IPL விசில் போடு – 9: Kings, for a reason

நேற்று பூனாவில் நடைபெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கெதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

முன்பு 3ஆம் தேதியில் கோல்கத்தாவுக்கெதிரான போட்டியில் 6 விக்கட் வித்தியாசத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. Yet another sublime perfornance from the Kolkata boys! கிட்டத்தட்ட ஏனோ தானோ என்று விளையாடியது சென்னை. 20 ஓவர்களில் 177 ரன்களை மட்டுமே சென்னை அணியால் எடுக்க முடிந்தது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், சென்னை அணியின் புது கர்ணப்பிரபு ஆசிப் தயவில், 18வது ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிவாகை சூடியது.

8 வருடங்களாயினும் mystery spinner ஆகவே வலம் வரும் சுனில் நரேன், நிடஹாஸ் கோப்பைக்கு பின் மிகுந்த எதிர்பார்ப்புடன் விளையாடும் தினேஷ் கார்திக், அணியின் ஆணிவேராக ஆன்ரே ரசில், 19 வயதுக்கு உட்பட்ட உலகப்கோப்பை கதாநாயகர்கள் சிவம் மவி மற்றும் ஷுப்மன் கில் என அந்த அணியில் ஹீரோக்களுக்கு பஞ்சமில்லை. ஓவ்வொரு போட்டிகளிலும் determination தெரிகிறது. Not just on the papers, களத்திலும் ஒரு balanced அணியாக விளையாடுகிறார்கள்.

இந்த IPL போட்டிகள் கிரிகெட்டையும் மட்டுமல்ல சிலசமயம் வாழ்க்கை பாடத்தையும் சேர்த்தே சொல்லித்த்தருகிறது.

கோல்கத்தா அணியின் புதுவரவு ரிங்கு சிங். உத்திரப்பிரதேச ரஞ்சிக் கோப்பை பேட்ஸ்மேன். அப்பா வீட்டுக்கு வீடு எரிவாயு சிலிண்டர் எடுத்துச் செல்லும் சாதாரண ஊழியர். திருமண வயதில் மகள். வருமானம் பெரிதாக இல்லாவிட்டாலும் மகனின் ஆர்வத்தையும் திறமையும் அறிந்து தான் கஷ்டபட்டாலும் பரவாயில்லை மகனின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று நினைக்கும் typical middle class அப்பா. இம்மாதிரியானவர்களை பார்க்கும் போது நல்லா விளையாடுயா என்று எதிரணி ரசிகர்கள் கூட ஆதரிப்பார்கள். கஷ்டப்பட்டு அடிமட்டத்திலிருந்து மேலெழும்பி வந்தவர்களின் டிசைன் அப்படி.

நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டி தனிரகம். சென்னை ரசிகர்கள் BP மாத்திரையுடன் போட்டிகளை காணவந்தது சசிக்காமல், பொருத்தது போதும் மனோகரா பொங்கி எழு என்று தோனி வசனம் சொன்னாறோ என்னவோ, சென்னையின் சர் ஜடேஜாவும் அணியின் புது தமிழ் புலவர் ஹர்பஜனும் பெங்களூர் பேட்ஸ்மென்களை பந்தாடினர்.

சென்னை அணியில் டூப்ளெசி, கரண் சர்மா, ஆசிப் ஆகியோருக்கு பதில் டேவிட் வில்லி, பழைய கர்ண பிரபு சர்துல் தாகூர் மற்றும் துருவ் ஷோரே. டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். கிட்டத்தட்ட எல்லா அணிகளும், போட்டி எங்கு நடந்தாலும் சரி, டாஸ் வென்றவுடன் பவுலிங் தேர்வு செய்வது வழக்கமாகிவிட்டது.

டாஸ் ஒன்றே போட்டியின் முடிவுகளை நிர்ணயுக்குமாயின் அந்த போட்டியில் யார் விளையாடினால் என்ன என்ற கேள்வியே பலர் மனதில் இப்போது.

ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் டிகாக்குக்கு பதிலாக டிவில்லியர்ஸ். புது தெம்புடன் கலக்குவார் என்று எதிர்பார்புடன் காத்திருந்த ரசிகர்களூக்கு ஏமாற்றமே. மெக்கல்லம் சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க, கோலி ஜடேஜாவின் முதல் பந்தில் கிளீன் போல்ட். உண்மையிலேயே நாம் தான் விக்கெட் எடுத்தோமா என்று அதிர்ச்சியில் இந்த விக்கெட்டை கொண்டாடுவதா வேண்டாமா என்று திருதிருவென விழித்த ஜடேஜாவின் நிலைமை பரிதாபமாக இருந்தது.

வெளிய வா, கவனிக்கறேன் என்பது போல் கோலி முறைக்க, நான் இல்லீங்க அண்ணா என்று ஜடேஜா பார்வையால் கெஞ்ச, தொலைக்காட்சி வர்ணணையாளர்கள் முதல் கடைக்கோடி ரசிகர்கள் வரை டிவிட்டரிலும் முகநூலிலும் ஜடேஜாவை வைத்து ஒரு நையாண்டி தர்பாரே நடத்தினர்.

பார்தீவ் பட்டேல் மற்றும் டிம் சவுத்தி தவிர்த்து அனைவரும் ஒரு இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய காப்டனின் அணி இப்படி IPL போட்டிகளில் கைப்பிள்ளை போல் இருப்பது ஆச்சரித்திலும் ஆச்சரியம். Stronger in papers but a punch bag in field doesn’t suit you RCB! வெறும் மூன்று பேட்ஸ்மென்களை வைத்து போட்டிகளில் வெற்றி பெறுவது எப்படி தல என்றுசில பெங்களூர் ரசிகர்கள் சமூகவளைதளங்களில் புலம்புவது நியாமாகவே தோன்ருகிறது. Poor playing XI selection, not being able to manage the given resources, not being able to guide the team to victory என்று கேப்டன் கோலியின் மேல் ஏகப்பட்ட புகார்கள். இதையெல்லாம் தாண்டி கோலிக்குள் இருக்கும் பேட்ஸ்மெனும் அவதிக்குள்ளாவது தான் பரிதாபம்.

அடுத்து வந்த டிவில்லியர்ஸும் ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார். மியூச்சுவல் பண்ட் விளம்பரத்தின் இறுதியில் வரும் “Mutual Fund Investments are Subjected to market risk” என்று சொல்பவரின் வேகத்தை விட தோனி வேகமாக ஸ்டம்பிங் செய்தார். With a reaction timeof 0.16 seconds, தோனியின் வேகம் சிலிர்க்க வைக்கிறது.

dccbmf6wkaa3qyw

கொலி மற்றும் டிவில்லியர்ஸ்ஸின் விக்கெட் விழுந்தவுடன் கிட்டத்தட்ட 8 ஓவருக்குள்ளேயே ஆட்டம் முடிந்தது என்று ரசிகர்கள் ஆர்பரித்தனர். 20ஆம் ஓவரின் முடிவில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் வந்த சென்னை துவக்க ஆட்டக்காரர்கள் முன்பு போல் சிறப்பாக விளையாடவில்லை. உமேஷ் யாதவும் செகாலும் மிகச் சிறப்பாக பந்து வீசினர்.

ராயுடுவுன் ரெய்னாவும் ஒரளவு போட்டியை கட்டுக்குள் கொண்டுவர கடைசி 3 ஓவர்களில் 22 ரன்கள் தேவையாக இருந்த போது கொண்டுவந்த BP மாத்திரைகளை சென்னை ரசிகர்கள் எடுக்க தயாரானார்கள். அதுக்கெல்லாம் அவசியம் இல்லை என்று போல 18ஆவது ஓவரை வீச வந்த செகாலை தோனி பதம் பார்த்தார். இரண்டாவது பந்தில் அடித்த சிக்ஸர் மிட்விக்கெட் பவுண்ரியை தாண்டி ரசிகர்களிடம் சிக்கியது. மூன்றாவது பந்து வைட். ஒரு சுழர் பந்து வீரர் வைட் பந்து வீசுவது கிரிமினல் குற்றமாகவே பார்க்கபடுகின்றது. கோலிடம் அதிகாரம் இருந்தால் செகலை 7 வருடம் கடுங்காவல் சிறையில் தள்ளுவார் போலும். அடுத்து வந்த நான்காம் ஐந்தாம் பந்துகளும் சிக்ஸர்களாக பறக்க, கடைசி பந்தில் ப்ராவோ சிங்கிள் எடுக்க, சென்னை தன் அபிமான எதிரியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

dccbo4pxuaexnry

Technically a win or two should guarantee CSK to playoffs, ஆனால் ரசிகர்களை பொருத்தவரையில் யாரிடம் ப்ளேஆப் போட்டிகளில் விளையாடப் போகிறோம் என்றே பேச்சு. ஜடேஜாவும் ஹர்பஜனும் சேர்ந்து கூட்டாக 5 விக்கெட்டுகளை எடுத்தது சென்னைக்கு பெரிய ஆருதலாக இருக்கும். புது வரவு டேவிட் வில்லி மிக வேகமாக அதே சமயம் துல்லியமாக பந்துவீசுகிறார். இருந்தாலும் பவுலிங் விஷயத்தில் consistant ஆக இருப்பார்களா என்பதை அடுத்து வரும் சில போட்டிகளின் முடிவுகள் சொல்லும்.

சென்னையின் அடுத்த போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்க இந்த இடைப்பட்ட காலத்தில் மற்ற அணிகள் எவ்வாறு விளையாடுவார்கள் என்பதை சென்னை அணி மட்டுமில்லாது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்கள். அதற்கேற்றவாறு சென்னை அணியும் தன் வியூகங்களை மாற்றும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

அதுவரை, சர் ஜடேஜாவுக்காகவும் ஹர்பஜனுக்காகவும் சூப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

One thought on “IPL விசில் போடு – 9: Kings, for a reason

Leave a comment