தயிர்வடைகள்

தயிர்வடை சாப்பிடுபவர்கள் Traditional, பக்கார்டி சாப்பிடுபவர்கள் Organic என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை கண்டுகொள்ளாமல் இவ்வளவு நாட்கள் தெரியாமல் இருந்துவிட்டிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கே என் மீது கோபம் கோபமாக வருகிறது. என்ன ஜென்மம் நான்? ஆதாலால் குடி மக்களே உங்களுக்கு இந்த அரிய உண்மையை சுட்டிக் காட்டியதற்கு நீங்கள் எனக்கு நன்றி சொல்லத்தேவையில்லை, திரு. “ஆர்கானிக் எழுத்தாளர்” சாரு நிவேதிதாவிற்கு நேரடியாகச் சொல்லிவிடுங்கள்.

விசயத்துக்கு வருவோம். கோணல் பக்கங்களின் மூன்றாவது தொகுதியில் “உண்மையான பெரியார்” என்ற கட்டுரை (கட்டுரைகள் எழுதுபவர்கள் மன்னிக்கவும், அப்படித்தான் அந்த புத்தகத்தில் இருக்கிறது. மேலும் இந்தப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய நாஞ்சில் நாடன் இந்த மாதிரி இலக்கியத்திற்கு(?!) இன்னும் பெயர் வைக்கப்படவில்லை என்கிறார்!) யில் இவ்வாறு சொல்கிறார், சாரு நிவேதிதா:

காந்தியை, மகாத்மா என்று சமூகம் சொன்னால் நாமும் கிளிப்பிள்ளை மாதிரி திருப்பிச் சொல்லுதல். மாறாக அவர் மகாத்மாவாக வாழ்வதற்கு மற்றவர்கள் என்ன விலை கொடுக்க வேண்டியதிருந்தது என்பது பற்றி கேள்வியே கேட்காமல் இருத்தல்.

காந்தி இயற்கையாக இறந்த மாட்டின் தோலினால் செய்யப்பட்ட செருப்பை மட்டுமே அணிவது என்று முடிவெடுத்த பின்னர், இயற்கையாக இறந்த மாட்டைத்தேடி இரு குழுக்கள் நாடெங்கும் அலைந்தது திரிந்து கண்டுபிடித்து, அவருக்கு செருப்பு வாங்கிக் கொடுத்தார்களாம். இவ்வகையில் காந்தி அணிந்த செருப்பின் விலை அந்தக் காலகட்டத்தில் சாதாரண செருப்பை விட ஐம்பது மடங்கு கூட இருந்ததாம்.

அதனால் அவரை மகாத்மா என்று சொல்வதற்கு கேள்விகள் கேட்கவேண்டுமாம்.

காந்தி, கண்டிப்பாக எங்கிருந்தாலும் இறந்த மாட்டைக் கண்டுபிடித்து எனக்கு செருப்பு வாங்கிவாருங்கள் என்று அடம் பிடித்தாரா? அவர் இயற்கையாக இறந்த மாட்டின் தோலினால் செய்த செருப்பை மட்டுமே அணிவேன் என்று முடிவெடுத்த பின்னர், அவரது தொண்டர்கள், அவர் வேண்டாம் எனினும், அவருக்காக தேடி அலைந்து திரிந்து கண்டுபிடித்து வாங்கி வந்திருக்கலாம். இவ்வாறு தொண்டர்கள் வாங்கி வராமல் இருந்திருந்தால் கூட, காந்திக்கு இது ஒன்றும் மேட்டரே அல்ல, அவர் செருப்பு அணிவதையே விட்டிருப்பார். கோட்சூட் அணிந்து செல்வத்தில் திளைத்திருந்த போது, கந்தல் ஆடை அணிந்த மக்களைப் பார்த்ததும் அனைத்தையும் தூக்கி எறிந்த அவருக்கு செருப்பு அணியாமல் நடப்பதா பெரிய விசயம்? இதைக்கூட விட்டுத்தள்ளுங்கள். எக்காலத்திலும் உண்மையே பேசுவது என்பது எவ்வளவு பெரிய சமாச்சாரம்? அதை செய்யக்கூடிய அளவுக்கு மனதைரியமும், self-control லும் இருந்தவருக்கு சாதாரண செருப்பு அணியாமல் இருப்பதா பெரிய வேலை? மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நாற்பத்தியெட்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவருக்கு செருப்பு அணியாமல் இருப்பதா கஷ்டம்?

எங்கே, இவர்களை ஒரு நாள் – ஒரே ஒரு நாள்- உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

சரி. கிடக்கட்டும். அவரை மகாத்மா என்று அழைப்பதில் யாருக்கு என்ன கெடுதல் வந்து விட்டது? எவ்வளவு நல்ல பழக்கங்களை வைத்திருந்திருக்கிறார். அதற்கு ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு : அவருடைய பாத்ரூம்மை அவரே கழுவுவது. இது என்ன பெரிய விசயம், என்கிறீர்களா? எனது நண்பர்கள் சிலரே கூட தாங்கள் உபயோகித்த பாத்ரூம்மை தாங்களே கழுவி விட மாட்டார்கள். சாதாரண மனிதர்களும் நேரம் இல்லை என்றும் ( நேரம் இல்லையா? பாத்ரூம் போவதற்கு நேரம் இருக்கும் போது, கழுவிவிட நேரம் இருக்காதா என்ன? அதெல்லாம் இல்லை, சோம்பேறித்தனம் தான் காரணம் ), இன்னும் வேறு காரணங்கள் சொல்லி தப்பித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நாட்டின் தலைவர், குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் ஏறும் போது இங்கிலாந்து நீதிபதியே கூட எழுந்து நிற்கும் அளவுக்கு மரியதைக்குரியவர், ஏன் பாத்ரூம் கிளீன் பண்ண வேண்டும்? அவரை மகாத்மா என்று அழைப்பதில் என்ன தவறு வந்துவிடப்போகிறது? யார், எங்கே குறைந்து போகிறார்கள்?

அவ்வாறு சொல்லும் இலக்கியவாதிகளை, சாரு நிவேதிதா : தயிர்வடை இலக்கியவாதிகள் என்று சொல்லுகிறார்.

1875 இல் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒயின், கூபாவின் பக்கார்டி, பாங்க்காக் கேலிக்கை விடுதிகள், ஜப்பானியப் பெண்கள் அருகிலிருந்து ஊற்றிக்கொடுக்க, தரையிலமர்ந்து ஸாக்கே என்ற மது வகையை அருந்துவது, கேப்ரே பார்கள், “ரா” வாக மட்டுமே அடிக்க வேண்டும் என்ற மிக நல்ல ரூல்ஸைக்கொண்டுள்ள Geronimous என்ற பார், அதில் தொடர்ச்சியாக பதினேழு ஷாட்கள் அடித்து பதக்கம் வாங்கியதைப் பற்றியல்லாம் எழுதுவது எந்த வகை இலக்கியம்? இவர்கள் தான் organic இலக்கியவாதிகளா? (organic wines பற்றி சொல்லியிருப்பாரோ என்று கூட சில நிமிடம் யோசித்தேன். )

கேட்டால், ethics வேறு ஒழுக்கம் வேறு என்கிறார். எடுத்துக்காட்டாக அவரது ப்ராண்ஸ் தேசத்து நண்பரின் ஆப்ரிக்க மனைவி கன்னத்தில் முத்தமிட்டு வறவேற்ற சம்பவத்தைக்கூறி அது அங்கே பழக்கம் ஆனால் இங்கே அப்படி செய்யமுடியாது என்கிறார். அப்படியானால் உங்கள் கட்டுரைகளை ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது தானே?

மேலும் ஆதாரத்திற்கு: அண்டார்டிக்காவில், அண்டாகாகஜம் என்ற மிகப்புகழ் பெற்ற இலக்கியவாதி -அண்டாகாகஜம் என்ற இலக்கியவாதி பனிகுகைக்குள்ளிருந்து அவருடைய அன்னை டபாகாகுஜமுக்கு யாருக்கும் புரியாத புருஷ்கியா மொழியில் எழுதிய கடிதங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டும் – SubSnow Stupidity என்ற தொகுதியில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் என்று சொல்லி தப்பிப்பது பலருக்கும் வழக்கமாகிவிட்டது.

நாம் நமது நாட்டினர் மகாத்மா என்று சொன்னதை கேள்வி கேட்க்காமல் ஏற்றுக்கொண்டு தயிர் வடை இலைக்கியவாதி ஆகிவிட்டோம், ஆனால் ரனஜித் சொன்னதை அப்படியே நம்பினால் – என்னது? ஆதாரம் இருக்கிறதா? காந்தி மகாத்மா என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இல்லையா என்ன? -அந்த இலக்கியவாதிகளுக்கு என்ன பெயர்?

He is back!

காந்தியடிகள் இப்பொழுது இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்றொரு குறும்படம் youtube இல் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. மெகாஹிட். அந்த படத்திற்கு பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இலவச விளம்பரம் அளித்தன. நானும் பத்திர்க்கையில் வெளியான செய்தியைப் பார்த்துத்தான் இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன். பார்த்தேன். ரசித்தேன். இந்திய மக்கள் youtube இல் இருந்து அந்தப் படத்தை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

அந்தப் படத்தில் காந்தி அழகாக சண்டை போட்டார் (என்ன இருந்தாலும், தமிழ் சினிமாவில் வரும் , ஒரே குத்தில், அடியாள் பறந்து, பின், பல்டி அடித்து, பிறகு தலைகுப்புற டாடா சுமோவின் கார் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு விழுவதைப் போல அழகாக இல்லை!). இரண்டு கவர்ச்சியான பெண்களுடன் (இருந்தாலும், சீனா தானா பாட்டுக்கு நடனம் ஆடிய பெண்ணை விட அதிகமாகவே உடை அணிந்திருந்தனர். பெப்சி உங்கள் சாய்சில் ஒரு முறை ஒரு பெண் இந்தப் பாடலை விரும்பிக்கேட்டார், உமாவும் சிரித்துக்கொண்டே உங்களுக்கு வழங்குறோம்ங்க என்று சொன்னதை நான் இங்கு நினைவுகூற விரும்புகிறேன். மேலும், சென்ற வருடம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மாணவர்கள் நடனமாட நிறைய ஆசிரியர்கள் இந்தப் பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) ஜாலியாக கைகோர்த்துக்கொண்டு வலம் வருகிறார். மெசின் துப்பாக்கியைப் பயன்படுத்தி பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார். இறுதியில் “he is back. but this time he is crazy” என்று முடிகிறது படம்.

எனக்கு ஏனோ கோபம் வரவில்லை. யாரும் கோபப்படக் கூடாது என்று நான் சொல்லவில்லை. சிலருக்கு கோபம் வரத்தான் செய்தது. பொறுமையாக உண்மை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் கோபப்படத்தேவையில்லை என்பது புரியும். அந்த வீடியோவின் பின்னூட்டத்திலே, சிலர் காந்தியின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறி, வீடியோ போஸ்ட் செய்தவரை தகாத வார்த்தைகளில் திட்டியிருந்தார். காந்தியின் அருமை பெருமைகளை உணர்ந்தவர் எப்படி தகாத வார்த்தைளில் மற்றொருவரைத் திட்டுவார்?

உண்மையைச் சொல்லுங்கள் காந்தீயக் கொள்கைகளை நாம் முழுவதுமாக – அட்லீஸ்ட் சிலவற்றையாவது – நாம் கடைப்பிடிக்கிறோமா? நம்மைச் சுற்றிலும் காட்டப்படும் சினிமாவில் அவ்வளவு வன்முறையையும் ஆபாசத்தையும் வைத்துக்கொண்டு, Ghandi-II படத்தைப் பார்க்கும் போது ஏன் கோபம் வருகிறது? நம்மில் எத்தனைபேர் சத்தியசோதனை படித்திருக்கிறோம்? எத்தனை பேர் படித்துவிட்டு அவர் வழியில் நடந்திருக்கிறோம்? அல்லது நடக்க முயற்சித்திருக்கிறோம்?

உண்மையிலே காந்தி இந்த நூற்றாண்டில் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்? “என் சிலைகளை அகற்றுங்கள். உங்கள் வீடுகளில் நீங்கள் மாட்டியிருக்கும் என்னுடைய புகைப்படங்களை தயவு செய்து அகற்றிவிடுங்கள். விளம்பரப் பலகைகைளில் இருக்கும் என் பெயர்களை (எங்கேயாவது இருக்கிறதா என்ன? நான் விளம்பரப் பலகைகளில் ரஜினிகாந்த், விக்ரம், விஜய், மும்தாஜ், நமீதா போன்றோரின் படங்களைத்தான் பார்த்திருக்கிறேன்) தூக்கியெறியுங்கள். என்னை உங்கள் மனதில் மட்டுமே நிறுத்துங்கள். என் வழியையும், கொள்கைகளையும் கடைப்பிடியுங்கள்” என்பார் என்கிறது லகே ரகோ முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.

காந்தியைப் பிடிக்காத நிறைய நபர்கள் இருப்பார்கள். இருக்கிறார்கள். கேட்டால் ஏதேதோ காரணம் சொல்லுவார்கள். அவர் அரசியல் சார்ந்து எடுத்த முடிவுகளைப் பற்றி விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய கொள்கைகள்? காந்தீயம்?

கூர்காவிடம் அறை வாங்கிய முன்னா, தனது நண்பனிடம், காந்தி ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் காட்டு என்றிருக்கிறார், நான் இன்னொரு கண்ணத்தைக் காட்டினால், அவன் அறைய மாட்டான் பார், என்று சொல்லி மறு கண்ணத்தைக் காட்டுகிறான். கூர்க்கா மறு கண்ணத்தில் ஓங்கி இன்னும் பலமாக மற்றொரு அறை விடுகிறான். இப்ப முன்னாவுக்கு காந்தீயம் மறந்து விடுகிறது. கூர்க்காவை அடித்து நொறுக்கிறான். நண்பனிடம், இரண்டாவது அறைக்கு அப்புறம் என்ன செய்யறதுன்னு காந்தி சொல்லல என்கிறான்.

காந்தீயக் கொள்கைகளுக்கு, எங்கயாச்சும், இந்த அவசர உலகில் இடம் இருக்கிறதா என்ன? மேலும் காந்தீயம் அவசியம் தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

எனது வீட்டு வாசலில் ஒருத்தன் தினமும் பான் போட்டு எச்சில் துப்பி வைக்கிறான், நான் என்ன செய்யட்டும் என்று ஒருவர் கேட்க்கிறார். அதற்கு காந்தி – அல்லது காந்தி சொல்கிறார் என்ற illusion இல் முன்னாவே சொல்கிறார் – அவன் ஒவ்வொருமுறை துப்பும் போதும் அவனது முகத்தைப் பார்த்து பனிவாக சிரித்து விட்டு அவன் முன்னாலேயே அவன் துப்பிய பான் எச்சிலைக் கழுவுங்கள் என்கிறார். புகார் செய்த அந்த நபரும் அவ்வாறே செய்ய, கொஞ்ச நாளில் பலன் தெரிகிறது. எச்சில் துப்புபவர் சில நாட்களில் திருந்தி விடுகிறார். மன்னிப்பும் கேட்கிறார். எவ்வளவு நாளில் அந்த நபர் திருந்துவார் என்பது சொல்லமுடியாது. அது மாறுபடும். ஆனா திருந்துவார் என்பது நிச்சயம் என்பது படத்தின் கருத்து.

இது அஹிம்சை. நமது பணிவில் திக்குமுக்காடிப்போகும் எதிராளி “இவன் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவனா இருக்கான்டா” என்று வேறுவழியில்லாமல் அவனே திருந்திவிடுவது. ஆனால் இதில் மற்றொரு விசயமும் நடக்கும். எச்சில் துப்புபவன் மேலும் இரண்டு மூன்று பான் நபர்களை அழைத்து வந்து இங்கே இலவசமாக துப்பிக்கொள்ளலாம், உடனே க்ளீன் செய்து விடுவார்கள் என்று பெருமையாக நம்மைப் பார்த்து சொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒன்று, அவர்கள் துப்ப துப்ப நாம் இன்முகத்தோடு அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவர்கள் முன்னிலையில் க்ளீன் செய்ய வேண்டும். பொறுமை வேண்டும். அதைவிட தைரியம் வேண்டும்.

இதே போன்றொதொரு சம்பவத்தை எடுத்துக்கொள்ளலாம். வீட்டுச் சுவற்றில் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்கள் முன்னிலையிலே அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே கருணானிதியையோ, ஜெயலலிதாவையோ, இராமதாசையோ, திருமாவையோ கிழித்தெரிய நம்மால் முடியுமா? இங்கு நாய்கள் தான் அசுத்தம் செய்யும் என்னும் வரிகளை எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டே சிறுநீர் கழிக்கும் நபர்கள் முன்னிலையிலே (of course அவர்கள் முடித்தபிறகு!) கழுவிவிட நமக்கு பொறுமை இருக்கிறதா? அப்படி பொறுமையாக கழுவி விடத்தான் வேண்டுமா? வெளி நபர்களிடம் பொறுமையாக இருப்பதை விட்டுத்தள்ளுங்கள், வீட்டிலிருக்கும் நபர்களுடன், நம் இரத்த சொந்தகளுடன், நமது உடன்பிறப்புக்களுடன், நமது பெற்றோருடன் நாம் பொறுமையாக இருக்கிறோமா?

உண்மையை ஒப்புக்கொள்ளுவதற்கு தைரியம் வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால்- அதற்குத்தான் நிறைய தைரியம் வேண்டும். மறைப்பதும் சொல்லாமல் இருப்பதும் பொய் சொல்லுவதற்கு சமம்தான். “உண்மையைச் சொல்லிவிட்டு, மனநிறைவோடு கம்பீரமாக தைரியமாக இரு” என்கிறார் காந்தி. முடியுமா? எல்லா சந்தர்ப்பத்திலும் அது முடியுமா? காந்தி சிறு வயதில் தான் வீட்டில் திருடியதை நினைவுகூர்கிறார். பிறகு தனது தந்தையிடம் தான் திருடியதை ஒத்துக்கொண்டு இரவு முழுவதும் அவரது படுக்கைக்கு பக்கத்தில் உட்கார்ந்து அழுததையும் கூறுகிறார். முன்னா ஆர்வமாக “உங்கள் தந்தை உங்களை மன்னித்தாரா?” என்று கேட்க, காந்தி சிரித்துக்கொண்டே, “ம்ம்..கொஞ்ச நாள் பிடித்தது.” என்று சொல்கிறார்.

ஒரு சூழ்நிலையில் முன்னா தனது ஆருயிர் நண்பன் சர்க்யூட்டை அறைந்து விட, சர்க்கியூட் தனிமையில் அழுகிறான். காந்தி முன்னாவிடம் : “அவனிடம் சென்று மன்னிப்பு கேள்” என்கிறார். முன்னா இதெல்லாம் தேவையேயில்லை என்று நினைக்கிறான். ஆனால் காந்தி : “அறைவது சுலபம். ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்பது மிகவும் கடினம். அதற்குத்தான் தைரியம் அதிகம் வேண்டும். செய்து பார்” என்கிறார். நண்பனை அறைந்து விட்ட மனப்புழுக்கத்தில் இருந்த முன்னா அவனிடம் சென்று மன்னிப்பு கேட்ட பின்னர், மனதின் பாரம் குறைந்து, இருவரும் மீண்டும் -எந்த சொல்லப்படாத மனசங்கடமும் இல்லாமல் – நண்பர்களாகின்றனர்.

உறவுகளுக்குள் நிறைய விசயங்களை நாம் செய்வதில்லை. We take everything for granted. உதாரணமாக மன்னிப்பு கேட்பது. மன்னிப்பு என்பது “என்னை மன்னித்து விடு” என்று தான் கேட்க வேண்டும் என்றில்லை. மனைவியை ஓங்கி அறைவிட்ட கணவன், சிறிது நேரத்தில், அவளிடம் சென்று “என்னடா செல்லம் கோபமா?” என்று கேட்டால் கூட போதும். மன்னிப்பு கேட்பதிலும் தவறில்லை இல்லையா? மனைவியிடம் மன்னிப்பையும் சேர்த்து கேட்பதால், போனசாக ஏதும் கிடைக்கவாய்ப்பிருக்கிறதே!

இதில் கவனிக்க பட வேண்டிய ஒரு விசயமும் இருக்கிறது. சும்மா சும்மா மனைவியை அடித்து விட்டு, பிறகு மன்னிப்பு கேட்பதில் எந்த காந்தீயமும் இருப்பதாகத் தெரியவில்லை. மன்னிப்பு என்றால் : தவறை உணர்ந்து கொண்டேன் என்று அர்த்தம். தவறை உணர்ந்து கொண்டால் அதை திரும்ப செய்யலாமா? சாரி கேட்பது இப்பொழுதெல்லாம் பேசனாகி விட்டது. சாரி கேட்பது காந்தீயம் இல்லை, தவறை உணர்ந்து மறுபடியும் செய்யாமலிருப்பதே காந்தீயம். திருடியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட காந்தி அதற்குப்பிறகு திருடவேயில்லை என்பதை கவனிக்கவேண்டும்!

அடுத்து பொய் சொல்லாமல் இருத்தல். உண்மையை ஒத்துக்கொள்ளுதல். முன்னா ஒரு ரவுடி. ஆனால் தனது காதலியிடம் தான் ஒரு புரபொசர் என்று சொல்லி ஏமாற்றுகிறார். வில்லன், முன்னாவிடம் இந்த விசயத்தை அவளிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறார். முன்னா காந்தியிடம் என்ன வழி என்று கேட்க: “அவன் சொல்வதற்கு முன்னால் நீ அவளிடம் உண்மையைச் சொல்லிவிடு. பிறகு அவனிடம் நீ பயப்படத்தேவையில்லை. தைரியமாக நீ உன் போராட்டத்தை தொரலாம்” என்கிறார். உண்மைதான். உண்மையைச் சொல்லிவிட்டு தைரியமாக போராட்டத்தை தொடராலாம். ஆனால் காதலி? நீயும் அவளும் உண்மையாக காதலிக்கும் பட்சத்தில் உங்கள் காதல் கண்டிப்பாக ஜெயிக்கும், ஆனால் நீ உனக்கு உணமையாக இரு என்கிறார். அவர் சஞ்சய தத் என்பதால் அவரது காதல் உண்மை சொல்லியும் ஜெயித்தது, நமக்கு?

ஆனால் காதல் ஜெயித்ததா இல்லை மன்னாங்கட்டியானதா என்பதல்ல முக்கியம். இரவு தூங்கப்போனால் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் நிம்மதியான தூக்கம் வர வேண்டும். அப்படி வரவில்லையென்றால் என்ன வாழ்ந்து என்ன பிரயோஜனம்? குற்ற உணர்வில்லாமல் நிம்மதியாக குரட்டை விட ஒரே ஒருவரால் தான் முடியும்: அவர் தனக்கு தானே உண்மையாக இருப்பவர்.

மூடநம்பிக்கை. வில்லனின் மகளுக்கு வில்லன் பொய் சொல்லி திருமணம் ஏற்பாடு செய்கிறார். அதாவது, ஜாதகப்படி மகள் திருமணம் செய்துகொண்டு போனால், கணவன் இறந்து விடுவான் என்கிறார், பையனின் ஜோசியர். இதைக்கேட்டவுடன் வில்லன் சமயோஜிதமாக அவள் பிறந்த நேரத்தை மாற்றி பையன் வீட்டாரை ஏமாற்றி விடுகிறார். இந்த விசயம் மகளுக்கு, திருமணத்திற்கு முதல் நாள் தான் தெரியவருகிறது. அவள் இதை ஒத்துக்கொள்ளாமல், நேரே சென்று பையனின் தகப்பனிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறாள். அவர் திருமணத்தை நிறுத்தி விடுகிறார். முன்னா வந்து சமாதானப்படுத்துகிறார். ஜோசியரும் உடன் இருக்க, பையனின் தந்தை ஜோசியர் சொல்வதைக்கேட்டு திருமணம் நடக்கவே நடக்காது என்கிறார். முன்னா அவரிடம் வாதாடுகிறார். சுற்றிலும் மக்கள் நின்று கொண்டு வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். இரு வீட்டாரும் நல்ல படித்து உயர்ந்த நிலையில் இருப்பவர்களே. திருமணத்துக்கு வந்தவர்களும் உயர்மட்டத்தில் இருப்பவர்களே. அப்பொழுது முன்னா ” படிப்பறிவில்லாத ரவுடியான எனக்கு புரிவது கூட உங்களுக்கு புரியவில்லையா” என்று அங்கே நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து கேட்கிறார். வாஸ்து, பெயர்மாற்றம், மோதிரக்கல், ஜாதக தோஷம் என்று எத்தனை நம்பிக்கைகளில் படித்த நாமே சிக்கி வெளிவர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். எப்பொழுது விடிவு?

ஒருவன் தனது தந்தையில் ஆயுட்கால சேமிப்பான ஏழு லட்ச ரூபாயை பங்கு சந்தையில் தொலைத்து விடுகிறான். தற்கொலைக்கு முயற்சி செய்யும் அவனிடம் : “முதலில் உன் தந்தையின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று உண்மையைச் சொல். பிறகு எப்படியாது அந்த பணத்தை அவருக்கு திருப்பிக்கொடுப்பேன் என்று உறுதி கொடு” என்கிறார் காந்தி (முன்னா). அதற்கு அவன் “அதற்கு நான் செத்தே போய்விடுவேன்” என்கிறான். “இத்தனை நாள் உன்னைச் சுமந்த உன் தந்தை இனி உன் சவப்பெட்டியையும் சுமக்க வேண்டுமா” என்கிறார். “பணத்தை எப்படி திருப்பி தருவேன்? மிகப்பெரிய தொகை அல்லவா அது?” என்கிறான் அவன். அதற்கு முன்னா ” அது மிகவும் எளிது. சிக்கனமாக இரு. இரண்டு மடங்கு வேலைசெய். பணத்தை மிக விரைவில் திருப்பிக்கொடுத்து விடலாம்” என்கிறார்.

சிக்கனம். கஞ்சத்தனமாக இல்லாமல் சிக்கனமாக இருப்பது மிகப்பெரிய குணங்களில் ஒன்று. கஞ்சமாக இருப்பவர்களையும், ஊதாரியாக இருப்பவர்களையும் நிறைய பார்க்கலாம். சிக்கனமாக இருப்பவரை காண்பது தான் கஷ்டம். சிக்கனமாக இருந்தாலே நிறைய பிரச்சனைகளை சமாளிக்கலாம் இல்லையா? சிக்கனம் என்பது பணத்தில் மட்டும் இல்லை, நாம் செலவழிக்கும் எல்லாவற்றிலும் தான், நேரத்தை சேர்த்து, அன்பை விடுத்து.

இன்று நமது இரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று லஞ்சம். ஒரு அரசு ஊழியர் (ஆசிரியர்!) பென்சன் பணம் தரப்படாமல் இழுத்தடிக்கிறார் மற்றொரு அரசு ஊழியர். சம்பந்தப்பட்ட அதிகாரி லஞ்சம் கேட்கிறார். ஆசிரியரோ குடுக்கும் நிலையில் இல்லை. காந்தி ஒரு வழி சொல்கிறார் அது : அந்த ஆசிரியர் அந்த அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று தனது கண்ணாடி, காது கேட்பதற்கான மெசின், சட்டை, பனியன், பேண்ட், ஜட்டி, செறுப்பு என்று அனைத்தையும் அங்கேயே -ஒவ்வொன்றுக்கும் விலை சொல்லி – கழட்டி கொடுப்பது. லஞ்சம் கேட்டவரை வெட்கி தலைகுனிய வைப்பது. லஞ்சம் கேட்டவர் இதற்கெல்லாம் வெட்கப்பட்டால் எப்போதோ லஞ்சம் ஒழிந்திருக்காதா?

நாம் நிர்வாணப் போராட்டம் நடத்தினால் போலீஸ் பிடித்து சென்று விட வாய்ப்பிருக்கிறது, கவனம். நிர்வாணப் போராட்டம் தான் என்றில்லை, வேறு ஏதாவது அஹிம்சை வழியில் போராடுவது. போராடு, ஆனால் எக்காரணம் கொண்டும் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்கிறார். முடியுமா? இன்றைய சூழலில் சாத்தியமா? அதிகாரத்தில் இருக்கும் பெண்களும் கூட கூச்சமின்றி லஞ்சம் கேட்கும் நிலையில், நாம் லஞ்சம் கொடுக்காமல் இருந்தால் நாம தானே பின் தங்கிவிடுவோம்? நமது வேலையல்லவா நின்றுபோகும்? இந்தியன் தாத்தாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நடந்த கொடுமையை நினைத்துப் பாருங்கள். உண்மையில், அது போன்று யாருக்கும் நடக்கவில்லை என்று சொல்லமுடியுமா? பிணத்தை உறவினரக்ள் எடுத்து செவதற்கு கூட லஞ்சம் கேட்கும் உலகம் இது. அப்படியிருக்க நாம் மட்டும் லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் என்ன சாதித்து விடப்போகிறோம்?

எல்லோரும் அடிமைப்பட்டுத்தானே கிடக்கிறார்கள், நாம் மட்டும் அடிமை தனத்துக்கு எதிராக குரல் கொடுத்து என்ன சாதித்து விடப்போகிறோம் என்று அன்றைய சுதந்திரப்போராட்ட வீரர்கள் (எல்லா தியாகிகளின் தியாகமும் ஒன்றே. காந்தியின் தியாகம் தான் உயர்ந்தது என்றோ, நேதாஜியின் தியாகம் தான் உயர்ந்தது என்றோ சொல்லமுடியாது. இவ்விரு தலைவர்களின் தியாகத்திற்கு கொடிகாத்த குமரினின் தியாகம் எவ்வகையிலும் குறைந்ததில்லை. கொடிகாத்த குமரினின் தியாகத்திற்கு, போராட்டத்தால் நாடு கடத்தப்பட்டு எங்கோ செக்கிழுத்து யாருக்கும் தெரியாமல், யாராலும் அறியப்படாமல் இறந்து போன ஒவ்வொருவரின் தியாகவும் குறைந்ததல்ல!) நினைத்திருந்தால் நமக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது. அவர்கள் தங்கள் உடமைகளை, உயிர்களை தியாகம் செய்தார்கள். அதைவிட குறைந்த சில தியாகங்கள் செய்ய நாம் முன் வந்தால் சாதிக்கலாம். எதையும் அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது. போராட்டம் வேண்டும். தொடர்ந்து போராட வேண்டும்.

ஹிந்தி திரைப்பட உலகம் ஒரு பக்கம் பாதாளத்தில் சென்று கொண்டிருந்தாலும், மறுபக்கம் பிரமிக்க வைக்கிறது. சுவதேஸ், ரங் தே பசந்தி போன்ற படங்கள் சில எடுத்துக்காட்டுகள். முன்னாபாயில் எவ்வளவு வாழ்க்கைக்கு தேவையான நல்ல விசயங்கள் இருக்கின்றன. அதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் நம்மிடம் இருந்தாலும், இதை தைரியமாக சொல்வதற்கு நிறைய நம்பிக்கை வேண்டும். அதுவும் இன்றைய திரைப்பட சூழலில் இது போன்ற படங்கள் தான் ஆரோக்கியமான நாளைய சினிமா எதிர்காலத்துக்கு ஆக்சிஜன். இப்படத்தின் வெற்றி மேலும் பல நல்ல படங்களின் முயற்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.

இந்த படத்தின் தமிழாக்கத்தில் -கண்டிப்பாக தமிழாக்கம் செய்யவேண்டும்- ரஜினியோ, கமலோ ( கமலுக்கு காந்தீயத்தில் நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. எனக்கு காந்தீயத்தில் நம்பிக்கை இல்லை என்று அவர் மறுக்க முடியாது. நடிக்கத்தானே சொல்கிறார்கள். அவர் நடிகர் தானே?) – நடித்தால் மக்களை எளிதாக சென்றடையும் என்று நினைக்கிறேன். காந்தீயக் கொள்கைகள் மறுபடியும் நினைவு கூறப்படும். இதனால் பெரிய மாற்றம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது, ஆனால் அட்லீஸ்ட் 0.000000001% மக்களையாவது யோசிக்க வைத்தால், அது பெரிய -மிகப் பெரிய -வெற்றி. உதாரணத்திற்கு என்னிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் போல. அதுக்காக நான் காந்தியவாதியாகி விட்டேன் என்று அர்த்தம் இல்லை. முதலில் நீண்ட காலமாக தொடாமல வைத்திருக்கும் Louis Fisher எழுதிய Biography Of Ghandhiயைப் படிக்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

மாற்றம் ஏற்படலாம். ஏனென்றால் மாற்றம் என்ற ஒன்றே என்றைக்கும் மாறாத ஒன்று.

வந்தேமாதரம்.

நூறு

என்னோட நூறாவது பதிவுங்க இது. அதுக்கென்ன இப்ப? அப்படீன்னு கேட்டாக்க நான் என்ன சொல்றது? அது வந்து, நான் வலைப்பூ (blog க்கு அது தானே தமிழ்ல பேரு?) ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு.ஆரம்பிச்சது என்னவோ பிப்ரவரி 2005. ஆனா சீரியஸா பதிவு செய்ய ஆரம்பிச்சது மே 2006 ல இருந்துதான். முதல்ல படித்த கவிதைகள், செய்திகள் அப்புறம் நகைச்சுவைத் துணுக்குகள்ன்னு தான் கட்-காபி பேஸ்ட் செஞ்சுகிட்டிருந்தேன். திடீர்னு ஒரு நாள் விதிகள் அப்படீங்கற பதிவு போட்டேன். அது நான் சொந்தமா எழுதினது. மீரா ஜாஸ்மீன் பற்றிய பதிவு அது. அப்பவெல்லாம் என்னோட ரூம் மேட்கிட்ட தான் முதல்ல வாசிச்சு காமிப்பேன். அவனும் அரைத் தூக்கத்தில கேட்டுட்டு ஓகேடா நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு அடுத்த நிமிசமே குரட்டை விட ஆரம்பிச்சுடுவான். அதுக்கப்புறம் சில நாளில் அவன் வேறு வீட்டுக்கு சென்று விட்டான். அவன் வீட்டைக்காலி செய்ததற்கு நான் எழுதிய பதிவுகளை, கதைகளை வாசித்துக்காட்டி அவனை கொடுமைப்படுத்தியது தான் காரணம் என்ற வதந்தி நிலவி வருகிறது. நம்பிவிடாதீர்கள். விதிகளை எதேச்சையாக திண்ணைக்கு அனுப்ப அவர்கள் பிரசுரம் செய்து விட்டார்கள். அது ஒரு தூண்டுகோல்.

நான் சென்னையிலிருக்கும் போதே ரெண்டு மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். ஒரு குறு நாவல் போன்ற ஒன்றையும் எழுதியிருந்தேன். மேலும் பள்ளியில் படிக்கும் போது சில நாடகங்கள் எழுதி இயக்கியிருக்கிறேன். அதையெல்லாம் பிளாக்கில் போட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. உங்களை விட்டால் வேறு யார் அதையெல்லாம் படிக்கப்போகிறார்கள்!?. தமிழில் டைப் செய்வது தான் சற்று சிரமான காரியமாக இருந்தது. நான் எழுதிய எல்லா கதைகளையும் ஒரு வழியாக அரங்கேற்றம் செய்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தமிழ்மணம் பற்றிய தகவல் கிடைத்தது. அப்புறம் தேன்கூடு.

என்னுடைய தோழி ஒருவர் தான் அப்போ என் பிளாக்குக்கு டெடிகேட்டட் ரீடர். இப்பவும் தான். ஒரு நாளைக்கு ரெண்டு மூணு தடவ ப்ளாக்கு போய்விடுவார். நான் என்ன குப்பை பதிவு செஞ்சாலும் நல்லா இருக்குடான்னு சொல்ற ஒரே ஜீவன். Thanks காள்யா. இந்த நூறாவது பதிவை உனக்கு டெடிகெட் செய்யறேன்.

கொஞ்சம் சோர்வா, கண்டிப்பா பதிவு செஞ்சுதான் ஆகனுமான்னு இருக்கறப்போ தான் thepreciouss.blogspot- கிருத்திகாவின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு தெரிந்தவரையில் அவ்வளவு அருமையான ஆங்கிலத்தில், அவ்வளவு அழகான இந்திய ஆங்கில பதிவை நான் பார்த்ததில்லை. என்னோட inspiration அவர் தான். அவரிடமிருந்து தான் blog சம்பந்தமாக நிறைய கற்றுக்கொண்டேன். ஏனோ இப்பொழுது அவர் பதிவதில்லை. Harry Potter படிக்கும் ஆர்வம் எனக்கு அவரிடம் இருந்து தான் வந்தது. இப்பொழுது ஐந்தாவது புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். மிக விரைவில் Harry Potter பற்றிய ஒரு பதிவிட வேண்டும்.

அப்புறம் தேன்கூட்டின் சிறுகதைப் போட்டிகள். கதை எழுதுவதையே மறந்திருந்த பொழுது தான் தேகூட்டின் சிறுகதைப் போட்டி பற்றிய அறிமுகம் கிடைத்தது. உடனே என்னுடைய அசட்டு மனிதர்கள் கதையை அனுப்பினேன். பின்னூட்டங்கள் சில வந்தது. அதற்கப்புறம் தேன்கூட்டின் போட்டிக்காகவே கதைகள் எழுத ஆரம்பித்தேன். ஒரு விதமான encouragement அது. பரிசு கிடைக்குதா இல்லையா என்பது பெரிதல்ல. நான் இதுவரை முதல் பத்தில் கூட வந்ததில்லை என்பது வேறு விசயம். ஆனால் என்னாலும் கதை எழுத முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது தேன்கூடு. அப்படி நான் தேன்கூட்டுக்கு அனுப்பிய கதைகளில் எனக்கு பிடித்தமான கதை காடனேரி விளக்கு. ஏனோ நிறைய பேர் புரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். 😦

அப்புறம் யார் எழுதியது என்று மறந்துவிட்டது: train ல தொங்கிக்கிட்டே போற ஒருவருடைய கதை -தேன்கூடு பரிசு போட்டியில் வெளியானது- எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்தக்கதை பரிசு வாங்கியது என்று நினைக்கிறேன். நான் ரசித்த பதிவுகளும் கதைகளும் நிறையவே இருக்கின்றன. அதைப்பற்றியே ஒரு பதிவிட வேண்டும் என்று ரொம்ப நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போ தேன்கூடு போட்டியை நிறுத்திவிட்டது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. கதை எழுதுவதற்கு டாபிக் யார் கொடுப்பா?. தேன்கூடு போட்டிக்கு அனுப்பிய ஒரு கதையை – தொலைவு – ரெவ்யூ செய்து போஸ்டன் பாலா 3.5 outof 4 போட்டிருந்தார். அது கதை எழுதுவதற்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது. நிறைய நம்பிக்கை அளித்தது. Thanks Bala.

ஆயிரம் கால் இலக்கியம் என்ற தொடர் கிருத்திகாவுடன் debate செய்ததால் வந்த விளைவே. நான் எழுதிய current incidents பற்றிய பதிவுகளில் எனக்கு பிடித்தது: சிற்பிகளும் சிலைகளும் அப்புறம் கேட்பதற்கு உரிமையில்லை. சிற்பிகளும் சிலைகளும் என்ற பதிவு நான் எழுதிய உடன் எங்கள் வீட்டிலிருந்து தான் எனக்கு முதல் எதிர்ப்பு வந்தது. அரசியல் எழுதாதே என்று. எங்க அண்ணன் advice மேல advice. அதற்கு இணையாக என்னை திட்டி வந்த ஒரு பின்னூட்டம். அதை பிரசுரிக்க முடியவில்லை :). ஆனால் எனக்கு சந்தோசமே, பின்னூட்டமே இல்லாமல் இருந்த போது அட்லீஸ்ட் திட்டாவது கிடைக்கிறதே. ரொம்ப மோசமான வார்த்தைகளால் திட்டு கிடைத்தது ஆழ்வார் படம் பற்றிய விமர்சனப் பதிவின் போது தான். டாக்டர் ராமதாஸ் அவர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வாரம் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் தான் சினிமா பார்க்க அனுமதிப்போம் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். சும்மா ஜோக்குகாகத்தான் சொன்னார் என்று நினைத்திருந்தேன். ஆழ்வார் படத்தின் விமர்சனத்துக்கே கெட்டவார்த்தைகளால் திட்டும் மக்கள் இருக்கும் இந்நாட்டில் அவ்வாறான சட்டம் கொண்டுவந்தால் தேவலையோ என்று கூட எண்ணத்தோன்றுகிறது.

கவிதைகள் எனக்கு பிடிப்பதில்லை. காதல் கவிதைகளைத்தவிர. :)) அது மட்டும் தாங்க புரியுது. அப்படியிருந்தும் ஒரு சில நேரங்களில் சில விபரீத முயற்சிகள் செய்துபார்ப்பேன். அவ்வாறான ஒன்று – ஒன்றே ஒன்று – தான் ரோடெங்கும் நயாகராக்கள் பதிவு. கவிதைகள் எழுதி உங்களைப் படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறேன். 🙂

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் புதுமைப்பித்தன் தான் இன்றைய தமிழ்இலக்கிய bloggerகளின் கருப்பொருள் மற்றும் உருப்பொருள். இவ்வர்கள் இல்லையென்றால் நிறைய பேருக்கு என்ன எழுதுவது என்றே தெரியாது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. அ.இரா. வெங்கடாசலபதி தொகுத்தருளிய புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு எனக்கு நிறைய help செய்திருக்கிறது. புதுமைப்பித்தனின் கட்டுரையிலிருந்து சுட்ட கருத்து தான் நான் எழுதிய அமுதத்தை இட்டாள் என்ற சிறுகதை. என் பிறந்தநாள் அன்று பணிரென்டு மணிக்கு எழுதி முடித்தேன். கேக் வெட்டி கொண்டாடி விட்டு போஸ்ட் செய்தேன். நான் சென்னையிலிருக்கும் போது பாதி எழுதி முடிக்காமல் விட்ட கதை காந்தம். ஆனால் இப்பொழுது அது காணாமல் போய்விட்டது. மறுபடியும் முதலிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு தொடர்கதையாகப் பதிவு செய்திருக்கிறேன். யார் முழித்திருக்கப்போகிறார்கள் என்ற போப்பால் டிராஜடி பற்றிய தொடரை எப்படியாவது இன்னும் சில வாரங்களில் முடித்துவிட முயற்சிக்கிறேன்.

ஜெயமோகனால் தான் மதி கந்தசாமியின் அறிமுகம் கிடைத்தது. ஒரு பின்னூட்டத்தில் மதியைப்பற்றி நிர்மல் குறிப்பிட்டிருந்தார். என்னைத் தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் encourage செய்துகொண்டிருப்பவர்கள். Thanks Nirmal and Mathy.

போஸ்டன் பாலா போன வருடத்தின் சிறந்த பதிவுகளில் ஒன்றாக குரல்வலையைத் தேர்வு செய்திருந்தார். எவ்வளவு பெரிய encouragement தெரியுமா அது? மதியும் கூட குரல்வலையைப் பற்றி சொல்லியிருந்தார். Thanks again Bala and Mathy.

அவ்வப்போது என் இடுகைகளை கில்லிக்கு கொடுக்கும் பிரகாஷ்க்கும் நன்றிகள். மேலும் என்னை பின்னூட்டங்களின் மூலம் encourage செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் encouragement வரும் பதிவுகளிலும் கிடைக்கும் என்று நம்புகிறேன். 🙂 மேலும் நான் நவம்பர் டிசம்பரில் அதிகம் பதிவு செய்யாமல் இருந்தபோது, என்னை வற்புறுத்தி பதிவு செய்ய வைத்த சிவாவுக்கும் நன்றிகள். (மொதல்ல அவனக்கண்டுபிடிச்சு உதைக்கனும்டா..ன்னு நீங்க யோசிக்கிறீங்கதான?)

மேலும் ஒரு பதிவு கூட விடாமல் அத்தனையையும் படித்து விட்டு கருத்து சொல்லும் எனது கலீக்ஸ் சரவணன், சுதா மற்றும் ராம்கிக்கும் நன்றிகள். எனது பழைய ரூம் மேட் அஸ்வினுக்கு -பாவம்ங்க அவன். எத்தனநாள் கண்ணுமுழித்து என் கதைகளைக் கேட்டிருப்பான்னு நினைக்கிறீங்க- ஸ்பெசல் நன்றிகள்

எண்ணற்ற எழுத்தாளர்கள் உருவாவதற்கு களம் அமைத்துக்கொடுத்திருக்கும் Blogger மற்றும் அவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய பேருதவியாக இருக்கும் Aggregators: thamizmanam மற்றும் தேன்கூடுக்கு எனது நன்றிகள்.

நான் டைப் செய்ய உதவும் முரசு எடிட்டருக்கும் அதை யுனிகோடாக மாற்ற உதவும் சுரதாவுக்கும் நன்றிகள். எல்லாமே free of cost. Thanks to the technology.

Once Again, Thanks All.

 

Gathering The Water

ராபர்ட் எட்ரிக் எழுதிய “கேதரிங் த வாட்டர்” என்ற புத்தகத்தைப் படித்து இரண்டொரு மாதங்கள் ஆகியிருந்த பொழுதும் அதைப் பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் இருந்து கொண்டேயிருந்தது. போன வருடம் புக்கர் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட புத்தகங்களில் இதுவும் ஒன்று. பரிந்துரைப் பட்டியலைப் பார்த்தபொழுதிலிருந்து தண்ணீரை சேமித்தல் என்கிற வித்தியாசமான தலைப்பு என்னுள் ஒருவித ஆர்வத்தைத் தூண்டுவதாகவே இருந்தது.

பைபிளின் ஆங்கிலம் போல இந்தப்புத்தகத்தின் ஆங்கிலம் இருக்கிறது என்றது ஒரு blurb. நான் பைபிள் படித்ததில்லை. ஆங்கிலம் எனக்கு வித்தியாசமாகவும் படவில்லை.

1847 இல் வட இங்கிலாந்தில் போர்ட் பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட ஒரு அணையினால் ஏற்படவிருக்கும் வெள்ளத்தால் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை (வெள்ளத்தையும், மக்கள் வெளியேறுவதையும்) மேற்பார்வையிட “சார்லஸ் வெயிட்மேன்” என்பவர் அணை கட்டும் நிறுவனத்தால் நியமிக்கப்படுகிறார். அவருக்கு அந்த பகுதியிலே ஒரு பழையவீடு ஒதுக்கப்படுகிறது.

சார்லஸ் தன் மனைவி (fiancee) ஹெலனை சமீபத்தில் தான் இழந்திருக்கிறார். கொடுங்காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார்.

இந்த வேலையில் பெரிதும் நாட்டமில்லாமல் போர்ட் பள்ளத்தாக்கிற்கு வரும் சார்லஸ் அங்கு இன்னும் அனேக மக்கள் காலி செய்யாமல் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

ஒரு நாள் மீன் போன்று விரல்கள் இணைந்த (webbed) காலையும் கையையும் கொண்ட ஒரு மனிதன் இவரது வீட்டுக்கு வெளியே நிற்கிறான். வீட்டுக்குள் வர மறுக்கிறான். மிகுந்த கோபமாக இருக்கிறான். இந்த இடம் வெள்ளத்தால் முழுதும் அழிந்தால் கூட நான் இந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன் என்கிறான். தனது வீட்டை ரெயில்வே கம்பெணி மிகக்குறைந்த விலைக்கு எடுத்துக்கொண்டார்கள் என்றும், அவர்களை கோர்ட்டுக்கு இழுத்து நியாயம் கிடைக்கும் வரையில் போராடுவேன் என்றும் கூறுகிறான்.மனநிலை சரியில்லாதவன் போல இருக்கிறான்.

சார்லஸ் தன் வீட்டிற்கு முன்னால் இருக்கும் சிறு மலையில் இரு பெண்கள் தன்னைத் தொடர்ந்து கவனிப்பதைப் பார்த்து, கை அசைக்கிறார். அவர்கள் பதிலுக்கு கை அசைக்காமல் திரும்பி சென்றுவிடுகின்றனர்.

இவ்வாறாக, அவரது வருகை அங்கிருக்கும் மக்களுக்கு ஆர்வத்தைத்தூண்டுவதாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காமல் இருக்கிறது.

பிறகு ஒரு நாள், முன்பு மலையில் பார்த்த இரு பெண்களில் ஒருவர், அவராகவே வந்து சார்லஸிடம் தன்னை மேரி என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். மேரிக்கு ஒரு மனநிலை சரியில்லாத தங்கை இருக்கிறார். அவர் பெயர் மார்த்தா. மார்த்தா இருபத்து ஏழு வருடங்களுக்கு முன் ஒரு காப்பகத்தில் இருந்தார். மேரி தனது லண்டன் வாழ்க்கை கசப்பாக போனபிறகு மார்த்தாவை காப்பகத்திலிருந்து அழைத்து வந்து தன்னுடன் வைத்துக்கொண்டார். இரு சகோதிரிகளும் ஊர் மக்களிடமிருந்து விலகியே இருக்கின்றனர்.

இவ்வாறான தங்களது சொந்த சோகங்களால் மேரியும், சார்லஸ¤ம் ஈர்க்கப்படுகின்றனர்.சார்லஸ் தனது மனைவியின் நினைவுகளை மேரியிடம் பகிர்ந்து கொள்கிறார்.

ஒரு முறை ஏரியைச் சுற்றி தனது மனைவியுடன் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பறவையை (வாத்து) ஒரு மீன் (spike) கவ்விப்பிடித்து திண்பதை சார்லஸ் பார்க்கிறார். அந்த சமயம் வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்த அவரது மனைவி ஹெலன் இந்த காட்சியைக் காணத்தவறுகிறார். ஹெலன் பார்க்கும்பொழுது ஏரியில் – சார்லஸ் காட்டிய இடத்தில் – சிறிய அலைகளே சுழல்கின்றன. சார்லஸ், பறவையை மீன் பிடித்தது என்று எத்தனையோ முறை சத்தியம் பண்ணாத குறையாக திரும்பத்திரும்ப சொல்லிப்பார்க்கிறார். எனினும் என்ன காரணத்தாலோ அவரது மனைவி அவரை நம்பவேயில்லை. தண்ணீரில் ஏதாவது கல் விழுந்திருக்கலாம் என்கிறார். ஏன் அவள் நம்பவில்லை என்று தனக்கு இன்னும் புரியவில்லை என்று மேரியிடம் கூறுகிறார் சார்லஸ். ஏன் ஹெலன் சார்லசை நம்பவில்லை என்று எனக்கும் புரியவில்லை என்று நான் உங்களிடம் கூறுகிறேன். எல்லா மனைவிகளும் கணவர்களை நம்பிவிடுவதில்லை. சிலர் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்!

மேரியும், தான் இந்த ஊரில் வாழ்ந்த சின்ன வயது நினைவுகளை சார்லஸிடம் பகிர்ந்து கொள்கிறார். ஒரு நடத்தைதவறிய மனைவியை அவளுடைய கணவன் கொன்று, அவளை பாலத்தின் அடியில் தெளிவற்று ஓடிக்கொண்டிருக்கும் ஓடையின் கற்களுக்கு கீழே புதைத்துவிட்டதாக, தான் சிறு வயது முதல் கேட்டுவந்த நம்பிக்கையை (அல்லது கதையை) சார்லஸிடம் பகிர்ந்துகொள்கிறார் மேரி.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் அன்பாகவும் ஆறுதலாகவும் இருக்கின்றனர். மேரி, மார்த்தாவுக்கு போதுமான வசதிகள் காப்பகத்தில் கிடைக்கவில்லையென்றும், அதனால் தான் தன்னுடனே தங்குவதற்கு அழைத்துவந்துவிட்டதாகவும் சொல்கிறார். ஆனால், அணை கட்டுமான கம்பெனி, தான் நிறைய இழப்பீடு பெறுவதற்கே மார்த்தாவை அழைத்துவந்தாக நினைக்கிறது என்றும், தனது இழப்பீடு மார்த்தாவை மீண்டும் காப்பகத்தில் கொண்டு விடுவதைச் சார்ந்தே இருக்கிறது என்கிறார். தற்போது தனது வீட்டுக்கு இழப்பீடாக கட்டுமான கம்பெனி வழங்கிய தொகை எந்தவகையிலும் ஏற்புடையதாக இல்லை என்று கூறி கமிட்டியிடமிருந்து வந்த கடிதத்தை கிழித்தெரிகிறார்.

காலியான வீடுகளை சிதைக்க வந்திருப்பவர்கள் வெள்ளம் வருவதற்கு முன்பே வேலையை ஆரம்பிக்கின்றனர். சிலர் சமாதிகளைக் கூட தோண்டுகின்றனர்.

மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளைக் காலி செய்ய தொடங்குகின்றனர். ஒரு குடும்பம் தன் பொருட்களை முழுவதும் எரிப்பதைப் பார்க்கிறார் சார்லஸ். ஒரு நாள் தண்ணீரில் சுழல் ஏற்பட்டுவிட்டதென்று சார்லஸ் அழைக்கப்படுகிறார். பெரும் கூட்டம் அங்கே கூடியிருக்கிறது. அங்கிருந்த ஒரு பெண் தனது ஆடு அந்த இடத்தில் மூழ்கத்தெரிந்தது என்கிறார். சார்லஸ் தண்ணீருக்குள் இறங்கி பார்வையிட்டுத் திரும்புகிறார்.கூட்டம் கலைகிறது.

அம்மை நோய் பரவிக்கொண்டிருப்பதாக வதந்தி பரவுகிறது. நோயை விட வதந்தி வேகமாக பரவுகிறது. மறுபடியும் அந்த இணைந்த விரல்கள் மனிதன் வருகிறான். இம்முறை ஏனோ அவன் வழக்கத்துக்கு மாறாக மிகவும் அமைதியாக இருக்கிறான். இப்பொழுதுதான் முதன் முறையாக சார்லசைப் பார்ப்பது போல பேசுகிறான். மேரி குடும்பத்துக்கு தான் மிகவும் அறிமுகமானவன் என்றும், மார்த்தாவைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறுகிறான். ஆனால் மேரி தன்னை மிகவும் வெறுக்கிறாள் என்கிறான்.

சார்லஸ் தான் தண்ணீர் அடர்ந்த சதுப்பு நிலத்தில் வழுக்கிவிடாமல் லாவகமாக நடப்பதை கனவில் காண்கிறான். உள்ளூர் மக்கள் அவனை கைதட்டி உற்சாகப்படுத்துகின்றனர். சார்லஸ் சிரிக்கிறான்.

மேரி, மார்த்தாவை திரும்பவும் காப்பகத்திலே சென்று விட்டுவிடத் தீர்மானிக்கிறாள். சார்லஸிடம் இதைக்கூறுகிறாள். மேலும் அணைக்குப் பக்கத்திலே இருக்கும் ஒரு வீட்டில் குழந்தை ஒன்று இறந்துவிட்டது என்றும் கூறுகிறாள்.

சார்லஸ் காக்கை இறகுகள் தரையில் கிடப்பதைப்பார்த்து, அவற்றைச் சேமிக்கிறான். தனது மனைவி ஹெலன் காக்கை இறகுகளை சிறு நினைவு பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்தியதை நினைத்துப்பார்க்கிறான். அவற்றை தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் வழியில், அந்த ஊர்க்காரன் ஒருவன் காக்கை இறகுகள் உனக்கு கெட்ட விசயங்களை (துர் அதிர்ஷ்டங்கள்) கொண்டுவரும் என்கிறான்.

மார்த்தாவைக் காப்பகத்தில் கொண்டு போய் விடும் நாளன்று சார்லஸ், மேரியை தேடி அவள் வீட்டுக்கு செல்கிறான். வீட்டுக்குப் போகாமல் வெளியிலே, வரும் வழியிலே நிற்கிறான். நேரம் பறந்து கொண்டிருந்தும் மேரி வரவில்லை. மார்த்தாவை கவனித்துக்கொள்ளும் பணிப்பெண் சார்லஸைப் பார்த்து என்ன இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்கிறாள். சார்லஸ் விசயத்தை சொன்னவுடன், மேரி நேற்றே மார்த்தாவை காப்பகத்தில் சென்று விட்டுவிட்டாளே என்கிறாள். மேலும் மேரி நேற்று இரவு வந்த பொழுது மிகவும் சோர்வாகவும், சோகமாகவும் இருந்ததாகக் கூறுகிறாள்.

இருவரும் மேரியின் வீட்டிற்கு செல்கின்றனர். வீடு திறந்து கிடக்கிறது. பொருட்கள் கலைந்து, சிதறிக் கிடக்கிறது. யாரும் இல்லை. சார்லஸ் அலைந்து திரிந்து தேடுகிறான். உள்ளூர்காரர்கள் சிலரை துணைக்கு அழைத்துக்கொள்கிறான். எவ்வளவு தேடியும், எங்கு தேடியும், மேரி கிடைக்கவில்லை.

கமிட்டி சார்லஸை சந்திக்க வருகிறது. கமிட்டியைப் பார்த்ததும் ஊர் மக்கள் கூடிவிடுகிறார்கள். கமிட்டி இன்னும் காலி செய்யாதவர்களுக்கு, இழப்பீடு அதிகரிக்கப்படும் என்று கூறுகிறது. ஆனால் உண்மையில் அவர்கள் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்று சார்லஸிடம் தனிமையில் சொல்கிறார்கள். மேலும் அவர்கள் தண்ணீரின் அளவு கனிசமாக அதிகரித்துவிட்டது என்றும் நீங்கள் ஏன் இங்கேயே இன்னும் இருக்கிறீர்கள், வேறு ப்ராஜெக்ட்டுக்கு மாறவேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

மேரியின் உடல் அணைக்கு அருகே தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை மக்கள் காண்கிறார்கள். அவரது ஆடை பெரிதும் கிழிந்திருக்கிறது. சார்லஸ் அவரது உடலை, அணையின் ஆழத்திலிருந்து மீட்கும் கடினமான வேலையைச் செய்கிறார்.மேரி தான் ஆடை கிழிந்து உடல் தெரிய தண்ணீரில் மிதப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பாள் என்று நினைக்கிறார்.

புது வருடம் வரையில் அவர் அங்கேயே இருக்கிறார். அடிக்கடி மேரி அவரது கனவில் தோன்றி நீங்கள் தான் என் பாதுகாவலர் என்கிறார். பயத்துடனும் குழப்பத்துடனும் சார்லஸ் தனது கனவுகளைக் கழிக்கிறார்.

திரில்லோ, சஸ்பென்ஸோ, திருப்பங்களோ இல்லாத நாவல். ஆனால் அருமையான அமைதியான அழகான எழுத்து நடை. அலைகள் அதிகம் இல்லாத அமைதியான நீர்மட்டம், இந்த நாவல்.

Gathering the water : Robert Edric

பொங்கல் நல்வாழ்த்துக்கள்


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். மாட்டுப் பொங்கல் கொண்டாடுறவங்களுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த greetings copy rights reserved. :)))))))

greetings ல ஹேப்பி பொங்கலே தெரியலங்கறவங்க, pls click பண்ணி பாத்துக்கோங்கப்பா, அவ்ளோ தான் இடம் இருந்தது. 😦

அது சரி, திரிஷாவுக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டீங்கன்னா, ஆச தோச அப்பளம் வடை நான் பதில் சொல்ல மாட்டென்! 😦 ஆனாலும் உங்களுக்கு விக்கிரமாதித்தன் போல பதில் தெரியாட்டி மண்டை வெடித்து விடுமாயின் சன் டீவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் திரிஷா (அல்லது பாவனா அல்லது வேறு எந்த நடிகையின்) பேட்டி வந்தால் சன் டீவியைக் கேளுங்கள், அவர்களுக்காவது தெரிகிறதா பார்ப்போம்!

ஆவிய க்ராஸ் கொஸ்டீன் பண்றதுன்னா சும்மாவா?

கடந்த வெள்ளியன்று தினமலரில் நான் பார்த்து ரசித்து சிரித்த இரண்டு படங்கள். முடிஞ்சா சிரிச்சுக்கோங்க.

ஆவி ஜோதிடம்:

சூப்பரப்பு. ஆகா.ஆகா. ஆவி கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வருமா? சொல்றதுக்கில்ல, ஜட்ஜ் மேலேயே வந்தாலும் வரும். இனிமேல் லாயருங்கோ கேஸ் கட்டு எடுத்தார தேவையில்ல, எழும்புக்கூடு, மண்டையோடு, குடுகுடுப்பை பழைய சுவடிக்கட்டு தான் எடுத்துவரனும். லா படிக்கத்தேவையில்ல, BO (Bachelor of Ouija) தான் படிக்கனும். என்ஜினியரிங் ஸ்டூடென்ட்ஸ் மாதிரி பிராக்டிக்கல்ஸ் லேப் எல்லாம் கூட உண்டு. ப்ரட் போர்ட் மாதிரி ouija போர்ட். சர்க்யூட் மாத்தி கொடுத்தா, மவனே தொலஞ்ச! ஆவி ரத்தமெல்லாம் குடிக்குமாமே? இதெல்லாம் படிக்கம்போதே பன்னனும், பின்ன ஆவிய க்ராஸ் கொஸ்டீன் பண்றதுன்னா சும்மாவா? போலீஸ்க்கு கவர்மெண்ட் புது கார் எல்லாம் வாங்கி கொடுக்கத்தேவையில்ல, மையும் (மை எழுதறதுக்குன்னு நெனச்சீங்கன்னா, ஐயோ பாவம்!), எழுமிச்சையும் மட்டும் போதும். உட்கார்ந்த எடத்திலேருந்து புடிப்பம்ல.

கலி காலம்னு சும்மாவா சொன்னாய்ங்க. விஜயகாந்த் கவனிப்பாராக. அவரு தொகுதிங்க!

ஆனா ஒன்னு : நமக்கு அடுத்த கதைக்கு “கரு” கிடைச்சாச்சு.

அப்புறம், இந்தப் படம்.

நிறைய பேரு பாத்திருக்கலாம். ஆனா எனக்கு சுரீர்ன்னுச்சு. போட்டோ எடுத்து போட்டாங்க. லஞ்ச வாங்குனவரு மொகத்த எங்க கொண்டு போய் வச்சுக்குவாரு? தெரியல. பாவம்ல. தப்புத்தேன். லஞ்சம் வாங்குனது தப்புத்தேன். ஆனா கொடுக்கறதும் தப்புத்தான? போகக்கூடாத வழியில போகறதலாத்தான அவரு வழி மறைக்குறாரு. காசு கேக்குறாரு. தப்பு செஞ்சுட்டு மறைக்குறதுக்குத்தான நீ லஞ்சம் கொடுக்கற? அப்புறம் தினமலர் ஏன் ஒரு பக்கமா சார்ந்து செய்தி போடுது? தன்னை கவனித்த வாகனத்துக்கு வாஞ்சையுடன் வழி காட்டுகிறார் என்ற நக்கல் டயலாக் எதுக்கு? லஞ்சம் கொடுத்தவன பத்தி ஒன்னும் காணோம்? அவரு மட்டும் நல்லவரா? மக்களும் திருந்தனும்ங்க. அதிகாரத்துல இருக்குறவங்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்குனுங்கறது வாஸ்தவம் தான், அதுக்காக மத்தவங்களுக்கு பொறுப்பே இருக்கத் தேவையில்லியா?

விசில்


இப்ப தான் போக்கிரியின் “ஆடுங்கடா” பாடல் கேட்டுக்கொண்டிருக்கிறேன். suddena இந்த பாட்ட இந்தியாவில விசிலடிச்சுக்கிட்டே பாத்தா எப்படியிருக்கும்னு தோணுச்சு. இந்தியாவில வேனா பாக்கலாம். ஆனா விசிலடிக்கிறதுங்கறது முடியாத ஒன்னு. நானும் நிறைய தடவ try பண்ணிருக்கேன். வெறும் காத்து தான் வரும்.சில சமயம் ரொம்ப எரிச்சலா வரும்.நல்ல அடி பாட்டோ நல்ல சண்டைக்காட்சியோ வரும் போது தியேட்டரில விசிலடிக்க முடியாது. முக்கியமா ரஜினி படம் பாக்கும்போது, பக்கத்துல உட்காந்திருக்கறவன் கூட agreement போடனும். நான் ம்ம் ன்னு சொன்ன உடனே விசிலடிக்கனும்டான்னு. என்ன பண்ண வண்டியோட்ட தெரியாதவன் driver வெச்சுக்கிறதில்லையா. அத மாதிரிதான். சரி எப்படி விரல் use பண்ணி விசிலடிக்கிறதுன்னு internet ல பாக்கலாம்னு தேடினேன். முதல் ரிசல்ட் google answer ல்ல இருந்தது. நிறைய பேரு try பண்ணியிருக்காய்ங்க. பரவாயில்ல.

http://answers.google.com/answers/threadview?id=419588

ஏதோ என்னாலானா உதவி. படிச்சுக்குங்க.எதெதுக்கு google ட்ட கேக்குறதுன்னு ஒரு விவஸ்த்தை இல்லாம போச்சு. அப்புறம் “வசந்தமுல்லை” பாட்டும் நல்லா இருந்துச்சு. “என் செல்ல பெரு ஆப்பிள்” பாடலும் நல்லா இருந்துச்சு. வரிகளும் நல்லா இருந்துச்சு.

என் செல்ல பேரு ஆப்பிள் நீ சைஸா கடிச்சுக்கோ.

வசந்தமுல்லை பாட்டுல சில வரிகள்:

காதல் என்பது ஆந்தையப் போல
நைட்டு முழுதும் முழிக்கும்
கம்பன் வீட்டு
நாயைப் போல
கவிதையாய் குரைக்கும்
அவ தும்மல் அழகுடா
அவ பிம்பில் அழகுடா
அவ சோம்பல் அழகுடா

காதல் என்பது காப்பியப் போல
ஆறிப்போனா கசக்கும்
காஞ்சு போன மிளகாய் பஜ்ஜி
கேக்கு போல இனிக்கும்
தாடி வெச்சிருக்கும்
கேடி முகம்
லேடி பிகர் போல
தெரியுது மாமு..

(say slow,very slow) தெரியும்..தெரியும்.. (say fast) தெரியு தெரியு..தெரியு…தெரியும்.. (copy rights reserved. friend கேட்டா உதைப்பா.)

ரஜினி படம் இங்கே சுடப்பட்டது.

Digital Fortress


இது நான் படித்த, Dan Brown எழுதிய, இரண்டாவது நாவல். Da Vinci Code ஒரு அற்புதமான நாவல். பக்கத்துக்குப் பக்கம் வித்தியாசம் படிக்க படிக்கப் சுவாரஸ்யம் என்ற விளம்பரம் குங்குமத்திற்கு பொருந்துகிறதோ இல்லையோ, Da vinci code க்குப் பொருந்தும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு திருப்பம் நிச்சயம்.

‘Digital Fortress’ என்ற நாவலை நிறைய மக்கள் கையில் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். நல்ல நாவல் என்றும் சொல்லக் கேள்வி. மேலும் இது கம்ப்யூட்டர், மற்றும் encryption, decrption ஐ சார்ந்திருப்பதால், ஒரு இயற்கையான ஆர்வ மிகுதியால் இந்த நாவலை படிக்க ஆரம்பித்தேன்.

நாவலின் கரு decryption. உலகத்தில் உள்ள அனைவரது இரகசியங்களையும் உடைத்துப் பார்க்கவல்லது TRANSLTR. இங்கே இரகசியம் என்றால் பூட்டிவைக்கப்பட்டது என்று பொருள்கொள்க. மறைக்கப்படாதது இரகசியமா? அது என்ன TRANSLATR? NSA (National Security Agency) decrypt செய்வதற்காக கண்டுபிடித்தது தான் TRANSLTR என்ற இராட்சத decryptor. ஒரு மில்லியன் processors. எல்லா algorithm களையும் எளிதாக decrypt செய்யவல்லது. 64 bit pass-key ஐயும் பத்தே நிமிடத்தில் decrypt செய்து விடும். NSA இதை பில்லியன் டாலர் செலவு செய்து கண்டுபிடித்து, உலகத்திற்கு Project Failure என்று அறிவித்துவிடுகிறது. உலகம் இதை நம்பி தாராளமாக encrypt செய்த message களை இணையத்தில் அனுப்பிக்கொண்டிருக்க, NSA உட்கார்ந்த இடத்திலிருந்து எளிதாக decrypt செய்து தீவிரவாத செயல்களை தடுக்கிறது. உதாரணத்திற்கு Bombing a school.

எனக்கு எப்படி TRANSLTR எல்லாவற்றையும் decrypt செய்ய முடிகிறது என்ற சந்தேகம் இருந்தது. TRANSLTR ஐ பொருத்தவரை decrypt செய்ய முடியாத algorithm இந்த உலகத்திலே இல்லை. அதெப்படி சாத்தியம் என்றால், Dan Brown சொல்கிறார்:

Susan had learned about the Bergofsky Principle early in her career. It was a
cornerstone of brute-force technology. It was also Strathmore’s inspiration for
building TRANSLTR. The principle clearly stated that if a computer tried enough
keys, it was mathematically guaranteed to find the right one. A code’s security
was not that its pass-key was unfindable but rather that most people didn’t have
the time or equipment to try.

Bergofsky Principle என்பது fiction. brute force என்பது nothing but trial and error. இது ஒரு லாக் செய்யப்பட்ட program என்றால் சரி. brute force ஐ பயன்படுத்தி திறந்துவிடலாம். திறந்து விட்டொம் என்பது run ஆகிக்கொண்டிருக்கும் புது program ஐ வைத்து தெரிந்து கொள்ளலாம். ஒரு சாதாரண message என்று வைத்துக்கொள்ளுங்கள், நாம் unlock செய்து விட்டொம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

உதாரணத்திற்கு :
HL FKZL VD LDS

என்ற message encrypt செய்யப்பட்டுள்ளது. இதற்கு key என்னவென்றால்: Replace each letter with a letter that follows in it in the alphabet. அதாவது : H->I L->M F->G.

So, decrypt செய்ததற்கப்புறம், IM GLAD WE MET என்று கிடைக்கும். சரி, இதுதான் சரியான decrypted message என்பது எப்படி confirm பண்ணுவது?

உலகத்திலுள்ள எல்லா encrypted message ஐயும் எளிதாக (அதிகபட்சமாக 40 நிமிடம்) decrypt செய்யும் TRANSLTR ஒரு fileஐ 16 மணி நேரமாக decrypt செய்ய இயலாமல் திணறக்கொண்டிருக்கிறது.

Tankoda என்ற ஜப்பானிய இளைஞர் (NSA Alumni) எழுதிய encryption algorithm பயன்படுத்தப்பட்டு encrypt செய்யப்பட்ட file அது. அந்த algorithm , rotating clear text என்ற concept ஐ அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. decrypt செய்ய முடியாது. யாராலும். even TRANSLTR.

அது என்ன rotating clear text algorithm?

The notion of a rotating cleartext function was first put forth in an obscure,
1987 paper by a Hungarian mathematician, Josef Harne. Because brute-force
computers broke codes by examining cleartext for identifiable word patterns,
Harne proposed an encryption algorithm that, in addition to encrypting, shifted
decrypted cleartext over a time variant. In theory, the perpetual mutation would
ensure that the attacking computer would never locate recognisable word patterns
and thus never know when it had found the proper key. The concept was somewhat
like the idea of colonising Mars—fathomable on an intellectual level, but, at
present, well beyond human ability

rotaing clear text என்பது fiction. இது பொய் என்று பிற்பாடு நாவலில் கூறப்படுகிறது. என்றாலும், படிக்கும் போது இதை நம்ப முடியவில்லை. இது தான் நாவலின் மையம். Not a strong foundation huh?

மேலும் இன்னொரு விசயம். கிட்டத்தட்ட எனக்கு சிரிப்பே வந்து விட்டது. A tracer program.

Susan had created, in effect, a directional beacon disguised as a piece of
E-mail. She could send it to the user’s phony address, and the remailing
company, performing the duty for which it had been contracted, would forward it
to the user’s real address. Once there, the program would record its Internet
location and send word back to the NSA. Then the program would disintegrate
without a trace. From that day on, as far as the NSA was concerned, anonymous
remailers were nothing more than a minor annoyance

email தன்னைத்தானே execute செய்ய முடியாது. அது just data. not an executable. ஈமெயிலை திறந்து பார்ப்பவரின் ஒத்துழைப்பு இல்லாமல் அதை execute செய்ய முடியாது. நாமே, நமக்கு தெரியாத நபரிடமிருந்து மெயில் வந்தால் திறந்து பார்க்க யோசிக்கிறோம். யாராலும் decrypt செய்யமுடியாத algorithm எழுதியவர் அவ்வளவு எளிதாக ஏமாந்துவிடுவாரா என்ன? அதுவும் “delete itself” கண்டிப்பாக முடியாது. Dan Brown கொஞ்சம் யோசித்திருக்கலாம். இவ்வாறான குறைகள் நாவலில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தவில்லை. Biggest Plot Holes. Treat yourself as a computer illiterate, you could enjoy the novel.

Tankoda, decrypt செய்ய முடியாத algorithm ஒன்றை எழுதி (Digital fortress), அதை அந்த algorithm பயன்படுத்தி encrypt செய்து இணையத்தில் போஸ்ட் செய்து விடுகிறார். எல்லோரும் download செய்து கொள்ளலாம். ஆனால் யாராலும் encrypt செய்ய முடியாது. அதற்கான pass-key Tankoda விடம் மட்டுமே இருக்கிறது. மேலுன் இன்னொரு North Dakota என்ற பார்டனரிடம் இன்னொரு key இருக்கிறது. Tankoda NSA விற்கு கெடு கொடுக்கிறார். TRANSLTR உங்களிடம் இருக்கிறது என்று பகிரங்கமாக ஒத்துக்கொள்ளுங்கள், நான் Digital Fortress ஐ destroy செய்து விடுகிறேன். இல்லையேல் நான் pass-key ஐ பொது மக்களிடம் கொடுத்துவிடுவேன். அனைவரும் digital fortress வைத்து encrypt செய்து கொள்ளலாம்.

NSA இதை ஒரு சந்தர்பமாக கருதுகிறது. Digital Fortress ஐ break செய்துவிட்டு, அதற்கு ஒரு back door entry வைத்து (rewrite code), மறுபடியும் போஸ்ட் செய்து விடுவது.so, every one will think Digital Fortress in unbreakable and will switch to digital fortress to encrypt message/files while NSA happily decrypts all the messages.
இவ்வாறு அனைத்து message களையும் decrypt செய்வது தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் தரம் பிரிக்க உதவும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், what happens to peoples privacy? Guards are guarding us, but who will guard the guards? இன்றைக்கு இருக்கும் government TRANSLTR ஐ நல்ல விசயத்திற்கு பயன் படுத்துகிறது. நாளை? After all these things, everyone has a right to keep their secrets, aint it?

பாலத்தின் அந்தப் பக்கம்

எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியைப் படித்தவர்களுக்கு சந்ததி சந்ததியாக தவழ்ந்து செல்லும் கதைக்களம் நினைவில் இருக்கலாம். எனக்கு நெடுங்குருதியை வாசிக்கும் பொழுது சற்று அலுப்பே மேலிட்டது. என்னடா இது கதை அனுமார் வால் போல நீண்டு கொண்டே செல்கிறது என்று. ஆனாலும் ஆசிரியரின் எழுத்து என்னை கட்டிப்போட்டிருந்தது. வெயில் அவன் கால்களைப்பிடித்து ஏறிக்கொண்டிருந்தது என்று வாசிக்கும் பொழுது நானும் வெயிலாக மாறி நாவலைச்சுற்றி படர்ந்து கொண்டிருந்தேன். எஸ். ராமகிருஷ்ணனின் வாக்கியங்கள் தமிழ் இலக்கியத்திற்கு புதியவை.

அதே போன்றதொரு சந்ததி கதை தான் The Glass Palace. Blurb ல் மூன்று சந்ததியினரின் கதை என்று போட்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரை இது ஐந்து சந்ததியினரின் கதை. ராஜ்குமாரின் அம்மா, ராஜ்குமார், ராஜ்குமாரின் மகன்-நீல், நீலினுடைய மகள் ஜெயா, ஜெயாவின் அமெரிக்காவில் படிக்கும் மகன் என ஐந்து சந்ததியினரின் கதை இது.

பர்மாவில் தொடங்கி, இந்தியாவின் ரத்னகிரியில் தவழ்ந்து, மலேசியாவை நோக்கி படர்ந்து, பிறகு கல்கத்தாவில் கால் பதித்து மறுபடியும் பர்மாவிலே முடியும் கதை The Glass Palace. 540 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் அத்தியாயங்கள் தோறும் The Glass Palace இன் சுவடுகளை தேடிக்கொண்டேயிருந்தேன். அது கடைசி அத்தியாயங்களில் தெரியவருகிறது.

நாவல் தோறும் ஒரு கடினமான இறுக்கம் நம்மை கதையுடன் பிணைக்கிறது. மனிதர்களை மிகுந்த கவனத்தோடு ஆராய்ந்திருக்கிறார். மிகத்துள்ளியமாக கதாப்பாத்திரங்களை செதுக்கியிருக்கிறார். 550 பக்கங்களிலும் ஒரு கதாப்பாத்திரம் பயணிக்க வேண்டுமெனில் அந்த கதாப்பாத்திரம் எவ்வளவு வலிவோடு இருக்கவேண்டும். அவ்வளவு வலிவோடு இருக்கிறார் கதையின் நாயகன் ராஜ்குமார்.

ஏகாதிபத்தியமும், அடக்குமுறையும் பலவாறு நாவல் தோறும் விவாதிக்கப்படுகின்றது. இந்திய சுதந்திரப்போராட்டத்தில் காந்தியின் வழி சரியா அல்லது நேதாஜியின் வழி சரியா என்ற விவாதம் நன்றாக இருந்தது. இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களால் பிற நாடுளின் சுதந்திர போராட்டத்தை அடக்க பயன்படுத்தப்பட்டது விவாதிக்கப்படுகிறது. இந்திய வீரர்களை கைக்கூலிகள் என்றழைப்பது சரியா? இந்திய இராணுவத்தில் இருக்கிறார்கள் ஆனால் இங்கிலாந்திற்காக சண்டைபோடுகிறார்கள். இந்தியாவிற்காக சண்டையிட்டால் அது தேசப்பற்று. இங்கிலாந்திற்காக சண்டையிட்டால் அது தொழில் தானே. விசுவாசம் என்ற ஒற்றைச் சொல்லே அவர்களது விழிகளை கட்டிப்போட்டிருந்திருக்கிறது, நேதாஜி வரும் வரை.

இந்திய வீரர்களின் சுதந்திர தாகம் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. அதுவும் மலேசிய வாழ் இந்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்) , இந்தியாவை ஒரு முறை கூட பார்க்காமல், போராட்டத்தில் தீவிரமாக இறங்குவது மெய்சிலிர்க்கவைக்கிறது. அவ்வாறான தேசப்பற்று இன்னும் நம்மில் யாருக்கேனும் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்பது ஐயமே! பர்மாவின் அடக்குமுறையும், ஜப்பானின் காலனியலிசமும், இங்கிலாந்தின் ஏகாதிபத்தியமும் கூட விரிவாக ஆராயப்படுகின்றன. பர்மாவின் மன்னர் நாடு கடத்தப்பட்டு தன் மனைவியுடனும் மகள்களுடனும் இந்தியாவில் குடிவைக்கப்படுகின்றனர். மன்னருக்கும், ராணிக்கும் இன்னும் கம்பீரம் இருக்க, மகள் வண்டியோட்டுபவனுடன் சேர்ந்து அவன் குடிசையிலே இருக்கிறாள். எல்லோரும் மனிதர்களே. எனக்கு ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள பாடல் நினைவுக்கு வந்தது, கூடவே பல்புக்கு கீழே ஆடிக்கொண்டிருக்கும் ரஜினியும்.

ஏதேச்சையாகப் படித்தேன் என்று சொல்ல முடியாது. செந்தில் தன்னுடைய ப்ளாகில் ஒருமுறை இந்த நாவலைப் பற்றி பதிவு செய்திருந்தார். அதற்கப்புறமே தேடிப்பிடித்து படித்தேன். செந்திலுக்கு நன்றி. நாவல், ஒரு உணர்ச்சிக்குவியல்.

அமிதவ் கோஷ் ஒரு அற்புதமான எழுத்தாளர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அமிதவ்கோஷின் மற்றொரு நாவலான the hungry tide ஐ பார்த்து வைத்திருக்கிறேன்.

இந்த நாவலை படித்து முடித்த கையோடு Jon McGregor எழுதிய so many ways to begin என்ற நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். என்னவோ பிடிப்பு ஏற்படவில்லை. 15 பக்கங்கள் மட்டுமே படித்துவிட்டு நூலகத்தில் ரிட்டன் செய்து விட்டேன்.

சிறிது நாட்களுக்குப் பிறகு Mary Lawson எழுதிய The Other Side Of The Bridge கிடைத்தது. “பாலத்தின் அந்தப் பக்கம்” என்று தான் முதலில் நான் நினைத்தேன். ஆனால் உண்மையில் இது “பாலத்தின் அடிப்புறம்” என்று தான் மொழிபெயர்க்கப் படவேண்டும். நாவல் படித்துக்கொண்டிருந்த பொழுது இதை தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது. 270 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலை தமிழில் மொழிபெயர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

நான் சில நகைச்சுவைப் படங்கள் பார்க்கும் போது வாய்விட்டு சிரித்திருக்கிறேன். உதாரணத்திற்கு பஞ்சதந்திரம்: “அப்படியே தட்டிக்கொடுத்து ஒரு கத சொல்லு ராம்” “ம்..ம்…ஒரு ஊர்ல ராம் ராம்னு ஒரு கேனயன் இருந்தானாம்…” “ஓ காமெடி ஸ்டோரியா…” இந்த வாக்கியங்களை எப்பொழுது கேட்டாலும் சிரிப்பு வரும். காரணம் வாக்கியங்கள் மட்டுமல்ல, இந்த காட்சியை கண்டவர்களால் மட்டுமே நன்றாக இரசித்து சிரிக்க முடியும். வாக்கியங்களை கேட்டவுடன், தேவயாணியும் கமலஹாசனும் கண்ணில் தெரிந்தால் தான் முழுமையாக ரசிக்க வாய்ப்பிருக்கிறது. சிரிக்கவைப்பது என்பது சினிமாவில் எளிது. ஒரு நாவலைப் படித்து, படிக்கும் பொழுது கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரிக்க வைப்பதென்பது மிகவும் கடினம்.

Mary Lawson அதை செய்திருக்கிறார். நாவல் தோறும் நகைச்சுவை இழையோடிக்கொண்டிருக்கிறது என்பதை விட சில இடங்களில் வெடிச்சிரிப்புக்கும் பஞ்சமில்லை. ஒரு இரவு, இந்த நாவலை வைக்க மனமில்லாமல், சிரித்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்தேன். என் பக்கத்தில் படுத்திருந்த சரவணன் நிமிர்ந்து, நிமிர்ந்து பார்த்தார். பிறகு என் சிரிப்பு சத்தம் தாங்க முடியாமல் காதில் இயர் போனை வைத்துக்கொண்டு தூங்கிவிட்டார். மறுநாள் முறைத்தபடி இருந்தார். நான் என்ன செய்யமுடியும். அடக்கமுடியாத மற்ற இரண்டோடு சிரிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். என்னால் சிரிப்பை அடக்கவே முடியாது. முடியும் என்றும் தோன்றவில்லை. மேலும் ஏன் அடக்கவேண்டும்?
விளைவுகள். கிடக்கிறது போங்கள்.

இதனால் இதை ஏதோ நகைச்சுவை நாவல் என்று எண்ணி விடாதீர்கள். மனிதர்களை சுற்றிலும் குடும்ப கட்டமைப்புக்குள் சுவையாக பின்னப்பட்ட நாவல் இது. மனிதர்களின் மனங்கள் குரங்கு. ஜெயமோகன் காடு நாவலில் சொல்லியிருப்பார் : தனிமை கிடைத்தவுடன் மனம் அதையே செய்யத்துடிக்கிறது. செய்துமுடித்தபின் ஒரு வெறுமை படர்கிறது என்பார். உண்மையே.

சில விசயங்களை செய்யக்கூடாது என்று நினைப்போம். ஆனால் மனம் அதை நோக்கியே பயணிக்கும். அழகி படத்தில் சயாஜி சிண்டே பார்த்திபனின் வீட்டில் இரவு குடித்து விட்டு வாந்தி எடுத்து வைத்திருப்பார். மறுநாள் காலை எழுந்து, சே எப்படி இந்த நாத்தத்த குடிச்சேன். இனிமே உன்ன செத்தாலும் தொடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே கழுவி விட்டுக்கொண்டிருப்பார். அன்றைய இரவில் மறுபடியும் குடிப்பார். சொல்லிக்குற்றமில்லை. நாம் மனிதர்கள். ரோபோக்கள் அல்ல. ஆனாலும் சிலர் மனித குணத்தை விடுத்து மனதைக் கட்டுப்படுத்தி எந்த சூழ்நிலையிலும் ஒரே மாதிரி வாழ்கிறார்கள். அவர்களை தெய்வம் என்றும் சில சமயம் தெய்வ மச்சான் (நன்றி: கமலஹாசன்) என்றும் போற்றுகிறோம். ரோபோக்கள் தெய்வங்களா?

இளவயதில் ஒருவனைப் பார்த்து காதலுற்று அவன் அழகில், பேச்சுத்திறமையில் தன்னையே பறிகொடுத்து அவனது குழந்தையை தன்னில் சுமக்கிறாள் ஒரு பெண். ஆனால் அவனோ ஊரை விட்டே ஓடிவிடுகிறான். அவள் அவனுடைய அண்ணனை திருமணம் செய்து கொள்கிறாள். நாட்கள் ஓடுகிறது. பதினைந்து வருடங்கள் கழித்து ஓடியவன் திரும்ப வருகிறான். அடிமனதில் அவன் மேல் இருந்த காதல் வெறுப்பையும் மீறி, சூழ்நிலையையும் மீறி, மெல்ல மெல்ல மேலெழும்புகிறது. குழந்தையை கொடுத்துவிட்டு ஓட்டம் பிடித்த ஒருவனுடன் 15 வருடங்கள் கழித்து காதல் மீண்டும் துளிர்க்குமா? அதுவும் கணவன் இருக்கும் போது? இது சாத்தியமா? என்று எண்ணத்தோன்றுகிறது. சில சமயம் உண்மை பொய்யை விட பயங்கரமானதாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கும். சந்தேகமெனில் நக்கீரனையோ, ஜூவீயையோ ஒரு முறை திரும்பிப்பாருங்கள். நம் நாட்டிலே நடப்பதைப் பார்க்கலாம். இது சரியா தவறா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும். சரியென்றும் தவறென்றும் சொல்ல நாம் யார்? மனிதர்கள் சூழ்நிலைக்கைதிகள் என்பது தானே உண்மை. என் பிசிக்ஸ் வாத்தியார் சொல்லுவார் : ஒருத்தன (ஒரு மாணவனை) பற்றி முழுமையாக அறிந்து கொள்ள்வேண்டுமென்றால் அவனை அவனது நெருக்கமான நண்பர் குழுவோடு விட்டு பார்க்கவேண்டும். சூழ்நிலைகள் மனிதர்களை புறட்டிப்போட்டுவிடும்.

அண்ணன் தம்பிக்கு இடையேயான சிறுவயது நிகழ்ச்சிகள் மிகுந்த நகைச்சுவையாக இருந்தது. போரின் அவலங்களும், போரில் ஊனமுற்றவர்கள் படும் கொடுமைகளும், போர்கைதிகளின் நாட்டை இழந்த வருத்தமும், அகதி வாழ்க்கையும் மனதை நெருக்குகின்றன. போர் செய்வது, இராணுவத்தில் சேர்வது என்பது ஒரு வேலையா – Profession – அல்லது அதில் தேசப்பற்று ஏதும் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. கிட்டத்தட்ட profession ஆகிக்கொண்டு வரும் இந்த பணியில் கைதிகளாகப் பிடிக்கப்படுபவர்களின் நிலை?

நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம் இந்த நாவலில் உண்டு. கதையில் வரும் அண்ணனின் (ஆர்த்தர்) நண்பன் ஒருவன் (கார்ல்) இராணுவத்தில் சேர்ந்து உலகப்போரில் பங்கு பெற்று கால் கைகளை இழந்து ஊருக்கு திரும்புகிறான். தினமும் ஆர்த்தர் அவனைப் பார்க்கப் போவான். எப்பொழுதும் அவர்களுக்கு இடையில் மவுனத்தை தவிர வேறு மொழி இருக்காது. நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருப்பார்கள். ஒரு நாள் ஆர்த்தர் அவனைப் பார்க்கச் செல்லும் போது, கார்ல் தனக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் self இல் இருக்கும் துப்பாக்கியை எடுத்து தான் படுத்திருக்கும் கட்டிலுக்கு அருகில் இருக்கும் மேஜை மேல் வைக்கச்சொல்கிறான். யோசித்த ஆர்த்தரிடம், “எனக்கு போய் எடுப்பதென்பது சிரமம், கீழே விழுந்து சிரமப்பட்டு தவழ்ந்து போய் எடுப்பதற்குள் வெளியே சென்றிருக்கும் அம்மா வந்துவிடுவார்கள், இந்த உதவியை மட்டும் செய்” என்கிறான். ஆர்த்தர் நீண்ட யோசனைக்கு பின் வேக வேகமாக போய் துப்பாக்கியை எடுக்கிறான். அவன் வேகத்தைப் பார்த்த கார்ல் அவசரமில்லை அம்மா வருவதற்கு இன்னும் சிறிது நேரம் ஆகும் என்கிறான். துப்பாகியை எடுத்து மேஜைமேல் வைத்து விட்டு புறப்படும் ஆர்த்தரிடம் “பரவாயில்லை இன்னும் நேரமிருக்கிறது. உனக்கு கொடுத்த காபியை குடித்துவிட்டு போகலாம்” என்கிறான் கார்ல். ஆர்த்தர் மெதுவாக அமர்ந்து நிதானமாக காபியைக் குடித்துவிட்டுப் போகிறான்.

போர் எப்பொழுதும் Treaty யுடன் முடிவடைவதில்லை. அதன் அவலம் தலைமுறைதோறும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது இல்லையா?

அதற்கப்புறம் Gathering The Water என்ற நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த பதிவில் தண்ணீரை சேகரிக்கலாம்.

Pi

ஜெயமோகனின் காடு நாவலும் ஏழாவது உலகமும் மிக பெரிய உள் விரிவுகளை அடக்கிய நாவல்கள் அல்ல, ஆனால் விஷ்ணுபுரம் அப்படி அல்ல. மதுரை இலக்கியப்பண்ணையில் அந்தப் புத்தகத்தைப் பார்த்தப்பின் வாங்காமல் இருக்க இயலவில்லை. பக்கங்களின் எண்ணிக்கை பயமுறுத்துவதாக இருந்தது. அப்பா மருத்துவமனையில் இருந்த பொழுது நேரத்தை செலவு செய்வதற்காக படிக்க ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்து, தமிழ் அகராதியைக் கையில் (அல்லது தரையில்) வைத்துக்கொண்டு நான் படித்த முதல் தமிழ்நாவல் இது தான் என்று நினைக்கிறேன். நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கவில்லை. அப்பாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டேன்.அப்பா ரிடையர்ட் தமிழாசிரியர் என்பதையும் சில கவிதைத் தொகுப்புகளும் எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மேலும் என் அண்ணனுக்கும் – வக்கீலாக பணிபுரிகிறார்- அம்மாவுக்கும், நிறைய வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.

விஷ்ணுபுரம் நாவலை நான் முழுதாக படிக்கவில்லை. 300 பக்கங்கள் வரை கொஞ்சம் பொருமையிருந்தது, அதற்கப்புறம் வாக்கியங்களில் சுற்றி சுற்றி மீள முடியாத மயக்கநிலைக்கே சென்று கொண்டிருந்தேன். ஆதலால் வாசிப்பை துரிதப்படுத்தினேன், skipping pages. ஏனோ நாவலின் முடிவைப் பார்த்துவிட்டால் போதும் என்றிருந்தது. ஆனால் முடிவென்பது இல்லை என்பதே நாவலின் கருப்பொருள். அப்படியிருக்க நாவலுக்கு எப்படி முடிவிருக்கும். தொடங்கிய இடத்திலே முடிகிறது. நாவலில் வரும் விஷ்ணுபுரமும், கோபுரங்களும் மிக மிக அழகு. அதிலும் கோபுரங்களின் கட்டமைப்பு பற்றி மிக விரிவாக விமர்சித்திருப்பது, நம்மை அந்த கோவிலின் அருகிலே கொண்டுசெல்கிறது. மிகத் தேர்ந்த ஒளிப்பதிவாளரின் நேர்த்தியுடன் காட்சி நம் கண் முன்னே விரிகிறது. கருடனின் கதையும் புல்லரிக்க செய்கிறது. முழுமையாக வாசிக்காத காரணத்தால் இந்த புத்தகத்தைப் பற்றி விரிவாக பேச இயலாது. ஆனால் விஷ்ணுவின் சிலையும் (அது விஷ்ணுவே இல்லையென்றும் நாவலிலே சொல்லப்படுகிறது) மூன்று வாசல்களும் என் கண் முன்னே இன்னும் நிற்கிறது. மீண்டும் ஒரு முறை – வாய்ப்பும் போதிய நேரமும் கிடைத்தால் – நிச்சயம் மறுபடியும் படிக்க வேண்டும்.

சோம. வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ள பணம் என்ற பங்குச் சந்தையை அக்குவேறு ஆணிவேறாக அலசும் சிறிய – comparative to விஷ்ணுபுரம் – புத்தகம் ஒன்றை படித்தேன். மிக மிக நல்ல புத்தகம். பங்குச் சந்தையில் கால் வைக்க விரும்பும் புதியவர்களை ஊக்கப்படுத்துவதோடு; மிக அழகாக சறுக்கி விழக்கூடிய ஆபத்தையும் உணர்த்துகிறார் ஆசிரியர். நாணயம் விகடனுக்காக காத்திருக்கத் தேவையில்லை. வாங்குங்கள். படியுங்கள். களத்தில் இறங்குங்கள். ஆனால் சொல்லித்தெரிவதில்லை “பங்குச்சந்தை” கலை! பட்டுத்தான் தெரியவேணும். என்னுடைய பாஸ் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிச்சென்றுவிட்டார். ரஜினி பாடலில் வரும் : “அஞ்சுக்குள்ள நாலவை. ஆழம் பார்த்து காலவை” என்ற வாக்கியத்தை மட்டும் ஞாபகத்தில் இருத்திக்கொண்டால் போதுமானது.

எங்கள் ஆபீஸ் டவரில் இருக்கும் Private Lending Library யில் சுற்றிக்கொண்டிருந்த பொழுது, Life Of Pi என்ற நாவலைப் பார்த்தேன். Man Booker Prize வாங்கிய நாவல் இது. முன்பே பலமுறை பலர் சொல்ல கேள்விப்பட்ட நாவல் தான் இது. எப்பொழுதும் ஒரு மாதம் கால அவகாசம் தரும் Library, இந்த புத்தகத்தை சீரியஸ் ரீடிங் என்று கணக்கில் கொண்டு இரண்டு மாத காலம் அவகாசம் தந்தது. ஆனால் உண்மையைச் சொன்னால் : சீரியஸாக படித்தால், ஆறு மணி நேரத்தில் படித்து விடலாம். ஒரு சனிக்கிழமை இரவு. அவ்வளவே.

நீங்கள் ஆரம்பித்தால் மட்டுமே போதுமானது, நாவல் உங்களை பக்கங்கள் தோறும் கடத்திச் செல்லும், அமைதியாக ஓடும் நதியில் மிதக்கும் மரம் போல நீங்கள் உணர்வீர்கள். இதுவரை நான் படித்திராத கதைக் களம். புதிய உத்தி. அதிரடி க்ளைமாக்ஸ். நான் கொஞ்சம் தத்தி, அதனால் க்ளைமாக்ஸ் அதிரடியாக இருந்திருக்கலாம். உங்களுக்கு எப்படியோ! யான் மார்ட்டல் எழுதிய இந்நாவல் பாண்டிச்சேரியில் தொடங்கி கனடாவில் முடிகிறது. ஆசிரியரும் கனடாவைச் சேர்ந்தவரே. கனடாவின் இலக்கியம் வளம் மிக நன்றாக இருக்கிறதென்று நினைக்கிறேன்.

ஹீரோ பை (Pi) யின் அப்பா ஒரு மிருகக்காட்சி சாலை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில், zoo வை விற்று விட்டு தன் குடும்பத்தாருடன் கனடாவை நோக்கி கப்பலில் பயணிக்கிறார். கப்பல் கவிழ்ந்து விடுகிறது. பை மட்டும் ஒரு Life Boat ல் தப்பிக்கிறான். ஆனால் அந்தோ பரிதாபம், அந்த லைப் போட்டில் ஒரு ஓநாயும், ஒரு வரிக்குதிரையும், ஒரு ஓரங்குட்டானும், ஒரு 140 பவுண்ட் புலியும் இருக்கின்றன. அவை அனைத்தும் அவர்களுடைய மிருகக்காட்சி சாலையில் இருந்தவை. முதலில் புலி அமைதியாக இருக்கிறது. ஓநாய் வரிக்குதிரையை உயிருடன் கடித்து திண்ண ஆரம்பிக்கிறது. பிறகு ஓரங்குட்டானை கொல்கிறது. பை தொடர்ந்து கொல்லப்படாமல் தப்பிக்கிறான். பிறகு புலி விழித்துக் கொள்கிறது. ஒரே அடியில் ஓநாயை வீழ்த்துகிறது. பிறகு ஓநாயையும், எஞ்சிய வரிக்குதிரையின் பாகங்களையும், ஓரங்குட்டானையும் திண்கிறது. அடுத்தது பை தான்.

பை இருநூறுக்கும் மேற்பட்ட நாட்கள் எப்படி கடலில் அந்த மிருகத்திடமிருந்து தப்பித்து கரைசேருகிறான் என்பதே கதை. அதற்குப்பிற்கு ஒரே ஒரு சஸ்பென்ஸ் மட்டுமே இருக்கிறது. கடவுள் நம்பிக்கையையும், தன் நம்பிக்கையையும், வாழ நினைத்தால் வாழலாம் என்பதையும் அறிவுறுத்தும் நாவல் இது. மெல்லிய நகைச்சுவை நாவல் தோறும் பரவிக்கிடக்கிறது, பீச்சிலிருக்கும் மணல் போல. எடுத்துக்காட்டாக அவனுக்கு எப்படி Pi என்ற பெயர் வந்தது என்பது. நான் நாவலை வாங்கும் பொழுது, பை யின் அப்பா ஒரு மிகச்சிறந்த கணித மேதையாக – Pi=3.14 -இருக்கக்கூடும் என்று தான் நினைத்திருந்தேன். படியுங்கள் : A laugh guaranteed.

அப்புறம் நீண்ட நாட்களாக நூறு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு வைத்த The Glass Palace என்ற அற்புதமான நாவலை மீண்டும் வாசிக்கத்தொடங்கினேன். அடுத்த பதிவில் Amitav Gosh ஐ சந்திக்கலாம்.