IPL விசில் போடு – 7: The name is Dhoni

Yet another high scoring game! Yet another last over drama! சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் வெற்றிக் கொடியை பெங்களூரிவிலும் நாட்டியது.

எப்படி மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்குமோ, அவ்வாறே ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டிகளிலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். சார், ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கும் பெங்களூருவுக்கும் என்ன சம்மந்தம்? யாராவது ஒரு கர்னாடகா ரஞ்சிக் கோப்பை வீரரை காட்டுங்கள் என்று நீங்கள் கேட்கலாம் – indeed you are right. கிட்டத்தட்ட எல்லா அணிகளும் இப்படித்தான். பெயரளவில் மட்டுமே தங்கள் ஊர்களை தாங்கி வருகின்றது. Welcome to IPL. அப்படியென்றால் சென்னை – ராயல் சாலஞ்சர்ஸ் போட்டிகளில் ஏன் சார் இவ்வளவு டென்ஷன்? தெரியவில்லை. ஒரு வேளை “அவங்க தண்ணி கொடுக்காத பசங்க சார்” என்று சென்னை ரசிகர்கள் விளக்கம் கொடுக்கலாம்.

எது எப்படியோ நேற்றைய ஆட்டம் ஒரு classic T20 battle. ஒரு டி20 போட்டியின் சாமுத்ரிகா லட்சனங்கள் அத்தனையும் அடக்கம். சிக்ஸரிகளும் பவுண்ரிகளும் பறக்க, சில ரசிகர்கள் பிராத்தனைகளில் இறங்க, கடைசி ஓவரில் டென்ஷன் ஏற, அந்த டெப்ஷனில் அம்பையர்கள் சொதப்ப, சிறாஜ் வைடாக பந்துகளை போட, போட்டி அதகளம்.

dbppis4u0aat55i

டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். டூபெளசியும் கரன் சர்மாவும் வெளியேற, ஹர்பஜனும் இம்ரான் தாஹீரும் உள்நுழைந்தனர். ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் கிரிஸ் வோக்ஸுக்கு பதிலாக காலின் க்ராண்ட்ஹோம்.

ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் டிகாக்கும் டிவில்லியர்ஸ்ஸும் மிகச்சிறப்பாக விளையாடினர். சில பேட்ஸ்மென்களின் ஆட்டத்தை பார்க்கும் போது இவர்கள் கிரிக்கெட் விளையாடவே பிறந்தார்களா எனத்தோன்றும். விவியன் ரிச்சர்ட்ஸ், கவாஸ்கர், குண்டப்ப விஸ்வனாத், சச்சின் டெண்டுல்கர், கோலி வரிசையில் டிவில்லியர்ஸையும் சேர்க்கலாம்.

கர்ணன் கவச குண்டகங்களொடு பிறந்தது போல் இவர்கள் ஹெல்மெட் பேட் சகிதம் பிறந்தார்களோ என்னவோ.

டிவில்லியர்ஸ் அடித்த சிக்சர்கள் அனைத்தும்  நின்று பேசும் அவர் புகழை. அவர் அடித்த 8 சிக்ஸர்களில் ஒன்று அரங்கத்தின் வெளியே சென்று கானாமலே போனது. அனேகமாக பெங்களூரில் தடுக்கி விழுந்தால் தென்படும் ஏதாவது சாப்ட்வேர் இஞ்சினியர் மேல் விழுந்திருக்கலாம.

ஒரு சமயத்தில் சென்னை அணிக்கு இலக்கு 230லிருந்து 240 வரை இருக்கும் என்று கூட தோன்றியது. சரியான நேரத்தில் இம்ரான் தாஹீர் டிவில்லியர்ஸ் விக்கட்டை எடுக்க அட்டத்தின் momentum சற்று கட்டுக்குள் அடங்கியது. பின்னால் வந்த மந்தீப் சிங்கும் வாஷிங்டன் சுந்தரும் தன் பங்குக்கு விளாச 20ஆம் ஓவரின் முடிவில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 205 ரன்கள் குவித்தது.

இந்த ரன் குவிப்பை வேறொறு கோனத்தில் பார்க்கும் போது டி20 போட்டிகள் கடந்த சில ஆண்டுகளில் கொண்டுவந்த பரிணாம வளர்ச்சிகள் தான் காரணமோ எனத் தோன்றுகிறது. சிறிய மைதானம், பவுலர்களுக்கு சற்றும் உதவாத பிட்ச், lightning fast outfield என அனைத்தும் பேட்ஸ்மென்களுக்கு ஆதரவான ஒரு அம்சங்கள். இதன் காரணமாக பெங்களூரு போன்ற மைதானத்தில் 190 என்பதே ஒரு par score. இதன் காரனமாக டி20 என்றால் என்ன? Is it a sheer exhibition of muscle strength? என்ற கேள்வி வராமல் இல்லை. இதன் அடுத்த பரிணாம நிலை என்னவாக இருக்கும் என்பதை யாரெனும் கணிக்க முடியுமா என்பதே அடுத்த கேள்வி. காலமே இதற்கு விடை கூறட்டும்.

dbtfcgmwkaizr4s

டி20 போட்டிகளில் திறமை இருந்தாலும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ராயல் சாலஞ்சர்ஸ் அணியைப் பொருத்தவரை சற்று அதிர்ஷ்ட்டமில்லா அணியென்றே தோன்றுகிறது. பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும் நாரோடு சேர்ந்த பூவும் நாரும் என்பதற்கேற்ப்ப கோலி, டிவில்லியர்ஸ் போன்ற தலை சிறந்த ஆட்டக்காரர்களின் முயற்சி அனைத்தும் வீனாவது கொஞ்சம் துரதிஷ்டம் தான்.

சென்னையின் வாட்சன், ரெய்னா, சாம் பில்லிங்ஸ் மற்றும் ஜடேஜா 9 ஓவர்களுக்குள் வெளியேற சென்னை 74 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. ரசிகர்கள் முகத்தில் டென்ஷன் ஏற ஆரம்பித்தது. ஐந்தாவது விக்கட்டுக்கு ராயுடுவும் தோனியும் 100 ரன்கள் சேர்க்க ரசிகர்கள் கொஞ்சம் கூல் ஆனார்கள். கடைசி 5 ஓவர்களில் கிட்டத்தட்ட 70 ரன்கள் தேவையிருக்க தோனி தான் டி20 போட்டியின் முடிசூடா மன்னன் என மற்றொறு முறை அறிவித்தார். ஒவ்வொறு ஓவரிலும் கணக்காக இலக்கை வைத்து ரன் குவிக்க, சிக்ஸர்கள் பறக்க சின்னசாமி அரங்கமே அதிர்ந்தது.

தன் impact bowlers உமேஷ் யாதைவையும் செகாலையும் 13  ஓவருக்குள்ளேயே தங்களின் 4 ஓவர்களை முடித்தது ஏனென நெட்டிசன்கள் புலம்பாமல் இல்லை. சென்னையைப் போலவே ராயல் சேலஞ்சர் அணியின் பவுலிங் சொதப்பல்கள் அப்பட்டமாகவே வெளிப்பட்டது. 18வது ஓவரில் ராயுடு ரன் அவுட்டாக, காலன் கரிகாலன் ப்ராவோ தன் பங்கிற்க்கு 20வது ஓவரில் ஒரு பவுன்ரியும் சிக்சரும் விளாச, தோனி தன் trademark (2011ஆம் உலககோப்பை இறுதிப்போட்டி) ஷாட்டுடன் ஒரு சிக்ஸர் அடிக்க, இரண்டு பந்துகள் மீதமிருக்க சென்னை அட்டகாசமான வெற்றி கண்டது.

dbptclevmaanqp_

Nothing like beating the opponent in their own backyard!

சென்னை சூப்பர் கிங்ஸ் மறுபடியும் table toppers. தங்களின் தொடர் வெற்றியை தக்கவைக்க முனைவார்கள். ராயல் சாலஞ்சர் அணி playoff தகுதிசுற்றுக்கு தகுதிபெறுவது சந்தேகமே எனத்தோன்றுகிறது. கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இனி எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற முனையவேண்டும்.

தல தொனியின் மற்றொறு கலக்கல் ஆட்டத்திற்காக ஒரு சுப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

2 thoughts on “IPL விசில் போடு – 7: The name is Dhoni

Leave a comment