கேட்பதற்கு உரிமையில்லை!

ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம். ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அவர் ஒரு மந்திரம் தான். சிலர் அவரைப் புகழ்ந்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். சிலர் அவரை விமர்சித்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். விளம்பரம் விளம்பரம் தான்.

ரஜினி வேலு பிரபாகரனுக்கு உதவி செய்திருக்கிறார். அது கடனாகவோ, ரொக்கமாகவோ எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். அதை வேலுப்பிரபாகரன் விகடனுக்கு அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருக்கிறார். கவனிக்க, ரஜினியின் சொந்தமோ அல்லது ரஜினியின் ரசிகர் மன்றமோ அல்லது ரஜினியோ இதைச் சொல்லவில்லை. வேலு பிரபாகரனே கூறியிருக்கிறார். ரஜினியின் நிர்பந்தத்தினாலே அவர் சொன்னார் என்று நினைத்து விட வாய்ப்பிருக்கிறது. அது சின்ன புத்தியுள்ளவர்களுக்கே சாத்தியம். ரஜினியை காட்ட சாட்டமாக விமர்சித்தவர் வேலு பிரபாகரன். தனக்கு ஒரு கஷ்டம் என்று வந்தவுடன் ரஜினியிடம் அதை சொல்லியிருக்கிறார். ரஜினி பழயதை நினைத்து உதவியிருக்கலாம். அல்லது நினைக்காமல் உதவியிருக்கலாம். உதவி உதவி தானே ஐயா? வேலுபிரபாகரனின் கஷ்டம் தீர்ந்ததா இல்லையா? உங்களுக்கு ஏன் பற்றிக்கொண்டு வருகிறது? மற்ற எத்தனை தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு ஏன் உதவவில்லை என்று கேட்பது மிக மிக அபத்தமாக இருக்கிறது. ஒருவர் மற்றொருவருக்கு உதவுகிறார் என்றால் அவரிடம் போய்: ஏய் நீ ஏன் அடுத்தவருக்கு உதவவில்லை என்று கேட்பது போல் இருக்கிறது. மேலும் ரஜினி தனது படங்களில் நலிந்த தயாரிப்பாளர்களை இணைத்தயாரிப்பாளர்களாக சேர்த்துக்கொள்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. தற்போதைய சிவாஜியில் கூட எஸ்.பி.முத்துராமனை சேர்த்திருக்கிறார். பண்டரிபாய், வீ.கே.ராமசாமியை தனது முந்தைய படங்களில் சேர்த்திருந்தது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். குற்றம் பார்ப்பதே குற்றம். அதிலும் நல்லவிசயத்தில் குற்றம் பார்ப்பது என்பது மிக மிக அபத்தம்.

மனோரமா ரஜினியை விமர்சித்தார். அதனால் அவருக்கு படங்கள் குறைந்தது. அதற்கு காரணம் ரஜினியாம். ரஜினி எல்லோரிடமும் சென்று மனோரமாவிற்கு வாய்ப்பு தராதீர்கள் என்று சொன்னாராம். சினிமாவிலிருந்து கொண்டே சினிமாக்காரர்களை விமர்சிப்பது – அதுவும் பெர்சனலாக – சினிமாக்காரர்களையே எரிச்சலடையச் செய்யும்.நாளை நம்மையும் விமர்சிப்பார் என்ற பயம் கூட காரணமாக இருக்கும். மேலும், ஒரு துறையில் பலசாலியாக இருப்பவரை, அந்த துறையில் இருக்கும் ஒருவர் விமர்சித்தால், மற்ற யாரும் விமர்சித்தவருக்கு ஆதரவு தர மாட்டார்கள். தாட் இஸ் நேச்சுரல். ரஜினியே வாய்ப்பு கொடுத்தால் மற்றவர்கள் தானாகவே வாய்ப்புத்தருவார்கள் என்பதால் கூட முதலில் ரஜினி அழைத்து வாய்ப்பு தந்திருக்கலாம். ஹீரோக்களை துதி பாடுவது என்பது புதிதல்ல, அதை சகித்துக்கொள்வதும் நமக்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் படத்திலிருக்கும் ஈ. எறும்பு முதற்கொண்டு அனைத்தும் அவரைத் துதிபாடும். அப்படியிருக்க மனோரமாவும் அந்த படத்தில் ஒரு கதாப்பாத்திரம். ரஜினியே நீங்கள் எனக்கு வில்லியாக நடியுங்கள்; என்னைத் திட்டுங்கள் என்று சொல்லியிருந்தால் கூட அன்றைய சூழ்நிலையில், மனோரமா அதை செய்திருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது. அப்படியிருக்க இதைக்காரணம் காட்டி அவரை சேடிஸ்ட் என்று சொல்வது நியாயமா? நம் சுய விளம்பரத்திற்காக அவரை பிண்டம் என்று சொல்லலாமா?

ரஜினி ஏதாவது சமூகசேவை செய்திருக்கிறாரா என்றும் கேட்கிறார்கள் அவர் ஒரு நடிகர். அவர் தொழில் நடிப்பது. சமூக சேவை செய்வது அல்ல [அப்படியும் அவர் நிறைய செய்திருக்கிறார்]. மேலும் அவர் செய்ய வேண்டும் என்கிற அவசியம் ஏதும் இருக்கிறதா என்ன? கடவுள் அவரைப் படைக்கும் போது : சிவாஜிராவ், நீங்கள் தமிழகம் சென்று திருத்தொண்டாற்றக்கடவது என்று சொல்லி அனுப்பினாரா என்ன? நீங்கள் சமூக சேவை செய்வதற்கென்றே தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்திருக்கிறீர்களே முதலில் அவர்கள் சமூக சேவை செய்கிறார்களா என்று பாருங்கள். பிறகு நம் ரேஞ்சுக்கு நாம் என்ன செய்கிறோம் என்று பாருங்கள். நீங்களும் சமுதாயத்தில் ஒரு அங்கத்தினர் தானே, ரஜினியைப் போல்.

அவர் கோடி கோடியாக அள்ளுகிறார். பிறகு இமயமலைக்கு போகிறார் என்றொரு பேட்டி வந்திருந்தது. இது என்ன அநியாயம்? அவர் சம்பாதிக்கிறார். அவர் இமயமலைக்கு செல்கிறார், இல்லை எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். உனக்கென்ன? உன் காசையா திருடிவிட்டு செல்கிறார்? படம் பார்த்த தமிழ்மக்களுக்கு அவர் என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். என்ன செய்யவேண்டும்? சாம்பார் இட்லி சாப்பிடுகிறோமே சரவணபவனில், சரவணபவன் நமக்கு என்ன செய்தது என்று கேட்க முடியுமா? சாம்பார் இட்லி சாப்பிட்டாச்சா? அப்படியே ஓடிப்போயிடு. அதுதான். படம் பார்த்தீல. உன்ன யாராச்சும் தர தரன்னு புடிச்சு இழுத்துட்டு போனாங்களா? கண்டிப்பா டிக்கெட் வாங்கு இல்லேன்னா குலநாசம்னு யாராச்சும் பயமுறுத்துனாங்களா? அதுவும் முதல் நாளே பாக்கலீன்னா உனக்கு ஆயுள் தண்டனைன்னு சொன்னாங்களா? நீயாத்தான பார்த்த. நீ கொடுத்த காசு படத்துக்கு சரியாப்போச்சு. அவ்வளவுதான். மளிகைக்கடையில கடல உருண்டை வாங்குறமாதிரிதான். வாங்கிட்டியா? சாப்டாச்சா? போயிட்டேயிரு. அண்ணாச்சி உன் கடையில் நான் கடலஉருண்ட சாப்பிட்டிருக்கேன், நீ எனக்கு என்ன செஞ்சன்னு கேக்க முடியுமா? படம் புடிச்சிருந்தா பாரு. இல்லயா பாக்காத. பாத்துப்புட்டு, விசிலடிச்சுப்புட்டு ஐயோ நீ இமயமலைக்கு போனா நான் எங்க போறதுன்னு கேட்டா? சம்பாதிக்கறார் சம்பாதிக்கறார் என்றால்? வரி கட்டுகிறாரா இல்லையா?

ஐயா, நாட்ல எல்லோரும் தான் சம்பதிக்கிறோம். எல்லோரும் தான் செலவழிக்கிறோம். எல்லோருக்கும் செலவு இருக்கு. அவங்க அவங்க சக்திக்கு தகுந்தாமாதிரி. மொதல்ல நாம நம் சக்திக்கு உட்பட்டு என்ன தான தர்மம் பண்றோம். என்ன பொது நலத்தொண்டுகள் கிழிக்கறோம்னு பார்க்கனும். அதவிட்டுப்புட்டு அவன் நொல்ல, இவன் தொல்லன்னு சொல்றது வேறஒன்னுமில்ல பொறாமை அதன் விளைவாக அரசியல். அவர் ஒரு நடிகர். இன்னும் நேரடி அரசியலில் கால் எடுத்து வைக்கவில்லை. அவர் அரசியலுக்கு வரட்டும், பதவியில் அமரட்டும் அப்போது கேட்கலாம் எங்களுக்கு என்ன செய்தாய் என்று? அது வரைக்கும் நமக்கு கேட்பதற்கு உரிமையில்லை.

செய்ய வேண்டும் தான். செய்திருக்கலாம் தான். அவர் வசதிக்கு அவர் இப்பொழுது செய்துகொண்டிருப்பதைக்காட்டிலும் மிக நன்றாக செய்யலாம் தான். எத்தனையோ கிராமங்கள் வறுமையால் உலன்று கொண்டிருக்கின்றன. அதில் ஒரே ஒரு கிராமத்தை மட்டும் தத்தெடுக்கலாம். அதற்கு வசதிகள், வேலைவாய்ப்பு என்று ஏற்படுத்திக்கொடுக்கலாம். பள்ளிக்கூடங்கள் திறக்கலாம். புதிதுபுதிதாக ரிசெர்ச்சுக்கு உதவலாம். விவசாய ரிசர்ச். உப்புத்தண்ணி ரிசர்ச். முடி கொட்டாமல் தடுப்பது எப்படி. அவருக்காவது உபயோகமாக இருக்குமே. இதை செய்ய முடியாதா அவரால்? பிறகு பணமிருந்து என்ன பயன்? – இத விட்டுபுட்டு எங்க பேச கூப்டாலும் போய் மேடையேறி, பேச கூப்டவரை நல்லவரு வல்லவருன்னு மட்டும் பேசிட்டு ஒரு கத சொல்லிட்டு போனா என்னங்க அர்த்தம்? – ஆனால் இதையெல்லாம் செய்யாதது குற்றமில்லை. இதை அவர் மட்டும் தான் செய்திருக்க வேண்டும் என்றில்லை. செல்வந்தர்களாக இருக்கும் எவரும் செய்திருக்கலாம். யார் செய்தார்கள்? தமிழ்நாட்டில் இவர் ஒருவர் மட்டும் தான் பணக்காரராக இருக்கிறாரா? வேறு எவரிடமும் பணமில்லையா?

இது தமிழகத்தின் தலையெழுத்து. என் தெலுங்கு நண்பர் ஒருவர் கேட்டார் : ஏன் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன உங்கள் பத்திரிக்கைகள் என்று. நியாயம் தானே? ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? படங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் நம்மை சினிமா என்ற போதையில் அமுக்கி வைத்திருக்கவே விரும்புகின்றன. சினிமா ஒரு பொழுது போக்கி. நம் ஊரில் பொழுதைப்போக்குவதற்கு வேறு விசயங்கள் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் – தீம் பார்க் – மிக காஸ்ட்லியாக இருக்கின்றன. குடும்பத்துடன் செல்ல வேண்டுமானால் பாதி மாத சம்பளம் – சாப்ட்வேர் மக்களே நான் உங்களைப்பற்றி பேசவில்லை – எடுத்து வைக்கவேண்டும். அதைவிட சினிமா எவ்வளவோ தேவலை. சீப் அன்ட் பெஸ்ட் பொழுதுபோக்கி. 60ரூபா டிக்கெட் எடுத்து மூன்று மணி நேரம் உட்கார்ந்துவிட்டு வந்துவிடலாம். அது கொடுக்கும் தலைவலியில் வீட்டு பிரச்சனைகளை ஈசியாக மறந்துவிடுகிறோம்.

வேண்டுமானால் நாம் சினிமா – தியேட்டருக்கு போய் – பார்ப்பதை நிறுத்தலாம். இதற்குத் தான் நமக்கு உரிமை இருக்கிறது. படம் பார்ப்பதற்கு பதிலாக: அந்த நேரத்தை நம் உடம்பை பேணுவது, வீட்டில் தோட்டம் வளர்ப்பது, குடும்பத்தினருடன் – சண்டைவராமல்- முக்கியமாக தாய் தந்தையருடன் பேசிக்கொண்டிருப்பது, அவர்களது கதைகளை காது கொடுத்து கேட்பது, பிள்ளைகளை பார்க்கு பீச் என்று அழைத்து செல்வது, உறவினர் வீட்டிற்கு விசிட் -டேரா போட்டு அவர்களுக்கு செலவிழுத்து வைக்காமல்-அடிப்பது, எங்கேயாவது டிரிப் அடிப்பது, புத்தகம் படிப்பது -படித்துவிட்டு; ஜெயமோகனை: நான் உன் புத்தகம் படித்தேன் நீ எனக்கு என்ன செய்தாய் என்று கேட்ககூடாது-படிக்கதூண்டுவது, விளையாடுவது, விளையாட இடமில்லையா, எங்கே இடம் அமைக்கலாம் என்று யோசிப்பது என்று எத்தனையோ விசயங்கள் இருக்கிறது.

சினிமா பார்ப்பதை நிறுத்துவோம். அதற்கு செலவழிக்கும் காசையும் நேரத்தையும் – முக்கியமாக நேரம் -ஒருங்கினைப்போம். நல்ல விசயத்திற்கு ஸ்டிரீம் லைன் பண்ணுவோம். அது தான் நம்மால் முடிந்தது. அதை விட்டுட்டு இன்னும் எத்தனை காலம் ரஜினியையே குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது? போங்கப்பா. போங்கப்பா. போய் பிள்ளைகளை படிக்க போடுங்கப்பா.

25 thoughts on “கேட்பதற்கு உரிமையில்லை!

  1. //செய்ய வேண்டும் தான். செய்திருக்கலாம் தான். அவர் வசதிக்கு அவர் இப்பொழுது செய்துகொண்டிருப்பதைக்காட்டிலும் மிக நன்றாக செய்யலாம் தான். எத்தனையோ கிராமங்கள் வறுமையால் உலன்று கொண்டிருக்கின்றன. அதில் ஒரே ஒரு கிராமத்தை மட்டும் தத்தெடுக்கலாம். அதற்கு வசதிகள், வேலைவாய்ப்பு என்று ஏற்படுத்திக்கொடுக்கலாம். பள்ளிக்கூடங்கள் திறக்கலாம். புதிதுபுதிதாக ரிசெர்ச்சுக்கு உதவலாம். விவசாய ரிசர்ச். உப்புத்தண்ணி ரிசர்ச். முடி கொட்டாமல் தடுப்பது எப்படி. அவருக்காவது உபயோகமாக இருக்குமே. இதை செய்ய முடியாதா அவரால்? பிறகு பணமிருந்து என்ன பயன்? – இத விட்டுபுட்டு எங்க பேச கூப்டாலும் போய் மேடையேறி, பேச கூப்டவரை நல்லவரு வல்லவருன்னு மட்டும் பேசிட்டு ஒரு கத சொல்லிட்டு போனா என்னங்க அர்த்தம்? – ////ஆனால் இதையெல்லாம் செய்யாதது குற்றமில்லை. இதை அவர் மட்டும் தான் செய்திருக்க வேண்டும் என்றில்லை. செல்வந்தர்களாக இருக்கும் எவரும் செய்திருக்கலாம். யார் செய்தார்கள்? தமிழ்நாட்டில் இவர் ஒருவர் மட்டும் தான் பணக்காரராக இருக்கிறாரா? வேறு எவரிடமும் பணமில்லையா?//சரியான கேள்விகள்.சமூக அக்கறை என்பது 10 ரூபாய் சம்பாதிப்பவனுக்கும் வேண்டும் 10 கோடி சம்பாதிப்பவனுக்கும் வேண்டும்.செய்யாவிடில் குற்றம் இல்லை.அதன் பெயர்…சுயநலம்… சமூக அக்கறையின்மை…சரியாகச் சொல்லப்போனால் சராசரி மனிதர்கள்…அவ்வளவே.//இது தமிழகத்தின் தலையெழுத்து.//100% சரி // என் தெலுங்கு நண்பர் ஒருவர் கேட்டார் : ஏன் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன உங்கள் பத்திரிக்கைகள் என்று. நியாயம் தானே? ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? படங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் நம்மை சினிமா என்ற போதையில் அமுக்கி வைத்திருக்கவே விரும்புகின்றன.//அங்கு மட்டும் அல்ல …இங்கே பதிவுகளிலும் அதுதான் நடந்தது..நடக்கும்.. :-((((( // சினிமா ஒரு பொழுது போக்கி. நம் ஊரில் பொழுதைப்போக்குவதற்கு வேறு விசயங்கள் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் – தீம் பார்க் – மிக காஸ்ட்லியாக இருக்கின்றன. குடும்பத்துடன் செல்ல வேண்டுமானால் பாதி மாத சம்பளம் – சாப்ட்வேர் மக்களே நான் உங்களைப்பற்றி பேசவில்லை – எடுத்து வைக்கவேண்டும். அதைவிட சினிமா எவ்வளவோ தேவலை. சீப் அன்ட் பெஸ்ட் பொழுதுபோக்கி. 60ரூபா டிக்கெட் எடுத்து மூன்று மணி நேரம் உட்கார்ந்துவிட்டு வந்துவிடலாம். அது கொடுக்கும் தலைவலியில் வீட்டு பிரச்சனைகளை ஈசியாக மறந்துவிடுகிறோம்.//:-))))

    Like

  2. —புத்தகம் படிப்பது -படித்துவிட்டு; ஜெயமோகனை: நான் உன் புத்தகம் படித்தேன் நீ எனக்கு என்ன செய்தாய் என்று கேட்ககூடாது—;-))பதிவு முழுக்கவே ரசித்தேன்.

    Like

  3. //60ரூபா டிக்கெட் எடுத்து மூன்று மணி நேரம் உட்கார்ந்துவிட்டு வந்துவிடலாம். அது கொடுக்கும் தலைவலியில் வீட்டு பிரச்சனைகளை ஈசியாக மறந்துவிடுகிறோம்//முத்து சிரிக்க சொன்னாலும் சிந்திக்க சொல்லறிங்க.//ரஜினி ஒரு மூன்றெழுத்து மந்திரம்//இதெல்லாம் டூ மச்;-(//ரஜினி ஏதாவது சமூகசேவை செய்திருக்கிறாரா என்றும் கேட்கிறார்கள் அவர் ஒரு நடிகர். அவர் தொழில் நடிப்பது. சமூக சேவை செய்வது அல்ல //உண்மையான விஷயம்

    Like

  4. // சிலர் அவரைப் புகழ்ந்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். சிலர் அவரை விமர்சித்து விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். விளம்பரம் விளம்பரம் தான்.//சாட்டையடி ஆரம்பம்..// உங்களுக்கு ஏன் பற்றிக்கொண்டு வருகிறது? //எரிச்சல்தான்.. வேற என்ன?நான் இப்படி சொல்ல ஆரம்பிச்ச மொத்தப் பதிவையும் ஒன்னு ஒன்னா சொல்லனும்…அதுனாலநியாயமான கருத்துகள்..முழுதும் உடன்படுகிறேன்..

    Like

  5. கல்வெட்டு : அவரைப்பொருத்தவரை அவர் ஒரு சராசரி மனிதர். திரையில் மட்டுமே ஹீரோ. திரையில் மட்டுமே அவர் பார்த்தவுடன் பற்றிக்கொண்டு எரியும் சிகரெட். இப்ப அதுவும் எரியாது. பாலா : கேட்டாலும் கேட்பார்கள். ஈ-தமிழைப் படித்துவிட்டு உங்களிடமும் : பாலா நீ எனக்கு என்ன செய்தாய் என்று கேட்கலாம். கவனம் தேவை.

    Like

  6. நிர்மல்: வாங்க சார். அவரைப் பற்றிய செய்தி அட்டைப்படத்தில் போட்டால் மந்திரம் போட்டது போல பத்திரிக்கை விற்பனையாகிறதே. அவர் பூஜை போட்டவுடன் மந்திரம் போட்டது போல படம் 100 கோடி வரை விற்பனையாகிறதே. 1000 ரூபாய் சம்பளத்திற்கு தினமும் 10 மணி நேரம் நாயாய் பேயாய் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கத்திக்கொண்டிருப்பவர்கள் இருக்கும் இம்மாநிலத்தில் மூன்றே மாதத்தில் 100 கோடி பிஸினஸ் பண்ணுவது என்பது மந்திரம் இல்லையா? அவர் மந்திரம் தான். அந்த மந்திரத்தை பலிக்க செய்யும் சக்தியாக மக்கள் இருக்கிறார்கள். மறுநாள் குடிக்க கஞ்சி இல்லையென்றாலும், அவர் படத்தை முதல் நாள் பிளாக்கில் 400 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பார்ப்பவர்கள் இருக்கும் வரை அவர் மந்திரம் தான். நக்கீரன்: வருகைக்கு நன்றி. //why always targetting Rajini.. மக்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் டீவிக்களுக்கும் ப்ளாகர்களுக்கும் எப்படியாவது பொழுது போக வேண்டுமே!

    Like

  7. நல்லதொரு பதிவு…நம்மவர்களுக்கு மருந்தை (கருத்தை) இனிப்புடன் (நகைச்சுவையுடன்) சேர்த்து சாப்பிட்டுதான் பழக்கம்…அதை சிறப்பாக கொடுத்திருந்தீர்கள்…

    Like

  8. //நிர்மல்: வாங்க சார். அவரைப் பற்றிய செய்தி அட்டைப்படத்தில் போட்டால் மந்திரம் போட்டது போல பத்திரிக்கை விற்பனையாகிறதே. அவர் பூஜை போட்டவுடன் மந்திரம் போட்டது போல படம் 100 கோடி வரை விற்பனையாகிறதே. 1000 ரூபாய் சம்பளத்திற்கு தினமும் 10 மணி நேரம் நாயாய் பேயாய் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கத்திக்கொண்டிருப்பவர்கள் இருக்கும் இம்மாநிலத்தில் மூன்றே மாதத்தில் 100 கோடி பிஸினஸ் பண்ணுவது என்பது மந்திரம் இல்லையா? அவர் மந்திரம் தான். அந்த மந்திரத்தை பலிக்க செய்யும் சக்தியாக மக்கள் இருக்கிறார்கள். மறுநாள் குடிக்க கஞ்சி இல்லையென்றாலும், அவர் படத்தை முதல் நாள் பிளாக்கில் 400 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பார்ப்பவர்கள் இருக்கும் வரை அவர் ந்திரம் தான். //முத்து ஒரு கும்பலா எல்லோரும் எதை பண்ணினாலும் அது மந்திரமா?

    Like

  9. ஒரு சில கருத்துகள் மிகைப் படுத்தப் பட்டிருந்தாலும், சொன்ன கருப் பொருளை நன்றாக்ச் சொல்லி இருக்கிறீர்கள்.நல்ல பதிவு.வைசா

    Like

  10. சரியாகச் சொன்னீர்கள்.நல்ல கருத்து. இது ரஜினிக்கு மட்டுமல்ல.எல்லா பிரபலங்களுக்குமே பொருந்தும்.(ஆமா! நான் உங்க பதிவைப் படித்தேன். நீங்க எனக்கு என்ன செய்யப் போறீங்க? அதுக்காக ஆட்டோ அனுப்பக் கூடாது சொல்லிட்டேன்)

    Like

  11. ரஜினி ஒரு மந்திரமா இல்லை என்பது தெரியாது ஆனால், ஒரு தனிமனிதனில் செயலை (அவர்கள் பொது வாழ்வில இருந்தாலும்) விமர்சனம் செய்வது எந்தவிததில் நியாயம் என படவில்லை. நல்ல கருத்து

    Like

  12. வருஷம் முழுக்க வேலை செய்றவன் ஒரு மாறுதலுக்காக எங்கனாச்சும் போறான். அதே மாதிரி ரஜினி என்ற மனிதரும் போகிறார். இதில ஒரு மண்ணாங்கட்டி விளம்பரமும் கிடையாது. இதை மீடியா விளம்பரப்படுத்துது.உங்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொளக்கூடிய கருத்துக்கள். முழுமையாக உடன்படுகிறேன்.

    Like

  13. நிர்மல்: கும்பலாகப் பண்ணினால் மந்திரம் இல்லை நிர்மல். ஒரு விசயம் நடப்பதற்கு சாத்தியமில்லாத பொழுது அந்த விசயம் ஆச்சரியப்படும் விதமாக நடந்துவிட்டால் அப்பொழுது தான் அதை மந்திரம் என்று சொல்கிறோம். யோசித்துப் பாருங்கள், மற்ற நடிகர்களிடம் இல்லாதது ரஜினியிடம் என்ன இருக்கிறது? ஏன் இவ்வளவு கிரேஸ்? ஏன் படம் 100 கோடிக்கு விற்பனையாகிறது? தமிழகத்தில் நன்றாக சம்பாதிப்பவர்கள் – மாத சம்பளக்காரர்களில் – சாப்ட்வேர் மக்கள் தான். அவர்களாலே 100 கோடியை வாழ்க்கையில் சம்பாதிக்க முடியுமா? நாராயண மூர்த்தியை விட்டுத்தள்ளுங்கள். அவர் கோடியில் ஒருத்தர். இப்படி காரணம் ஏதும் தெரியாமல் புரியாமல் சில விசயங்கள் நடக்கும் போது அதை மந்திரம் என்று சொல்வது தவறில்லை என்பது என் தாழ்மையான கருத்து.நாமக்கல் சிபி: வாங்க சிபி. கமெண்டுக்கு நன்றி. ஆட்டோவா? ஏரோபிளேன் அனுப்பட்டா? ஆமாம் அதென்ன ஆட்டோ. புரியவில்லையே தலைவா.

    Like

  14. எலிவால்ராஜா(?!) :)) ,மீனாக்ஸ்,வைசா: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தம்பி: வருகைக்கு நன்றி. சாதரணமாக சம்பாதிக்கும் மக்களே லீவு கிடைத்தால் குற்றாலம் கொடைக்கானல் என்று போகும் போது, அவர் இமையமலை செல்வதில் தவறே இல்லை.

    Like

  15. எலிவால்ராஜா(?!) :)) ,மீனாக்ஸ்,வைசா: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தம்பி: வருகைக்கு நன்றி. சாதரணமாக சம்பாதிக்கும் மக்களே லீவு கிடைத்தால் குற்றாலம் கொடைக்கானல் என்று போகும் போது, அவர் இமையமலை செல்வதில் தவறே இல்லை.

    Like

  16. மிக சரியாக, அழகாக, நகைச்சுவையாய் எழுதியிருக்கிறீர்கள். சரவணாபவனில் இட்லி சாப்பிட்டு சரவணாபவன் எனக்கு என்ன செய்தது என்று கேட்கிறோமா என்ன? வாய் விட்டு சிரித்தேன். ரிலையன்ஸ் அம்பானிக்கள், மல்லய்யா போன்றோரிடம் யாரும் இது வரை சமுகச்சேவை செய்யுங்கள் என்று கோரிக்கை வைப்பதில்லை.நீங்கள் என்ன தான் எழுதினாலும் ரஜினியை பிடிக்காதவர்கள் ஏதாவது அவரை குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் எல்லோருக்கும் வேலு பிரபாகரனுக்கு கொடுத்தது போல, ரஜினி பணம் கொடுத்தால், அவரை புகழ்வார்களோ என்னவோ.

    Like

  17. It is interesting to note that writer is not able to say even few things that will set Rajini apart from the normal folks. He is just questioning others. Rajini craze in TN is like a craze that children has towards fictious characters like Superman, Spiderman etc.Rajini is a normal human being. Further, he is not a decision maker…

    Like

Leave a reply to Boston Bala Cancel reply