தேர்வுகள் – ஏர் டெக்கான் – லவ் ஸ்டோரி

த்தாவது ரிசல்ட் என்னைக்குப்பா வருது? இன்னைக்குன்னு சொல்றாங்க. நாளைக்குன்னு சொல்றாங்க. இல்ல இல்ல 31ஆம் தேதின்னு சொல்றாங்க. ஏன் ஒரு தேதி சொல்லமாட்டேன்றாங்க? இன்னைக்கு காலைல ஆறு மணி நியூஸ்ல (இந்த outlook issue : Dynasty At War ல தமிழ்நாட்டுல டீவின்னா சன் டீவிதான்ங்கற அளவுக்கு monopoly இருக்குன்னு சொல்லியிருந்தாங்க. அதனால நியூஸ்ன்னா சன்நியூஸ் தான் -derived result- என்பதால நான் இங்கே குறிப்பிட்டு சன்நியூஸ்ன்னு சொல்லல!) இன்னைக்கு ரிசல்ட் வருதுன்னு சொல்லியிருக்காங்க. ஆனா அதுக்கப்புறம் 8:30 மணி நியூஸ்ல ரிசல்ட் பத்தி ஒன்னும் சொல்லல. வேறு எந்த பேப்பரிலும் செய்தி இல்ல. நான் இணையத்தில அலசிட்டேன். இன்னைக்கு இல்லப்பா. (இதை எழுதும் வரைக்கும் இல்ல!). நிறைய ஸ்டூடண்ட்ஸ் தூக்கம் இல்லாம இருக்காங்க. ரிசல்ட நினைச்சு. ப்ளீஸ் ரிசல்ட் என்னைக்குன்னு சொல்லிடுங்க. சிவாஜி பட ரிலீஸ் தேதி மாதிரி சஸ்பென்ஸ்ல வெக்காதீங்க.

***

என்னால இந்த exam விசயத்தில ஒன்னே ஒன்ன புரிஞ்சுக்கவே முடியல. அது எப்படி out-of-syllabus ல இருந்து question வருது? ஒழுங்கா syllabus குள்ள இருந்து கேள்விகள் எடுப்பதில் அப்படி என்ன சிக்கல் இருக்கிறது? அப்படி என்ன கஷ்டம் இருக்கிறது? என்ன பள்ளிக்கூடம் மாதிரியா மாசா மாசம் (Midterm, revision) exam வெச்சு question கொடுக்கறீங்க? வருசத்து ஒரு முறைதான உங்கள question எடுக்க சொல்றாங்க? அதக்கூட ஒழுங்கா செய்யமுடியாதா உங்களால? question paper prepare செய்த பிறகு அத cross-check பண்ணக்கூட யாரும் இல்லையா? இல்ல cross-check பண்ணியும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கா syllabus இருக்கு?

out-of-syllabusல இருந்து கேள்வி வந்ததுன்னா மார்க் கொடுத்தடறீங்க. சரி. ஆனா இந்த மார்க் எல்லாருக்கும்ல போகுது. ஒழுங்கா படிச்சவங்க, படிக்காதவங்க இப்படி எல்லாருக்கும்ல மார்க் கிடைக்குது. உங்களுக்கே தெரியும், cut-off மார்க் பத்தி. 0.01 மார்க் வித்தியாசத்துல எத்தன பேர் இருப்பாங்கன்னு? அப்படி இருக்கும் போது 12 மார்க் சும்மா கொடுக்கறதுன்னா? அதுவும் அந்த கேள்வி அட்டண்ட் பண்ணியிருந்தா 12 மார்க். இல்லீன்னா நீ என்ன எழுதனியோ அதுக்குதான் மார்க். It surely makes some difference, இல்லியா?

இப்ப நுழைவுத்தேர்வும் கிடையாது. கஷ்டம். இப்போ proffessional admission கிடைப்பது US H1B மாதிரி ஆகிடுச்சு. பம்ப்பர் லாட்டரி. குலுக்கல் முறை. இரண்டு பேர் ஒரே கட்-ஆப் வைத்திருந்தால் (ஒரே caste போன்ற எல்லா விசயமும்) குலுக்கல் முறைதான். முன்பும் இதே முறைதான் என்றாலும், இரண்டும் பேரி ஒரே கட்-ஆப் ஒரே காஸ்ட் என்றிருப்பது அரிது. இந்த ஆண்டு இது ரொம்ப ரொம்ப சாத்தியம்.

யோசித்துப் பாருங்கள். குலுக்கல் முறையில் ஒருவன் doctor seatஐ இழப்பதை!

***

question paper out ஆவதைக்கூட ஒரு கணக்கில் சேர்த்துவிடலாம். ஏனென்றால் எல்லா செண்டருக்கும் question paper அனுப்ப வேண்டும். எங்கோ ஒரு இடத்தில் தவறு நடந்து விட வாய்ப்பிருக்கிறது. IPS, IAS தேர்வுகளின் கேள்வித்தாள்களே out ஆகும் போது SSLC தேர்வு கேள்வித்தாள்கள் எம்மாத்திரம்? (ஆனால் அதையும் தவிர்க்கவேண்டும்.) ஆனால் இந்த out-of-syllabusஐ என்னால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. QA team ஒன்னு செட் பண்ணுங்கப்பா.

Computer Aided Test வைப்பதன் மூலமே question paper outஐ தடுக்க முடியும். அதற்காக எல்லா மாணவர்களுக்கும் computer கொடுக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு exam hallக்கும் ஒரு computer கொடுக்க முடியுமே? பத்து மணிக்கு பரிட்சை என்றால், கரெக்ட்டாக காலை மணி 9:30க்குத்தான் question paper serverஐயே ரிலீஸ் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஹாலும் உடனே மாணவர்களுக்கு print-outs எடுத்துக் கொடுக்கலாம். அப்படி செய்தால் question-paper outஐ control செய்வது எளிது. ஆனால் நடைமுறை சிக்கல்கள் -budget problem- நிறைய இருக்கிறது. atleast 12th examக்காவது implement செய்யலாம்!

***

ஏர் டெக்கானில் செக் இன் செய்து பொர்டிங் பாஸ் வாங்குவதற்கு நான் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நின்றிருக்கிறேன். க்யூவில் இடைச்செறுகலாக வந்தவர்களை திருப்பி க்யூவின் பின்னால் அனுப்பினேன். ஒரு வழியாக கவுண்ட்டருக்கு வந்து என்னுடைய டிக்கெட்டைக் கொடுத்தபோது, ஏர் டெக்கானில் வேலை செய்யும் ஒருவர், தனக்கு தெரிந்த நபருக்கு உடனே செக்கின் செய்து போர்டிங் பாஸ் கொடுக்குமாறு வந்து எனக்கு முன்னால் டிக்கெட்டை நீட்டினார். (கவனிக்க, நான் டிக்கெட் கொடுத்துவிட்டு, அதே கவுண்ட்டரில், போர்டிங் பாஸ் பெறுவதற்காக நின்று கொண்டிருக்கிறேன்.) நான் வாங்காதீர்கள் என்றேன். என்னைப்போலவே இன்ன பிற மக்களும் சொன்னார்கள். யார் கேட்கிறார்கள்?

செக் இன் செய்து கொண்டிருந்த நபர் கூட சிறிதளவு தயங்கினார். ஆனா ரெக்கமண்ட் செய்த அந்த நபர் சிறிதும் தயங்கவில்லை. அவருக்கு ஆதரவாக அங்கே நின்று கொண்டிருந்த இன்னொரு பெண்மணி, அந்த கவுண்ட்டரில் luggage போட்டுக்கோடா, இந்த கவுண்ட்டரில் செக்கின் செய்து கொடுடா (சரளமாக அனைவரையும் வாடாபோடா -செல்லமாக- என்று சொல்லிக்கொண்டிருந்தார்!) என்று சரளமாக ஐடியாக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்.

நான் பார்த்துக்கொண்டிருந்த போதே என் கவுண்ட்டர் ஆபிசர், அவரது டிக்கெட்டை வாங்கி, என்னுடைய டிக்கெட்டை கெடப்பில் போட்டுவிட்டு, அவருக்கு முதலில் போர்டிங் பாஸ் கொடுத்தார். என்னால் “திஸ் இஸ் டோட்டலி அன்·பேர்” என்று மட்டும் தான் சொல்லமுடிந்தது.

மக்களை க்யூவில் வாருங்கள் என்று சொன்னேன். அவர்கள் (மனதுக்குள் திட்டினாலும்) கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதிகாரிகளே தவறு செய்யும் போது நான் என்ன செய்யமுடியும்? Atleast, I can point it out here. அவருடைய பெயர் என்னவென்று கேட்டு வைத்துக்கொண்டேன். அவ்வளவே. சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்த்துக்கொள்ளலாம்.

அந்த ஆபீசர் ஒரு வயதானவருக்கு ஹெல்ப் செய்திருந்தால் கூட கவலையில்லை. அல்லது எங்களுக்கு முன்னால் போகும் வேறு ப்ளைட்டுக்கு போகிறவருக்கு “ஐயோ நேரம் இல்லையே செக் இன் செய்து கொள்ளட்டும் ப்ளீஸ்” என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. அவர் எங்கள் ப்ளைட்டில் எங்களுடனே வரப்போகிற நடுத்தர வயதுக்காரர். கை கால்கள் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.

எனக்கு ஒரே ஒரு கோபம் தான் : அதிகாலையில இருந்து, ஒன்றரை மணி நேரம் வியர்த்து விறுவிறுத்து நிக்கறவனெல்லாம் கேணையனா?

***

ஏர்போர்ட் காபி நன்றாக இருந்தது. ஆனால் ரசித்துக்குடிக்க நேரம் இல்லை. எனக்கு ப்ளைட் ஏறி விட்டால் போது என்றிருந்தது.

ப்ளைட் மிகவும் சிறியது. மிகவும் சிறியது. ஒரு ப்ரைவேட் ஜெட் மாதிரி இருந்தது. ஒரு பஸ்ஸைப் போலவே இருந்தது. ப்ளைட்டைப் பார்த்ததும் எனக்கு, வேறு பயம் வந்துவிட்டது இப்போது. ஒழுங்கா மதுரைக்கு போயிருமா? இல்ல நடுவானத்துல, ஆப் ஆயிடுச்சு, பிளீஸ் யாராவது இறங்கி தள்ளிவிடுங்கன்னு சொல்லுவாங்களோன்னு நினெச்சேன்.

எங்க எல்லோருடைய மூடையும் என்னோட அக்கா பொண்ணு மாற்றினாள். வயது ஏழு. முதன் முதல் ப்ளைட் அனுபவம். ப்ளைட்டில் ஏறியவுடன் வேகவேகமாக எனக்கு ஜன்னல் சீட் என்று சொல்லி ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டாள். கொஞ்ச நேரத்தில் சத்தமாக “மாமா. இந்த ஜன்னலை திறந்து விடுங்களேன். ப்ளீஸ்” என்றாள். கிட்டத்தட்ட ப்ளைட்ல இருந்தவங்க எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவளுக்கு ஜென்னலை திறக்கமுடியவில்லை என்று பயங்கர வருத்தம்.

ஏழு வயதில், அவளால் ப்ளைட் ஏற முடிந்தது, கண்டிப்பாக ஏர்-டெக்கானின் சாதனை.

***

சிங்கப்பூரிலிருந்து சென்னை செல்லும் போது john grisham எழுதிய the rain maker படித்து முடித்தேன். ஏற்கனவே 100 பக்கங்கள் படித்திருந்தேன். மிச்சத்தை ப்ளைட்டிலேயே படித்து முடித்தேன். பக்கத்தில் உட்கர்ந்திருந்த சிவா (ஆஸ்திரேலியாவில் இருந்த் வருகிறவர்) வுடன் கூட அதிகம் பேசவில்லை.

the rain maker is witty. நிறைய இடத்தில் நன்றாகவே வாய்விட்டு சிரித்தேன். அதுவும் அந்த arguments section. john grishamமின் மற்ற நாவல்கள் போல twists and turns இல்லை. ஹீரோ பெரிய ஹீரோவும் இல்லை. no miracles. ஆனால் நாவல் தோறும் இழையோடிக்கிடந்த அந்த நகைச்சுவை என்னை கடைசிப் பக்கம் வரை -தொடர்ந்து- படிக்க வைத்தது.

ஒரு young lawyer -just outta college!- எப்படி மிகப்பெரிய insurance companyஐ எதிர்த்து போராடி ஒரு அப்பாவி அம்மாவுக்கு நியாயம் வாங்கித்தருகிறார் என்பதைப்பற்றியது. Insurance policy எடுத்ததற்கு அப்புறம் அந்த அம்மாவின் பையன் leukemiaவால் பாதிக்கப்படுகிறான். நியாயப்படி காப்பீட்டுத் தொகை அந்த insurance கம்பெனி வழங்கவேண்டும். ஆனால் ஏதேதோ காரணம் காட்டி கம்பெனி மறுக்கிறது. மறுத்தது மட்டுமில்லாது, அந்த அம்மாவை, you must be stupid stupid stupid என்கிறது. அந்த அம்மாவோ கோர்ட்டுக்கு செல்ல வழியில்லாதவர். பணமில்லாதவர். அந்த அம்மாவின் பையன் இறந்து போகிறான். insurance company காப்பீட்டு தொகை வழங்கியிருந்தால் அவன் உயிரோடு இருந்திருப்பான்.

எப்படி ஹீரோ வாதாடி இழப்பீட்டு தொகை வாங்கித்தந்து அந்த insurance company செய்த தவறையும் வெளிச்சத்துக்கு கொண்டுவருகிறார் என்பதே மிச்சம். so witty at places!

***

இந்த நாவல் முடித்த கையோடு Eric Segal எழுதிய Love Story ஆரம்பித்தேன். கொஞ்சம் மெதுவாகவே படிக்க முடிந்தது. போன சனிக்கிழமை இரவு சிங்கிள் சிட்டிங்கில் மிச்சமிருந்த 150 பக்கங்களையும் படித்து முடித்தேன். Very touching but original love story. மனசுக்கு சங்கடமாக போய்விட்டது. Very much impressive.

நான் படித்த கடைசி இரு நாவல்களும் leukemia சம்பந்தப்பட்டது. கதை என்னவோ usual வாழ்வேமாயம் தான் என்றாலும், கதை சொல்லப்பட்ட விதம் மிக அருமை. I liked the dialogues very much. Very Natural and Spontaneous. I loved the story. But who didnt?

அதில் அடிக்கடி வரும் ஒரு டயலாக் : Love means you never have to say you’re sorry!

***

எனக்கு பிடித்த ஒரு பகுதி, ‘லவ் ஸ்டோரி’ நாவலில் இருந்து:

‘Who said I wasn’t going to keep at it, for God’s
sake? I’m gonna study with Nadia Boulanger, aren’t I?’
What the hell was she talking about?’ From the way she
immediately shut up, I sensed this was something she had not
intended to mention.
‘Who?’ I asked.
‘Nadia Boulanger. A famous music teacher. In Paris.’
She said those last two words rather quickly.
‘In Paris?’ I asked, rather slowly.
‘She takes very few American pupils. I was lucky. I
got a good scholarship too.’?’Jennifer – you are going to Paris?’
‘I’ve never seen Europe. I can hardly wait.’
I grabbed her by the shoulders. Maybe I was too rough,
I don’t know.
‘Hey – how long have you known this?’
For once in her life, Jenny couldn’t look me square in
the eye.
‘Ollie, don’t be stupid,’ she said. ‘It’s inevitable.’
‘What’s inevitable?’
‘We graduate and we go our separate ways. You’ll go to
Law school – ‘
‘Wait a minute – what are you talking about?’
Now she looked me in the eye. And her face was sad.
‘Ollie, you’re a preppie millionaire, and I’m a social
zero.’
I was still holding onto her shoulders.
‘What the hell does that have to do with separate
ways? We’re together now, we’re happy.’
‘Ollie, don’t be stupid,’ she repeated. ‘Harvard is
like Santa’s Christmas bag. You can stuff any crazy kind of
toy into it. But when the holiday’s over, they shake you out
. . . ‘ She hesitated.
‘ . . . and you gotta go back where you belong.’
‘You mean you’re going to bake cookies in Cranston,
Rhode Island?’
I was saying desperate things.
‘Pastries,’ she said. ‘And don’t make fun of my
fatter.’
‘Then don’t leave me, Jenny. Please.’
‘What about my scholarship? What about Paris, which
I’ve never seen in my whole goddamn life?’
‘What about our marriage?’
It was I who spoke those words, although for a split
second I wasn’t sure I really had.
‘Who said anything about marriage?’
‘Me. I’m saying it now.’
‘You want to marry me?’
‘Yes.’
She tilted her head, did not smile, but merely
inquired:
‘Why?’
I looked her straight in the eye.
‘Because,’ I said.
‘Oh,’ she said. ‘That’s a very good reason.’?She took my arm (not my sleeve this time), and we
walked along the river. There was nothing more to say,really.

Thanks: Erich Segal
***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s