வாரிசுகள், இராவணகாவியம், கலர்டீவி மற்றும் பொன்னியின் செல்வன்

வாரிசு அரசியல் என்பது சரியா? தவறா? (உனக்கு இது ரொம்ப முக்கியமா? உன்கிட்ட யாராச்சும் கேட்டாங்களா?) ரொம்ப நாளைக்கு முன்னர் முடியாட்சி இருந்தது. Like தசரதன் ஆட்சி செய்தார் என்றால், அவருக்கு அப்புறம் ஸ்ரீ ஸ்ரீ இராமபிரான் ஆட்சி செய்வது போல. அவர் காட்டுக்கு சென்றாலும், மக்கள் அவர் திரும்ப வரும் வரை வெயிட் செய்வாங்க. அப்புறம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி வந்தது. பிறகு குடியாட்சி முறை வந்தது. குடியாட்சி முறையா என்றால், atleast பெயரளவில். ஆனால் நடப்பது உண்மையில் குடியாட்சியா? ஓட்டு போடுகிறோம் ஆனால் ஆட்சியில் அமர்வது யார்?

நடுவில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் மட்டுமே வாரிசு அரசியல் இல்லை எனலாம். காம்ரேட்கள் ஆட்சி செய்யும் சில மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாரிசு அரசியலே -முடியாட்சியே- நடைபெறுகிறது. வாரிசு என்பது சொந்த மகனாகவோ, அல்லது மகளாகவோ தான் இருக்கவேண்டும் என்பதில்லை. சித்தப்பா மகனாகக் கூட இருக்கலாம். அல்லது மனைவியாகவோகூட இருக்கலாம், இல்லையேல் – எனக்கு ஒன்றும் தெரியாதுப்பா- எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். வாரிசு என்று அறிவிக்கும் அவருக்கும், வாரிசானவருக்கும், இல்லையேல் வாரிசாக தன்னை அறிவித்துக்கொண்டவருக்கும் கண்டிப்பாக நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. இருக்கும். இந்திய அரசியலை – ஏன் உலக அரசியலை கூட- உற்று, இல்லை இல்லை சும்மாகாச்சுக்கும் பார்த்தால் கூட, வாரிசு அரசியல் எங்கும் நிறைந்திருப்பது புலப்படும்.

இதற்கும் இன்று (21/11/2007) இந்தியா வந்த அமேரிக்காவின் ஜெஸ்ஸி எல் ஜாக்ஸன் என்ற சிவில் ரைட்ஸ் ஆக்டிவிஸ்ட் ராகுல் காந்தியைச் சந்தித்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

***

இராமாயணம் என்னை கடந்த சில நாட்களாகவே ரொம்பவும் பாதித்து விட்டது. இதற்கு முன்னர் எனக்கு இராமாயணத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. இப்பவும் தான். ஆனால் நடந்து முடிந்த விவாதங்கள் என்னை இராமாயணத்தை பற்றி அறிந்துகொள்ளத் தூண்டின.

ரொம்ப நாட்களுக்கு முன்னால் இருந்தே எனக்கிருந்த சந்தேகங்கள் இவை தான்:
1. இராமர் இராமெஸ்வரத்தில் பாலம் அமைத்து இலங்கையை அடைந்திருந்தால், அங்கிருக்கும் லோக்கல் மக்களின் உதவி இல்லாமல் செய்திருக்க முடியாது. இப்படி ஒரு மிகப்பெரிய விசயம் தமிழ்நாட்டில் நடந்திருக்கும் பொழுது, இதை எப்படி நம் இலக்கியவதிகள், வரலாற்று மக்கள் தீவிரமாக பதிவு செய்யாமல் விட்டனர்?

2. இராமரைப் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியத்தில் ஏன் அவ்வளவாக இல்லை? அழிக்கப்பட்டதா? அழிக்கப்பட்டது என்றால், வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்பொழுது, வரலாறு என்பதே பொய் என்றாகிவிடுமே? (ofcourse, அது தான் உண்மையும் கூட!)

விகடனில் மதனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி: பெண்களைப் பற்றிய வரலாறு பெரிதும் இல்லையே ஏன்?
பதில்: இதுவரை பெண்கள் பெரிதாக எங்கும் ஆட்சி செய்யவில்லை. இனிமேல் ஆட்சிசெய்யலாம். வரலாறு எழுதப்படலாம்.

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களைப் பற்றி பெரிதாக எழுதிக்கொள்வது இயல்புதான். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வதை கூட ஒரு வழியில் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் தாங்கள் நல்லவனாக வல்லவனாக இருக்கவேண்டும் என்பதற்காக, மற்றவர்களை கேவலமாக சித்தரிப்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

இராவணன் தீவிர சிவபக்தன் என்பதற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியத்தில் நிறைய இருக்கின்றன. ஆனால் அவன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதற்கான ஆதாரங்கள் தமிழில் அதிகம் இல்லையே? கம்பராயணம் என்பது இலக்கியம். அது வால்மிகியின் நாவலைத் தழுவி எழுதுவதைப் போன்று. புதுமைப்பித்தன் ருஷ்ய நாவல்களைத் தழுவி எழுதியது போல. ஹருகி முராகமி எழுதிய ஜப்பானிய நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதைப் போல அவ்வளவே. அதை வரலாற்று தடயமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இராமபிரானின் பராக்கிரமங்களை நிரூபிக்க ஒரு வில்லன் தேவையென்றால், மகாபாரதம் போலவே, அவர்களுக்குள் ஒரு வில்லனை தேடிக்கொள்வது தானே? ஏன் அங்கிருந்து இவ்ளோ தூரம் வந்து ஒரு சிவபக்தனான தமிழ் மன்னனை வில்லனாக பிடிப்பானேன்? இப்பொழுதிருக்கும் தமிழ் படங்களுக்கு, ஹிந்தி பேசும் வில்லன்களை நாம் தேடிப்பிடிப்பது போல. இராவணனைப் பற்றி வான்மீகி எழுதியதற்கு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?

எனக்கு இராமபிரானைப் பற்றி கவலை இல்லை, I really dont care. இராவணன் தீயவன் தானா? ஆதாரம் இருக்கிறதா?

Proof of concept?

***

இம்மாதிரியான ஒரு சூழலில் தான், நான் நூலகத்தில் சும்மா சுற்றிக்கொண்டிருந்த பொழுது, இராவணகாவியம் என்ற நூலைப் பார்த்தேன். அதன் முதல் சில பக்கங்களில், கதைச்சுருக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. நாற்பதுகளில் வெளிவந்த இந்த நூல் அப்பொழுது தடை செய்யப்பட்டிருந்திருக்கிறது. பின்னர் திராவிட ஆட்சி வந்ததற்கு அப்புறம் தான் தடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இராமபிரானைப் பற்றி கேலியாக பேசினால், மக்கள் மனம் புண்படுமோ என்று யோசிக்கும் வருத்தப்படும், நம் தலைவர்கள் (சில நடிகர்களும் கூட!), இராவணனைப் பற்றி இழிவாக (கவனிக்கு இழிவாக, கேலியாக அல்ல!) பேசும் போது ஒரு சமூகத்தின் மனம் புண்படுமே என்று ஏன் நினைப்பதில்லை?

இராவண காவியத்தில் ஒரு கேள்வி கேட்கப்படிருந்தது:
அதாவது அவ்வளவு பெரிய மன்னனான, சீதையை தூக்கிவரத் துணிவிருந்த இராவணனுக்கு, சீதையை அடைவது அவ்வளவு கடினமாகவா இருந்திருக்கும்? அதுவும் தனது எல்லைக்குள்? ஆனால் அவன் சீதையின் மீது ஒரு விரலைக் கூட வைக்கவில்லை என்பது தான் உண்மை. (வைக்கமுடியவில்லை என்பதெல்லாம் சும்மா கதை!) இராவணன் சீதையை தங்கையாகத்தான் தூக்கிவந்திருக்கிறான். அது தான் உண்மை. தன் தங்கையின் மூக்கை அறுத்தவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் தூக்கிவந்திருக்கிறான், என்று சொல்கிறது இராவண காவியம்.

யோசிக்க வேண்டிய விசயம் தான்.

ஆரியர்கள் திராவிடர்களை மட்டம் தட்ட இப்படியெல்லாம் எழுதினார்கள் எனபதையும் மறுத்து விட முடியாது. ஏனென்றால் கம்பராமயணம் சோழர்கள் காலத்தில் வெளிவந்தது, சோழர்கள் திராவிட மன்னர்கள் அல்லர்.

இராவண காவியம் கதைச் சுருக்கத்தை செராக்ஸ் செய்து வைத்திருக்கிறேன், வெளியிடலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் என் நோக்கம் இராமபிரானைப் பற்றி அவதூறு சொல்ல வேண்டும் என்பதல்ல, இராவணன் நல்லவனாக இருந்திருப்பானோ என்கிற நப்பாசை தான்.

ஏனென்றால், இந்திய சட்டத்தின் படி, ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது, என்பது தானே? 🙂

அரசே முன் வந்து, இதை ஆராய்ச்சி செய்ய முன்வரலாம். ஆராய்ச்சி செய்ய நிதி ஒதுக்கலாம். மற்ற நாடுகளில் என்னென்னவோ ஆராய்ச்சி செய்கிறார்கள். ஒரே ஒரு அகல்வாராய்ச்சியில் தோண்டியெடுக்கப்பட்ட கல்லில் எழுதப்பட்ட எகிப்திய மெசபட்டோமிய சொற்களை வைத்துக்கொண்டு பல வருடங்களாக பொழுதைக் கழிப்பவர்கள் இருக்கிறார்கள் இல்லியா? இந்த ஆராய்ச்சி projectஇன் மூலமாவது, தமிழை முறையாக விரும்பிப் படித்தவர்களுக்கு, தமிழ் கற்றவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை வழங்கலாம்.

இது ரொம்ப முக்கியமா என்று கேட்பவர்களுக்கு: 750கோடி ரூபாய் செலவில் (ஒரு பகுதி செலவுதான், மொத்த செலவு இல்லை) கலர்டீவி கொடுப்பதையும், சிவாஜி போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கு கூட தமிழில் பெயர் வைத்தனர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, வரிசலுகை வழங்குவதையும், ஒப்பிடும் போது இது முக்கியமானதாகத்தான் படுகிறது.

செய்வார்களா திராவிடர்கள்?

***

Lord Of The Rings இன் மூன்று பாகங்களையும் மூன்றாவது முறையாக பார்த்து முடித்தேன். இந்த முறை என் மனைவியுடன். இரண்டு பாகங்கள் பார்த்து முடித்த அவருக்கு, மூன்றாவது பாகத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மூன்றாவது பாகம் பார்த்து முடித்த பின், நான்காவது பாகம் இருந்தால் நன்றாக இருக்குமே என்றார்.

எனக்கு தெரிந்தவரையில், இதேபோன்றதோரு படம், இனிமேல் எடுக்கமுடியுமா என்பது சந்தேகமே. பீட்டர் ஜாக்சன் நம்மை அவர்களின் காலத்திற்கே அழைத்துச் சென்றிருப்பார். ஒவ்வொருமுறை பார்க்கும் பொழுதும் எனக்கு, ஒரே மாதிரியான அதே மாதிரியான நெகிழ்ச்சியே கிடைக்கிறது. Fresh always. Faromir போருக்கு செல்லும் பொழுது, Pipin பாடும் அந்த பாடல் மனதை உருக்கிவிடுகிறது. நான் பார்த்த அத்தனை தடவையும். அதே போல sam மற்றும் Frodoவின் நட்பு எப்பொழுதும் அழகாகவே, நெகிழ்ச்சியாகவே இருக்கிறது. Smegolஐப் பார்க்கும் பொழுது எல்லாம் எப்பொழுதும் போலவே கோபமும், இரக்கமும் ஒரு சேர வருகிறது. Aragorn மற்றும் Gandalfஐப் பார்க்கும் போது வியப்பு மற்றும் மரியாதை ஏற்படுகிறது. legolas, எப்பொழுதும் போல fantastic.

பிற்காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சியால், இதை விட அருமையாக படங்கள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்தப்படங்கள் LOTR நம் மனதில் ஏற்படுத்திய தாக்கதை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான்.

***

எனக்கு LOTR பார்க்கும் பொழுதெல்லாம், ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்துவிடும். ஒரு விசயத்துக்காக ஏங்குவேன், நான். அது பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுப்பது. எவ்வளவு அழகான கதை அது? எவ்வளவு அருமையான Aragornஐப் போல வீர மன்னர்களை உடைய கதை அது? பொன்னியின் செல்வன் தமிழ் வரலாற்று புனைவு நாவல்களின் தலைசிறந்த ஒன்று, என்பதை மறுக்கஇயலாது. புதுமைப்பித்தனுக்கு கல்கியின் மீது வேறு விதமான எண்ணம் இருந்தாலும், பொன்னியின் செல்வன் is epic.

எனக்கு பொன்னியில் செல்வனை திரைப்படமாக ஆக்க வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை திரைக்கதையாக மாற்றி விட்டார், 80 சீன்களிள் அழகாக எழுதிவிட்டார் என்று செய்திகள் அவ்வப்போது வரும். உண்மையாகவே இருந்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.

பொன்னியின் செல்வனை திரைப்படமாக உருவாக்க ரைட்ஸ் முன்பு சிவாஜி அவர்கள் வைத்திருந்ததாகவும், பின்னர் அது எம்ஜிஆர் அவர்களின் கைக்கு மாறியது என்றும், இப்பொழுது கமலஹாசனிடம் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

என்னுடைய ஆசை:
நடிகர்கள்:

ராஜராஜ சோழன் : கமலஹாசன்
வல்லவராயன் வந்தியத்தேவன் – ரஜினிகாந்த்
ராஜெந்திரசோழன் – கமலஹாசன் (அல்லது அஜித்குமார்)
பெரிய பலுவேட்டரையர் – சத்யராஜ் (அல்லது ப்ரகாஷ்ராஜ்)
சின்ன பழுவேட்டரையர் – நெப்போலியன்

மணிரத்னம் டைரகட் செய்யவேண்டும். இளையராஜா இசையமைக்கவேண்டும். ஏவிஎம் தயாரிக்க வேண்டும். மூன்று பாகங்களாகக் கூட எடுக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஒரு பாகமாக எடுக்கக் கூடாது. மருதநாயகத்துக்கு முன்னர் கமல் இதைச் செய்யலாம்.

நடக்குமா?
***

4 thoughts on “வாரிசுகள், இராவணகாவியம், கலர்டீவி மற்றும் பொன்னியின் செல்வன்

  1. நாகா இயக்குகிறாரா? நன்றாகத்தான் இருக்கும். நான் தொடர்ந்து பார்த்த ஒரே சீரியல், விடாது கருப்பு மட்டுமே. அதற்கு இணையாக இன்னும் ஒரு சீரியல் கூட வரவில்லை என்பது உண்மைதான். ஆனால், பொன்னியின் செல்வனை நான் நாடகத்தில் பார்க்க விரும்பவில்லை. என் மனதில் இருக்கும் அந்த பிரமாண்டம் அப்படியே இருக்கட்டும். உங்கள் பதிவில் இருக்கும் அந்த பல்லக்கைப் பார்ர்கும் போதே, சற்று நெருடலாக இருக்கிறது. எடுத்தால், படமாகவோ நாடகமாகவோ, Lord Of The Ringsஇன் பிரமாண்டத்தோடு எடுக்கவேண்டும். வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி சுரேஷ்.

    Like

  2. //சிவாஜி போன்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கு கூட தமிழில் பெயர் வைத்தனர் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக,//தமிழில் பெயர் வைத்தார்களா?”சிவாஜி – The Boss” என்ற தலைப்பை தமிழ்த் தலைப்பாக அறிவித்து வரிச்சலுகை கொடுக்கிறது தமிழக அரசு.தமிழில் தலைப்பு வைக்க வேண்டுமெனப் போராடிய அரசியற்கட்சிகளும் சரி, மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரை மாற்றவேண்டுமென கமலுக்குப் பண்பாக அறிக்கைவிட்ட சு.ப.வீரபாண்டியனும் சரி, கருணாநிதியுடன் கூட்டுச் சேர்ந்த ஒரே காரணத்தால் காணாமற்போய்விட்டனர்.கலைஞர் தொலைக்காட்சிக்கு படவுரிமை விற்கப்பட்டதற்கும் வரிச்சலுகை அறிவிக்கப்பட்டதற்கும் தொடர்புள்ளதென பலர் கூறும் குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.____________________________-பொன்னியில் செல்வன் கதைக்கான உரிமையைக் கமல் வைத்திருந்தாரென்பது உண்மை போலவே தெரிகிறது. கமலிடம் அனுமதி பெறாமலேயே இது தொடராக வருகிறதென்றும் தோன்றுகிறது.இதுபற்றி சன் தொலைக்காட்சியில் கமல் சொல்லிய கருத்து:”நல்லதொரு கதைக்கு வரும் அவலம் அதற்கும் வந்திருக்கிறது”கமல் சற்று சலித்துக்கொண்டது போற்றான் தெரிகிறது.எமக்கென்ன?நல்லதொரு காவியம் திரையில் வந்தாற்சரிதான் (சின்னத்திரையென்ன பெரிய திரையென்ன?)சின்னத்திரையில் வந்தாற்கூட பின்பொருநாள் திரைப்படமாகத் தயாரிக்கலாம்.இக்கதைக்கான பெரியதொரு எதிர்பார்ப்பையும் ஆவலையும் சின்னத்திரை தூண்டிவிட்டபின் பெரியதொரு சந்தை வாய்ப்புடன் இது திரைப்படமாக்கப்படுவது நல்லதொரு சாதகமான விசயம் தான்.எனது தெரிவு, கமல்தான் இயக்க வேண்டுமென்பது. நிச்சயமாக மிகச்சிறந்த, எந்தச்சாயலும் படியாதவொரு படமாக அமையும். நாலைந்து காதற்பாடல்களாவது புகுத்தவேண்டிய கடமை மணிரத்தினதுக்கு இருக்கிறது. கமலிடம் அந்த அபத்தத்தை எதிர்ப்பார்க்க வேண்டியதில்லை.ஏற்கனவே வெளிவந்த ஹேராமும், சிறுதுண்டங்களாக வந்த மருதநாயகமும் மிக நம்பிக்கையளிப்பவை.எனது பார்வையில் ராஜராஜ சோழனாக ரஜனியும், வந்தியத்தேவனாக கமலையும் போடலாம். நாசருக்கும் ஒரு பாத்திரம் ஒதுக்க வேண்டும். நாசர் இல்லாமலா?

    Like

  3. இராவண காவியத்தின் பிரதியை வைத்திருக்கும் நண்பரே!,அதை நான் நீண்டகாலமாக தேடுகிறேன்.. இலங்கையிலிருந்தபடிஎனது இலங்கைத் தமிழர் வரலாறு நூலுக்கு (எழுதிக்கொண்டிருக்கிறேன்) அது பெரிதும் பயன்படும்.தயவு செய்து இராவண காவிய நூலை வலையேற்ற முடியுமா?முடிந்தால் எனக்கு email பண்ணவும்நன்றிekthan@gmail.comஇளம்குமுதன்

    Like

Leave a comment