உலகில் உள்ள அனைத்து காதல் தேவதைகளும் தபூ சங்கரிடம் தான் குடி கொண்டிருக்கின்றன போலும் அதனால் தான் அவர் தும்மினால் கூட காதல் கிருமிகள் தான் காற்றை நிறப்புகின்றன. இதோ என்னை அட்டாக் செய்தகிருமிகள் சில. முகமூடி அணிந்துகொண்டு வாருங்கள், இவை அந்தராக்ஸ் கிருமியை விட பயங்கரமானவை.
—————————————-
சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி.
எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது
என் இதயம்.
——————————
சூரியன் வந்த பிறகுதான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வரும்போதுதான்
விழிக்கிறது இந்த வீதி
——————————-
இந்த மலையைக் குடைந்து
ரயில்பாதை அமைத்தவனுக்காவது தெரியுமா
உன் கல்மனசுக்குள்
நுழைவது எப்படி என்பது
———————————
உன்னைக் கேலி பேசுபவனையெல்லாம்
முறைத்துப் பார்க்கிறாய்
உன்னை நேசிக்கிற என்னை மட்டும்
சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே.
————————————————
நீயோ
சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க
புத்தகத்தால் உன் முகத்தை
மறைத்துக் கொள்கிறாய்.
சூரியனோ
உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில்
எல்லோரையும் சுட்டெரித்துக்
கொண்டிருக்கிறது.
——————————————————–
சிறுமியைப்போல்
கடல் அலையில் கால் நனைத்து
விளையாடிக்கொண்டிருந்தாய்
கடலோ
கொந்தளித்துக்கொண்டிருந்தது
———————————————-
உனது ஆடையையும்
எனது ஆடையையும்
அருகருகே காயவைத்திருக்கிறாயே
இரண்டும்
காய்வதை விட்டுவிட்டு
விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்.
——————————————–
எல்லா கவிதைகளுமே
உன்னைப் பற்றியவைதாம் எனினும்
ஒரு கவிதைகூட
உன்னை மாதிரி இலலையே
———————————–
ஒவ்வொன்றும் முத்தான கவிதைகள்!!//சற்றுமுன் நீ நடந்துபோனதடயம் எதுவுமின்றிஅமைதியாய்க் கிடக்கிறது வீதி.எனினும்அதிவேக ரயிலொன்றுகடந்துபோன தண்டவாளம் போலஇன்னும் அதிர்கிறதுஎன் இதயம்.//இதைத்தான் மிகவும் ரசித்தேன்.
LikeLike
தம்பி : ச்சோ சுவீட். ஆர்கைவ் எல்லாம் அலசிப்பார்த்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. ஆமாம் தபூ சங்கரின் கவிதைகள் முத்தானவைதான். நீங்கள் குறிப்பிட்ட கவிதை தான் எனக்கும் பிடித்தது என்றாலும்//சூரியன் வந்த பிறகுதான்நீ வருகிறாய் என்றாலும்நீ வரும்போதுதான்விழிக்கிறது இந்த வீதி//இந்த கவிதையும் எனக்கு பிடித்ததுதான். நாம் அன்றாடம் பார்க்கும் காட்சிகளை எடுத்துக்கொண்டு அதில் நாம் பார்க்கத்தவறிய பதிவுகளை எவ்வளவு அழகாக எடுத்துக்கூறுகிறார் பாருங்கள்?
LikeLike