படம். புத்தகம். நியூஸ். கா·பி.

(ஜனாதிபதி பதவி, ப்ரதீபாபாட்டீல், Salman Rushdie, பத்திரிக்கை சுதந்திரம், Investigative Journalism,Paparazzi )

Salman Rushdieக்கு KnightHood கொடுத்ததை எதிர்த்து, நடந்த பேரணிகள் (இந்தியாவில், கேரளாவில் கூட!) என்னை வியப்பில் ஆழ்த்தின. அவரை எதிர்த்து அன்று பேரணியில் பங்கு பெற்றவர்கள், அவருடைய நாவல்களை வாசித்திருப்பார்களா என்ற எண்ணம் என்னுள் எழுந்ததை, இங்கே நான் சொல்லியாகவேண்டும். வாசித்திருப்பார்களா? என்ன நாவல் வாசித்திருப்பார்கள்? Satanic Versus? Shame? Fury? Midnight’s Children? The Ground Beneath Her Feet? கடைசில இன்னொரு சாய்ஸ் All Of The Above? கண்டிப்பாக படித்திருக்கமாட்டார்கள் என்றே, நான் நினைக்கிறேன். அப்படியிருக்க ஏன் இத்தனை பேர் பேரணியில் பங்கு பெற்றார்கள்? யாரோ சொல்கிறார்கள் -சிறிதும் யோசிக்காமல், சற்றும் ஆராயாமல் – நாம் அவர்களின் கூத்துக்கு, like a puppet dancing to the strings (of politicians, religious gurus and cinema celebs), சந்தோஷமாக ஆடிக்கொண்டிருக்கிறோம்.

நான், இதுவரை சல்மான் ருஷ்டி எழுதிய ஒரே ஒரு நாவலைத்தான் படித்திருக்கிறேன், அது – The Ground Beneath Her Feet. அது ஒரு பிரமாதமான நாவல். I just loved the way he narrated. அவரைப் போல யாராலும் சீரியசாக காமெடி (அல்லது கேலி!) செய்ய முடியாது. சில விசயங்களில் அவர் என்னைப் போல, பட்டப்பெயர் வைபப்தில்!. கதையில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு முதலில் பெயர் வைப்பார், தொடர்ந்து அந்த கதாப்பாத்திரத்துக்கு ஒரு பட்டப்பெயரும் வைத்துவிடுவார். பிறகு அந்தக்கதாப்பாத்திரத்துக்கு நாவல் தோறும் அதே பட்டப்பெயர் தான். நமக்கு, அந்த கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயரே மறந்துபோயிவிடும். Like Reverend Mother.

போனவாரம் தான் The Midnight’s Children படிக்க ஆரம்பித்தேன். என் deskஇல் இந்தப்புத்தகத்தைப் பார்த்த என்னுடைய boss, இதையா படிக்கிறாய்? 25 பக்கங்களைக்கூட உன்னால் படிக்க முடியாது. You will shoot that guy என்றார். நான் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு Salman Rushdieஐப் பிடிக்குமே என்று மட்டும் தான் சொன்னேன்.

ஆனால் அவர் சொன்னது உண்மை என்பதை மறுக்கமுடியாது. 25பக்கங்கள் என்ன, என்னால் 15 பக்கங்களைக்கூட தாண்ட முடியவில்லை. I just cant stand that “perforated sheet”. what a stupid and cruel imagination? எப்படி இப்படி யோசிக்கறார்? Captivity படத்தில் அந்த juice (அதாங்க கண்,காது,மூக்கு மற்றும் இத்தியாதிகள்!) கூட இப்படித்தான், எப்படி இவர்களால் இப்படி யோசிக்கமுடிகிறது? இது ஒருவகையான torture என்றால், perforated sheet வேறு வகையான torture. அது என்ன Perforated Sheet?

Perforated Sheet என்றால் ஓட்டை இருக்கிற துணி என்று அர்த்தம். கதையின் ஹீரோவின் தாத்தா காஷ்மீரில் ஒரு டாக்டர். அவர் அப்பொழுதுதான் தனது practiceஐ அந்த ஊரில் ஆரம்பித்திருக்கிறார். அங்கிருக்கும் ஒரு மிகப்பெரிய செல்வந்தரின் மகளுக்கு நோய் கண்டவுடன், அந்த செல்வந்தர் தனது ஆஸ்தான மருத்துவர் வராததால் (அல்லது வேண்டுமென்றே!), ஹீரோவின் தாத்தாவை அழைக்கிறார். செல்வந்தரின் மகளுக்கு (Reverend Mother!) இரண்டு மூன்று செக்யூரிட்டிகள் (பெண்கள்!) இருக்கிறார்கள். டாக்டர் அந்த பெண்ணின் அறைக்குள் நுழைகிறார். அந்த பெண் ஒரு துணிக்கு அப்பால் இருக்கிறார். துணியில் ஒரு ஓட்டை இருக்கிறது. அதிர்ந்த டாக்டர், நோயாளி இப்படி துணிக்கு பின்னால் இருந்தால், நான் எப்படி பரிசோதிப்பது என்கிறார். அதற்கு அந்த தந்தை சொல்கிறார், அதற்கு தான் ஓட்டை வைத்திருக்கிறோமே! அவளுக்கு எந்த எந்த பாகங்களில் பிரச்சனை இருக்கிறதோ, அந்த அந்த பாகங்களை இந்த ஓட்டையில் வைப்பாள், நீங்கள் அந்தந்த பாகங்களை பரிசோதித்துப் பார்த்து விட்டு, மருந்து கொடுக்கலாம்! வஞ்சனையில்லாம் அந்த பெண்ணுக்கு மாற்றி மாற்றி எல்லா பாகங்களிலும் நோய் வருகிறது. டாக்டரும் பரிசோதிக்கிறார். டாக்டர்கள் பெண்களைத் தொட்டு பரிசோதிப்பது, அவர்களது தொழில். ஆனால் அந்த அந்த பாகங்களை ஓட்டையில் வைத்துப் பரிசோதிப்பது தான், Cruel Imagination!

ஆனால் சில வாக்கியங்கள் எனக்கு பிடிக்கவே செய்தது. Reverend Motherக்கும் டாக்டருக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் (ஒரு கிரிமினல் கவிஞரை வீட்டில் ஒளித்துவைத்ததற்கு), டாக்டர் “வாயை மூடு!” என்று சொல்லிவிடுகிறார். அன்றிலிருந்து, அந்த Reverend Mother, யாருடனும் பேசுவதில்லை. ஏற்கனவே கணத்துப்போயிருந்த அவரது உடல், இப்பொழுது யாருடனும் பேசாமல் இருக்கும் பொழுது, மேலும் மேலும் வேகமாக இன்னும் அதிகமாக, கணமாகிக்கொண்டே போனது. அவர் பேசாமல் தன்னுள்ளே அடைத்துவைத்துருக்கும் வார்த்தைகள், அவரை ஊதி பெரிதாக்கின.

Mumtaz noticed with concern that her mother was swelling, month by month. The unspoken words inside her were blowing her up

***

Midnight’s Childrenஐத் தூக்கிப்போட்டுவிட்டு (ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகள் போதாதுன்னு,இதுல இது வேறையா!), Orhan Pamuk எழுதிய Istanbul Momories of a city படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் படித்தப்பிறகு தான் தெரிந்தது அது ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய நாவல் போன்றது அல்ல என்பது. ரசித்து படிக்க வேண்டிய ஒன்று. எனக்கு Orhan Pamukக்கின் அந்த எளிமையான நடை பிடித்திருக்கிறது, அவ்வப்போது பளீரென மின்னல் போல வெளிப்படும் சிறு சிறு நகைச்சுவையும். இப்போதைக்கு மூன்று chapters மட்டுமே படித்திருக்கிறேன்.

***

பிறகு என்ன படிப்பது என்று தெரியாமல், 1001 books you must readஐப் பார்த்து, Philip Roth எழுதிய, The Plot Against America படிக்க ஆரம்பித்தேன். என்னால் படிக்கமுடியவில்லை. இரண்டு chaptersலையே நாக்கு வெளியே தள்ளிருச்சு. அவ்ளோ பெரிய பெரிய வாக்கியங்கள். ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு மூன்று முறை படிக்கவேண்டியிருந்தது. So, அதையும் கடாசிவிட்டு, வேறு என்ன படிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். (அப்பொழுதுதான், பிரச்சனை நாவல்களில் அல்ல, என்னுடைய மூட் தான் சரியில்லை என்பது தெரிந்தது!In Cold Blood படித்துமுடித்தபிறகு கடந்த மூன்று வாரங்களாக ஒரு சில பக்கங்களை மட்டுமே படித்திருக்கிறேன்.) அப்பொழுதுதான் Libraryஇல் The Magic Of Thinking Big கண்ணில் பட்டது. கொஞ்ச காலத்துக்கு நாவல்களை தள்ளிவைத்துவிட்டு, self-help படிக்கலாம் என்றிருக்கிறேன். Lets see how it helps!

***

என்னுடைய நண்பர் ஒருவர் தான் எனக்கு இந்த புத்தகத்தைப் பரிந்துரை செய்தார். நானும் அவரும் மிக நெருங்கிய தோழர்கள் (Comrades!) ஆகிவிட்டோம், மிக குறுகிய காலத்தில். எனக்கும் அவருக்கு நிறைய விசயங்கள் sync ஆகின்றன. என்னைப் போலவே அவருக்கும் மூன்று விசயங்கள் ரொம்பப்பிடிக்கும், புத்தகம். மூவீஸ். கா·பி.
ஒரு நாள் Bordersக்கு வெளியே அமர்ந்து, CoffeeBean கா·பியை (கா·பியை விட்டுவிடுகிறேன் என்று நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் ஒரு ·ப்ரண்டிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். இந்தக் பாழாய்ப்போன கா·பியை ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் குற்ற உணர்ச்சி மேலிடுகிறது.கண்டிப்பாக மிக விரைவில் விட்டுவிடுவேன்.) ரசித்துக்குடித்துக்கொண்டிருக்கும் போது, ப்ரதீபா பாட்டில் பற்றி பேச்சு வந்தது. அவர் இப்போ ஜனாதிபதி. ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் உண்மையிலே, மனதைத் தொட்டு சொல்லுங்கள், இந்தியாவுக்கு ஜனாதிபதி பதவி என்ற ஒன்று தேவைதானா? அவர்களுக்கு இவ்ளோ பெரிய அரண்மனையும், இவ்ளோ வேலையாட்களும் தேவைதானா? இதற்கும் ப்ரிட்டிஷ் ராஜ வம்சத்திற்கும் என்ன வித்தியாசம்? சரி அது ஒரு கவுரமான பதவி என்று வைத்துக்கொண்டால், அதற்கு அரசியல்வாதிகள் எதற்கு? போன்ற கணக்கிலடங்கா கேள்விகள் தீர்ந்து போன எங்கள் கா·பிக்கோப்பையை நிரப்பிக்கொண்டிருந்தன. அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்னர் அவரைப்பற்றி தினமும் ஒரு செய்தி வெளியிட்டு வந்த பத்திரிக்கைகள், இப்பொழுது ஏன் அவரைப் பற்றி ஒரு செய்தியும் வெளியிடுவதில்லை? அவர்கள் எங்கே போனார்கள்? அப்படியானால், அவர்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் பொய்யா? இதனால் தான் பத்திரிக்கை மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் எரிச்சல் எரிச்சலாக வருகிறது. நீங்களும் உங்கள் கருத்துச்சுதந்திரமும், பிறகு மிகப்பெரிய மண்ணாங்கட்டியும். எல்லாம் சந்தர்ப்பவாதம். (கொஞ்சம் யோசித்தால் சமீபத்தில் நடந்த எத்தனை பயங்கரங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன அல்லது மறக்கடிக்கப்பட்டிருக்கின்றன என்று விளங்கும்.) இப்போ சமீபத்தில் ஆந்திரா-முடிகொண்டாவில் நடந்த துப்பாக்கிசூட்டை இன்னும் எத்தனை நாட்கள் பத்திரிக்கைகள் ஞாபகத்தில் வைத்து follow-up செய்கின்றன என்று பார்ப்போம்.

***

பத்திரிக்கை சுதந்திரம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்த அன்று தான், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் அதன் வலிமையையும் (the power of investigative journalism) கச்சிதமாக உணர்த்தும் All the presidents men என்றொரு படத்தைப் பார்த்தேன். அமெரிக்க ஜனாதிபதி Nixonஐ பதவி விலக வைத்த இரு பத்திரிக்கை நிருபர்களைப் (Bob Woodward மற்றும்
Carl Bernstein) பற்றிய படம் இது. (கடைசி வரைக்கும் நிக்சன் தான் ஊழல் –Watergate Scandal– செய்ததாக ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பை ஏற்றுக்கொண்டதால் ஊழல் செய்தவராக கருதப்படுகிறார்!)

இந்த investigationஐ இந்த இரண்டு நிருபர்கள் தான் செய்திருந்தனர் என்ற பொழுதிலும், இதற்கு பெரிதும் துணையாகவும், ஊக்கமாகவும், தூண்டுகோலகாவும் இருந்தது, The Washington Postஇன் Executive Editor, BenBradlee தான். நாடு முழுவதும் இந்த இரு ரிப்போர்ட்டர்களை நம்பாமல் (அல்லது நம்ப விரும்பாமல்!) இருந்த பொழுது, WhiteHouse மன்னிப்பு கேட்க்காவிட்டால் வழக்கு தொடர்வோம் என்று எச்சரிக்கை செய்தபொழுதும், “I am going to stick with the boys!” என்று சொல்லி உண்மையை வெளிக்கொண்டுவந்தவர்.

இந்த investigationஐ முடித்தவுடன் Bob Woodward மற்றும் Carl Bernstein, நடந்த சம்பவங்களைத் தொகுத்து All the presidents men என்ற புத்தகமாக வெளியிட்டனர். புலிட்சர் பரிசு (1973) பெற்ற இந்த Non-Fiction புத்தகத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டது தான் All the presidents men என்ற திரைப்படம். An excellent movie. எனக்கு படங்களைப் பார்த்து முடித்தவுடன் அந்தப்படத்தில் வரும் ஹீரோ போல இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பேன். For Example, காக்க காக்க பார்த்த பிறகு அசிஸ்டண்ட் கமிஷ்னர் (அதுவும் பாருங்கள், கமிஷ்னர் வேண்டாமாம். அசிஸ்டண்ட் கமிஷ்னர் தான் வேண்டுமாம்!) ஆக வேண்டும் என்று சீரியஸாக யோசித்தேன். படம் பார்த்துவிட்டு வந்து மறு நாள் காலையில் எழுந்து தன்டால் அடித்தது (இரண்டு நாட்களுக்கு மட்டுமே!) நினைவிருக்கிறது. என் நண்பர் தனக்கும் இதே போல ஒரு wierd behaviour இருப்பதை ஒத்துக்கொண்டபிறகு தான் எனக்கு ஓகே கூல் (நிறைய பேர் இப்படித்தான் இருக்காய்ங்க!) என்று தோன்றியது.

இந்தப்படத்தைப் பார்த்த பிறகு பத்திரிக்கையாளராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. Investigative Journalism. தமிழ்நாட்டில் நிறைய விசயத்தை investigate செய்யலாம். Like த்ரிஷாவை வைத்து விஜயும் அஜீத்தும் கில்லி ஆடுகிறார்களா? அதைத்தானே இங்கு investivative journalism செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்? இதுவா Investigative Journalism? இதை Paparazzi என்றல்லவா சொல்வார்கள்.

***

படம். புத்தகம். காபி

நேத்து Fitness-Firstல எடுத்த DVDஐ ரிட்டர்ன் பண்ணப்போ, அந்த ரிஷப்சனிஸ்ட் சொன்னாங்க, “Muthu, first time you are paying fine, isnt it? Else, you are always on time!” அப்படியா?!! இல்லீங்க்கா, நீங்க என்ன ரொம்ப புகழறீங்க, ஒரு தடவையோ அல்லது ரெண்டு தடவையோ தான் நான் ஒழுங்கா டைமுக்கு ரிட்டர்ன் பண்ணிருக்கேன், மத்த எல்லா தடவையும் கண்டிப்பா fine தான். இப்போ புதுசா, Fitness-First Raffles Placeல, அந்தப்பக்கம் ஓரமா கார்னர்ல ஒரு ட்ரட்மில் இருக்குல்ல, அது நான் கட்டின fineல வாங்கினதுதான்னு எல்லாரும் சொல்றாங்க, உங்களுக்கு தெரியுமா?

சொல்லப்போனா இந்தப்படத்தை எடுத்தேனேயொழிய, நான் பார்க்கவேயில்ல. வீட்டுக்கே எடுத்திட்டு போகல. இங்க ஆபீஸ்லயே என் டெஸ்க்லையே வெச்சிட்டு போயிட்டேன். அப்புறம் அது பாட்டுக்கு ஓரமா, எனக்கென்னன்னு உட்கார்ந்திருந்திச்சு, நேத்து என்னோட boss வந்து, DVDஐ எடுத்து படம் எப்படியிருந்துச்சுன்னு கேக்கறவரைக்கும், இந்த DVDஐ நான் மறந்தேபோயிட்டேன். AKEELAH AND THE BEE, தான் அந்த DVD. படம் பார்க்காமலயே ரெண்டு டாலர் fine கட்டினேன். ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது.

***

என் ப்ரண்ட் அஸ்வின் (சம்மன சாமியார்!) திடீர்னு போன் பண்ணி வாடா இன்னிக்கு மீட் பண்ணலாம்னு சொல்வான். நாங்க எப்பவும் மீட் பண்ணும் Bordersல தான் இந்த saturdayவும் மீட் பண்ணினோம். வழக்கம் போல சில புத்தகங்களைப் புரட்டினோம். புதுசு புதுசா எழுதிட்டேயிருக்காய்ங்க. Kite Runnerஐ எழுதிய khaled hoseiniயின் Thousand Splendid Suns வந்திருக்கு. அது தான் அடுத்து வாங்கனும். சில புத்தகங்கள், தாமாகவே famous ஆகிவிடும். சில அதன் எழுத்தாளர்களின் புகழால் famous ஆகும், ஆனால் புத்தகத்தில் ஒன்றுமே இருக்காது. எடுத்துக்காட்டுக்கு, Catcher In The Rye மிக பிரபலமான புத்தகம். எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களில் ஒன்று. மறுமுறை வாசிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இந்தப் புத்தகம் வெளிவந்த பொழுது JDSalinger ஒன்றும் புகழ் பெற்ற எழுத்தாளர் கிடையாது. ஆனால் புத்தகம் Famous ஆனது. ஆனால் JDSalinger எழுதிய வேறொரு புத்தகமான, NineStories, JDSalingerக்காக famous ஆனது. ஆனால் NineStories அப்படி ஒன்றும் நல்ல புத்தகம் இல்லை. இந்த Thousand Splendid Suns, புத்தகம் எந்த வகை என்று தெரியவில்லை. பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எங்கெங்கு காணினும் HarryPotterஅடாங்கறமாதிரி, எல்லா புத்தகக்கடைகளிலும் (SAN’s bookshopல கூட!) குவிந்துகிடக்கிறது, DeathlyHallows. நான் இன்னும் வாங்கவில்லை. ஐம்பது டால்ர்களாமே?! குறையட்டும். மேலும், நான் இன்னும் HalfBlood Prince படித்து முடிக்கவில்லை. அதை படித்துமுடிக்கும் போது, PaperBack வந்துவிடும், விலையும் குறைந்துவிடும். எனக்கு Hard-Cover edition பிடிப்பதேயில்லை. (என்னிடம் எந்த நாவலுக்கும் hard-cover edition இல்லை!) யார் அதை -அவ்வளவு கணமாக- தூக்கிக்கொண்டு அலைவது? ஜெயமோகன் எழுதிய, கொற்றவை நாவலை, கொஞ்ச காலம் படிக்காமல் நிப்பாட்டிவைத்திருப்பதற்கு, ஒரு காரணம், பயமுறுத்தும் அதன் சுத்த தமிழ் உரைநடையாக இருந்தபொழுதிலும், அதன் கணமும் இன்னொரு முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை. தமிழில் பேப்பர் பேக் வருவதேயில்லை. விஷ்ணுபுரத்திற்கோ, கொற்றவைக்கோ பேப்பர்-பேக் வந்துச்சுன்னா, அதன் எடையில் கணிசமான அளவு குறைய வாய்ப்பிருக்கிறது. படுத்துக்கொண்டு ஹாயாக, கையில் பிடித்துக்கொண்டு படிக்கலாம்.

அஸ்வின், ஏனோ RK Narayanan எழுதிய புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தான். கிடைக்கவில்லை. அப்படியே எங்கயாவது சாப்டுட்டு, வீட்டுக்கு போயிருக்கலாம். படத்துக்கு போகலாம்னு SHAWக்கு போனோம்.

***

என்னோட வாழ்க்கையில, ஒரு சினிமாவுக்கு போயிட்டு, பாதில எழுந்துவந்ததுன்னா ஒரே ஒரு படம் தான். விஜய் நடித்த படம் அது. ரம்பா, தேவயாணி போன்ற நடிகையர் திலகங்களும் அதில நடிச்சிருந்தாங்க. பெயர் என்னன்னு மறந்துபோச்சு. ஆனா படத்தோட கரு ஞாபகம் இருக்கு : விஜயோட கனவில ரம்பா வருவாங்க. கூடவே அவங்களோட மச்சமும். பிறகு எல்லாருமா சேர்ந்து ரம்பாவ தேடிக்கண்டுபிடிப்பாங்க. ஒரு முக்கால்மணி நேரம் பாத்திருப்பேன், எங்க ஊர் மஹாராஜா தியேட்டரில, அப்புறம் விட்டேன் ஜூட். இதில் gate திறக்கமாட்டேன்னு சொன்னாய்ங்க. போடாங்கொய்யாலன்னுட்டு escape ஆகிட்டேன். torture படம்.

அதுக்கப்புறமா, ஓடி வந்ததுன்னா, இந்த சனிக்கிழமை பார்த்த படம் தான். Captivity. நான் உள்ளே போய் பத்து நிமிஷத்தில இதத்தான் நினெச்சேன். நம்ப ராஜ்மோகனையும் (ஜாக்குவார் தங்கம்!) கூட்டிட்டு வந்திருக்கலாமேன்னு. ரத்தத்தப் பார்த்தாலே அலறுகிறவன். இந்தப்படத்தில வரும் ஷ்பெஷல் ஜூஸைப் பார்த்தால் என்ன செய்திருப்பான்னு,எனக்கு ஒரே யோசனை. கண்டிப்பா பின்னங்கால் பிடறியில படற அளவுக்கு ஓடிருப்பான். அது என்ன ஸ்பெஷல் ஜூஸ்? காது, மூக்கு, கண்ணு, நாக்கு போன்ற (அதுக்கப்புறம் என்ன என்ன mix செஞ்சாருன்னு பாக்கல, நான் தான் இறுக்கமா கண்ண மூடிக்கிட்டன்ல!) இத்தியாதிகளை ஒரு மிக்ஸியில் போட்டு, அரைத்து அதை கட்டிப்போடப்பட்டிருக்கும் (கடத்தப்பட்டிருக்கும்!) பெண்ணுக்கு, வாயில் funnelஐ வைத்து ஊத்துவது. அஸ்வின் காதில போய் “மாமா இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடல, எஸ்கேப் ஆயிரலாம்டா” ன்னு சொன்னேன், பய ரெடியா ஓகே சொன்னான். starbucks காபி குடித்துக்கொண்டிருந்த எனக்கு, சில சீன்களில், கிட்டத்தட்ட vomit வந்தேவிட்டது. சும்மாவே starbucks காபி அப்படித்தான் இருக்கும்.

***

கொஞ்சம் தலைவலி இருந்ததால, அன்னிக்கு starbucks காபி வாங்கினேன். இப்பவெல்லாம் ஓடு தண்ணி.அவ்ளோ பெரிய கப்புல. (அதையும் நான் குடிச்சிட்டேன்ங்கறது வேறு விசயம்!) அஸ்வின், sugar போடாம வாங்கிட்டு வந்திட்டான். என்னடா sugar போட்டியான்னு கேட்டேன்? என்னது தனியா நாம sugar போடணுமா? குடுக்கற காசுக்கு அவிங்க sugar கூட போட்டுத்தற மாட்டாய்ங்களான்னு அப்பாவியா கேட்டான்!

வாங்கிட்டு வந்திட்டு, seatல உக்காந்து, குடிச்சிட்டு, அவன் கிட்ட கொடுத்தேன். கொஞ்சம் குடிச்சுப்பாருடான்னு சொன்னேன். அவன் காபி டீ எதுவும் குடிக்கமாட்டான். அமுல் பேபி. பால் மட்டும் தான் சாப்டுவார். ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடர் தான் உபயோகிப்பார். என்கிட்டருந்து வாங்கி, காபிய ஒரு மடக்கு குடிச்சான். பிறகு, உரத்த குரலில், என்னடா கழனிதண்ணி (மாட்டுக்கு வெப்பாங்கல்ல!) மாதிரி இருக்குன்னான். எனக்கு முன்னாள் உட்கார்ந்திருந்த ஒரு சைனீஸ் பொண்ணு, அதுக்கு ஏன் நீ மாடு மாதிரி கத்தறங்கறமாதிரி பாத்தா!

வெளில வரும்போது, அவன்கிட்ட கேட்டேன், “ஏன்டா, நீ கழனிதண்ணி குடிச்சிருக்கியா?!”

இந்த தியேட்டருக்கு விதிக்கப்பட்ட சாபம் போல. இந்த தியேட்டரில் (இதே screen!) நான் இன்னொரு படமும் பாத்திருக்கிறேன். Shrek3. அதுவும் torture படம் தான். வேறுவிதமான torture.

***

என் ப்ரண்ட் ராஜ்மோகனுக்கு animation movies எதுவுமே பிடிக்காது. பிடிக்காது என்றால் கொஞ்சம் கூட பார்க்கமாட்டான். ஹாலில் உட்கார்ந்திருக்கும் போது, சேனல் மாத்தும் போது, தப்பித்தவறி ஏதாவது ஒரு சேனலில் ஏதாவது ஒரு அனிமேஷன் மூவி ஓடிக்கொண்டிருந்தால் போதும், உடனே அவனிடத்திலிருந்து வரும் கமெண்ட்: “போட்டாங்கடா பொம்மப்படம்!” என்னாது பொம்மப்படமா?

முன்பு, Cars படத்துக்கு அவனை நான் வலுக்கட்டாயமாக கூப்பிட்டேன். எப்படியும் அனிமேஷன் மூவி ஒன்றை, அவனைப் பார்க்கவைத்தே தீருவது என்ற கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருந்தேன். ஏன்னா, அவனும் பாக்கமாட்டான், வீட்ல DVD போட்டாக்கா நம்பளையும் பாக்கவிடமாட்டான். ஏதாவது சொல்லி கேலி பண்ணி நம்பள torture பண்ணுவான், torture. நான் எவ்வளவு கூப்பிட்டும், எவ்வளவு offer பண்ணியும் like, டிக்கெட் போடறேன், பாப்க்கார்ன் வாங்கித்தாரேன், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் வாங்கித்தாரேன், அன்னிக்கு dinner கூட நான் sponser பண்றேன்னு சொல்லியும் வரமாட்டேன்னுட்டான். அவ்வளவு மன உறுதி அவனுக்கு. (இல்லீன்னா, சகிப்புத்தன்மை இல்லீன்னு கூட வெச்சுக்கலாம்!). இந்த முறை Shrek3 க்கு கூப்பிட்டுப் போகலாம் என்றிருந்தேன். நல்லவேலை கூப்பிடல. அவன் வந்திருக்கமாட்டாங்கறது வேற விசயம், ஆனா வந்திருந்தான்னா, இனிமேல் பொம்மப்படமே (அவன் பாஷயில்!) தன் வாழ்நாளில் பார்த்திருக்கமாட்டான். ஆனா, cars படம் ரொம்ப நல்லாயிருந்தது. Superb Movie.

***

என்னுடைய நண்பர் (கேள்வியின் நாயகன்!), முன்பொருமுறை, முன்புன்னா கொஞ்ச மாசத்துக்கு முன்ன, கொடுத்திருந்த ஒரு DVDஐ இன்னும் பார்க்காமல் வெச்சிருந்தோம். ஏன்னா அது DVD-RIP fileங்கறதனால, என்னோட stupid Philiphs DVD Playerல ஓடல. அந்தப்படம் – Stay Alive. இப்ப புதுசா நம்ப ஜாக்குவார் தங்கம் ஒரு DVD player வாங்கியிருக்கார். Panasonic Music System. அதுல என்ன போட்டாலும் ஓடுது. ரொம்பநாளைக்கு முன்ன என்னோட இன்னொரு நண்பர் கொடுத்திருந்த ரெஹ்மான் பாடல் கலெக்ஷன் DVD, எதுலையுமே ஓடல. என்னோட DVD Player, என்னோட laptop, என் ப்ரண்டோட laptopன்னு எதுலையுமே ஓடல. என்னோட ப்ரண்ட், அந்த DVDஐ திருப்பி கேட்டப்போ, போயா போ, ஓடாத DVDஐக் கொடுத்திட்டு திரும்ப வேற கேக்கறையான்னு சொல்லிட்டேன். ஆனா பாருங்க அது -எதுலையுமே ஓடாத அந்த டுபாகூர் DVD கூட – அந்த Panasonic palyerல ஓடுச்சு. அதுதான் சொன்னேன், ஜாக்குவார் தங்கத்துக்கிட்ட, நீ டெய்லி, அமிர்தா ஹோட்டல்ல இருந்து வாங்கிட்டு வாறியே சப்பாத்தி, அதுல பில்லான்னு எழுதி, போட்டீன்னாக்க, தல நடிக்கிற, இன்னும் வெளிவராத, பில்லா படம் கூட ஓடும்டான்னு. அவன் மொறச்சு பாத்தான்.

இந்த Stay Alive படத்த அன்னிக்கு பாக்கறதுக்கு ஒன்னும் இல்லாம, ஓடாதுங்கற நம்பிக்கைல தான் அந்த playerல போட்டேன். ஆச்சரியம், ஓடிருச்சு. அப்புறம் தான் ரொம்ப feel பண்ணோம், பேசாம ஓடாமலே இருந்திருக்கலாம்னு. சுத்த waste movie. Game விளையாடுவாங்களாம், அந்த Gameல வர்ற பேய், விளையாடுறவங்க gameல எப்படி சாகறாங்களோ, அதே மாதிரி, exactly like that, கொல்லுமாம். ஓவர் பூ. ஆனா, எங்க கொள்கை எப்படீன்னா, படம் எவ்வளவு டுபாக்கூரா இருந்தாலும், கடைசி வரைக்கும் பாக்காம எழுந்திருக்க மாட்டோம். So, கடைசி வரைக்கும் பார்த்தோம்.
The Urban Legend மாதிரி ஏதாவது திருப்பம் வரும்மான்னும் பாத்துட்டேயிருந்தோம். Nothing.

***

ரிச்சர்ட்கியர்-கீதாஞ்சலி-சரவணா ஸ்டோர்ஸ்-ஏர் டெக்கான்

ரிச்சர்ட்கியர்-கீதாஞ்சலி-சரவணா ஸ்டோர்ஸ்-ஏர் டெக்கான்

போன பதிவைப் படித்துவிட்டு என் தோழி ஒருத்தி சொன்னாள்: “ஏன் அவங்க உனக்கு செல்போன் குடுக்க மாட்டேன்னு சொன்னாங்க? தூக்கிட்டு ஓடிடுவேன்னா? உன்னப்பாத்தா திருடன் மாதிரியா இருக்கு? அதுக்கு தான் சொல்றது ஊருக்குப் போகும் போது ஒழுங்கா முடிய வெட்டிட்டுப் போன்னு!”

நான் கொஞ்சம் நீண்ட தலைமுடி வைத்திருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் கூட அவர்கள் செல்போன் குடுக்க மறுத்திருக்கலாம். நீண்ட தலைமுடிவைத்திருப்பவர்கள் எல்லாம் ரெமோக்கள் அல்ல.

***

ஒரு வழியாக ஸ்டேஷனை விட்டு வெளியேறி கையில் வைத்திருந்த சில நாணயங்களில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைத்தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு டயல் செய்து ஆறு மணியாகும் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, ஒரு டீ சாப்பிட்டேன். மாம்பலம் ஸ்டேசனுக்கு பக்கத்தில் இருக்கும் ரைட் கட்டிங்கில் இருந்த ஒரு டீ கடையில். அதிகாலையில் சூடாக டீ சாப்பிடுவது ஒரு சுகம் தான்.

ஒரு இந்தியா டுடே வாங்கிக்கொண்டேன். ரிச்சர்ட்கியரின் முத்தத்தை அடிப்படையாக வைத்து இந்திய கலாச்சாரத்தைக் காப்பவர்களை (அல்லது அப்படி சொல்லிக்கொண்டு அட்டகாசம் செய்பவர்களை) கேள்விகள் கேட்டிருந்தனர்.

ரிச்சர்ட்கியர் செய்தது தவறா அல்லது BigBrother அம்மணி சிரித்துக்கொண்டே ரசித்தது (உணமையில் ரசித்தாரா என்பது அவர் மட்டுமே அறிந்த உண்மை!) தவறா என்பது சாலமன் பாப்பையாவால் தீர்ப்பு சொல்லப்படவேண்டிய ஒன்று. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ரிச்சர்ட்கியர் மகா ரசிகன். நான் ஆபீஸில் இருக்கும் போது எனக்கு இந்த கிளிப்பிங் ஈமெயிலில் வந்தது. பார்த்தவுடன் எனக்கு ஏனோ எரிச்சல் எரிச்சலாக வந்தது. மாஸ்டர் ஆம்லேட்! (இது நான் காலேஜ் படிக்கும் போது famous dialogue. பசங்க யாராவது கடலை போடறதப் பாத்தா, நமக்கு சூடா வயித்துல ஒரு அனல் எழும்பும் பாருங்க, அந்த ஹீட்டில் ஒரு முட்டைய உடச்சு ஊத்தினா அது உடனே ஆம்லேட் ஆயிடுமாம்! அவ்ளோ ஹீட்!)

Viewers Envy! Kissers Pride! What about Kissie?

***

கீதாஞ்சலியில் என்ன ஸ்பெஷல் என்று தெரியவில்லை. அதிகாலை நான்கு நாற்பதுக்கு receptionistஐ எழுப்பிய போது, வேண்டா வெறுப்பாக அவர் ரூம் போட்டுக்கொடுத்தது கூட இருக்கலாம். அல்லது ஏசி ரூம் புக் பண்ணியும் துண்டு, சோப்பு கூட குடுக்காது இருக்கலாம். கதவைத் திறந்தவுடன் ஓடிய கரப்பான்பூச்சிகளாக இருக்கலாம். இல்லை ஏசி ரூமில் எவ்வளவு நேரம் ஓடியும் கொஞ்சமும் குளிராத ஏசியாக இருக்கலாம். டீவி ரிமோட் காலை ஏழு மணிக்கு கேட்டு, கீழே ரிசப்ஷனில் மறுமுறை ஞாபகப்படுத்தியும் நாங்கள் கிளம்பும் வரை ரிமோட் கொடுக்காதது கூட இருக்கலாம். டீ சொல்லுவதற்காக ரிசப்ஷனுக்கு கால் செய்து, “சார் ஒரு டீ..” என்று சொல்லி முடிப்பதற்குள் “ஏழுக்கு கால் பண்ணுங்க” என்று சொல்லி டப்பென்று வைத்ததாக இருக்கலாம். நாங்கள் கேட்டிருந்த சுமோ வருகிறது வருகிறது என்று சொல்லி ஒரு மணி நேரம் வீணடித்து கடைசியில் கூலாக “வராதாம்” என்று சொன்னது கூட இருக்கலாம்.

கீதாஞ்சலி fast foods இல் நாலு இட்லி ஒரு தோசை சொல்லிவிட்டு அரைமணி நேரமாக நின்று கொண்டிருந்தேன். இத்தனைக்கும் கூட்டம் அதிகம் இல்லை. பொறுமையிழந்து அங்கே காபி போட்டுக்கொண்டிருந்த பையனிடம் சென்று “ஹலோ. நான் நான்கு இட்லி ஒரு தோசை சொல்லிருந்தேன். இன்னும் வரல என்னாச்சு” பதில்லில்லை. அவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. “ஹலோ” பதிலில்லை. “தம்பி” பதிலில்லை. நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா? “தம்பி” நிமிர்ந்து பார்த்தான் “என்ன?” you see, just என்ன. (நான் தம்பி என்று மரியாதையாக கூப்பிட்டேன். நான் கண்டிப்பாக அவனை விட வயதில் மூத்தவனாகத்தான் இருப்பேன்.) “நான் நாலு இட்லி ஒரு தோசை பார்சல் சொல்லிருந்தேன்..” என்று நான் சொல்லிமுடிப்பதற்குள், அவன் “சொல்ட்டேல்ல. கொடுப்பாங்க. போ” என்றான். எனக்கு பளார் என்று ஒன்று விடலாமா என்று தோன்றியது. பிறகும் அவன் கையில் கொதித்துக்கொண்டிருந்த பால் என்னை அச்சப்படுத்தியது. முகத்தில ஊத்தினாலும் ஊத்திருவான். நகர்ந்து safeஆக நின்று கொண்டேன்.

***

சரவணா ஸ்டோர்ஸ் கண்டிப்பாக போயே ஆக வேண்டும் என்று என் அக்கா அடம் பிடிக்கவே, வேறு வழியில்லாமல் சென்றோம். கூட்டமோ கூட்டம். எனக்கு பிரமிப்பாக இருந்தது. இன்று வரை அந்த பிரமிப்பு அகலவில்லை. அடேயப்பா எவ்வளவு items. எத்தனை salespersons. எத்தனை மக்கள் கூட்டம். எப்படி சமாளிப்பார்கள்? சமாளிக்கிறார்கள்? விலையும் குறைவு என்று என் அக்கா சொன்னார். கூட்டத்திலும் இரைச்சலிலும் தள்ளுமுள்ளுவிலும் என்னால் நிற்க முடியவில்லை. ஆனால் நாள் முழுதும் நின்று கொண்டு, வாடிக்கையாளர்களின் “இதே ஸ்கூல் பேக் வேணும் ஆனா முன் பக்கம் ஜிப் இல்லாம ராமர் பச்சை கலர்ல வேணும். இருக்கா?” போன்ற stupid கேள்விகளுக்கு சலைக்காமல் முகத்தில் சிரிப்புடன் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த salespersonகளுக்கு ஒரு பெரிய சல்யூட்.

***

சரவணா ஸ்டோர்ஸில் purchase கூட பண்ணிவிடலாம் ஆனால் லிப்ட் கிடைப்பது தான் கஷ்டம். சிங்கப்பூரில் வீடு கிடைப்பதை விட கஷ்டமானதாகத் தோன்றியது எனக்கு. சரி படிகளில் இறங்கிவிடலாம் என்று நினைத்தபோது அம்மா எப்படி இறங்குவார்கள் என்ற எண்ணம் தோன்றியது.

காத்திருந்தோம். லிப்ட் வந்தது. எங்கள் floorஇல் இருந்து கொஞ்சம் பேர் மட்டுமே ஏற முடிந்தது. நாங்கள் ஏறவில்லை. லீப்ட் overload. பூட்ட முடியவில்லை. லிப்ட் ஆபரேட் செய்யும் பையன் “please யாராவது ரெண்டு பேர் இறங்குங்க.” என்றான். எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி நின்றிருந்தனர் மக்கள். “ரெண்டு பேர் இறங்குங்க. அப்பத்தான் லிப்ட் போகும்” ஒரு அசைவும் இல்லை. முன்னாள் சில க்கேரி பேக்குகளுடன் நின்றிருந்த நடுத்தர வயது நபரின் முகம் எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவரது முகமும் எனக்கென்ன வந்தது என்ற அந்த noexpression-expressionம். வாவ்.

அப்புறம் என் அண்ணன் இறங்குங்களேன் ன்னு ஒரு சவுண்ட் கொடுத்ததற்கப்புறம் தான் இறங்கினர். ஏன் இறங்கமறுத்தனர்? லிப்ட் ஓவர் லோட் என்று தெரியாதா? அதுதான் ஆபரேட்டர் சொல்கிறாரே. அப்புறமும் தைரியமாக எப்படி நிற்கின்றனர். லிப்ட் overloadஇல் எங்காவது பாதியிலே நின்று விட்டால்? அப்பொழுது என்ன செய்வது?

எனக்கு ஓவர்லோடாக சென்ற ஷேர் ஆட்டோ ரயில்வே க்ராஸிங்கில் மாட்டிக்கொண்டு ஆக்ஸிடென்ட் ஆன சம்பவம் ஏனோ நினைவுக்கு வந்தது. அதில் பயணம் செய்த மக்கள் கொஞ்சம் பொறுப்புணர்வோடு செயல்பட்டிருந்தால் அந்த ஆக்ஸிடென்டை தவிர்த்திருக்கலாம்.

எல்லோருக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

***

சென்னையிலிருந்து மதுரை வருவதற்கு train tickets எல்லாமே full. எனவே நான் air-deccanஇல் எல்லோருக்கும் ticket போட்டிருந்தேன். என் நண்பன் சிவா முன்னரே சொல்லியிருந்தான் : உங்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மாதிரி இருக்காது. flight கிளம்புவதற்கு கொஞ்ச நேரம் முன்னர் தான் ஏசி போடுவார்கள். இறங்கிய அடுத்த நொடி ஏசி ஆப் செய்யப்பட்டு விடும். அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. Budget Airways என்றால் அப்படித்தான். குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்கிறார்களா இல்லையா? Gain something, you loose something.

அதிகாலையில் வேகமாகவே கிளம்பிவிட்டோம். காலை நான்கு மணி இருக்கும். எங்களுக்கு ப்ளைட் ஆறு நாற்பதுக்கு. ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தவுடன் எனக்கு ஷாக். அவ்ளோ கூட்டம். பெரிய க்யூ. அப்பாவையும் அம்மாவையும் ஒரு இடத்தில் அமரச்செய்து விட்டு, நானும் அண்ணனும் luggageஉடன் க்யூவில் நின்றோம். நீண்ட நேரம் கழித்து, security check அருகில் சென்றவுடன், அங்கிருந்த பையன் சொன்னான் “மதுரை செல்லும் ப்ளைட்டுக்கான கவுண்ட்டர் இன்னும் ஓபன் செய்யப்படவில்லை. கொஞ்ச நேரம் நில்லுங்கள்” என்றான்.

நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். மணி 5:15. கொஞ்ச தூரத்தில் ஏதோ சலசலப்பு கேட்கவே என்வென்று பார்க்கப் போனேன். அங்கே ஒரு வடக்கத்திய குடும்பம் அங்கிருந்த ஏர் டெக்கான் ஆபிசருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் flightக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. இவர்களை செக்கின் செய்ய மறுக்கிறார்கள். அந்த கும்பலில் இருந்த பெண்மணி தாம்தூம் என்று குதித்துக்கொண்டிருந்தார்.அதிகாரி என்னால் ஏதும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்.

உள்ளேயும் போக முடியாது. டிக்கெட் பணமும் திரும்பக்கிடைக்காது. ஆனால் வெளியே போகலாம்! என்றார் அதிகாரி. என்னை போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர் சொன்னார்: உங்களுக்கு தெரியுமா டெக்கான் ஏர்வேஸில் பயணம் செய்ய வேண்டுமானால் மூன்று மணி நேரத்துக்கு முன்னர் வரணும்.

(மூணு மணி நேரமா? பிறகு எதுக்கு flightல போவானேன்? மதுரைக்கு போறோம்னு வெச்சுக்கோங்க. மதியம் 12:30 வைகையை பிடிச்சொம்னா கரெக்டா 8 மணி சுமாருக்கு மதுரைக்கு கொண்டுபோய் விட்டுடுவான். Travelling time just 7:30 hrs. இந்த ப்ளைட்ல போறதுக்கு வீட்ல இருந்து ஏர்போர்ட் வருவதற்கு ஒரு மணி நேரம். மூணு மணிக்கு முன்னர் வரணும். அப்புறம் travelling time 45 நிமிஷம். அப்புறம் லக்கேஜ்க்காக வெயிட் பண்றது ஒரு 45 நிமிஷம்னு இதுவே 5 மணி நேரம் கணக்கு வந்திருது. மிச்சமென்ன? trainல போனா லக்கேஜ் செக்கின் பண்ற தலைவலி இருக்காது.)

அவர்களைப் பத்திக் கவலையில்லை. என்னோட கவலை இப்போ அதிகமாயிடுச்சு. மணி 5:30 ஆகிருச்சு. 6:40க்கு flight. இன்னும் கவுண்ட்டரே ஓபன் பண்ணல. அதே அதிகாரியிடம் போய் “அண்ணே மணி 5:30 இன்னும் மதுரை ப்ளைட் கவுண்ட்டர் ஓபன் பண்ணவேயில்ல. தயவு செஞ்சு ஓபன் பண்ணிடுங்க. பிறகு இந்தமாதிரி ஆக்கிவிட்டுடாதீங்க” ன்னு சொன்னேன். அதற்கப்புறம் தான் அவர் பார்த்து கோயம்புத்தூர் கவுண்டரில போடறேன் நீங்க போங்க சார்ன்னு சொன்னார்.

***

கோயம்புத்தூர் செல்லும் விமானத்துக்கும் மதுரை செல்லும் விமானத்திற்கும் boarding pass வாங்குவதற்கு ஒரே க்யூ தான். போர்டிங் பாஸ் வாங்கறதுக்கு க்யூவுல நிக்கறதுக்குள்ள பெரியபாடாயிருச்சு. அப்படி அப்படியே இடைச்செறுகலா மக்கள் வந்து ஒட்டிக்கறாங்க. எப்படி முடியுது? அவங்களை எல்லாம் அப்புறப்படுத்தி க்யூ இது, பின்னாடி போங்கன்னு சொல்ற வேலையை நான் எடுத்துக்கிட்டென்.

அங்க கவுண்ட்டர்ல ஒரு foreign lady சண்டை போட்டிட்டிருந்தாங்க. over luggage fine கட்டுங்கன்னு air-deccan சொல்லுது. அந்த அம்மணி கூலாக என்கிட்ட பணம் இல்லன்னு சொல்றாங்க. பணமில்லை என்னால fine கட்ட முடியாது. இந்த இடத்தை விட்டும் போக மாட்டேன். Mangerஅ இங்க வரச்சொல்லுன்னு சொல்லிட்டிருந்தாங்க. அப்படி போடு!

இந்த குழப்பத்தில் நான் சென்று என் டிக்கெட்டைக் காட்டினேன். அங்கிருந்த செக் இன் செய்யும் நபர் foreign ladyஐ திட்டிக்கொண்டே, என்னுடைய luggageக்கு கோயம்புத்தூர் ஸ்டிக்கர் ஒட்டினார். அடப்பாவி நான் மதுரைக்கு போகும் போது என் luggage மட்டும் எப்படி கோயம்புத்தூர் போகும்?

நல்லவேளை நான் கவனித்தேன். இல்லையேல் மதுரை சென்று எங்கடா இன்னும் பேக் வந்து சேரலைன்னு பேக்கு மாதிரி முழிச்சிட்டு இருந்திருப்பேன்.

***

சூரியனோ? சந்திரனோ? – செல்போன் இருக்கா?

எழுதுவதற்கு கொஞ்சமும் நேரம் கிடைப்பதில்லை, இப்பொழுதெல்லாம். அப்படியே கிடைத்தாலும் என்ன எழுதுவது என்றும் தெரிவதில்லை. திரும்பத்திரும்ப, படித்த புத்தகங்களைப் பற்றியும், பார்த்த படங்களைப் பற்றியும் எத்தனை முறைதான் எழுதுவது. ஆனால் இதையும் எழுதாவிட்டால் பிறகு எதைத்தான் எழுதுவது. இவற்றைத் தவிர்த்து வேறு ஏதாவது எழுதினால் அது கண்டிப்பாக மொக்கைப் பதிவாகிவிடுகிறது.

***

போன வாரம் இந்தியா சென்றிருந்தேன். ஒரு வார அவசர விஸிட். பல்லேலக்கா பல்லேலக்கா காவிரியாரும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா ன்னு பாட்டு பாடிட்டே போகலாம்னு நினைச்சேன். ஆனா அதெல்லாம் அமேரிக்கால இருந்து வற்ரவங்கதான் பாடனுமாமே? இங்கனக்குள்ள இருக்கற சிங்கப்பூர்ல இருந்து வந்துட்டு இந்த அலும்பான்னு கேக்கறாங்க. சரி விடுங்க. இன்னோரு மேட்டர் சொல்றேன். சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டென சொல்லு, பாட்டக்கேக்கும் போது எனக்கு ஒன்னு தோணுச்சு.

ஒரு ஊர்ல சூரியன், சந்திரன் அப்படீன்னு ரெண்டு twins இருந்திருக்காங்க. சூரியன் ரொம்ப குண்டு. சந்திரன் ரொம்ப ஒல்லி. சூரியன் நல்லாவே படிக்கமாட்டான். சந்திரன் நல்லா படிப்பான். சூரியன் இந்தியாவிலே இருந்திட்டான். சந்திரன் சாப்ட்வேர் இஞ்சினியர்யாகி அமெரிக்கா போயிட்டான். (நல்லா படிச்சாத்தான் அமெரிக்கா போகமுடியும் அப்படிங்கற அர்த்தம் இல்ல!) நம்ப சந்திரன் அமெரிக்கா போன பிறகு நல்லா அங்க மாட்டுக்கறி பன்றிக்கறின்னு ஏதேதோ சாப்டு நல்லா தொந்தியும் தொப்பையுமா குண்டாகிட்டான். பின்ன ரொம்ப நாள் கழிச்சு லீவுல இந்தியா வந்திருக்கான். வீட்டுக்கு பல்லேலக்கா பல்லேலக்கான்னு பாட்டு பாடிட்டே வந்திருக்கான். அவங்க அப்பத்தா நிமிந்து பாத்திட்டு “பல்லு வெளக்கல. எனக்கு தான் பொக்கைவாய்ல” ன்னு சொல்லிருக்கு. பாரு கெழவிக்கு எம்புட்டு திமிருன்னு நெனச்சிருக்கான். அப்புறம் தான் அப்பத்தா சொல்லிருக்கு “சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டென சொல்லு” ஏன்னா ரெண்டு பயலுவலும் குண்டாத்தான இருக்காய்ங்க? இதுல யாரு சூரியன் யாரு சந்திரன்னு குழப்பம் வரத்தான செய்யும்?

அப்புறம் “அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா” ன்னு சந்திரன் பாடிட்டேயிருந்திருக்கான். சந்திரன் வந்துட்டான்ல இனிமே நம்ப வீட்ட அவனோட அமெரிக்கா வீடு மாதிரி நல்லா hitechஆ மாத்திருவான்னு கெழவி நெனச்சது. பாத்த காலைல இருந்து ராத்திரி வரைக்கு அவன் தூங்கிட்டே கெடந்திருக்கான். அப்பத்தான் அப்பத்தா கேட்டுச்சு, “ஏண்டா சூரியா, இந்த சந்திரன், ‘அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா அமெரிக்கா’ ன்னு பாடிட்டு கெடந்தானே? என்ன இப்படி தூங்கிட்டு கெடக்கான்” ன்னுச்சு. அதுக்கு சூரியன் சொல்லிருக்கான்: “உனக்கு விசயம் தெரியாதா அப்பத்தா. நம்பளுக்கு பகல்ன்னா அமெரிக்காவில ராத்திரி. அதானால தான் அவன் சொன்னான், தமிழ்நாடும் அமெரிக்கான்னு. இங்க வந்து பகல்லையும் நல்லா தலையோட பொத்திக்கிட்டு தூங்கறதுக்குத்தான் இந்த பில்டப்பு” ன்னுருக்கான்.

“காவிரியாறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமான்னு” பாடிட்டேயிருந்திருக்கான். அப்பத்தா அவன் கிட்ட கேட்டுச்சு, “ஏண்டா கோர்ட்டு கர்நாடகாவ எத்தன டிஎம்சி தண்ணி தெறந்து விடச்சொல்லுச்சு, அதுக்கு அவிங்க எத்தன டிஎம்சி தொறந்து விட்டாய்ங்கன்னு தெரியுமா?” அவன் முழிச்சான். பிறகு சொன்னான், “வாஜ்பாய்க்கு வந்த selective memmory disorder மாதிரி எனக்கு situation memmory disorder இருக்கு. அதனால இந்த situationla மறந்து போயிருச்சு. பின்னால ஞாபகம் வரும்போது சொல்றேன் கெழவி” ன்னு சொன்னான். மனசுக்குள்ளே “கெழவி எப்படி கோர்த்துவிடுதுபாரு” ன்னு நெனச்சுக்கிட்டான்.

***

இந்த முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ¤ம் ஒன் ஹவர் டிலே.யாரோ பேஸஞ்சர் கடைசி நிமிடத்தில வரலையாம். அதனால அவரோட செக்-இன் பண்ணின பேக்கேஜ்ஜையெல்லாம் திரும்ப எடுத்திட்டு இருந்தாங்க. அதனால லேட். ஆனா வழக்கத்துக்கு மாறா வேகமாக போச்சு. கடைசியில லேண்ட் ஆகும் போது பத்து நிமிசம் தான் லேட். நாம வேகமா போய் ஒன்னும் மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில கையெழுத்து போடப் போறதில்லதான், ஆனா அப்படி கையெழுத்து போடறவங்களும் இருக்காங்களே!

***

விமானத்தில் என் சீட்டுக்கு பக்கத்தில் இருந்தவர் ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறவர். என் வயது அல்லது கொஞ்சம் அதிகம் இருக்கும். சிங்கப்பூரில் transitஇல் நண்பர்கள் வீட்டில் சொஜ்ஜி பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுவிட்டு ஹாயாக வந்திருந்தார். நான் தமிழ் தான் என்றவுடன் அவருடைய முகத்தில் ரொம்ப சந்தோஷம். நிறைய பேசனும்னு நினைச்சார். பொன்னியின் செல்வனை முப்பது தடவைக்கும் மேல் படித்திருப்பதாகச் சொன்னார். முப்பது தடவையா? கொஞ்சம் கஷ்டம் தான். மதனிடம் ஒரு முறை ஒருவர் கேள்வி கேட்டிருந்தார் : ” நீங்கள் அதிக முறை படித்த புத்தகம் எது” என்று. அவர் பொன்னியின் செல்வன் என்று சொல்லிவிட்டு பிறகு சொன்னார் “இப்பொழுதெல்லாம் ஒரு புத்தகத்தை ஒரு முறைக்கு மேல் படிப்பதில்லை. ஏனென்றால் அதே புத்தகத்தை மறுமுறை படிக்கும் அந்த நேரத்தில் வேறொரு புத்தகத்தை படித்துவிடலாமே” என்றார்.

நானும் மதன் கட்சிதான். இது வரையில் நான் எந்த ஒரு புத்தகத்தையும் ஒரு முறைக்கு மேல் படித்ததில்லை. பொன்னியின் செல்வன் உட்பட.

***

சுயவிளம்பரம் எனக்கு பிடிக்காது! (ம்ம்…சொன்னாங்க. சொன்னாங்க!) ஆனாலும் புத்தகத்தைப்பத்தி பேசிட்டிருந்தப்போ நான் ஒரு bloggerன்னு சொல்லியிருக்கக்கூடாதுதான். ஒரு நிமிஷம் யோசிச்ச அவர், “நான் ஒரு blogger” ன்னு அவர்க்குள்ளே சொல்லிக்கொண்டார், பிறகு “அது என்ன புக்? கொஞ்சம் சொல்லுங்களேன்” ன்னு சொன்னார்.

***

சென்னையில் தாஜ் கோரமண்டலில் சாப்பிட்டோம். ரெஸ்டாரெண்ட் பெயர்: Match Point. பசங்ககிட்ட அஞ்சப்பர் போகலாம்டான்னு சொன்னா வித்தியாசமா பாக்கறாய்ங்க. இப்பெல்லாம் சோழா செராட்டான், லீ ராயல் மெரிடியன், அப்புறம் ஏதோ கார்னர் (அதுவும் buffet தான்), பார்க் இன் அப்படீன்னு தான் சாப்படறாங்களாம்.

அப்புறம் வேளச்சேரில டபுள் பெட்ரூம் ப்ளாட் வாடகை ஏன் பணிரெண்டாயிரம் ரூபாய் இருக்காது? நான் முதன் முதலில் சென்னைக்கு வேலை தேடி வந்த போது, இப்ப இருக்கற 100 ft ரோடெல்லாம் வெறும் காடுதான். அதிகமில்லை ஜென்டில்மேன் just before six years!

இப்போ அதே இடத்தில் வாடகை : பணிரெண்டாயிரம்! எப்பொழுதும் current போகவேபோகாதாம். மொட்டை மாடியிலிருந்து அந்த ப்ளாட்டையே பார்த்துக்கொண்டு சொன்னார்கள் என் நண்பர்கள்.

இரவு மொட்டைமாடியில் தான் தூங்கினேன். கொசுக்கடி. ஆனா நாள் பூரா வெயில்ல அலைஞ்சு திரிஞ்சதுக்கு இரவு குளிர் இதமாக இருந்தது.

Match Point-ல் கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனால் உணவு எனக்கு பிடித்திருந்தது. அங்கு சாப்பிட வந்திருந்த girlsம். நாங்கள் சாப்பிட்ட இடம் : pool view.

***

காலையில் எழுந்து டி.நகரில் கீதாஞ்சலியில் ரூம் போட்டுவிட்டு, மாம்பழம் ரயில் நிலையத்திற்கு குடும்பத்தினரை வரவேற்கச்சென்றேன். என்னிடம் செல் போன் இல்லை. என் நண்பன் நவனீதனின் செல் போனைத்தான் உபயோகித்துக்கொண்டிருந்தேன். அதிகாலையில் அவனிடமிருந்து வாங்கிவரவில்லை.

என் அண்ணன் நெல்லை எக்ஸ்பிரஸ் மாம்பழத்துக்கு, காலையில 5 மணிக்கெல்லாம் வந்திடும்டான்னு சொல்லியிருந்தார். நான் ஸ்டேஷன் போனதென்னவோ 5:10. எனக்கு சந்தேகம். டிடீயாரிடம் விசாரித்ததில் அவர் 5:30க்குத்தான் வரும்ன்னு சொன்னார். பிறகு போர்ட்டரிடம் விசாரித்ததில், எப்படியும் காலை ஆறு மணி ஆகிவிடும்ன்னு சொன்னார்.

எனக்கு குழப்பம். பசிக்கவேறு செய்கிறது. செல்போன் இருந்தால் வசதியாக இருக்கும். அண்ணனுக்கு கால் பண்ணி exactly எங்க வந்திட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

பக்கத்து இருக்கையில் கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ¤க்கு மூன்று இளைஞர்கள் காத்துக்கொண்டிருந்தனர். சாப்ட்வேர் மக்கள் என்பது அவர்களது பேச்சிலிருந்து தெரிந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களிடம் செல்போன் வாங்கி ஒரு கால் செய்யலாமா என்று யோசித்தேன். ஆனால் கொஞ்சம் தயக்கம் இருந்தது. சிறுது நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். ஒரு டீ சாப்பிடனும் போல இருந்தது. எங்கிருக்கிறார்கள் என்று தெரிந்தால் வெளியே போய் நிம்மதியாக டீ சாப்பிட்டு விட்டு வரலாம். முடிவாக அவர்களிடம் செல்போன் கேட்பது என்று முடிவு செய்தேன்.

எழுந்து சென்று “ஹலோ. எக்ஸ்க்யூஸ் மீ. உங்களிடம் செல்போன் இருக்கிறதா? அவசரமா ஒரு கால் செய்யனும். ப்ளீஸ்” என்றேன். அதில் கண்ணாடி அணிந்திருந்த வளர்த்தியாக இருந்த ஒரு நபர் சட்டென்று சொன்னார் : “இல்லை”. நான் ஒரு நிமிடம் தடுமாறிவிட்டேன். “yeah sure” என்ற பதிலைத்தான் நான் எதிர்ப்பார்த்திருந்தேன். என் வாய் தானாக “இல்லையா?” என்று கேட்டது. மீண்டும் திட்டவட்டமாக அவர் “ஆமாம். எங்களிடம் இல்லை” என்றார். “ஓகே. தாங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு மீண்டும் என் இடத்தில் – அவர்கள் பக்கத்தில் இருந்த இருக்கையில் – வந்து அமர்ந்து கொண்டேன்.

Embarrased. என்னால் அவர்களைப் பார்க்கவே முடியவில்லை. so அவர்கள் அமர்ந்திருக்கும் எதிர் திசையிலே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் பேச்சை சுத்தமாக நிறுத்தி விட்டிருந்தனர். அவர்களுக்குள் பேசவே இல்லை. நீண்ட மௌனம்.

கோயம்புத்தூர் train வந்தபிறகு அவர்கள் சத்தமில்லாமல் ஏறிச்சென்றனர். அதற்கப்புறம் தான் என்னால் அவர்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கி பார்க்கவே முடிந்தது.

***

Nypei, Lie Groups and OBA

ந்தோனேசியாவின் பாலி தீவில் ஒரு நாள் நிசப்தத்தை வருடந்தோரும் அனுஷ்டிக்கிறார்கள். இந்த நாள் பாலியின் லூனார் புதிய வருடப்பிறப்பன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த மார்ச் பத்தொன்பதாம் தேதி. இதை சுய பரிசோதனை நாள் என்று எண்ணுகிறார்கள். அதனால் அதற்கு தடையாக வரும் வெளி சமாச்சாரங்கள் அனைத்தும் மறுக்கப்படுகிறது.

இந்த நாளில் – பொதுவாக இரைச்சல் மிகுந்து காணப்படும் – பாலி வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வெளிநாட்டினர் -ஆஸ்திரேலியா பாலிக்கு சென்றிருந்த தனது சுற்றுலா மக்களுக்கு “தடையை சீரியசாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை அளித்திருக்கிறது – கூட வெளிவருவதில்லை. (பத்து வருடங்களுக்கு முன்னர் டூரிஸ்டுகளுக்கு இந்த தடையில்லை, அவர்கள் அன்றைக்கு வெறிச்சோடிக்கிடக்கும் வீதிகளை சுற்றிப்பார்க்களாம்) எந்த கடைகளும் – மிகச்சிறிய தெருவோரக் கடைகள் கூட- திறந்திருப்பதில்லை. எல்லோரும் வீட்டுக்குள்ளே இருக்கின்றனர். இரவு முழுதும் விளக்குகள் அனைந்தேயிருக்கின்றன. ரோந்து பணியாளர்களான Pecalangs மட்டுமே தெருக்களில் சுற்றித்திரிவார்கள். இந்த தினத்தை Nyepi என்று அழைக்கிறார்கள். பாலியின் பெரும்பான்மையான ஹிந்து மக்கள் இந்த நாளை புதுவருடப்பிறப்பாக அனுஷ்டிக்கிறார்கள்.

இவ்வாறு அமைதியாக இருக்கும் இந்த நாளுக்கு முந்தைய நாள் மிகுந்த இரைச்சல் மிகுந்ததாக இருக்கிறது. மக்கள் கெட்ட ஆவிகளை விரட்ட வீட்டில் தயாரித்த மூங்கிலிலான பீரங்கிகளை உபயோகித்து சுடுகின்றனர். ஒகோ-ஒகோ (ogoh-ogoh) என்று அழைக்கப்படும் இந்த கெட்ட ஆவிகள் தெருவெங்கும் இழுத்துவரப்பட்டு பிறகு கொழுத்தப்படுகின்றன.

பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியா இந்த நாளுக்கு பொதுவிடுமுறை அளித்துள்ளது. அன்று மசூதிகளில் தொழுகைக்கு ஸ்பீக்கரில் அழைக்கும் குரல்கள் கூட நிறுத்தப்படுகின்றன.

மிக முக்கியமான விசயம்: இந்த Nypei நாளுக்கு மறுநாள் முத்த தினம் (kissing ritual) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் ப்யூரிட்டன்களிடமிருந்து பாலியின் இளசுகள் வெற்றிகரமாக இன்று வரை இந்த தினத்தை காப்பாற்றி வந்திருக்கின்றனர். பாலிக்கு டூர் போகனும் என்று நினைப்பவர்கள் இந்த நாளை அனுசரித்து போங்கப்பா!

***

Lie Groups என்ற ஒன்றை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? நான் கேள்விப்பட்டதில்லை. கேள்விப்பட்டிருந்தாலும் மறந்திருக்கக்கூடும்! (Dint ring any bell!). சோபஸ் லை (Sophus Lie) என்ற நார்வேஜியன் கணிதமேதையின் நினைவாக இது பெயரிடப்பட்டது. Lie Groups இல் மிக எளிய உறுப்பினர் : வட்டம் மற்றும் கோலம்(இரண்டாவது எளிது!) . எப்படித் திருப்பினாலும் (சுழற்றினாலும்) ஒரே மாதிரியாக இருப்பது.

இந்த வாரம் E8 என்ற மிகக் குழப்பமானதும், மிகப் பெரியதுமான ஒரு வடிவத்தை வரைந்திருக்கின்றனர். It takes 57 co-ordinates to define a point on its surface and has 248 axes of symmetry. (இப்பவே கண்ணக்கட்டுதே!)

இந்த வடிவத்தை வரைவதற்கு கனித மேதைகளுக்கு 453,060 புள்ளிகள் தேவைப்பட்டதாம். மேலும் இந்த புள்ளிகளுக்கிடையே இருக்கும் உறவுகளையும் வகுத்தாகவேண்டும். எனவே அவர்கள் ஒரு அணியை வகுக்கவேண்டும். அதில் 453,060 நிறைகளும் (Rows) 453,060 நிரைகளும் (columns) இருக்கவேண்டும். மொத்ததில் 205 பில்லியன் புள்ளிகள் தேவைப்படுமாம். இதில் பல புள்ளிகள் வெறும் எண்கள் அல்லவாம் – polynomials (x,x2,x3..xn).

E8 வடிவம் பெற்றது String Theroy ஐ எளிதாக (Cost saving!) அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும்.

***


கம்போடியாவின் காந்தி என்றழைக்கப்படும் Preah Maha Ghosananda தனது 78ஆவது வயதில் மார்ச் 12ஆம் தேதி காலமானார். நிறையமுறை nobel peace prize க்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.இவர் ஒரு பௌத்த துறவி. கம்போடியாவின் அரசியலில் என்பதுகளில் இருந்தவருக்கு, ஆசை என்னவோ மக்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்களுக்கு அன்பின் வலிமை வரலாற்று சக்திகளைவிட உயர்ந்தது என்று போதிப்பதிலேதான் இருந்தது.

1992 இல் கம்போடியா முழுதும் மக்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்த Dhamma Yatra சென்றார். போல் பாட் கொன்றுகுவித்த புத்த பிட்சுக்களில் எஞ்சிய மூவாயிரம் பேரில் இவரும் ஒருவர்.

For the pure hearted one
Having clarity of vision,
Being freed from all sense desires
Is not born again into this world.

என்பதே அவரது slogan.
***

இந்த முறை MSDN Connection event க்குப் போயிருந்தேன். One Marina Boulevard இல் உள்ள Microsoft auditorium ல நடந்தது. செமினாருக்கு முந்தய free டின்னர் அருமை! செமினார் முடிந்ததற்கு அப்புறமும் சிலர் “hey still can eat!” என்று சொல்லி சாப்பிட்டதைப் பார்க்க முடிந்தது. என் நண்பன் ஒருவன் “நான் இந்த செமிஅனருக்கு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று: free dinner” என்றான். உண்மைதான். எனக்கு ரொம்ப பக்கம்: from my office. அப்படியே நடந்து பக்கத்து லிப்ட் எடுத்துப் போக வேண்டும் அவ்வளவுதான்!

SOA and OBA (Office Business Application) என்ற தலைப்பில் முதல் செமினார். நமக்கு பலருக்கு SOA என்றால் நன்றாகத் தெரியும் – நம்முடைய மேனேஜர்கள் எல்லாம் வாய்கிழிய பேசும் ஒரு டாபிக். சிலருக்கு web service இன் உண்மையான பயன் கூட தெரியாது என்பது வேறு விசயம். அது சரி, மேனேஜர்களுக்கு அதெல்லாம் தெரியவேண்டுமா என்ன?.(மேனேஜர்கள் மன்னிக்கவும்). OBA என்பது எனக்கும் புதிய டாபிக் தான். (ஆனால் ஏற்கனவே word document கூட நெறைய சண்டை போட்டிருக்கேன். Designing a template and merging the bookmarks with values from database. இது dyanamic என்பதால் கொஞ்சம் கஷ்டம். ஆனால் WML helps a lot. word document ஐ XML வடிவத்தில் save செய்து. பிறகு XML file ஐ parse செய்து நமது bookmarks ஐ கண்டுபிடித்து database values அ அதில் இணைக்கவேண்டும். கொஞ்சம் கஷ்டம் தான். )

ஆனால் OpenXML வந்தபிறகு வேலை சுலபமாகி விட்டது. .Net Framework 3.0 வில் windowsbase.dll என்றொரு dll வருகிறது. அதை வைத்து எளிதாக word document ஐ parse செய்ய முடிகிறது. ஆனால் ஒரு glitch இருக்கனுமே! ஆம். இந்த dll VS2003 யோடு வேலை செய்யாது. அதாவது அட்லீஸ்ட் Framework2.0 வேணும்.

Office 2007 (Visual Studio Tools for Office 2007) இல் நிறைய புதிய templates வருகிறது. அவைகளை பயன்படுத்தி ஒரு word docuementஐயே web form போல treat செய்யலாம். so that end users can just open the word document and do whatever they wish (we can embed combobox or other controls even datagrid) and just save the document. document oriented projects (like insurance etc) க்கு helpfull ஆ இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மேலும் Windows Home Servers பற்றிய அறிமுகமும் கிடைத்தது. backups and retrieving is made easy, that even Mums can do that – he said. Demo பார்ப்பதற்கும் எளிதாக இருப்பது போன்று தான் இருந்தது. ஆனால் demo எப்பொழுதும் அற்புதமாக இருக்கும் என்பது நமக்கு தெரியாதா என்ன?! ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், backup retrieval, Ghost பயன்படுத்தியவர்களுக்கு retrieval லில் இருக்கும் சிரமம் தெரியும். you cannot retrieve a specific file. ஆனால் இங்கே backup file ஐ unzip (அப்படிதான் தெரிகிறது!) செய்தவுடன் folder structure கிடைத்துவிடுகிறது. பிறகு just select your file!

அடுத்தது, virtual application. Looks good. ஒரு இடத்தில் application (windows based) வைத்துக்கொண்டு வெறு எந்த configured PC யிலிருந்தும் உபயோகித்துக்கொள்ளலாம். No maintanence hazards. No used reports : it was ok untill you installed the new patch! அவங்களுக்கு தெரியாமலே நாம upgrade பண்ணிடலாம். அது மட்டுமில்லாமல் இரண்டு version வைத்துக்கொள்ளலாம். அதை செர்வரிலிருந்து control செய்யலாம். cool huh? But beware Micro$oft.

***

seafood பிரியர்களுக்கு: என் நண்பன் ஒருவன் இருக்கிறான், chinese கடைக்குப் போனால் போதும், வாந்தி எடுக்காத குறைதான். ஏதோ smell அடிக்குதுடா என்று சொல்லியே நமக்கு வாந்தி வர வெச்சுடுவான். ஒரு முறை நாங்கள் order பண்ண சிக்கன் fried rice இல் (அவன் எவ்வளவோ படிச்சு படிச்சு only chicken only chicken என்று சொல்லியும்) octopus ஒன்று இருந்தது. அதை spoonஇல் எடுத்தவன் எதிரே அமர்ந்திருந்த என்மீது வாமிட் எடுக்காத குறை! மற்றொரு நண்பர் இருக்கிறார்: ப்ரைட் ரைசில் யானையே படுத்துக்கிடந்தாலும் எடுத்து தனியே போட்டுவிட்டு அவர் பாட்டுக்கு கூலாக சாப்பிடுவார்.

நான் எத்தனை முறை மீன் சாப்பிட்டாலும் சாப்பிடுவது என்னவகை மீன் என்று எனக்குத் தெரியாது. சமயத்தில் விரால் மீனுக்கும் வஞ்சிர மீனுக்கும் கூட வித்தியாசம் தெரியாது. முன்னால் சொன்ன octopus நண்பன் (நம்ப கோனபாட்டில் தான்!) இரண்டையும் சரியாக கண்டுபிடிப்பான். அவர் விரால் மீனை ஒரு வெட்டு வெட்டுவார், வஞ்சிர மீன் என்றால் தொடக்கூட மாட்டார். ஏனென்று அவனுக்கே தெரியாது!

மீனின் வகைகள் தெரிந்து சாப்பிடுபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்கிறது நேஷனல் ஜியோகரபிக். மீனில் இருக்கும் omega 3 fatty acids எவ்வளவு நல்லதோ அதை விட கெட்டது மீனில் இருக்கும் mercury. அதனால் கவனமாக இருங்கள்.

High-Mercury Fish.
Tilefish
King Mackerel
Shark
Swordfish
Freshwater sport fish caught in contaminated waters.

***

ஏப்ரல் 22 2007 அன்று பூமி தினம் கொண்டாடப்படுகிறது (Earth Day). ஏற்கனவே Green Cities பல நாடுகளிடையே பிரபலமாகிக்கொண்டு வருகிறது. நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு நவீன பசுமை நகர்களை உருவாக்கிக்கொண்டு வருகின்றன.

அன்று நாம் என்னவெல்லாம் செய்யலாம்:

முடிந்தல் ஆபிசுக்கு நடந்து செல்வது (மோட்டார் பைக், கார் என்று உபயோகிக்கக் கூடாது)
அல்லது Public Transport ஐ பயன்படுத்துவது.
வீட்டில் AC போட்டுக்கொள்ளாமல் படுத்துத் தூங்குவது.
Refrigirator ஐ ஆப் செய்வது.

மேலும் பல Tips க்கு
http://events.yahoo.com/earthday06/
http://www.epa.gov/water/citizen/thingstodo.html

நான் ஒரு பூந்தொட்டி வாங்கலாம் என்றிருக்கிறேன். (மொதல்ல வீட்டுக்கு முன்னுக்க இருக்கற பூச்செடிக்கு தண்ணி ஊத்துடா மடையா என்கிறது மனசாட்சி!)

***

Thanks : Economist, NGC

விளம்பர செஞ்சுரியும் சிவாஜிக்கு இலவச டோக்கனும்.

*(ஹலோ, விளம்பரத்துக்காக ஒன்னும் நான் இந்த தலைப்பு வெக்கல, சும்மா தோணுச்சு வெச்சென். :)) )

விளம்பரம். விளம்பரம். விளம்பரம். இதைத்தான் கண்டோம் கிரிக்கெட்டில். எங்களுக்கு இத்தனைக்கும் பே சானல். நூறு டாலர் கட்டியிருக்கிறோம். ஒவ்வொரு ஓவருக்கு இடையிலும் விளம்பரம் போடுகிறார்கள் சரி. அதுக்காக விக்கட் கீப்பர் ஸ்டம்ப்பை சும்மாகாச்சிக்கும் தட்டிவிட்டாக்கூட விளம்பரம் போட்டுடுறாய்ங்கப்பா. சேவாக் என்னைக்காவது, அல்லது ரெண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி தான் செஞ்சுரி போடுறாரு, அப்பக்கூட அவர் முகத்தில வர்ற சிரிப்ப பாக்கவிடாம விளம்பரம் போட்டுட்டாய்ங்க. அந்தப்பக்கம் கும்பளே கேமராவ தூக்கிட்டு நின்னாரு, சேவாக் செஞ்சுரி அடிக்கறத போட்டோ பிடிக்க, பாவம் அவராவது சேவாக்கத்தான் எடுத்தாரா இல்ல விளம்பரத்த எடுத்தாரான்னு தெரியல்ல.

ஆறாவது பால்ல சேவாக் ஒரு ரன் அடிச்சாரோ இல்லியோ, ஓவர் முடிஞ்சதோ இல்லியோ, உடனே அடுத்த மைக்ரோ செகண்ட் – அவர் இன்னும் அந்தப்பக்கட்டு ஓடவே இல்லீங்க.- விளம்பரம் -நோக்கியா, அந்த ஹோலி விளம்பரம். அந்த செல்போன நான் வாங்கவே மாட்டேன்னு என் நண்பர் சபதம் போட்டுவிட்டார்- போட்டுட்டாயங்க. அப்புறம் ரீப்ளேலதான் அவர் சிரிச்சாமானிக்கு பேட்ட தூக்கிகாட்றத பாக்கமுடிஞ்சது. இதுக்கு எதுக்கு நான் லைவ் -ராத்திரி கண்ணு முழிச்சு -பாக்கணும்? மறுநாள் ஹைலைட்ஸே பாக்கலாம்ல? தெரியுதுல பின்ன எதுக்கு முழிக்கிறன்னு கேட்டா என்ன சொல்றது?! நீங்க வெளம்பரம் போடுங்கப்பு வேணாங்கல, அதுக்கு ஒரு வகை தொகையில்லாம, அம்பையர் பவர்பிளேன்னு கைய சுத்திசுத்தி காட்ற கேப்ல கூட விளம்பரம் போட்டா எப்படி? அதுவும் அந்த உருப்படாத (ஆதித்யா பிர்லா) விளம்பரம். அதுக்கு டயாக்கின், ஏர் செல் விளம்பரம் சிம்பிள் பட் எபக்டிவ் இல்லீங்கலா?

சேவாக் செஞ்சுரி அடிக்கறதுக்குள்ள இவிங்க விளம்பரத்தில செஞ்சுரி போட்டுடறாய்ங்க. Mr. Starhub, since we have subscribed to the channel, we are not supposed to see any advertisements! Can you please look in to this!

***

துசரி, இந்தியா சூப்பர் 8க்கு போகுமா? அவன் அந்த மேட்ச்சில தோத்தா, இவன் இவ்ளோ ரன் வித்தியாசத்தில தோத்தா, நாம இவ்ளோ ரன் எடுத்து ஜெயிச்சான்னு நம்பள கணக்கு போட வெச்சே காலத்த ஓட்டுறாய்ங்க. கடைசி வரைக்கும் ஒரு சஸ்பென்ஸ் வெக்கிறாய்ங்க இல்ல? அதுல ஒரு சந்தோஷம் ஹ¤ம். (ஆனா சும்மா சொல்லக்கூடாது பங்களாதேஷ் ஆட்டத்துல ஒரு discipline இருந்துச்சு!) இப்ப இதுக்கு போடற கணக்க இஞ்சினியரிங் படிக்கறப்பவே போட்டிருந்தா ஒழுங்கா நல்ல கம்பெனியில வேல பாத்திருக்கலாம். ஹ¤ம்.

பாப் உல்மர் இறந்துவிட்டார். பாகிஸ்தான் வெளியேறியதானல் ஏற்பட்ட ஸ்ட்ரஸ் காரணமா? என் நண்பன் ஒருவன்: அவர் மானஸ்தர்டா என்றான். நம்ப நாட்டாம சரத்குமார் மாதிரி. My deep condolences.

***

பாகிஸ்தான் வேளியேறியதைப் பற்றி ஒரு கமெண்ட்ஸ¤ம் இப்போ கொடுக்க முடியாது, வெள்ளிக்கிழமை போகட்டும், இந்தியா அப்புறமும் உள்ள இருந்தா பாக்கலாம். உத்தப்பா வைட் பால் எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா கொஞ்சம் நேரம் பேட்டுக்கு வற்ர பந்த மட்டும் ஆடினார்னா நல்லா இருக்கும். அப்புறம் செட்டில் ஆன பிறகு சாத்திக்க வேண்டியது தான? கங்கூலியின் பெர்முடாவுடனான ஆட்டம் கவலை அளிப்பதாக இருந்தது. He always tries to loft the ball. And these days he is quite unsuccessfull. முன்பு ஆடியது போலத்தான் ஆடுகிறார். முன்பும் என்பது பாலுக்குதான் half-century போடுவார். ஆனா அதுக்கப்புறம் அவர் 80-90 க்கு ஒரே ஜம்ப் பண்ணி போயிடுவார். He is not able to convert his half-centuries to centuries, can you guys see that? இப்போ கொஞ்சம் frustrationa வெளியே போயிருக்கிறார், அடுத்த ஆட்டம் பாக்கலாம். எனக்கென்னமோ ஒன்னும் சரியா தோணல. யுவராஜ் simply superb. வீட்டை கபளீகரம் செய்ததாலோ என்னவோ டோனி தனது வழக்கமான ஆட்டத்தை ஆடவில்லை.

அது சரி, வீட்ட ஏன்ப்பா உடைக்கிறீங்க? உருவ பொம்மை கொழுத்தறீங்க சரி, கொழுத்திட்டுப் போங்க, வீட்ட போய் கபளீகரம் பண்ணனுமா? என்னக்கேட்டா அனைத்து வீரர்களும் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அனைவரும். ஒருவர் பாக்கியில்லாமல். அப்ப என்ன செய்வீங்க? இனி விட்டாக்க வீட்ல இருக்கறவங்கள கடத்திட்டு போய் வெச்சுக்கிட்டு ஒழுங்கா விளையாடு இல்லீன்னா உன் மகன் க்ளோஸ்ன்னு சொல்லுவாய்ங்க போல இருக்கே? அயிரம் ஊழல் பண்ணிட்டு நம்பளோட அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்யாமல் இருக்கற அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் லஞ்சம் கேட்கிற அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் இதை செய்தால் கொஞ்சம் புண்ணியமுண்டு. எங்கே அவர்கள் வீட்டை உடைக்கச்சொல்லுங்கள் பார்ப்போம்!

நாம எழுதற கோட்ல (code) பக்ஸ் வாரதுக்காக சம்பளத்த குறச்சு கொடுத்தா ஏத்துப்போமா? cricinfo ல சொன்னமாதிரி Cricket is just a game. A game between leather and willow.

***

பின்தொடரும் நிழலின் குரல் படித்துக்கொண்டிருக்கிறேன். இப்ப புரியுதா நான் ஏன் கொஞ்ச நாளா இந்தப்பக்கம் வரலுன்னு? கொஞ்சம் பயம் வந்துடுச்சு. நாவல் படிச்சப்புறம் நம்பல ஏதும் நிழல் பின் தொடரும்மான்னு. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு படிக்கறதுக்கு. ஏற்கனவே கொற்றவையை ஆரம்பித்து கைவிட்டுவிட்டேன். ulysses போல கொற்றவையைப் படித்து முடிப்பதும் வாழ்க்கையின் லட்சியங்களில் ஒன்றாகிவிட்டது. கம்யூனிசத்தின் pros and cons விவரிக்கப்பட்டிருப்பது அழகாக இருக்கிறது. balanced view தானே? இப்பொழுதுதான் வீரபத்ரபிள்ளை எழுதிய கடிதங்களுக்கு வந்திருக்கிறேன். திருப்பி திருப்பி சொன்னதையே சொல்வது போல இருக்கிறது. அது கொஞ்சம் tired ஆக்குகிறது.

tired ஆகிற பொழுது புத்தகத்தை மூடி வைத்துவிடுகிறேன். வீரபத்ரபிள்ளையும் அருணாச்சலமும் பின் தொடர ஆரம்பித்துவிடுகின்றனர். பேசாம harry potter and half blood price க்கு தாவிவிடலாமா என்று சீரியஸாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

***

மீண்டும் ஒரு முறை Forrest Gump பார்த்தேன். what an inspirational movie it is! (But really are we getting inspired? அப்படி inspire ஆகியிருந்தால் நான் எதுக்கு இந்தப் படத்த இன்னொரு தடவ பாக்குறேன்!) Always do your best என்கிறது படம், செய்கிறோமா?

Apocalypto என்றொரு படம் பார்த்தோம். GVMax என்ற பெரிய திரையரங்கில். வழக்கம்போல MilGibson அதிக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தார். தலையைத் துண்டமாக வெட்டி, நெஞ்சாங்கூட்டில் கைவிட்டு இதயத்தை எடுத்து இரத்தம் குடிப்பது போன்ற சிலருக்கு தலைசுற்ற வைக்கும் காட்சிகள். அதில் ஹீரோவினுடைய பெயர் jacuar paw. சொல்ல மறந்துவிட்டேன் படத்தில் மொழியே கிடையாது. மிருகங்களுக்கு மொழியேது?

இப்படி நெஞ்சாங்கூட்டை இவர்கள் திறந்து மூடிக்கொண்டிருக்க என் நண்பன் ஒருவன் தலைசுற்றல் வந்து பாதியிலே எழுந்து போய்விட்டான். அன்றிலிருந்து அவனுக்கு ஜாக்குவார் தங்கம் என்ற திருப்பெயர் நிலவிவருகிறது. ஆனால் அவன் எழுந்து போன பிறகு படம் நன்றாகவே இருந்தது. குறிப்பாக அந்த கடைசி chase. very much impressive. நம்ப ஜாக்குவார் மிஸ் பண்ணிட்டார்.

இப்ப அவனுக்கு கோனபாட்டில் கோவிந்தன் என்றொரு பெயரும் வழங்கப்படுகிறது. அது என்ன கோனபாட்டில் கோவிந்தன் என்று கேட்பவர்களுக்கு: அவன் தண்ணீர் பிடித்து குடிக்கும் பெட் பாட்டில், ஒரு நாள் இவன் சூடான தண்ணீர் ஊற்றியதால், சற்று நெளிந்து விட்டது. அப்படியும் விடாமல் அந்த பாட்டிலில் தான் தண்ணீர் குடிப்பேன் என்று குடித்துக்கொண்டிருக்கிறான். அதனால் தான் அவனுக்கு அந்த பெயர்.

***

ன் நண்பருக்கு வேறு ஒரு கவலை, செல்விய நிப்பாட்டிட்டு அரசின்னு புது சீரியல் ஆரம்பிச்சாங்க, இப்பப் பாத்தாக்க அரசில அதே செல்வி கத தான் தொடருது. என்னத்த சொல்றதுன்னு அவர் சலிச்சுக்கறார். ரொம்ப முக்கியம்!

அதே நபர் என்னிடம் முன்பு ஒரு நாள், செல்வில நேத்து என்ன நடந்துச்சு தெரியுமா, நானும் என் வைப்பும் நேத்து வெளில போய்ட்டம் பாக்கமுடியல- இல்லீன்னா அவ வீட்ல இருந்தா அவ, நான் வீட்ல இருந்தா நான் யாரவது பாத்துட்டு இன்னொருத்தருக்கு கத சொல்லுவோம்- நீங்க பாத்தீங்களா, பாத்தீங்கன்னா என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் என்றார். நான் சீரியலெல்லாம் பாக்குறதில்லீங்ண்ணான்னு எஸ்கேப் ஆயிட்டேன். எப்படித்தான் இந்த சீரியல கட்டிட்டு அழறாங்களோ தெரியல. எல்லாம் வீட்டம்மாக்கள் பண்றது. சும்மாவா சொன்னாரு கவிஞர்: (சீரியல் பாக்காத) மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு. Bachelors வேண்டிக்கோங்கப்பா.

கல்யாணம் ஆனவங்களுக்கு, ஒன்னும் பண்ணமுடியாது. தலையில எழுதினத மாத்த முடியுமா என்ன? My deep regrets! நீங்களும் கூட உட்கார்ந்து பாத்து enjoy பண்ணுங்க. வேற என்ன பண்றது?!

***

சிவாஜி படத்த முதல் நாள் பாக்குறதுக்கு சென்னையில டோக்கன் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு என் நண்பன் ஒருவன் சொன்னான். ஒரு டோக்கன் விலை ஆயிரத்து நூறு ரூபாயாம். ரொம்ப கம்மியா இருக்கே!

ஏதாவது election வந்தாலாவது பரவாயில்ல, சிவாஜிக்கு இலவச டிக்கெட் தாரோம்னு யாராவது வாக்குறுதி கொடுப்பாங்க, அவங்களுக்கு ஓட்டப்போட்டுட்டு டிக்கெட்ட வாங்கிக்கலாம், இப்போதைக்கு election கூட இல்லியே, என்ன பண்றது?

***

அஜித்துக்கு ஒரு (சீரியஸ்) கதை

சுடரில் நான் எழுதிய அஜீத்துக்கான கதையை(?!) படித்த நிறைய நபர்கள் என்னை திட்டியிருந்தனர். திட்டியவர்களில் என் அண்ணனும் ஒருவர். “முத்து நீ இப்படி செஞ்சிருக்கக் கூடாது. ஒழுங்கா ஒரு சீரியஸ் கதை எழுதியிருக்கவேணும்” என்றார். நான் என்ன பண்ணட்டும் நான் இன்னும் ஆழ்வார் effect லிருந்து மீண்டு வரவில்லை. தவிரவும் நான் கதாசிரியனும் அல்ல. ஏதோ சிறுகதை என்ற பெயரில் ஏதோ எழுதி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்:).

சரி கதைக்கு வருவோம். என்கிட்ட அஜீத்துக்கு(எல்லா ரசிகர்களும் அவர்களுடைய ஹீரோக்களுக்கு ஒரு கதை எப்போதுமே ரெடியாக வைத்திருக்கிறார்கள். எனக்கு ரஜினி ஜேம்ஸ்பாண்ட் -ofcourse தமிழில் தான் – கதாப்பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக உண்டு!) ஒரு கதை இருக்குன்னு சொன்னார் என்னுடைய அண்ணன். சொல்றேன்னு சொல்ல ஆரம்பிச்சார்.

–பார்ட் 1-
அஜித் ஒரு மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்தவர். படித்தவர். ஏதோ ஒரு பேச்சிலர் டிகிரி (BSc Chemistry என்று வைத்துக்கொள்ளுங்களேன்!). வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்கிறார். வழக்கம் போல வேலை (அல்லது வேலைக்கான வேளை!) வரவில்லை. ஏதேதோ சின்ன சின்ன வேலைகள் கைக்கும் பத்தாமல் வாய்க்கும் பத்தாத சம்பளத்துடன் வேலை செய்கிறார். TNPSC பரிட்சை அல்லது ஏதோ ஒரு கவர்மெண்ட் வேலைக்கான பரிட்சை எழுதி தேர்ச்சிபெறுகிறார். அதிர்ஷ்டவசமாக ஏதும் பணம் கொடுக்காமல் அவருக்கு குமாஸ்தா (அல்லது கிளார்க்) வேலை கிடைத்துவிடுகிறது. வேறொரு ஊரில்.

மாதச் சம்பளம் பிடித்தம் போக கையில் 4500 ரூபாய். லஞ்சம் வாங்க மனமில்லை, வாய்ப்பும் இல்லை. என்ன சம்பளமாக இருந்தாலும் சந்தோஷமாக வேலையில் சேருகிறார். மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்கிறார். வாழ்க்கை உருண்டோடுகிறது.

–பார்ட் 1 end–

— பார்ட் 2–
ஒரு நாள் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருக்கும் போது எட்டாவது ஷீட்டில் ஷ்ரேயா தோன்றும் பம்ப்செட் விளம்பரத்துக்கு கீழே ஒரு பெட்டிச் செய்தியைப் பார்க்கிறார். அந்த செய்தி: பிரபல கலைக்கல்லூரி புரபொசர் : சயன்ஸ் சாமியாண்டி (பேரு பிடிக்கலைன்னா, வேற நல்ல பெயர் நீங்களே வெச்சுக்கங்கப்பா!) காணவில்லை! சாமியாண்டி அஜித்துக்கு பாடம் எடுத்தவர். என்ன பாடம் யூகியுங்கள்: chemistry. correct!

அஜீத் வீட்டுக்கு போன் செய்து அம்மாவிடம் விபரம் கேட்கிறார். அம்மா, ஆமாடா அவரக் காணல எங்க போனார்னு தெரியல்ல. அவங்க மனைவிக்கும் தெரியல. சண்டை கிண்டை ஏதும் கிடையாதாம். கடத்தலா இருக்குமோன்னு போலீஸ் சந்தேகப்படுது என்கிறார்.

அஜீத் அத்துடன் அந்த பிரச்சனையை மறந்து விட்டு தனது கிளார்க் வேலையை தொடருகிறார். மற்றொரு நாள் மற்றொரு கல்லூரியின் chemistry புரபொசர் கடத்தப்படுகிறார். அடுத்த சில நாட்களில் மற்றொரு புரபொசர். இப்படி பத்து புரபொசர்கள்.

கதையை இங்கே நிறுத்தி விட்டு, என் அண்ணன் அதுக்கப்புறம் யோசிக்கனும் என்றார். என்னத்த யோசிக்கறது. முடிச்சறவேண்டியது தான? அவர்களை கடத்தியது ஒரு தீவிரவாத கும்பல். அவர்கள் கடத்தப்பட்ட கெமிஸ்ட்ரி புரபொசர்களை வைத்து மிக அதி நவீனமான வெடிகுண்டு ஒன்றை தயாரிக்கிறார்கள். அஜீத் தீவிரவாத கும்பலைக் கண்டுபிடித்து அழித்து புரொபொசர்களை மீட்டுக்கொண்டு வருகிறார். (புரொபசர்கள் மீண்டும் கல்லூரிக்கு வந்து வழக்கத்தை விட அதிகமாக மொக்க போட ஆரம்பிக்கிறார்கள். மாணவர்கள் கொலை வெறியுடன் அஜித்தை தேடுவது இரண்டாம் பாகமாக எடுத்துக்கொள்ளலாம்)

ரமணா, இந்தியன், அந்தியன், பாட்சா போன்ற படங்களின் தாக்கம் நம்மை விட்டு இன்னும் போகவில்லை என்பது மட்டும் புரிகிறது.

–பார்ட் 2 end–

–பார்ட் 2 வேற மாதிரி–
எனக்கு முதல் பாதி கதையுடன் சம்மதமே. ஆனால் என்னுடைய இரண்டாவது பார்ட் கொஞ்சம் வேறு மாதிரி. ஏற்கனவே பார்த்திருப்பது தான்.

இந்த நாட்டில் இப்பொழுது இரண்டு பகுதிகளாக இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒரு பகுதி தங்களது முப்பது வயதுக்குள் எப்படியாவது மூவாயிரம் ரூபாய் சம்பளத்தை எட்டிப்ப்டித்துவிடத் துடிப்பவர்கள். மற்றொரு பகுதி : தங்களது இருபத்தியைந்து வயதுக்கும் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தைப் பார்த்து விடுபவர்கள்.

–நன்றி: விகடன். (ஞாநி)

நமக்கு (சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள்) ஊரில் நிறைய நண்பர்கள் இருக்ககூடும். அந்த நண்பர்கள் நம்மைப்போல சாப்ட்வேர் படிக்காமல் ஏதேனும் BBA யேவோ அல்லது MBA யேவோ படித்துவிட்டு ஏதோ ஒரு வேலையில் மூவாயிரமோ, ஐந்தாயிரமோ வாங்கிக்கொண்டிருக்கக்கூடும். நாம் நாட்டை விட்டு வெளியேறி வந்து விட்டதால் அவர்களுடன் பழக வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்(கிட்டத்தட்ட மறந்தே போயிருப்போம். ஏனினும் ஊருக்கு போகும் போது அவர்களை கண்டிப்பாக சந்தித்திருப்போம். அப்பொழுது நாம் அவர்களிடம் நட்பு மாறி ஒரு அந்நியோன்மைத் தன்மை வந்திருப்பதைக் காண் முடியும். வாடா போடா என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் வாங்க போங்க என்று பேச ஆரம்பித்திருக்கலாம்)

இப்படி யோசித்துப்பாருங்கள்: ஒரு நண்பர் வட்டாரம் இருக்கிறது. அவர்கள் சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர்கள். ஒரு தெருவில் வசித்த நண்பர்கள். ஒன்றாக படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாக சைட்(?!) அடித்தவர்கள். அவர்களில் பெரும்பாலோனோர் நன்றாக படித்து (அல்லது கொஞ்சம் காசு செலவழித்து என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்துவிடுகின்றனர்) இருவரைத் தவிர. இந்த இருவரும் BBA ஏதோ ஒரு கலைக்கலூரியில் படிக்கின்றனர். அவர்களுடைய என்ஜினியரிங் கல்லூரி நண்பர்கள் படித்துக்கொண்டிருக்கும் போதே சென்னையில் ஒரு பெரிய software company இல் place ஆகி விடுகின்றனர். இவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருக்கின்றனர்.

அதில் ஒருவர் அஜித். அஜித் மிகவும் கஷ்டப்பட்டு TNPSC பரிட்சை எழுதி ஏதோ ஒரு கவர்மெண்ட் வேலை வாங்கிவிடுகிறார். எனினும் சம்பளம் மூவாயிரம் ரூபாய் தான். உடன் இருக்கும் நெருங்கிய நண்பர்கள் சாப்ட்வேர் மக்கள். மாதம் முப்பதாயிரம் சம்பாதிப்பவர்கள்.

இந்த நண்பர் குழுவில் நடக்கும் மனப்போராட்டங்களே கதை. அந்த நண்பர் குழுவில் சேரவும் முடியாமல் விலகவும் முடியாமல் தத்தளிக்கும் இளைஞராக அஜித். ஒரு நேரச் சாப்பாடு ஹோட்டலில் சாதாரணமாக ஐம்பது ரூபாய் இருக்கும் போது மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அஜித் எப்படி சமாளிப்பார்? ஒரு நேர treat க்கு ஐந்தாயிரம் ரூபாய் தாராளமாக செலவழிக்கும் கூட்டத்துடன் எப்படி ஒட்டுவார்? ஒரே வீதியில் இருந்து கொண்டு அவர்கள் காரில் போகும் போது, இவர் பழைய ஓட்டை சைக்கிளில் (அல்லது பெரும் கூட்டமாக இருக்கும் பல்லவன் பேருந்தில்) எப்படி போவார்?

இது வெறும் கரு மட்டுமே. கதை திரைக்கதை நன்றாக அமைக்கலாம். இதில் இல்லாத நகைச்சுவை இல்லை. சோகம் இல்லை. சந்தோஷம் இல்லை. அன்பு இல்லை. நிராகரிப்பு இல்லை. பொறாமை இல்லை. மனப்புழுக்கம் இல்லை. நட்பு இல்லை. காதல் இல்லை.

மேலும் சமுதாயத்தில் பின் தங்கிவிட்ட பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கையை அனைவரும் திரும்பிப்பார்க்க உதவும். ஒரு வறுமையின் நிறம் சிவப்பு போல. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இருந்தது வேறு பிரச்சனை. எல்லோருக்கும் வேலையில்லை. இப்பொழுது வேறு பிரச்சனை. economical gap.

அஜித் மிகச்சிறந்த நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.வாலியில் ஊமை அஜித் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் போது, interviewer அவரை சிரிக்க சொல்லுவார், அப்பொழுது சிரிப்பாரே ஒரு சிரிப்பு, அந்த சிரிப்பில் ரசிகனானேன் நான். அதற்கப்புறம் நிறைய படங்கள்: முகவரி, அமர்களம் (ரகுவரனிடம் “நீ கடவுளா” என்று குடித்து விட்டு கேட்பது), வில்லன். இப்பொழுது வரலாறு: பெண் தன்மை கொண்ட கேரக்டரை இவ்வளவு சிறப்பாக யாரும் இது வரை செய்ததில்லை! அவரை விட்டால் இந்த மாதிரி சமூக பிரச்சனைகளை நடிக்க வேறு யார் இருக்கிறார்கள்(இவ்வாறான கதாப்பாத்திரம் தான் முகவரியில் செய்தார். எவ்வளவு அழகாக செய்திருந்தார்?)

எப்பொழுதுமே ஹீரோவாக (அடிதடி சண்டை போட்டுக்கொண்டு, பழிவாங்கிக்கொண்டு, தீவிரவாதிகளை துவம்சம் செய்துகொண்டு) தான் இருக்கவேண்டும் என்றில்லை. சில சமயங்களில் (வெகு சில சமயங்களில்) மக்களில் ஒருவராக இருப்பதில் தவறில்லையே? ஏன் கமலஹாசன் அவ்வப்போது வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்கள் செய்யவில்லையா? ஏன் அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோவான ரஜினி ஆறிலிருந்து அறுபது வரை செய்யவில்லையா?

மறு-காலனியசம்

“மும்பை நகரத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சுமார் 35,000 ஏக்கர் நிலத்தை ரிலயன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. அங்கே அவர்கள் ‘மகா மும்பை சிறப்பு பொருளாதார மண்டலத்தை’ (Special Economic Zone-SEZ) தொடங்க உள்ளனர். அந்த நிலப்பரப்பில் உள்ள 43 கிராமங்கள் பெயர்த்தெறியப்பட உள்ளன. நவீன மும்பையைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த கிராமங்கள் தன்னிறைவு பெற்றவை. நல்ல பருவ மழையும், தடையற்ற விவசாயமும் அவர்களின் வாழ்வைக் காத்து வருகிறது. சந்தை விலை ஏக்கருக்கு 25-30 லட்சம் வரை இருக்க, வெறும் 3-4 லட்சம் ரூபாய் கூட அவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. அந்த கிராமத்தினர் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மகாராஸ்டிரா அரசு வாலை ஆட்டிக்கொண்டு அம்பானி சகோதரர்களின் காலடியில் கிடக்கிறது. பல மாநில முதல்வர்கள் அம்பானி சகோதரர்களின் கண்ணில் படும் படியாக வாலை ஆட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். நிலத்திற்குப் பதிலாக ரொக்கப்பணம் வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருந்தாலும், அவைகளை மீறுவதில் பல மானில அரசுகளுக்கு தனிப்பட்ட ஆர்வம் தான். இந்த பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு நில பேரத் தரகர் வேலை பார்ப்பது (Real Estate Broker) பல மாநில அரசுகளுக்கு விருப்பப் பணியாக மாறி விட்டது.”

அ. முத்துகிருஷ்ணன், “குருவும் இசைவான முதலீட்டுச் சூழலும்” என்ற கட்டுரையிலிருந்து.

சரி,SEZ என்றால் என்ன? அவரது எழுத்துக்களிலே:

நம் நாட்டு எல்லைக்குள் சில பகுதிகளைக் கையகப்படுத்தி அதன் எல்லைகளை வரையறுக்கிறார்கள். அங்கே பெரும் நிறுவனங்கள் எந்த துறை சார்ந்தும் தொழில் தொடங்கலாம். மென்பொருள் நிறுவனங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கேளிக்கைப் பூங்காக்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள், அங்காடிகள் என தன்னிறைவு பெற்ற பகுதியாக அது திகழும். அந்த துணை நகரம் ஐரோப்பா, அமெரிக்க சாயலோடிருக்கும். அந்த எல்லைக்குள் இந்திய அரசாங்கத்தின் எந்த சட்டமும் செயல்படாது. தொழில் துறைச் சட்டங்கள், சுங்க வரி, விற்பனை வரி, மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் என இது போன்ற ஆயிரக்கணக்கான விதிமுறைகள் நடைமுறைகள் எல்லாம் அங்கே எட்டிக்கூட பார்க்க முடியாது. SEZகளின் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படவிருக்கும் வரி இழப்பு சுமார் 90,000 கோடி. இதை அரசாங்கம் Tax Holiday என்று செல்லமாக அழைக்கிறது.

மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல்:
இந்த நிலப்பரப்பு வெளிநாட்டுத் தூதரகம் போலத்தான் கருதப்படுமாம். வருங்காலத்தில் SEZகளுக்குள் நுழைய விசா, பாஸ்போர்ட் தேவைப் படலாம். Like East India Company’s Private Cities? அதனால் தான் இப்பொழுது பல developing countriesக்கு வந்து இறங்கியிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை, மறுகாலனியிசம் என்று கொஞ்சம் பயத்தோடு அழைக்கிறார்கள். இது ஒரு புதுவகையான சுரண்டல். புதுவிதமான அடிமைத்தனம். Dependency. கொஞ்சம் கொஞ்சமாக நாம் அவர்களது எக்கானமியைச் சார்ந்து வருகிறோம். இந்த சுரண்டலிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில் நாம் -Indian Based Companies, software,hardware,bio-technology or anything- சில ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, தொலைநொக்குப் பார்வையோடு பல புதிய பயனுள்ள products கண்டுபிடிக்க வேண்டும். இன்னும் எத்தனை காலம் மற்றநாட்டினருக்கு உழைத்துக் கொட்டிக் கொண்டிருப்பது? இன்போசிஸ், விப்ரோ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக கனிசமான தொகையை செலவு செய்யவேண்டும்.

SEZஇன் disadvantages:
1. மிகச்குறைந்த -அடிமாட்டு- விலையில் நிலங்களைக் கையகப்படுத்துதல்
2. வரிவிலக்கு தவறாக பயன்படுத்தப்படுதல்
3. யாரோ வெகு சிலரின் கொள்ளை லாபத்துக்காக, வேறு யாரோ வரி கட்டுவது.

இந்த முயற்சி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதில் சிறு ஐயப்பாடும் இல்லை. மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த பணம் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கே போதாது என்கிறது ஒரு கட்டுரை. அப்படித்தானே இருக்கிறது. இன்று மதுரையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு குழந்தையைப் படிக்க வைக்க ஒரு quarterக்கு இருபதினாயிரம் ரூபாய் கேட்கிறது ஒரு பள்ளி. என் நண்பர் ஒருவர் சொன்னார்: நானெல்லாம் எனது மொத்த படிப்புக்கே (MCA வரையில்) அவ்வளவு தான் செலவழித்திருக்கிறேன்.

மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு விசயம் : வரி விலக்கு. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பெரிய ஐந்து மென்பொருள் நிறுவனங்கள் ஆயிரம் கோடி வரிவிலக்கு பெறுகின்றன. இவை கடந்த பத்து வருடங்களாக வரிவிலக்கு பெறுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும் இந்த நிறுவனங்கள் தங்கள் வரி விலக்கை நீட்டித்துக்கொள்ள SEZக்குப் படையெடுக்கின்றன.

இவ்வாறான சலுகைகள் ஒட்டுமொத்த எக்கனாமிக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை. ஒரு சிலரின் கைகளிலே தான் பணம் மேலும் மேலும் குவிய வாய்ப்பாக இருக்கும் (பிறகு அவர்கள்,நமது அரசாங்கத்திற்கே சட்டங்கள் இயற்றுவார்கள் இல்லியா?) என்பதில் சந்தேகம் இருக்கிறதா என்ன? இதற்கு அமெரிக்காவே சிறந்த எடுத்துக்காட்டு!

கஷ்டப்பட்டு அன்றாடத் தேவைகளுக்காக உழைக்கும் மிகச்சாதரண – இன்னும் அடித்தட்டிலே இருக்கும் -மக்களே வரி கட்டிக்கொண்டிருக்கும் போது, ஏற்கனவே கோடிகளில் புரளும் இவர்களுக்கு ஏன் வரிவிலக்கு? இவர்கள் (பன்னாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்கள்) சம்பாதித்து அருகில் இருக்கும் கிராமங்களையாவது முன்னேற்றினார்களா? பெங்களூருக்கு அருகிலிருக்கும் – IT revolution ஆல் எந்த பாதிப்பையும் காணாமல், இன்னும் அப்படியே எவ்வித வளர்ச்சியும் இல்லாத – கிராமங்களைப் பற்றிய documentary ஒன்றை BBC ஒளிபரப்பினார்கள்.

ஒரு infra-structure development ஏற்படும் போது அந்த பகுதியிலிருக்கும் நிலங்களைக் கையக்கப்படுத்துவது வழக்கம் தான். அதை எதிர்ப்பது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதும் உண்மையே. உதாரணத்துக்கு நேஷனல் ஹைவேய்ஸ் (Nationa Highways) அகலப்படுத்தும் போது ரோட்டின் மிக அருகில் இருக்கும் வீடுகளும், தொழிற்சாலைகளும், பல கட்டிடங்களும் இடிக்கப்படுவதும், கையகப்படுத்தப்படுவதும் இயல்பே, அதற்கு அரசு கொடுக்கும் சொற்ப பணத்துக்குக்கூட ஏதோ நியாயம் கற்பிக்களாம், ஆனால் கோடிகளில் புரளப்போகும் (ரிலயன்ஸ் போன்று ஏற்கனவே கோடிகளில் புரளும்) மக்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் போது நிலத்துக்காக ஏன் நியாயமான (மார்கெட் நிலவரப்படி) தொகை கொடுக்கக்கூடாது?

மென்பொருள் நிறுவனங்களால் தான் பல இளைஞர்கள் தங்களது குடும்பத்தை ஒரே ஜெனரேஷனில் முன்னேற்றியிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டுதானாக வேண்டிய சூழ்நிலையில், அந்த வள்ர்ர்சி மற்றவர்களின் தலையில் இடியாக இறங்கக்கூடாது அல்லவா? ஒரு நாடு வாழ ஒரு கிராமத்தை அழிக்கலாம் என்று டுபாகூர் வசனம் பேசினால், ஒரு கிராமம் இல்லையப்பா, நாற்பத்திமூன்று கிராமங்கள்! நாற்பத்திமூன்று.

links:

http://sezindia.nic.in/
http://en.wikipedia.org/wiki/Special_Economic_Zone
http://www.hindu.com/2006/09/28/stories/2006092808341200.htm
http://www.indiantaxsolutions.com/main.php?t=28011984&d=1152598537

Thanks : உயிர்மை

தயிர்வடைகள்

தயிர்வடை சாப்பிடுபவர்கள் Traditional, பக்கார்டி சாப்பிடுபவர்கள் Organic என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டுகொள்ளாமல் இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்துவிட்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கே என் மீது கோபம் கோபமாக வருகிறது. என்ன ஜென்மம் நான்? ஆதாலால் குடி மக்களே உங்களுக்கு இந்த அரிய உண்மையை சுட்டிக் காட்டியதற்கு நீங்கள் எனக்கு நன்றி சொல்லத்தேவையில்லை, திரு. “ஆர்கானிக் எழுத்தாளர்” சாரு நிவேதிதாவிற்கு நேரடியாகச் சொல்லிவிடுங்கள்.

விசயத்துக்கு வருவோம். கோணல் பக்கங்களின் மூன்றாவது தொகுதியில் “உண்மையான பெரியார்” என்ற கட்டுரை (கட்டுரைகள் எழுதுபவர்கள் மன்னிக்கவும், அப்படித்தான் அந்த புத்தகத்தில் இருக்கிறது. மேலும் இந்தப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய நாஞ்சில் நாடன் இந்த மாதிரி இலக்கியத்திற்கு(?!) இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என்கிறார்!) யில் இவ்வாறு சொல்கிறார், சாரு நிவேதிதா:

காந்தியை, மகாத்மா என்று சமூகம் சொன்னால் நாமும் கிளிப்பிள்ளை மாதிரி திருப்பிச் சொல்லுதல். மாறாக அவர் மகாத்மாவாக வாழ்வதற்கு மற்றவர்கள் என்ன விலை கொடுக்க வேண்டியதிருந்தது என்பது பற்றி கேள்வியே கேட்காமல் இருத்தல்.

காந்தி இயற்கையாக இறந்த மாட்டின் தோலினால் செய்யப்பட்ட செருப்பை மட்டுமே அணிவது என்று முடிவெடுத்த பின்னர், இயற்கையாக இறந்த மாட்டைத்தேடி இரு குழுக்கள் நாடெங்கும் அலைந்தது திரிந்து கண்டுபிடித்து, அவருக்கு செருப்பு வாங்கிக் கொடுத்தார்களாம். இவ்வகையில் காந்தி அணிந்த செருப்பின் விலை அந்தக் காலகட்டத்தில் சாதாரண செருப்பை விட ஐம்பது மடங்கு கூட இருந்ததாம்.

அதனால் அவரை மகாத்மா என்று சொல்வதற்கு கேள்விகள் கேட்கவேண்டுமாம்.

காந்தி, கண்டிப்பாக எங்கிருந்தாலும் இறந்த மாட்டைக் கண்டுபிடித்து எனக்கு செருப்பு வாங்கிவாருங்கள் என்று அடம் பிடித்தாரா? அவர் இயற்கையாக இறந்த மாட்டின் தோலினால் செய்த செருப்பை மட்டுமே அணிவேன் என்று முடிவெடுத்த பின்னர், அவரது தொண்டர்கள், அவர் வேண்டாம் எனினும், அவருக்காக தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து வாங்கி வந்திருக்கலாம். இவ்வாறு தொண்டர்கள் வாங்கி வராமல் இருந்திருந்தால் கூட, காந்திக்கு இது ஒன்றும் மேட்டரே அல்ல, அவர் செருப்பு அணிவதையே விட்டிருப்பார். கோட்சூட் அணிந்து செல்வத்தில் திளைத்திருந்த போது, கந்தல் ஆடை அணிந்த மக்களைப் பார்த்ததும் அனைத்தையும் தூக்கி எறிந்த அவருக்கு செருப்பு அணியாமல் நடப்பதா பெரிய விசயம்? இதைக்கூட விட்டுத்தள்ளுங்கள். எக்காலத்திலும் உண்மையே பேசுவது என்பது எவ்வளவு பெரிய சமாச்சாரம்? அதை செய்யக்கூடிய அளவுக்கு மனதைரியமும், self-control லும் இருந்தவருக்கு சாதாரண செருப்பு அணியாமல் இருப்பதா பெரிய வேலை? மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நாற்பத்தியெட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவருக்கு செருப்பு அணியாமல் இருப்பதா கஷ்டம்?

எங்கே, இவர்களை ஒரு நாள் – ஒரே ஒரு நாள்- உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சரி. கிடக்கட்டும். அவரை மகாத்மா என்று அழைப்பதில் யாருக்கு என்ன கெடுதல் வந்து விட்டது? எவ்வளவு நல்ல பழக்கங்களை வைத்திருந்திருக்கிறார். அதற்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு : அவருடைய பாத்ரூம்மை அவரே கழுவுவது. இது என்ன பெரிய விசயம், என்கிறீர்களா? எனது நண்பர்கள் சிலரே கூட தாங்கள் உபயோகித்த பாத்ரூம்மை தாங்களே கழுவி விட மாட்டார்கள். சாதாரண மனிதர்களும் நேரம் இல்லை என்றும் ( நேரம் இல்லையா? பாத்ரூம் போவதற்கு நேரம் இருக்கும் போது, கழுவிவிட நேரம் இருக்காதா என்ன? அதெல்லாம் இல்லை, சோம்பேறித்தனம் தான் காரணம் ), இன்னும் வேறு காரணங்கள் சொல்லி தப்பித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நாட்டின் தலைவர், குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் ஏறும் போது இங்கிலாந்து நீதிபதியே கூட எழுந்து நிற்கும் அளவுக்கு மரியதைக்குரியவர், ஏன் பாத்ரூம் கிளீன் பண்ண வேண்டும்? அவரை மகாத்மா என்று அழைப்பதில் என்ன தவறு வந்துவிடப்போகிறது? யார், எங்கே குறைந்து போகிறார்கள்?

அவ்வாறு சொல்லும் இலக்கியவாதிகளை, சாரு நிவேதிதா : தயிர்வடை இலக்கியவாதிகள் என்று சொல்லுகிறார்.

1875 இல் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒயின், கூபாவின் பக்கார்டி, பாங்க்காக் கேலிக்கை விடுதிகள், ஜப்பானியப் பெண்கள் அருகிலிருந்து ஊற்றிக்கொடுக்க, தரையிலமர்ந்து ஸாக்கே என்ற மது வகையை அருந்துவது, கேப்ரே பார்கள், “ரா” வாக மட்டுமே அடிக்க வேண்டும் என்ற மிக நல்ல ரூல்ஸைக்கொண்டுள்ள Geronimous என்ற பார், அதில் தொடர்ச்சியாக பதினேழு ஷாட்கள் அடித்து பதக்கம் வாங்கியதைப் பற்றியல்லாம் எழுதுவது எந்த வகை இலக்கியம்? இவர்கள் தான் organic இலக்கியவாதிகளா? (organic wines பற்றி சொல்லியிருப்பாரோ என்று கூட சில நிமிடம் யோசித்தேன். )

கேட்டால், ethics வேறு ஒழுக்கம் வேறு என்கிறார். எடுத்துக்காட்டாக அவரது ப்ராண்ஸ் தேசத்து நண்பரின் ஆப்ரிக்க மனைவி கன்னத்தில் முத்தமிட்டு வறவேற்ற சம்பவத்தைக்கூறி அது அங்கே பழக்கம் ஆனால் இங்கே அப்படி செய்யமுடியாது என்கிறார். அப்படியானால் உங்கள் கட்டுரைகளை ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது தானே?

மேலும் ஆதாரத்திற்கு: அண்டார்டிக்காவில், அண்டாகாகஜம் என்ற மிகப்புகழ் பெற்ற இலக்கியவாதி -அண்டாகாகஜம் என்ற இலக்கியவாதி பனிகுகைக்குள்ளிருந்து அவருடைய அன்னை டபாகாகுஜமுக்கு யாருக்கும் புரியாத புருஷ்கியா மொழியில் எழுதிய கடிதங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டும் – SubSnow Stupidity என்ற தொகுதியில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் என்று சொல்லி தப்பிப்பது பலருக்கும் வழக்கமாகிவிட்டது.

நாம் நமது நாட்டினர் மகாத்மா என்று சொன்னதை கேள்வி கேட்க்காமல் ஏற்றுக்கொண்டு தயிர் வடை இலைக்கியவாதி ஆகிவிட்டோம், ஆனால் ரனஜித் சொன்னதை அப்படியே நம்பினால் – என்னது? ஆதாரம் இருக்கிறதா? காந்தி மகாத்மா என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இல்லையா என்ன? -அந்த இலக்கியவாதிகளுக்கு என்ன பெயர்?

He is back!

காந்தியடிகள் இப்பொழுது இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்றொரு குறும்படம் youtube இல் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. மெகாஹிட். அந்த படத்திற்கு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இலவச விளம்பரம் அளித்தன. நானும் பத்திர்க்கையில் வெளியான செய்தியைப் பார்த்துத்தான் இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன். பார்த்தேன். ரசித்தேன். இந்திய மக்கள் youtube இல் இருந்து அந்தப் படத்தை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

அந்தப் படத்தில் காந்தி அழகாக சண்டை போட்டார் (என்ன இருந்தாலும், தமிழ் சினிமாவில் வரும் , ஒரே குத்தில், அடியாள் பறந்து, பின், பல்டி அடித்து, பிறகு தலைகுப்புற டாடா சுமோவின் கார் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு விழுவதைப் போல அழகாக இல்லை!). இரண்டு கவர்ச்சியான பெண்களுடன் (இருந்தாலும், சீனா தானா பாட்டுக்கு நடனம் ஆடிய பெண்ணை விட அதிகமாகவே உடை அணிந்திருந்தனர். பெப்சி உங்கள் சாய்சில் ஒரு முறை ஒரு பெண் இந்தப் பாடலை விரும்பிக்கேட்டார், உமாவும் சிரித்துக்கொண்டே உங்களுக்கு வழங்குறோம்ங்க என்று சொன்னதை நான் இங்கு நினைவுகூற விரும்புகிறேன். மேலும், சென்ற வருடம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மாணவர்கள் நடனமாட நிறைய ஆசிரியர்கள் இந்தப் பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) ஜாலியாக கைகோர்த்துக்கொண்டு வலம் வருகிறார். மெசின் துப்பாக்கியைப் பயன்படுத்தி பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார். இறுதியில் “he is back. but this time he is crazy” என்று முடிகிறது படம்.

எனக்கு ஏனோ கோபம் வரவில்லை. யாரும் கோபப்படக் கூடாது என்று நான் சொல்லவில்லை. சிலருக்கு கோபம் வரத்தான் செய்தது. பொறுமையாக உண்மை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் கோபப்படத்தேவையில்லை என்பது புரியும். அந்த வீடியோவின் பின்னூட்டத்திலே, சிலர் காந்தியின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறி, வீடியோ போஸ்ட் செய்தவரை தகாத வார்த்தைகளில் திட்டியிருந்தார். காந்தியின் அருமை பெருமைகளை உணர்ந்தவர் எப்படி தகாத வார்த்தைளில் மற்றொருவரைத் திட்டுவார்?

உண்மையைச் சொல்லுங்கள் காந்தீயக் கொள்கைகளை நாம் முழுவதுமாக – அட்லீஸ்ட் சிலவற்றையாவது – நாம் கடைப்பிடிக்கிறோமா? நம்மைச் சுற்றிலும் காட்டப்படும் சினிமாவில் அவ்வளவு வன்முறையையும் ஆபாசத்தையும் வைத்துக்கொண்டு, Ghandi-II படத்தைப் பார்க்கும் போது ஏன் கோபம் வருகிறது? நம்மில் எத்தனைபேர் சத்தியசோதனை படித்திருக்கிறோம்? எத்தனை பேர் படித்துவிட்டு அவர் வழியில் நடந்திருக்கிறோம்? அல்லது நடக்க முயற்சித்திருக்கிறோம்?

உண்மையிலே காந்தி இந்த நூற்றாண்டில் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? “என் சிலைகளை அகற்றுங்கள். உங்கள் வீடுகளில் நீங்கள் மாட்டியிருக்கும் என்னுடைய புகைப்படங்களை தயவு செய்து அகற்றிவிடுங்கள். விளம்பரப் பலகைகைளில் இருக்கும் என் பெயர்களை (எங்கேயாவது இருக்கிறதா என்ன? நான் விளம்பரப் பலகைகளில் ரஜினிகாந்த், விக்ரம், விஜய், மும்தாஜ், நமீதா போன்றோரின் படங்களைத்தான் பார்த்திருக்கிறேன்) தூக்கியெறியுங்கள். என்னை உங்கள் மனதில் மட்டுமே நிறுத்துங்கள். என் வழியையும், கொள்கைகளையும் கடைப்பிடியுங்கள்” என்பார் என்கிறது லகே ரகோ முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.

காந்தியைப் பிடிக்காத நிறைய நபர்கள் இருப்பார்கள். இருக்கிறார்கள். கேட்டால் ஏதேதோ காரணம் சொல்லுவார்கள். அவர் அரசியல் சார்ந்து எடுத்த முடிவுகளைப் பற்றி விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய கொள்கைகள்? காந்தீயம்?

கூர்காவிடம் அறை வாங்கிய முன்னா, தனது நண்பனிடம், காந்தி ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் காட்டு என்றிருக்கிறார், நான் இன்னொரு கண்ணத்தைக் காட்டினால், அவன் அறைய மாட்டான் பார், என்று சொல்லி மறு கண்ணத்தைக் காட்டுகிறான். கூர்க்கா மறு கண்ணத்தில் ஓங்கி இன்னும் பலமாக மற்றொரு அறை விடுகிறான். இப்ப முன்னாவுக்கு காந்தீயம் மறந்து விடுகிறது. கூர்க்காவை அடித்து நொறுக்கிறான். நண்பனிடம், இரண்டாவது அறைக்கு அப்புறம் என்ன செய்யறதுன்னு காந்தி சொல்லல என்கிறான்.

காந்தீயக் கொள்கைகளுக்கு, எங்கயாச்சும், இந்த அவசர உலகில் இடம் இருக்கிறதா என்ன? மேலும் காந்தீயம் அவசியம் தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

எனது வீட்டு வாசலில் ஒருத்தன் தினமும் பான் போட்டு எச்சில் துப்பி வைக்கிறான், நான் என்ன செய்யட்டும் என்று ஒருவர் கேட்க்கிறார். அதற்கு காந்தி – அல்லது காந்தி சொல்கிறார் என்ற illusion இல் முன்னாவே சொல்கிறார் – அவன் ஒவ்வொருமுறை துப்பும் போதும் அவனது முகத்தைப் பார்த்து பனிவாக சிரித்து விட்டு அவன் முன்னாலேயே அவன் துப்பிய பான் எச்சிலைக் கழுவுங்கள் என்கிறார். புகார் செய்த அந்த நபரும் அவ்வாறே செய்ய, கொஞ்ச நாளில் பலன் தெரிகிறது. எச்சில் துப்புபவர் சில நாட்களில் திருந்தி விடுகிறார். மன்னிப்பும் கேட்கிறார். எவ்வளவு நாளில் அந்த நபர் திருந்துவார் என்பது சொல்லமுடியாது. அது மாறுபடும். ஆனா திருந்துவார் என்பது நிச்சயம் என்பது படத்தின் கருத்து.

இது அஹிம்சை. நமது பணிவில் திக்குமுக்காடிப்போகும் எதிராளி “இவன் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவனா இருக்கான்டா” என்று வேறுவழியில்லாமல் அவனே திருந்திவிடுவது. ஆனால் இதில் மற்றொரு விசயமும் நடக்கும். எச்சில் துப்புபவன் மேலும் இரண்டு மூன்று பான் நபர்களை அழைத்து வந்து இங்கே இலவசமாக துப்பிக்கொள்ளலாம், உடனே க்ளீன் செய்து விடுவார்கள் என்று பெருமையாக நம்மைப் பார்த்து சொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒன்று, அவர்கள் துப்ப துப்ப நாம் இன்முகத்தோடு அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவர்கள் முன்னிலையில் க்ளீன் செய்ய வேண்டும். பொறுமை வேண்டும். அதைவிட தைரியம் வேண்டும்.

இதே போன்றொதொரு சம்பவத்தை எடுத்துக்கொள்ளலாம். வீட்டுச் சுவற்றில் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்கள் முன்னிலையிலே அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே கருணானிதியையோ, ஜெயலலிதாவையோ, இராமதாசையோ, திருமாவையோ கிழித்தெரிய நம்மால் முடியுமா? இங்கு நாய்கள் தான் அசுத்தம் செய்யும் என்னும் வரிகளை எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டே சிறுநீர் கழிக்கும் நபர்கள் முன்னிலையிலே (of course அவர்கள் முடித்தபிறகு!) கழுவிவிட நமக்கு பொறுமை இருக்கிறதா? அப்படி பொறுமையாக கழுவி விடத்தான் வேண்டுமா? வெளி நபர்களிடம் பொறுமையாக இருப்பதை விட்டுத்தள்ளுங்கள், வீட்டிலிருக்கும் நபர்களுடன், நம் இரத்த சொந்தகளுடன், நமது உடன்பிறப்புக்களுடன், நமது பெற்றோருடன் நாம் பொறுமையாக இருக்கிறோமா?

உண்மையை ஒப்புக்கொள்ளுவதற்கு தைரியம் வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால்- அதற்குத்தான் நிறைய தைரியம் வேண்டும். மறைப்பதும் சொல்லாமல் இருப்பதும் பொய் சொல்லுவதற்கு சமம்தான். “உண்மையைச் சொல்லிவிட்டு, மனநிறைவோடு கம்பீரமாக தைரியமாக இரு” என்கிறார் காந்தி. முடியுமா? எல்லா சந்தர்ப்பத்திலும் அது முடியுமா? காந்தி சிறு வயதில் தான் வீட்டில் திருடியதை நினைவுகூர்கிறார். பிறகு தனது தந்தையிடம் தான் திருடியதை ஒத்துக்கொண்டு இரவு முழுவதும் அவரது படுக்கைக்கு பக்கத்தில் உட்கார்ந்து அழுததையும் கூறுகிறார். முன்னா ஆர்வமாக “உங்கள் தந்தை உங்களை மன்னித்தாரா?” என்று கேட்க, காந்தி சிரித்துக்கொண்டே, “ம்ம்..கொஞ்ச நாள் பிடித்தது.” என்று சொல்கிறார்.

ஒரு சூழ்நிலையில் முன்னா தனது ஆருயிர் நண்பன் சர்க்யூட்டை அறைந்து விட, சர்க்கியூட் தனிமையில் அழுகிறான். காந்தி முன்னாவிடம் : “அவனிடம் சென்று மன்னிப்பு கேள்” என்கிறார். முன்னா இதெல்லாம் தேவையேயில்லை என்று நினைக்கிறான். ஆனால் காந்தி : “அறைவது சுலபம். ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்பது மிகவும் கடினம். அதற்குத்தான் தைரியம் அதிகம் வேண்டும். செய்து பார்” என்கிறார். நண்பனை அறைந்து விட்ட மனப்புழுக்கத்தில் இருந்த முன்னா அவனிடம் சென்று மன்னிப்பு கேட்ட பின்னர், மனதின் பாரம் குறைந்து, இருவரும் மீண்டும் -எந்த சொல்லப்படாத மனசங்கடமும் இல்லாமல் – நண்பர்களாகின்றனர்.

உறவுகளுக்குள் நிறைய விசயங்களை நாம் செய்வதில்லை. We take everything for granted. உதாரணமாக மன்னிப்பு கேட்பது. மன்னிப்பு என்பது “என்னை மன்னித்து விடு” என்று தான் கேட்க வேண்டும் என்றில்லை. மனைவியை ஓங்கி அறைவிட்ட கணவன், சிறிது நேரத்தில், அவளிடம் சென்று “என்னடா செல்லம் கோபமா?” என்று கேட்டால் கூட போதும். மன்னிப்பு கேட்பதிலும் தவறில்லை இல்லையா? மனைவியிடம் மன்னிப்பையும் சேர்த்து கேட்பதால், போனசாக ஏதும் கிடைக்கவாய்ப்பிருக்கிறதே!

இதில் கவனிக்க பட வேண்டிய ஒரு விசயமும் இருக்கிறது. சும்மா சும்மா மனைவியை அடித்து விட்டு, பிறகு மன்னிப்பு கேட்பதில் எந்த காந்தீயமும் இருப்பதாகத் தெரியவில்லை. மன்னிப்பு என்றால் : தவறை உணர்ந்து கொண்டேன் என்று அர்த்தம். தவறை உணர்ந்து கொண்டால் அதை திரும்ப செய்யலாமா? சாரி கேட்பது இப்பொழுதெல்லாம் பேசனாகி விட்டது. சாரி கேட்பது காந்தீயம் இல்லை, தவறை உணர்ந்து மறுபடியும் செய்யாமலிருப்பதே காந்தீயம். திருடியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட காந்தி அதற்குப்பிறகு திருடவேயில்லை என்பதை கவனிக்கவேண்டும்!

அடுத்து பொய் சொல்லாமல் இருத்தல். உண்மையை ஒத்துக்கொள்ளுதல். முன்னா ஒரு ரவுடி. ஆனால் தனது காதலியிடம் தான் ஒரு புரபொசர் என்று சொல்லி ஏமாற்றுகிறார். வில்லன், முன்னாவிடம் இந்த விசயத்தை அவளிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறார். முன்னா காந்தியிடம் என்ன வழி என்று கேட்க: “அவன் சொல்வதற்கு முன்னால் நீ அவளிடம் உண்மையைச் சொல்லிவிடு. பிறகு அவனிடம் நீ பயப்படத்தேவையில்லை. தைரியமாக நீ உன் போராட்டத்தை தொரலாம்” என்கிறார். உண்மைதான். உண்மையைச் சொல்லிவிட்டு தைரியமாக போராட்டத்தை தொடராலாம். ஆனால் காதலி? நீயும் அவளும் உண்மையாக காதலிக்கும் பட்சத்தில் உங்கள் காதல் கண்டிப்பாக ஜெயிக்கும், ஆனால் நீ உனக்கு உணமையாக இரு என்கிறார். அவர் சஞ்சய தத் என்பதால் அவரது காதல் உண்மை சொல்லியும் ஜெயித்தது, நமக்கு?

ஆனால் காதல் ஜெயித்ததா இல்லை மன்னாங்கட்டியானதா என்பதல்ல முக்கியம். இரவு தூங்கப்போனால் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நிம்மதியான தூக்கம் வர வேண்டும். அப்படி வரவில்லையென்றால் என்ன வாழ்ந்து என்ன பிரயோஜனம்? குற்ற உணர்வில்லாமல் நிம்மதியாக குரட்டை விட ஒரே ஒருவரால் தான் முடியும்: அவர் தனக்கு தானே உண்மையாக இருப்பவர்.

மூடநம்பிக்கை. வில்லனின் மகளுக்கு வில்லன் பொய் சொல்லி திருமணம் ஏற்பாடு செய்கிறார். அதாவது, ஜாதகப்படி மகள் திருமணம் செய்துகொண்டு போனால், கணவன் இறந்து விடுவான் என்கிறார், பையனின் ஜோசியர். இதைக்கேட்டவுடன் வில்லன் சமயோஜிதமாக அவள் பிறந்த நேரத்தை மாற்றி பையன் வீட்டாரை ஏமாற்றி விடுகிறார். இந்த விசயம் மகளுக்கு, திருமணத்திற்கு முதல் நாள் தான் தெரியவருகிறது. அவள் இதை ஒத்துக்கொள்ளாமல், நேரே சென்று பையனின் தகப்பனிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறாள். அவர் திருமணத்தை நிறுத்தி விடுகிறார். முன்னா வந்து சமாதானப்படுத்துகிறார். ஜோசியரும் உடன் இருக்க, பையனின் தந்தை ஜோசியர் சொல்வதைக்கேட்டு திருமணம் நடக்கவே நடக்காது என்கிறார். முன்னா அவரிடம் வாதாடுகிறார். சுற்றிலும் மக்கள் நின்று கொண்டு வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். இரு வீட்டாரும் நல்ல படித்து உயர்ந்த நிலையில் இருப்பவர்களே. திருமணத்துக்கு வந்தவர்களும் உயர்மட்டத்தில் இருப்பவர்களே. அப்பொழுது முன்னா ” படிப்பறிவில்லாத ரவுடியான எனக்கு புரிவது கூட உங்களுக்கு புரியவில்லையா” என்று அங்கே நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து கேட்கிறார். வாஸ்து, பெயர்மாற்றம், மோதிரக்கல், ஜாதக தோஷம் என்று எத்தனை நம்பிக்கைகளில் படித்த நாமே சிக்கி வெளிவர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். எப்பொழுது விடிவு?

ஒருவன் தனது தந்தையில் ஆயுட்கால சேமிப்பான ஏழு லட்ச ரூபாயை பங்கு சந்தையில் தொலைத்து விடுகிறான். தற்கொலைக்கு முயற்சி செய்யும் அவனிடம் : “முதலில் உன் தந்தையின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று உண்மையைச் சொல். பிறகு எப்படியாது அந்த பணத்தை அவருக்கு திருப்பிக்கொடுப்பேன் என்று உறுதி கொடு” என்கிறார் காந்தி (முன்னா). அதற்கு அவன் “அதற்கு நான் செத்தே போய்விடுவேன்” என்கிறான். “இத்தனை நாள் உன்னைச் சுமந்த உன் தந்தை இனி உன் சவப்பெட்டியையும் சுமக்க வேண்டுமா” என்கிறார். “பணத்தை எப்படி திருப்பி தருவேன்? மிகப்பெரிய தொகை அல்லவா அது?” என்கிறான் அவன். அதற்கு முன்னா ” அது மிகவும் எளிது. சிக்கனமாக இரு. இரண்டு மடங்கு வேலைசெய். பணத்தை மிக விரைவில் திருப்பிக்கொடுத்து விடலாம்” என்கிறார்.

சிக்கனம். கஞ்சத்தனமாக இல்லாமல் சிக்கனமாக இருப்பது மிகப்பெரிய குணங்களில் ஒன்று. கஞ்சமாக இருப்பவர்களையும், ஊதாரியாக இருப்பவர்களையும் நிறைய பார்க்கலாம். சிக்கனமாக இருப்பவரை காண்பது தான் கஷ்டம். சிக்கனமாக இருந்தாலே நிறைய பிரச்சனைகளை சமாளிக்கலாம் இல்லையா? சிக்கனம் என்பது பணத்தில் மட்டும் இல்லை, நாம் செலவழிக்கும் எல்லாவற்றிலும் தான், நேரத்தை சேர்த்து, அன்பை விடுத்து.

இன்று நமது இரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று லஞ்சம். ஒரு அரசு ஊழியர் (ஆசிரியர்!) பென்சன் பணம் தரப்படாமல் இழுத்தடிக்கிறார் மற்றொரு அரசு ஊழியர். சம்பந்தப்பட்ட அதிகாரி லஞ்சம் கேட்கிறார். ஆசிரியரோ குடுக்கும் நிலையில் இல்லை. காந்தி ஒரு வழி சொல்கிறார் அது : அந்த ஆசிரியர் அந்த அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று தனது கண்ணாடி, காது கேட்பதற்கான மெசின், சட்டை, பனியன், பேண்ட், ஜட்டி, செறுப்பு என்று அனைத்தையும் அங்கேயே -ஒவ்வொன்றுக்கும் விலை சொல்லி – கழட்டி கொடுப்பது. லஞ்சம் கேட்டவரை வெட்கி தலைகுனிய வைப்பது. லஞ்சம் கேட்டவர் இதற்கெல்லாம் வெட்கப்பட்டால் எப்போதோ லஞ்சம் ஒழிந்திருக்காதா?

நாம் நிர்வாணப் போராட்டம் நடத்தினால் போலீஸ் பிடித்து சென்று விட வாய்ப்பிருக்கிறது, கவனம். நிர்வாணப் போராட்டம் தான் என்றில்லை, வேறு ஏதாவது அஹிம்சை வழியில் போராடுவது. போராடு, ஆனால் எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்கிறார். முடியுமா? இன்றைய சூழலில் சாத்தியமா? அதிகாரத்தில் இருக்கும் பெண்களும் கூட கூச்சமின்றி லஞ்சம் கேட்கும் நிலையில், நாம் லஞ்சம் கொடுக்காமல் இருந்தால் நாம தானே பின் தங்கிவிடுவோம்? நமது வேலையல்லவா நின்றுபோகும்? இந்தியன் தாத்தாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கொடுமையை நினைத்துப் பாருங்கள். உண்மையில், அது போன்று யாருக்கும் நடக்கவில்லை என்று சொல்லமுடியுமா? பிணத்தை உறவினரக்ள் எடுத்து செவதற்கு கூட லஞ்சம் கேட்கும் உலகம் இது. அப்படியிருக்க நாம் மட்டும் லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் என்ன சாதித்து விடப்போகிறோம்?

எல்லோரும் அடிமைப்பட்டுத்தானே கிடக்கிறார்கள், நாம் மட்டும் அடிமை தனத்துக்கு எதிராக குரல் கொடுத்து என்ன சாதித்து விடப்போகிறோம் என்று அன்றைய சுதந்திரப்போராட்ட வீரர்கள் (எல்லா தியாகிகளின் தியாகமும் ஒன்றே. காந்தியின் தியாகம் தான் உயர்ந்தது என்றோ, நேதாஜியின் தியாகம் தான் உயர்ந்தது என்றோ சொல்லமுடியாது. இவ்விரு தலைவர்களின் தியாகத்திற்கு கொடிகாத்த குமரினின் தியாகம் எவ்வகையிலும் குறைந்ததில்லை. கொடிகாத்த குமரினின் தியாகத்திற்கு, போராட்டத்தால் நாடு கடத்தப்பட்டு எங்கோ செக்கிழுத்து யாருக்கும் தெரியாமல், யாராலும் அறியப்படாமல் இறந்து போன ஒவ்வொருவரின் தியாகவும் குறைந்ததல்ல!) நினைத்திருந்தால் நமக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது. அவர்கள் தங்கள் உடமைகளை, உயிர்களை தியாகம் செய்தார்கள். அதைவிட குறைந்த சில தியாகங்கள் செய்ய நாம் முன் வந்தால் சாதிக்கலாம். எதையும் அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது. போராட்டம் வேண்டும். தொடர்ந்து போராட வேண்டும்.

ஹிந்தி திரைப்பட உலகம் ஒரு பக்கம் பாதாளத்தில் சென்று கொண்டிருந்தாலும், மறுபக்கம் பிரமிக்க வைக்கிறது. சுவதேஸ், ரங் தே பசந்தி போன்ற படங்கள் சில எடுத்துக்காட்டுகள். முன்னாபாயில் எவ்வளவு வாழ்க்கைக்கு தேவையான நல்ல விசயங்கள் இருக்கின்றன. அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் நம்மிடம் இருந்தாலும், இதை தைரியமாக சொல்வதற்கு நிறைய நம்பிக்கை வேண்டும். அதுவும் இன்றைய திரைப்பட சூழலில் இது போன்ற படங்கள் தான் ஆரோக்கியமான நாளைய சினிமா எதிர்காலத்துக்கு ஆக்சிஜன். இப்படத்தின் வெற்றி மேலும் பல நல்ல படங்களின் முயற்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.

இந்த படத்தின் தமிழாக்கத்தில் -கண்டிப்பாக தமிழாக்கம் செய்யவேண்டும்- ரஜினியோ, கமலோ ( கமலுக்கு காந்தீயத்தில் நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு காந்தீயத்தில் நம்பிக்கை இல்லை என்று அவர் மறுக்க முடியாது. நடிக்கத்தானே சொல்கிறார்கள். அவர் நடிகர் தானே?) – நடித்தால் மக்களை எளிதாக சென்றடையும் என்று நினைக்கிறேன். காந்தீயக் கொள்கைகள் மறுபடியும் நினைவு கூறப்படும். இதனால் பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது, ஆனால் அட்லீஸ்ட் 0.000000001% மக்களையாவது யோசிக்க வைத்தால், அது பெரிய -மிகப் பெரிய -வெற்றி. உதாரணத்திற்கு என்னிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் போல. அதுக்காக நான் காந்தியவாதியாகி விட்டேன் என்று அர்த்தம் இல்லை. முதலில் நீண்ட காலமாக தொடாமல வைத்திருக்கும் Louis Fisher எழுதிய Biography Of Ghandhiயைப் படிக்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

மாற்றம் ஏற்படலாம். ஏனென்றால் மாற்றம் என்ற ஒன்றே என்றைக்கும் மாறாத ஒன்று.

வந்தேமாதரம்.