான் என்றாலும் அது எனக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் தான். சாப்பாட்டுக்கு போய் யாராவது பொட்டுக்கடலையை தொட்டுக்கொள்வார்களா? இடியட். ஆனா நான் தினமும் பொட்டுக்கடலை கொண்டுவருகிறேன் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? நான் கூப்பிட்டப்போ வராதவன் சௌமியா கூப்பிட்டப்போ சாப்பிட வந்தான். நண்பர்களையும் அழைத்து வந்திருந்தான். எங்க பதினாலு வருட பழக்கத்தில் இன்றைக்குத்தான் கேர்ள்ஸ¤ம் பாய்ஸ¤ம் ஒன்றாக க்ளாஸில உட்கார்ந்து சாப்பிட்டோம். எல்லோரிடமும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக்கொண்டான். என்னுடைய மோர் குழம்பை வாங்கி சாப்பிடவேயில்லை. நானும் கொடுக்கவில்லை. ஏன் சாப்பிடும் பொழுது ஆட்காட்டி விரலை தனியாக நீட்டிக்கொள்கிறான்? ஸ்டைல்ன்னு நினைப்பு! தடாலடியாக என்னுடைய ஸ்நாக்ஸ் பாக்ஸை அவனே எடுத்து திறந்துவிட்டான். கொஞ்சம் பொட்டுக்கடலை எடுத்து சாப்பிட்டான். அந்த சிவப்பு ஸ்நாக்ஸ் பாக்ஸை ரொம்ப நேரம் கைகளில் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தான். கைகளில் நீள நீளமாக நகம். வெட்டுவானா மாட்டானா? சோடாபுட்டி. சோடாபுட்டி.

“ரம்யா”
“ஆங் என்ன?”
“எங்களோட நாடகத்தில ஒரு நர்ஸ் வேஷம் இருக்கு. நீ நடிக்கிறியா?”
“என்னது நானா?”
“நடிக்கனும்.”
“ஏய் ஸ்டுபிட்டா நீ? இத்தன வருஷத்தில ஒரு நாளாவது நான் ஸ்டேஜ்க்கு பக்கமாவது போயிருக்கனா?”
“போயிருக்க. என்னோட யூகேஜில டான்ஸ் ஆடுற மாதிரி போட்டோ இருக்கு. பாக்குறியா?”
“இடியட் அது யூகேஜில. இப்போ என்னால முடியாது”
“எப்போ பாத்தாலும் படிச்சுட்டுதான இருக்க. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா வந்து சும்மா நடியேன்”
“முடியாது”
“உன்ன நான் நடிக்க கூட்டிட்டு வருவேன்னு சொல்லிருக்கேன்”
“நீ சொன்னா? நோ.”

அவன் அப்படி மூஞ்ச வெச்சுக்கிறத பாக்க சகிக்கல. ரொம்ப பாவமா இருந்துச்சு. ஆனா இது நாள் வரைக்கும் நான் டான்ஸ்க்காகவோ ட்ராமாவுக்காகவோ ஸ்டேஜ் ஏறினதே இல்லை. எனக்கு ரொம்ப பயம். ஒரு தடவை இங்கிலீஸ் மேம் ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டும் வரமுடியாதுன்னுட்டேன். இன்னைக்கு சித் கூப்பிட்டதும் என்ன செய்யறதுன்னு தெரியல. ஆனா இவன் இப்படி என்கிட்ட கேட்டதேயில்ல. பயமாகவும் இருக்கு. என்னோட பெஸ்ட் ப்ரண்ட்டோட ரிக்வஸ்ட தட்டவும் முடியல.

“ஹேய் ரம்யா வாட் எ சர்ப்ரைஸ்”
“சும்மா வந்தேன்”
சித்தார்த் ஓடி வந்தான்.
“ஹே ரம்யா தேங்க்ஸ்.”
தமிழம்மாவிடம் திரும்பி “அம்மா அந்த நர்ஸ் வேஷம்” என்றான்

தமிழம்மா எனக்கு கொஞ்சம் பெரிய டயலாக் கொடுத்தாங்க. கோர்ட் சீன். நான் நர்ஸாக வந்து சித்தார்த்துக்கு ஆதரவாக சாட்சி சொல்லவேண்டும். இது கொஞ்சம் பெரிய டயலாக். சித்தார்த் பக்கத்திலிருந்தே சொல்லிக்கொடுத்தான். என்னால் எவ்வளவு பெரிய கட்டுரையையும் எளிதாக மனப்பாடம் செய்து விட முடியும். ஆனால் இந்த நாடகம். வாசிக்கும் பொழுது நன்றாக சித்தார்த்திடம் சொல்லிவிடுகிறேன். ஆனால் ரிகர்சல்லுன்னு வர்றப்போத்தான் உதறுது.

“கனம்..க்க்” “க்க்கோர்ர்ட்டார் அவர்களே”
“ரம்யா பயப்படாம சொல்லு”
“எதிரே நிற்கும் ப்ராக்கியூஸ்டர்..”
சிரிப்பு.
“ரம்யா ஒரு தடவை நல்லா டயலாக்க பாரு. ஏன் கை நடுங்குது உனக்கு”

என்னால முடியல. ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன். சித்தார்த் பின்னால ரம்யா ரம்யான்னு கத்தறது கேட்டது. க்ளாஸ¤க்கு வந்து ஒரே அழுகை. ஷீபாவும் வாணியும் தான் தேற்றினார்கள். சித்தார்த் அன்றைக்கு க்ளாசுக்கு வரவேயில்லை. அவன் மேல எனக்கு கோபம் கோபமா வந்தது. எனக்கு ஒன்னும் கோபம் வரலை. நான் ஏன் கோபப்படனும்? அவன் கூப்பிட்டதுக்கு ட்ரை பண்ணினேன். அவ்ளோதான்.

“கௌரி தட் வாஸ் ·பெண்டாஸ்டிக்”
“தாங்க்ஸ்”
“டான்ஸ் ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு. இல்ல ரம்யா”
“ம்ம்”
“உனக்கு க்ளாஸிக் தான் வரும்னு நினைச்சேன். வெஸ்டர்னும் பிச்சு உதறுர”
கௌரி வழிகிறாள்.
“உன்னொட ஸ்டெப்ஸ் எல்லாத்துலயும் ஒரு நளினம் இருந்துச்சு. இல்ல ரம்யா?”
“ம்ம்”
“சித்தார்த் ஷேல் வி மூவ் டு நெக்ஸ்ட் க்ளாஸ்”

இருக்கும். இருக்கும். அது என்ன இல்ல ரம்யான்னு என்னைய கேக்குறது? விழாவுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது. இன்னிக்கு மத்தவங்க ப்ரோகிராம்ஸ் எல்லாத்தையும் பென்ச்மார்க் பண்ணனும்னு நான் தான் சொன்னேன். அது தான் தப்பா போச்சு. இவன் என்னடான்னா போற வர்ற இடத்துலயெல்லாம் வழியறான். நல்லா இருந்துச்சுன்னா நல்லாயிருந்துச்சுன்னு சொல்லவேண்டியதுதான. அது என்ன நளினமா இருந்துச்சுன்னு வழியல் வேண்டிக்கிடக்கு? சரியான வழிஞ்சான் கோஷ்ட்டி. நானும் அவனும் பேசிக்கிட்டே நடக்கிறத பாத்த செல்வா அங்கிருந்து கத்தினான்: சித்தார்த் கொடுத்துவெச்சவண்டா நீ. இன்னிக்கு சித்தார்த் ரொம்ப சிரிச்சான். வழிஞ்சான். லூசு. அவன் சிரிச்சா அழகாயிருக்கும். ஆனா சிடுமூஞ்சி. சிரிக்கவே சிரிக்காது.

“என்னடி இன்னும் சித்தார்த்த காணோம்?”
“வந்திருவான்”


“செல்வா. சித்தார்த் எப்போ வருவான்?”
“தெரியல ரம்யா. வந்திருக்கனும். நேத்து டெகரேட் பண்ணிட்டு லேட்டாத்தான போனான். வந்திருவான்”
“ப்ரிண்ஸி எப்போ ப்ரோகிராம் ஸ்டார்ட் பண்றதுன்னு கேக்கறாங்க”
“ஸ்டார்ட் பண்ணலாமே!”

“சித்தார்த் வரட்டும் மேடம். வந்திருவான்”

(தொடரும்)

Muthu In France

த‌ற்சம‌ய‌ம் வேலை நிமித்த‌மாக‌ ஃப்ரான்ஸ் வ‌ந்திருக்கிறேன். என் ம‌னைவியையும் குழ‌ந்தையையும் அழைத்து வ‌ந்திருக்கிறேன். ஒரு மாத‌ம் இங்கே த‌ங்கியிருப்பேன் என்று நினைக்கிறேன். நான் தங்கியிருக்கும் இட‌ம் Saint Quentin . இன்னும் phone ந‌ம்ப‌ர் வாங்க‌வில்லை. யாராவ‌து ப‌க்க‌த்தில் இருக்கீங்க‌ளாப்பா? ரொம்ப‌ மொக்க‌ போட‌ மாட்டேன். பாரீஸ் கூட்டிட்டுட்டுபோன்னு ப‌டுத்த‌மாட்டேன். சும்மா வெளில‌ இருந்து ஆத‌ர‌வு த‌ந்தாப்போதும். This Saint Quentin town is cold and unusually quite.

Britannica just dont get it!

இந்த செய்தியை பார்த்தீர்களா?

Britannica president Jorge Cauz ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
“If I were to be the CEO of Google or the founders of Google I would be very [displeased] that the best search engine in the world continues to provide as a first link, Wikipedia,” he said.”Is this the best they can do? Is this the best that [their] algorithm can do?”

விக்கிப்பீடியாவின் வெற்றி ரகசியகங்கள் என்று கணக்கிட்டால்:
1. விக்கிப்பீடியாவில் பிரிட்டானிக்காவை விட மிக மிக மிக அதிகமான கட்டுரைகள் (5 மில்லியனுக்கும் மேல்) இருக்கின்றன.
2. கட்டுரைகள் விஸ்தாரமானவை.
3. விக்கிப்பீடியா எண்னற்ற reference (also see) கொடுக்கிறது. (யாரோ ஒரு புண்ணியவான் என்னுடைய பருத்திவீரன் விமர்சனத்தை பருத்திவீரனின் விக்கிபீடியா கட்டுரையில் referenceஆக இணைத்துள்ளனர். இது தான் விக்கிப்பீடியாவின் பலம்)
4. நிறைய பேர் தொடர்ந்து கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவது.
5. எல்லாவற்றையும் விட: இலவசம்.

மேலும் தகவல்களுக்கு.

கூகிள் search, அது தேடிக்கொண்டுவரும் பக்கங்கள் எவ்வளவு புராதானமானவை, எவ்வளவு உண்மையானவை; எவ்வளவு eliteஆனவை என்பதை கண்டுகொள்வதில்லை, its so simple; அந்த பக்கங்களுக்கு எவ்வளவு பேர் link கொடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

Britannicaவின் புதிய யுக்தி:
He said the encyclopedia had set a benchmark of a 20-minute turnaround to update the site with user-submitted edits to existing articles, which are written by the encyclopedia’s paid expert contributors.
இப்போவாவது உணர்ந்துகொண்டார்களே. But too late.

இந்த யுக்தியால் Britannicaவிற்கு நிறைய புது articles வருகிறது என்று வைத்துக்கொண்டாலும்; ஒரு நாளைக்கு ஆயிரம் பக்கங்கள் வருகிறது என்றால், அதை எப்படி சரி பார்க்கப் போகிறார்கள்? எவ்வளவு நபர்களை இந்த வேலைக்கு நியமிப்பார்கள்? விக்கிப்பீடியாவின் வெற்றி அவர்கள் வெளியிடும் கட்டுரைகள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்பதில் இல்லை; எந்த அளவிற்கு verifiableஆக இருக்கிறது என்பதே. Britannica just dont get it.

ஆனால் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு விக்கிப்பீடியா அவ்வளவாக உதவுவதில்லை; அதற்கு பிரிட்டானிக்காவைத்தான் நாட வேண்டியிருக்கிறது என்கிற வாதம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இங்கே பார்த்தால் ஆனால் அதற்கும் வழி இருக்கிறது:
Scholarpedia
Citizendium (We aim at reliability and quality, not just quantity என்று சொல்கிறார்கள்! )

ஆனாலும் பிரிட்டானிக்கா இன்னும் எந்த தைரியத்தில் “Premium Membership : Free Trial” option வெச்சிருக்குன்னு கொஞ்சம் கூட புரியல! யாராவது அவங்களுக்கு உலகத்துல என்ன நடக்குதுன்னு எடுத்து சொல்லுங்கப்பா.

மேலும் இந்த வீடியோவை பாருங்கள். (A comparison video)

கடைசிக் கேள்வி:
பிரிட்டானிக்காவில் விக்கிபீடியா பற்றிய entry இருக்கிறதா? 🙂

யுனிகோட் தட்டச்சு!

இது தான் என்னுடைய முதல் யுனிகோட் தட்டச்சு முயற்சி!
It took more than 15 mins to type this sentence! Grr.

உதவிக்கு இந்த விடியோவை பார்க்கவும்.

மேலும் இந்த பக்கம் எந்த எந்த விசைகளுக்கு எந்த எந்த எழுத்துக்கள் என்று தெரிந்துகொள்வதற்கு உதவுகிறது.

கொஞ்சம் கஷ்டம்தான்!

புத்தாண்டு வாழ்த்துக்க‌ள் ம‌ற்றும் ஜெய‌மோக‌ன் எழுதிய‌ க‌ட்டுரை

அனைவ‌ருக்கும் இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்.

***

ஜெய‌மோக‌ன் குமுத‌ம் தீராந‌தியில் எழுதிய‌ இந்த‌ க‌ட்டுரையைப் ப‌டிக்க நேர்ந்த‌து. சிரித்து ம‌கிழுங்க‌ள்.


க‌ல்வித்துறை ஒரு விவாத‌ம்
அம்மாப்பாளையம் பரமசிவக்கவுண்டர் கலைக்கல்லூரி ஆட்சிமன்றக் கூட்டத்தில் தற்செயலாகத்தான் காசிரங்கா யானைப் பிரச்சினை எழுந்துவந்தது. ஏற்கெனவே அவர்களுக்கு பல பிரச்சினைகள். முக்கியமாக எல்லா கல்விநிறுவனங்களையும் திணறச் செய்துகொண்டிருக்கும் செம்மொழி நிதியை என்னசெய்வது என்ற சிக்கல். செம்மொழிமையத்தினர் பல்கலைகளை மாட்டிவிட்டிருந்தார்கள். பல்கலையினர் கல்லூரிகளை மாட்டிவிட்டிருந்தார்கள்.

காரணம், செம்மொழி மையத்துக்கு ஏராளமான நிதி வந்து கிடந்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்ததுதான். “நல்ல கூத்தாட்டுல்லாவே இருக்கு? பைசாவ என்ன செய்வானுக, பேசாம நாலுவட்டிக்கு விடணும்” என்று செம்மொழி உராய்வுமையத் தலைவர் முனைவர் அம்மமுத்துப்பிள்ளை சொன்னபோது, செயலர் முனைவர் மரிய அற்புதம் பணிவாக, “இல்ல சார், இது அதுக்குண்டான பணமில்ல…” என்றார். “பின்ன?” “புக்குபோடுகதுக்குண்டான பணம்” என்றார் செயலர் முனைவர் மரிய அற்புதம். தலைவர் மின்னதிர்ச்சி கொண்டு, “என்னது புக்கா? அது என்னத்துக்குவே?” என்றார். “அது யாருக்குத் தெரியும்… போடணும்னு சொல்லுறான்.” தலைவருக்கு ஆறவில்லை, “இப்ப ஆருவே இங்க புக்கு கேட்டு அழுதானுக… வேற சோலி இல்ல?”

“போடல்லேண்ணாக்க பணத்த திருப்பி குடுக்கணும். திருப்பிக்குடுத்தா அடுத்தவாட்டி பணத்த குறைச்சு குடுப்பாங்க. பணம் குறைஞ்சா அரசாங்கத்திலே நம்ம கிட்ட ஏன்னு கேப்பாங்க” என்றார் செயலர் முனைவர் மரிய அற்புதம். “என்னவே அக்குறும்பாட்டுல்லாவே இருக்கு? இத்தன ரூபாய்க்கு புக்கா? எங்கிணவே கொண்டாந்து அடுக்கி வைக்ய? செரி, புக்குண்ணாக்க புக்கு… எளவுகள போடச்சொல்லும்வே…” என்றார் முனைவர் அம்மமுத்துப்பிள்ளை, “அதுக்கு புக்கு வேணுமே… ஏம்வே?” என்ற முனைவர் அம்மமுத்துப்பிள்ளை, “இல்ல, பழைய புக்கை போடப்பிடாது. புதூ புக்கு வேணும். அத யாரு எழுதுறது?” அப்போதுதான் தலைவருக்கு சிக்கல் உறைத்தது. “அது செரியாக்கும்… எவன் எழுதுகான் புக்கு? வட்டிக்குக் குடுத்தா வாங்கி மறுவட்டி விடுவானுக.”

என்னசெய்வதென்று யோசித்தபோது பேரா.முத்து குமரேசனார் மகாபாரதக் கதை ஒன்றைச் சொன்னார். கர்ணன் பெரிய கொடையாளி என்று பெயர் வாங்கியதில் அர்ஜுனனுக்கு வருத்தம். அதை தீர்க்க கிருஷ்ணன் ஒரு வழி செய்தார். ஒரு மலையை தங்கமாக ஆக்கி அதை அர்ஜுனனுக்குக் கொடுத்து இரவுக்குள் அதை தானமாகக் கொடுத்துவிடவேண்டும் என்று சொன்னார். அர்ஜுனன் முக்கி முக்கி ஒரு சிறுபகுதியை உடைத்து வந்துகூடிய பிச்சைக்காரர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும்போதே இரவாகிவிட்டது. சரி, கர்ணன் என்ன செய்கிறான் என்று பார்க்கலாமென மறுநாள் கர்ணனிடம் அதேபோலச் சொன்னார் கிருஷ்ணன். கர்ணன் அங்கே வந்த தகுதியான ஒருவரை அழைத்து, `இந்த மலையை எடுத்துக்கொள்’ என்று சொல்லி கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருந்தான்.

தலைவர் முனைவர் அம்மமுத்துப்பிள்ளை கண் இமைக்காமல் பேரா.முத்து குமரேசனாரைப் பார்த்தார். பின்பு “அவனாருவே அப்பேற்பட்டவன்?” என்றார். “அதைச் சொல்லணுமா? அவன் காண்டிராக்டர்லா…” என்று இழுத்த பேரா.முத்து குமரேசனார் குரலைத் தாழ்த்தி, “அந்தத் தங்க மலையில பத்து பர்சண்டேஜை அங்கநாட்டுத் தலைநகரிலே கொண்டாந்து ராணியம்மாகிட்ட குடுக்கதுக்கு ஏற்பாடு பண்ணியிட்டுல்ல கர்ணன் குடுத்தான்?” என்றார். முனைவர் அம்மமுத்துப்பிள்ளை புன்னகை செய்தார். விளைவாக மொத்த நிதியும் சடுதியில் பிரிக்கப்பட்டு பல்வேறு பல்கலைகளுக்கு அனுப்பப்பட்டது. பல்கலையினர் அதைப் பிரித்து கல்லூரிகளுக்கு அனுப்பினார்கள்.

நிதியை பல்வேறு வகைகளில் பகிர்ந்தளிக்க கற்பனையை தென்னெல்லை வரை ஓட்டி திட்டங்கள் தீட்டப்பட்டன. வழக்கமாக நிதி கிடைத்ததுமே கருத்தரங்குதான் கூட்டுவார்கள். `சங்க இலக்கியங்களில் மங்கையும் கொங்கையும்’ `பாணனும் பரணரும்’ `பரத்தையும் பத்தினித்தெய்வமும்’ `புறநாநூற்றில் பூரி’ போன்ற பல்லாயிரம் தலைப்புகளில் கல்லூரிகள் தோறும் கருத்தரங்குகள் இரவுபகலாக நடைபெற்றன. கருத்தரங்கப் பட்சிகளெல்லாம் மேடையிலேயே உண்டு உறங்கி சிறகோய்ந்து தூங்கின. கருத்தரங்கு மண்டைக்கு ஏறி எந்நேரமும் வாயில் சொற்பொழிவு கசிந்துகொண்டிருக்கும் நிலைக்கு அப்ஸெஸிவ் கம்பல்சிவ் செம்மொழியோ நியூரோஸிஸ் என்று பெயர்சூட்டினார் மதுரை மீன்விழி மிஷன் உளவியலாளரான டக்ளஸ் குமாரசாமி.

கருத்தரங்கக் கணக்குகள் நாலாபக்கமும் விரிக்கப்பட்டன. நெல்லையில் நடந்த ஒரு கருத்தரங்குக்கு ஓடிய கார்களுக்கு நான்கு சக்கரங்களுக்கும் தனித்தனியாக கணக்கு எழுதப்பட்டது என்று அறிந்த நாகர்கோயில் கருத்தரங்கு ஒன்றில் இரும்பு நாற்காலிகளுக்கு ஒவ்வொரு காலுக்கும் தனியாக பில் போடப்பட்டது. அப்படியும் பணம் தீரவில்லை. “என்னய்யா செய்றாங்க? நல்லா செலவுபண்ணி சாப்பிடச் சொல்லுங்கய்ய்யா” என்றார் தமிழ்த்துறைத்தலைவர். “எலைக்கு நாநூறு ரூபாவீதம் போறவாற அத்தனைபேருக்கும் சாப்பாடு போட்டாச்சு. இப்ப நாட்டில தமிழாசிரியருங்களுக்கெல்லாம் வயித்துப்போக்கும் கடுப்புமா கெடக்கு… எல்லாரும் சாப்பிட்டுச் சலிச்சுப்போய் இப்ப அண்ணாச்சி இனிமே பழைய சோறும் கடிச்சுக்க வெங்காயமும் குடுங்க, மாறுதலா இருக்கும்னு சொல்றாங்க” என்றார் பேரா.கார்த்திகேயன்.

சரி, இனி இரண்டில் ஒன்றுதான் என்று துணிந்து வெளி அமைப்புகளுக்கும் கருத்தரங்கு, தெருமுனைக்கூட்டம் ஆகியவற்றுக்கு நிதி அளிக்கப்பட்டது. ஆசிரியர் சங்கங்கள், அரசூழியர் சங்கங்கள் போன்றவை நிதி பெற்றபின் சுமைதூக்குவோர் சங்கம், பாரவண்டி இழுப்போர் சங்கம் ஆகியவற்றுக்கும் நிதி அளிக்கப்பட்டது. தெருவெங்கும் தமிழாய்வுகள் பீரிட்டன. முந்திரிப் பருப்புத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோவலன் கொலைக்கு நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை நேர தர்ணா நடத்தப்பட்டபின்பு, சீவகனின் காதலிகளைப்பற்றி ஆடிட்டர் ஜெனரல் ஆராயவேண்டுமென்று மாநில கணக்கன் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நிகழ்ந்தது. தென்னைமரம் ஏறும் தொழிலாளர்கள் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து நடத்திய ஊர்வலம் ஒரு புள்ளியைக் கடக்க நாலரை மணிநேரம் ஆகியது, அவர்கள் தங்கள் ஏணிகளுடன் வந்திருந்தார்கள்.

முற்போக்கு கைத்தொழிலாளர் சங்கம் சார்பில் செம்மொழி வளர்ச்சிக்கு அமைக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் இளைஞர்கள் மத்தியில் செம்மொழி ஆர்வத்தைத் தூண்டின. செம்மொழி என்று எழுதப்பட்ட பலகையை ஓடிப்போய் தொட்டுவிட்டுத் திரும்பும் ஓட்டப்பந்தயங்கள், தலையில் பெரிய புறநாநூறு புத்தகத்தை வைத்துக்கொண்டு அது கீழே விழாமல் நடக்கும்போட்டிகள் போன்றவை பெரும்புகழ்பெற்றன. கரகாட்டக்கலைஞர் ஆறுமுகம் முதல்பரிசை தட்டிச்சென்றார். இவர் மொத்த பத்துபாட்டையும் தலையிலும் பதினெண்கீழ்க்கணக்கை கீழேயும் வைத்துக்கொண்டு எழுநூறடி தூரத்தை எட்டு நிமிடத்தில் கடந்தார்.

எல்லா முனைவர்களுக்கும் முடிந்தவரை ஆய்வேடுகள் எழுத நிதி அளிக்கப்பட்டது. ஆய்வேடுகளை அவர்கள் எழுதுவதற்கான பயிற்சிப்பட்டறையும் அமைக்கப்பட்டது. அதில் ஆய்வேடுகளை விரைவாக எழுதுவதற்கான வழிமுறைகள் சொல்லிக்கொடுக்கப்பட்டன. பழைய ஆய்வேடுகளைப் பிய்த்து ஒன்றுடன் ஒன்று கலந்து ஒளிநகல் எடுப்பது, முதல் இரு பக்கங்களுக்கு பிறகு தினமலர், தினமணி, தினத்தந்தி, மாலைமுரசு செய்திகளை எழுதிச் சேர்ப்பது போன்ற வழிமுறைகளை எளிதில் பேராசிரியர்கள் கற்றுக்கொண்டார்கள். ஆனால் சினிக்கூத்து, பருவம், மூக்குத்தி போன்ற இதழ்களைச் சேர்க்கலாகாது என்று அறிவுறுத்தப்பட்டது.

அதிக ஆய்வேடுகளை உருவாக்கும் பேராசிரியர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. நாநூற்றி எழுபத்தேழு ஆய்வேடுகளை ஆறேமாதத்தில் உருவாக்கிய முனைவர். நாராயணசாமிக்கு சிறப்புப்பரிசு அளிக்கப்பட்டது. அவர் வீட்டில் ஒரு தொழிற்சாலையே இதற்கென இயங்கியது என்றார்கள். நாற்பது பேர் கணினி சகிதம் வேலை பார்த்தார்கள். ஆய்வேடுகளை அரைத்து கூழாக்கி ஆலவாய் பல்கலை வாசலில் அய்யன் திருவள்ளுவருக்கு நூற்றுமுப்பத்துமூன்றடி உயரமான சிலை அமைக்கப்படுமென துணைவேந்தரவர்கள் பலத்த கைதட்டலுக்கு இடையே அறிவித்தார்.

இந்நிலையில்தான் அம்மாப்பாளையம் பரமசிவக்கவுண்டர் கலைக்கல்லூரி ஆட்சிமன்றக் கூட்டத்தில் முனைவர் சாமிநாதன் காசிரங்கா யானையைப்பற்றி சொன்னர். “அஸ்ஸாமிலே காசிபுரம்ங்கிற ஊரிலே ஒரு யானை தமிழிலே சத்தம்போட்டுட்டு செத்துப்போயிருக்குன்னு சொன்னாங்க. அந்த யானையை செம்மொழியானைன்னு சொல்லி ஒரு கருத்தரங்கு போட்டா என்ன?” எண்ணங்கள் ஓடாமல் ஸ்தம்பித்துப் போயிருந்த கும்பலுக்கு அது ஒரு பெரிய திறப்பாக இருந்தது. “பிரம்மாதம்… நாம பயாலஜி டிபார்ட்மெண்டையும் கருத்தரங்கத்திலே சேர்த்துக்கலாம். யானையைப் பத்தி என்னமாம் சொல்லுவானுக…” என்றார் டாக்டர் பாலசுப்ரமணியம். “அவனுக வேண்டாம். தமிழுண்ணாக்க அதை தமிழன் அனுபவிச்சாப்போரும். உயிரியலன், பொருளியலன்லாம் உள்ள வந்தாங்கன்னா அவங்க இங்க்லீஷ்லே பேசியே எங்கள ஓரம்கட்டிருவானுக” என்றார் முனைவர் சாமிநாதன்.

“அப்ப எங்களுக்கு ஃபண்ட் வேணாமா?” என்று டாக்டர் சண்முகநாதன் கோபத்துடன் கேட்க, பொருளியல் துறையினரும் சேர்ந்துகொண்டார்கள். “காட்டு யானைகளை அதுங்களோட பிண்டத்தை வைச்சு கணக்கெடுக்க ஜப்பான் ஃபண்ட் வந்தப்ப நாங்க பங்கு கேட்டமா? இவ்ளவுக்கும் அந்த யானையெல்லாம் தமிழ் யானை” என்றார் முனைவர் சாமிநாதன். “யாரு சொன்னது? அதிலே இருபது யானை மேக்னா யானை. அதெல்லாம் சுத்த தெலுங்கு. அதுங்களை மேக்னா நாயிடுன்னு கிளாஸிஃபை பண்ணியிருக்கோம்” என்றார் டாக்டர் சண்முகநாதன். “சண்டை வேண்டாம், யானைபற்றி கருத்தரங்கு போடுவோம்” என்றார் முதல்வர். “யாரு செலவழிச்சா என்னய்யா, பணம் செலவழியணும், செம்மொழி வாழணும்… அதுதானே நம்ம லட்சியம்?” என்றதை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.

ஒரு வழியாக கருத்தொருமை எட்டப்பட்டபின் கருத்தரங்கு கூட்டப்பட்டது. `செம்மொழி நோக்கில் இந்தியயானையின் தமிழ்ப்பண்புக்கூறுகளும் தொல்தமிழ் நாகரீகமும் சங்க இலக்கியச் சிறப்புக்குறிப்புடன்’ என்பது கருத்தரங்கின் தலைப்பு பரவலாக கவனத்தை ஈர்த்தது. கருத்தரங்குக்கு தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளில் இருந்தும் தமிழறிஞர்கள் வந்துசேர்ந்தார்கள். எழுபத்தெட்டுப்பேர் கட்டுரைகள் படிக்கவும் நூற்றியெண்பதுபேர் விவாதிப்பவர்களாகவும் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு நட்சத்திர விடுதி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சென்னையில் இருந்து விமானம் மூலம் உணவு வரவழைக்கப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு குலுக்கலில் முதல்பரிசாக ஒரு வெட்கிரைண்டரும், இரண்டாம்பரிசாக பத்து மிக்ஸிகளும், மூன்றாம் பரிசாக நூறு எவர்சில்வர் குடங்களும் அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

கருத்தரங்கில் தலைமைவகித்த துணைவேந்தர் உள்ளூர் பிரமுகர் `மணல்வீடு’ சங்கரை சிறைக்கே சென்று சந்தித்து காலில் விழுந்து ஆசிவாங்கிவிட்டு வந்தமையால் கருத்தரங்கு சற்றே தாமதமாகிறது. பல்கலைக்கழகம் சார்பில் செம்மொழி ஆய்வின் ஒரு பகுதியாக கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கிவருவதை எடுத்துச்சொன்ன அவர் மணல்குத்தகையாளர், மளிகை மொத்தவணிகர், வட்டச்செயலர், எம்.எல்.ஏ. ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியவகையில் மொத்தம் பதினேழுகோடி ரூபாய் செலவாகியிருப்பதை பெருமையுடன் குறிப்பிட்டு கௌரவ டாக்டர் பட்டம் வேண்டுபவர்களின் வசதிக்காக ஒரு தனித்துறை உருவாக்கப்படும் என்றார். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் கௌரவ டாக்டர் பெறாதவர்களே இல்லாத நிலை உருவாகவேண்டுமென்பதே பல்கலைக்கழகத்தின் அவா என்று சொல்லி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார்.

கருத்தரங்கில் முதலில் பேசிய முனைவர் பாலமுருகன் (செல்லமாக லாபமுருகன்) ஆப்ரிக்க யானைக்கும் இந்திய யானைக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன என்றாலும், அவை இரண்டும் யானைகள் என்ற அளவில் பெரிய அளவில் ஒற்றுமைகள் உள்ளன என்றார். இரண்டுக்குமே தும்பிக்கை இருப்பது சிறப்பாகக் கவனிக்கத்தக்கது. ஆப்ரிக்க மொழிகளில் சிலவற்றுக்கு தமிழுடன் நேரடித்தொடர்பு உள்ளது. அனுதாபம் தெரிவிப்பதற்காக நாம் தமிழில் `உச் உச் உச்’ என்ற ஒலியை எழுப்புவதையே கலஹாரி புஷ்மேன்கள் தங்கள் பெரும்பாலான தொடர்புகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்றார். செம்மொழிக்கும் கலஹாரிக்கும் இடையேயான உறவைப்பற்றி ஆராய்வதற்காக ஒரு குழு அங்கே அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கவிஞர் `தச்சன்’ பேசினார். கானம்பாடி இதழில் கவிதை என்று சந்தேகப்படமுடியாத கவிதைகளை எழுதி தமிழ்க்கவிதையில் திருப்புமுனையாக அமைந்தமைக்காக சாகித்ய அக்காதமி விருது பெற்றவர். தச்சன் சுருக்கமாக யானையைப்பற்றி அகராதிகள் கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்று வரிசையாக எடுத்துச் சொல்லி செம்மொழி நிதி கிடைத்துள்ள இந்த நிலையிலாவது அபிதானசிந்தாமணிக்கு புதிய பதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தலைவரிடம் முறையிட்டார். தலைவர் உடனேயே எழுந்து மைக்கில் `அந்த அம்மாள் உரிய முறையில் விண்ணப்பம் செய்து கொண்டால் உடனே ஆவன செய்யப்படும்’ என்று அறிவிக்க, அரங்கே கைதட்டி ஆரவாரம் செய்து அதை வரவேற்றது. மேலும் வையாபுரி இடைவிடாத நடிப்புப்பணிகள் நடுவிலும் பேரகராதி ஒன்றைத் தயாரித்திருப்பது கல்லூரி ஆசிரியர்களெல்லாம் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கது என்று தலைவர் சொன்னபோது தீவிரமான கரவொலி எழுந்தது.

அதன் பின்பு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. பெரும்பாலான கட்டுரைகள் முனைவர்பட்ட ஆய்வேட்டுக்குரிய முறைமையைப் பின்பற்றி எழுதப்பட்டிருந்தன. அவை அச்சுபோடப்பட்டு அரங்கில் வினியோகம் செய்யப்பட்டன. `காசிரங்கா யானையும் பெரும்பாணாற்றுப்படையும் ஓர் ஒப்பாய்வு நைஜீரிய யானையின் சிறப்பு குறிப்புடன்’ என்ற கட்டுரையை வாசித்த கரந்தைத் தமிழ்ச்சங்கத்து விதிவண்ணன் இருபது பக்க கட்டுரைக்கு நூற்று நாற்பத்தேழுபக்க அடிக்குறிப்புகள் அளித்திருந்தார். யானைக்கு துதிக்கை உண்டு என்பதற்கு அவர் கலித்தொகை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகியவற்றிலிருந்து ஆதாரம் காட்டியதோடு புகழ்பெற்ற உயிரியலாளர் `யானை’ பாலகிருஷ்ணன் மற்றும் அகமது அலி ஆகியோரின் நூல்களில் இருந்தும் ஆதாரங்கள் காட்டியது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் மொத்த அடிக்குறிப்புகளைக் கூட்டி நாநூற்றி எண்பது என்று காட்டியிருந்ததற்கும் அடிக்குறிப்பு அளித்து அதில் எண்சுவடியை சான்றாதாரமாகக் காட்டியிருந்ததை சற்று மிகை என்றே அறிஞர்கள் கருதினார்கள்.

முனைவர் வீல்வேந்தன் சென்னைப்பல்கலையில் இருந்து துணைவியார் சங்கவை சகிதம் வந்திருந்தார். அவருக்குக் கேட்கத்தான் தெரியுமென்பதனால் யானையைப்பற்றி சகட்டுமேனிக்குக் கேள்வி கேட்டார். திராவிடயானைக்கும் ஆரிய யானைக்கும் உள்ள ஆறுவித்தியாசங்கள் என்ன என்ற அவரது கேள்வி பெரிதும் விவாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து முனைவர் `மகிழவன்’ முறைப்பியல் நோக்கில் யானையைப்பற்றி விரிவாகப்பேசினார். அவரது கட்டுரை எண்பது பக்கங்களுக்கு நீண்டது. அதற்குக் காரணமென்ன என்பதை அவர் முன்னுரையிலேயே விளக்கியிருந்தார். அவர் தன் கட்டுரையை அமைப்பியல் நோக்கில் எழுத ஆரம்பித்து பத்து பத்திகள் தாண்டுவதற்குள் பாரீஸில் அமைப்பியல் காலாவதியாகி விட்டதென்று தகவல் வந்தது. உடனே ஃபோன் போட்டு விசாரித்ததில் பின் அமைப்பியல் முளைத்து வந்திருக்கும் தகவல் தெரிந்தது. அந்த நோக்கில் கட்டுரையில் மறுநாள் மேலும் பத்துப் பத்திகள் எழுதிக்கொண்டிருக்கையில் பின் அமைப்பியல் காலாவதியாகிவிட்ட தகவல் தெரியவே பதற்றமாகி நியூயார்க்குக்கு ஃபோன் செய்தபோது சிறப்பியல் என்று ஒரு புதுச்சிந்தனை கலிஃபோர்னியாப்பகுதிகளில் எதிர்பாராத இடங்களில் அவ்வப்போது தென்பட்டு மறைவதாக தெரியவந்தது. உடனே அந்த நோக்கில் எழுத ஆரம்பித்து முடிக்கப்போகும்போதுதான் முறைப்பியல் வந்தது. முடிவுரை முறைப்பியல் நோக்கில் எழுதப்பட்டுள்ளது என்றார் மகிழவன்.

முறைப்பியல் என்றால் என்ன என்பதை மகிழவன் சுருக்கமாக விளக்கினார். பிரதியானது வாசகனை நோக்கி முறைக்கிறது என்பதே இந்த கருத்தின் சாராம்சம். இதை நாம் பொதுவாக நவீனநாவல்களை வாசிக்கும்போது தெற்றென உணரமுடிகிறது. வாசகன் திருப்பி பிரதியை முறைக்கும்போது அவ்விரு நிகழ்வுகளும் சந்திக்கும் புள்ளியில் மிகச்சரியாக இலக்கியம் நிகழ்கிறது என்று சொன்னார். காசிரங்கா காட்டில் ஒரு யானையை தத்துவம் எதிர்கொண்டபோது அந்த யானை தன் தூல உருவத்தை விட்டுவிட்டு குறியீட்டுருவம் கொண்டது. ஒரு யானை மொழிக்குறியாக ஆகும்போது அதன் குறி என்னவாக ஆகிறது என்பதை நாம் ஆராயவேண்டும். யானையைக் கட்டுடைக்கும்போது அதைக் கட்டிப்போட்டுச் செய்வது நல்லது என்றார் மகிழவன்.

பேராசிரியர் பழக்குலை எழுந்து மகிழவன் முன்வைக்கும் அதொன்றும் தமிழுக்குப் புதியதல்ல என்றும், தமிழ்மரபிலேயே முறைப்பா என்ற பெயரில் ஒரு பாடல்வகை இருந்திருக்கிறது என்றும், ஆசிரியப்பா மேலோங்கியபோது அது வழக்கொழிந்தது என்றும் சொன்னார். சித்தமருத்துவ நூல்களில் இஞ்சியைப் பற்றிய பல பாடல்கள் இந்த வடிவில் இருந்திருக்கின்றன. இனவிரைவியல் நோக்கில் யானையைப்பற்றி ஆராய்ந்து கவிதைகள் எழுதினால் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம். இனவிரைவியல் கவிதை ரயில்வே அட்டவணைக்குரிய மொழிநடையில் ஐயம் திரிபிலாது தெளிவுற அமைந்திருக்கும் என்றார் அவர். அதைப்புரிந்து கொள்ள அதைப் படிக்கவேண்டிய தேவையே இல்லை.

முனைவர் ராஜகுமார் எழுந்து மகிழவன் கட்டுரையில் `பாடாவதி சிந்தனை’ என்று நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அச்சிந்தனைகள் தெளிவுற வகுத்துரைக்கப்படவில்லை என்றும்; மேற்படி அம்மையாரைப்பற்றிய அடிக்குறிப்பும் அளிக்கப்படவில்லை என்றும்; அஃதொரு குறை என்றும் தெரிவித்தார். பெண்ணியச்சிந்தனையாளர் முனைவர் கலாவதிதான் அச்சுப்பிழையாக அங்கனம் குறிப்பிடப்பட்டிருக்கிறாரா என்று இன்னொருவர் கேட்டார். அமைப்பியல் கலாவதியாகிவிட்டது என்று இருப்பதன் பொருளை ஓர் ஆய்வாளர் கேட்க மகிழவன் அதுதான் அச்சுப்பிழை என்றும் பாடாவதி சிந்தனை என்பது நாம் கட்டுரையில் ஏற்கெனவே எழுதிவிட்ட சிந்தனைகளையே என்றும் விளக்கினார். அத்துடன் தன்பெயர் அச்சிடப்பட்டிருக்கும் இடங்களில் `ம’ என்ற எழுத்து சரியாக விழாமல் பலவகையான கருத்துக்குழப்பத்திற்கு இடமளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இளம் ஆய்வாளர் வேங்கிடமலை வாசித்த கட்டுரை தொல்பழம் நூலான மதங்கதரங்கிணி அல்லது யானைப்பானை என்ற நூலைப்பற்றியது. தென்காசி வைரவன் அண்ணாவியாரால் 1998-ல் எழுதப்பட்டு அவரது மனைவியாரால் வெந்நீரடுப்பு வழியாக வழக்கொழியச் செய்யப்பட்ட இந்த பழம் பிரதியானது பரவலாக தமிழ்நாட்டு அறிவுலகில் அறியப்படாமலிருந்தது. தாய்லாந்தில் பாங்காக், அமெரிக்காவில் லா வேகாஸ், சிங்கப்பூரில் செந்தேசா போன்ற ஊர்களில் நிகழ்த்திய கடுமையான அகழ்வாராய்ச்சியின் பயனாக அந்நூலின் பெரும்பகுதியை மீட்டெடுத்து செம்பதிப்பாக அவர் கொண்டுவந்த வரலாற்றை விவரித்து எஞ்சிய பகுதியைத்தேட விரைவிலேயே மாஸ்கோ வழியாக ஃபின்லாந்துக்குச் செல்லவிருப்பதாகச் சொன்னபோது பிற ஆய்வாளர் துஞ்சுகளிறன்ன உயிர்த்து நெஞ்சுகலுழ்ந்தனர்.

உடனே ஆவேசமாக எழுந்த முனைவர் தேவகஷாயகுமார் `இந்த முட்டாள்தனத்துக்கு அளவே கிடையாதா?

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? புதுமைப்பித்தன் எழுதிய கதைகளையே இன்னமும் நாம் தேடிக்கண்டுபிடித்து முடிக்கவில்லை. அதைப்பற்றிய அக்கறை இல்லாமல் யானையைப்பற்றிப் பேசுவது அயோக்கியத்தனம், மொள்ளமாரித்தனம், பொறுக்கித்தனம். அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்றார். “பால்பாயிண்ட் பேனாக்கள் வராத காலத்திலேயே நான் புதுமைப்பித்தன் கதைகளை கையால் பார்த்து பிரதி எடுத்தவன்” என்று அவர் கண்ணீர்மல்க குறிப்பிட்டார்.

“புதுமைப்பித்தன் கதைகள் இன்னும் மிச்சமுள்ளதா?” என்று சொன்ன தேவகஷாயகுமார் தமிழ்ச்சமூகத்தின் நலன் கருதி அவற்றை தான் தன் தோட்டத்தில் பள்ளம் பறித்து புதைத்து வைத்திருப்பதாகவும்; அந்தக்கதை இல்லாத எந்த புதுமைப்பித்தன் பதிப்பையும் தான் செம்பதிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சொன்னார். பாரதி படைப்புகளுக்கு மெய்ப்பு நோக்குவதும் புதுமைப்பித்தன் கதைகளைத் தேடிக்கண்டுபிடிப்பதும் தமிழாய்வுலகின் முக்கியமான பொழுதுபோக்குகள் என்று சொன்ன தேவகஷாயகுமார் மேலும் மூன்றாமுலக நாடுகள் ஒடுக்கப்படும் சூழலில் அந்தக் கதைகள் வெளியாவதை தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

வேறு ஒரு கேள்விக்குப் பதிலாக தேவகஷாயகுமார் கால்டுவெல்தான் மூன்றாமுலகம் என்ற கருத்தை உருவாக்கியதாகவும் அதை தமிழ்க்கடல் ராய.சொ மறைத்தது வரலாற்று மோசடி என்றும் வாதாடினார். அதை வீல்வேந்தன் ஆமோதித்தார். உடனே புதுமைப்பித்தனுக்கு ஒரு மறுசெம்பதிப்பு கொணரப்படவேண்டும் என்று அவர் கருத்துச் சொன்னார். ஆதிசங்கரரின் பிரம்மசூத்திர பாஷ்யத்துக்கு கடலைக்குடி நடேச சாஸ்திரி எழுதிய எண்ணூறு பக்க உரை நூலை இருமுறை வருடிப்பார்த்துவிட்டு அந்நூலின் மறுபதிப்பில் தன்பெயரை பெரிய எழுத்தில் முதலில் போட்டுக்கொண்ட அவருக்கு புதுமைப்பித்தன் செம்பதிப்பையும் வருடிப்பார்த்து புகழ்பெற ஆசை எழுந்தது இயல்பே.

முனைவர் தமிழேந்தி அவர்கள் `உலக சிந்தனைகளும் தமிழும்’ என்ற தலைப்பில் நீளமாக வாசித்த கட்டுரை முனைவர் நெருஞ்சிவிழியனின் `தமிழிலக்கியத்தில் உலக ஆயுதம்’ என்ற பெரும்புகழ்பெற்ற நூலை அடியொற்றி அமைக்கப்பட்டிருந்தது. கி.மு. பத்தாம் நூற்றாண்டில் சாக்ரடீஸ் ஔவையாருக்கு எழுதிய கடிதத்தில் `சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே பெரிய கள் பெறினே…” என்ற பாடலில் இருந்து அவர் `ஸ்பிரிச்சுவாலிட்டி’ என்ற கருத்தை உருவாக்கியிருப்பதற்கு நன்றி தெரிவித்திருப்பதைக் குறிப்பிட்டார். தலைவியின் கைவளை நெகிழ்தலில் இருந்து கலீலியோ உருவாக்கிய இயற்பியல் விதிகளையும், பரத்தையுடன் தலைவன் புதுப்புனலாடும்போது தலைவியின் முலைமேல் கண்ணீர் வழிந்ததை அடியொற்றி பிளேட்டோ கருத்து முதல்வாதத்தை உருவாக்கியதையும் அவர் விரிவாக விளக்கினார்.

அதன்பின் கட்டுரைகள் வாசிக்கப்பட்டபடியே இருந்தன. நடுவே முனைவர் அக்காப் பெருமாள் `நாட்டாரியல் நோக்கில் யானையும் தமிழும்’ என்ற தலைப்பில் வாசித்த கட்டுரையில் வள்ளியூர் பக்கம் கோணிமூலை என்ற ஊரில் குழியானை மாற்று என்ற சடங்கில் வருடம்தோறும் பதினேழு லட்சம் ரூபாய் செலவில் யானையை குழி தோண்டிப் புதைத்து திருப்பி தோண்டி எடுக்கும் பெரிய திருவிழா நடப்பதைக் குறிப்பிட்டு குழியானை என்று பழைய ஏட்டுச்சுவடியில் இருந்ததை முத்தாலம்மன் கோயில்களை புனருத்தாரணம் செய்த இந்து முன்னணியினர் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவே அது என்றார்.

மேலும் அவர் தான் கள ஆய்வில் திரட்டிய நாட்டாரியல் தரவுகளை தனி இணைப்பாக சேர்த்திருந்தார். `ஆனைக்க கொட்டைய ஆடு வச்சிருந்தா நடக்க முடியுமா?’ `ஆனைக்கு தும்பிக்கை மனுஷனுக்கு நம்பிக்கை’ `சேனைய திங்கிறவன் ஆனையத்திங்க முடியுமா?’ `ஆடு வாலாட்டினா ஆனை குண்டிய ஆட்டும்’ போன்ற முந்நூறு பழமொழிகளை சேர்த்திருந்தார். ஈசாந்திமங்கலம் விலக்குதான் மேலே குறிப்பிட்ட களம். அங்கே ஒரு லார்ஜ் அதிகமாக செலுத்திக் கொண்ட `சலம்பன்’ குமரேசன் ஒரே மணி நேரத்தில் சொன்ன கேள்விப்படாத பழமொழிகள் அவை, அவற்றை அவனும் அதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை என்று அக்காப் பெருமாள் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நள்ளிரவில் தூங்கிவழியும் தலைவர் முன்னிலையில் கருத்தரங்கு முடிவுக்கு வந்தது. முடிவுரை நடந்துகொண்டிருக்கும்போதே பங்கேற்பாளர்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து அம்மாப்பாளையம் வந்துசெல்வதற்கான விமானச்செலவு மற்றும் படிகள் உறைகளில் போட்டு அளிக்கப்பட்டன. பேராசிரியர்களின் கல்வித்தகுதிக்கேற்ப உறைகளின் அளவு மாறியது. முதல்தரம் நச்சினார்க்கினியர் உறை என்றும் இரண்டாம் தரம் இளம்பூரணர் உறை என்றும் மூன்றாம்தரம் பரிமேலழகர் உறை என்றும் குறிப்பிடப்பட்டது.

தலைவர் தன் உரையில் தமிழ் செம்மொழிதான் என்பதை மொழிப்பகைவர் இத்தகைய கருத்தரங்குகளை வந்து பார்த்தால் ஐயமிலாது உணர்ந்துகொள்ள முடியும் என்றார். எதைவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அளந்துவிடுவதற்கு வாய்ப்பளிக்கும் தமிழ்போன்ற ஒரு மொழி உலகிலெங்கும் உண்டா என்று அவர் அறைகூவி தமிழை வெம்மொழி என்று ஐக்கியநாடுகள் சபை அறிவிக்கும்வரை நமது போராட்டம் ஓய்வடைதல் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

தஞ்சையில் இருந்து வந்த பேராசிரியர்கள் தங்கள் சொகுசுப்பேருந்தில் ஒட்டுமொத்தமாக அரிசிக்காரன் பாளையம் நரசிம்ம நாயிடு பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்குக்குக் கிளம்பினார்கள். கருத்தரங்குகள் தோறும் போகும் வசதிக்காக அவர்கள் அந்தப் பேருந்தை அமர்த்தி தொடர்ச்சியாக பயணத்தில் இருந்தார்கள். பிற பேராசிரியர்களும் அவரவர் வசதிப்படி அடுத்த கருத்தரங்குகளுக்கு கிளம்பிச் சென்றார்கள். கருத்தரங்க அறையில் `வானமளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே’ என்ற பாடல் ஒலித்தது.

ந‌ன்றி: குமுத‌ம் தீராந‌தி