காக்கோச் வா வா கட்ச்சு..காக்கோச் வா வா கட்ச்சு என்று என் மகள் பேசும் மழலையை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படிக் கேட்டுக்கொண்டேயிருப்பதால் தான் அதிகம் பதிவு எழுத முடிவதில்லை. 🙂 காக்கோச் வா வா கட்ச்சு ?! காக் ரோச் வா வா வந்து கடிச்சு வை என்பது தான்.
*
ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன். படம் பார்த்துவிட்டு; குழப்பத்தில் விக்கிப்பீடியாவில் என்ன தான்டா சொல்லவர்றாய்ங்க என்று என்னைத் தேடவைத்த முதல் தமிழ்ப்படம் இது தான். அதுக்காக புரியவில்லை என்று நான் சொல்லவரவில்லை. அது முக்கியமும் இல்லை. புரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியது தான் முக்கியம்.
பாடல்களை கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னர் கேட்ட பொழுதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஜூனில் என் மகளின் முதல் பிறந்தநாளின் போது இந்த படத்தின் பாடல்களைத் தான் திரும்பத் திரும்ப ஒலிக்கச்செய்து கொண்டிருந்தோம். பெம்மானே பாடல் அப்பொழுது நடந்து முடிந்திருந்த ஒரு துயரச்சம்பவத்தை நினைவூட்டியது. இன்றும் அந்த சம்பவத்தையும் பெம்மானே பாட்டையும் மனதும் மூளையும் இணைத்தே தான் பார்க்கின்றன. அதே போல உள்ளே தேடத்தேட பாடலும் கோவிந்தா கோவிந்தாவும் பீட் நம்பர்ஸ். நெல் ஆடிய நிலமெங்கே பாடல் இன்றும் எனக்கும் என் மனைவிக்கும் ஃபேவரிட் தான். ரீமா சென்னின் நடனம் அந்தப் பாடலுக்கு மிக அற்புதம்.மாலை நேரம் பாடல் சூப்பர் மெலடி ஆனால் படத்தில் இல்லை. இந்தப் படத்தில் இந்தப் பாடலுக்கு இடமில்லை.
*
சிற்பம் வடித்து கலையை வளர்த்த சோழர்கள் சோற்றுக்கு அடித்துக்கொள்வார்களா? புல்ஷிட் கேள்வி. தமிழ்நாட்டில இப்ப கொஞ்ச நாளா கிளப்பப்படுகிற பல ஸ்டுபிட் பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இந்த மாதிரி அசட்டுத்தனமான கேள்வி கேக்குறவைங்கல சோறு தண்ணியில்லாம குகையில போட்டு ஆயிரம் வருசம் வெச்சாத்தான் தெரியும். சிற்பம் வடிச்சா சிற்பத்தையாய்யா சாப்பிட முடியும்? சோத்த வடிச்சாத்தனய்யா சோத்த சாப்பிடமுடியும்?
படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னரே டைரக்டர் சொல்லிட்டாருல்ல இது கற்பனைக் கதைன்னு அப்புறம் என்ன? அதுவுமில்லாமல் பாலைவனத்தில் ஒரு குகைக்குள் ஆயிரம் வருடங்களாக எவர் கண்களிலும் படாமல் வாழும் மனிதர்கள் சோற்றுக்கு எங்கே போவார்கள்? கிடைக்கிறத அடிச்சு பிடுங்கத்தான் சொல்லும். ஏன் அவ்வளவு தூரம் போகனும். காட்ரினா புயல் வந்தப்போ உலகப் பணக்கார நாடான அமெரிக்காவில வசிக்கிற மக்கள் ப்ரட்டுக்கு அடிச்சிக்கிட்டத பாத்தோம்ல?
டைரக்டர் சோழ மன்னர்களுக்கு பதிலா கூழ மன்னர்கள் பூண்டிய மன்னர்கள் அப்படீன்னு பேரு வெச்சிருந்திருக்கலாம். இந்த டூபாக்கூர்களிடமிருந்து தப்பித்திருப்பார்.
*
அதுக்கப்புறம் இந்த சீன் கிளாடியேட்டர்ல வருது இந்த சீன் மம்மில வருது இந்த சீன் டம்மில வருதுன்னு சொல்லப்படுற குற்றச்சாட்டுகள். பல ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் கேம் ஷோ போல குண்டர்களுடன் சண்டையிடுவதும் சிங்கம் புலிகளுடன் சண்டையிடுவதும் குலேபகாவலியிலே எம் ஜி ஆர் செய்துவிட்டார். அப்ப கிளாடியேட்டர் குலேபகாவலியப் பார்த்து காப்பியடிக்கப்பட்டதா? மேலும் இந்த மாதிரியான கேம் ஷோ வரலாறு. ரோமில் அதன் சின்னம் சிதலடைந்து இன்றும் இருக்கிறது. வரலாற்றை எல்லோரும் படிப்பார்கள் அல்லவா? மேலும் ஒத்துக்கமுடியாத இன்னொரு வாதம் போர்க்காட்சிகள் 300 திரைப்படத்தைப் போல இருக்கின்றன என்பது. உலகத்தில வேறு எங்குமே போர் நடந்ததில்லைய்யாய்யா?!
*
இதெல்லாம் சரிதான் ஆனால் டைரக்டர் சொல்லவந்ததை ஒழுங்க சொல்லாம குழப்பிட்டாருல்ல? அவரு என்ன சொல்லவந்தாருன்னு உங்ககிட்ட சொன்னாரா? அவரு குழப்பித்தான் சொல்லனும்னு கூட நெனச்சிருக்கலாம் இல்ல? 😉 மேலும் எனக்கும் முதல் முறை படம் பாக்குறப்போ பல குழப்பங்கள் இருக்கத்தான் செஞ்சது. ஆனா மீண்டும் ஒரு முறை படம் பார்த்த பொழுது குழப்பம் தீர்ந்தது. ரெண்டு தடவ பாத்தாத்தான் புரியுமோன்னு நீங்க கேக்கறது புரியுது. ஆனா எத்தன மொக்க படத்த ரெண்டு தடவைக்கு மேல பாத்திருப்போம்?
*
வல்கரா இருக்கு. ம்ம்க்கும். தூள் படத்தில் இல்லாத வல்காரிட்டியாய்யா? அதெல்லாம் தலையில தூக்கிவெச்சுக் கொண்டாடினீங்க?
*
லாஜிக் இல்ல. மறுபடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ். தமிழா தமிழா இது உனக்கே ஓவராத்தெர்லயா?
*
இந்த மாதிரி குறை சொன்ன மக்கள் நிறைகளைப் பற்றிச் சொல்லவேயில்ல. அது ஆர்ட் டைரக்ஷன், ரீமாவின் நடிப்பு, கார்த்தியின் நடிப்பு, செல்வராகவனின் டைரக்ஷன் மற்றும் கோஆர்டினேசன்.
ஹீரோயின்கள் நடிக்கவேறு செய்வார்களா என்கிற அதிசயமாக கேட்கும் நிலையில் இருக்கும் நாம் ரீமாவின் நடிப்பை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். ஓவர் ஆக்ட் இல்லாமல் ஜஸ்ட் லைக் தேட் நடிப்பு.
1. ரீமாவின் நடிப்பு: கார்த்தி “ஒரு காதலன் ஒரு காதலிகிட்ட கேக்குறமாதிரி கேளு”ன்னு சொன்னவுடனே ரீமா சென் ஒரு சிரிப்பு சிரிப்பார்ல அங்கேயே சிக்ஸர் அடிச்சிட்டாரு; சிலையைப் பார்த்தவுடன் அழுவது; சோழர்கள் ரீமா, கார்த்தி,ஆன்ட்ரியாவை கட்டிவைக்க கூட்டிக்கொண்டு போகும் பொழுது அங்கிருக்கும் பெண் ஒருவர் ரீமாவை பின்னந்தலையில் தட்டிவிடுவார் ரீமா திரும்பி நின்று முறைப்பது
2. ரீமாவின் நடனம்: நெல் ஆடிய நிலம் எங்கே பாடல். க்ளாசிக்.
3. ரீமாவின் ஆக்ஷன்: ரீமா இந்த கேரக்டரில் கொஞ்சம் கூட நெருடலாக இல்லாதது; இவர் செய்வார் என்று நம்மை நம்பவைத்தது.
கார்த்தி அஸ் யூஸ்வல்.
1. ஒரு எடுத்துக்காட்டு. கார்த்தி ரீமா ஆன்ட்ரியா மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சட்டென்று ரீமா துப்பாக்கியின் ட்ரிக்கரை அழுத்திவிடுவார். அப்போ கார்த்தி முகத்தில் தெரியும் எக்ஸ்ப்ரஷன். உங்கள் நெற்றியில் துப்பாக்கியை வைத்து ட்ரிக்கரை அழுத்தி லக்கிலி ஒன்றும் ஆகாமல் இருந்தால் மட்டுமே உங்களுக்குப் புரியும். 😉
*
பார்த்திபன். பார்த்திபன் நல்ல செலக்ஷன். ஆனால் இந்த ரோலுக்கு தனுஷ் நடிப்பதாக இருந்ததாம். நடித்திருந்தால் அற்புதமாக இருந்திருக்கும். காமடியில்லீங்க நெஜம். தனுஷ் நடிச்சிருந்தாருன்னா பசி பஞ்சத்தில வாடுற மக்களின் உண்மையான அரசனா ரீமா கேலி பேசும் “சுருங்கிப்போன ரத்தம்” டயலாக்குக்கு ஏற்ற மாதிரி இருந்திருப்பார்.
பார்த்திபனின் உருவம் மட்டுமே ஒரு நெருடல். ஆனால் சுயநல அரசன் அல்லது பாசக்கார மக்கள் என்ற வாதத்தால் அவர் மட்டும் பெருத்திருக்கிறார் என்று ஒத்துக்கொள்ளலாம். பார்த்திபனின் “நெல் ஆடிய” நடனம் நன்றாக இருந்தது.
*
செல்வராகவன். கையக் கொடுங்க சார். கலக்கிட்டீங்க. “காதல் கொண்டேன்” படத்திலிருந்தே உங்களோட ஃபேன் நான். மணிரத்னத்துக்கு அப்புறம் நீங்க தான்னு சிலர் சொல்லுவாங்க. அவங்க சொல்லட்டும் அதெல்லாம் கண்டுக்காதீங்க..அது காலவரிசைப்படுத்தினா மட்டுமே பொருந்தும்.
7ஜி ரெயின்போ காலனியில் க்ளைமேக்ஸில் ஹீரோ உண்மையை மறைத்து போலீசிடம் பொய் சொல்லும் போது ஹீரோயினின் அப்பா “என் பொண்ணு தெய்வம்பா தெய்வம்” என்று கதறும் பொழுது, அருகில் இருக்கும் ஹீரோயினின் அம்மா ஹீரோவின் தலையில் ரகசியமாக ஆசீர்வாதம் செய்கிற அந்த காட்சியமைப்பு ஒன்றே நான் மேற்கூறியது உண்மைதான் என்று பொருந்தும்.டைரக்ஷன் இருக்கட்டும் இவ்வளவு நபர்களை வைத்துக்கொண்டு எப்படி கோஆர்டினேட் செஞ்சீங்க?
செல்வா மென் மேலும் கலக்குங்க. ஒரு இன்வஸ்டிகேட்டிவ் த்ரில்லர் தமிழ்ல கொடுங்க செல்வா.
*
இவ்வளவு தூரம் துணிச்சலா ஒரு படம் எடுத்திருக்கீங்க, இன்னும் ஏன் பாடல்கள் வெக்கறீங்க? பாடல்கள் இருந்தும் ஆயிரத்தில் ஒருவன் படு ஸ்பீடாப்போச்சுங்கறது தான் உண்மை. ஆனா பாடல்கள் இல்லீன்னா படம் இன்னும் நல்லாயிருக்கும்.
*
நல்ல முயற்சி என்றெல்லாம் சொல்லி இந்த முயற்சியை பத்தோடு பதினொன்னா ஆக்கவெல்லாம் விரும்பவில்லை.
அட்டகாசமான படம்.